இறைவன் நியதியில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்காக விதிக்கப்பட்ட ரிஜ்க் (உணவு) அவர்களை வந்தடையும் வரை மரணம் அவர்களை நெருங்காது. இது ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதில் பதிய வேண்டிய ஒரு விஷயம்.
குறுகியகால வாழ்வில் நிறைய திரட்டி விடவேண்டும் என்னும் பேராசை மேலோங்கும் போது தான் செல்வம் வரும் வழி என்னவென்று யோசிக்க விடாமல் நம் அறிவு செயலிழக்கின்றது. அப்பொழுது, அங்கே ஷைத்தான் ஆஜராகின்றான். மற்றவர்கள் வாழும் பகட்டு வாழ்வும் நம் கண் முன்னே வந்து போகும் போது, அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் அங்கே ஷைத்தானின் தூண்டுதல் மூலம் புறக்கணிக்கப் படுகின்றனர் இந்நிலையில் தான்.
பகட்டு வாழ்வு
இப்பூவுலகின் பகட்டு வாழ்வின் வாழ்க்கைப் பாதை, ஒவ்வொரு சராசரி மனிதனையும் அதுபோல் வாழத்தான் தன்னை உந்தித் தள்ளும். அந்த வாழ்க்கைக்கு சொந்தமாகிப் போனவன், அவன் செல்வம் வந்த வழி, அவன் போகின்ற போக்கு, அந்த செல்வம் அவனை விட்டு ஒவ்வொரு நாளும் செல்கின்ற விதம் ஒவ்வொன்றும் அவன் சிந்தனைக்கும், அவன் செயல்பாட்டுக்கும் அப்பாற்பட்டு நடக்கும். கறை படிந்த கைகள் மூலம் ஈட்டிய செல்வம், குறுகிய காலப் பயிர் போல விளைச்சல் நல்லதாக தெரியும், ஆனால் அல்லாஹ்வின் பரகத் (நம் புலன்களுக்கு எட்டாத அல்லாஹ்வின் அருள்) அதில் கடுகளவும் நிலைத்திருக்காது.
ஆதலால் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும், பாரம்பரிய பணக்காரனாக இருந்தாலும் அவன் வாழ்வில், அவன் இறுதி மூச்சு வரை உழைப்பு என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும். ஏனெனில் சோம்பேறித்தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. மாறாக அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தந்த வழியில் அவன் தந்த இந்த உடலை, நேர்மையான வழியில், தன் புத்தியாலோ அல்லது, உடலாலோ அல்லது இன்னபிற மார்க்கம் அனுமதித்த வழிகளிலோ உழைப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
அந்த உழைப்பின் மூலம் இறைவனிடம் மட்டுமே கையேந்த வேண்டும். யா அல்லாஹ் இந்த உழைப்பில் எனக்கு உன் பரகத் (அபிவிருத்தி) என்னும் அருளை தந்து என் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வாயாக ! என்னை எவரிடமும் கையேந்த வைத்துவிடாதே யா அல்லாஹ்! என்று இறைவனிடத்தில் தூய மனதோடு இறைஞ்சினால், புலனுக்கெட்டாத அந்த பரகத் என்னும் அல்லாஹ்வின் அருள் கிடைக்க வெகு நாட்களோ நேரமோ ஆகாது.
பரகத் என்றால் என்ன ?
நம் சமுதாயம் தவறாக புரிந்து வைத்திருக்கும் பல விஷயங்களில் ஒன்று. சாதாரணமாக நாம் இருவர் சந்தித்துக் கொண்டு வாதிக்கும் போதே இதுவும் பேசிக் கொள்வோம், அவனுக்கு அல்லாஹ் கோடி கோடியாய் கொடுத்து பரகத் செய்திருக்கின்றான் என்று. ஆனால் உண்மையில் அதுவல்ல பரகத் என்பது.
பரகத் என்ற சொல்லுக்கு சுருங்கச் சொன்னால், "குறைந்த பொருள் நிறைந்த பயன்". இதுதான் அதன் பொருள். எடுத்துக்காட்டாக, ஒருவன் 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு காரியத்தை செய்ய புறப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே காரியத்தை செய்ய ஒருவன் 200 ரூபாய் கொண்டு செல்கின்றான். முதலாமவன் காரியம் முடிந்து 100 ரூபாய் மிச்சம் கொண்டு வருகின்றான். இரண்டாமவனோ, ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி அல்லது, வேறு ஏதோ தேவை ஏற்ப்பட்டு அந்த காரியத்திற்காக மட்டுமே 250 ரூபாய் செலவழித்து 50 ரூபாய் கடனோடு திரும்புகின்றான் என்று சொன்னால் அந்த 100ரூபாயில் உள்ள பரகத் இந்த 200 ரூபாயில் அல்லாஹ் வைத்திருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இது எப்படி செலவானது என்று சொன்னால் அதுதான் நம் புலனுக்கெட்டாத அல்லாஹ்வின் அருள் என்பது ரூபாய் 200-ல் இல்லை. 100-ல்இருக்கின்றது.
இந்த பரக்கத்தான விஷயம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது, இதில் நாம் அல்லாஹ்வோடு போரிட முடியாது. நம் நடத்தை, நம் அன்றாட செயல் பாடுகள், நம் செல்வம் வந்த விதம், அது ரூபாய் 1-ஆக இருந்தாலும் 1-கோடியாக இருந்தாலும்,நாம் அல்லாஹ்விடம் மன்றாடி கேட்ட விதம், அது வந்த வழி, செலவழிக்கும் வழி ஒவ்வொன்றையும் வைத்து, அல்லாஹ் நமக்கு தர இருப்பதை, பல இலட்சம் கணினி செய்யாத கணக்குகளை துல்லியமாக கணக்கிட்டு தருவதுதான். இதில் அல்லாஹ்வின் அந்த மறைமுகமான அருளை அந்த வரவுக்குள் பொதிய வைப்பது, அல்லாஹ்விடத்தில் நாம் நடந்து கொள்ளும், அவனிடத்தில் தக்வாவுடன் (இறையச்சத்துடன்) கேட்டுப் பெறும் உள்ளத்தைப் பொருத்தது.
கறை படிந்த கரம்
கறை படிந்த கரம் என்ற இந்த பதிவில் நான் சொல்ல வருவது என்னவென்றால் தம் வருவாயின் மூல காரணி எதுவென்று தெரியாமலும், அது நம்மை வந்தடையும் விதம் எதுவென்று புரியாமலும் ஒரு சிலர் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதன் பின் விளைவைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் நம் கையில், வங்கி இருப்பில் கணக்கு கூடினால் சரி என்று வரும் வழியை சட்டை செய்வதில்லை.
மேலும் தன் குடும்ப உறுப்பினர்களையும் அந்த செல்வத்தை செலவழிக்கும் வாய்ப்பைக் கொடுத்து அவர்களையும் பாவக் கறைகள் படிந்தவர்களாக இவ்வுலகிலேயே உலவ விடுவது , ஒட்டு மொத்த குடும்பமும், பாவமெனும் நதியில் நீராட வைப்பது எந்த விதத்தில் நியாயம் ?
தன் கணவன் நேர்மையற்ற முறையில் சம்பாதிக்கின்றான் என்று தெரிந்தும் சூழ்நிலைக் கைதியாக உள்ள அவனை விட்டால் வேறு நாதி இல்லை என்ற நிலையில் தன்னை நாடி வந்தவளை அவள் தெரியும் படியாகவே அவளை பாவக் காரியங்களில் மூழ்கடிப்பது எந்த விதத்தில் நியாயம் ?
அவள் இறைவனையும் அவன் தூதரையும் புறக்கணிப்பவளாக இருந்தால் இவன் தூய்மையற்ற செல்வத்தோடு ஒத்துப் போகும் மாறாக இவள், குரானையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளையும் தன் உயிராக மதிப்பவளாக இருந்தால் இவள் கதி ? இவனை விட்டு பிரியும் நிலை ஏற்படும்போது, ஒரு மு'மினான பெண்ணை உதாசீனப்படுத்திய பாவமும் இவனை சேர்ந்து கொள்ளும் ஒரு குடும்பத்தை தன் பகட்டு வாழ்க்கைக்காக சிதைத்த பாவத்தை அல்லவா இவன் அல்லாஹ் கணக்கில் வரவு வைப்பான்.
இந்த செல்வம் எவ்வளவு மிகப்பெரிய கைசேதம் தெரியுமா?யோசித்துப் பார்க்கையில் உள்ளமும் உடலும் ஒரு சேர நடுங்குகின்றது. அதாவது.இறைவனுக்கு மாறான வழியில் ஒருவன் செல்வத்தை தேடும்போது இவ்வுலகில் வாழும் வரை அவன் நல்ல மதிப்போடு,மரியாதையோடு, போலி கௌரவத்தோடு, நான்கு பேரை நண்பர்களாக்கிக் கொண்டு பகட்டான வாகனங்களில் வலம் வரலாம்.
நம் ஒவ்வொரு தவறையும் நம்மிடம் உள்ள செல்வாக்கும், பேரும், புகழும் மறைத்து விடலாம். நாம் கோபித்துக் கொள்வோமோ என்று நாம் செய்யும் தவறுகளைக்கூட நம்மிடமிருந்து உதவி பெறுபவர்கள் மறைத்து நீங்கள் செய்வது தான் சரி என்று நம் தவறை கூட நியாயப் படுத்தலாம்.
இந்த போலியான வாழ்க்கை, தவறான வழியில் செல்வம் வந்தவனை ஒரு போதும் சிந்திக்கத் தூண்டாது. மேலும் சிந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தாலும் நம் சிந்தனையில் நாம் செய்யும் தவறு நிழலாடாது. இறைவனை முற்றிலும் பயந்து உள்ளச்சத்துடன் வாழும் வாழ்க்கைக்கு திரும்பும் வரை இந்த பகட்டு வாழ்வு இவன் இறுதி மூச்சு வரை இவனுக்கு சொந்தமாகிப்போகும். அதன் இறுதி விளைவு மறுமை வாழ்வில் கைசேதமெனும் நஷ்டமே.
இறப்புக்குப் பின்
இறப்புக்குப்பின் உள்ள வாழ்க்கையில், அவனுடன் வர இருக்கும் இவ்வுலகில் அவன் செய்த செயல்களில் இந்த கறை படிந்த சொத்தும் பாவம் என்னும் வரவோடு சேர்ந்து கொள்ளும். சொந்தக்கரனான அவன் மகனோ, மகளோ அல்லது மனைவியோ, எவன் தமக்காக சொத்தை சேர்த்தானோ அவன் மீது கொஞ்சமும் இரக்கமில்லாமல் மண்ணை அள்ளி போட்டு மூடிவிட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த தொடங்கி விடுவார்கள்.
இது எப்பேர்ப்பட்ட அன்புள்ளம், கொண்ட, பாசமிக்க நேசமிக்க, இவ்வுலகிலேயே அதிக பிரியமான நபராக இருந்தாலும் இதுதான் உலகநியதி.
விழித்துக் கொண்ட இவன் கதி. (உலகில் உள்ள நாம் அனைவரும் உறக்கத்தில் இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளவும்) ஒவ்வொரு பைசாவுக்கும் இறைவனிடத்தில் கணக்கு வைக்க வேண்டும். இவன் மகனோ அல்லது மகளோ, சொத்தில் பங்குள்ள எவருமோ, செல்வம் வந்த வழியைப் பற்றி இறைவனிடத்தில் கணக்கு கொடுக்க தேவை இருக்காது. அதை செலவழிக்கும் விதம் பற்றியே உலகில் உள்ளோருக்கு அந்த செல்வத்தைப் பற்றிய கேள்வி.
செல்வத்தை திரட்டி, அது இறைவன் தந்த அமானிதம் அதை அவனிடத்தில் ஒப்படைக்கும் போது, கொடுக்கும் கணக்கு சீராக, அவன் சொன்ன வழியின் பிரகாரம், இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் வாழ்ந்து சென்றானே அவன் கதி?. .
செல்வத்தை திரட்டிய விதம் பற்றியும் இறைவனிடத்தில் விசாரணையின் முன் பதில் வைக்க வேண்டும், அதில் செலவழித்தது பற்றியும், குடும்பப் பங்கீடு என்று வரும்போது நீதமான முறையில் பங்கீடு செய்யப்பட்டதா என்பது பற்றியும், மற்றும் மார்க்கம் சொல்லும், ஜக்காத், ஹஜ், மற்றும் பர்லான கடமைகளில் இவன் சேர்த்த செல்வத்தின் பங்கு செலவழிக்கப்பட்டதா? தன் குடும்பத்தாரின் கடமை நிறைவேற்றப்பட்டதா? தன் குடும்பத்தின் ஏழை எளியவர்கள் கவனிக்கப்பட்டார்களா? தன் ஏழை அண்டை அயலார் புறக்கணிக்கப் பட்டார்களா?,அல்லது ஆதரிக்கப்பட்டார்களா? என்று அடுக்கிக் கொண்டே போவான் இறைவன் கேள்விக் கணைகளை.`
இறைவனிடத்தில் அங்கீகாரம் இல்லை
இது கறை படிந்த சொத்தாக இருந்தால் இவன் மேற்சொன்ன அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி இருந்தாலும் வீணே. ஏனெனில் இறைவனுடைய, அவனின் திருத்தூதருடைய வழிக்கு மாற்றமான எந்த வருவாய் காரணியும் அதன் மூலம் செய்யும் எந்த நல்ல செயலும் அங்கீகாரமற்றதே.
இப்படி இறைவனிடத்திலும் அவன் தூதரிடத்திலும் அங்கீகாரம் பெறாத இந்த செல்வம் நாளை மஹ்ஷரில் மிகப்பெரும் சோதனையாக அவன் முன்னே காட்சி அளிக்கும். செல்வத்துக்கு சொந்தக்காரனென்று இவ்வுலகில் இவன் நினைத்தான். அல்லாஹ்வோ, இல்லை இல்லை அதன் சொந்தக்காரன் நானே. என் செல்வம் சொற்ப காலத்திற்கு உன்னிடத்தில் அமானிதமாக தரப்பட்டிருந்தது. அதன் கணக்கு வழக்குகளை இப்பொழுது நீ சமர்ப்பிக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் அந்த எஜமானனின், அந்த செல்வத்திற்கான உண்மை சொந்தக்காரனின் விசாரணைக்கு நீ தயாராகி பதில் சொல்லியே தீரவேண்டும்
அவன் இவ்வுலகில் உன்னிடம் தந்த செல்வத்தில் நீ ஜக்காத் முறையாக செலுத்தாமல் அதை பெறத் தகுதி உள்ளோரை புறக்கணித்து இருந்தால், ஹஜ் உன்மீது கடமை என்று தெரிந்திருந்தும் அதை நிறைவேற்ற தவறி இருந்தால் உன் குடும்பத்திலேய வெளியில் வர வெட்கப்பட்டு, தன் ஏழ்மையை வெளிக் காட்டாமல், தன் இயலாமையை யாரிடமும் பகிரங்கப் படுத்தி விடாமல் வீட்டிலேயே பொறுமையோடு ஏழ்மையை சகித்துக் கொண்டிருந்தவர்களை, தெரிந்தும் உதாசீனப்படுத்தி இருந்தால் உன் குடும்பத்திலேயே ஜக்காத் பெற தகுதி உள்ள நபர்கள் என்று தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்திருந்தால், தர்மத்திற்காக ஏழை எளியவர்கள் வீடு நோக்கி வரும்பொழுது, அவர்களை பாராமுகமாக, ஏறெடுத்துப் பாராத நிலையில் அவர்கள் குரல் உன் காதில் விழாமல் இருந்திருந்தால், உன் கண் முன்னே சமுதாயத்தில் எத்தனையோ முதிர் கன்னிப் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், அனாதைகள், முதியவர்கள், ஏழைகள் மற்றும் பல பொருளாதார ரீதியில் தேவை உள்ளவர்கள் என்று தெரிந்துருந்தும் அவர்களின் மனவெதும்பல் உன் மனதை தொடாமல் இருந்திருந்தால்.
சதக்கா, தர்மம், மற்றும் இறைவழியில், உன் செல்வம் பயனளிக்காமல் இந்த உலகத்தின் தேவையோடு நின்று விட்டிருந்தால், அல்லாஹ்விடத்தில் உன் செல்வம் தூய்மையற்ற உனக்கு அவனிடத்தில் தண்டனை பெற்றுத்தர போதுமானதாக கரை படிந்த செல்வமே முன்னிருக்கும்.
உன் கறை படிந்த கரம் அல்லாஹ்வின் இரும்புக்கரத்தின் முன் நிற்கும் நிலையை... யோசனை செய்து பார்.
ஆதலால், கறை இல்லாத செல்வத்தை தேடுவோம், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்துடன் செல்வம் தேடுவோம் அதனை இறை வழியில் செலவழித்து நம் செயல்களையும் செல்வத்தையும் தூய்மைப்படுத்துவோம் சுவனத்து பாதைக்கு அதை வடிகாலாய் அமைப்போம்.
அபு ஆசிப் (என்ற) அப்துல் காதர்
36 Responses So Far:
//தன் கணவன் நேர்மையற்ற முறையில் சம்பாதிக்கின்றான் என்று தெரிந்தும் சூழ்நிலைக் கைதியாக உள்ள அவனை விட்டால் வேறு நாதி இல்லை என்ற நிலையில் தன்னை நாடி வந்தவளை அவள் தெரியும் படியாகவே அவளை பாவக் காரியங்களில் மூழ்கடிப்பது எந்த விதத்தில் நியாயம் ? //
மிகவும் அருமையன கேள்வி சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்
//கறை படிந்த கைகள் மூலம் ஈட்டிய செல்வம், குறுகிய காலப் பயிர் போல விளைச்சல் நல்லதாக தெரியும், ஆனால் அல்லாஹ்வின் பரகத் (நம் புலன்களுக்கு எட்டாத அல்லாஹ்வின் அருள்) அதில் கடுகளவும் நிலைத்திருக்காது.//
அம்மாவாசைக்கும்
அப்துல் காதருக்கும்
என்ன சம்பந்தம் என்பார்களே இதைத்தானா?
//குறுகிய காலப் பயிர் போல விளைச்சல் நல்லதாக தெரியும், ஆனால்//
ஆனால் என்ன? வாசகம் பாதியிலேயே நிறைவடையாமல் முடிவுற்றிருப்பதை
கவணிக்கவும்
//(நம் புலன்களுக்கு எட்டாத அல்லாஹ்வின் அருள்) அதில் கடுகளவும் நிலைத்திருக்காது.//
நம் புலனுக்கு எட்டாத அல்லஹ்வின் அருள் கடுகளவும் நிலைத்திருக்காது என்று அபூ ஆசிபுக்கு எப்படி தெரியும்?
எனக்குள் எழும் கேள்வி இதுதான்
//பரகத் என்ற சொல்லுக்கு சுருங்கச் சொன்னால், "குறைந்த பொருள் நிறைந்த பயன்".//
இது ஒவ்வொருத்தருடைய மனதிலும் மிகவும் ஆழமாக பதிந்த்திருக்க வேண்டிய வாசகம்
//நம் புலனுக்கு எட்டாத அல்லஹ்வின் அருள் கடுகளவும் நிலைத்திருக்காது என்று அபூ ஆசிபுக்கு எப்படி தெரியும்?//
இது ஈமான் சம்பட்டப்பட்டது. நம்பியே ஆகவேணும். ஏனனில் வருமானம் வந்த வழி அப்படி. ஹராமான பொருளில் அல்லாஹ்வின் பறக்கத் என்றுமே இருக்காது. இது சாதாரண ஈமானின் குறைந்த தரத்தில் உள்ளவர்களுக்கு கூட தெரியும். அதிரை மன்சூருக்கு தெரியாமல் போனது எப்படியோ தெரியவில்லை.
ஆனால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிகூட அல்லாஹ் செல்வத்தை நிறைய ஒருவனுக்கு கொடுக்கலாம். அது சோதனையின் பாற்பட்டது. அதில் பரகத் என்ற சொல்லுக்கு இடமே இல்லை. பரகத் என்று இவ்வளுவு தெளிவாக விளக்கம் கொடுத்திருந்தும் அதிரை மன்சூருக்கு ஏன் புரியாமல் போனது என்று தெரியவில்லை.
பல ஆலிம்கள் உலமாக்கள் சபையில் கேட்ட பயானிலிருந்து தெரிந்து கொண்ட சாதாரண விஷயம்.
அபூ ஆசிப் என்கிற தம்பி அப்துல் காதர் ஒரு பாடகராக அறிமுகப் படுத்தப் பட்டு, ஒரு விமர்சகராக கருத்துக்களிட்டு , ஒரு எழுத்தாளராகப் பிறவி எடுத்து இன்று அந்த ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடத் தொடங்கி இருப்பதை பறைசாற்றும் பதிவு.
காதில் கேட்டதை உள்வாங்கிப் பதிவது என்னைப் பொருத்தவரை தனித்திறமை. பாராட்டுகிறேன்.
பரக்கத் பற்றிய விளக்கம் பரக்கத்தாக இருக்கிறது.
அச்சமூட்டி எச்சரிக்கும் ஆக்கம்.
செல்வத்தில் பரக்கத்தை விளக்க காதர் எடுத்தாண்டிருக்கும் உதாரணம் உண்மையிலேயே துல்லியமானது.
பிரதிபலன் எதிர்பாராத உதவிகளைப்போலவே சுயநலமோ ஏமாற்று வேலையோ இல்லாமல் கடும் உழைப்பில் திரட்டிய பொருளில் கண்டிப்பாக பரகத் இருக்கும்.
சாழ்த்துகள் காதர்.
//ஆனால் என்ன? வாசகம் பாதியிலேயே நிறைவடையாமல் முடிவுற்றிருப்பதை
கவணிக்கவும்//
வாசகம் முழுமைதான் அடைந்திருக்கின்றது. கொஞ்சம் முழுமையாக படித்து பிறகு பின்னூட்டமிடவும்.
மன்சூர்,
உழைக்காமல், பிறரை ஏமாற்றி எவனொருவன் செல்வம் சேர்க்கிறானோ அதில் அல்லாஹ்வின் பரகத் என்னும் அருள் நிலவாது என்பது நிதர்சனம். இதைத்தான் காதர் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறான்.
அதற்காக அவன் சொல்லும் உதாரணம் மேலும் விளக்குவதாக உள்ளது.
அல்லாஹ் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று காதர் சொன்னால் அதெப்படி அபுஆசீபுக்குத்க் தெரியும் என்று கேட்பது சரியல்ல.
காலதிற்கேற்ற நல்ல ஒரு ஆக்கம், வாழ்த்துக்கள் காக்கா
நண்பன் காதருடைய சிந்தனையாவும், கேட்டவையாவும், கட்டுரை வடிவாக தந்துள்ள விதம் அருமை.
பரக்கத் பற்றி அருமையான விளக்கம். இன்றைய கால கட்டத்தில் பணம் காசு விசயத்தில் ஹராம் ஹலாலை பேணி நடப்போர்கள் மிகக் குறைவு. என்பதே உண்மை. ஹராமான வழியில் வரும் வருவாய் நிலையில்லா நிம்மதியற்ற வருவாய். ஹாலாலாய் பெரும் வருவாய் குறைவாய் இருந்தாலும் அதில் பரக்கத் உள்ளது. மன நிம்மதியோடு வாழலாம் என்பதினை அழகுபட சொல்லியிருக்கிறாய்.
உனது சிந்தனைகள் இன்னும் விரிவடைந்து பயனளிக்கும் நல்ல பல விழிப்புணர்வு ஆக்கங்களை எழுத என்றும் எனது வாழ்த்துக்களும் துஆவும் உனக்கு உண்டு.!
நல்ல தொகுப்பு, அதில் குறிப்பாக பரக்கத் என்பதற்கு அருமையான விளக்கம்.
பரகத் என்பதற்கான விளக்கம் அருமை
Assalamu Alaikkum
Dear brother Mr. Abu Asif,
Nice article about pure wealth and prosperity-bargath.
Actually if the wealth earned is impure(haram) then there is no close relationship with God Almighty. A true indication of a person is not having close relationship with God Almighty is that the person's dua won't be accepted. One of the obligatory conditions - sharaths to a dua(prayer) to be accepted is to have pure wealth(i.e. not eating/wearing/living haram ways).
May Allah help us to earn in pure halal ways and live in halal ways.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
Dear Mr. Ahmed Ameen,
Thank you for your valuable comments on my title.
Inshaa Allah I will make dua for all of our friends to earn and live in pure way with guided path by Almighty.
Abu Asif.
Assalamu Alaikkum,
Dear brother Mr. Sabeer AbuShahruk,
//உழைக்காமல், பிறரை ஏமாற்றி எவனொருவன் செல்வம் சேர்க்கிறானோ அதில் அல்லாஹ்வின் பரகத் என்னும் அருள் நிலவாது என்பது நிதர்சனம். இதைத்தான் காதர் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறான்.//
Your interpretation is right. But brother Mr. Mansoor has misinterpreted the sentence
//ஆனால் அல்லாஹ்வின் பரகத் (நம் புலன்களுக்கு எட்டாத அல்லாஹ்வின் அருள்) அதில் கடுகளவும் நிலைத்திருக்காது.//
Instead of excluding the explanation within brackets while reading in the flow, he had continued the reading continually the words within the brackets also. So there came the misinterpretation of the whole sentence to him.
It should have been read as
"ஆனால் அல்லாஹ்வின் பரகத் அதில் கடுகளவும் நிலைத்திருக்காது"
We have to implicitly know the concept as
(நம் புலன்களுக்கு எட்டாத அல்லாஹ்வின் அருள்) in the same line.
//அல்லாஹ் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று காதர் சொன்னால் அதெப்படி அபுஆசீபுக்குத்க் தெரியும் என்று கேட்பது சரியல்ல.//
I think that's the reason for misunderstanding (out of not applying the punctuation marks while reading).
Hope I have facilitated understanding among us.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
//காதில் கேட்டதை உள்வாங்கிப் பதிவது என்னைப் பொருத்தவரை தனித்திறமை. பாராட்டுகிறேன்.//
மதிப்பிற்குரிய இப்ராஹீம் அன்சாரி காக்கா ,
தங்களைப்போன்ற திறமை மிகுந்த படைப்பாளிகள் தரும் ஊக்கம் கண்டிப்பாக அடுத்தடுத்து ஆக்கங்களுக்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தங்களைப்போன்ற நல்ல எண்ணங்கள் கொண்ட ஆதரவுகள் இருந்தால் , இன்ஷா அல்லாஹ் இதைப்போன்று தௌஹீத் மனம் கமழும் அடுத்தடுத்து ஆக்கங்களையும் இன்னபிற ஆக்கங்களையும் தரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனக்காக துஆ செய்யவும்.
அன்புடன்
அபு ஆசிப்.
Dear Abdul Kadir,
நீ எழுதும் விசயம் / அதன் எளிமையான நடை நிறைய வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். இன்னும் நிறைய விசயங்களை எழுது.
பரக்கத் என்றால் என்ன....அழகான விளக்கம். இது நிறைய பேருக்கு தெரிந்தும் தெரியாமல் ஏன் நடக்கிறார்கள். தற்காலிக சந்தோசம் சமயங்களில் நிறந்தர பிரச்சினையை தரும் என்பதை அறியாமல்தான்.
பரகத் பற்றிய அழகிய விளக்கம் தந்தீர்கள் அடுத்த கட்டுரை ரஹ்மத் பற்றிய அழகிய விளக்க கட்டுரையா?
அன்பின் இனிய நண்ப,
அஸ்ஸலாமு அலைக்கும்.
சஊதி அரபிய்யாவில் 800 ரியாலில் பெற்ற “பர்கத்” , அமெரிக்க டாலருக்கும், அபுதபி திர்ஹத்திற்கும் கிட்டவிலையே? இதனால் நான் அறிய வேண்டியது என்ன என்று விளக்குங்களேன். அண்மையில் சென்ற ஆண்டு (சுமார் 25 ஆண்டுகட்குப் பின்னர் சஊதி அரபிய்யா சென்றேன்) உம்ரா செய்வதற்காக, முன்பு கண்டமாதிரியே விலைவாசி ஏற்றமின்றி cost of living எளிமையாக இருந்ததைக் கண்டு வியந்தேன்! அல்ஹம்துலில்லாஹ்.
எங்கள் நிறுவன கணக்குத் தணிக்கையாளர் (கிறித்துவர் தான்) ஓர் உண்மையை என்னிடம் சொன்னார்: அவருக்குக் கிடைத்த ஓர் ஆக்கத்தில் கண்ட செய்தி : “சென்ற இரண்டாண்டுகட்கு முன்னர் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் சஊதி அரபிய்யா மட்டும் தப்பித்து விட்டது என்றும்; அதற்கான முழுமுதற்காரணம், வட்டி என்ற ஹராமான பணம் அங்கு இல்லை; ஜகாத் என்னும் ஏழை வரியை -இன்கம் டாக்ஸ் போல் எல்லா வணிகர்களும் செலுத்திய பிறகே நிறுவனங்களின் கணக்குத் தணிக்கையைப் பூர்த்தி செய்வார்கள்” என்ற செய்தியை அந்தக் கணக்குத் தணிக்கையாளர்க்குக் கிட்டிய ஓர் ஆக்கத்தில் எழுதப்பட்டிருந்ததாம்; அதிலும் அவ்வாக்கத்தை எழுதிய கணக்குத் தணிக்கையாளரும் முஸ்லிம் அல்லர்.
இதிலிருந்து உங்களின் கருத்துக்களை அறிய பேரவா.
பின்னூட்டங்களில் நுழைந்து இன்று முன்னேற்றம் கண்டு சக பங்களிப்பாளராய்க் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மாஷா அல்லாஹ்!
என் இனிய நண்பர் அபுல் கலாம் அவர்களுக்கு
இந்த பரகத் என்ற புலனுக்கெட்டா அருள் நான் சில விஷயங்களில் அனுபவபூர்வமாக உணர்கின்றேன்.
எப்படியெனில், இதை இயல்பான வாழ்க்கையில் நாம் கண்டு கொள்ள முடியாது. . உணர்வுபூர்வமாக சில விஷயங்கள் நம் அறிவுக்கு அப்பார்ப்பட்டு நம் சக்திக்கி (பொருளாதாரத்திலோ ,அல்லது நம்மை சுற்றிய விஷயங்களிலோ ) மீறிய விஷயம் நடந்து நம்மை சந்தோஷப்படுத்தும்.
மேலும் நான் குவைத்தில் 7 வருடங்கள் இருந்தேன். துபாயில் 1 வருடத்திற்கு மேல் இருந்தேன். ஆனால் நான் சவுதியில் 1986-ல் இருந்து 1991 வரை. பிறகு மீண்டும் இப்பொழுது சவுதியில் இருக்கின்றேன் தாங்கள் கூறியபடி சவுதியின் cost of living ரொம்ப ரொம்ப கம்மியாகத்தான் இருக்கின்றது. ஒரு ரியாலோ அல்லது 500 ரியாலோ பாக்கெட்டில் ரியால் இல்லாமல் இருந்தது இல்லை
நினைத்த ஆடையையோ அல்லது தின்பண்டாமோ மிகக்குறைந்த விலையில் (மற்ற அரபு நாடுகளை ஒப்பிடும்போது ).வாங்கி நுகர்கின்றோம்.
ஆதலால் கண்டிப்பாக உலகமே பொருளாதார வீழ்ச்சி அடைந்தாலும்
அண்ணல் நபி (ஸல்) கையேந்தி து ஆ கேட்டதால் இந்த பூமியை பரகத் பொருந்தியதாக ஆக்கி இருக்கின்றான் போலும். (அல்லாஹ்வே மிக அறிந்தவன் )
//ஜகாத் என்னும் ஏழை வரியை -இன்கம் டாக்ஸ் போல் எல்லா வணிகர்களும் செலுத்திய பிறகே நிறுவனங்களின் கணக்குத் தணிக்கையைப் பூர்த்தி செய்வார்கள்” //
ஆமாம் தங்களுக்கு கிடைத்த செய்தி முற்றிலும் உண்மை.
அபு ஆசிப்.
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.
“சிறுகக் கட்டிப் பெருக வாழ்” என்பதும் இதனடிப்படையிற்றானோ?
“நடுநிலைச் சமுதாயம்” என்று அல்லாஹ்வால் அழைக்கப்பெறும் இந்த உம்மத் இன்று நடுநிலையை கைவிட்டதாற்றான் எல்லாக் குழப்பங்களும் உண்டாகி விட்டன, இதில் பொருளாதாரமும் அடங்கும் அல்லவா?
//அல்லாஹ் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்//
சபீர் நீ நன்கு சிந்திக்கத் தெரிந்தவன் நான் கூறாத ஒன்றை நீயாக கர்ப்பனை செய்து சொல்வது உனக்கு அழகல்ல அல்லாஹ் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பதை எவன் அது எப்படி என்று கேட்கின்றானோ அவன் இறை மறுப்பளனாகத்தான் இருக்கமுடியும். அல்லாஹ் காப்பாற்றுவானாக நான் கேட்டது. குறுகிய காலப்பயிரில் எள் அளவும் பரகத் இருக்காது என்ற வார்த்தையைத்தான் அதை அல்லாஹ்வைத் தவிற்த்து எப்படி நாம் அறிவோம் என்பதுதான்
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் காதர் காக்கா,
இந்த பதிவை வாசித்த பிறகு ஒரு மார்க்க சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. "ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அதிக செல்வத்தை வாரி வாரி வழங்கும்போது , அந்த மனிதன் பெருமையில் மிதக்கவா? அல்லது சூஜூதில் விழுந்து மன்னிப்பு தேடவா? என்பதை சோதிப்பதற்காக என்று அதிக செல்வம் தரப்பட்ட ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
எல்லா காலத்திற்கும் ஏற்ற அருமையான பதிவு காக்கா.. இவ்வளவு நாள் எங்கே ஒழிந்துக்கொண்டிருந்தீர்கள்?
ஜஸக்கல்லாஹ் ஹைரா...
அஸ்ஸலாமு அலைக்கும்.
“அல்லாஹ்வின் கை ”பற்றி அல்லாஹ்வின் இரும்புக்கரத்தின்???????
என்று சொல்வது தவறு என்று என்னுகிரேன்..
அல்லாஹ் அஃலம்..
மன்சூர் ஜி,
கோவிச்சுக்காதிய ஜி.
நம்மாளு என்ன சொல்ல வர்ரான்னா,
குறுகிய காலப் பயிரில் பாரம்பரிய/நீண்ட கால பயிரில் உள்ளதுபோன்ற தரம் இருப்பதில்லை. அதைப்போல, குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் சேர்த்த செல்வத்திலும் மதிப்பிருப்பதுபோல் தோன்றினாலும் அதில் பரக்கத் இருப்பதில்லை. நீண்டகால பயிரைப்போன்ற நேர்மையான/நிதானமாக சேர்க்கும் செல்வத்தில்தான் பரகத் இருக்கும் என்று சொல்ல வருகிறான்.
லேசா சொதப்பியிருக்கான் என்பதை சகோ அஹமது அமீனும் சுட்டிக்காட்டியாகிவிட்டது.
இதுக்குமேலேயும் உனக்கு கோவம் அடங்கலேன்னா, அட்ரஸ் தாரேன் நேரில் போயி அவனை ரெண்டு சாத்து சாத்து. எவ்ளோவ் செலவானாலும் நான் கேஸ நடத்துறேன்.
//“அல்லாஹ்வின் கை ”பற்றி அல்லாஹ்வின் இரும்புக்கரத்தின்?????
இங்கு சொல்ல வருவது மனிதனுக்கு முன்பு அல்லாஹ்வின் சக்தியையும் அவன் வல்லமையையும் எடுத்தால பயன்படுத்தும் ஒரு சொல்லே தவிர அவன் கை உண்டு கால் உண்டு என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
இது சாதாரண ஆட்கள் கூட தெரிந்து கொள்ள கூடிய விஷயம்
அபு ஆசிப்.
@அபு ஆசிப்
//இங்கு சொல்ல வருவது மனிதனுக்கு முன்பு அல்லாஹ்வின் சக்தியையும் அவன் வல்லமையையும் எடுத்தால பயன்படுத்தும் ஒரு சொல்லே தவிர அவன் கை உண்டு கால் உண்டு என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
//
அல்லாஹ்விற்கு கைகளும், கால்களும், முகமும், பாதமும் உண்டு. இது தான் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅவினரின் ஏகோபித்த அடிப்படைக் கொள்கை. அல்லாஹ்வின் பண்புகள், தண்மைகள் விஷயத்தில் அல்குரான், அஸ்ஸுன்னாவில் உள்ளதை எவ்வித மறுப்பும், கலப்பும், வியாக்கியானமும் இன்றி ஸஹாபாக்கள் எவ்வாறு நம்பினார்களோ அவ்வாறு நம்புவதே அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா.
”லைசக்க மிஸ்லுஹு ஷையுன் வஹுவ ஸமியுல் பஷீர்” (அவனைப் போல ஒன்றும் இல்லை; அவன் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றான்) என்று அல்குரான் வசனத்திற்கொப்ப அல்லாஹ்வின் பண்புகள் விஷயத்தில் அவற்றை எந்த படைப்பின் தண்மையுடன் ஒப்பிடுவதோ, அல்குரான் சுன்னாவில் இல்லாததை தன் சுய புத்தியின் மூலம் இட்டுக்கட்டுவதோ அறவே கூடாது. ”இரும்புக்கரம்” என்றெல்லாம் சொல்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தண்மைகள் விஷயத்தில் மிக மிக ஜாக்கிரதையாக நம்முடைய நாவை கையாள வேண்டும். ஏனெனில் குஃப்ர்/ஷ்ரிக் என்ற பாரிய வழிகேடுகளெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றன.
{பி.கு: அல்லாஹ்விற்கு கைகள் உண்டு என சொல்லும் வசனங்கள் அல்குரானில் மொத்தம் பத்து உள்ளன :003.073, 005.064 (2), 048.010, 057.029, 003.026, 023.088, 036.083, 067.001, 049.001,038.075, 036.071 ;
அல்லாஹ்விற்கு முகம் உண்டு என சொல்லும் வசனங்கள் பதினொன்று: 2.115, 2.272, 13.22, 30.38, 30.39, 55.27, 76.9, 92.20, 6.52, 18.28, 28.88
அல்லாஹ்விற்கு கால் உண்டு என சொல்லும் வசனம் 68.42
அல்லாஹ்விற்கு பாதம் உண்டு என சொல்லும் ஸஹீஹ் ஹதீஸ்: ஸஹீஹ் புஹாரி பாகம்:11; பக்கம்: 357}
//”இரும்புக்கரம்”//
அல்லாஹ்வின் சக்தியை தமிழ்படுத்தி சாதரணமாக நாம் இவ்வுலகில் பயன் படுத்தும் அதீத சக்திக்கான வார்த்தை தான். இது அகீதாவை பாதிப்பதாகவோ அல்லது குப்ரியத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்றோ நான் நினைக்கவில்லை. ( அவன் கை இரும்பால் செய்யப்பட்டது என்று நான் சொன்னது போல் எடுத்துக்கொண்டால் அது உங்கள் தப்பு ) இதற்க்கு நான் விளக்கமெல்லாம் தந்து கொண்டு இருக்க முடியாது.
அவரவர் எண்ணத்தில் எடுத்துக்கொளும் பொருளைப் பொறுத்தது.
அபு ஆசிப்.
@அன்புச் சகோதரர் அபுஆசிப் அவர்களுக்கு
அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் என்பது தவ்ஹீதின் முப்பெரும் பிரிவுகளில் ஒன்றாகும் { 1)தவ்ஹீத் உலூஹிய்யா 2)தவ்ஹீத் ருபூபிய்யா 3)தவ்ஹீத் அஸ்மா வ ஸிஃபத்}. இது விஷயத்தில் தீர்க்கமான இல்ம் இன்றி பேசுவதை அது இலக்கியநயத்திற்காக இருந்தாலும் சரி தவிர்த்துக்கொள்வது சாலச்சிறந்தது.
எண்ணம் சரியாக இருந்தபோதினும், சொற்களும் செயல்களும் சரியானவையாக குரான் சுன்னாவின் படி இருக்கவேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் தேட்டம். உதாரணமாக, மௌலூது ஓதும் பித்அவாதிகளின் எண்ணம் என்னவோ நல்ல எண்ணம் தான்; ஆனால் அவர்களின் செயல்கள் அவர்களை பாவிகளாக்கிவிடுகிறது. எனவே ‘நான் நல்ல எண்ணத்துடனே செய்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு ஒருவர் எந்த சொல்லைச் சொன்னாலும், எந்த செயலைச் செய்தாலும் அது அல்குரான் அஸ்ஸுன்னாவின் படி அமையாதவரை அது மார்க்க கண்ணோட்டத்தில் சரியாகாது.
ஆகவே இது விஷயத்தில் தாங்கள் உரிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நானும் ஏன் தாயார் மற்றும் மனைவியுடன் உம்ரா சென்று இருந்தபோது மதினாவில் ஒரு கடையில் சில சாமான்களும், பழங்கள் முதலானவைகளும் வாங்கினோம். என் மனது துபாய் உடைய கணக்குப் போட்டு எப்படியும் ஒரு எண்பது சவூதி ரியால் வரும் என்று எண்ணினேன். ஆனால் கடைக்காரர் கேட்டதோ நாற்பத்தி எட்டு ரியால். மாஷா அல்லாஹ்.
மேலும் மாதம் ஐநூறு அறுநூறு ரியால் சம்பளத்தில் சவூதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகம். ஆனாலும் அவர்கள் நல்ல சுபிட்சமாகவே இருக்கிறார்கள். அதே நேரம் துபாயில் இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று வாங்கினாலும் பத்தலே பத்தலே பத்தலே என்று புலம்புபவர்கள் அதிகம் என்று நான் கண்டு இருக்கிறேன்.
//இந்தஉலகின் பகட்டுவாழ்க்கை..ஒவ்வொரு மனிதனையும்//
மனிதனை பகட்டு வாழ்க்கைக்கு உந்தித் தள்ளும் சக்திகளில் பெண்களே முதலிடம் பெறுகிறார்கள். இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்களே வருவாயின் ஊற்றுக் கண். அது நல் வழியில் வந்ததாய் இருந்தாலும் நேர்வழிக்கு மாறானதாக இருந்தாலும் அதை செலவு செய்யும் கைகள் தொட்டில் ஆட்டும் கைகளே!
பணத்தை செலவு செய்யும் பவர் பெண்களிடத்தில்.. ஆண்கள் இரு கைகளையும் தூக்கி சரண் அடைந்து விட்டார்கள்.
சில பெண்கள் வரம்பு மீறி ஆடம்பரங்களிலும் வீண் விரயத்திலும் இறங்கி பிரச்சனைகள் ஆங்காங்கே முளைக்கிறது'. இஸ்லாமிய போதனைகள் பெண்கள் காதுகளில் எட்டவில்லை.. பெண்கள் போடும் துண்டு விழும் பட்ஜெட்டை ஈடு கட்ட ஆண்கள் குறுக்கு வழிக்கு தள்ளப்படும் நிலை. எனவே இஸ்லாமிய போதனை செய்யும் போதகர்கள் பெண்களின் காதுகளில் ஓதி ஊதினால் ஒரு குடும்பத்தில் ஆடம்பரங்களில் கறையும் வருவாய் மிச்சப்படும்.ஆண்கள் குறுக்கு வழியில் பணம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
செல்வந்தர்களும் அண்டின வீடு அடுத்த வீட்டை அனுசரித்து செலவுகள் செய்வதும் நல்லதே. எங்கும் தூய்மையான செல்வம் சுடர் விட்டு பிரகாசிக்கும் ஆமீன். மொத்தத்தில் அபு ஆசிப் அப்துல்காதர் இவரின் கட்டுரை இன்றைய தேவை..
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
//இங்கு சொல்ல வருவது மனிதனுக்கு முன்பு அல்லாஹ்வின் சக்தியையும் அவன் வல்லமையையும் எடுத்தால பயன்படுத்தும் ஒரு சொல்லே தவிர அவன் கை உண்டு கால் உண்டு என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
இது சாதாரண ஆட்கள் கூட தெரிந்து கொள்ள கூடிய விஷயம்
அபு ஆசிப்.//
இங்கு சவூதி அரசாங்கத்தால் நடத்தப்படும் தாவா சென்டரில் நடந்த பயானை இங்கு நினைவு கூறுவது சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதை இங்கு குறிப்புடுகின்றேன்
ஜுபைல் தாவா சென்டரில் நடந்த பயானில் கூறக்கேட்டது
இறைவனுக்கு இரண்டு கைகள் உண்டு அந்த இரண்டு கைகளுமே வலது கைகளே என்று பயான் சொல்ல கேட்டேன்
Post a Comment