குறுக்கம்:
அவனுக்கு இருபத்தியோரு வயதிருக்கும். பாகிஸ்தானியருக்கே உரித்தான நல்ல உயரமும் நிறமும் வசீகரமான முகமும் கொண்டவனாக என் முன் நின்றான். முகத்தில் தாடியாகவும் கிருதாவாகவும் அவன் வரைந்து வைத்திருந்த நளினம் நவ நாகரிகத்தின் தன்மையதாக இருந்தது. படிப்பறிவு கிடையாது என்பதை அவன் பார்வையும் தோரணையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
"உனக்குச் செய்து காண்பிக்கச் சொல்லும் சோதனையெல்லாம் கிடையாது. உன் அண்ணன் கம்ரான் ஏற்கனவே என்னிடம் பேசிவிட்டான். ஒழுங்காக நாளையிலிருந்து வேலைக்கு வா. உன் பாஸ்போட் காப்பி மற்றும் ஒரு பாஸ்போட் சைஸ் புகைப்படமும் கொடு. விசா ஏற்பாடு செய்கிறேன்." என்று சொன்னதும்,
"நன்றி சார்ஜி" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான்.
அவனை எங்களின் பணிமனையில் ஸ்ப்ரே பெயின்ட்டராக வேலைக்குச் சேர்க்கச் சொல்லி ஏற்கனவே அவன் அண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஊரில் ஊதாரியாகத் திரிவதாகவும் ஸ்ப்ரே பெயின்ட்டிங் தெரிந்து வைத்திருந்தும் ஓரிடத்தில் கூட தொடர்ந்து வேலை செய்வதில்லை என்றும், ஆகவே உதவுமாறும் ரொம்பக் கெஞ்சினதால், எங்களுக்கும் பெயின்ட்டர் தேவைப்பட்டதால் வரச் சொல்லியிருந்தேன். அப்படி விசிட் விசாவில் ஷார்ஜா வந்தவனிடம்தான் நாளை வருமாறு சொல்லி அனுப்பினேன்.
எங்கள் பணிமனையில் புல்டோஸர், வீல் லோடர், மோட்டர் கிரேடர், ரோட் ரோலர், கிரேன் போன்ற பலதரப்பட்ட கனரக எந்திரங்களையும் பழுது பார்ப்போம், டென்டிங் பெயின்டிங் செய்து புதுப்பிப்போம். அத்தகைய பணிமனையை நிர்வகிக்கும் பொறுப்பில் நான் இருந்ததால் என் கோரிக்கையின்படி அந்த கம்ரானின் தம்பி ரிஸ்வானுக்கு வேலை தர ஹெச் ஆர் ஒப்புக்கொண்டனர். விசா ப்ரொஸஸிங்கும் துவங்கியது.
விசா அடிக்கப்படும் வரை அவனை வேலைக்கு வரச் சொல்லி விட்டேன். எனவே, அவனும் தினமும் வேலைக்கு வரலானான். அவன் அண்ணன் கம்ரான் எனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.
திடீரென ஹெச் ஆரிலிருந்து வந்த மின்னஞ்சலில் உடனே அவனை வேலையை விட்டு நிறுத்தும்படியும் ஹெச் ஆரை வந்து சந்திக்கும்படியும் சொல்லப்பட்டிருக்கவே என்ன ஏதுவென்று விசாரிக்கலானேன்.
விசா விண்ணப்பிக்க வேண்டிய ஷரத்களில் ஒன்றாகிய மருத்துவ பரிசோதனையில் அவன் ஃபெயிலாகி விட்டதாகச் சொன்னார்கள். சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்கலாமே என்ற என் யோசனையை மறுத்த ஹெச் ஆர் வெளியே சொல்ல வேண்டாம் அவனுக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ் என்று குண்டைத் தூக்கிப் போட்டனர். அவனிடமும் சொல்ல வேண்டாம். பாகிஸ்தான் போய் பரிசோதித்து விட்டு வரச்சொல்வோம் என்று தீர்மானிக்கப் பட்டது.
அவனிடம் அப்படியே சொல்லி ஊருக்குப் போய் சிகிச்சைச் செய்து குணப்படுத்திக் கொண்டு வா என்று சொல்லிவிட்டு அவனிடம் தனியாகக் கேட்டேன்,
"ரிஸ்வான், உண்மையைச் சொல். உனக்குப் பெண்கள் தொடர்பு உள்ளதா?"
"இல்லை சார் ஜி, எப்பவாவது நண்பர்களோடு ரண்டிகளிடம் செல்வதுண்டு"
"உன் வயதுக்கும் அழகுக்கும் நல்ல மனைவி கிடைக்கும் வரை உனக்குப் பொறுமை இல்லாது போனதே"
"ஏன் சார்ஜி, ஏதும் கெட்ட வியாதியா எனக்கு?"
"சரியாத் தெரியலப்பா. ஊருக்குப் போய் சோதித்துக் கொள்"
அவன் பாகிஸ்தான் போய் 7 வது நாள் அவன் அண்ணன் கம்ரான் அழுது கதறிக்கொண்டே வந்து எமர்ஜென்ஸி லீவ் கேட்டு நின்றான். ஏன் என்று வினவ, தன் தம்பி தற்கொலை செய்து கொண்டதாகவும் உம்மா தனியாக ஆறுதலின்றி தவிப்பதாகவும் சொன்னான். நெஞ்சுக்குள் எனக்கு என்னவோ செய்தது. அவனை உடனே அனுப்ப ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஹெச் ஆருக்கு தெரிவித்துவிட்டு ரொம்ப வேதனைப்பட்டேன்.
என்னாச்சு இந்த இளைய சமுதாயத்துக்கு. எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் இப்படி மனித வாழ்க்கையை விட்டிலின் வாழ்நாளைப் போல சுறுக்கிக்கொள்கிறார்களே என்கிற ஆதங்கம் எனக்கு ஒரு வாரத்திற்கு சரியாகத் தூங்க விடாமல் வாட்டியது. அந்தப் பையனின் முகமும் அதில் வரையப்பட்டிருந்த தற்காலிக கிருதா தாடியும் நிழலாடிக்கொண்டே இருந்தது.
ஹெச் ஐ வி பாஸிட்டிவ் மானிட வாழ்க்கைக்கு நெகட்டிவ் என்பதை மனிதன் என்றுதான் உணரப்போகிறானோ.
தப்பாட்டம்
அப்போது நான் துபை தேராவில் என் நண்பன் ஆடிட்டர் கபீரின் அறைத் தோழனாக இருந்து வந்தேன். நாங்கள் இருந்த மூன்றாவது மாடியின் பால்கனியில்தான் சின்னச் சின்னதாக உடற்பயிற்சி செய்வோம். காற்று வாங்குவோம், சபகா வீதியின் போக்குவரத்தை வேடிக்கைப் பார்ப்போம். மேலும், அங்கிருந்து பார்த்தால் சபகா ரோட்டின் அந்தப் பக்கமாக இருக்கும் ஹோட்டல்கள் தெளிவாகத் தெரியும்.
மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களும் விடுமுறை நாட்களும் மிகவும் புழக்கமாக இருக்கும். இரவு முழுதும் தேரா தூங்காது. அப்படித்தான் ஒரு நாள் பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பெருநாள் தினத்தின் மாலை நேரம். அந்த ஹோட்டலில் புழக்கம் அதிகமாக இருந்தது. நான் என் நண்பனை அழைத்து அதைக் காட்டி'" அங்கே என்னடா நடக்கிறது? " என்று கேட்டேன். அவன், " உனக்கு விளங்கலையா? ப்ராத்தல்டா. நான் சொல்றதெல்லாம் நடக்கிறதா இல்லையா என்று பார்" என்று வரிசையாகச் சொல்லத் துவங்கினான்.
"இப்ப பாரு அந்த பட்டான் அங்கே மருவிக்கொண்டே வர்ரானா. அந்த பங்காளியைப்பாரு அவனை அனுகுவான்"
அனுகினான்.
"ஒன்னும் பேசிக்க மாட்டானுக ஆனா ஹோட்டலுக்கு இவனை அவன் பின் தொடர்வான் பாரு"
தொடர்ந்தான்.
"கொஞ்ச நேரத்திலே வெளியே வந்து வேற கிராக்கி தேடுவான் பாரு"
வந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு போவோர் வருவோரின் முகம் பார்க்கலானான்.
"இப்படித்தான் பார்ப்பானுக. யாராவது கொஞ்சம் இவனுகளை உற்றுப்பார்த்தால் கிட்ட வந்து கொக்கிப் போட்டுருவானுக. இது இங்கே சகஜம்டா. ஒழுக்கமா இருக்க நினைப்பவர்கள் மட்டுமே இங்கே ஒழுக்கமா வாழ முடியும். எப்படியும் வாழ விரும்புபவர்களுக்கு துபை தேரா சொர்க்கம்டா" என்றான்.
எனக்கு நம் சமுதாயத்தை நினைத்து ரொம்ப வேதனையாக இருந்தது. அதுவும் ஈத் போன்ற நாட்களில் பீர் குடிப்பதும் விலை மாதர்களை நாடி போவதும் மிகவும் சகஜம் என்று கேள்விப்பட்டு கவலையாக இருந்தது
இப்படித்தான் ஒருமுறை ஒரு பச்சையிடம் (பாகிஸ்தானியரை இப்படித்தான் குறியிட்டு அழைப்போம்) " நீ தண்ணி அடிப்பியா?" என்று கேட்க அவன் சொன்னான், " நயி சார்ஜி, சிர்ஃப் ஈத்கா தின் பீயகா" என்றான். "ஏன்டா அது தியாகத் திருநாள்டா அன்னிக்கு ஏன்டா குறிப்பா குடிக்கிறீங்க?' என்ற என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு,
"தினமும் குடிக்கக்கூடாது சார்ஜி. ஈத் கா தின் குடிச்சே ஆகனும்" என்றான்.
மது மாது இரண்டிலும் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எல்லோரும் உணர்ந்தாக வேண்டும். வெளியே சொல்ல பயந்தோ வெட்கப்பட்டோ மறைத்தோமேயானால் புறையோடிப் போய் விடும் வியாதி இது.
மைய வாடிக்குச் செல்லும் வழி:
அந்த
அம்புக்குறியிட்டுக் காட்டும்
ஒரு வழிப் பாதையை
வாசிக்கும் நிலையில்
அவர் இருப்பதில்லை
அதற்கு முன்
பூடகமாகச் சொல்லப்பட்ட
மது
முறையற்ற மாது
பழக்கங்களுக்கு எதிரான
எந்த எச்சரிக்கையையும்
புரிந்து கொள்ளும் நிலையில்
அவரை
வைத்திருக்கவில்லை அந்தப் போதை
சில்லரை இன்பங்களுக்காக
நிரந்தர சந்தோஷத்தை
இழந்துபோதல் அறிவா?
யாவற்றையும்
சடுதியில் முடித்துக்கொண்டு
சட்டென
அற்ப ஆயுளில்
அடங்கும் அவசரம் ஏன்?
மென்று விழுங்கினாலே செரிக்கும்
மெல்ல அனுபவித்தாலே நிலைக்கும்
சுத்தம்
வயிற்றுக்கு மட்டுமல்ல
செயலில் சுத்தம்
வாழ்நாள் முழுக்க
சோறு போடும்
மது மாது வாயிலாக
மைய வாடியிலிருந்து வரும்
அத்துணை அழைப்பிதல்களையும்
நல்லமல்களைக் கொண்டுப்
புறக்கணியுங்கள்
நிர்ணயிக்கப் பட்ட
நெடும் பயணக்
காலம் வரும் வரை!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
26 Responses So Far:
சபீர் !
ஒரு அருமையான முன்னெச்செரிக்கை ஆக்கம். இன்றைய தினங்களில் தறி கெட்டுத்திரியும் இளைய சமுதாயத்தை சற்று திரும்பி பார்க்க வைக்கும் ஆக்கம். ஒரு உண்மை நிகழ்வை கொண்டு அதைத்தொடர்ந்து வரும் கவியும் அற்ப்புதம்.
பெருநாள் தினத்தின் புனிதத்தை உணராமல் அதன் மகத்துவத்தையும், அந்நாள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கின்றது என்பதையும் போதிக்கப்படாமல் வளர்க்கப்பட்ட நம் இஸ்லாமிய இளைய சமுதாயம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது.
இதை மீட்டெடுக்க உலகளாவிய "தாவா" பணியே உன்னத வழி.
அபு ஆசிப்.
சபீர்
இன்றைய இளைய தலைமுறைக்கு உன்னுடிய இந்த ஆக்கத்தில் நிறைய படிப்பினை இருக்கின்றது.
உலகலாவிய தாவா பனி (தப்லீக்) நடந்து கொண்டுதானே இருக்கின்றது முக்கியமான அடிப்படை விசயங்களை ஆனித்தரமாக போதிப்பதில்லை அதில் வீரியத்தை செலுத்தி செயல்பட்டால் ஓரளவு குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கின்றது
Well written by Sabeer kaka as usual with a lesson from an incident for all those drunkards whoever drinking as a cup of tea/coffee daily basis. The day of Eid is similar to the day of salary. There is no constrains to enjoy and celebrate our days in Islam but there is a limit clearly defined in Qur'an & Hadis.
என் ஜாய் பண்ணனும் என்று நினைப்பவனுக்கு துபாய் சொர்க்கம், இப்போது எக்ஸ்போ வேறு ஜெயிச்சாச்சு, இன்னும் இதைவிட ஹைடெக் விபச்சாரம் தலைதூக்கும் என்பதுதான் வருத்தப்படவேண்டியது. அல்லாஹ் போதுமானவன்..
// ஹைடெக் விபச்சாரம் //
Define please. Abdul Malik.
(Let me try to define your notion.
- every quotation or bid will have a term of offering choice of model or cinema celebrity's
company
- dress code of female workers must be lusty and voice should be husky.
- any business contracts / service agreements / deeds must be attached with a photo of a lady in pikini
- fitness / STD free test must be done periodically and a hi-tech card should be kept with every individual.
Something like this? :-))
நல் விழிப்பூட்டல்!
இன்றைய பெரும்பாலான இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கேடுகெட்ட கொள்கைகளால் பெரும்பாலோர் அதையே படிப்பினையாக்கி கொண்டு சீரழிகின்றனர்.
முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரபுக்கார பெரும்பாலோர் இப்படி கீழ்த்தரமான மேற்கத்திய கலாச்சாரத்தை நேசிப்பதால் வந்த வினையால் உலகலாவிய இஸ்லாத்துக்கு இழுக்கையும் தேடிக்கொண்டிருக்கின்றனர்,
sabeer....
சில விசயங்களை எழுதினால் சமுதாயம் திருந்தும்.இருப்பினும் மிகப்பழமையான மனித அவலம், அவ்வளவு சீக்கிரம் திருத்த முடியாது. இருப்பினும் கடமையை நாம் செய்து வைப்போம். இறைவனின் கருணையா..இல்லை எமர்ஜன்சி வார்டா என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும்.
Sabeer,
These kind of articles must be written once a week or month.
துபாய்ல உள்ளவங்களுக்கு நெறைய "குடுப்பினை" இருக்கு பார்த்து கவனமா இருந்துகிடுங்கப்பா
//"இப்ப பாரு அந்த பட்டான் அங்கே மருவிக்கொண்டே வர்ரானா. அந்த பங்காளியைப்பாரு அவனை அனுகுவான்"
அனுகினான்.
"ஒன்னும் பேசிக்க மாட்டானுக ஆனா ஹோட்டலுக்கு இவனை அவன் பின் தொடர்வான் பாரு"
தொடர்ந்தான்.//
உங்க ஆடிட்டர் நண்பர் சரியாத்தான் கணக்கு போடுறார் !!
"KUDUPPINAI" means giving money as well as soul for the short time jolly? Am I right S.Hameed kaka? Because of this saniyan, still we r continuing Saudi. More non muslims also willing to continue here.
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahruk,
Its a 'dire warning against adultary' 'for our community brothers and sisters through a well written story and a poem.
Not a single country(people) is exception in making sins.
Sins are generally committed out of ignorance of end result.
End result of each kind of acts have been clearly mentioned in Al Quran.
Personal committment to not to make sin is ultimate salvation from hell.
Because of the changing world and world political structure, its rare phenomenon
to establish a pure Islamic Sharia based rules and regulations.
If a person is not loving his living land he will be thrown out it.
My living land Dubai is wonderful and prosperous place. Alhamdulillah.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
//KUDUPPINAI// means lucky or fortunate to be more correct.
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
//"KUDUPPINAI" means giving money as well as soul for the short time jolly? Am I right S.Hameed kaka? Because of this saniyan, still we r continuing Saudi. More non muslims also willing to continue here.//
Ahamed Ameen சொன்னது…
//KUDUPPINAI// means lucky or fortunate to be more correct.//
குடுப்பினை = "வாய்ப்புக்கள்" என்றும்சொல்லலாம் தானே
Assalamu Alaikkum
Shameed சொன்னது…
//குடுப்பினை = "வாய்ப்புக்கள்" என்றும்சொல்லலாம் தானே
Yes brother.
InshaAllah there are approxmiately 275000 job opportunities expected to be created in UAE from today. The only arab land fortunate(KUDUPPINAI) to host World Expo 2020. It becomes opportunity land, brothers or sisters whoever lost the jobs due Saudi nitakat might be flocking towards United Arab Emirates. There is going to be hundreds of thousands of families going to get better lives. InshaAllah.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
It is 2020
Emirates
hub for the world,
for the culture,
for the commerce
for the technology
and now
for the trade
it is now on wards
hub for beliefs
for hopes
for reaches
for findings
and now for peaceful living
week ends strengthened
by
assembling groups
resembling native
multi culturual lifestyle
cultivated here
Dos and don'ts
are choices of yours
it is
not a foreign anymore
homes
homes made in emirates
Assalamu Alaikkum,
Dear brother Mr. Sabeer Abushahruk,
Nice poetic lines on the United Arab Emirates. Inspiring me too to write...
//it is now on wards
hub for beliefs
for hopes
for reaches
for findings
and now for peaceful living// is an optimistic thought.
Jazakkallah khairan.
B. Ahamed Ameen from Dubai.
wa alaikkumussalam bro. Ahamed Ameen,
// Inspiring me too to write...//
so long.
\\மென்று விழுங்கினாலே செரிக்கும்
மெல்ல அனுபவித்தாலே நிலைக்கும்\\
இஃது இல்லற இன்பத்துக்கும் பொருந்தும் இலக்கணம்!
இச்சையால்
இறந்தான்
பச்சை!
மைய வாடிக்குச் செல்லும் வழி
தொய்யலில்லா ஒற்றை வழி
நையப்புடைக்கும் கபுரின் வேதனை
நச்சுப் போக்கினில் வாழ்ந்தவர் நிலை
நன்மைகள் செய்வோர்க்கு நல்ல மடம்
நல்லுறக்கம் உறங்கெழுவர் மறுமைதினம்
இம்மை வாழ்வுக்கு இயன்ற வரை
செம்மையாய் செய்திடு நன்மைகளை
சிறப்பாய் வாழ்ந்திடுவாய் சுவனத்தில்
அன்பு நண்பனின் தெம்பு கவி
அறுசுவை நிறைந்த அமிர்த நெறி
பண்புடனே நடப்போர்க்கு
பரந்த சுவர்க்கம் செல்ல வழி
உலகின் மிக பழமையான தொழில்! அது தரும் புதுமையான நோய்!
நோய் போக்க மருந்து கண்டவர்கள் நோய் தரும் தொழில் போக்க மருந்து கண்டார்களா ?
S. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்
முதல் காட்சியின் கருவுக்கு என்னிடத்திலும் மற்றொரு உரு இருக்கு !
1997 வருடம் தமிழகத்தைச் சார்த்தவர்தான் (கன்னியாக்குமரி) விசிட்டில் இருந்தவர் எங்கள் கம்பெனின் விளம்பரம் பார்த்து வேலையில் சேர்ந்த்தார்.
விஷாவும் வந்தது அவரும் ஊருக்குப் போயிட்டு எம்ப்ளாயிமென்ட் விஷாவில் வந்த்தார்.. அடுத்து என்ன மெடிக்கல்... ஒருவாரம் கழித்து மீண்டும் மெடிக்கல் செக்கப்புக்கு வரச்சொன்னார்கள்...
அடுத்து ஒருவாரம் கழித்து, அன்ஃபிட் என்ற தகவலும் வந்ததோடு அல்லாமல், உடணடியாக டிக்கெட்டை எடுத்துக் கொண்டு நேரடியாக வரச் சொல்லி தகவல் வந்தது...
எல்லாம் அவர் ஊரிலிருந்து வந்த மூன்றே வாரத்தில், எப்படி சமாதானம் சொல்வது என்றே தெரியாத நிலை அதிகமான கடனில் இருந்தார்... அன்ஃபிட்டுக்கான காரணம் ஹெச்.ஐ.வி. பாஸிட்டீவ் என்ற ரிஸல்ட் சொல்வதாக அவர்கள் சொன்னதே...
முடிந்தவரை அவருக்கு சூழலை எடுத்துரைத்து, ஊருக்குச் சென்றதும் உடணடியாக பரிசோதனை செய்து ட்ரீட்மெண்டெல்லாம் எடுத்துக் கொண்டு மீண்டும் வாருங்கள் என்ற ஆறுதல் வார்த்தைகளோடுதான் அனுப்பி வைத்தோம்.
அவரும் ஊருக்குச் சென்றது, உடண்டியாக சென்னையில் டாக்டரிடம் காட்டிவிட்டு ரிஸல்ட்க்கு காத்திருந்திருக்கிறார், ரிஸல்ட் அவர ஒருவாரமாகும் என்றதால் ஊருக்குச் சென்றவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட்டதாக தகவல் கிடைத்தது.
சிலநாட்கள் கழித்து, அவருடைய அண்ணன் மகன் ஃபோன் செய்தார் சித்தப்பாவுடைய மெடிக்கல் ரிஸல்டில் எவ்வித குறையும் இல்லை எல்லாமெ நெகட்டீவாக இருக்கிறது என்றார் !
அதிர்ச்சி மட்டுமல்ல... விஷா மெடிக்கல் சோதனையின் முடிவினை நினைத்தும் துக்கம் தாக்கியது !
---------
//மென்று விழுங்கினாலே செரிக்கும்
மெல்ல அனுபவித்தாலே நிலைக்கும்//
நின்று கவனித்தேன்..
நன்றே உரைத்தீர்..
----------
20/20 அப்படின்னா என்னான்னு தெரியாத எத்தனையோ பேரில் நானும் இருந்து விடக்கூடாதா என்ற ஏக்கம் பீரிடுகிறது...
அடுத்த ஆறு வருடங்களுக்கு எங்கே, எப்படி, எவ்வளவு, உயரலாம் என்ற கனவு முதலாளிகளிடம் இருக்கிறது...
ஆட்லொல்லி நோய்க்கு உன்னை ஆட்கொள்ளாதே!
புண்ணைத் தேடிப் புறப்படும் ஈயாய்த் (தீயப்)
பெண்ணைத் தேடிப் பெருவினை நோயாய்க்
கண்ணைக் கொன்றக் கருமையாய் வாழ்க்கை
மண்ணி லுள்ளோர் மதித்திடாப் போக்காய்
அற்ப இன்பம் அடைந்திடும் மோகம்
சொற்ப வாழ்வில் சுருங்கிடும் தேகம்
விற்கும் மேனி விளைத்திடும் மோசம்
கற்பைப் பேணாக் கழிசடை வாசம்
மங்கை யான மனைவியே மாண்பாம்
நங்கை இன்பம் நலவுடன் காண்பாய்
எங்கோ சென்று இழப்பது ஏனோ?
பங்கம் கிட்டும் பழக்கமும் வீணே!
தாயும் ஈன்றாள் தரணியில் மேவ
நோயும் கொண்டால் நொடியினில் சாவு
வாயில் புண்ணை வளர்க்குமாட் கொல்லி
பாயில் தூங்கிப் புலம்புவாய்ச் சொல்லி
நாணம் கொண்டு நல்முடன் ஈமான்
பேணச் செய்தால் பெருகிடும் சீமான்
காணும் செல்வம் கணக்கிலா ஏட்டில்
வேணும் அச்சம் விரைவுடன் நாட்டில்!
http://kalaamkathir.blogspot.ae/2010/11/blog-post.html
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய சகோதரர்களே,
நாகரிகம் எனும் போர்வைக்குள் மது அருந்துதல் ஒரு சம்பிரதாயம் ஆகிவிடுமோ என்று சொல்லும் அளவுக்கு பரவலாகவே இப்பழக்கம் நிழவி வருகிறது. ஒன்றிரண்டு வெளிப்படையாக; நூற்றுக்கணக்கில் மறைவாக. விலைமாதர் தொடர்பும் அப்படித்தான்.
இவற்றிலிருந்து மீண்டாலேயொழிய இவ்வுலக மற்றும் மறுவுலக ஈடேட்ற்றமும் சாத்தியப்படும் என்பதைச் சொல்லவே இப்பதிவு.
என்னுடன் சேர்ந்து ஆதங்கப்பட்ட சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
குறிப்பாக, அதிரை மெய்சா மற்றும் கவியன்பன் ஆகியோரின் கவிதை பின்னூட்டம் செறிவாகவும் நெத்தியடியாகவும் இருக்கிறது. அபு இபுறாகீமின் மற்றுமொரு நடப்பின் பின்னூட்டம் நெஞ்சைத் தொடுகிறது. சகோ அஹமது அமீனின் கருத்தில் எதார்த்தமும் இலகுவான தீர்வும் குறிப்பிடத்தக்கவை. நண்பர்கள் காதர், மன்சூர், ஹமீது, ஜாகிர் ஆகியோரின் கருத்திலும் சமுதாய நன்னோக்கு சிந்தனையும் கவலையும் தொனிக்கிறது. சகோ நெய்னா, அப்துல் மாலிக், எம் ஹெச் ஜே ஆகியோரின் வாசிப்புக்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி.
ஃபாரூக் மாமாவின் கேள்வியில் அர்த்தம் பொதிந்துள்ளது எனினும் எனக்கென்னவோ விடை தெரியாத எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்றாகவே நிற்கிறது.
அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.
மற்றுமொரு பதிவின் ஏற்புரைவரை வரை... வஸ்ஸலாம்.
புதிய 'சதி'
ஆசையுடன் முதலிரவில் அனுபவித்த பின்கணவன்
.....................அணைத்துச் சொன்னான்
'வேசியுடன் ஓர்நாளில் விளையாட அவளென்னுள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,விதைத்தாள் 'எய்ட்ஸை"
பாசமுடன் நானிருப்பேன், பதறாதே, பணமுண்டு,
.........................பகட்டு முண்டு
நீ£சனென எண்ணாதே, நிர்ப்பந்தத் தால்மணந்தேன்
....................நின்னை" என்றான்
கனல்வற்றிப் போயிற்று, கயமையினால், அவளுள்ளே
........................கதித்து வந்த
புனல் வற்றிப் போயிற்று, பூகருகிப் போயிற்று,
.........................பொசுக்கும் வேகச்
சினம்முற்றிப் போயிற்று, சிதையடுக்கி வந்துள்ளோன்
.......................செயலால், சோகக்
கனம் முற்றிப் போயிற்று, காலனடி ஓசையவள்
..........................காதுக் குள்ளே!
பதிசெய்த சதியாலே பாழாகிப் போய்விட்டாள்,
.....................பாவி, அந்த
விதிசெய்த பிழைதானோ, வினைசெய்த பிழைதானோ,
...................விதைத்த தீயன்
சிதையேறிப் போய்விட்டான், தேகத்தைச் சிதையாக்கிச்
...................செத்துப் போனாள்
புதிதான 'சதி'யிந்தப் பூதத்தை யாரடக்கப்
...........................போகின் றாரோ?
Post a Comment