Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புதுப்பிக்கப்படாத திருமணங்கள் ! 28

ZAKIR HUSSAIN | November 12, 2013 | , , , ,

வாழ்க்கையின் முதல் 20 - 25 வருடம்  வரைதான் பெற்றோர்...பிறகு குப்பை கொட்டுவது என்னவோ கட்டிய மனைவியிடமோ அல்லது பெண்ணாய் இருந்தால் கணவனிடமோதான். ஆனால் பொருளாதாரத்தை துரத்தி, துரத்தியே தாரத்தை தூர விரட்டும் ப்ரொக்ராமிங் இப்போது பெரும்பாலானாவர்களிடம் பை-டிஃபால்ட் ஆக இன்ஸ்டால் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன்.

எல்லோருக்கும் தனது துணையுடன் ஒரு நெருக்கம் கல்யாண காலத்தில் ஏற்படும். அது தொடராமல் போவதற்கான காரணம் , மற்றும் நாம் பெருமை அடித்துக்கொள்ளும் சமுக நீதி , மனைவியை புரிந்து கொள்வது , அல்லது மனைவிக்குபிடித்த விசயங்களை சபையில் பேசினால் அது 'பெண்டாட்டி தாசன்' என்ற பெயருக்கு பயந்தே ஏறக்குறைய கட்டிய மனைவியை ஒரு "கெளரவ வேலைக்காரி' மாதிரி நடத்தும்  நாரிப்போன விசயத்தை எனது எழுத்துக்கும் வாசகர்களின் கருத்துக்கும் விட்டு விடுகிறேன்.

50'  60' வருடங்களின் காலகட்டத்தில் வீட்டில் 3 வேலை உணவுக்கே சொந்த நாட்டில் ஸ்யூரிட்டி இல்லை என்ற சூழ்நிலையிலும் , ' அவன் போரான்...நீ எதுக்கு வெட்டியா இருக்கே' என்ற திட்டுக்கும் பயந்து பல பேர் வெளிநாடு புறப்பட்டனர்.

கப்பலில் வரும் வழியெல்லாம் வாந்தி, தலை சுத்தல் எதுவும் பெரிதாக தெரியாத அந்த தியாகிகள் நினைத்தது என்னவோ 'காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்" என்ற நம்பிக்கைதான். 

இளமை...கல்யாண காலம், முதன் முதலில் கல்யாணத்துக்கு பிறகு வந்து இறங்கும் போது   'பொட்டி பிரிக்கும் வைபவம்" இதில் சொந்தங்கள் பொருள்களுக்கு ஆலாய் பறக்கும் சூழ்நிலை இதில் எதிலுமே சம்பாதிக்கும் கூட்டம் 'எதையும்" கற்றுக்கொள்ளவில்லை. சின்ன குழந்தைகள் பொருள்களுக்கு ஆசைப்பட்டால் பரவாயில்லை..வயதானபெண்களும் மாடர்ன் புடவைக்கும் , கூலிங் கிளாஸ் கண்ணாடிக்கும் ஆசைப்படும் கொடுமை.

இந்த விசயங்கள் ஏதோ அந்த காலத்தில் மலேசியா / சிங்கப்பூர் போன் ஆட்களை பற்றி எழுதியிருக்காப்லெ...என்று ஒற்றை வரியில் சொல்லி விட வேண்டாம் மக்களே!!

இப்போது துபாய் / சவூதி மற்றும் அமெரிக்கா , யூ.கே , ஆஸ்திரேலியா மற்றும் கோபால் பல்பொடி போன அத்தனை நாடுகளில் வசிக்கும் ஆட்களுக்கும் மற்றும் இந்தியாவிலேயே இருக்கும் ஆட்களுக்கும் பொருந்தும்.

ஏனெனில் ஸ்கிரிப்ட் ஒன்றுதான் அதை ஏற்றுக்கொண்டு வாழும் பாத்திரங்கள்தான் வேறு. ஒரு ஞாயமான மனித ஆசையில் பெரும்பாலும் மண்ணைத்தூவுவது  ஈகோ பிடித்த இன்னொரு மனுசி / மனுசன் தானே தவிர எந்த ஒரு கொடூர மிருகமும் அல்ல.

முதலில் இந்த பிரச்சினைகள் அதிகமாகி வெடிக்காமல் எப்போதும் முள்மீது உட்கார்ந்திருப்பதற்கு காரணம் சில முதுகெலும்பு இல்லாத ‘Mummy Boy’  [அம்மா பையன்] களால்தான்.

ஒருவன் திருமணம் செய்து விட்டால் அவனது கட்டில் வரை சென்று அறிவுரை வழங்கும் பெரியவர்களால்தான் சந்தோசமாக இருக்க வேண்டிய திருமண வாழ்க்கை 'சிங்கி'அடிக்க ஆரம்பிக்கிறது.

சம்பாதிக்க கணவன் வெளிநாடு போய்விட்டு வரும்போது 'நீ ஊரில் இல்லாத போது உன் மனைவி என்னை மதிக்கவில்லையில் ஆரம்பித்து அந்த பெண்ணின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அடிமை மாதிரி மன்னிப்பு கேட்க வைக்கும் கலாச்சாரம் இப்போது நாம் வாய் கிழிய பேசும்  ஹையர் செக்கன்டரியில் 98 % 99 % எனும் நவீன காலத்தில்தான்.  

பரீட்சைகள் எதுவும் வாழ்க்கையை கற்றுத்தரவில்லை. 

வாழ்க்கையை கற்றுத்தரும் பெரியவர்களும் 'ஈகோ" பிடித்த மனிதர்களாய் இருந்து விட்டால் இளைய சமுதாயம் ஒரு நோய் தாக்கிய மாதிரி. ' நான் வந்து இறங்கியவுடன் என்னை பார்க்க வரவில்லை, ஆஸ்பத்திரிக்கு ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் வந்து பார்க்கவில்லை, " என்று பிதற்ற ஆரம்பித்து விடுகிறது.

இப்படி குற்றம் குறைகள் பார்க்கும் அத்தனை விசயமும் திருமணத்தில் இருந்த அன்யோன்ய உணர்வு புதுப்பிக்கப்படாததால் திருமணமே புதுப்பிக்கப்படவில்லை என்பது என் கருத்து.


புதுப்பிக்கப்பட எத்தனையோ விசயங்கள் இருந்தும் வெளியூர் போகும்போது வேன் பிடித்து தெருவில் உள்ள பாதி சொந்தத்தை அழைத்துப்போய் வெளியூர் போனாலும் என் சாப்பாட்டு சிஸ்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் ஆட்களை சமாளித்து, வெளியூரிலும் பெண்களை சமைக்க வைத்து [ குடும்பத்தை அழைத்துச்செல்லவில்லை....தன்னுடன் சமையல் செய்பவர்களைத்தான் அழைத்துப்போய் இருக்கிறார்கள் ]. 

தனியாக பேச கூட வாய்ப்பில்லாத தாம்பத்யம் எந்த ஒரு அன்பை தந்துவிடும் என எனக்குத்தெரியவில்லை. இப்போது ட்ரன்ட் மாறினாலும் புதிதாக கல்யணம் செய்து கொண்ட  ஒரு தம்பதியினர் ஒரு நல்ல ஹாலிடே ரிசார்ட் போய்வருகிற மாதிரி இந்திய சூழ்நிலைகள் பாதுகாப்பு இல்லாமல் போய் வெகுகாலம் ஆகிவிட்டது.

ஹனிமூன் போறவங்க இப்போது இன்னும் சில தம்பதியினரையும் அழைத்துப்போகும் அவலம்.....பாதுகாப்புகள் இல்லாத சூழ்நிலைதான்.

சொந்த நாட்டிலேயே இப்படி பயந்து மூவ் பன்னுவது இந்திய குடிமகன் கள் மட்டும் தானா?...இல்லை 'குடி' மகன் களால்தான் இந்த சூழ்நிலையா? .

இப்போது ஏற்பட்டிருக்கும் வசதிகள் அன்பை அதிகரிக்குமா என்றால் கேள்விக்குறிதான். நான் ஸ்கைப்பில் பேசுகிறேன், டாங்கோவில் பேசுகிறேன் என்றாலும் கூடவே வெட்டியான விசயங்களுக்கும் கவனம் சிதறும். யாரோ ஒரு நடிகை எங்கே தொலைந்தால் என்று எழுதும் ஆர்டிக்கிளுக்கு குறைந்தது 15 பேர் வேலை மெனக்கெட்டு கமென்ட் எழுதுகிறார்கள்.  மத ரீதியாக திட்டிக்கொள்ளும் ஆட்களும் இணையத்தில் அதிகரித்து விட்டார்கள். தெருவில் நாய் நின்று குரைத்தால் நாமும் ஏன் குரைக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமலா கீபோர்டில் நம் கை இருக்கிறது??? தினன் தினம் இதை எல்லாம் மீறி பதில் எழுதி  மிஞ்சிய நேரத்தில் கட்டிய மனைவி மீது அன்பு செலுத்த நேரத்தை தேடினால் எப்படி நேரம் கிடைக்கும்?.

இன்னொரு புதிய நோய்....குறைந்த வருவாயில் இருக்கும்போது நன்றாக தெரிந்த மனைவி, வசதி வாய்ப்புகள் கிடைத்த பிறகு இன்டெலெகச்சுவல் குறைந்து  “அவ்லோ பெரிய ப்யூட்டி ஒன்னும் இல்லே” என்று சொல்லும், கம்பேர் பன்னும் புத்தி. வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டரா பார்த்துக்கொண்டே போனால் அதற்கு முடிவே இருக்காது.

இது ஆண்களுக்கு மட்டுமல்ல....பெண்களும் கம்பேர் செய்ய ஆரம்பிப்பதால் இப்போதைய சூழ்நிலையில் நிறைய "உடைந்துபோன திருமணங்கள்' பெருகிவிட்டது.  கணவனை சரியாகப்புரிந்து கொள்ளாத பெண்கள் தான் மிகவும் சரியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு கணவனின் மரியாதை குறையும் அளவுக்கு பேசும்போது நீண்ட காலம் வாழ வேண்டிய தம்பதிகள் சில சமயங்களில் கசப்பான அனுபவத்துடன் பிரியவும் வேண்டியிருக்கிறது.

கணவனின் பொருளாதார சூழ்நிலைகள் சரியாகும் வரை பொருமை காக்காத பெண்கள் சமயங்களில் சபையில் வைத்தே கணவனுக்கு இன்வஸ்ட்மென்ட் அனலிஸ்ட் மாதிரி  பாடம் எடுக்கும்போது "ஜக்கி" யாவது கணவன் மட்டுமல்ல...கேட்டுக்கொண்டிருக்கும் நாமும்தான்.

இதற்கெல்லாம் காரணம் சம்பாதிக்கும் ஆண்கள் மனைவி மீது செலுத்தும் அன்பில் குறை வைப்பதாக கூட இருக்கலாம்.

நான் அவதானித்த சில விசயங்கள்:

* கல்யாணம் கட்டிக்கொடுத்த பிறகு பெரியவர்களின் தலையீடு எல்லாவற்றிலும் இருந்தால் அந்த கல்யாணம் வெகுதூரம் செல்லாது. அது கடமைக்காக நடந்த நிகழ்வுதான்.

* பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு தொடர்ந்து செய்யப்படும் உதவி அந்த குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் கெடுதி. இது உணவுக்காக / மருத்துவத்துக்காக செய்யப்பட்டால் பரவாயில்லை.


* தாய்க்கு கொடுக்கும் மரியாதையால் கட்டிய மனைவியை துச்சமாக மதிக்கும் செயல் , கர்ம விதியின்படி மகளின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.

* வெளியூருக்கு குடும்பத்துடன் போய் டி.வி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருப்பதற்கு பதில் வீட்டிலேயே இருந்துவிடலாம்.

* நம் ஊர் பகுதியில் இருக்கும் 'பெண் கொடுத்து பெண் எடுக்கும்' சூழலில் நடக்கும் விவாகரத்துகள் தேவையில்லாத ஈகோ விலும் , "திடீர்" சகோதரப்பாசத்திலும் நடப்பதை தவிர்க்க சரியான மெக்கானிசம் தேவை. 

* அடிக்கடி அன்பு செலுத்த வாய்ப்பில்லாமலும் , வாய்ப்புகள் இருந்தும் காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொள்வதிலும் காட்டும் ஆர்வத்தின் முக்கியத்தை விட அன்பும் அன்யோன்யமும் முக்கியம்.

* பிரச்சினைகளில் முடிவெடுக்காத கணவன் அம்மாவிடம் / தந்தையிடம் கேட்டு சொல்கிறேன் என்றாலே அவனுக்கு முடிவெடுக்க / பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரியாத "வெட்டிபீஸ்" என்று நாம் முடிவுக்கு வந்து விடலாம்.

குடும்பத்துக்குள் நடக்கும் விசயம் ராய்ட்டர் நியூஸ் மாதிரி பரவிக் கொண்டிருந்தால்.... சில ஜோடிகளின் திருமணம்… due for renewal.

ZAKIR HUSSAIN

28 Responses So Far:

Unknown said...

ஜாகிர்,

பொதுவாகவே கூட்டுக்குடும்பம் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்ட ஒரு இளம் ஜோடி இந்த அன்பு என்னும் பரஸ்பர கணவன் மனைவி விட்டுக்கொடுத்து ஒருவரை ஒருவர் நேசிக்கும் சூழ்நிலைக்கு வாய்ப்பு ரொம்பவுமே குறைவு.

ஏனனில் நீ சொல்லும் இந்த புதிப்பிக்கப்படவேண்டிய அன்யோன்ய நெருக்கத்திற்கு அங்கு வேலையே இல்லை.வாப்பா, உம்மா, காக்கா, ராத்தா, தங்கச்சி, தம்பி,சகோதரி என்று இருந்து அவளுக்கு கல்யாணமாகி இருந்தால் , மச்சான் என்று எத்தனையோ உறவுகளுக்கு இடையில் அன்யோன்யம் என்ற பேச்சுக்கு இடமில்லாமலேயே போகின்றது. அன்யோன்யத்தை அவன் இழந்தே ஆக வேண்டிய சூழ்நிலை.

எவன் தன் மனைவியுடன் உண்மை நெருக்கத்தையும், கல்யாணம் செய்த உண்மை காரணத்தையும் உண்மையில் விளங்கி வைத்திருக்கின்றானோ, அவன் தன் உழைப்பில் காட்டும் வேகம், தன் சொந்த பந்தங்கலையோ, உற்றார் உறவினர்களையோ, தன் தாய் தந்தையரின் சொத்துக்களையோ, (தனக்கு அதில் உரிமை இருந்தால் கூட) தன் வாழ்வின் ஏற்றத்திற்கு துணைக்கு அழைக்காமல் தன் உடல், சிந்தனை உழைப்பில் முன்னேருகின்றானோ அவனுக்கு கண்டிப்பாக மனைவுடன் வாழும் நெருக்கத்தின் அன்யோன்ய வாழ்க்கையின் வாய்ப்பு கண்டிப்பாக அதிகம்.

ஏனனில் தன் சொந்த எந்த முடிவிலும் யாரும் தலையிடமுடியாத சூழ்நிலையை தான் ஏற்ப்படுத்திக்கொள்வதுதான் காரணம்.

தாய் தந்தை முக்கியம் என்றாலும், நம் வாழ்வின் எல்லை வரை நம்முடன்
வருவது நம் மனைவியே. அன்யோன்யம், நெருக்கம்,, சோர்வில் ஒரு புத்துணர்ச்சி,மற்றும் பலவித ஏக்கங்களுக்கு வடிகால் மனைவி. இந்த நெருக்கத்தை, அதிகரித்துக்கொள்வதோ, அல்லது குறைத்துக்கொள்வதோ அவரவர் கையில் என்பது என் கருத்து.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'அம்மா' சொல் கேட்பது நல்லதுதானே ! - கண்மணிகள்

அவ்வளும் அம்மா வானதும்...

'மம்மி' சொல் கேட்கத்தானே சொல்லுவாங்க !

அம்மா வுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ?

உம்மான்னு கூப்பிடுவதுதான் பெட்ட்டரு... அம்மா ன்னாலே... பச்சை(யிலையை) குத்திடுறாங்க !

காக்கா, உங்க யுக்தி ஸோ ஸ்மார்ட் ! டியூ ஃபார் ரெனிவல்...!

சில நாட்களுக்குப் பிறகு உங்களை நேரில் சந்தித்த உணர்வு இந்த பதிவு !

குடும்ப அரசியல் பேசிய ஃபீலிங் !

Shameed said...

//கோபால் பல்பொடி போன அத்தனை நாடுகளில் வசிக்கும் //

//தெருவில் நாய் நின்று குரைத்தால் நாமும் ஏன் குரைக்க வேண்டும்//

//குடும்பத்துக்குள் நடக்கும் விசயம் ராய்ட்டர் நியூஸ் மாதிரி பரவிக் கொண்டிருந்தால்....//

இது போன்ற வார்த்தைகள் எந்த டிக்ஸ் னேறியில் இருந்து எடுக்குறீங்க!!

Shameed said...

//* பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு தொடர்ந்து செய்யப்படும் உதவி அந்த குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் கெடுதி. இது உணவுக்காக / மருத்துவத்துக்காக செய்யப்பட்டால் பரவாயில்லை.//

100/100

Anonymous said...

ரெண்டாவது போட்டோவில் புதுப்பெண்ணின் அஞ்சு வெரலே புடிக்கிறாரே கோட்டுபோட்ட மாப்புளே! புடிக்கிற அஞ்சு வெரலும் மாமனார் கொடுத்த ' முஹபாத் 'பணம் அஞ்சுலட்சத்தை symbolicகா காட்டுறதுதானே? இந்த அஞ்சும் இப்போ உள்ள நிலவரப்படி பாத்தா ரெம்ப கொஞ்சமுங்க!. இந்த அஞ்ஜே மட்டும் வாங்கிகிட்டு அந்த 'கை''புடிச்ச அஞ்சுகத்தை கொஞ்சோ கொஞ்சுண்டு கொஞ்சுனா அவன் ஒரு போக்கத்த பஞ்சப் பயங்க!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Zakir Hussain,

An article based on reality and the solution to arrive is difficult in lifestyle of our community.

Actually the root cause of necessity for 'due for renewal of marriage' is doing 'remote virtual living' through phone, skype, whatsapp, gtalk or viber etc.

Actually husband and wife 'marriage contract' is made when individuals become adults. Genuine love and bond should start to be cultivated almost artificially from then on. Separation plays a key role in making huge gulf between couple.

Genuine and pure love is to give without expectations which is out of mutual understanding each other. Cultivating these kind of pure love between couple is seeming impossible if a husband is spending almost majority of his life time in foreign countries, searching meaning of life through material only.

There is huge difference in 'open talk' when the couple is living together and separation(husband living in foreign countries and wife is in home). When a husband in vacation back in home, the couple would try to avoid any bitterness by living artificially and try to be happy in the short time (15 days, 30 days or 45 days), same thing with children. Hence no way to identify true nature of each other. So, things and decisions may be happening through proxies like parents of husband, can lead to complexities and problems due to possessive nature and egos.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

Meerashah Rafia said...

சீரியசான மேட்டரை சிம்பிளா புரியவைக்கும் சகோ.ஜாகிரின் 'Art of Approach' அருமையிலும் அருமை..

Yasir said...

சிந்தனையை கிளறி பார்க்கும் ஆக்கம்...

//பரீட்சைகள் எதுவும் வாழ்க்கையை கற்றுத்தரவில்லை.
வாழ்க்கையை கற்றுத்தரும் பெரியவர்களும் 'ஈகோ" பிடித்த மனிதர்களாய் இருந்து விட்டால் இளைய சமுதாயம் ஒரு நோய் தாக்கிய மாதிரி//

பொன்னழுத்துகளால் பொறிக்கபடவேண்டியவைகள் இவை.....இந்த ஒரு சில பெரிய மனிதர்கள் சொல்லிக் கொடுத்து கொடுத்து கெடுப்பதலயே இன்று பல குடும்பங்கள் சீரழிந்து கிடக்கின்றன....சொந்தபுத்தியுடன் நடப்பதற்க்கு திருமணமான ஆண்/பெண் தகுதியுடன் தான் இருக்கின்றார்கள்..இருந்தாலும் சில கெட்ட சைத்தான்களின் சூழ்ச்சியால் சூழப்பட்டு கடைசியில் துன்பத்தில்தான் விழுகின்றார்கள்...

ஜாஹிர் காக்கா சொல்வது ஒரு சில விசயங்களை தவிர ..அவர்களுக்கு அதனால் பாதிப்பு இல்லாதவரை பெரியவர்களின் தலையிடோடுதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

sabeer.abushahruk said...

உள்ளன்பும் உண்மையான நேசமும் இருந்தால் தம்பதியர் என்றென்றும் அன்றாடம் புதுப்பிக்கப்பட்டதுபோல் குடும்பம் நடத்தலாம்.

அதற்கு எதைச் செய்யக்கூடாது எதைச் செய்ய வேண்டும் என்று ஜாகிர் சொல்லித்தருபவற்றைத் தாராளமாகப் பின்பற்றலாம். ஏனெனில், அவை அனுபவபூர்வமானவை.

மூத்தவர்கள், நடைமுறைப் பழக்க வழக்கங்களில் தவறிழைக்கும்போது தலையிடுவதும் தம் அனுபவ அறிவைக் கொண்டு இளையோருக்கு புத்தி சொல்வதும் தவவறில்லை. ஆனால், இளய தம்பதிகளுக்குள் குழப்பம் விளைவிக்குமாறு தலையிடுவதுதான் தவறு.

நல்ல பஞ்சாயத்து, ஜாகிர்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கணவன் மனைவி (அரசியல்) ஆளுமை பற்றிய அசத்தலான அவ்வப்போது புதுப்பிக்க அவசியமில்லாத தொடர் இணைப்புக்கு சரியான நெட்'ஒர்க் தகவல்கள்!

//முதலில் இந்த பிரச்சினைகள் அதிகமாகி வெடிக்காமல் எப்போதும் முள்மீது உட்கார்ந்திருப்பதற்கு காரணம் சில முதுகெலும்பு இல்லாத ‘Mummy Boy’ [அம்மா பையன்] களால்தான்.//

அதோடு அறவே எதையும் தீர்மானிக்க வக்கற்ற மற்றும் அவளுக்கு மட்டும் முழுதாசனாகி விடுவதும் தான்.

sabeer.abushahruk said...

மனைவியிடம் இயல்பாகவே அன்பும் பரிவும் ஏற்படுவதே சரியான கணவனின் தன்மை. இந்த அன்பை சில சமயம் அவளிடம் சொல்லிவிடுகிறோம்; சில சமயம் எழுதி வைத்துக் கொள்கிறோம் இதய ஏட்டில்:

மெல்ல விடியட்டும்!

சுடும் சுடரே
சும்மாயிரு
நிலவின் நித்திரை
நெருடாதே!

அடிவான இருளே
அகலாதிரு
அன்பானவள் உறங்கட்டும்
விடியாதே!

கோழியின் கணவனே
கூவாதிரு
கோதையின் தூக்கம்
குழப்பாதே!

மை நிற இரவே
விடியாதிரு
கை பிடித்தவள் அமைதி
கலைக்காதே!

கட்டிலின் மெத்தையே
கனைக்காதிரு
புரண்டு படுக்கையில்
புலம்பாதே!

மற்றொரு பொழுதே
புலராதிரு
மனைவியின் பூவிழி
மலரும்வரை!

எல்லாம் சேர்ந்து
எனக்கு உதவுங்கள்
உழைத்து களைத்த
என்
மனைவி உறங்குகிறாள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா!
இதயம் இயற்கையிடம் இறைஞ்சுவது இனிமையுடன் அருமை!

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

ஜாகிர் கேட்டுக்கொள்ளும் புதுப்பித்தலுக்குச் சில நிபந்தனைகள் அவசியம். இல்லயேல் புதுப்பித்தலுக்கான மனு தள்ளுபடி செய்யப் பட்டு விடும்:

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
காதல் தெரிய வேண்டும்
காலுக்கெட்டும் திசைகளெல்லாம்
பாதை விரிய வேண்டும்

கடற்கரைக்கு அழைத்து சென்றாலும்
கண்களுக்குள் கடல் தேட வேண்டும்
கனவுகளுக்குள் வர நேந்தாலும்
பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்

இலண்டனில் துடிக்கும் இதயத்தில்
அதிரையின் ரிதம் வேண்டும்
அதிரையின் அதிகாலைகள்
இலண்டன் திசையில் விடிய வேண்டும்

(மேற்கொண்டு நிபந்தனைகளை நீங்களும் வரையருக்கலாம்)

sabeer.abushahruk said...

இந்தப் பதிவிற்கான புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தது யார்? ஜாகிரா அபு இபுவா? எழுதத் தூண்டும் படங்கள்:

"எத்தனை பெரிய கடல்! இருப்பினும் இதோ கரை. எவ்வளவு தேடினாலும் உன் கண்களின் கரை தெரிவதில்லையே"

"மாலையிட்டது முதல் கரை தேடும் வேலைக்கு உமக்கு வேளை யில்லை. கால்கள் நனைத்துப் பாரும்; நம் காதல் நினைத்துப் பாரும். கரை தெரியும். வாழ்க்கையும் கரை சேரும்"

"காற்று வீசுகிறதே, உன் கவனம் கலைகிறதா?"
"உங்கள் கண்கள் பேசுகிறதே, அதில் கவனம் குவிகிறது"

"இப்படி வாரம் ஒரு நாள் தம்பதி நாம் கடற்கரை வருவோமா?"
"ஆறு நாட்களைக் கடக்க நாளாகுமே?"

"திருகாணித் தோடணிந்த உன் மருதாணி கைபிடித்த நாள் நினைவுண்டா?"
"வலக்கை பிடித்ததால்தான் வாழ்க்கை வசமாகியது"

"விழுதுகள் நீருறிஞ்சிடும் நிலையைப் பார்த்தாயா?"
"வீட்டில் பிள்ளைகள் காத்திருக்கும் வாருங்கள் போவோம்"


"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//இலண்டனில் துடிக்கும் இதயத்தில்
அதிரையின் ரிதம் வேண்டும்
அதிரையின் அதிகாலைகள்
இலண்டன் திசையில் விடிய வேண்டும்//


அதிரையின் அதிகாலை முதல்
அன்றாட வேளையின் இருள் வரை
அகம் உன்னிப்பய் கணிக்கிறது
ஒன்றுக்கிரண்டாய் கடிகாரம் வைத்து!

Ebrahim Ansari said...

//* பிரச்சினைகளில் முடிவெடுக்காத கணவன் அம்மாவிடம் / தந்தையிடம் கேட்டு சொல்கிறேன் என்றாலே அவனுக்கு முடிவெடுக்க / பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரியாத "வெட்டிபீஸ்" என்று நாம் முடிவுக்கு வந்து விடலாம்.//

என்னைக் கவர்ந்த வரிகள்.

"சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால் சொல்லாமல் தவிக்கிறேன். " .

என்கிற நிலையில் மந்தையில் உள்ள ஆடு போல முழிக்கும் பலரை சந்திக்கிறேன்.

இந்தப் பதிவு தம்பி ஜாகிர் இடமிருந்து வந்துள்ள இன்னும் ஒரு மறுக்க முடியாத எதார்த்தம்; நிர்தர்சனம் - நிகழ்வுகளின் தொகுப்பே.

Unknown said...

//பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு தொடர்ந்து செய்யப்படும் உதவி அந்த குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் கெடுதி. இது உணவுக்காக / மருத்துவத்துக்காக செய்யப்பட்டால் பரவாயில்லை.//
அரசாங்கத்தில் இலவசம் கொடுத்து மக்களை உழைப்பிலிருந்து சோம்பேறி ஆக்குவதுபோல் குடும்பத்தில் கொஞ்சம் வசதி உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக உதவுவதை வழமையாக்கிக்கொண்டால் உழைக்க நினைப்பவனும் சோம்பேறித்தனமே உயர்ந்தது என்று நினைக்கத்தான் செய்வான்.

ஜாகிர்,

நீ சொன்ன மேலே உள்ளவரிகள் , குடும்பம் இருந்தும் அதற்காக உழைக்காமல் ஊர் சுற்றுபவனுக்கு ஒரு சவுக்கடி.

அபு ஆசிப் .


ZAKIR HUSSAIN said...

//இந்தப் பதிவிற்கான புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தது யார்? ஜாகிரா அபு இபுவா? எழுதத் தூண்டும் படங்கள்://

நான் தான். எனக்கு என்னவோ படங்களை நான் தேர்ந்தெடுத்தால்தான் ஆர்டிக்கிள் முழுமைபெற்றதாக நினைப்பேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஈர்ப்பதில் மல்லிகை மணத்துடன் மருதாணி
..........சேர்ப்பதும் மனத்தினில் மயக்கமே வருதாமே
வார்த்திடும் பேச்சினில் இனிமையே உருவாகப்
..........பார்த்திடும் பார்வையில் அழைப்புதான் கருவாகிக்
கூர்த்திடும் சமிக்ஞையைக் கொண்டவன் திருவாக
.........மூர்க்கமும் இன்றியே முழுவதும் தருவானே
ஆர்த்திடும் உணர்வினைத் தீயதாய்க் கருதாமல்
.......தீர்த்திடத் திருமணம் நன்மையாய் வருதாமே!

அப்துல்மாலிக் said...

வருஷத்துக்கு அல்லது 2 வருஷத்துக்கு 1 மாத விடுப்பில் செல்லும் நம்மில் பெரும்பாலானோர் அதிகமதிகம் மனைவி குழந்தைகளுடன் நேரம்/அன்பு செலவிடாமல் கஷ்டப்பட்டு உழைத்த நாம் இங்கே வந்து சந்தோஷமாக இருக்கிறேன் என்ற பேர்வழியில் நண்பர்களுடன் பிக்னிக், காலை முதல் இரவு வரை வெளியில் சுத்துவது, கூட்டாக சமைத்து சாப்பிடுவது இப்படி ஊரில் இருந்தும் விலகியே இருப்பதும் மேலும் அன்யோனியத்தை ஏற்படுத்தும். இதை நம்மக்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறோம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Zakir kaka, there you are. So hence we can call you here "The man of the yathaartham (reality)". However in our daily life mother side or wife side both or any one can be a problem with big burden. But we have to act both side with balance and neutral such as mid point of the weighing scale. Then only we can enjoy our life fruitfully with minimum level. Your timely articles to be continued and teach us lot of things which we yet to be learnt. Congrats Zakir kaka.

Anonymous said...

திருமனமானபிறகு மனைவியுடன் அதிகநேரம் செலவளிப்பதும், அவர்களின் திருப்திக்கு முன்னுரிமை கொடுப்பது இயற்கையானது. பெற்று, வளர்த்து, பாலூட்டி, சீராட்டி, படிக்கவைத்து கஷ்டப்பட்டு ஆளாக்கியதை மறந்து "இப்ப வந்தவளுடன்" கொஞ்சிக் குலாவுகிறானே என்ற எண்ணமே மாமியார்-மருமகள் பிணக்குகள் எழக்காரணம்.

பெரும்பாலான பெற்றோர் புதுமன தம்பதிகளின் பரஸ்பர ஈர்ப்பை புரிந்து கொள்ளாமல் "பெண்டாட்டியே கதி" என்று கிடக்கிறான் என்றும் திருமணத்திற்குப்பின் தங்களைக் கண்டுகொள்வதில்லை என்றும் குறைபட்டுக் கொள்கின்றனர்.

என்னைப்பொருத்தவரை வாழ்வின் முதல் பகுதி பெற்றோருக்கும், நடுப்பகுதி மனைவி, குழந்தைகளுக்கும்,எஞ்சியவை இவர்கள் அனைவருக்கும் சமமாக என மனதளவில் பங்கீடு செய்து கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் உணர்த்தினாலே வாழ்க்கைப் பயணம் சலணமின்றி செல்லும் என்று நம்புகிறேன்.

N.ஜமாலுதீன்

Ahamed irshad said...

சரியான பதிவு... உளவியல் ரீதியாக சரியான புள்ளியை தொட்டு எழுதியிருக்கீங்க காக்கா... Totally agreed with you..... அவதானிப்புகள் அத்தனையும் உண்மை ஒன்றை தவிர..

|| வெளியூருக்கு குடும்பத்துடன் போய் டி.வி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருப்பதற்கு பதில் வீட்டிலேயே இருந்துவிடலாம் ||

இப்பெல்லாம் கையிலேயே டிவி அளவுக்கு ஸ்க்ரீனை கொண்டுவந்துவிட்டார்கள்... அதை சொல்ல வந்தேன்....


ஆலமரம் சரியான குறியீடு போலிருக்கே :)))

KALAM SHAICK ABDUL KADER said...

பெண்ணிவள்..!


காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு
......கனவிலும் நினைவிலுமே
ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்
..ஒடுங்கிடத் துணையாக
ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்
....ஆறுதல் பெற்றிடத்தான்
போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்
....புரிந்தவர் வென்றனரே!
.

பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
....பேச்சினில் புகழ்ந்ததுமே
பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
...பிறழ்ந்திடும் வேளையிலே
கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
...காத்திட விரும்புவாளே
விண்ணின் தாரகை யல்லள் மேதினி கொள்ளும்
...விளக்கதன் சுடராவாள்!


பிள்ளை பெற்றிட மட்டும் இருப்பதாய் நினைத்தால்
....பிழைகளும் உன்னிடந்தான்
உள்ளம் உணர்வுகள் எல்லாம் உணர்ந்திட வேண்டி
....உதவிட ஏங்கிடுவாள்
கள்ளம் கபடமும் கொண்டு வாழ்ந்திட நினைத்தால்
....கனவிலும் மறந்திடுவாள்
வெள்ளம் போலவே கவலைப் பொங்கிடும் போதில்
...விவேகமாய் முடிவெடுப்பாள்!



“கவியன்பன்” கலாம்

http://kalaamkathir.blogspot.ae/2013/11/blog-post.html

KALAM SHAICK ABDUL KADER said...

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய..,
-------------------------------------------------------
இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய, இருக்க வேண்டிய குணங்களுள் முக்கியமான குணம் விட்டுக்கொடுக்கும் தன்மையே ஆகும்.

தாம்பத்ய வாழ்க்கையில் கணவன்,மனைவி இருவருக்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாவிட்டால்,உறவினில் விரிசல் விழத்தொடங்கிவிடும்.மேலும் ஒவ்வொருகணமும் ஒருத்தர் நலனில் ஒருத்தர் அக்கறை செலுத்தவேண்டும்.

இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் நடந்துகொள்ளவேண்டும்.சின்ன விசயமாக இருந்தாலும் பாராட்டத் தவறக்கூடாது.ஒருத்தர் நம்பிக்கையை ஒருத்தர்ப் பெற்றிருக்கவேண்டும்.சிறு ஊடல் வந்தாலும் ஈகோ பார்க்காமல் யாராவது ஒருத்தர் மனம் விட்டுப் பேசி அதைக் கூடலாக மாற்றவேண்டும்.

இருவரின் பழக்க வழக்கங்களில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது.கணவர் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை மனைவியிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும்.மனைவி மனதைப் புரிந்து அதற்கேற்றால் போல் நடந்துகொள்ளவேண்டும்.

ஒரு மனிதன் நலமாக இருக்கவேண்டும் என்று பெற்ற தாய்க்குப் பிறகு,அவனுடைய மனைவிதான் மனப்பூர்வமாக நினைப்பார்.அதனால்தான் “தாய்க்குப் பின் தாரம்”என்பார்கள்.மனைவியிடம் ஆலோசனை கேட்டுத் தொடங்கும் எந்தத் திட்டமுமே பாதி வெற்றி அடைந்தது போலாகும்.அவருடைய உண்மையான பிரார்த்தனை வெற்றியைக் கொடுக்கும்.அதனால்தான் பெரியவர்கள்..,

“மனைவி சொல்லே மந்திரம்”என்றார்கள்.

அப்துல்மாலிக் said...

மாமியார்-மருமகள் சண்டை ஏன் வருகிறது? ஒரு சூடான் நாட்டவரின் விளக்கம்..

மகனை பெற்று வளர்த்து அவன் சம்பாதித்து தன்னை காப்பாத்துவான் என்ற தாயின் எண்ணத்தில் திருமணம் செய்து கொடுத்தவுடன் மனைவியுடன் அன்னோன்யமாக இருப்பதை பார்த்த தாய் எங்கே இவள் தன் மகனை தன்னோடு வைத்துக்கொண்டு தன்னை அம்போனு விட்டுடுவாளோ என்ற முன்னெச்சரிக்கைதான் மருமகள் (அது தன் அண்ணனின் மகளா இருந்தாலும் சரியே) மீது வெறுப்பை கொட்டுகிறார்கள். இதுவே நாளடைவில் பெரும்பிரச்சினையாக உருவெடுக்கிறது.......

ZAKIR HUSSAIN said...

முதலில் எல்லோருக்கும் என் நன்றி. காரணம் நான் எழுதியதை யாரும் தவறாக எடுத்துக்கொண்டு ' இந்த ஆளு என்னப்பா பெரியவங்களெ கண்டுக்காதே"னு சொல்றான் என்று நினைத்து விடக்கூடும். காரணம் சிலரின் வாழ்க்கை முறையை பார்க்கும்போது அப்படித்தான் ஆகிவிடுகிறது.

Bro Abdul Kadir, உன் அவதானிப்பும் சரியே. ஆனால் யாரையும் திருத்தும் நடவடிக்கையாக இதை பார்க்கவில்லை. வாழ்க்கையை வாழ்வதை விட்டு விட்டு லந்து பன்ன வேண்டாம் என்பதே நம் நோக்கம்.

அபு இப்ராஹிம் ...சமீபத்தில் எங்கள் ரியாஸிடம் பேசினீர்களா?...ஏன்னா கமென்ட் எல்லோருக்கும் புரியர மாதிரி இல்லே. எங்கள் ரியாஸ்தான் இப்படி பேசி எங்களை குழப்புவான்.

Tuan Haji Shahul, டிக்சனரியில் எடுக்கவில்லை என்பது உங்கலுக்கும் தெரியும். அதிகம் வாசிக்கும் போது / மற்றவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருக்கும் போது இப்படியான எழுத்துக்கள் வந்துவிழும்.

Bro Ahamed Ameen, As you have written “ Genuine and pure love is to give without expectations which is out of mutual understanding each other “….it is simply what I want to relate. You have written about how we have to live in very simple way. I take one article to explain.

Bro Meerashah Rafia …உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி. உங்களின் கருத்துக்கள் அடிக்கடி பதியப்பட வேண்டும் என்று நான் ஆசைப்படுவது உண்டு. காரணம் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட் டச் உங்களின் கருத்தில் எப்போதும் இருக்கும். இது அஹமது இர்ஷாத் இடமும் நான் எப்போதும் பார்ப்பது உண்டு. ஆலமரத்தை சரியாக கவனித்து இருப்பதிலேயே தெரிகிறது.

Bro யாசிர் ..உங்களுக்கு உங்களை சரியாக புரிந்து கொண்ட பெரியவர்கள்தான் கிடைத்து இருக்கிறார்கள். உங்கள் வாப்பா எனக்கு தெரிந்து ஒரு ஜென்டில்மேன். 70களின் தொடக்கத்தில் நாங்கள் சிறுவர்களாய் இருக்கும் போது எங்களை எல்லாம் நண்பர்கள் மாதிரி நடத்துவார் உங்கள் தகப்பனார். அப்படியென்றால் உங்களையும் அப்படித்தான் நடத்துவார் என்று சொல்லிதெரிய வேண்டியதில்லை.

Bro Ebrahim Ansari,

//இந்தப் பதிவு தம்பி ஜாகிர் இடமிருந்து வந்துள்ள இன்னும் ஒரு மறுக்க முடியாத எதார்த்தம்; நிர்தர்சனம் - நிகழ்வுகளின் தொகுப்பே.//

உங்களின் எழுத்தை படித்தபிறகு எத்தனை அப்பாயின்ட்மென்ட் / ட்ராவல் இருந்தாலும் இன்னும் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. எப்போதும் உங்கள் எழுத்தும் , உற்சாசகப்படுத்தும் உங்கள் எண்ணமும் என்னைப்போன்றவர்களுக்கு எப்போதும் வேண்டும்.

Bro N.Jamaludeen, வாழ்க்கையை பகுதி / பகுதியாக பிரித்து எழுதியதை பார்த்தவுடன்....'அட இதை நாம் எழுதாமல் விட்டு விட்டோமே' என்ற எண்ணம். சரியாக கணித்து எழுதியிருக்கிறீர்கள்.

ZAKIR HUSSAIN said...

To bro MSM Naina Mohamed

//But we have to act both side with balance and neutral such as mid point of the weighing scale. //

What a wonderful observation about life. If people can get this point, i think we have less problem.

Bro Abdul Malik, பெரும்பாலும் எனது ஆர்டிக்கிள் வந்தால் நீங்கள் வருவதை பார்க்கிறேன். அல்லது நீங்கள் வந்த சமயங்களில் நான் பார்க்கவில்லையா?.. Thanx For your comments.

Bro MHJ ..நீங்களும் நான் பார்த்த சில Mumy Boys பார்த்து இருக்கிறீர்கள் போல தெரிகிறது. இவர்கள் சாய்ந்தால் ஒரு பக்கமே சாய்ந்து விடுவார்கள்.

சபீர்....உன்கவிதைகளை இங்கு எனக்கு தெரிந்தவர்களிடம் படித்து காண்பித்தேன். எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

Bro AbulKalam.. நான் எழுத விட்ட டிப்ஸை நீங்கள் முடித்து வைத்தமைக்கு நன்றி ..உங்களுக்கும் சபீருக்கும் எப்படித்தான் இப்படி கவிதை வசப்படுகிறதோ.. [ நானும் எழுத முயற்சித்து டைம் வேஸ்ட் ]




அன்புமிக்க எஸ் முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு ...நீங்கள் வரதட்சணை அமௌன்ட் ரொம்ப சல்லிசா இருக்கு. அந்த ரேஞ்ச் தாண்டி பிச்சையெடுக்க ஆரம்பித்து ரொம்ப நாளாகி விட்டது முதுகெலும்பு இல்லாத மாப்பிள்ளைகளுக்கு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.