பேரா...
பேரானந்தத்தை - உன்
பிறப்பிலே தந்த என்
பேரா...
நூறாயிர விண்மீன்களின்
தோராயப் பிரகாசம்
வாயாரப் பூத்த
உன் புன்னகையில்
தாயாராக என் மகள்
தயாரானதும்
தாத்தாக் கனவுகள்
ஏராளம் என்னுள்
யாராலும்
சகிக்க முடியாதது அழுகை
அதையே
ரசிக்க வைத்து
நீ பிறந்தாய்
இனி சிலகாலம்
முகங்களை
உற்று நோக்குவாய் -உன்
முஷ்டி நக்குவாய்
காற்றோடு குஸ்த்தியிடுவாய்
எல்லாவற்றிற்கும் சிரிப்பாய் - யாரும்
இல்லாவிட்டாலும் சிரிப்பாய்
உள்ளங்கால் உதைத்து
உள்ளங்களில்
பூ விதைப்பாய்
பூமிக்கு வந்து
பலகாலம் ஆனதால்
புண்பட்ட மனிதர்களுக்குப்
பொக்கை வாய்ப்
புன்னகை மருந்திடுவாய்
தவழ்ந்து எழுந்து
நிமிர்ந்து நடந்து
உருண்டை பூமிக்கும்
உயர்த்தப்பட்ட வானுக்குமிடையே
வாழத்தலைப்படும் வேளை
வாழ்க்கைச் சுவைப்பட
வழிவகை உண்டு பேரா
வா
உன்னை வைத்துத்தான்
நெளிந்தும் நலிந்தும்போய்
தறிகெட்டுச் சீர்குழையும்
உன்
தலைமுறை மக்களை
நிலை நிறுத்த வேண்டும்
தலை நிமிர்த்த வேண்டும்
உன்னை முன்னிறுத்தத்
தன்னைத் தயார் செய்
தொல்லை தராத
பிள்ளைப் பிராயம்
இல்லை பெயரா...
என்னோடு விளையாடு
விளையாட்டினூடே
விதைக்கக் கற்றவன் நான்
நான்
தடுக்கும் செயலையும்
அருவருக்கும் சொல்லையும்
வெறுத்திடு
போதிக்கும் சொற்களும்
சாதிக்கும் செயல்களும்
விரும்பிடு
ஓரிறைக் கொள்கையால்
அஸ்திவாரம் இடு
உலகக் கல்வியின்
உச்சங்கள் தொடு
நல்லெண்ணக் காற்று
உள்ளே வர
இதயச் சாளரங்களை
விரியத் திறந்து வை
நற்செயல்கள் வந்து
கதவைத் தட்டினால்
மனவாசல் திற
நடுக்கூடத்தில் அமர்த்தி
நன்றாய்க் கற்றுக்கொள்
வியர்க்க வியர்க்க விளையாடு
வெற்றி தோல்வியில்
பக்குவப் படு
வெற்றி வசப்பட
வாழ்க்கைச் செயல்களில்
நேரம் தாழ்த்தாதே,
நெற்றி நிலம்படும்
வணக்கச் செயல்களில்
நேரம் தவறாதே
அன்பையும் பாசத்தையும்
அன்னை தந்தையிடமும்
அடிப்படைக் கல்வியை
ஆசான்களிடமும் அடை
நண்பர்கள் உன்னை
நாடி வருகையில்
குணம்குற்றம் கணி
குணம் மிகைத்தால் கொள்
விழித்துக் கொண்டே
கனவு காண் - அதில்
சமூகத்தை எழுப்பி விடு
நாகரிகம் எனும் பெயரில்
நரிக்குணமும்
பண்பாட்டுப் போர்வையில்
பகல் வேஷமும்
போட்டிபோட்டுப் பார்க்காமல்
பொறாமையும்
உடலுழைப்பில் நாட்டமில்லா
ஒட்டுண்ணியாயும்
ஒடுங்கிக் கிடக்கின்ற
உன் தலைமுறை மக்களின்
தறுதலை குணம் சுட்டு
மாற்று வழிகளைக் காட்டு
ஆயிரத்தில் ஒருவனாக
அற்புத மனிதனாகு
சொற்பக் கால வாழ்க்கையைச்
சொர்க்கத்தின் சாயலாக்கு
நல்லவற்றை நிறைவாக வாழ்
அல்லாதவற்றில் வீழாதே
விட்டுச் செல்வதற்கு - நல்
வினைகளை விதை!
விடைத்து நில்
நேராகச் செல்
உன்னைத் தொடர - ஓர்
Sabeer Ahmed abuShahruk
பேரானந்தத்தை - உன்
பிறப்பிலே தந்த என்
பேரா...
நூறாயிர விண்மீன்களின்
தோராயப் பிரகாசம்
வாயாரப் பூத்த
உன் புன்னகையில்
தாயாராக என் மகள்
தயாரானதும்
தாத்தாக் கனவுகள்
ஏராளம் என்னுள்
யாராலும்
சகிக்க முடியாதது அழுகை
அதையே
ரசிக்க வைத்து
நீ பிறந்தாய்
இனி சிலகாலம்
முகங்களை
உற்று நோக்குவாய் -உன்
முஷ்டி நக்குவாய்
காற்றோடு குஸ்த்தியிடுவாய்
எல்லாவற்றிற்கும் சிரிப்பாய் - யாரும்
இல்லாவிட்டாலும் சிரிப்பாய்
உள்ளங்கால் உதைத்து
உள்ளங்களில்
பூ விதைப்பாய்
பூமிக்கு வந்து
பலகாலம் ஆனதால்
புண்பட்ட மனிதர்களுக்குப்
பொக்கை வாய்ப்
புன்னகை மருந்திடுவாய்
தவழ்ந்து எழுந்து
நிமிர்ந்து நடந்து
உருண்டை பூமிக்கும்
உயர்த்தப்பட்ட வானுக்குமிடையே
வாழத்தலைப்படும் வேளை
வாழ்க்கைச் சுவைப்பட
வழிவகை உண்டு பேரா
வா
உன்னை வைத்துத்தான்
நெளிந்தும் நலிந்தும்போய்
தறிகெட்டுச் சீர்குழையும்
உன்
தலைமுறை மக்களை
நிலை நிறுத்த வேண்டும்
தலை நிமிர்த்த வேண்டும்
உன்னை முன்னிறுத்தத்
தன்னைத் தயார் செய்
தொல்லை தராத
பிள்ளைப் பிராயம்
இல்லை பெயரா...
என்னோடு விளையாடு
விளையாட்டினூடே
விதைக்கக் கற்றவன் நான்
நான்
தடுக்கும் செயலையும்
அருவருக்கும் சொல்லையும்
வெறுத்திடு
போதிக்கும் சொற்களும்
சாதிக்கும் செயல்களும்
விரும்பிடு
ஓரிறைக் கொள்கையால்
அஸ்திவாரம் இடு
உலகக் கல்வியின்
உச்சங்கள் தொடு
நல்லெண்ணக் காற்று
உள்ளே வர
இதயச் சாளரங்களை
விரியத் திறந்து வை
நற்செயல்கள் வந்து
கதவைத் தட்டினால்
மனவாசல் திற
நடுக்கூடத்தில் அமர்த்தி
நன்றாய்க் கற்றுக்கொள்
வியர்க்க வியர்க்க விளையாடு
வெற்றி தோல்வியில்
பக்குவப் படு
வெற்றி வசப்பட
வாழ்க்கைச் செயல்களில்
நேரம் தாழ்த்தாதே,
நெற்றி நிலம்படும்
வணக்கச் செயல்களில்
நேரம் தவறாதே
அன்பையும் பாசத்தையும்
அன்னை தந்தையிடமும்
அடிப்படைக் கல்வியை
ஆசான்களிடமும் அடை
நண்பர்கள் உன்னை
நாடி வருகையில்
குணம்குற்றம் கணி
குணம் மிகைத்தால் கொள்
விழித்துக் கொண்டே
கனவு காண் - அதில்
சமூகத்தை எழுப்பி விடு
நாகரிகம் எனும் பெயரில்
நரிக்குணமும்
பண்பாட்டுப் போர்வையில்
பகல் வேஷமும்
போட்டிபோட்டுப் பார்க்காமல்
பொறாமையும்
உடலுழைப்பில் நாட்டமில்லா
ஒட்டுண்ணியாயும்
ஒடுங்கிக் கிடக்கின்ற
உன் தலைமுறை மக்களின்
தறுதலை குணம் சுட்டு
மாற்று வழிகளைக் காட்டு
ஆயிரத்தில் ஒருவனாக
அற்புத மனிதனாகு
சொற்பக் கால வாழ்க்கையைச்
சொர்க்கத்தின் சாயலாக்கு
நல்லவற்றை நிறைவாக வாழ்
அல்லாதவற்றில் வீழாதே
விட்டுச் செல்வதற்கு - நல்
வினைகளை விதை!
விடைத்து நில்
நேராகச் செல்
உன்னைத் தொடர - ஓர்
உலகம் உருவாக்கு!
- எல்லா இளமை ததும்பும் அப்பாக்கள் சார்பாகவும் என் பேரன் Shahbaz Mohamedக்காக சபீர் 'அப்பா'!
Sabeer Ahmed abuShahruk
55 Responses So Far:
Masha Allah, what a fantastic poem created for new born grand son by grandpa. It teaches a lot of moral studies which are surely bring up every child to the top position of good & noble manners not only to the particular family to the entire society till the last breath. Sorry for the inconveniences because I don't have facility to type & post my comments in tamil right now.
கவித்தாத்தாவுக்கு வாழ்த்துகள்.
தாத்தா தாத்தா...சபீர் தாத்தா, இதை மறவாமல் நான் பல்கலைக்கழகப்படிப்பு முடித்ததும் படித்துக்காட்டுங்கள் தாத்தா,
இப்படிக்கு
Shahbaz Mohamed
சபீர் தாத்தா !
உன் இளமை கொட்டம் அடங்கியது.
உனக்கு நரைக்கா விட்டாலும் பரவாயில்லை. உன்னை தாத்தாவாக்கிய
உன் பேரன் நூறாண்டுகாலம் ஈமானோடு வாழட்டும்.
அவன் எதிர்காலம் சிறக்கட்டும்.
தாய் தந்தையரின் வழிகாட்டுதலில் ( இறைக்கும் இறைத்தூதருக்கும் பொருந்திய வழியில் இருந்து வழிகாட்டும்போது) அதன்படி செயல் படட்டும்
பர்லான கடமைகளை நிறைவேற்றும், ஒரு பொறுப்புள்ள மார்க்கப்பிரதிநிதியாக இவன் வாழ்வை பிறர் பின்பற்றும் அளவுக்கு , இவன்
பெற்றோர்கள் இவனை வளர்க்கட்டும்.
மொத்தத்தில் இவன் ஈமானோடு வாழ்ந்து
" ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன மகனை
சான்றோன் எனக்கேட்டத்தாய் "
எனும் வாக்குக்கு ஒப்ப பெற்ற தாய் பூரிப்படையும் மகனாக வாழ்ந்து காட்ட
இறைவனிடம் ஏந்துகின்றேன் இரு கைகளை.
அபு ஆசிப்.
தாத்தாவாக பதவி உயர்வு பெற்ற அன்பு நண்பனுக்கு முதலில் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
பேரனுக்குப் புகட்டிய அறிவுரைகள்
சீரணி பெற்றுச் சிறப்புடன் இருந்தன.
காரணி காண்பித்த உன் கவிவரிகள்
கல்லும் உருகி நன்னீர் தரும்
ஓரணியில் தொடங்கிய வாழ்வு
இனி பேரனைக் கொண்டு
அணியணியாய் பல்கிப் பெருகட்டும்
இப்பாருலகு போற்றும் வகையில்...
அல்ஃப் மப்ரூக் காக்கா....முத்தான அறிவுரைகள் ஷாஹ்பாஸ் வளர்ந்து பாஸானதும் படித்து உங்களுக்கு நடந்தும் காட்டுவான்....மட்டற்ற மகிழ்ச்சி காக்கா உங்க வீட்டின் புது வரவிற்க்கு....அல்லாஹ் அவனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தியையும் நல்குவானாக ஆமீன்
அன்புள்ள புதிய தாத்தா அவர்களுக்கு பழையதாத்தா எழுதுவது.
முதலாவதாக மப்ரூக். நல் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அனைவரின் நல் வாழ்த்துக்கள்.
இது வாழ்வின் ஒரு புதிய பக்கம். இந்தப் பக்கத்தில் பதியப் போவது அன்பும் அரவணைப்பும்.
பதிவு செய்யப் பட்ட கவிதையைப் பாராட்ட வார்த்தை இல்லை. என்னை பொருத்தவரை இது கவிதையல்ல. ஒரு உணர்ச்சிக் குவியல். உணர்வுகளின் ஏரி. இதில் நானும் பலமுறை குளித்துத் திளைத்து இருக்கிறேன் .இன்று என் பேரன் பேத்திகளே எனது உலகமாக இருக்கிறார்கள்.
இருந்தாலும்
அப்ஜெக்ஷன் மை லார்ட் அது என்ன?
//- எல்லா இளமை ததும்பும் அப்பாக்கள் சார்பாகவும்// அப்போ நான் , மச்சான் ஆகியோர் என்ன செய்வது?
எங்கள் சார்பாகவும் பேரனுக்கு அன்பு முத்தங்கள்.
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahrukh,
The poem "பேரன்புப் பேரனே!" conveys has so much messages to the readers here.
First of all Alf Mabrook...my heart felt congratulations for having new grand son.
All the inspired messages of poem will fetch great name for the grand son. But the inspired messages cannot be received by the grand son now, so we the readers have to receive to our hearts.
Brother Mr. Zakir Hussain's suggestion is based on reality. It can be started as soon as the child becomes 3 years old.
//விழித்துக் கொண்டே
கனவு காண் - அதில்
சமூகத்தை எழுப்பி விடு// I received this message well as it resonates with my wishes.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
MSM naina,
It is, that to become a grandPa, a sort of feeling which every human should experience. It is a successful reach of a man at another remarkable milestone in his life on earth.
it looks as if happening to everyone spantaneously but it is not. More over it is a blessing of Almighty.
Awaiting there for all of you to reach at me, inshaAllah.
Thanks that you liked it.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
Jamaludeen,
மிக்க நன்றி அதிரைக்காரர்.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
zakir,
அந்நேரம் படித்துக் காட்டும் வாய்ப்பைக் கண்களோ பிரக்ஞையோ கவனமோ தரமுடியாமல் 'போய்' விடலாம் என்கிற அச்சத்தில்தான் இப்பவே எழுதி வைத்தாகிவிட்டது.
ஜாகிர் அப்பாவிடம் சொல்லி படித்துக்காட்டச் சொல் பேரா.
$$$$$$$$$$$$$$$$$$$$$£$
காதரு,
ரொம்பத் துள்ளாதே. இதையே சொல்லி உன்னை கலாய்க்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை.
நாளிருப்பதாகத்தான் தோன்றும்;ஆனால் பெண்பிள்ளையைப் பெற்றவர்களுக்கு சட்டென்று எல்லாம் நடந்து அப்பா என்றாகி விடும்.
வா வா காத்திருக்கிறேன். இன்னும் ஓரிறு ஆண்டுகளுக்குள் ஃபுட்பால் ட்டீம் அளவுக்கு அப்பாக்கள் ஒன்று சேர எஞ்சோட்டுப் பசங்களின் மகள்/மகன்கள் தயார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அஸ்ஸலாமு அலைக்கும்
சபீர் காக்கா,
உணர்வுப்பூர்வமான வரிகள்.
//வா
உன்னை வைத்துத்தான்
நெளிந்தும் நலிந்தும்போய்
தறிகெட்டுச் சீர்குழையும்
உன்
தலைமுறை மக்களை
நிலை நிறுத்த வேண்டும்
தலை நிமிர்த்த வேண்டும்///
சூப்பர் காக்கா...
வாழ்த்த வயதில்லை எனக்கு...
;)
சபீர்,
வாழ்வின் பரிணாம வளர்ச்சியில் பெருமைப்படவேண்டிய ஒரு தருணம் இது.
நான் உன்னை உன் பேரனைப்பற்றி நினைவு படுத்தி பேசியது ஒரு புறம் கிண்டல் என்ற ஒன்று இருந்தாலும் , இதுபோன்று பெருமைப்படும் விஷயம் நம் வாழ்வில் எப்பொழுது நிகழும் என்னும் ஏக்கம் இன்னும் என் உள்ளும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ் வாய்ப்புகள் கூடிய விரைவில் கிட்டும் , நானும் இதேபோன்று பெருமைக்குரிய வாய்ப்புக்கு சொந்தக்காரன் ஆகும்போது, நீ தாரளமாக என்னை கலாய்க்கலாம் . அந்த பொன்னான நேரத்திற்காக
காத்திருக்கும் இந்த வருங்கால தாத்தா
அபு ஆசிப்.
There were some people at our home town those unable to become a grandpa during their life because they have already been left from the world due to their sudden death which was happened either at home or in abroad unexpectedly. So, Almighty Allah has blessed you to become a grandpa in your life time and receive the wishing from the beloved circle of our people network around the globe. Say Alhamdulillah may almighty Allah bestow the blessings to him & family in all in all aameen.
தாத்தா ஆனதற்கு முதலில் வாழ்த்துக்கள்
பிள்ளையில் பார்த்தது
பிள்ளை பெற்ற
செய்தி கேட்டு
பேரானந்தம் அடைந்தேன்
இனி தாத்தாவிற்கான கண்டிசன்
இனி டி ஷர்ட் அணிவது மம்னு ஆக்கவேண்டும்
பேரனுக்கு பம்பர்ஸ் மாற்றுவதுபோல் ப்ரோபைல் போட்டோவை அடிக்கடி மாற்ற கூடாது
கிரேன் மற்றும் புள் டவுசர் மேலே ஏறி நின்று கொண்டு போட்டோ எடுத்து முக நூலில் போட கூடாது
வீட்டிற்க்குள் இருக்கும் போது வெள்ளை கைலி மற்றும் கை வைத்த முன்டா பனியன் தான் அணிய வேண்டும்
வெளியில் செல்லும் போது வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கம்சு கை
வெளியில் செல்லும் போது தொப்பி தலையில் இருக்க வேண்டும் கம்பு கட்டில் அல்ல
வேட்டிகட்ட (தொந்தியால் ) சிரமம் ஏற்ப்பட்டால் பச்சை பெல்ட் டஜன் கணக்கில் மலேசியாவில் இருந்து அனுப்பித்தர ஏற்ப்பாடு செய்யப்படும்
பாக்கியை யாராச்சும் தொடருங்"கப்பா"
//இனி தாத்தாவிற்கான கண்டிசன்
இனி டி ஷர்ட் அணிவது மம்னு ஆக்கவேண்டும்
பேரனுக்கு பம்பர்ஸ் மாற்றுவதுபோல் ...................................
................................................................
பாக்கியை யாராச்சும் தொடருங்"கப்பா" //
பேரன் கிடைத்துட்டால் இப்படியெல்லம் ரூல்ஸ் இருக்கா?
இருந்தாலும் அந்த இளைஞரை இப்படி இந்த ஆக்கத்துக்கு பேரனுக்கு பக்கத்தில் ரொம்ப ஓல்டாக காட்டும் அப்பா பிக்சரை போட்டு அவொளை முதியவராக காட்டியது ரொம்ப தப்பு.
சந்தோசம்
பேரனை பெற்ற இளைஞருக்கு வாழ்த்துக்கள்.
கவி சொல்வது போல் இப்புவியில் சிறக்கட்டுமாக ஆமீன்.
//இனி டி ஷர்ட் அணிவது மம்னு ஆக்கவேண்டும் //
காஃபி ஷர்ட் அணியலாமா?
பெர்முடாஸும் ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட்டும் என் ஃபேவரைட் கேஷுவலாச்சே. கொஞ்சம்கூட ஞாயமே இல்லை உங்க பேச்சில்
//பேரனுக்கு பம்பர்ஸ் மாற்றுவதுபோல் ப்ரோபைல் போட்டோவை அடிக்கடி மாற்ற கூடாது //
குபீரென்று சிரிச்சிட்டேன் ஹமீது.
ப்ளாகர் உலகத்தில் எனக்குத் தெறிஞ்ச ஒரே வேலை அதுதான்; அதுக்கும் ஆப்பா?
//கிரேன் மற்றும் புள் டவுசர் மேலே ஏறி நின்று கொண்டு போட்டோ எடுத்து முக நூலில் போட கூடாது //
முகலூலில் வேண்டுமானால் போடல. ஏறி நிக்கலேன்னா பூவாவுக்கு சம்பளம் உங்க பேரனா...ஐ மீன்... என் பேரனா தருவான்?
//வீட்டிற்க்குள் இருக்கும் போது வெள்ளை கைலி மற்றும் கை வைத்த முன்டா பனியன் தான் அணிய வேண்டும் //
வேணா...ம் அழுதுடுவேன்... வேணாம்
(மிகவும் ரசனையான பின்னூட்டம் ஹமீது. வாங்க வாங்க வச்சிக்கிறேன். எங்கே போவப்போறிய? மொதல்ல மவன்னாலும் பின்னாலேயே மகள்கள் இருக்காங்கல்ல?
//இருந்தாலும் அந்த இளைஞரை//
எம் ஹெச் ஜே,
நல்லா நாலு பேருக்குக் கேட்கிற மாதிரி, அதிலும் தமாம் கோலாலம்ப்பூர் ஏரியாவ்ல எதிரொலிக்கிற மாதிரியும் சொல்லுங்க
//இருந்தாலும் அந்த இளைஞரை//
//இருந்தாலும் அந்த இளைஞரை//
//இருந்தாலும் அந்த இளைஞரை//
அது!
மெய்சா,
ரொம்ப நன்றி.
நீ இப்பவெல்லாம் நீ எதைச் சொல்ல நினைத்தாலும் கவித்துவமாகச் சொல்லவே முனைகிறாய். கேட்டதும் கொடுக்கப்பட்டத் தலைப்பில் எழுதவெல்லாம் இரு அற்பணிப்பு வேண்டும். அது உன்னிடம் இருக்கிறது. செம்மொழி கொண்டு இன்மொழியில் வாழ்த்தியமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
யாசிர்,
உங்கள் வாழ்த்துக்கும் துஆவுக்கும் மிக்க நன்றி. அல்லாஹ் தங்களுக்கும் தங்களின் சந்ததி பெருக்கத்தை நிரப்பமாகக் காட்டித்தர என் துஆ.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பாக்கியை யாராச்சும் தொடருங்"கப்பா"
இனி உங்கள் நண்பர் காதரை மரியாதையோடு அழைக்கவேணும்.
வேகமாக நிலம் அதிர நடந்து செல்ல கூடாது.
நாய் , பேய் என்ற வார்த்தைகளைக்கொண்டு நண்பர்களை (குறிப்பாக காதரை) திட்ட கூடாது.
வீட்டில் இருக்கும் நேரத்தைத்தவிர மற்றநேரங்களில் வெள்ளை நிற ஆடையில் தான் இருக்கவேணும்.
மழை வந்தாலும் வராவிட்டாலும் குடை பிடிக்க வேணும்.
ஜும்மா தொழுகைக்கு 2 மணி நேரம் முன்னதாக பேராண்டியை கூட்டிக்கொண்டு போய் விடவேணும்.
வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு மீதமிருந்தால்தான் சாப்பிடவேணும்.
ஜாகிர், RIYAZ, சாகுல் , காதர் போன்ற இளைஞர் களோடு சேருவதை விட்டுவிட்டு , தாத்தாக்கள் கூட்டத்தில் தான் எப்பொழும் இருக்கவேணும்.
மற்றதை யாராச்சும் தொடருங்கள்.
அபு ஆசிப்.
//நண்பர்கள் [உறவினர்கள்] உன்னை நாடி வருகையில்......// என்று அப்பா எழுதிய ' ' 'பா' ரெம்ப நல்ல 'பா'!
நண்பர்கள் உருவில் நாடிவரும் ஆடுத்தோல் போர்த்திய நரிகள் உலவும் உலகில் அப்' 'பா' வை எழுதி புத்தி சொன்ன அப்பாவுக்கும் உனக்கும் இந்த மூத்த அப்பாவின் மனங்கனிந்த நல் வாழ்த்தும் வரவேற்பும்.!
S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்
இபுறாகீம் அன்சாரி காக்கா,
மூத்தவர்கள் வாழ்த்துகளை பெற்றத் தாயின் வாழ்த்துகளுக்கு இணையாகப் பார்க்கப் பழகியவன் நான். மிக்க நன்றி.
அப்ஜெக்ஸ்ஷன் ஓவர் ரூல்ட். ஏனெனில், தாங்களும் ஃபாருக் மாமாவும்கூட இளமையிலேயே அப்பா ஆனவர்கள்தாம் என்று உங்கூர்க் காரனாகிய எனக்குத் தெரியாதா?
இப்ப உங்கள் எழுத்துகளை வாசித்துவிட்டு யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் நீங்கள் இளைஞரல்லர் என்று?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
wa alaikkumussalam varah...
Dear bro Ahmad ameen,
Thanks for your constant support on my writings. It is exactly same as what you clarified on Zakir's point that it is not written just for my grandson who can't read and understand at this moment, but for those who are already grandsons but grown without learning the noble principles of life.
It is nowadays a habit of grown men that to expect the best out of everything from their sons/grandies but to be sad that they failed to grow wise.
this piece of writing will remind everyone while giving advise to the grand children.
thanks once again.
££££££££££££££££££££££££££££
முதலில்...
கவிதை(யான) அப்பாவுக்கு வாழ்துக்கள் !
தொடர்கிறது...
இனிமேல் ஜயிஸா காக்காவை அப்பா பேரன் தொடர் எழுதச் சொல்வதோடு இருக்காமல், நீங்கள் அதனை தொடர வேண்டும் ! :)
என்ன இருந்தாலும் எங்கள் இளமை ததும்பும் (தழும்பும் அல்ல) அப்பா என்றுமே எங்களைப் போன்ற பேராண்டிகளுக்கு இளைமைச் சொட்ட சொட்ட கவிதைகளையும் தொடர்ந்து தர வேண்டும் !
எல்லா வற்றையும் விட !
நீடூழி வாழ வேண்டும் !
அல்லாஹ் அருள்புரிவானாக !
//இனி உங்கள் நண்பர் காதரை மரியாதையோடு அழைக்கவேணும்//
சரிங்கடா
//நாய் , பேய் என்ற வார்த்தைகளைக்கொண்டு நண்பர்களை (குறிப்பாக காதரை) திட்ட கூடாது.//
ஏலாது ஏலாது
//குறிப்பாக காதரை//
ஏலவே ஏலவே ஏலவே ஏலாது. அதுக்கு பதிலா நாக்கை வெட்டி நாய்க்குப் போட்டுட்டு ஊமையா இருக்கனும்னு சொல்லு ஒப்புத்துக்றேன்.
//வீட்டில் இருக்கும் நேரத்தைத்தவிர மற்றநேரங்களில் வெள்ளை நிற ஆடையில் தான் இருக்கவேணும்//
அப்ப வீட்ல கரும்பச்சைக் கலரில் தோத்தியும் அரக்குச் செவப்பு நிறத்தில முண்டா பனியனும் போட்டுக்கலாமா?
//ஜாகிர், RIYAZ, சாகுல் , காதர் போன்ற இளைஞர் களோடு சேருவதை விட்டுவிட்டு , தாத்தாக்கள் கூட்டத்தில் தான் எப்பொழும் இருக்கவேணும்.//
ஏன்டா இம்பூட்டு கடுசான கண்டிஷன்லாம் போட்றியலே மல ஜலம் கழிக்கலாமா இல்ல அதையெல்லாம்கூட அடக்கனுமா?
தாஜுதீன்,
பாராட்டுக்கு நன்றி.
அபு இபு,
குசும்பு? எனிவே, வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
கிரவுன்,
எங்கே ஆளையே காணோம்?கிரவுனுரை இல்லாததால் இந்தப் பதிவை பிரசுரக்கித் தகுதியற்றப் புத்தகத்தைப் போல் உணர்கிறேன். நீஙகள் வரும்வரை இந்த ஏற்புரையை நிறைவு படுத்தப் போவதில்லை.
//இளமையிலேயே அப்பா ஆனவர்கள்தாம் //
தம்பி சபீர் ! அல்லாஹ் எனக்கு ஒரு படி கூடுதலாகவே அருள்பாலித்து இருக்கிறான். என் பேத்திக்கும் குழந்தை - அதனால் நான் கொள்ளுத் தாத்தா.
இப்போது உங்களுக்கு பிறந்துள்ள பேரன், பேத்தியாகப் பிறந்து இருந்தால் எனக்குக் கிடைத்த புரமோஷன் உங்களுக்கும் விரைவாகவே கிடைத்து இருக்கும். அல்லாஹ் பெரியவன்.
எல்லாப் பிள்ளைகளையும் நல்ல சுகத்தோடு வைத்திருப்பானாக!
The long breath of the childless parents can be fully understood by almighty Allah as well as the parents. Therefore, children are the real or more than real mobile (movable) asset of every family. Alhamdulillah.
அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,
தங்களின் அன்பான வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் ரொம்ப நன்றி.
ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளை வக்கிப்பார்த்திடும் திறன் உள்ளவர்கள்தாம் நாம். என்ன செய்ய, சில நேரங்களில் சறுக்கி விடுகிறது இல்லையா? நம்புவது தறல்ல மாமா. நம்பிக்கை துரோகம்தான் தவறு,இல்லையா?
அஸ்ஸலாமுஅலைக்க்கும்.
அல்ஹம்துலில்லாஹ்!சொல்லவே இல்ல!காக்கா வெளியூர் பயணத்தில் இருந்ததால் இப்பத்தான் கான நேர்ந்தது!சந்தோசம்.(
கிரவுன்,
எங்கே ஆளையே காணோம்?கிரவுனுரை இல்லாததால் இந்தப் பதிவை பிரசுரக்கித் தகுதியற்றப் புத்தகத்தைப் போல் உணர்கிறேன். நீஙகள் வரும்வரை இந்த ஏற்புரையை நிறைவு படுத்தப் போவதில்லை"")
. உங்கள் அன்பிற்கு என்றும் கட்டுப்பட்டவன்.வேலை காரணிகளால் கை கட்டபட்டவன்,இப்பவும் ,எப்பவும் அந்த காரனிகளிடமிருந்து தப்பவும் முடியும் உங்கள் கவிதை வரும் வேளை மட்டும்."கவிதையை பிரசுரித்தது உங்கள் முதல் கவிதை(மகள்)அந்த கவிதைக்கு கவிதைஎழுவது கவிதைகளை ஈன்று என்றும் கவிதைகரு சுமக்கும் ' நிரந்தர தாய்" நீங்கள். தந்தையானலும் விந்தையாக தாயாகும் கவிசக்கரவர்த்திக்கு இப்பேரன் வயிற்றில் பால்வார்த்திருப்பான் என நம்புகிறேன்.
பேரா...
பேரானந்தத்தை - உன்
பிறப்பிலே தந்த என்
பேரா...
------------------------------------------------------------------------------------
பிறக்கும் போதே பேராசி(றி)ரியனா நீ? இப்படி எங்கள் கவிஆசானை பேரானத்தில் மூழ்கடிக்கும் பாடம் படித்தது எக்கனம்? நீ கருவகுப்பறையிலேயே படித்ததா? இன்னும் இன்னும் இன்பம் தா,தா! உன் தாத்தாவுக்கு.
நூராயிர விண்மீன்களின்
தோராயப் பிரகாசம்
வாயாரப் பூத்த
உன் புன்னகையில்
--------------------------------------------------------
விண்மீன்கள் மிண்ணுவது எனக்குத்தோன்றும் அந்த வின் "மீன்கள்"துடிப்பது போலவும் அது மழைமேகம் தண்ணீர் தராத சோகமா என!ஆனால் நூ(ர்=ஒளி)ராயிரம் வின்மீன்கள் தரும் வெளிச்சம் என் மேல் ஆனந்த மழை பொழிவது போல நீ என்வாழ்வில் வந்திருப்பது. ஆனாலும் நீ வான வில் அல்ல! என்னை கான வந்த மகிழ்வில் என் மகவுக்கு கருவில் பிறந்து ,உருவில் என்னையும் கொஞ்சம் குழைத்த உயிர் ஓவியம்.-இப்படிக்கு உன் தாத்தா!
யாராலும்
சகிக்க முடியாதது அழுகை
அதையே
ரசிக்க வைத்து
நீ பிறந்தாய்
-----------------------------------------------
இந்த வரிகளை சிறு புன்னகையுடன் கடந்து செல்கிறேன். உண்மை ஊற்று பிராவாகமாய் வெளிப்படும் உணர்ச்சி இந்த வரிகள்.
உள்ளங்கால் உதைத்து
உள்ளங்களில்
பூ விதைப்பாய்
-----------------------------------------------
ஆஹா! மயிர்கால்கள் எழுந்து நின்று நடனமாடுகிறது!ஆனாலும் சற்று முரன்(கோவிச்சிக்காதிங்க கவிஞரே)பூவே பூ"விதை"க்குமா? உதைக்குதே! அபு.இபு காக்கா அல்லது இ.அ. காக்கா இதை கேட்டுச்சொல்லவும்.
பூமிக்கு வந்து
பலகாலம் ஆனதால்
புண்பட்ட மனிதர்களுக்குப்
பொக்கை வாய்ப்
புன்னகை மருந்திடுவாய்
-----------------------------------------------------------
இது அரிய வாய்ப்பு! பொக்கை வாய் பூவினால் இதம் தரு"வாய்!இதை மறவாய்!(தரு=மரம், இன்பமே காய்க்கும் மரமாய்). இந்த வரிகளை எழுதிய கவிச்சிந்தனைக்கு ஒரு "பொக்கே"அனுப்ப அ. நி உதரவிடுகிறேன்.
மீதி இன்னும் வரும்! இன்சாஅல்லாஹ்!
கிரவ்னுரை தடம் பதித்து விட்டது ! இனி கவித்-தாத்தாவுக்கு கம்பளம் விரித்தாகி விட்டது !
காக்கா... கவிதை புதுசு, கரு பதுசு, பேரன் புதுசு... ஜமாய்ங்க ! :)
ஏண்டா(ப்பா) கிரவ்னு ! எங்கேடா(ப்பா) போனே ? தமிழைச் சாடியவர்களுக்கெல்லாம் குளிர் விட்டுப்போச்சுடா(ப்பா) !
உடக்கூடாது அவங்களை, ஒரு பிடி புடிக்கனும் ரெடியானதும் சொல்லு... கடிக்க ஏதேனும் கொண்டு வருகிறேன் கொரித்துக் கொண்டே புடிக்கலாம் ! :)
இதை படிச்சுட்டும் கீழ் தேச நாட்டிலிருந்து குரல் கேட்டாலும் கேட்கலாம் !
//பாக்கியே யாராச்சும் தொடருங்க அப்பா//
//ஆசை! ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது' பாடலை காதால் கேட்கவோ வாயால் முனு முனுக்கவோ கூடாது !.
இட நெருக்கடி, வேறு அவசர காலத்திலோ ''உம்பெல்லாம் வேர்வை பிசுபிசுப்பா இருக்குது''துன்னு காரணம் காட்டி பட்டி குளிக்கவே கூடாது!
அடுத்த ஊடு அண்டுன ஊடு ஜனங்களுக்கு 'வெறும் வாய்க்கு அவல்' கிடச்ச மேட்டர் ஆகும்.
விஷயம் திருவண்ணாமலை தீபம் போல் ஊரெங்கும் தெரிய வரும், அடுத்ததை இப்ராஹிம் அன்ஸாரி அப்பா தொடருவார்!
S.முஹம்மது பாரூக்[அப்பா -அப்பா-அப்பா-அப்பா-அப்பா] அதிராம்பட்டினம்.
//பூவே பூ"விதை"க்குமா? உதைக்குதே! //
கிரவுன்,
ஒவ்வொரு முறை உதைக்கும்போதும் உற்சாகப் பூவை விதைக்காதா?
//கருவகுப்பறை//
வாத்தியார் இல்லாத வகுப்பறையில் எதைத்தான் கற்றுவிட முடியும்? ஆனால், அவன் பிறப்பால் நான் கற்றது ஏராளம்.
// நீ வான வில் அல்ல! என்னை கான வந்த மகிழ்வில் என் மகவுக்கு கருவில் பிறந்து ,உருவில் என்னையும் கொஞ்சம் குழைத்த உயிர் ஓவியம்.-//
ஒரு 'வில்'லை வைத்து எத்தனை வித்தைதான் காட்டுவீர்கள்?
/பொக்கை வாய் என எழுதியதற்கு ஒரு "பொக்கே"அனுப்ப //
ஹாஹாஹா... ஜமாய்ங்க கிரவுன்.
// குளிக்கவே கூடாது! //
யுவர் ஆனர்,
ஒரு ஜூனியர் அப்பாவை கொஞ்சம்கூட வச்சுப்பார்க்காமல் கடுசான கன்டிஷனையெல்லாம் போட்டு அப்பப்பாக்களும் வரும்கால அப்பாக்களும் ரொம்பத்தான் ரேகிங் செய்துவிட்டார்கள். இதை கனம் கோர்ட்டார் அவர்கள் அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் இந்த எல்லா கண்டிஷனையும் நான் பின்பற்றியே தீரனும் என்றால் ஒன்றுமே செய்யாமல் வெறும் காற்றுப் பிரித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
துயரமும் மறக்கச் செய்ய
..............தோழனாய் உங்கள் வீட்டில்
பெயரனும் பிறந்த செய்தி
...............பெரிதினும் பெரிதாய்க் கண்டு
நயமுடன் கவிதை பாடி
..............நற்றமிழ் இனிப்பைத் தந்தீர்
மயக்கிடும் பிள்ளைப் பேச்சு
............மனத்தினில் ஊஞ்சல் ஆச்சு!
சிந்தையைச் சிலிர்க்கச் செய்ய
.............திகட்டிடு வாழ்வு பூக்க
நந்துயர் நலிந்து வீழ
...........நன்மைகள் நிறைந்து காண
உந்திய அன்பைச் சிந்தி
.............உறவென ஒட்டி நிற்க
வந்தவுன் பெயரன் வாழ்வும்
............வண்ணமாய் ஒளிரக் காண்பீர்!
எண்ணமே எழுச்சி ஏற
.............இடையறா இன்பம் காண
வண்ணமாய் மகிழ்ச்சி யூட்டும்
.............வடிவமாய்ப் பெயரன் மின்ன
வெண்மையாம் மார்க்கம் பேணி
.........வேந்தராம் கவிஞர் போல
உண்மையாய் வாழ வேண்டி
........உளம்நிறை வாழ்த்து வேனே!
சிந்திடச் சிதறும் பூக்கள்
........சிறியவன் உமிழும் பார்வை
பந்தெனத் துள்ளும் உள்ளம்
.......பார்த்ததும் கொள்ளை கொள்ளும்
இந்திய மண்ணின் வேராய்
.......இகமெலாம் பரப்பும் தாத்தா
சிந்தியக் கவிதை போல
.....சிறப்புடன் வாழ்க வாழ்க!
எனக்குப் பெயரன் கிடைத்த வேளையில் இதே போன்றதொரு பேரானந்தத்தில் யான் வடித்த புதுக்கவிதை:
புதிதாய்ப் பூவுலகில் உதித்துள்ள என் பெயரனே..!
தங்கமகள் கருவறையில்
தங்கவைத்துப் பாதுகாத்து
பங்கமின்றிப் படைத்து
இங்கே அனுப்பிய
அல்லாஹ் ஒருவனுக்கே
எல்லாப் புகழும்..............!
பட்டுக் கன்னம்
தொட்டு உரசி
நேச மேகங்களால்
பாச மழை பொழிகின்றாய்
பிஞ்சுக் கைகளால் பற்றி
பஞ்சுக் கால்களால் என்
நெஞ்சின் மீது நடந்து
கொஞ்சும் மழலை பேசுகின்றாய்
படம்பிடித்தால் புன்னகைக்கின்றாய்
அடம்பிடித்து சிலநேரம் அழுகின்றாய்
விடுமுறை கழிகின்றது உன்னோடு
அடுத்தமுறை வரும்வரை விளையாடு
உங்கள் பேரன் 'தா(த்)தா' என்று (கேட்கும்)அழைக்கும் முன்பே அத்தனையும் தந்து இருக்கிறீர்கள் கவிதை வடிவில். துஆக்களும் வாழ்த்துகளும்!!
//பூவே பூ"விதை"க்குமா? உதைக்குதே! //
கிரவுன்,
ஒவ்வொரு முறை உதைக்கும்போதும் உற்சாகப் பூவை விதைக்காதா?
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என் தந்திரம் புரியலையா கவியரசே! முதலில் அபு.இபுகாக்காவையும்.இ.அ.காக்கா(மேதை)அவர்களையும் தூண்டிவிட்டு நல்ல எழுதோவியம் பார்த்து பின் அதன் மூலம் உங்களை தூண்டிவிடலாமென நினைத்தே இதை பதிந்தேன். முந்திவிட்டீர்கள்.
படம்பிடித்தால் புன்னகைக்கின்றாய்
அடம்பிடித்து சிலநேரம் அழுகின்றாய்
விடுமுறை கழிகின்றது உன்னோடு
அடுத்தமுறை வரும்வரை விளையாடு
------------------------------------------------------
இங்கே விடுமுறை என்பது விடுபடும் முறையாக அமைய பெற்றது,சோகம் கலந்த ஒருவகை பாசப்பிணைப்பு.
ஓரிறைக் கொள்கையால்
அஸ்திவாரம் இடு
உலகக் கல்வியின்
உச்சங்கள் தொடு
--------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாக்குழந்தைக்கும் ஆரம்பமுதலே போதிக்கவேண்டிய கட்டாய பாடம்.
வியர்க்க வியர்க்க விளையாடு
வெற்றி தோல்வியில்
பக்குவப் படு
--------------------------------------------------------
வெற்றிக்கான சூத்திரம் இந்த வரிகள்.
விழித்துக் கொண்டே
கனவு காண் - அதில்
சமூகத்தை எழுப்பி விடு
----------------------------------------------------------------------
உறங்காத விதை விதைக்கும் வித்தை இந்த தாத்தாவின் அனுபவ வாக்கு மூலம்.
விடைத்து நில்
நேராகச் செல்
உன்னைத் தொடர - ஓர்
உலகம் உருவாக்கு!
----------------------------------------------------------
அப்படியே ஆகட்டும் இன்சாஅல்லாஹ்! எல்லாவளமும் பெற்று நீடுடி வாழ வாழ்த்தும் சாச்சா (அல்லது)மாமா உறவு உன் சாய்ஸ்.
அன்பிற்குரிய கவியன்பன்,
//துயரமும் மறக்கச் செய்ய
..............தோழனாய் உங்கள் வீட்டில்//
என்று துவங்கும் வாழ்த்துச் செய்யுள் எந்த இடத்திலும் இடறாமல் தடுமாறாமல் சரளமாக வாசிக்குமளவுக்கு எளிமையாகவும் இலகுவாகவும் மிகவும் நேர்த்தியாகவும் வந்திருக்கிறது.
தாங்கள் மெனக்கெட்டு யாத்திருக்கும் இப்பாட்டு தங்களின் உள்ளன்பின் வெளிப்பாடு.
மிக்க நன்றி.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
புதுக்கவிதையிலும்
//படம்பிடித்தால் புன்னகைக்கின்றாய்
அடம்பிடித்து சிலநேரம் அழுகின்றாய்//
தாத்தா கவிஞர் என்பதைப் பேரனுக்குக் காட்டித்தருகிறது.
€€€€€€€€€€€€€€€€€€€
ஷஃபாத்,
வரத்து அருகிப்போய்விட்டாலும் வாழ்த்தவும் துஆக்கேட்கவும் நீங்கள் பின் தங்கியதே இல்லை.
நன்றி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கிரவுன்,
வேலை சோலியிலும் எனக்காக நேரம் ஒதுக்கி பதிவை அலசி ஆராய்ந்து கிரவுனுரை வழங்கி, பிரசுரிக்கத் தகுந்ததுதான் என்று நிரூபித்து விட்டீர்கள்.
நன்றியும் கடப்பாடும்.
மற்றொரு பதிவின் ஏற்புரையில் சந்திக்கலாம், இன்ஷா அல்லாஹ்!
வஸ்ஸலாம்!
மச்சானுக்கு என் மேல் என்ன கோபம்? என் அன்புத்தம்பி சபீர் குளிக்கிற விஷயத்தில் நான் தொடர்வேன் என்று ஏன் கோர்த்து விட வேண்டும்.
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் -என்
முதுமை ஆனந்தம் -
என்று வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதனோடு எனக்கெதுக்கு வம்பு?
நீங்க நல்ல இருங்க தம்பி சபீர். இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்.
பேரன் பிறந்து விட்டான் என்பதற்காக மல்லிகை மணக்காமல் இருக்குமா?
//துயரமும் மறக்கச் செய்ய
..............தோழனாய் உங்கள் வீட்டில்//
ஆஹா! ஓஹோ! அடடா! அற்புதம்.
//ஓரிறைக் கொள்கையால்
அஸ்திவாரம் இடு
உலகக் கல்வியின்
உச்சங்கள் தொடு//
உன் கவி ஓட்டத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்களில் ஒன்று
ஓரிறை ஞாபகம் ஒவ்வொரு கவியிலும் இடம் பிடித்து அலங்கரிக்கும்
வரியாக இருப்பதே,
அதுவும் கவிதைக்கு பொருத்தமாக இருப்பதே.
அபு ஆசிப்.
//எளிமையாகவும் இலகுவாகவும் மிகவும் நேர்த்தியாகவும் வந்திருக்கிறது.//
ஜஸாக்கல்லாஹ் கைரன்.
என் குறிகோளும், கடின உழைப்பும் அஃதே, கவிவேந்தே!
ஆம்.
மரபை எளிமையாய் மாண்புடன் கற்றுப்
பரப்ப விளங்கும் பயன்.
குறிகோளும்,// குறிக்கோளும்
Post a Comment