Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படம் சொல்லும் பாடம் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2013 | , , ,

இணையத்தில் எதனையும் தேடி எடுக்கலாம் என்று சமீபத்தில் நம்மூர் கார ஒரு தம்பி எனக்கு யுடியூப் காணொளியை அனுப்பியிருந்தார், அங்கே கூகிள் நிறுவனம், பிரிந்த நட்பை கூகிள் குப்பையில் கிளறினால் மாணிக்கமாக கிடைக்கும்னு ஒரு டச்சிங் டச்சிங்... நல்லாத்தான் இருந்தது !

சரி, அதுக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காமல், என்னதான் சம்பந்தம் என்று நீங்கள் ஒரு முடிவுக்கு வாங்க. முடிந்தால் கவிதையோ கலக்கல் கருத்துகளோ கைவசம் இருப்பின் அல்லது மனதில் உதிக்குமாயின் அப்படியே புடம் போட்டு வைக்காமல் இங்கிட்டு கொஞ்சம் தட்டிவிட்டுப் போங்க !

எல்லோரும் தேர்தல் பிரச்சார போதையில் 'மோடி' பின்னாடி சுத்திகிட்டிருக்காம கவனத்தை திருப்புங்க !

வித்தியாசமா சொல்றேன்னு பொரிச்ச கோழியை போட்டா என்னன்னு கேட்டுடாதீங்க !

அபூஇப்ராஹீம்

19 Responses So Far:

sabeer.abushahruk said...

கோழிச் சித்திரம் - சரியான
கேலிச் சித்திரம்


Ebrahim Ansari said...

அந்த திருமணத்துக்குப் பின் என்று காட்டப் படும் BOYS கோழியைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

ஆனால் ஒரு சந்தேகம் நம்மூரில் திருமணத்துக்குப் பிறகு மாமனார் வீட்டில் ஒரு வேட்டு வெட்டி , வேட்டு வைக்கும் கோழிகள் கொழுத்துப் போய் விடுகின்றனவே. ஒருவேளை கொத்திக் கொத்திக் கிளருவதால் இருக்குமோ!

என்னைப் பொருத்தவரை அந்த நான்காவது கோழியைப் பார்க்கும்போது ஐந்தாறு குமராளி கோழியாகவே தோன்றுகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முதல் படம்; குமரியாய் இருக்கும் போது நார்மல் உடம்போடு ஸ்டையிலான காட்சி

ரெண்டாம் படம்; கலியாணம் கட்டி வாயி, வயிறு பெருத்து நடக்கமுடியாமல் கொலஸ்ட்ராலும் பிரஸ்ஸரும் சேர்ந்து குண்டான காட்சி.

மூனாம் படம்; கலியாணம் கட்டுமுன் வரை கம்பீரமாய் காட்சி தரும் இளைஞனின் காட்சி.

நாலாம் படம்; கலியாணத்தெ கட்டிகிட்டு, புடிங்கி திங்கிறவளிடம் மாட்டிகிட்டு, ஓடி, ஓடி உழைத்து ஒடாய் தேய்ந்து முடியெல்லாம் கொட்டிப் போய் நோஞ்சானாக இருக்கும் இரக்கப்படாத பெண்ணை கட்டியவனின் காட்சி.

adiraimansoor said...

பெண்மையால் உறிஞ்சி எடுக்கப்பட்ட உருதுக் கோழி

adiraimansoor said...

கல்யாணம் முடிந்து பிள்ளை குட்டிகள் வந்து எல்லோரும் இருந்து எல்லோராலும் கைவிடப்பட்ட ஆண்மை சொல்லலாம் அல்லது
ஒரு வேளை ஆஸ்த்துமா TB நோயாளியாக கருதலாம்

adiraimansoor said...

செயல் சரியில்லாமல் இலமையிலேயே துரத்தி அஅடிக்கப்பட்ட ஆண்மை

adiraimansoor said...

கடந்த ஒருவார காலமாக என்னை அதிரை நிருபர் பக்கமே காணவில்லை என்று சபீர் போலிஸ் புகார் கொடுக்காத குறையாக முறைபட்டிருந்தார்.
என்னைப் பற்றிய நினைவுகளுக்கும், தேவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் க்கு
ஹைரன்.
ஒன்றுமில்லை சப்பமேட்டர்
பெங்களூர், சென்னை சூராவளி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு
சவூதியில் நடைபெறும் கெடுபிடிகளையும்,நித்தாகத் பிரத்சனையையும் நேரில் சென்று சந்திப்பதற்காக இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 24ஆம் திகதி சவூதி அரேபியா பயணிக்கின்றேன்.

மற்றவை நேரில்............. மாஸலாமா

M.B.A.அஹமது said...

நமக்கு கவிதை எல்லாம் எழுத வராது ...................கவிதை எழுதும் கவிக்கோ தாதா வாகிவிட்டதால் ரெண்டே வரியில் ஹைகூவுடன் நிறுத்தி கொண்டுவிட்டார் பொறுங்கள் எங்கள் கவிசகரவர்த்தி கிரவுன் வந்து கவி மலை பொலிவார் .......நமக்கு போஸ்ட் ஆபிஸ் ரோட்டில உள்ள மறைக்கா காகா கடை க்ரிளர் அயிட்டம் தான் தெரியும் ...... வேணாம் சகோதரர் அபு இப்ராகிம் அது பற்றி பேசகூடாது என்று சொல்லி உள்ளார்

Unknown said...

நமக்கெல்லாம் கவிதையும் வராது... அதென்னமோ சொல்வாங்களே அதுவும் வராது.

இதில் உள்ள ஒரு single ஐ சூப் போட்டு குடித்தால் நன்றாக இருக்கும்....

Yasir said...

நம்மூர்ல வரதட்சணையும் வாங்கிவிட்டு அடுத்தவன் இரத்தத்தில் கட்டிய வீட்டிலயேயும் இருந்து கொண்டு...குறுக்கு கோழி படுத்து கிடப்பதுபோல் சில ஆட்கள் உள்ளனரே...அவர்களைப்பற்றிய கார்டூன் எதுவும் நெட்டில் உண்டா ???...குறுக்கு கோழியாவது சில நாட்களில் குறுக்கு கழிந்து எழுந்துவிடும் ...இந்த கிறுக்கு கோ(லை)ழிகள்......!!!

Anonymous said...

4000000000000000000000000000000000000000000000 கோடி வார்த்தைகளில் போதிக்கும் பாடத்தை நாளே படத்தில் சொல்லிய சிக்கனத்தை
4000000000000000000000000000000000000000000000000 கோடி வார்த்தைகளால் பாராட்டலாம்!.

S. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

Unknown said...

கல்யானத்திர்க்குப்பிறகு பிறகு சேவலுக்கு கூட இந்த நிலமைதானா ?

கல்யாணம் என்பது அவ்வளவு மோசமான சமாச்சாரமா ?

சுதந்திரமாக உள்ள கோழிக்கே இந்த நிலமை என்றால் !

மனிதா உன் நிலைமை. ( எனக்கு கல்யாணமே வேணாம் )

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

படம் ஒன்று: கன்னிப் பெண்

கவலையும் சுழலுமே கனமுளத் தருணமாய்
அவளையும் தனிமையும் அணைத்திடும் பொழுதினில்
கணவனை அறிந்திடாக் கணங்களாய்க் கழிவதால்
மணமது புரிந்திட மணமகள் உடையினை
அணிந்திடும் மகிழ்வினை அகத்தினில் நிரப்பியே
மலர்ந்திடும் பொழுதினை மனத்தினில் வளர்த்ததால்
அழகுறுக் குழலுடன் அலைமுகில் வடிவென
மெழுகதுச் சிலையென முழுவதும் எழிலுடன்
மழலையின் இனிமையாய மயக்கிடும் குரலுடன்
நிழலது வழங்கிடும் நிகரிலாக் குளுமையும்
சுழலுரும் மணியிசைச் சுகந்தரும் நடையினில்
முழுவதும் இலகுவாய் மெதுநடை பழகுமே!

KALAM SHAICK ABDUL KADER said...

படம்: இரண்டு


சுழலொரு புயலெனச் சுழன்றதன் விருப்பமும்
முழுவதும் மனத்தினில் மொத்தமாய்க் குடிபுக
அணைத்திடும் இலக்கணம் அனைத்தையும் அறிந்தவன்
துணையெனக் கிடைத்திடத் துளிர்த்தன மகிழ்ச்சியும்
தளதள சதையுடன் தடையிலா மிடுக்குடன்
பளபள விழியுடன் பளிச்சிடும் கவர்ச்சியில்
சுளைபலத் தரும்கனிச் சுவையினை வனப்பினில்
விளைந்துள உடலிது விளைத்திடக் கிடைப்பதால்
மறந்திடும் கவலையும் மணமகன் வருகையால்
உறவினில் பெருக்கிய உவகையில் செழித்ததே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கருத்தாடலில் ஈடுபட நேரமும் வேண்டும் அதைவிட பரந்த சிந்தனையுடன் பெருந்தன்மையும் வேண்டும் அது நம்மவர்களிடம் குவிந்து கிடக்கிறது !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..

தனி மின்னஞ்சலில் வந்தவைகளில் சில... !

* இந்தப் படம் அதிரைக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு பொருந்தாது...

* ஊரில் இப்புடி ஒரு கோழியை விட்டு வைப்பதில்லை குஞ்சாக இருக்கும்போதே சூப் போட்டு கொடுத்து விடுவதால்...

* இன்னும் திட்டியும் குட்டியும் வந்தவைகள்... மட்டுறுத்தல் என்ற போர்வை போட்டு அமுக்கப்பட்டு விட்டது ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

படம்: மூன்று


கூவிடும் ஓசையும் சேவலின் ஆண்மையும்
மேவிடும் வாலிபம் மேனியில் ஓங்கிடக்
கூட்டிய தோட்திறன் காட்டிய பேரெழில்
வாட்டிடும் ஆசையை வாழ்வினில் போக்கிடும்
நாளினை நோக்கியே நாட்களை ஓட்டிடும்
வேளையில் வேட்கையும் வேகமாய் நீண்டிடும்
ஆவலும் கூடுதே ஆண்மகன் மோகமும்
சேவலைப் போலவே சீரிளம் கூடுமே!

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

படம்: நான்கு வாலிபமிழந்தக் காட்சி


பாலையின் பூமியில் பார்த்திடும் கூடிய
வேலையின் காரணம் வேகமாய் வாலிபம்
ஓடிடும் வாழ்வினில் ஓட்டமும் தோணுது
தேடிடும் யாவுமே தீர்த்திடா ஆசையின்
காசினால் போனது காலையின் தூக்கமே
பேசிடும் காட்சியும் பேசிடும் ஏக்கமே
மாண்புளப் பேரிளம் வாழ்வினில் தீர்ந்ததைக்
காண்பது சேவலின் காட்சியிற் காட்டுதே!

Anonymous said...

நல்லா உத்து பாத்தா க.பி. கோழி நடைமுறை கணக்குக்கு ரெம்ப சின்னதா தெரியுதே!

படம் புடிச்சது மொகலாயர்கள் காலத்து க.பி கோழியோ ?

இப்போ உள்ள மார்டன் க.பி .கோழியை படம் புடிக்கனுண்டா ஜாவியா சட்டி அளவுக்கு லென்ஸ் இருந்தாத்தான் கோழி கேமராக்குள்ளே மாட்டும்.!

[க.பி.கல்யாணத்திற்கு பின்]

S. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு