Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அலைகடல் அரிமா குஞ்ஞாலி மரைக்காயர்... 34

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2013 | , ,

தொடர் – 7

பொதுவான வார்த்தை பிரயோகங்களில் ஒரு நண்பர் கூட  இன்னொருவர் எதிர்பாராமல் வந்தால், "என்னப்பா குஞ்ஞாலி மரைக்காரும் கூடக் கூடவா?" என்று கேலி தொனிக்க கேட்பது வழக்கம். இந்த குஞ்ஞாலி மரைக்காயர் என்பவர் யார் என்று நாம் தெரிந்து கொண்டால் இப்படி ஒரு கேலியான வார்த்தைப் பிரயோகத்துக்கு இந்தப் பெயரை பயன்படுத்த மாட்டோம். அந்த அளவு வீரமிக்க ஒரு வரலாற்றின் வேந்தர் அவர். ‘அலைகடல் அரிமா’  என்று சரித்திரங்களின் பக்கங்கள் சான்று பகரும் ஒரு பெயராகும் அது. இன்றும் கூட கேரளத்தின் பல மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெருமையுடன் சூட்டப்படும் பெயர் அது. குஞ்ஞாலி மரைக்காயர் என்கிற பெயர் சூட்டப்பட்ட  ஆண்மக்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைக்கும் மந்திரப் பெயர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாக , இந்திய வரலாற்றில் பூனைகளை புலி  என்று கூறி சித்தரித்து உயர்த்துபவர்கள் உண்மையான இந்த ஆண் சிங்கத்தை அவ்வளவாகக்  கண்டு கொள்ளவில்லை. வாருங்கள் தோழர்களே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரன் ஒரு முஸ்லிம் என்கிற பெருமையுடன் இந்த  உண்மையான மாவீரன் மற்றும் அவரது வம்சங்களின் வரலாற்றை நாம் கண்டு வரலாம். 

ஆரம்பமாக, இந்த வரலாற்று நாயகனின் பெயரில் ஒட்டிக்  கொண்டு இருக்கும் மரைக்காயர் என்கிற பெயர் பற்றி நாம் விளக்கம் பெற வேண்டிய கடமை இருக்கிறது. காரணம், நாம் பிறந்த மண்ணின் வாசம் இந்தப் பெயரின் பிற்பகுதியில் ஒளி  வீசுகிறது. இதைப் பற்றிய விளக்கம் ஓரளவுக்கு உலகறிந்ததே. கடல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த முஸ்லிம்களின் ஒரு பிரிவினருக்கான அடையாளப்  பெயர் இது. மரத்தைக் கொண்டு கப்பல்கள் செய்து அதை உலகெங்கும் ஓட்டிச்சென்று திரைகடலோடி திரவியம் தேடிய ஒரு உழைப்பாளர் கூட்டத்துக்கான பெயரே மரைக்காயர் என்பதாகும். இந்தப் பெயருடைய வர்த்தகப் பிரிவினர் இந்தியாவின் தென் பகுதி கடற்கரை ஓரங்களிலும் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் விரவி வாழ்ந்து வருகின்றனர்.  இதே கடல் வணிகம் செய்து வந்த ஒரு சிறப்பான கேரளக் குடும்பத்தில் பிறந்த தனால்தான் முஹம்மத் குஞ்ஞாலி என்கிற பெயரோடு மரைக்காயர் என்கிற பெயரும் ஒட்டிக்  கொண்டது. அத்துடன் அன்றைய அரசனால் கடற்படைத்தளபதியாக நியமிக்கப் படும்போது வழங்கப் பட்ட பெயர் அது.  

குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களுடைய வரலாற்றை அறியும் முன்பு நமது கவனத்தை சற்று வரலாற்றின் இரத்தக் கரை படிந்த பக்கங்களை நோக்கி சற்று திருப்ப வேண்டி உள்ளது. வாஸ்கோடகாமா  என்கிற போர்த்துகீசிய வஞ்சகன்,  நடுக்கடலில் வைத்து ஹாஜிகளை குடும்பத்தோடு கொலை செய்து அவர்கள் வந்த கப்பலைக் கொள்ளையடித்த சம்பவம் தான் அது. இதை ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் விவரித்து இருக்கிறோம். குஞ்ஞாலி மரைக்காயருடைய சரித்திரம் வாஸ்கோடகாமா என்கிற இந்த வஞ்சகனோடும் அவனுடைய போர்ச்சுகீசிய கொள்ளைக்காரக் கூட்டத்துடனும்  தொடர்புடையது. 

வாஸ்கோடகாமா  கி பி 1498 மே மாதம்  17- ஆம் நாள் இரத்தக் கரை படிந்த கரங்களுடன்  கள்ளிக் கோட்டை என்கிற கோழிக்கோட்டின் கடற்கரையில் வந்து கால்பதித்தான். இந்திய மண்ணில் பதிக்கப் பட்ட முதல் அந்நியனின் காலடித்தடம் அவனுடையது. அந்த நேரம் இந்தியாவில் விஜய நகர சாம்ராஜ்யம் வலுப்பெற்று இருந்தது. விஜய நகரப் பெரிசு வாஸ்கொடகாமாவின் வெள்ளைத் தோல் கண்டு மயங்கி    கொச்சி மற்றும் கண்ணனூர் ஆகிய அரசுகளுடன் சேர்ந்து வாஸ்கோடகாமாவுக்கு வரவேற்பு  வளைவுகள் வைத்து வாசனைத்திரவியங்களுக்கு நல்ல விலைதர வந்த  வணிகன் என்று அவனை அங்கீகரித்து தங்களது வணிக வாசல்களை அவனுக்காக திறந்து வைத்தன. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் கள்ளிக் கோட்டை என்கிற கோழிக் கோட்டை ஆண்டு வந்த மன்னரின் பெயர் சாமுத்திரிமான  விக்ரமன் என்பதாகும். இவர்   மட்டுமே ஒற்றை ஆளாக  போர்த்துகீசியரை எதிர்த்து வந்தார். அவர்களை தந்து ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.   

இந்த சாமுத்திரி  மன்னருக்கு உற்ற  துணையாக அதாவது பின்னாளில் கட்டபொம்மனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்த வெள்ளையத்தேவன் போல் துணை நின்றவர்தான் இந்த அத்தியாயத்தின் நாயகர்  குஞ்ஞாலி மரைக்காயர். இந்த சாமுத்திரி மன்னுடைய மருமகன் அந்தோணி என்பவனும் கோழிக் கோட்டில் வாசனைத்திரவியங்களை வெளிநாட்டினருக்கு விற்று வந்த வணிகர்களும் வாஸ்கோடாகாமாவின் பொன் பொருளைக் கண்டவுடன் , அவன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடிப் போகிறவர் போல் போனார்கள்.   சரித்திரம் இப்படிக் குறிப்பிடுகிறது. 

The Portuguese dominated trade in the Malabar after Vasco da Gama set foot in Kozhikode. The Samoodiri of Kozhikode (Premji) opposed the Portuguese. But the foreigners were supported by the local merchants and the Samoodiri's wicked nephew (P. J. Antony). Mohammed (Kottarakkara), a brave warrior and merchant supported the Samoodiri in his fight against the Portuguese. The Samoodiri honoured Mohammed by making him his naval chief and renaming him ‘Kunjali Marakkar'.

கோழிக்கோடு ராஜ்ஜியத்தின் சாமுத்திரி மன்னனின் கடற்படை தலைவர்களுக்கு வழங்கப் பட்ட பெயர் குஞ்ஞாலி மரைக்காயர்  ஆகும். குட்டி முகமது அலி – இவரே முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர்      ( 1520- 1531) இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர்  ( 1531- 1571) பட்டு குஞ்ஞாலி மரைக்காயர் – மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர்  ( 1571-1595) முகமது அலி – நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர் (1595- 1600) ஆகிய மாவீரகளைப் பற்றிய சுருக்கமான ஆனால் இறுக்கமான அறிமுக வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களின் இந்தியா மண்ணில் அன்னியருக்கெதிரான ஆரம்பகாலப் போராட்டத்தையும் கண்டும் காணாதோர் காணவே இந்தப் பதிவு.  

சாமுத்திரி மன்னனின் கடற்படைத் தளபதியாக முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி ஏற்றுக் கொண்டபோது இப்படி முழங்கினார். "அந்நியரை நமது மண்ணில்  காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் சிந்தப் பட வேண்டுமென்றாலும் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்" என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தவர் குஞ்ஞாலி மரைக்காயர்.

சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார்.  இக்காலகட்டத்தில்,  கடற்படையைக் குறித்து எவ்வித போர் தொடர்பான அறிவோ திட்டங்களோ சாமுத்திரி மன்னர்  உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாஸ்கோட காமா, வலது காலை எடுத்து வைத்து நுழைந்தது முதல் சாமுத்திரி மண்ணுக்கும்    போர்த்துகீசியருக்கும் தொடர்ந்து போர்கள்  நடை பெற்றன. அத்துடன் சனியனுடன் ஒரு “பாரச்சனியன்”   சேர்ந்து கொண்டது. அந்த பாரச்சனியனின் பெயர் அல்புகர்க்கின்  என்பதாகும். இவனே போர்த்துகீசிய கடற்படையின் தளபதியாவான். கிரிக்கெட் விளையாட்டில் ஒபனிங்க்  பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சிக்சர் அடிப்பதைப் போல் இந்த அல்புகர்க்கின்,   தனது முதல் கொடூரச் செயலாக கோழிக் கோட்டில் இருந்த ஒரு முஸ்லிம்களின் இறை இல்லத்தை இடித்துத் தரைமட்டமாக்கினான். இந்தக்  கொடூரச்செயலைக் கண்டு கொதித்தெழுந்த பொது மக்களை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினர். இப்படி அந்நியருக்கு எதிராகத் திரண்டு, அவர்களால் வரிசையாக வாங்கப் பட்ட முதல் உயிர்ப் பலிகள்   முஸ்லிம்களுடையது என்பதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக்  கொடுமையான நிலையில்தான் இதை தட்டிக் கேட்க குஞ்ஞாலி மரைக்காயர் உடைய அணி களத்தில் இறங்கியது. கொரில்லாத் தாக்குதல் என்கிற மறைந்திருந்து தாக்குதல் எனும் முறையைப் பயன் படுத்தி அல்புகர்க்கின் என்கிற அரக்கனின் படையை கோழிக்கோட்டின் பகுதிகளில் இருந்து கோவாவுக்கு விரட்டி அடித்தது. குஞ்ஞாலி மரைக்காயரின்  வீரமிக்க இந்த வியூகத்தால் ஐநூறு போர்ச்சுகீசிய வீரர்கள் கொன்று சாய்க்கப் பட்டனர். அல்புகர்க்கின் தனது காலில் குண்டு பாய்ந்து செயல் பட இயலாத சேர்மன் ஆனான். 

குஞ்ஞாலி மரைக்காயாரின் கொரில்லாப் படையால் கோவாவுக்கு விரட்டப் பட்ட போர்ச்சுகீசியர்கள் மரைக்காயருக்கு ஆதரவாக இருந்து ஆக்கமமும் ஊக்கமும்  தந்துகொண்டிருந்த மன்னர் மானவ விக்கிரம சாமுத்ரியைக் கொல்லத் திட்டம் போட்டனர். அதற்காக அவர்களுக்கும் ஒரு எட்டப்பன் கிடைத்தான். அவன் ஒரு நம்பூதிரி பிராமணன். உலக வரலாறுகளின் பக்கங்களில் அரண்மனைகளில் நடந்த சதிகளுக்குப் பஞ்சமில்லை. அப்படி ஒரு சதியில் சாமுத்ரி மன்னன்    அடுத்துக் கெடுத்த நம்பூதிரிப் பிராமணனால் உணவில் விஷம் வைக்கப் பட்டுக் கொல்லப்பட்டார்.  

மன்னரின் மரணத்துக்குப் பிறகு அரசாள  வந்த அடுத்த சாமுத்திரி மன்னனுக்கு போர்த்துகீசியரை எதிர்த்து நிற்க “ தில் “ இல்லை. தான் குடிக்கும் சோமபானத்துக்கும் சுறா பானத்துக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற கவலையே அரசனுக்கு.   இதனால் போர்ச்சுகீசியருடன் 1513 – ல் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு சமாதானமாகிவிட்டான். இதனால் குஞ்ஞாலி மரைக்காயர் அரசின் ஆதவின்றி தனித்து விடப்பட்டார். ஆனால் அவருடைய நெஞ்சில் போர்ச்சுகீசியருக்கு எதிரான நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது.  

இப்படி அணையாத அந்த சுதந்திரத் தீ தந்த உத்வேகத்தில்   1523 ஆம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட கப்பல்களை  போர்ச்சுக்கீசியரை எதிர்க்க தயார் செய்தார்.  போர்ச்சுக்கீசியர்கள் கள்ளிக்கோட்டையில் கிட்டங்கிகளை நிறுவினார்கள். தேவாலயங்களை நிறுவினார்கள். மூன்றாம் முறையாக இந்திய மண்ணில் அடி எடுத்து வைத்த வாஸ்கோடகாமா அவர்களை பாதுகாக்கவும் குஞ்ஞாலி மரைக்காயரை அடக்கிவைக்கவும்  டிசோசா என்ற இன்னொரு பாரச்சநியனை படைத்தளபதியாக  நியமித்தான். 

அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க எண்ணி குஞ்ஞாலி மரைக்காயர், குட்டி அலியின் தலைமையில் படையை நியமித்தார். குட்டி அலியின் படைக்கும் டிசோசாவின் படைக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. இருபுறமும் ஏராளமான தலைகள் உருண்டன. குட்டி அலியின் படையை தாக்குபிடிக்கமுடியாமல் போர்ச்சுக்கீசியர் கவர்னர் மெனிசிஸ் பெரிய கப்பற்படையை குஞ்ஞாலியின் கப்பற்படை முகாமான பொன்னானி துறைமுகத்தை தாக்க 1525 ஆம் ஆண்டு 26ந்தேதி நாள் குறிக்கப்பட்டு பொன்னானி துறைமுகத்தை தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க குஞ்ஞாலியின் படை கள்ளிக்கோட்டையில் இருந்த போர்த்துகீசியரின் பொருட்கள் குவித்து வைக்கப்பட்ட கிட்டங்கி மீது தாக்குதல் நடத்தினார்கள். தங்களின் மதிப்புமிக்க விற்பனைப்  பொருள்களின் கிட்டங்கி அழிவை சந்தித்துக் கொண்டு இருப்பதைக்  கண்ட போர்ச்சுக்கீசிய தளபதி மெசினிஸ் மேலும் படைத்தளபதிகளை அனுப்பி, இன்னும்  ஏழு மாதங்கள் கடுமையாக போராடி இறுதியில் 1525 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் குஞ்ஞாலி  படையை தோற்கடித்தனர். அன்னியருக்கெதிரான குஞ்ஞாலி மரைக்காயரின் படை  முதல் தோல்வியைக் கண்டது. 


கோழிக் கோட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும் குஞ்ஞாலி மரைக்காயர் பயன்படுத்திய போர் கருவிகளின் அருங்காட்சியகம்.
தோல்வியடைந்த குஞ்ஞாலி மரைக்காயர் கேரளத்தின் ஏதோ பாக்குத் தோப்புக்குள் தலைமறைவானார். ஆனால் அவரின் நெஞ்சில் மூண்ட சுதந்திரக் கனல் தலைமறைவாகவில்லை. எனவே, மீண்டும் மூன்று ஆண்டுகள் கழித்து படைகளைத் திரட்டி, 1528 ஆம் ஆண்டு பர்கூர் என்ற இடத்தில் வந்த போர்ச்சுக்கீசிய கப்பல்களை அழித்தார். எதிர்த்து வந்த போர்ச்சுகீசியர்களையும் கண்ட துண்டமாக வெட்டினார்.   இதில் பல போர்ச்சுக்கீசிய மாலுமிகள், படைவீரர்கள் அனைவரும் சமாதி ஆனார்கள். அன்றொருநாள் நடுக்கடலில் வைத்து வெட்டப் பட்டு துடிதுடித்து செத்த ஹாஜிகளின் சாவுக்கு இவ்விதம் பழி வாங்கப் பட்டது. இவ்வெற்றிதான் மரைக்காயரின் மாபெரும் வெற்றி என்று சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பழிவாங்கும் கொலை விழா வெற்றி அடைந்த பின்னர் இந்த எதிரிகள் ஆக்கிரமித்துள்ள இதர இடங்களையும் தன்னுடைய கடல் தொடர்பான அறிவால் கண்டு அறிந்து, இவர்களின் வாசம் இலங்கையில் வீசுகிறது என்கிற செய்தி அறிந்து தனது கடற்படையை இலங்கையை நோக்கி செலுத்தினார் ‘அலைகடல் அரிமா’ வான குஞ்ஞாலி மரைக்காயர். 

1537 ஆம் ஆண்டு எஞ்சியுள்ள கப்பல் படைகளுடன் இலங்கையை நோக்கிச் சென்று போர்ச்சுக்கீசியர்களை கண்ட இடத்தில் கொன்று குவித்தார். இலங்கையில் வாங்கிய உதையில் தப்பித்த பலர் தூத்துக்குடியை நோக்கி ஓடினர் . அப்படிப் போகும்போது குஞ்ஞாலி மரைக்காயர்  மீது இருந்த கோபத்தில் தூத்துக் குடியில் முத்துக் குளித்துக் கொண்டு இருந்த 800 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை உடைய முஸ்லிம்களை  28.1.1538 அன்று தங்களது கட்டாரிகளுக்கு இரையாக்கி இனப் படுகொலை  செய்தனர். இதனை அறிந்த குஞ்ஞாலி மரைக்காயர் தூத்துக்குடி சென்று போர்ச்சுகீசியரை தேடித்தேடி கொன்று குவித்தார்.  (Studies in Missionary History – S. Manickam.).  

துரோகிகளை வெட்டிச் சாய்த்த திருப்தியில் ஓய்வு எடுப்பதற்காக இலங்கையில் உள்ள வேதாளையில் தங்கினார். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த பரங்கித் தலையர்கள்  1538 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி, டிசோசா தலைமையில் குஞ்ஞாலியின் படையை திடீரென்று தாக்கினார்கள்.  இதை சற்றும் எதிர்பார்க்காத மரைக்காயர் படை பெரும் பின்னடைவை சந்தித்தது. இறுதியில் மீண்டும் மரைக்காயர் தலைமறைவானார். தலைமறைவான இந்த சிங்கம் உறங்கி ஒய்வு எடுக்கவில்லை. அதன்பின் கொழும்பு சென்று அங்கு போரைத் துவக்கினார். இறைவனின் நாட்டம் வேறுவிதமாக இருந்தது. பரங்கியரின் குண்டு ஒன்று குஞ்ஞாலி மரைக்காயரின் வீர நெஞ்சில் தனக்கும்  ஒரு இடம் வேண்டுமென்று தேடிச் சென்று சேர்ந்தது. கடலின் மூலம் வந்த அந்நியனை விரட்ட கடற்படை அமைத்து தீரமாகப் போராடிய மாவீரர்,  தனது இறுதி மூச்சை இறைவனின் பெயரை சொல்லியவண்ணம் உலக வாழ்வை நீத்தார். 

இந்திய நாட்டின் மீது அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய முதல் போராளியே குஞ்ஞாலி மரைக்காயர். அவரே அந்நிய சக்திகளிடமிருந்து நமது மண்ணைக் காக்க நடந்த வீர இயக்கத்தின் முன்னோடியும் முதல் நபரும் ஆன முஸ்லிம் ஆவார். வேறு எவராக இருந்தாலும் எல்லோரும் இவருக்குப் பின்னால்தான் இந்த சுதந்திர உணர்வைத் தூண்டியவர்கள் ஆவர். இந்தியக் கடல் எல்லையில் ஏறத்தாழ   35 ஆண்டுகள் அந்நியரான  போர்ச்சுக்கீசியரின் கண்களில் தனது வீர விரலை விட்டு ஆட்டிய  முதலாம் குஞ்ஞாலி மரைக்காயரின் வீர சகாப்தம் முடிவுக்கு வந்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன். 

முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் புதைக்கப் பட்டார் இனி நிம்மதி என்று என்று போர்ச்சுக்கீசியர் நினைத்தனர். ஆனால் அவர் புதைக்கப் படவில்லை ; மாறாக, அவர் விதைக்கப் பட்ட விபரம் இரண்டாம், மூன்றாம், நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர்கள் விஸ்வரூபம் எடுத்தபோதுதான் அவர்களுக்கு விளங்கியது. 

அவைகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் காணலாம்.

இப்ராஹீம் அன்சாரி

34 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மிகப் பொறுமையாக வாசித்தேன்… மிகச் சிறந்த ஒரு போராளியை உருவாக்க இந்த மாதிரியான மாவீரர்களின் பதிவை அவசியம் புகட்டப்பட வேண்டும் !

அருமை… எழுத்து மட்டுமல்ல எடுத்தாண்ட கோர்வையும் சொல் வளமும் !

பரங்கியரின் குண்டு ஒன்று வீரத் திருமகனின் நெஞ்சில் ஓர் இடத்தை ஆக்கிரமத்ததை சொன்ன விதம் அற்புதம் !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா..

Unknown said...

மகாத்மா காந்தி என்றும் நேரு என்றும், வல்லபாய் படேல் என்றும் வாய் கிழிய பேசும் இந்த இந்திய போலி வரலாறுகள் உண்மை வரலாற்று போர் சிங்கங்களை ஏன் கண்கொண்டு கொள்ளவில்லை?. காரணம் இவர்கள் முஸ்லிம்கள்.

இந்திய சுதந்திரத்திற்கு முன் வாழ்ந்து வீரத்தை இம்மண்ணிலே விதைத்த
இந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் போல் ஒரு சிலர் இருந்திருந்தாலே, கடல் மார்க்க அறிவும், போர்த்தந்திரமும் கொண்ட இவர்களின் அறிவும் செயல்பாடும், 200 ஆண்டுகள் வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்து வந்த அவலம் நிகழ்ந்து இருக்காது.

இப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய வீரத்திருமகன்களை பெற்ற சமுதாயம் நம் இஸ்லாமிய சமுதாயம் என்பது, இந்த சாவர்க்கர் போன்ற அந்நியனுக்கு காட்டிக்கொடுத்தவர்களை ஆதரிக்கும் இந்த புல்லுருவிகளுக்கு எங்கே தெரியப்போகின்றது ? இஸ்லாமியர்களை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நம் முன்னோர்களின் உண்மை வீரத்தையும் மறைக்கப்பார்க்கும் இந்த (பார்ப்பன )அறிவீனர்கள் இந்திய ஜனநாயகத்தின் போலி முகங்களே.

நெஞ்சில் வீரத்தோடு துப்பாக்கிக்குண்டுக்கு இடம் கொடுத்த குஞ்சாலி மரைக்காயரின் அடுத்த வாரிசுகளின் வீர தீர செயல்களை எதிர் பார்த்து.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

காக்கா,
இந்த அற்புதமானத் தொடர் யாவரும் எழுதும் வழக்கமான ஒன்றாக இல்லாமல் பல வகையிலும் வித்தியாசமானதாகவும் வரலாற்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவும் குறிப்பேடாகவும் வளர்ந்து வருகிறது.

இதில் மறைக்கப்பட்ட வரலாற்றின் ஏடுகளில் வெளிச்சம் பாய்ச்சப் படுகிறது; காட்டிக் கொடுத்தவர்களின் முகத்திரை கிழிக்கப் படுகிறது; சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகம் வெளிக்கொணரப் படுகிறது; அந்தப் போலி வரலாற்றுப் பதிவர்களின் தில்லுமுல்லுவும் தகிடுதத்தமும் வெளி உலகுக்கு அறியத் தரப்படுகிறது.

முஸ்லிம் போராளிகளின் உண்மையான வாழ்க்கையையும் போராட்டங்களின் தன்மைகளையும் தெள்ளத் தெளிவாகப் புள்ளி விவரங்களோடு சொல்லிவரும் உங்கள் எழுத்திலும் போராட்டக் குணம் தெறிக்கிறது.

தொடருட்டும் தங்களின் இந்தப் போற்றுதற்குரியப் பணி.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, கா

نتائج الاعداية بسوريا said...

மரைக்காயர் என்பது " மறக்கலராயர் " என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது என்று சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றேன். அரசனுக்கு மரக்கலம் ஒட்டி பிழைப்பு நடத்தி வந்தவர்கள் என்றும் சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றேன்.

கடல் வணிகத்தில் கொடி கட்டி பரந்தவர்களின் ஒரு பிரிவினருக்கு இந்த பெயர் கொண்டு அழைக்கப்பட்டது என்ற தங்களின் விவரம் இன்னும் ஒரு படி மேலேயே விளக்கமாக இருக்கின்றது. வணிகம் செய்தவர்களை அரசனுக்கு களம் ஒட்டி பிழைப்பு நடத்தியவர்கள் என்று தவறாக சித்தரித்து இருக்கின்றனர்.

எது எப்படியோ தங்களின் ஒவ்வரு ஆக்கத்திலும் ஒவ்வொரு புது விஷயங்கள் தங்கச்சுரங்கத்தில் அல்ல அல்ல தங்கம் வருவதுபோல் வந்து எங்கள் மூளைக்குள் இடம் பிடித்தவண்ணம் இருக்கின்றன.

தங்களின் இந்த வரலாற்று ஆராய்ச்சி உண்மையிலேயே என்னை வியக்க வைக்கின்றது. தாங்களெல்லாம் நாங்கள் படிக்கும் கால கட்டங்களில் ஒரு வரலாற்று ஆசிரியராகவோ, அல்லது, பொருளாதார ஆசிரியராகவோ வந்திருந்தாள் , ஒவ்வொரு பாடத்திலும் 90/100 ம் அதற்க்கு மேலும் எடுத்து எங்கள் அறிவை பலப்படுத்தி இருந்திருப்போம்,

உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை. உங்களைபோன்றவர்களை கல்வித்துறையை சார்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளாதது ஒரு துரதிஷ்டமே.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

சுதந்திரத்திற்காகப் பாடுபட்டத் தியாகச் செம்மல் குஞ்ஜாலி மரைக்காயர் அவர்களுக்கு போர்த்துக்கீசியனைப் போட்டுத்தள்ளுவது அவ்வளவு ஒன்றும் சவாலானதாக இருந்திருக்காது நம் உள்ளூர் நம்பூதிரி பட்டிகள் காட்டிக்கொடுத்தும் கூ…க்கொடுத்தும் வெள்ளையனுக்குச் சேவகம் செய்யாமல் இருந்திருந்தால். சுயநலம் மட்டுமே ரத்தத்தில் ஊறிப்போயிருந்த அக்கால நம்பூதிரி பிராமணன்களைச் சமாளிக்கவே பெரும்பகுதி நேரத்தையும் வீரத்தையும் செலவிட வேண்டி யிருக்குமே!

என்ன ஒரு வேதனை, வெட்கக் கேடு என்றால், அவ்வாறு காட்டிக்கொடுக்கும் நம்பூதிரிகளை நம் போராட்டக் காரர்களாலும் கொல்ல முடிவதில்லை. காரணம், வசமாக மாட்டிக்கொண்டோம் என்பது தெரிந்தவுடனே பட்டென்று காலில் விழுந்துவிடும் உயரிய(1) குணம் கொண்டவர்களாக அல்லவா திகழ்ந்தார்கள்.

(இக்பால் சொன்னானே என்று “உருமி” மலையாளப்படம் பார்த்தேன். அதில் அப்படியொரு நம்பூதிரி வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர்(ஜெகதி?) உடல்மொழியாலேயே அந்தப் பாத்திரம் எவ்வளவு கேவலமானது என்பதை உணர்த்துகிறார்)

வீரமும் தீரமும் கூடிய ச்சரித்திரங்ஙலா நம்மட குஞ்ஜாலி மரக்கார்ன்ட ஜீவிதம். காரியங்ஙலொக்கே கேட்டப்பலா நம்மட ச்சோறு கொதிக்கின்னது. நம்பூதிரி பாடுன்னு பறையர ஆ கள்ளப் பட்டிகல்ட கள்ளத்தனன் ஒக்கே காணிச்சித்தரனும் என்ட வல்லியேட்டா.

نتائج الاعداية بسوريا said...

//முதலாம் குஞ்சாலி மரைக்காயர் புதைக்கப் பட்டார் இனி நிம்மதி என்று என்று போர்ச்சுக்கீசியர் நினைத்தனர். ஆனால் அவர் புதைக்கப் படவில்லை ; மாறாக, அவர் விதைக்கப் பட்ட விபரம் //
வீரத்திருமகன் குஞ்சாலி மரைக்காயர் நெஞ்சில் குண்டு ஏந்தி வீரமரணம் எய்திய ஒரு சோக நிகழ்வை சொல்ல வரும்போது,

அது ஒரு மரண நிகழ்வல்ல, அது பல குஞ்சாலி மறைக்காயர்களை உருவாக்க விதைக்கப்பட்ட விதை என்ற தங்களின் சொல் வீச்சு மிக அருமை.

அபு ஆசிப்.

Yasir said...

கடற்ப்படை கப்பல்களுக்கு பல கச்சடா பெயரை வைக்கும் மத்திய அரசு,இந்தியாவின் முதல் கடற்ப்படையை அமைத்த குஞ்சாலி மரைக்காயரின் பெயரை ஒரு நேவி கப்பலுக்காவது சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் செய்யுமா இந்த இஸ்லாமிய விரோத அரசுகள்

அல்லாஹ் இந்தத்தியாகியை பொருந்திக்கொள்வானாக ஆமீன்..

உண்மையை உரக்கச்சொல்லும் இந்தொடர் எல்லா மக்களுக்கும் சென்றட்டைய வேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

உருமி என்னும் மலையாளப் படத்தில் கண்ட காட்சிகளில் கூட எனக்குக் கண்ணீர் வரவில்லை காக்கா, ஆனால், தங்களின் வீரம் கொழிக்கும் வார்த்தைக் கோத்த இந்த ஆக்கம் படிக்கப் படிக்க என் உடலின் மயிர்க்கால்களிலிருந்து ஓர் உணர்ச்சி எழும்பிக் குத்திட்டு நினறன; க்ண்கள் தானாகவே குளாமாகி வழிந்தன; இப்படிப்பட்ட ஒரு வீர தீரரை முஸ்லிம் என்பதால் மட்டுமே விடுதலை வீரரரகவே வர்ணிக்க இயலாமற் ஆரியக் கூட்டம் இருட்டடிப்புச் செய்து விட்டது. தங்களின் அரிய பெரிய ஆய்வினால் எங்கட்குப் புதையலாகவே இந்த வரலாற்றுப் பெட்டகம் கிட்டியுள்ளது.

نتائج الاعداية بسوريا said...

//இந்தியாவின் முதல் கடற்ப்படையை அமைத்த குஞ்சாலி மரைக்காயரின் பெயரை ஒரு நேவி கப்பலுக்காவது சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் செய்யுமா இந்த இஸ்லாமிய விரோத அரசுகள்//
எப்படி செய்வார்கள் ? இவர்களுக்கு முஸ்லிம்கள் இந்தியாவின் விடுதலைக்காக நெஞ்சு நிமிர்த்தி போர் செய்ததெல்லாம் பெரிதாக தெரியாதே !

இதே ஒரு பாப்பனன் சுதந்திரத்திற்காக ஒரு புல்லை தூக்கி வேறு இடத்தில் வைத்தாலே அது பெரிய தியாகம் என்று பறை சாற்றும் பறங்கிகள், ஆட்சி , அதிகார பீடத்தில் இருக்கும் வரை தாங்கள் நினைக்கும் நியாயமான நேர்மையான கோரிக்கை இவர்கள் காதுகளை சென்றடையாது.

இது விஷயத்தில் இவர்கள் செவி செவிடு.
நம் இந்த நியாயமான கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு.

அபு ஆசிப்.


sabeer.abushahruk said...

//பரங்கியரின் குண்டு ஒன்று வீரத் திருமகனின் நெஞ்சில் ஓர் இடத்தை ஆக்கிரமத்ததை சொன்ன விதம் அற்புதம் !//

Ditto

Ebrahim Ansari said...

அன்பான சோதரர்களே!

இந்தத் தொடரை எழுதும்போதும் அதற்கான குறிப்புகளைப் படிக்கும் போதும் நானும் மிகவும் உணர்ச்சி வசப பட்டேன். ஆனாலும் வார்த்தைகளை வரையறைக்குள் வரும்படி பார்த்துக் கொண்டு கண்ணியம் காத்து எழுதினேன். நம்பூதிரியின் பாகத்தை தம்பி சபீர் அவர்கள் வி வரித்து இருக்கிறார்கள். அவர்களின் இரத்த நாளங்களில் ஓடிக கொண்டிருக்கும் இயல்பு அது. பிறவிக் குணம். அதைப் பற்றி விலாவாரியாக எழுதினால் நாறிவிடும்.

தம்பி இக்பால் அவர்கள் சொன்ன உருமி யை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்களின் அன்பான கருத்து

//கடற்ப்படை கப்பல்களுக்கு பல கச்சடா பெயரை வைக்கும் மத்திய அரசு,இந்தியாவின் முதல் கடற்ப்படையை அமைத்த குஞ்சாலி மரைக்காயரின் பெயரை ஒரு நேவி கப்பலுக்காவது சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் செய்யுமா இந்த இஸ்லாமிய விரோத அரசுகள்//

மூன்று ரூபாய்க்கு தபால்தலை வெளியிட்டதே பெரிய விஷயம். அது கூட கேரளா மக்களின் கோரிக்கையால். தமிழ்நாடோ அல்லது உ பி யாகவோ இருந்திருந்தால் இந்த மரியாதை கூட கிடைத்து இருக்காது.

ஆனாலும் அருமையான கோரிக்கை. இங்குள்ள இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளில் ஒன்றாக வைக்கலாம். பாராளுமன்றத்தில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் இதற்காக பேசலாம். பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் அவர்களை சந்திக்க நேர்ந்தால் இது பற்றி சொல்லலாம். நானும் முயல்வேன். இன்ஷா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிகச் சிறந்த ஒரு போராளியை உருவாக்க இந்த மாதிரியான மாவீரர்களின் பதிவை அவசியம் புகட்டப்பட வேண்டும்!

இவ்வளவு காலம் ஆட்சியில் அங்கமும் ஆதரவும் அளித்தவர்கள் (பிறைகொடி கட்சி உட்பட) இஸ்லாமியர்களின் தியாகத்தை மறக்கடிக்க நம்மையும் அவ்வாறே அறியப்படாமல் நீங்கள் சொல்லி தெரியும் அளவுக்கு ஏன் ஒத்துழைத்தார்களோ!

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari

இந்த முறை நீங்கள் எழுதிய விதம் எனக்கு என்னவோ அந்த காலத்துக்கே அழைத்துச்சென்ற மாதிரி இருந்தது. இன்னும் சொல்கிறேன் இந்த வலைத்தளங்களுக்குள் உங்கள் எழுத்து அடங்கி விடக்கூடாது. இவ்வளவு உண்மைகளை எடுத்துச்சொல்லும் ஆட்கள் குறைவு. அது இந்த இந்தியாவுக்கு தெரியவேண்டும்.


எப்படி தெரிவிக்க முடியும் என்பதை அன்பான வாசகர்களின் கருத்தாடலுக்கு விட்டு விடுகிறேன்.


Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் நான் சுயேச்சையாக நின்றால் ஓட்டுக் கிடைக்குமா?
ஜாமீன் தொகையே கிடைக்காது.

ஊதுகிற சங்கை ஊதுவோம். விடியும்போது விடியட்டும்.

Anonymous said...

//இந்திய மண்ணில் அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து சிந்திய முதல் ரத்தம் முஸ்லிம்களின் ரத்தம்// முஸ்லிம்களின் ரத்தமும் சிவப்புத்தான்! ஆனால் இந்திய சரித்திர ஆரியர்களுக்கு இந்த ரத்தம் சிவப்பாக தெரிவதில்லை! கண்ணை மாற்ற வேண்டுமா? கண்ணாடியே மாற்ற வேண்டுமா? இரண்டுமில்லை! அவர்களுக்கு colour-blind வியாதி!

S.முஹம்மது பாரூக். அதிராம்பட்டினம்

Anonymous said...

// குஞ்சாலி மரைக்காயர் புதைக்கப்பட்டார்//

அது புதைத்தால் முளைக்கும் முத்திய நெத்து!.

புதைக்கப்- புதைக்க முளைக்கும்!

S. முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்.

sabeer.abushahruk said...

ஜாகிர் / ஈனா ஆனா காக்கா அவர்கள் கவனத்திற்கு:

இந்தப் பதிவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் இதுவரை வாசித்துள்ளார்கள். இன்னும் 45 விழுக்காடு வழமையான வாசகர்களின் வருகை மெல்ல மெல்ல நடந்தேறுவது வழமை.

அப்படி வாசித்த அனைவரும் தத்தம் மெயில் குழுமம், வளைதளம், முகநூல்பக்கம் என்று கொண்டு சென்றாலே ஒரு பெரும் கூட்டத்தை இந்தப் பதிவு சென்றடைந்துவிடும். காப்பி ரைட் இல்லாததால் நமக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு தாராளமாக இதைப் பரப்பிக் கொள்ளலாம்.

இதுதான் தற்காலிக லோ பட்ஜட் யுக்தி. மேற்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கலாம்.

அதிரை நிருபர் அமீர் கவனத்திற்கு: இது அபு இபு தரவேண்டிய பதில்; நான் தந்திருப்பதால் இதற்கான அவர் சம்பளத்தை எனக்கு அனுப்பிவிடவும்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது அபு இபு தரவேண்டிய பதில்; நான் தந்திருப்பதால் இதற்கான அவர் சம்பளத்தை எனக்கு அனுப்பிவிடவும்)//

காக்கா, தாங்களே தெளிவாக சொல்லிட்டீங்களே ! ஏற்கனவே சொன்னதுதான்.... இந்த தொடர் நூல் வடிவம் பெறவேண்டுமென்ற பேரவா அதனால் (வலைப்)பூ(வில்)நூலையும் சுற்றிவர இன்னும் கொஞ்சம் பொருத்திருக்க வேண்டும் !

சட்டென்று வர இயலவில்லை, துல்லியமாக வேவு பார்க்கும் ஐபி கேமராவைக் கொண்டு ஒரு தீவிர ஆராய்சியில் இருக்கிறேன்... எதிர்பார்த்ததை எட்டிக் கொண்டிருக்கிறேன்... (அதிரயரின் அயராத உழைப்பு'ன்னு தலைப்பிட்டு ஏதும் போட்டுடாதீய)...

முகநூலையும் அதிரைநிருபர் பதிப்பகமே... வெளியிடலாம்னு அதன் ஆசிரியர் சொல்லிட்டார் (என்ன ஒரே கொழப்பமா இருக்கா ?)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா சொன்னபடி அன்னியரை எதிர்த்து சிந்திய முதல் இரத்தம்
இந்த சுட்டியில்
www.facebook.com/photo.php?fbid=354922251319316&set=a.134810456663831.39256.100004046320187&type=1

Anonymous said...

//இந்த வலை தளங்களுக்குள் உங்கள் எழுத்து.........//

மருமகனே ஜாஹிர்! இதுவே என் நீண்டநாளைய எண்ணமும் கூட!.

இந்த எழுத்துகளை புத்தக வடிவாக்கி ஆதாய நோக்கம் இன்றி மலிவான விலைக்கு விற்க்கலாம். இந்தப்பணி செய்ய அற்பணிப்பு உணர்வு கொண்ட முஸ்லிம் தனவந்தர்களை அதிரைநிருபர் தளம் அணுகிப் பார்க்கலாம்... ஊதுற சங்கை ஊதிவோமே!

கேட்க்காத காதுகள் ஆயிரம் இருந்தால் கேட்கின்ற காது ஒன்று இல்லாமலா போகும்?!
.
S. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

//அப்படி வாசித்த அனைவரும் தத்தம் மெயில் குழுமம், வளைதளம், முகநூல்பக்கம் என்று கொண்டு சென்றாலே ஒரு பெரும் கூட்டத்தை இந்தப் பதிவு சென்றடைந்துவிடும். காப்பி ரைட் இல்லாததால் நமக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு தாராளமாக இதைப் பரப்பிக் கொள்ளலாம்.\\

முகநூலில் பரப்பும் பணியைத் தமியேன் இன்று செய்து விட்டேன். முத்துப்பேட்டைக் கவிஞர் மு.யாகூப் அலி என்னும் என் நண்பர் குவைத்திலிருந்து அனுப்பிய ஒரு பதிவில் “சேரமான் பெருமாள்” என்னும் முதல் இந்திய முஸ்லிம் மன்னர் பற்றி அவர் எழுதிய நூல் தமிழக அரசு நூலகங்களில் இடம்பெற அனுமதிப் பெற்று விட்டதாக எழுதியிருந்தார்கள்; அவர்கட்கு வாழ்த்தும் செய்தியில் என் பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டேன்:

\\கவியன்பன் கலாம் இதனைக் காவியமாகவும் படைக்கலாம். தீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆய்ந்து வரலாற்றை என் யாப்பிலக்கண ஆசான் இலங்கைக் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் வாப்பா அவர்கள் காவியமாகப் படைத்து துபையில் வெளிய்ட்டார்கள்; நீங்கள் இந்த நூலை எனக்கு அனுப்பி வைத்தால், இன்ஷா அல்லாஹ் அவர்கள் மீண்டும் துபை வந்தால் இந்த நூலை அவர்களிடம் கொடுத்துக் காவியமாகப் படைக்கச் சொல்வேன். அந்நியரை எதிர்த்துக் கடல்வழிப் போர் செய்த முதல் முஸ்லிம் வீரரும் (குஞ்ஞாலி மரைக்கார்) கேரளத்து முஸ்லிம் என்பதை இன்று அறிந்தேன்; இந்த இணைப்பைப் பார்க்கவும்:http://www.adirainirubar.blogspot.ae/.../blog-post_23.html

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்... ~ அதிரைநிருபர்
adirainirubar.blogspot.com\\

Ebrahim Ansari said...

அனைத்து சகோதரர்களும் காட்டி வரும் அன்புக்கு நன்றி .

ஆனாலும் ஒரு குறை மனதில் இருக்கிறது தம்பி எம் எஸ் எம் நெய்னா இந்த வகுப்புக்கு ஆஜராவதில்லையே ஏன்?

நூல் வடிவ வெளியீடு பற்றி பெரியவர் மச்சான் எஸ் எம் எப் அவர்கள் ஒரு கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள.

தற்சமயம் பொருளாதாரச் சிந்தனைகளின் நூல் வடிவ வெளியீட்டைக் கொண்டு வருவதில் இந்தக் குழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் து ஆச செய்யவேண்டுகிறேன்.

இந்த நூல் வெளியீடுகளில் சுய புகழ், பெயர், இலாபம் என்பதெல்லாம் தள்ளிவைக்கப் பட்டவை. முழுக்க முழுக்க தாவா பணிகளுக்கு இவை பயன்படவேண்டுமேன்பதே நோக்கம். நம்மைப் பற்றி நாமே அறியாத விஷயங்களை அறியச் செய்ய வேண்டுமென்பதே அவசியம்.

அதே போல் வரலாற்றுத் தொடர் இப்போது தான் அரும்பத் தொடங்கி இருக்கிறது. இன்னும் பல மலர்கள் பூக்க வேண்டியுள்ளன. அவைகள் பூத்து மலர்ந்து மணம் வீசத் தொடங்கும்போது நூல் வடிவத்தைப் பற்றி நாம் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இப்போது ஏற்கனவே பெற்றுத் தொட்டியில் கிடக்கும் பொருளாதாரத் தொடரை வெளியிட நல் ஆதரவை வேண்டுகிறேன்.

தம்பி சபீர்! நான் சரியாகப் பேசுகிறேனா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Masha Allah, Enna Aanaa kaka's very nice article for a real & brave history of our nation's first & muslim warrior. Sorry for my late reading & comment. The way of exposing here the indian hidden history which should have known every one of the nation done by our author here nicely & prickly to the fascists. There are so many Tippu & Kunzallees' histories have already been hidden in India by crooked minded people. May Allah bless all of us. Aameen.

adiraimansoor said...

///குஞ்ஞாலி மரைக்காயாரின் கொரில்லாப் படையால் கோவாவுக்கு விரட்டப் பட்ட போர்ச்சுகீசியர்கள் மரைக்காயருக்கு ஆதரவாக இருந்து ஆக்கமமும் ஊக்கமும் தந்துகொண்டிருந்த மன்னர் மானவ விக்கிரம சாமுத்ரியைக் கொல்லத் திட்டம் போட்டனர். அதற்காக அவர்களுக்கும் ஒரு எட்டப்பன் கிடைத்தான். அவன் ஒரு நம்பூதிரி பிராமணன். உலக வரலாறுகளின் பக்கங்களில் அரண்மனைகளில் நடந்த சதிகளுக்குப் பஞ்சமில்லை. அப்படி ஒரு சதியில் சாமுத்ரி மன்னன் அடுத்துக் கெடுத்த நம்பூதிரிப் பிராமணனால் உணவில் விஷம் வைக்கப் பட்டுக் கொல்லப்பட்டார்.

மன்னரின் மரணத்துக்குப் பிறகு அரசாள வந்த அடுத்த சாமுத்திரி மன்னனுக்கு போர்த்துகீசியரை எதிர்த்து நிற்க “ தில் “ இல்லை.///

காக்கா

முதல் மன்னனின் பெயரும் சாமுத்திரி அந்த சாமுத்திரி மன்னன் கொல்லப்பட்டதும் இரண்டாவது வந்த மன்னனின் பெயரும் சாமுத்திரியா?

இங்கு எனக்கு கொஞம் குழப்பமாக இருக்கின்றது

அதிரைமன்சூர்
சிரிலன்கா ஏற்போடிலிருந்து

adiraimansoor said...

குஞ்சாலி மரைக்காமார்களுக்கு இருந்த வீரம் போன்று நமக்கெல்லாம் எப்பொழுது வரும்

sabeer.abushahruk said...

//தம்பி சபீர்! நான் சரியாகப் பேசுகிறேனா? //

Of course , kaka.

adiraimansoor said...

//தற்சமயம் பொருளாதாரச் சிந்தனைகளின் நூல் வடிவ வெளியீட்டைக் கொண்டு வருவதில் இந்தக் குழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் து ஆச செய்யவேண்டுகிறேன். ///

காக்கா
இந்த நூல் மிக சீக்கிரம் பப்லிஷ் பன்னவேண்டிய ஒன்று

adiraimansoor said...

//தற்சமயம் பொருளாதாரச் சிந்தனைகளின் நூல் வடிவ வெளியீட்டைக் கொண்டு வருவதில் இந்தக் குழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் து ஆச செய்யவேண்டுகிறேன். ///

காக்கா
இந்த நூல் மிக சீக்கிரம் பப்லிஷ் பன்னவேண்டிய ஒன்று

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர். சாமுத்திரி என்பது அந்த மன்னர்களின் குடும்பப் பெயர். முதலாவதாக நான் குறிப்பிட்டிருக்கிற மன்னனின் பெயரை மானவ விக்கிரம சாமுத்திரி என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

இரண்டாவதாக வந்தவர் பெயரிலும் சாமுத்திரி இருக்கிறது. ஆனால் அவர் அவ்வளவாகப் பிரகாசிக்காததோ என்னவோ அவரது முழுப் பெயர் குறிப்புகளில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவேதான் வெறும் சாமுத்திரி என்று குறிப்பிட்டுள்ளேன்.

அப்துல்மாலிக் said...

பள்ளிகளில் கட்டுக்கதை தேவையில்லாத ரா... சீ... ராவ.... வையும் மாங்கு மாங்குனு படிச்சு பரிட்சி எழுதி மார்க் வாங்கியதை நினைத்து இப்போது வெறுக்கிறேன், இது மாதிரியான உண்மை வரலாறுகள் வரையருக்கப்பட்டுவிட்டனவே ...

Shameed said...

நமது வீரத்தை மழுங்கடிக்கவே நமது ஆளுகளின் வீரத்தை மறைத்து வைத்துவிட்டார்கள் கட்டுரையை படிக்கும்போது ரத்தம் முருக்கேருகின்றது

Unknown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
To Brother Ebrahim Ansari

இந்த முறை நீங்கள் எழுதிய விதம் எனக்கு என்னவோ அந்த காலத்துக்கே அழைத்துச்சென்ற மாதிரி இருந்தது. இன்னும் சொல்கிறேன் இந்த வலைத்தளங்களுக்குள் உங்கள் எழுத்து அடங்கி விடக்கூடாது. இவ்வளவு உண்மைகளை எடுத்துச்சொல்லும் ஆட்கள் குறைவு. அது இந்த இந்தியாவுக்கு தெரியவேண்டும்.

--------------------------------------------------------------
Salam Zahir Kaaka,
Exactly thatswhat I felt several times when I read Ansari Kaakaa's Article.

Salam Ansari Kaaka,
Thanks for your all wonderful messeges...

Indeed ,We need several articles to refresh our hard-core Roots.During this Economical and materialistic dominated Era,we are shrinked by fulfilling our routine needs instead
creating history like our Kunjaali Maraickka.

adiraimansoor said...

ஜசாக்கல்லாஹ் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.