ஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம் சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.
நம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு, சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.
விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.
அவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
அந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.
கொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.
கழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா? தண்ணீர் குடிப்பதா? ஜூஸ் குடிப்பதா? என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை.
எல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன்.
பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி "ஏன்டா இப்புடி செய்றீங்க? அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே?" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.
பிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் "ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்?" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா? என்றேன்.
அதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு? என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.
கூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன்? என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.
இதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் "ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா" என்று.
கடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் அடிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே? உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ? என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன்.
இருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ்!!! அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்.......
விமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது? என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள்.
இது தாங்க நடந்துச்சி.......
மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு
இது ஒரு மீள்பதிவு
11 Responses So Far:
புதுசா படித்த சுவை!
மீண்டு வா நெய்னா மச்சான் மீண்டும் இதுமாதிரி எழுத!
இஸ்லாத்தை தன் மார்க்க நெறியாக கொண்டவர்கள் வானில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழ்நிலையிலும்( அதற்காக தரையில் மட்டும் உத்திரவாதம் இருக்கின்றதா என்றெல்லாம் கேட்க வேண்டாம் ) இப்படி குடி போதையில் தங்கள் பயணத்தை கழிக்கின்றார்கள் என்றால் இவர்கள் வளர்ந்த விதம் அல்லது வளர்க்கப்பட்ட சூழ்நிலை எப்படியோ.
இவர்கள் வளர்ந்த விதம் இப்படி இருந்திருக்கலாம்
1. தாய் தந்தை இல்லாதவராக இருந்திருக்கவேணும்,
2. தாய் இன்றி தந்தை வளர்ப்பில் இருந்திருக்கவேணும்.
3. தாய் தந்தை இருந்தும் இருவரும் மார்க்கம் தெரியாதவர்களாக இருந்திருக்கவேணும்.
4. இவரின் நட்பு வட்டாரம் இவரை மாற்றி இருக்கலாம்.
5. இவர் வளர்ந்த மாஹூல் (சூழ்நிலை) இதன் தீமையை பற்றி எடுத்து இயம்பும்
வாய்ப்பை பெறாத சூழ்நிலையாக இருந்திருக்கலாம்.
6 குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற வாசகத்தை இதுவரை படிக்க வில்லையோ என்னவோ.
எது எப்படியோ நம்முடைய ஈமானை பறிக்கும் விஷயத்தில் ஷைத்தானுடன் பறந்து கொண்டுகூட போராட வேண்டியது இருக்கின்றதே என்பதை நினைக்கும்போது, உண்மையில் , இவைகளெல்லாம் அல்லாஹ் நம் மீது சோதனை என்னும் ஒரு இடை செருகலை ஏற்ப்படுத்தி, நீ பறந்து கொண்டிருந்தாலும் ஷைத்தானை உன்னை நெருங்க வைப்பேன். உன் ஈமானை பாது காத்துக்கொள், இந்த சோதனையிலும் உன்னை வென்றெடு
என்பதே.
அபு ஆசிப்.
என்னா நெய்னா சும்மா அவனிடம் தபாய்க்குறத விட்டுட்டு சும்மா வந்து நிக்கிரியலே
அவன் நெஞ்சுலே உள்ள மஞ்சா சோத்தே (குடி பழக்கத்தை) எடுக்க வேண்டியதுதானே
First of all, sorry to not writing my comments in Tamil and thanks to republish my article to refresh my evergreen days those days my beloved mother who was alive to receive and send off me with more greetings and supplicate Allah to bestow his protection & prosperity to me to making her more happy in upcoming days. Due to my beloved mother's serious health condition, I got long leave from my company. In shaa Allah, within couple of weeks I'll be return back and I hope I can write something for AN same what I have done in the past.
This time also I got similar experience in Srilankan Airlines. One guy was sitting inside the aircraft next to me window side. He is also comming from Dammam going to his native Pudukkottai. I started my normal enquiry about him. He is also a Tamil muslim and saying that he is going in emergency for his wife's sickness. The air hostess came with menu card as above said then soft & hard drinks are served by them. This guy also requesting her to provide a glass of "Wine". I shocked and asked him what you man? Are you muslim? How dare you to request wine in front of a muslim brother? Then he smiled me as eeeeeeeeeeeeeeeee...after that giving some explanation to him through my little knowledge. Then he dropped his drinking desire. He must have done that only for the sake of Allah not for my advice. Tell me then how can we explain the disaster of drinking habits to others?
என் கேள்வியும் மீன் கேள்விதான்:
எசலுவதற்கும் சலுவுவதற்கும் என்ன வித்தியாசம்?
Easaluthal means waliyachchendru vayaal Easuthal, Saluvuthal means sayyalaal waliyachchendru kaineettuthal. So both are same for an innocent. These are the things available in huge amount at our Adirai. Nowadays, this.market extended even in internet & blogs. Therefore, AN request all of its writers & readers to keep in safe all their mouths.
சகோதரர் மு சென மு நைனா மீண்டும் வந்து தன் பாணியில் அதிரை நிருபரில் கலக்க மீண்டெ எழுந்துவிட்டார் என்று கடைசியில் பார்த்தால் இது ஒரு மீள் பதிவென்று அதவாது பரவா இல்லை அதை சகோதரர் நான் மீளவே இல்லை என்று உறுதி செய்து இருப்பது வேதனை மீண்டும் வாருங்கள் நைனா மீண்டு வாருங்கள் ...உங்களுக்காக துவா செய்து காத்து கொண்டு இருக்கும் அதிரை நிருபர் வாசகனில் நானும் ஒருவன் உங்கள் குடும்பத்தின் மீது மாறாத பாசம் வைத்துருக்கும் நாங்கள் உங்கள் தாயின் மஹபிரதிர்க்காஹ துவா செய்து கொண்டுள்ளோம் உங்கள் மாமா ஹசன் ஹாஜியாரிடம் கேளுங்கள் தெரியும்
எனக்கும் இது போன்று ஒரு அனுபவம் சிங்கப்பூர் போனபோது ஏற்பட்டது அவர் நமூதுருக்கு பக்கத்தில் உள்ள துவரங்குறிச்சியை சேர்த்தவர் , அவர் அங்குள்ள ஒரு அரசியல் தலைவரின் மகன் விமானத்தில் ஏறும்போது அறிமுஹம் செய்து கொண்டார் அவரது தந்தை எங்கள் குடும்ப நண்பர் அதற்க்கு பிறகு உங்களுக்கு நடந்த அதே அனுபவங்கள் சீட்டில் வாந்தி எடுப்பதும் விமான பனி பெண்ணிடம் தஹராறு செய்வதும் ரகளை தாங்க முடியல முடிவா வயதான விமான பணிப்பெண் விமானம் சிங்கப்பூர் சென்றதும் போலீசில் உன்னை ஒப்பைடைதுவிடுவேன் என்று மிரட்டியதும் கடைசி சீட்டில் போய் அம்மியவர் விமானம் சிங்கப்பூர் சென்றடைந்ததும் தெளிவாகி வந்து என்னிடம் காலில் விழாத குறையாக என் தந்தையிடம் சொல்லி விடாதிர்கள் என்று கெஞ்சி கூதாடிவிட்டார் . நானும் கண்டு கொள்ளவில்லை மிரட்டிய விமான பனி பெண்ணும் கண்டு கொள்ளவில்லை அப்புறம் தான் தெரிகிறது இது தினம் தினம் நடக்கும் சகஜம் என்று
அதிரைத் தமிழில் அசத்தலான பயணக் கட்டுரை; மீண்டும் மீண்டும் படித்தாலும் இஃது ஒரு மீள்பதிவு என்றே சொல்லவியலாது. அதிரைத் தமிழைப் படித்துச் செலவின்றி விமானத்தில் அதிரைக்கே சென்று வந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் உங்களின் எழுத்தில் காண்கிறேன், அன்புச் சகோதரர் நெய்நா!
//அதிரைத் தமிழில் அசத்தலான பயணக் கட்டுரை; மீண்டும் மீண்டும் படித்தாலும் இஃது ஒரு மீள்பதிவு என்றே சொல்லவியலாது. அதிரைத் தமிழைப் படித்துச் செலவின்றி விமானத்தில் அதிரைக்கே சென்று வந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் உங்களின் எழுத்தில் காண்கிறேன், அன்புச் சகோதரர் நெய்நா!//
இங்கிருங்க தம்பி நம் ஊர் பாசையில் உள்ள வார்த்தைக்கு மீண்டும் ஆங்கில மொழிபெயர்ப்பு கேப்பியலோன்டு நனச்சுக்கிட்டேன்.எப்படி இருந்தாலும் எனக்கு தட்டுப்புலா, தடுக்கு, அரிக்கன்லாம்புன்டு திரும்பவும் பழச யாவப்படுதிட்டீங்க
இத்தனை வருஷம் கழிச்சி தன் பெற்றோர், பொண்டாட்டி புள்ளைகளை பார்க்கப்போறோமே என்னா நினைப்பாங்க என்ற நெனப்பு இல்லாமலும், சில பேர் ப்ளேனில் 3 மணிநேரம் தூங்கனும் என்றும் குடிக்கிறாய்ங்க...
சவூதியிலிருந்து வரும் விமானத்தில் மட்டும் சவூதி எல்லை கடந்தவுடன் ஓப்பன் தி பாட்டில் நடக்குது.. என்ன கொடுமையோ?
இதுக்கு பதிலா நல்ல சத்தான ஜூஸும், சாப்பாடும் கொடுக்கலாம்....
Post a Comment