Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2013 | , , , ,

இறைவனின் அருட்கொடையான அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும். அன்றாடம் தொழுகையில் ஓதப்படும் இறைவசனங்களை முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் ஸூரத்துல் 'பகரா' அத்தியாயத்திலிருந்து வசனங்களை அழகிய உச்சரிப்புடன் தொழுகையில் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

சூரத்துல் பகரா
வசனங்கள் 284 - 286

2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”


அதிரைநிருபர் பதிப்பகம்

14 Responses So Far:

Unknown said...

இதில் வரும் சூரத்துல் பக்கராவின் கடைசி இரண்டு அத்தியாயத்தை யார் இரவில் தூங்குவதற்கு முன் ஓதிவிட்டு உறங்குகின்றாரோ , அவர்களின் அடுத்தநாளைய தேவைக்கு இறைவன் பொருப்பாளியாகின்றான் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். இப்படி,
இங்கு சவுதி அரேபியாவின் ஒரு பள்ளியில் தமிழ் பயானில் கேட்டேன்

இவ்வுலக வாழ்வின் மாயையில் சிக்கி நாளை மறுமையை மறந்து வாழும் ஒவ்வருவரும் சிந்தித்துணர , உணர்வினை தட்டி எழுப்பும் பல ஆயத்துக்களில் இவைகளும் அடங்கும்

அபு ஆசிப். . .

Adirai pasanga😎 said...

உன் வான்மறையாம் உன் வார்த்தையினை செவிவழியேற்று சிந்தையிலேந்தி செயல்வழியில் நின்றிட நல்லருள் புரிவாய் யா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

جزاك اللاه خير

(கீ போர்டல அராபிக் இருக்கு் ஒரு ட்ரைதான். எம் ஹெச் ஜே, பொங்கிடாதீங்க)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கீ போர்டுல அரபி இல்லெ காப்பி பண்ண முடியுது என்ன பண்ண?

sabeer.abushahruk said...

இதற்கு முந்திய பதிவின் பதிவர் ஷஃபியிடம் கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் என்னிடம் கேட்டால்

(அதான் காப்பி பேஸ்ட் பண்ணிட்டியலே. தமிழ் கோவிச்சிக்கப்போவுது. சாக்கிரதை)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


//தமிழ் கோவிச்சிக்கப்போவுது. //
தமிழே!
அவொ அதெ இதெ சொல்றாக என்று கோவிச்சுக்கப்புடாது.
அது எங்க வேத மொழி, நீ அதை கற்க உதவிய மொழி.

Ebrahim Ansari said...

ஒரு கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

தினமும் பஜ்ர் தொழுகையில் ஓதப்படும் சூராக்களின் தமிழாக்கத்தை அன்றைய தஹ்லீமில் படித்தால் என்ன? பல வருடங்களாகப் படிக்கப்பட்ட இரண்டு மூன்று நூல்களையே தஹ்லீமில் திரும்பத்திரும்பப் படிக்கிறார்கள்.

தொழுகையில் ஓதப்படும் திருமறையின் வாசகங்களின் தமிழாக்கம் எல்லோருக்கும் புரியும்படி மீண்டும் தமிழில் வாசிக்கப்பட்டால்- இன்று இதைத்தான் ஒதினோம் என்ற உண்மையான உணர்வுகள் இலகுவாக அறியப்பட இயலுமே!

adiraimansoor said...

இபுராகிம் அன்சாரி. காக்காவின் யோசனை மிக அற்புதமான. யோசனை எல்லா பள்ளிவாசல்களிலும் இதை நடைமுறை படுத்தினால் எல்லோருக்கும் திருமறையில் இறவன் நமக்கு என்ன போதிக்கின்றான் என்பது மிக இலகுவான முறையில் திரு குர்ஆன் புரிந்துவிடும்

adiraimansoor said...

அப்படி அன்று தொழுகையில் ஓதப்படும் சூராக்களை அதன் உயிரோட்டத்துடன் அதாவது வெறும் தர்ஜுமாவை மட்டும் படிக்கலாம் விளக்க உறையுடன் தெளிவாக விளக்கினால் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆலிம் + ஹாபிழ். பட்டம் பெற்றவர்களை நியமிக்கும் நிலமை மாறும் லெப்பைகளின் ஆதிக்கம் ஒழியும்
ஆக மொத்தத்தில் இறைமையை இலகுவாக மக்களிடம் எடுத்துச்செல்ல ஒரேவழி இதுவே

Kuthub bin Jaleel said...

I recommend all my brothers to watch all the 30 episodes of the following series to make Quran the way of our life in this world and succeed in the hereafter. I am sure all of us will feel ashamed for not understanding and memorizing the Quran while people with many disabilities could do. Please let me hear your feedback after watching the full series. Its really motivating.

http://www.youtube.com/watch?v=qB7z3rB6ZS4&list=PLokQm4vjvyUafwNl3-P8N_szDL5p22Bl7

Kuthub bin Jaleel said...
This comment has been removed by the author.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Kuthub bin Jaleel சொன்னது…
I recommend all my brothers to watch all the 30 episodes //

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...!

Sure ! I will watch full episode...

என் கருத்தை மட்டுமல்ல அடுத்த முயற்சியையும் இங்கே பதிவேன் இன்ஷா அல்லாஹ் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு