Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 1 9

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2014 | , , , ,

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்றஹீம்...

அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையாம் அல்குர்ஆனும், அண்ணல் நபியும் வழங்குகின்ற அறிவுரைகள், எச்சரிக்கைகள், சான்றுகள் நற்செய்திகள் இவைகள் எல்லோமும் இவ்வுலகிலும், மறுமை வாழ்விலும் நாம் வாழ்வாங்கு வாழ வகுக்கும் உன்னத மருந்தென்றால் மிகையல்ல !

எந்த ஒரு துறையாக இருக்கட்டும், அந்த விஷயமாக அல்லது நடைமுறையாக உள்ளவைகளுக்கு, எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன் உள்ளதை மட்டுமே கொண்ட அமுத ஊற்றுக்களே அல்குர்ஆனும், அண்ணல் நபிகளின் ஹதீஸ் என்னும் அமுத மொழிகளும் அன்றோ !

அவ்வாறுள்ள மொத்த விஷயங்களையும் - அல்லது தனித் தனியேயான எந்த ஒரு விஷயத்தையும் எடுத்து, அதனை திருக்குர்ஆன் ஒளியிலும், ஹதீசின் வழியிலும் ஆராய்ந்தால், நாம் மெய்சிலிர்க்காமல் கண்கள் பனிக்காமல் உள்ளம் உருகாமல் இருக்க முடியாது. மூக்கின் மேல் விரல் வைத்து அசைபோடாமல் இருக்க இயலாது.

உதாரணமாக பெண் / பெண் குழந்தை / பெண்மக்கள் / தாய் / மனைவி / சகோதரி என்ற வரையறுக்குள் மட்டும் நின்று அந்தப் பெண்களைப் பற்றி திருக்குர்ஆனில் ஏகன் அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதர் அண்ணல் நபிகளும் எப்படி அறிவுறுத்தி, நாம் அவர்களின் சொற்படி எவ்வாறு நடக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார்கள். அந்த பெண்கள் மூலம் நாம் எவ்வாறு சுவர்க்கம் அடைய இயலும் என்பதை விளக்கியுள்ளார்கள் என்பன போன்றவைகளை அறியும் போது, உண்மையில் நம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் மிக அதிகமாக கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

பாவம் ! இந்நேரத்தில், பிறமதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பெண்களின் பல்வேறு வகையான நிலைகளில் உள்ள அவலங்களை எண்ணி, பரிதாபம் மட்டுமே காட்ட இயலும் ! இறைவன் நாடினால் அந்த பெண்களும் இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்று, கரை சேர்ந்தால் - வெற்றி அவர்களுக்கும் தான் !

எனவே, இஸ்லாத்தின் கோட்பாடு பற்றி பெண்களின் அந்தஸ்து பற்றி அறியும் முன் பிறமத பெண்களுக்கு ஒரு வேண்டு கோள் ! "பிறமத சகோதரிகளே... ஏகன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் கற்றுத் தந்த நடைமுறைகளையும், பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள், அவர்களுக்குரிய முக்கியத்துவங்கள் அனைத்தையும் - பிறமதக் கோட்பாடுகளை பின்பற்றும் பெண்கள் அங்கிருக்கும் அடிமைத்த சூத்திரங்கள், பெண்ணுரிமை, பெண்மைக்கான முக்கியத்துவம் இவைகள இஸ்லாம் வழங்கிய அறிவார்ந்த்த ஆய்வுப் பார்வை கொண்டு, இறைவேதமான அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டலோடு ஒப்பிட்டுப் பாருங்கள்,உரசிப் பாருங்கள். எவை நன்மையானவை, தீமையானவை எவைகளை வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்ற வேண்டும், எதனை விட்டு வெளியேற வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்வீர்கள்.

முஸ்லிம் பெண்களே ! அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் இன்னும் பலமாக இஸ்லாமிய வாழ்வு நெறியை பலப்படுத்த உறுதி மேற்கொள்ளுங்கள்  ! ஏக இறைவன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் உங்களின் மேல் கரிசனப் பட்டு, இரக்கப்பட்டு, சுவர்க்க வழிகளை இலேசாக்கி, யாரும் உங்களை  சுரண்டி விடக் கூடாது என சட்ட்ம் இயற்றி, உங்களை மிகவும் உயர்த்தி வைத்து, முதலிடம் வழங்கியுள்ளார்கள். அதைக் கையாள்வது நீங்கள் வாழும்  நெறியில்தான் இருக்கிறது. சுவர்க்கமும் கூட  தாயின்  காலடியில் இருப்பதை நபிகளின் வாக்கு உறுதிப் படுத்துவதையும் மறந்து விட வேண்டாம்.

இனி !

பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த அந்த அரேபிய மண் கலாச்சாரம் ! பெண்கள் ஒரு போகப் பொருள் எனக் கொண்டு, அசிங்கம் கண்ட அந்த சமூகம், அப்படி சீர் கெட்டிருந்த சமூகத்தில் ஒரு புரட்சி மின்னல் தோன்றியது, அல்லாஹ்வின் தூதராக !

"இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும், நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம்" என நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்" - அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) - நூல் : திர்மிதி

சுப்ஹானல்லாஹ் ! இரண்டே வரி... சுருக்கமான வார்த்தைகள் !! அதன்  பொருளோ கடலிலும் பெரிது !!!

இன்றுகூட, பெண் பிள்ளை என்றால் ஆற்றிலும், குளத்திலும் மூழ்கடிப்பதும், நெற்மணிகள் கொடுத்தும், கழுத்தை நெறித்தும், பேருந்து இரயில் நிலையங்களில் பரிதவிக்க விட்டு,அநாதைகளாக்கப்பட்டும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அண்ணல் நபி அவர்களின் பெண் குழந்தைகளின் மேல் உள்ள கரிசனத்தைப் பாருங்கள். நம் அருகில் நின்று கொண்டு, நம்மை நோக்கி, அந்தத் தூதர் சொல்வது போல் இல்லையா ?

பெண் குழந்தை பிறந்து விட்டதே என கவலை கொள்ளாதே, நல்ல முறையில் அவர்களை வளர்த்து வாருங்கள் ! பிறகென்ன என்னுடன் கூட சொர்க்கம் செல்லலாம், வாருங்கள், வாருங்கள் என நம் அருமை தலைவர்  கூப்பிடுவது கேட்கவில்லையா ? 

ஆ! அழைப்பது யார் தெரியுமா ? நபி ! நம் உயிரினிலும் மேலானவர் ! அல்லாஹ்வின் தூதர் ! அல்லவா ? பொய்யுரைக்காத உதடுகள் அவைகள் ! எனவே,சொர்க்கம் நிச்சயம்.பெண் பிள்ளைகளை நன்றாக வளாத்த்தாலே சொர்க்கமா? இந்த மாதிரி super deal எங்காவது கிடைக்குமா?

வாருங்கள் சகோதரர்களே  ! நம் தலைவர் அழைக்கிறார்... மாமனித அழைக்கிறார்... சுவர்க்கம் புக அழைக்கிறார் !

பெண் மகள் பிறந்து விட்டாளே என கவலைப் படாதே ! வரதட்சனைக்கும்,நகைகளுக்கும்,பெண்ணுக்கு  வீடு கட்டி முடிக்க காலமெல்லாம் உழைக்க வேண்டுமே  எனவும்  பயப்படுகிறீர்களா ? 

வரதட்சனையாய் நகையும், வீடும் கேட்கும் கேடு கெட்டவர்களை விரட்டியடி ! அல்லாஹ்வின் மேல் தவக்குல் வையுங்கள் ! பெண் பிள்ளைகளை ஆசை ஆசையாய் வள்ர்த்தெடுங்கள் ! அண்ணல் நபியின் கையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் செல்லலாம் ! இன்ஷா அல்லாஹ்...!

இதற்கு மேலும் வேற என்னதான் வேண்டும் நமக்கு!!!

இறைவன் நாடினால் தொடரும் !
இப்னு அப்துல் ரஜாக்

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமக்கே உரிய பாணியில் பேசு பொருளோடு நேசத்தையும் பதிவாக்குகிறது இந்தப் பதிவு !

இத்தனை நாட்கள் இடைவெளி விட்டாலும் இடர்களை வெளிச்சம் போட்டு காட்டும் தன்மை உம்மிடத்தில் உண்டு சகோதரா !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் - இப்னு அப்த் ரஜாக் !

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மையில் ஒரு ஜூம் ஆ பயானில் பிச்சை எடுப்பது பற்றி பேசினார் ஹஜரத்.

பல ஊர்களில் இருந்தும் குமருக்குக் கல்யாணம் பண உதவி செய்யுங்கள் என்று கேட்டு வருகிரவர்களில் பெரும்பான்மையானோர் பொய்யாகச் சொல்வதாகவும் பேசினார்.

குறிப்பாக , மகர் பெற்றுக் கொண்டுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி இருக்கும்போது நிதி திரட்டி திருமணம் செய்யும் நிலைமை ஏன் ஏற்படுகிறது என்று கேட்டார்.

பெண்பிள்ளை என்றாலே தலையில் கை வைக்கும் மனநிலை மாறவேண்டுமானால் பெண்களுக்கு வீடு சீதனம் என்பன போன்ற காஸ்ட்லியான விஷயங்களை சமூகத்தில் இருந்து அப்புறப் படுத்தவேண்டும்.

sabeer.abushahruk said...

நம் இதயத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இடம் மிக உயர்ந்தது. அவர்களின் பொன்மொழிகள் வாயிலாக பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கான நன்மைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள், இப்னு அப்துர்ரஜாக்

இறைவன் நாடட்டும் தொடர.

Ebrahim Ansari said...

நூறு இளைஞர்களுக்கு இலவசத் திருமணம்.

http://2.bp.blogspot.com/-E7FbVWN61hE/UwkIQoIOtmI/AAAAAAAAHTA/bq2klqZvx7U/s1600/saudi+marriage.jpg

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பெண்பிள்ளையின் மகத்துவம் பற்றிய அழகு தொகுப்பு.

Yasir said...

நம் இதயத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இடம் மிக உயர்ந்தது. அவர்களின் பொன்மொழிகள் வாயிலாக பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கான நன்மைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள், இப்னு அப்துர்ரஜாக்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு