Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 23 11

அதிரைநிருபர் பதிப்பகம் | February 03, 2014 | , ,

கண்தானம்

ஆன்மீகத்தை மட்டும் போதிக்காமல் அதையும் கடந்து முழு மனித சமுதாயமும் சுபிட்சம் பெற்று வாழத்தேவையான அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டி நடாத்திச் செல்லும் மார்க்கமே இஸ்லாம். பகுத்தறிவும் பதில் சொல்லத் திணறும் இன்றைய நவீனகால சிக்கல்களுக்கும் மிக எளிதானத் தீர்வுகளை விளக்கிச் சொல்லும் மார்க்கமே இஸ்லாம். 

இம்மார்க்கத்தின் மீது எல்லாக் காலக்கட்டங்களிலும் பலமுனை தாக்குதல்கள் இருந்தே வந்திருக்கின்றன இன்னும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தாக்குதலில் ஒன்றுதான் இன்றைய நவீனகாலத்து மருத்துவமுறை. 

இம்முறையைப் பற்றி மத்திய காலத்தை கடந்து விட்ட மதமான- மார்க்கமான இஸ்லாம் அறிந்து வைத்திருக்க வாய்ப்பேயில்லை? என்ற அவசர முடிவுக்கு வந்தவர்களுக்கு சகோதரர் ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் வரைந்த ‘இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சாவல்கள்’ என்ற சிறிய நூலில் இஸ்லாம் மத்தியகாலத்தையும் கடந்து அது எல்லாக்காலங்களிலும் வழிகாட்டியே வந்தது இனிவரும் காலத்திலும் வழி நடத்திச் செல்லும் ஒரே இறை மார்க்கம் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு வெளிச்சம் போட்டு விளக்கியுள்ளார்.

இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்” என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிற ஆசிரியர் அவற்றுள் முதலாவதாக அறுவை சிகிச்சையைக் குறித்திருப்பது வியப்பையே அளிக்கிறது. 

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் முன்னுதராணமாக ஆசிரியர் விவரித்துள்ளார். எனினும் நாமறிந்தவரை அறுவை சிகிச்சை என்பது ஒரு நவீன சாதனையல்ல மாறாக பண்டைய இந்தியாவிலேயே சுஸ்ருதா போன்ற மருத்துவ அறிஞர்கள் இத்துறையில் சிறந்து விளங்கினார்கள் என்கிறது வரலாறு.

அதே சமயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நவீன மருத்துவ சாதனைதான் அதற்கும் நபிகளாரின் வாழ்வில் நடந்த இந்தச்சம்பவம் இடமளிக்கிறது என்பது உணர்ந்து அறியப்பட வேண்டியதொன்று. 

”ஒரு உயிரை வாழ வைப்பவன் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவனைப் போன்றவனாவான்”  (அல்குர்ஆன்- 5:32)

என்கிற திருமறைக்குர்ஆனின் குரலைச் சுட்டிக்காட்டி கண்தானம் சிறுநீரகதானம் இரத்ததானம் ஆகியவற்றுக்கான இஸ்லாத்தின் அங்கீகாரத்தையும் ஊக்குவிப்பையும் அந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கால்களில் கண்வைத்து கவியன்பா
கார் ஓடும் சாலைகளை 
கவணமாய் கடக்க வேண்டும் 
பார்வை யற்றவர் என்ன செய்வார்
பார்த்தா கடந்திடுவார் 

இரு கண்ணின்றி நண்பா
கையில் கம்பின்றி 
கம்பில் மணியின்றி
மணியின் ஓசையின்றி 
கடந்திட முடிந்திடுமா
தார் போட்ட சாலைகளை

இரவென்றால் கருப்பு கவியன்பா
பாலென்றால் வெள்ளை
மரமென்றால் பச்சை
கடலென்றால் நீலம் என்று
வர்ணங்களால் நிறைந்த உலகத்தினை 
பார்க்கட்டும் மாற்றப் போகும் கண்களால்

கருப்பு நிறமன்றி நன்பா 
வேரொன்றும் அறியாத
கண்பார்வை அற்றவர்கள் 
எப்படித்தான் அறிந்திடுவார்
மணம் தரும் மல்லிகையின்
நிறம் வெள்ளை என்று
வெள்ளை நிறம் என்றால் எப்படி என்று

அழகிய சாலைகளில் கவியன்பா
அழகான வர்ணங்களில்
அற்புத காட்சிதரும் நல்
வாசனை மலர்களையும் 
முத்தமிட்டு செல்லும் வண்ணமிகு
வண்ணத்து பூச்சிகளயும்
எப்படித்தான் அறிந்திடுவார்

எண்ணிக்கையின்றி பூத்திருக்கும் நண்பா
வாசமிட காத்திருக்கும் 
வாடா மல்லிகை மொட்டின்
இயற்க்கை அழகுகளின்
இயல்பான தோற்றத்தினை
பார்வையற்றோரிடம் பகிர்ந்து கொள்ள
மனம் வேண்டாமா உனக்கு

நெருப்பில் எரித்தோ கவியன்பா
கங்கையில் கறைத்தோ
மண்ணில் புதைத்தோ
மோய்ச்சரில் வைத்தோ
மானிடரின் கண்களை
மாய்த்திட வேண்டாம்
மாற்றிட கொடுத்திட நினயாமல்

இவ்வுலகை பார்த்த நீ நண்பா
மறு உலகம் செல்வதினால்
மாற்றி கொடுத்திடுங்கள் 
பார்வையின்றி ஏங்குவோருக்கு
உன் கண்கள் இரண்டும் அவைகள்
வையகத்தில் வாழட்டும் உன்
புகழ் பாடி பார்க்கட்டும் இப்பூவுலகை

முடித்துவைத்த சிற்பத்தை கவியன்பா
முடிதிருத்திய வண்ணத்தை
முப்பெரும் பிம்பத்தை
முழுதாய் பார்த்திட அன்பளிப்பு 
செய்திடுவாய் உன் கண்கள் இரண்டை
படைத்தவனிடம் இடம் மாறுமுன்
பாருலகை பார்த்திடவே
பார்வையற்றோர் நலம் நாடி
பகிர்ந்திடுவாய் உன் பார்பவையினை

கண்களை பெறட்டும் கவியன்பா
அற்புதத்தை பார்க்கட்டும் 
அழகை ரசிக்கட்டும்
அறிவினை நுகரட்டும் 
அன்பை பகிரட்டும்

அதிரை நிருபரை பார்க்கட்டும் நண்பா
அன்புடன் வாழட்டும்
அல்லாஹ்வை தொழட்டும்
அல் குர்ஆனை ஓதட்டும்
அல்லாஹ்வை நாடி போகட்டும்

மேலே எழுதப்பட்ட கவிதையில் இரண்டு பாராவிற்கு ஒருமுறை கவியன்பா என்று குறிப்பிட்டிருப்பது நம்மா சாட்சாட் கவியன்பர்கள் என் இனிய நண்பர்கள் கலாமையும், சபீரையும் மற்றும் நண்பா என்று குறிப்பிட்டு இருப்பது நம் சக நண்பர்களையும் என்று எடுத்துக்கொள்ளவும் இதுக்கு மேலா என்னிடம் கவிதையை எதிர் பார்க்கின்றீர்கள் கொட்டியது இவ்வளவுதான்.

நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.  இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர்.  இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் இவ்வுலகை காண உதவுபவை கண்கள். சில காரணங்களால் (பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சகணக்கானோர் பார்வையின்றி, உலகை காண முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் மீண்டும் கண்பார்வை பெற முடியும்.அதற்கு ஒரே வழி கண்தானம். இது முற்றிலும் ஒரு சிறந்த கொடை.

நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன.

அடுத்து வரும் தொடரிலும் கண்தாணம் தொடரும்  கண்தானம் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பது பற்றி இடம் பெறும் யாரும் படிக்க தவறிவிடாதீர்கள்
(தொடரும்)
அதிரை மன்சூர்

11 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

செத்தும் பொன் கொடுத்தசீதக்காதியை போல் செத்தும் கண் கொடுத்த நம்மையும் உலகம் வாழ்த்தும்.கண்தானம் பொன்தானத்தைவிடமேல்.மற்ற தானங்கள் எல்லாம் கண்தானத்தின்முன் கைகட்டிவாய் பொத்தி நிற்க்கும். 'விழி மாட்டுவோம்; வழிகாட்டுவோம்!' அருமையான கண்தர்ம கட்டுரை! .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விழி 'த்' திருந்த கண்கள்
ஏனோ !?
விழி 'த்' தேடலை தூண்டுகிறது...
எங்கே !
விழி த் திருந்தோர் !?
என்று...
கேட்டு கேட்டு வருகிறது
எனக்கு...

:) என் பதிலுரைப்பேன் !?!

sabeer.abushahruk said...

இந்த வாரம் ரொம்ப உணர்ச்சிகரமாக இருக்கிறது.

வாழ்த்துகள்.

(விளக்கமாக கருத்துப் பதிய முடியாத அளவுக்கு வேலை, பொறுக்கவும்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல விளக்கம்!

அதோடு அடுத்த பதிவை வாசிக்க தவறாதீர்கள் என்ற விளம்பரத்துடன்!

Shameed said...

//அடுத்து வரும் தொடரிலும் கண்தாணம் தொடரும் கண்தானம் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பது பற்றி இடம் பெறும் யாரும் படிக்க தவறிவிடாதீர்கள்//

அது எப்படி காகா தவற விடுவோம் கண்கள் பற்றிய செய்தியை கண்கள் படிக்காமல் விடுமா என்ன

Yasir said...

இந்த வாரம் ரொம்ப உணர்ச்சிகரமாக இருக்கிறது.

வாழ்த்துகள்.

(விளக்கமாக கருத்துப் பதிய முடியாத அளவுக்கு வேலை, பொறுக்கவும்)

adiraimansoor said...

வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அணைவருக்கும் நன்றி

adiraimansoor said...

எனக்கு என்னவோ கவிதைகள் வராது
அதையும் மீறி வந்த இந்த கவிதைகளை
கவிதை என்று சொல்வதைவிட
கண்தானத்தை ஊக்கப்படுத்தும் காவியமாகத்தான் இதை நான் கருதுகின்றேன்
இந்த காவியத்தை படிக்க
முக்கிய புள்ளிகளான இப்ராஹீம் அன்சாரி காக்காவையும், கவியன்பனையும், மு.செ.முவையும், க்ரவுன் மச்சானையும், ஜாஹிர் ஹுசைனையும் காணவில்லையே எங்கே சென்றார்கள் அவர்கள்
இதை படித்திருந்தால் நிச்சயம் அவர்களிடமிருந்து நல்ல பின்னூட்டங்கள் வந்திருக்குமே

sabeer.abushahruk said...

கண்மணியே கவனி!

வீதிக்கு வீதி
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்...
விழிகளுக் கென்றும்
மொழிதல் வேண்டும்!

எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொள்-
கண்ணொளி போயின்
எண்ணேது எழுத்தேது?

கிட்டப் பார்வையும்
குழி லென்ஸும்
சோடா புட்டியென
'சேடை' பேச்சும்
முன்னேற உனக்கு
முட்டுக் கட்டை!

ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?

சின்னத்திரையும்
பெரிய திரையும்
விழித்திரையின் எதிரிகள்...
கணினித்திரையின்
காணொளிகூட
கண்ணொளி உண்ணும் கருவியே.

நேரம் தவறிய தூக்கம்
நிதானமற்ற நோக்கும்
வர்ண வண்ண உலகை
மங்கலாய் மற்றிக் காட்டும்.

உறக்கமும் இறத்தலும்
உக்கிர இருட்டு
பார்வை பழுதானால்
பகல்கூட இரவே!

கண்களை உருட்டி
களைப்பை விரட்டு
காலையும் மாலையும்
கண்களைக் கழுவு!

காய்கறி கீரையும்
காரட்டுச் சாரையும்
கலந்த சாப்பாடு
கண் பார்வைக்கு காப்பீடு!

முகத்திற்கு நேரே
விளக்கொளி தவிர்த்து
வாசிக்கும் வரிகளில்
வெளிச்சம் பாய்ச்சு!

இறைவன் இமைகள்
தந்திராவிடில்
கண்களைக் காத்தல்
கடினமா யிருந்திருக்கும்!

கண்களைப் பேண்
களங்களைக் காண்!

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி!

அரிமா சங்கத்தின் மூலம் நிறைய கண் தானம் பெறுகிறோம். ஆனால் நம் சமுதாய மக்களிடமிருந்து அல்ல.

இது பற்றி முரண்பட்ட மார்க்க ரீதியான கருத்துக்கள் இருக்கின்றன.

அடுத்த தொடரும் இது பற்றி எழுதுவதாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். அதையும் படித்துவிட்டு கருத்திட எண்ணி இருந்தேன்.

ஆவலுடன் அடுத்தவாரத் தொடரின் பகுதியை எதிர்பார்க்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

adiraimansoor said...

///
சின்னத்திரையும்
பெரிய திரையும்
விழித்திரையின் எதிரிகள்...
கணினித்திரையின்
காணொளிகூட
கண்ணொளி உண்ணும் கருவியே.///
மாஷா அல்லாஹ்
சபீர் அருமையான
வரிகள்
எதிகை மோனை சும்மா புகுந்து விளையாடுகின்றன
ஜஸாக்கல்லா கைர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு