கண்தானம் இஸ்லாத்தில் அனுமதியா ?
கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களில் பலர் விழிமாற்று அறுவை சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை சென்னையில் நிலவுகிறது. விழிகளின் தேவை அதிகமாக இருப்பதால், பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களிலிருந்து விழிகளை வரவழைப்பதும் அதிகமாகியிருக்கிறது.
கண்கள்.. மனிதனின் உடலில் மிக முக்கியமான உறுப்பு. உயிரோடு இருக்கும்வரை தானமாக கொடுக்க முடியாத உறுப்பும் கூட. தமிழகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு மாற்று கண் விழிகள் தேவைப்படுகின்றன. ஆனால், அதில் ஒரு லட்சம் பேர்களுக்கு மட்டுமே மாற்று விழி கிடைக்கிறது. இந்த தட்டுப்பாட்டை நீக்க கண் தான விழிப்புணர்வு மட்டுமே ஒரே தீர்வு என்கிறார்கள் மருத்துவர்கள்.
யார் கண் தானம் செய்யலாம் என்பதில் பல தவறான தகவல்கள் வலம் வருகின்றன. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். ஒருவர் இறந்ததிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் வழங்கப்பட வேண்டும். இறந்த பிறகு கண்ணை தானம் செய்ய எடுக்கும் நேரம் 10-லிருந்து 15 நிமிடங்கள் தான்.
ஒருவர் இறப்பிற்கு முன்பு ஒப்புதல் கொடுக்காவிட்டாலும், குடும்ப உறுப்பினரின் அனுமதியோடு கண் தானம் செய்யப்படலாம் இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய், அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களும் கண் தானம் செய்யலாம். எச்.ஐ.வி உள்ளிட்ட தொற்றுநோய் கொண்டவர்கள் மட்மே கண் தானம் செய்யக்கூடாது.
கண்தானம், சிறுநீரக தானம், இரத்ததானம், இவைகனைச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா? நவீன மருத்துவத் துறைப்பற்றிய இஸ்லாமிய பார்வை என்ன? என்ற பலதரப்பட்ட கேள்விகள் அனேகமானவர்களின் மனதில் வருவதுண்டு அதில் நாம் தெளிவடைந்து செத்தும் கொடை கொடுக்கும் சீத்தக்காதிகளின் பட்டியலில் இடம் பெற்று மறு உலகில் வல்லோனின் அருளைப் பெறலாமே. பிரயோஜனமில்லாமல் போவதை பிரையோஜனமுல்லதாக மாற்றியமைப்போமே.
அஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றர கலந்ததுதான் இஸ்லாம். அந்த விஞ்ஞானத்தின் பெரும் பங்களிப்பே மருத்துவத்துறையாகும். மனிதன் சுகாதாரத்தோடும் உடல் நோய்களில்லாமல் வாழ மருத்துவத்துறையே பெருமுயற்சி செய்து வெற்றிகண்டு வருகிறது. அதன் பரிணாம வளர்ச்சியே மாற்று உறுப்பு பொருத்தும் முறையாகும். கண், சிறுநீரகம், போன்ற உறுப்புகளை அடுத்தவர்களுக்கு பொருத்தி வெற்றி கண்டுள்ளது மருத்துவம்.
இத்தகைய மருத்துவத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா என்ற சந்தேகமே வரக்கூடாது. பொதுவாக தீமையான காரியங்கள் பயனற்ற செயல்கள் எதற்கும் உதவாத விஷங்கள் எல்லாவற்றையும் இஸ்லாம் பட்டியலிட்டு விளக்கிவிட்டது. இஸ்லாம் சுட்டிக்காட்டாத எந்தத்தீமையும் எந்தத்துறையிலும் இல்லை.
''விலக்கப்பட்டவை அனைத்தும் தெளிவாக்கப்பட்டு விட்டன. என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்)அவர்கள் கூறிவிட்டார்கள்'' (ஆதார நூல். புகாரி)
இந்த அடிப்படையில் தீமையென்று சுட்டிக் காட்டப்படாத எதுவும் அனுமதிக்கப் பட்டவைதான் என்பதில் உலக முஸ்லிம் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்து இல்லை. கண், சிறுநீரகம், இரத்ததானங்கள் கூடாதவை தீமை பயப்பவையென்றால் அதை இஸ்லாம் சுட்டிக்காட்டி இருக்கும் இஸ்லாமிய சட்ட ஆதாரங்கள் எந்த இடத்திலும் இது பற்றி சுட்டிக் காட்டப்படவில்லை. எனவே இவை அனுமதிக்கப்பட்டவைதான்.
இன்னும் தெளிவாக சொன்னால்...
ஒவ்வொரு உறுப்பையும் குறித்து இதுவெல்லாம் கூடும் என்று பட்டியலிடாமல் ரத்தினச் சுருக்கமாக இன்னும் ஆழமான விஷங்களை உள்ளடக்கி திருக்குர்ஆன் இப்படி பேசுகிறது.
''எவன் ஒரு உயிரை வாழ வைக்கிறானோ அவன் எல்லா மக்களையும் வாழ வைத்தவன் போன்றவனாவான்'' (பார்க்க அல்குர்ஆன்- 5:32)
உயிர் வாழத்தேவையான எதையும் செய்ய இந்த வசனம் பொது அனுமதியளிக்கிறது. சென்று போன உயிரை மீண்டும் கொண்டுவர தற்கால மனிதனால் முடியாது என்பதால் அலட்சியப் போக்கில் மனிதனை மரணிக்கச் செய்துவிடாதீர்கள். அவன் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். இவ்வாறு செய்வது உலகளாவிய நற்பணிக்கு ஒத்ததாகும் என்று அழைப்பு விடுக்கிறது அல்குர்ஆன்.
மனிதன் வாழ உணவு உடை இருப்பிடம் தேவைபோல் காற்றும் நீரும் அத்தியாவசியத்தேவை. அதே அத்தியாவசியம் அவனது ஒவ்வொரு உறுப்பிற்கும் இருக்கிறது. உடல் குறைப்பாட்டுடன் வாழ முடியுமென்றாலும் அது முழுமையான வாழ்க்கையல்ல என்பதை குறைப்பாடு உள்ளவர்களால்தான் உணரமுடியும். உடல் குறைப்பாடற்ற மனிதன் தானியங்கியாக இருக்கிறான். குறைப்பாடுள்ளவன் ஒவ்வொரு தடவையும் பிறரது உதவியை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.
உடல் ஊனமுள்ளவர்களில் தன்னம்பிக்கைய உள்ளவர்களால் மட்டும்தான் வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாழமுடிகிறது. அதில் பலவீனப்பட்டவர்கள் ஊனத்தின் காரணத்தினால் பிறருக்குத் தொந்தரவு தருகிறோமே என்ற எண்ணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அல்லது மனம் குன்றி செயளற்று விடுகின்றனர்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானக் காற்று, நீர், உணவுப் பொருள்கள், மகசூலுக்கு இறைவன் பொறுப்பேற்பது போல், உணவு வினியோகம், உடை, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவற்றிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது போல்,
இதர துறைகளுக்கு மனிதநேயம் மிக்கவர்கள் பொறுப்பேற்க அல்குர்ஆன் அழைக்கிறது...
''எவன் ஒரு உயிரை வாழவைக்கிறானோ அவன் எல்லா மக்களையும் வாழ வைத்தவன் போன்றவனாவான்'' ஒன்றுக்குப் பலமுறை இந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள் மனிதனின் வாழ்வாதார விஷயத்தை எத்துணை அற்புதமாக இவ்வசனம் விளக்குகிறது. தானம் செய்வோரையும், செய்யத் தூண்டுவோரையும், தான உறுப்புகளை இணைப்போரையும் அத்தனை பேர்களையும் ஊக்குவிக்கிறது இந்தவசனம்.
அடுத்த தொடரிலும் கண்தாணம் தொடரும், ரத்த தானம் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பது பற்றி இடம் பெறும் யாரும் படிக்க தவறிவிடாதீர்கள்
(தொடரும்)
அதிரை மன்சூர்
12 Responses So Far:
இங்கேயும் கண்(கள்) இருக்கட்டும் !
ஏனோ இயக்க போதை கண்களை மறைக்கிறதே அது ஏன் ?
//''எவன் ஒரு உயிரை வாழ வைக்கிறானோ அவன் எல்லா மக்களையும் வாழ வைத்தவன் போன்றவனாவான்'' (பார்க்க அல்குர்ஆன்- 5:32)//
அழகிய எடுத்துக்காட்டு
// பார்வை இழந்தோர்க்கு செத்தும் கண் கொடுக்க தூண்டும் தம்பி அதிரை மன்சூரின் கட்டுரை பாராட்டுக்கு உரியது ! ஆனால்சுயநல அரசியல் வாதிகள் ''என் கட்சியே சேர்ந்தவர்தான் 'கண்தானம்' செய்தார்'' என்று பிரச்சாரம் செய்து பிரதிபலனை பெறமுயற்ச்சிப்பார்களோ?'' என்ற கேள்வி கண்முன் தோன்றுகிறது. ஏனெனில் செத்தவர்களை வைத்தே பதவிசுகம் தேடும் நாடு உலகில் நம்நாடே! செய்த தானத்தை ஊர்அறிய செப்பினால் அல்லா அதை ஒப்புவானா ?
'' பெண்ணை கொடுத்தோமோ?கண்ணைக் கொடுத்தோமோ?"என்றுஉருப்படாத பயல்களுக்கெல்லாம் தன் மகளை கட்டிகொடுத்த தாய்மார்கள் அழுதகண்ணீரும் சிந்திய மூக்குமாய் தன்முந் தானை புடவையால் கண்ணை துடைத்ததை நாற்பதுவருசங்களுக்கு முன்னால் என் கண்ணால் நான் பார்த்தேன்! [கப்பலிலே பினாங்குபோனமாப்புளேஊர் திரும்பலே! அங்கேயே ஒன்னை 'செட்அப்' பண்ணிக்கிட்டு உக்காந்துட்டான்] இதுவும் 'கண்தான' பட்டியலில் சேருமா ?
எடுத்துச் செல்வதற்கு ஒன்றுமில்லை எனவே கொடுத்துச் செல்வோம் நமது கண்களை என்பது அரிமா சங்கத்தின் கோஷம்.
மார்க்க அடிப்படையில் இது பற்றி சில சந்தேகங்கள் இருக்கின்றன.
அண்மையில் மறைந்த அப்துல்லாஹ் என்கிற பெரியார்தாசன் தனது உடலை இஸ்லாத்துக்கு வரும் முன்பே தானமாக வழங்குவதாக எழுதிக் கொடுத்ததால் அவர் இறந்த பின்பு இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் சில சந்தேகங்கள் பெரிதாக எழுப்பப்பட்டன.
இறுதியில் உடல் அவர் விருப்பப்படி வழங்கப் பட்டது.
இந்த சந்தேகங்கள் விலகும் வகையில் எழுதுங்கள் தம்பி மன்சூர்.
கண்தானம் தொடர்பாக ரத்திணச் சுருக்கமானப் பதிவு.
இருப்பினும் இன்னும் கூடுதலாகவோ நேரடியாகவோ ஆதாரங்கள் இருப்பின் அறியத் தரவும்.
அருமையானத் தொடருக்காக வாழ்த்துகளும் நன்றியும்.
அஸ்ஸலாமு அலைக்கும் அபூ இபு
///ஏனோ இயக்க போதை கண்களை மறைக்கிறதே அது ஏன் ? ///
நன் முன்பு இயக்கத்தை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பள்ளிவாசலில் ஒவ்வொரு வக்துக்கும் தொழ ஏறும்போது நிறைய எதிர்ப்புகளையும் அதனால் எழும் பல பிரட்சனைகளையும் நான் அதிகமாக அனுபவித்திருகின்றேன்
எலாம் எதற்க்காக
முஸ்லீம்கள் ஒன்றுபடவேண்டும் இஸ்லாத்தில் பிரிவினை இல்லை என்ற தாரக மந்திரத்தில் விழுந்து பொருளாலும் உடலாலும் உழைத்து வளர்க்கப்பட்ட இயக்கங்கள் தலைவர்களின் ஈகோவால் துண்டாடப்பட்ட இயக்கங்களினால் மனம் நொந்து அந்த இயக்கங்களை விட்டு அப்பொழுதே நான் என்னுடைய இயக்க சம்பந்தமான் வேலைகளை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன.
மீண்டு மீண்டும் சமுதயத்தில் பிரட்சனைகளை கிளப்பிக்கொண்டு சமுதாயத்தின் ஒற்றுமைகளை குழைக்கும் வன்னம் விசமத்தனமான பேச்சுக்களை பேசிக்கொண்டு சிலபேர் இமாம்கள் என்ற பெயரில் உலாவருவதை மனம் பொறுக்க முடியமல் என்னிடமிருந்து கிளம்பிய சில வார்த்தைகளை வைத்து இயக்க மயக்கம் என்று முடிவு கட்டிட வேண்டாம்
எந்த இயக்கத்திற்கும் தற்போது ஆதரவாளன் அல்ல ஆனால் எந்த இயக்கம் நல்ல விஷயங்களை செய்யும்போது அதை பாராட்டாமலும் இருக்கமாட்டேன்
நன்றி ஹமீத் ஜஸாக்கல்லாஹ் கைர்
பாருக் காக்கா
ஊரரிய செய்யப்படும் எந்த தானத்திற்கும் இறைவனிடத்தில் அதற்குரிய பிரதி பலன்கள் கிடைக்காது என்பது இஸ்லாத்தில் அடிப்படை இல்மு
ஊர் அறிய கொடுக்கப்படும் தானம் ஊரோடு முடிந்துவிடும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாததினால் அவர்கள் செய்யும் தானங்களுக்கு மேலதாளங்கள் அடிப்பது அவர்களுடைய செயல்கள் அரசியல் வாதிகள் இதை மேடையிலும் வீதியிலும் அறங்கேற்றுவார்கள்
இதிலும் ஆதயம் தேடும் அரசியல்வாதிகளிடம் இதுபோன்ற காரியங்கள்தான் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கையை ஓட்டும் துடுப்பு
பெண்ணை கொடுத்தோமோ?கண்ணைக் கொடுத்தோமோ?"என்றுஉருப்படாத பயல்களுக்கெல்லாம் தன் மகளை கட்டிகொடுத்த தாய்மார்கள் அழுதகண்ணீரும் சிந்திய மூக்குமாய் தன்முந் தானை புடவையால் கண்ணை துடைத்ததை நாற்பதுவருசங்களுக்கு முன்னால் என் கண்ணால் நான் பார்த்தேன்! [கப்பலிலே பினாங்குபோனமாப்புளேஊர் திரும்பலே! அங்கேயே ஒன்னை 'செட்அப்' பண்ணிக்கிட்டு உக்காந்துட்டான்] இதுவும் 'கண்தான' பட்டியலில் சேருமா ?
இப்ராஹீம் அன்சாரி காக்கா
உங்களுக்கு தெரியாத விஷயங்களல்ல
அப்துல்லா அவர்கள் தான் பெரியார் தாசனாக இருக்கும்போது கொடுத்த வாக்கை அவர் அப்துல்லாவாக மாறியபின்னர் வாப்பஸ் பெற்றுருக்க வேண்டும்
ஓரிரு வருடங்கள் முன்பாக இஸ்லாத்தை ஏற்று
மார்க்கம் மாறியவுடனேயே இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள விஷயங்களை போதனை புரிந்தவர்களில் இவரும் ஒருவர்
உடல் தானம் இஸ்லாத்தில் இல்லை என்பதை மறைந்த அப்துல்லா அவர்கள் அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை அப்துல்லா அவர்களின் நிலபாடு பற்றி அல்லாஹ் மிக அறிந்தவன்
நன்றி சபீர்
எனக்கு கிடைத்தவரை உள்ள தகவல்களை இந்த பதிவில் பதிந்துள்ளேன்
இதைவிட மேற்கொண்டு யாருக்கும்தெரியுமானால் தகவல் தரலாம்
Post a Comment