Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாடு போகும் போக்கு! - தேடல் - 2 23

அதிரைநிருபர் பதிப்பகம் | March 11, 2014 | , , , , ,

நாடு போகும் போக்கு - சொல்ல
நடுங்கிப் போகும் நாக்கு
நேக்குப் போக்குப் பார்த்து
நிறைவில் சொல்வேன் வாக்கு

அரசியல்வாதிகளைத் தாக்கிய
அரசியல்வியாதி ஆக்கிய
நுண்கிருமியைக் கட்டுப்படுத்த
பெட்டிபெட்டியாய் மருந்தும்
சட்டி சட்டியாய் விருந்தும்
கொட்டிக் கொடுக்கிறது தேசம்

நாட்டுக்காக
விளையாடப் போகிறவர்கள்
நோட்டுக்காக
விலையாகிப் போகிறார்கள்

வணக்க வழிபாடுகளை
நவீனப் படுத்தி
காசு பார்க்கிறார்கள்
காவிச் சாமிகள்,
மேநாட்டு மோகம் ஊட்டி
மதம் வளர்க்கிறார்கள்
பாதிரி சாமிகள்,
மார்க்கம் பற்றி
தர்க்கம் செய்து
இயக்கம் என்னும்
மயக்கும் ஊட்டி
குளிர்காய்கிறார்கள் ஆசாமிகள்!

மின்வெட்டு
மின்னல் வெட்டென தொடர
கண்கெட்டுப் போகிறது
மின்னழுத்த ஏற்றத்தாழ்வால்
சுநாமி தாக்கிய பூமிவாசிகளாய்
சுருண்டு மடிகின்றன
மின் உபகரணங்கள்

பசு மடியைக்கூட
கொசு கடிக்க
பால் வழியாகவும்
பாக்டீரியா பரவுகிறது

ஊசி போட்டு காசு வாங்கும்
மருத்துவர்கள் அருகி
தொலைகாட்சியில்
பேசி விட்டு காசு வாங்கும்
வைத்தியர்கள் மிகைக்கின்றனர்

லஞ்சம் தவிர யாவற்றிற்கும்
பஞ்சம் - பதறுகிறது
நெஞ்சம்

முந்தைய மனிதர்களின்
சிந்தையை மாற்றிய
எந்தன் கோமான்
நபிவழி நடப்பதே
நாடு நிலைக்கவும்
நடுநிலை தழைக்கவும்
நல்லதோர் தீர்வு!

CROWN எழுதியதல்ல
(அடுத்தத் தாக்குதல்...? சஸ்பென்ஸ்!)

23 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாக்குதலின் இலக்கு
ஜெயிக்கும் நிச்சயம்
அவர் வசப்படுவார்
நிச்சயம் நம் வசம்!

sheikdawoodmohamedfarook said...

நாடு போகும் போக்கை ஆணிபோல்நாச்சென்று அடித்து சொன்ன நல்லகவிதை! சொல்லெல்லாம் சொல்அல்ல; கொள்ளிக்கட்டை! அதுபோட்டசூடு, சூடுசொரணை உள்ளவர்க்குதான் சூடு.அது இல்லாதவர்களுக்கு எருமை மாட்டின்மேல் பெய்த மழையெனஆகும். இருந்தாலும் வானம் பொழிந்து கொண்டே இருக்கட்டும்.

sabeer.abushahruk said...

இந்த அஜினமோட்டோ சுவை வேண்டாம். கிரவுனாரே, உமது கைப்பட்ட அசல் சுவை வேண்டும்.

crown said...

நாடு போகும் போக்கு - சொல்ல
நடுங்கிப் போகும் நாக்கு
நேக்குப் போக்குப் பார்த்து
நிறைவில் சொல்வேன் வாக்கு
---------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும்.இப்படி தாக்கு தாக்கினால் வேர்க்குது நேக்கு!ஆனாலும் இன்றைய அரசியல் சூழ்னிலையில் நல்லோர் நாக்கும் ஊமையாகவும்,தீயோர் நாக்கு விசம்கக்கினாலும் நேர்மையாகவும் கனிக்கப்படுவது சாபத்தின் உச்சம்!

crown said...

அரசியல்வாதிகளைத் தாக்கிய
அரசியல்வியாதி ஆக்கிய
நுண்கிருமியைக் கட்டுப்படுத்த
பெட்டிபெட்டியாய் மருந்தும்
சட்டி சட்டியாய் விருந்தும்
கொட்டிக் கொடுக்கிறது தேசம்
----------------------------------------------------------------
அதனால்தான் இந்த வீனர்களின் வயிரு ஊறிக்கிடப்பதும், ஏழை நல்லோரு வயிரு காஞ்சி ஒட்டிகிடப்பதும் நடக்கிறது!இருந்தாலும் சனனாயகம் சீரனிக்கமுடியாமல் வாந்தியெடுத்து வீதியெல்லாம் நாறிக்கிடக்கிறது!

crown said...

நாட்டுக்காக
விளையாடப் போகிறவர்கள்
நோட்டுக்காக
விலையாகிப் போகிறார்கள்
------------------------------------------------------------------
நம்பிக்கையை விளையாட்டாக்கி அதில் விலைபோகிறார்கள். நானயம் எல்லாம் நாணயத்தில் கரைந்து போகிறது. நா" நயம் உள்ள அரசியல் வாதி பிழைத்துக்கொ(ல்)ள்கிறான்!

crown said...

வணக்க வழிபாடுகளை
நவீனப் படுத்தி
காசு பார்க்கிறார்கள்
காவிச் சாமிகள்,
மேநாட்டு மோகம் ஊட்டி
மதம் வளர்க்கிறார்கள்
பாதிரி சாமிகள்,
மார்க்கம் பற்றி
தர்க்கம் செய்து
இயக்கம் என்னும்
மயக்கும் ஊட்டி
குளிர்காய்கிறார்கள் ஆசாமிகள்!
-------------------------------------------------------
குளிர்காய சாமானியர்களின் அறியாமையை பத்தி!அதற்கு பக்தி முலாம் பூசி,புத்திகெட போதனைகள் செய்து (மட)சாம்புராணிபுகையிலும்,ஊதுவத்தியிலும் மனம் லயிக்கும் படி நம் சாமானியர்களின் புத்தியை மடமையாக்கி,முக்கிதியென்றும், சக்தியென்றும் புத்திபேதலிக்கவைக்கும் யுக்தியில் திளைக்கின்றனர்.

crown said...

மின்வெட்டு
மின்னல் வெட்டென தொடர
கண்கெட்டுப் போகிறது
மின்னழுத்த ஏற்றத்தாழ்வால்
சுநாமி தாக்கிய பூமிவாசிகளாய்
சுருண்டு மடிகின்றன
மின் உபகரணங்கள்
-----------------------------------------------------
இதனால்தான் ஆட்சியை 'பவர்'எனவும் அழைக்கும் தந்திரமோ தெரியாது!பவர்'உள்ளவர்கள் பவரை ,தவறாய் உபயோகிப்பதால் ,கரண்ட் என்னும் மின்சாரம் இல்லாவிட்டாலும் ஷாக்'அடிக்கிறது, மின்சாரம் இல்லாமலே மின் கட்டனம் இப்படி அதிகம் கட்டணும் என தலைவிதி! எல்லாம் அரசு இயந்திரத்தில் நசுங்கும் நம் வாழ்கை!

crown said...

பசு மடியைக்கூட
கொசு கடிக்க
பால் வழியாகவும்
பாக்டீரியா பரவுகிறது
-------------------------------------------------
இப்படி "மடி"யும் படி,எல்லாம் "பாழ்" படுத்தி வைத்திருக்கும் இந்த பொல்லாத அரசியல்!

crown said...


ஊசி போட்டு காசு வாங்கும்
மருத்துவர்கள் அருகி
தொலைகாட்சியில்
பேசி விட்டு காசு வாங்கும்
வைத்தியர்கள் மிகைக்கின்றனர்
------------------------------------------------------------
இப்படி நல்ல மருத்துவர் அருகி!போலிமருத்துவர் பெருகி'விட்டதால் பொதுமக்களின் வாழ்கை சுருங்கிவிட்டது! எல்லாம் சமூகத்தின் மேல் ஒழுங்கீன நோய் பரவிவிட்டது!

crown said...

லஞ்சம் தவிர யாவற்றிற்கும்
பஞ்சம் - பதறுகிறது
நெஞ்சம்
---------------------------------------
லஞ்சம் என்ற நெருப்பும்,பதவி(சுகம்)என்னும் பஞ்சும் சேர்ந்தே இருப்பதால் என்றும் பற்றிகொண்டுதான் இருக்கும்! ஆனால் அது சுற்றத்தை மற்றும் சுற்றும், பற்றும் நெருப்பு!

crown said...

முந்தைய மனிதர்களின்
சிந்தையை மாற்றிய
எந்தன் கோமான்
நபிவழி நடப்பதே
நாடு நிலைக்கவும்
நடுநிலை தழைக்கவும்
நல்லதோர் தீர்வு!
-------------------------------------------
உண்மைஉரை! கடைப்பிடிப்பவர் கரையேறுவர், மறுமையில் சுவர்க்க ஆற்றில் களிதீர நீந்துவர்!ஆமீன்

crown said...

CROWN எழுதியதல்ல
-------------------------------------------
இதை எழுதி சொல்ல வேண்டியதில்லை! காரணம் இதுபோல் என்னால் இயற்ற இயலாது! நான் எழுதியிருந்தால் நல்லா பழுது இருக்கும், இது கனிந்து பழுத்து இருக்கு!வார்தை கொழுத்து இருக்கு!

Yasir said...

எங்க தங்க கிரவுனின் வார்த்தை சித்து விளையாட்டை கவிதை 100% பிரதிபலிக்கவிட்டாலும்....இக்கவிதையை புனைந்தவரின் வார்த்தைகளும் சமுதாய அக்கறையும் சிலிர்க்க வைக்கின்றது....உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது

கிரவுனே இனிமேலாவது..ஒரு கவிதை எழுதி தாரும்...தூய தேன் சாப்பிட்டு ரொம்ப நாளாகுது

Ahamed irshad said...

ஒவ்வொரு வரியும் நச்....சூப்பர் காக்கா.. :)

Ebrahim Ansari said...

கவிதையைப் பாராட்டுகிறேன். எழுதுயவரைப் பாராட்டுகிறேன்.

இன்றைய அரசியல் சதி போல இருக்கிறது எழுதியவர் யார் என்பதன் மூடு மந்திரம்.

அந்த சதி உடைபடும் ஒருநாள். இந்த மதியும் வெளிப்படும் ஒரு நாள்.

Ebrahim Ansari said...

மதி= நிலவு , கவி நிலவு.

sheikdawoodmohamedfarook said...

//மலேசியா விமானம் மறைந்தமாயம் //தேடும் பணியில் இந்தியாவும் பங்குகொள்ள வேண்டும்.இந்தியா மீது சீனா படை எடுத்தபோது மலேசிய பிரதமர்துங்குஅப்துல்ரஹ்மான் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்து மக்களிடம் நிதியும் திரட்டிகொடுத்து இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டினார்.அந்த நன்றிமறப்பது நன்றல்ல.மலேசியாவின் இந்த துயர நேரத்தில் நாமும் உதவுவதே மனிதாபிமானம்.நன்றி மறப்பது நன்றல்ல

sheikdawoodmohamedfarook said...

//மலேசிய விமானம்// இந்தியர்களாகிய நாமும் நமது முன்னோர்களில் பலரும்அங்கு சென்று பொருள்தேடிஇங்கு சுபிச்சமாக வாழ்ந்தோம்.இன்னும்அங்கும்இங்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் .அந்த நன்றிகடனுக்கு குறைந்தபட்சம் அவரவர்கள்மத பிரார்த்தனை கூடத்தில் ஒரு சிறப்பு தொழுகை நடத்தி வீமானமும் பிரயாணிகளும் ஆபத்தின்றி நலமுடன் திரும்பிவர ஒரு சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்தை பதியுங்கள்.

sabeer.abushahruk said...

இன்ஷா அல்லாஹ், ஃபாருக் மாமா. ஏற்கனவே துஆ கேட்டுத்தான் வருகிறேன்.

இருப்பினும் இந்த புதிர் பெர்முடாஸ் ட்ரையாங்கிலையும் மிஞ்சி விடும் போலுள்ளதே!!!

sheikdawoodmohamedfarook said...

//மலேசிய விமான மாயம்// உலகதமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முதன் முதலில் நடத்தியநாடு மலேசியா.இது மலேசிய பல்கலைகழக தமிழ்துறைதலைவர் தனிநாயக அடிகளார் முயற்சியால் சிறப்புடன் நடத்தப்பட்டது. மீண்டும்அடுத்து ஒரு மாநாடு அங்கே நடந்தது. சென்னைசெயின்ட்ஜார்ஜ் கோட்டையில்பதவி நாற்காலிஇல்லாமல்போனதால் வெறும் நாற்காலில் உட்க்காரமாட்டேன் என்றுவீட்டுக்குள் குந்திகின்னு இருந்த கலைஞரை அழைத்து பேசவைத்தார்கள். வழக்கமானபாணியில் 'சங்ககாலவீரத்தமிழச்சியின் வீரத்தை' தனக்கே சொந்தமான கரகரத்த குரலில் கர்ஜித்தார். கர்ஜனையே காதில் கேட்டஇருகைகொண்ட தமிழர்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து தங்களின் இருகையால் தட்டிஆவாரம் செய்தார்கள்[தொடரும்]

sheikdawoodmohamedfarook said...

//மலேசிய விமானம் மாயம்// [தொடர்]கலைஞரின்கர்ஜனையாலும் கைதட்டல்ஆரவத்தாலும் கூட்டம்நடந்த உலகவர்த்தகமையம்[PWTC].என்றமாபெரும் கட்டிடமே ஒருஅசைவு அசைந்து நின்றது.கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்த மலேசியபிரதமர் டாக்டர் மஹாதிர் முஹம்மத்அவர்கள் மரியாதைக்காக கை தட்டினாலும்''கட்டிடம் என்னாகப்போகிறதோ?'' என்ற கவலைக்குறி அவர் முகத்தில்ஓடியது. அவர்பேசும்போது''எனக்கு கொஞ்சம்கொஞ்சம்தமில் தெரியும்! கஞ்சிகுடி!காச்சலா?தலவலியா? சுடுதண்ணிகுடி! உக்காரு!போ! நாளைக்கிநல்லா போயிரும்''என்ற வாத்தைகளே எனக்குதெரியும்'' என்றார்.ஒரே சிரிப்பு அவரும்சேர்ந்து சிரித்தார்.இப்படியெல்லாம் இந்தியருக்கும் தமிழருக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் மலேசியா கை கொடுத்திருக்கிறது.பிரதிபலனாக ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லக் கூடயாருமில்லை இங்கே!????????????????????இது ஒருவினோதமானநாடு ! விநோதமான ஜன்மங்களும்வசிக்கிறார்கள்.!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு : யார் யாருக்கோ... எப்படியெல்லாமோ யோகம் அடிக்குது... அந்த கூத்தில் கும்மாளமும் போடுகிறார்கள் !

மாறாக இங்கே உன்னோட குதூகளமான தமிழ் என்றைக்குமே... யோகம் தான்யா !

ரசித்த...வரிகளை மீண்டும் வாசித்தேன்... இப்படியாக !

தாக்கு தாக்கினால்
வேர்க்குது நேக்கு! - ஆனாலும்

நல்லோர் நாக்கும்
ஊமையாகவும்
தீயோர் நாக்கு
விசம் கக்கினாலும்
நேர்மையாகவும் கனிக்கப்படுவது
சாபத்தின் உச்சம்!

வீனர்களின் வயிரு ஊறிக் கிடப்பதும்
ஏழைகளின் வயிரு காஞ்சி ஒட்டி கிடப்பதும் நடக்கிறது!

சனனாயகம் சீரனிக்க முடியாமல்
வாந்தியெடுத்து வீதியெல்லாம் நாறிக்கிடக்கிறது!

நம்பிக்கையை விளையாட்டாக்கி விலைபோகிறார்கள்
நானயம் எல்லாம் நாணயத்தில் கரைந்து போகிறது.
"நா" நயமுள்ள அரசியல் வாதி பிழைத்துக் கொ(ல்)ள்கிறான்!

குளிர்காய
சாமானியர்களின் அறியாமையை பத்தி!
அதற்கு பக்தி முலாம் பூசி
புத்திகெட போதனைகளால்
(மட)சாம்புராணி புகையிலும்
ஊதுவத்தியிலும் லயிக்கும்படி
சாமானியர்களின் புத்தியை
மடமையாக்கி,
முக்கிதியென்றும்,
சக்தியென்றும்
புத்தி பேதலிக்க வைக்கும்
யுக்தியில் திளைக்கின்றனர்.

ஆட்சியை 'பவர்'எனவும்
தந்திரமோ தெரியாது!
பவர்' உள்ளவர்கள்
தவறாய் உபயோகிப்பதால்
'கரண்ட்'டெனும் மின்சாரமின்றி
ஷாக்'அடிக்கிறது,

மின்சாரம் இல்லாமலே
மின் கட்டனம்
அதிகம் கட்டணும்
என தலைவிதி!

அரசு இயந்திரத்தில்
நசுங்கும் நம் வாழ்கை!

"மடி"யும் படி
"பாழ்" படுத்தியிருக்கு
பொல்லாத அரசியல்!

நல்ல மருத்துவர் அருகி!
போலி மருத்துவர் பெருகி'
வாழ்கை சுருங்கிவிட்டது!
ஒழுங்கீன நோய் பரவிவிட்டது!

லஞ்சம் பதவி(சுகம்) பஞ்சும்
பற்றி கொண்டுதான் இருக்கும்!
சுற்றத்தை மற்றும் சுற்றும்,
பற்றும் நெருப்பு!

-இது கிரவ்னு எழுதியதே...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு