Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2014 | , , , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் !

அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (கடற்கரைத் தெரு), இஸ்லாமிய பயிற்சி மையம் (பிலால் நகர்), ஏ.எல்.எம்.மெட்ரிகுலேஷன் பள்ளி (சி.எம்.பி.லேன்).

இணைந்து வழங்கும், குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் !

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014

மே மாதம் 3 முதல் 15 வரை (வெள்ளிக் கிழமை தவிர)

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளாக...

தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியர் & குடும்பத் தலைவியருக்குத் தனியாகவும் வரப் போக வாகன வசதி (இலவசமாக)!

மின்வெட்டின் பாதிப்பின்றி பயிற்சி முகாம்களில் ஜெனெரேட்டர் வசதி!

அகலத்திரை - ப்ராஜக்டரில் பாடங்கள் !

போட்டிகளில் பங்கு கொண்டு வெல்லும் மாணவ-மாணவியருக்குப் பரிசுகள் !

பதிவுக்கு முந்துங்கள் ! 

விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் (PDF-File) செய்து கொள்ள இங்கே சொடுக்கவும் [Download], மேலும் டிஜிடல் விண்ணப்ப படிவத்திலேயே டைப் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

இன்முகத்துடன் வரவேற்கிறது !

  அதிரைதாருத் தவ்ஹீத்  


12 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

கள்ள உறவுகளை களைவது எப்படி ? என்ற தலைப்பு அதிர்ச்சியாக உள்ளது.

புகைப் பழக்கத்தை விடுவது எப்படி? மதுவிலிருந்து விடுதலையாவது எப்படி? என்று நாம் சொல்லும் போது,அதை விட்டு விட எண்ணுபவர்கள் ஒன்று புகைப் பழக்கம் அல்லது மதுப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதே போன்று தான் மேற்கண்ட தலைப்பும் இருக்கிறது.கள்ள உறவை கொண்டவர்கள் - இங்கு வந்தால்,அதை எப்படி விடுவது என்று சொல்லித் தருகிறோம் என்ற பாணியில் தலைப்பு அமைந்துள்ளது.

அதற்கு பதிலாக,விபசாரம் அருகில் நெருங்காமல் இருக்க என்ன வழி?

கள்ள உறவால்,சீரழியும் மக்களும்,அதற்கு பரிசாய் கிடைக்கப் போகும் நரகமும்,

குடும்பம் சீர்பட,சுவர்க்கம் பெற்றிட,

அந்தோ,கெட்ட செயலால்,மானமும் போனது,சொர்க்கமும் போனது

இப்படி சிந்தித்தால் எத்தனையோ நல்ல தலைப்புகள் கிடைக்கும்.

ஆனால்,மேற்கண்ட தலைப்பால்,அந்த நிகழ்ச்சிக்கு வரும் ஆணையும்,பெண்ணையும் பழிப்பது போலவும்,அந்த கெட்ட செயலை செய்பவர்கள் தான் அந்த கூட்டத்துக்கு வருபவர்கள் போன்று உள்ளது.வாசகத்தை திருத்தி அதிரை தாருத் தவ்ஹீத் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

adiraimansoor said...

மச்சான் பலபேரிடம் கருத்து கேட்டுதான் இந்த பிரசுரமே வெளியிட்டு இருக்கின்றார்கள்

நீங்க ஏன் மச்சான் இப்படி யோசிக்கின்றீர்கள் இதில் எல்லோரையும் ஏன் சம்பந்த படுத்துகின்றீர்கள்.
இது யார் யாருக்கு கள்ள தொடர்பு இருக்கோ அவர்ளை குறிவைத்து தீட்டப்பட்ட திட்டம் என்று எடுத்துக்கொள்ளலாமே

மது பழக்கம் புகை பழக்கம் எல்லொரிடமும் இல்லை
மது பழக்கத்தை குடி பழக்கத்தை விடுவது எப்படி என்று தலைப்பு அறிவித்தால்
அதை கேட்கவருபவர்கள் எல்லோரிடமு அந்த பழக்கம் இருப்பதாக இருப்பதாக கருத்து கொள்ள கூடாது அது போன்றுதான் இதுவும் இருக்கின்றது

ஆனபாடியால் ரொம்ப அழுத்தமாக யோசித்தால் இப்படியெல்லாம் வரும் மச்சான்
நீங்கள் சொல்வது போன்று வார்த்தைகளை மாத்தி போட்டு இருக்கலாம்
ஆனால் நீங்கள் யோசித்தபடி வேறு யாருக்கும் அப்படி ஒரு சிந்தனை வரவில்லை

மேலும் பிரசுரம் வெளியாகிவிட்டது இனி அதை மாற்ற முடியாது

ஆனபடியால் மச்சான்
மாத்தி யோசிப்போம்

adiraimansoor said...

அடுத்தவர்களின் கள்ள உறவை களைவது
எப்படி என்று தலைப்பு கொடுத்திருந்தால் மசானுக்கு
இப்படி கருத்துக்கொள்ள இடம் இருந்திருக்காது

adiraimansoor said...

அடுத்தவர்களின் கள்ள உறவை களைவது
எப்படி என்று தலைப்பு கொடுத்திருந்தால் மசானுக்கு
இப்படி கருத்துக்கொள்ள இடம் இருந்திருக்காது

adiraimansoor said...

மச்சான் அதையெல்லாம் விடுங்க எத்தனையோ தலைப்பு இருக்கு யாரும் இருந்தா கோடைகால பயிற்சிக்கு அனுப்ப சொல்லுங்க

அது நடப்பதே 12 நாட்கள்தான்
மற்றவர்களுக்கும் சொல்லுங்கோ

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்.

நல்லது சின்னதோ பெரிதோ அதை ஊக்கப்படுத்தியும்,அதை மற்றவர்களுக்கு எத்தி வைப்பதும்,தவறு சின்னதோ பெரிதோ அதை கண்டித்தும்,இடித்துக் கூறியும் நடந்து கொள்வது தான் இஸ்லாம் காட்டிய வழி.

ஒரு சொல் வாழவும் வைக்கும்,வீழவும் வைக்கும்.எத்தனையோ நல்ல காரியங்கள் செய்யும் ஒரு இயக்கம் இந்த ஒரு வார்த்தை பிரயோகத்தால் முகம் சுளிக்க வைக்கிறார்கள்.அதை திருத்தி வெளியிடுவதுதான் சிறப்பு.அந்த இயக்கத்தின் தலைவர்,செயலர்,அங்கத்தினர் எதுவும் எண்ணுவார்களே என்று நான் பார்க்கவில்லை.அது தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம்,இதை எடுத்து சொல்வது நாம் கடமை.அந்த வகையில் சொல்லப்பட்டதே.எத்தனை நோட்டீஸ்,bill board செய்திருந்தாலும் அதை திருத்துவது தான் சரி.இல்லை என்றால்,இந்த வார்த்தைப் பிரயோகம் கண்டிப்பாக தவறுதான்.

நான் குடிக்கவில்லை,நான் புகைப்பதில்லை,நான் பெண் பித்தன் இல்லை என்பதற்காக இதை எதிர்க்கவில்லை.எந்த முஸ்லிமையும் வார்த்தையாலும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்தக் கண்டனம்.அதுவும் ஏகத்துவம் எடுத்து சொல்லும் இந்த அமைப்பு இப்படி செய்வது கூடாது.நான் நேசிக்கிற

தாருத் தவ்ஹீத் என்பதால் கூடுதல் கரிசனம்.நான் நேசிக்கிற தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,jaqh இன்னும் எந்த த்வ்ஹீத் அமைப்பானாலும்,தவறைக் கண்டிப்பேன்,அவைகளை நேசிப்பதால்.

மச்சான் உங்கள் கருத்து அனைத்தும் தவறு.மன்னிக்கவும்.

Unknown said...

'களைவது' என்பதற்கு 'நீக்குவது' என்பதுதான் பொருள். இந்த அடிப்படையில், ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்? ஏதாவது ஒன்றில் தப்புக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற பிடிவாதமா? Think positively, my dear.

இப்னு அப்துல் ரஜாக் said...

//'களைவது' என்பதற்கு 'நீக்குவது' என்பதுதான் பொருள். இந்த அடிப்படையில், ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்? ஏதாவது ஒன்றில் தப்புக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற பிடிவாதமா? Think positively, my dear. //

அப்படி என்றால்,கள்ள உறவுகளை நீக்குவது எப்படி ?என்று போட சொல்கிறீர்கள்.மச்சான்.வேறு பெயர்கள் ஆனால் அர்த்தம் ஓண்டுதானே.
தப்புக் கண்டு பிடிப்பது எப்போதும் என் நோக்கமல்ல.சரியானத்தைப் பாராட்டி,தவறை சுட்டிக் காட்டி திருத்துவதுதான் ஒரு முஸ்லிம் பண்பு,அதையே செய்கிறேன்.அல்லாஹ்வுக்காக.தவறு என்றால் அதை திருத்திக் கொள்வதும் முஸ்லிம் பண்பு.
அந்த தலைப்பை பார்க்கும் பலர் கட்டாயம் துணுக்குறவே செய்வார்.முஸ்லிம்களை கண்ணியபடுத்துவோம்.
மச்சான்.பிளீஸ் வீண் பிடிவாதம் வேண்டாமே.
ok,my dear machan.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் இப்னு அப்துல் ரஜாக்,

இன்று நம் சமுதாயத்து பெண்களை வேண்டுமென்றே தவறான வழிகளில் இழுத்துச் சொல்ல (கள்ள உறவுக்கு) பல சதி திட்டங்கள் சூழ்ச்சிகள் ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெருகிறது. கள்ளத் தொடர்புகள் சைத்தான்களால் தினிக்கபடுகிறது, இது நம் சமூதாய பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சவால். நம் பெண்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து, சைத்தான்களால் கள்ளத்தொடர்புக்காக செய்யப்படும் சூழ்ச்சிகள், நம்மீது தினிக்கப்படும் சவால்களை எவ்வகையில் சமாளிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவே இந்த தலைப்பு. இப்படித் தான் நான் பார்க்கிறேன்.

நீங்கள் குறிப்பிடுபவை உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலாம். நான் அறிந்த வரை இந்த தலைப்பு போடுவதற்கு முன்பு பலரின் ஆலோசனைகள் கேட்ட பிறகே அதிரை தாருத் தவ்ஹீத் பதிந்துள்ளார்கள்.

உதாரணங்களை காட்டி விளக்குவதாக இருந்தால், எதையும் எப்படியும் முடிச்சுப்போட முடியும். நீங்கள் குறிப்பிடும் வாசகம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறு என்று சுட்டிக்காட்டுங்கள், அது தான் சரியான அனுகுமுறை. உங்கள் அறிவுக்கு தவறு என்பதற்காக, சம்பந்தமில்லாத பல உதாரணங்களை வைத்து தவறான அர்த்தத்தை கொடுப்பதை தவிர்ப்பதே கண்ணியமானதாகும்.

பகுதறிவு ரீதியாக, குர்ஆனுக்கு முரண் என்று ஷஹீஹான ஹதீஸ்களை தட்ட சம்பந்தமில்லாத உதாரணங்களை எடுத்துக்காட்டி சொல்லப்படும் விளங்கங்களின் பின்னால் சென்று ஒரு கூட்டம் வழிகேட்டுக்கு போய் கொண்டிருக்கிறது. அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

இது போன்ற கோடைகால விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, இதில் பலரின் தன்னிகரில்லா உழைப்பும், பொருளாதாரமும் செலவிடப்படுகிறது. நல்லெண்ணம் கொள்வோம், இது போன்ற மார்க்க பயிற்சி வகுப்புகளை ஊக்கப்படுத்துவோம். சமுக நண்ணொக்கில் இதை நடத்துபவர்களுக்காக து ஆ செய்வோம்.

இது என் மனதில் பட்டது. அல்லாஹு அஃலம்..

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ தாஜுதீன்

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் சொல்லும் எல்லா கருத்தும் சரியே.நான் அதை குறை கூறவில்லை,அதற்கு எனக்கு உரிமையும் கிடையாது.என்னுடைய ஒரே ஆதங்கம் இதுதான்,"அழகான,நாகரீகமான் தலைப்புக்கள் மூலம் ஆண் பெண்களை அழைத்து,கள்ள உறவின் சீர்கேட்டை விளக்குவது சரியா? அல்லது ஆண்களையும்,பெண்களையும் காயப்படுத்தும் வாசகங்கள் கொண்டு அழைப்பது சிறந்ததா?அந்த வாசகம் சரிதான்,

அதுதான் சரி என்றால்,செய்து கொள்ளுங்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//'களைவது' என்பதற்கு 'நீக்குவது' என்பதுதான் பொருள். இந்த அடிப்படையில், ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்? ஏதாவது ஒன்றில் தப்புக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற பிடிவாதமா? Think positively, my dear. //

//அப்படி என்றால்,கள்ள உறவுகளை நீக்குவது எப்படி ?என்று போட சொல்கிறீர்கள்.மச்சான்.வேறு பெயர்கள் ஆனால் அர்த்தம் ஓண்டுதானே.
தப்புக் கண்டு பிடிப்பது எப்போதும் என் நோக்கமல்ல.சரியானத்தைப் பாராட்டி,தவறை சுட்டிக் காட்டி திருத்துவதுதான் ஒரு முஸ்லிம் பண்பு,அதையே செய்கிறேன்.அல்லாஹ்வுக்காக.தவறு என்றால் அதை திருத்திக் கொள்வதும் முஸ்லிம் பண்பு.
அந்த தலைப்பை பார்க்கும் பலர் கட்டாயம் துணுக்குறவே செய்வார்.முஸ்லிம்களை கண்ணியபடுத்துவோம்.
மச்சான்.பிளீஸ் வீண் பிடிவாதம் வேண்டாமே.
ok,my dear machan.
//
சாரி சாச்சா,உங்கள் பெயரை கவனிக்கவில்லை.

Unknown said...

உங்கள் இறுதி வரியில் என்னைச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.