Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 40 16

அதிரைநிருபர் பதிப்பகம் | June 09, 2014 | ,


கண்களை பாது காப்போம் ’வருமுன் காப்போம்’ இதற்கு  அடிப்படையா என்ன செய்ய வேண்டும் என்பதை கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டால் கண்களில் ஏற்படும் என்னிலடங்கா பிரட்சனைகளை தவிர்க்கலாம்.

இதற்கு உணவு வகைகளில் மிக முக்கிய கவணம் செலுத்த வேண்டும் கீரை, பழ வகைகள் சத்தாண உணவுகள் சாப்பிடணும். டயபடிக் பேஷண்ட்கள் சில பழ வகைகள் சாப்பிட கூடாது. அவங்களுக்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை சாப்பிடணும். கண்களுக்கு மேக்சிமம் ரெஸ்ட் கொடுக்கணும். தகவல் தொடர்பு சாதனங்களின் அபார வளர்ச்சியினாலும்  பார்க்கும் வேலைகள் அணைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டதாலும் எப்பொழுதுமே தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்கும் நில இருப்பதால் கண்களுக்கு ஓய்வு அவசியம் நல்ல தூக்கமும் அவசியம் என்பதை புரிந்து பனியாற்றினால் இந்த டிஜிட்டலின் சவாலிலிருந்து நமது கண்களில் ஏற்படும் பிரட்சனைகளை வருமுன் காக்கலாம்.

சூரிய ஒளியில் போகும்போது குவாலிட்டி தரமான கண்ணாடி அணிய வேண்டும். பேக்டரி இண்டஸ்ட்ரிகளில் ப்ரொடக்டிவ் பேக்டரி கண்ணாடி அணியணும்.

பிபி கொலஸ்ட்ரால். கிட்னி பிரச்சினை இருக்கிறவங்க முன்னெச்சரிக்கையா கண்களைப் பாதுகாக்கணும்.

எந்த பிரச்சினையா இருந்தாலும் ஒரு நாள் இரண்டு நாள் இருக்கலாம். ஆனால் ஐந்து நாட்களுக்கு மேல் வைத்து வியாதி அதிகமான பிறகு மருத்துவரிடம் போகக்கூடாது. இது தவறான விஷயம். கண் நன்றாக சிவந்து போவது, கண்ணில் வலி சாதாரணவலியாய் இல்லாமல் பொறுக்க  முடியாத அளவில் பயங்கர வலியாய் இருப்பது இப்படி இருந்தால் உடனே மருத்துவரைப் போய்ப் பார்க்கணும்.

நேத்து பார்த்த பார்வை இன்னிக்கு காலையில் எழுந்திருக்கும்போது இல்லை என்றால் ஒரு சடன் லாஸ் ஆப் விஷன் என்றால் உடனே மருத்துவரை சந்திக்கணும். 

நீங்க பார்க்கும்போது உங்க பார்வையில் கண்ணுக்கு முன்னாடி கறுப்பா பறப்பது போலிருக்கும். ப்ளோடஸ். கண்ணுக்கு ஓரத்தில் ஒரு ஒளி போல் இருக்கும். இதெல்லாம் எமர்ஜன்ஸி கேஸஸ். விழித்திரையில் பிரச்சினைகள் இருக்கலாம். இதெல்லாம் பேசிக்.

கண்ணின் அருமை தெரியாமல் சிலபேர் மெட்ராஸ் ஐ வந்ததும் கடையில் ஒரு ட்யூப் வாங்கி மருந்து போட்டுக்கொள்வது உண்டு இது ரொம்ப தவறு. 44 வருடங்களுக்கு முன் 1947ல் மெட்ராஸ் ஐன்னு ஆரம்பித்தது, இப்போ தஞ்சாவூர் திருச்சி கோயமுத்தூர், மதுரை, வடநாட்டில் டில்லி, மும்பை ஐ ஆயிடுச்சு. இதை பொறுத்தவரையில் வைரல் இன்பெக்ஷன், பேக்டீரியல் இன்பெக்ஷனால் வருது. இது சிவியர் இன்பெக்ஷன். மெட்ராஸில் இதை கண்டுபிடிச்சதால மெட்ராஸ் ஐன்னு பெயர் வந்தது. உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கணும். டிராப்ஸ் போட்டபின்பு கூட ஐந்தாவது நாளுக்குப் பிறகு ரத்தக் கசிவோடு வர்றவங்க இருக்கிறாங்க. இதனால் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுக்க வருவது நல்லது. செல்ப் மெடிகேஷன் எந்த வியாதிக்கும் நல்லது கிடையாது இந்த வியாதி உட்பட. 

கம்ப்யூட்டர் ஐடியில் இருக்கிறவங்க மட்டுமில்லாமல் எந்த பீல்ட் இருக்கிறவங்களும் கம்ப்யூட்டர் உபயோகிக்க வேண்டிய கட்டாயம். அவங்க கண்களைப் பாதுகாக்க பேசிக்கா என்ன பண்ணனும் ? இதை பற்றி ஏற்கனவே விளாவாரியாக பார்த்திருந்தாலும் கண்கள் இரண்டும் தொடர் அடுத்த தொடருடன் முடிவுக்கு வரும் தருவாயில் மீண்டும் சில முக்கியமான விசயங்களை சுருக்கமாக தருவது உபயோகமாகும் என நினைக்கின்றேன்

கம்ப்யூட்டர் மானிடர் எல்சிடியா இருக்கலாம் இல்லைன்னா எல்இடியா இருக்கலாம் பழைய மானிடரா இருக்கலாம். ஆனா கண்ணுக்கும் மானிடருக்கும் இடையேயான இடைவெளி 25 இஞ்ச் இருக்கணும்.  மானிடர் 15 டிகிரி இன்க்லைண்ட் பொசிஷனில் இருக்கணும். கண்ணு மேல இருக்கணும் மானிடர் கீழே இருக்கணும். இது அடிப்படை.

கண்களுக்கு யாரா இருந்தாலும் காலையிலிருந்து இரவு வரை உபயோகிக்க வேண்டிய சூழல் இருக்கு. எந்தத் துறையானாலும் 8 மணிநேரம் என்று இல்லாமல் 15 மணி நேரம் உபயோகிக்க வேண்டியது இருக்கிறது. அதனால் 20 நிமிஷத்திலிருந்து 30 நிமிஷம் வரைக்கும் தொடர்ந்து உபயோகித்தால் ஒரு நிமிஷம் ஓய்வெடுத்து மானிடரைப் பார்க்காமல் திரும்பி வேறு எங்காவது தூரமாய்ப் பார்த்தால் கண்களுக்கு ஓய்வு கண்டிப்பா கிடைக்கும். அதுதவிர நாமே கண்களை பத்திலிருந்து 15 முறை சிமிட்டணும். சிமிட்டும்போதே கண்ணீர் உலர்ந்த கண்களை ஈரப்படுத்தும். இதை செய்துகொண்டே இருந்தால் சரியான ஓய்வு கிடைக்கும். அளவுக்கு மீறி உபயோகித்தால் கண்கள் பாதிக்கதான் செய்யும். பொதுவாக எந்த வேலையில் குறிப்பாக பார்வையை செலுத்தினாலும்  இதுதான் நியதி.

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மிஷின் எம்ப்ராய்டரி, கைத்தையல்

மிஷின் எம்ப்ராய்டரி, கைத்தையல், இவற்றால் கண் அதிகமாக பாதிக்கிறதா? பொதுவாக நம்ம வீட்டில் பெண்கள் சமையல் மற்ற வேலைகள் தவிர மீதி நேரங்களை எக்ஸ்ட்ராவாக எடுத்து அந்த நேரங்களில் சின்ன எண்டெர்டெயிண்மெண்ட்டாக கைவேலை, தையல், இவை செய்யும் போது ஒரே இடத்தில் கான்சண்ட்ரேஷன் செய்வதால், கண்களுக்கு தொந்தரவு இருக்கலாம். ஆனா பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஒரே இடத்தில் பார்க்கும்போது கண் சிமிட்டாது. கண் சிமிட்டாததால் கண்ணில் நீர் பரவாது. உன்னிப்பாக வேலை செய்யும்போது, கண்களுக்கு கிட்டக்க வெச்சுக்காம கொஞ்சம் தூரத்தில் வைத்து பண்ணறது நல்லது.

தொடர்ந்து மணிக்கணக்காக செய்யாமல், விட்டு விட்டு கேப் கொடுத்து பண்ணறது நல்லது. கண்ணுக்கு எந்த வேலை கொடுத்தாலும் அதிக நேரம் இல்லமல் குறைந்த நேரம் செய்வது நல்லது. எம்ப்ராய்டரி பண்ணும்போது 40 வயசுக்கு கீழே இருக்கிறவங்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. 40 வயதுக்கு மேல் இருக்கிறவங்களுக்கு சாளேஸ்வரம், வெள்ளெழுத்துன்னு சொல்கிறோமில்லையா அது வந்துவிடுவதால், கண்ணாடி போட்டால்தான் ஊசியில் நூல் கோர்க்க முடியும். க்ளாரிட்டியும் நல்லா இருக்கும். 

சுய மருத்துவம்

கண்களில் அடிபட்டாலோ அல்லது ஏதாவது தொற்றுக் கிருமிகளால் கண்கள் சிவந்து போனாலோ,  மருந்துக்கடையில் "கண் சொட்டு மருந்து கொடுங்கள்" என்று ஏதாவது மருந்தினைப் போடுவது கண்களுக்கு ஆபத்து. குறிப்பாக மழைக்காலங்களில் பொதுவாக "ஹலோ" சொல்லும் "மெட்ராஸ் ஐ"க்கு இப்படி மருந்துக்கடையில் சொட்டு மருந்து கேட்டு வாங்கிப்போடுவதும் ஆபத்து.

கண்ணுக்கு முன்னால் மின்மினிப்பூச்சி பறக்கிறதா?

கண்களில் பொதுவாக நான்கு விதமான நோய்கள் வருகின்றன.

டயாபெடிக் ரெடினோபதி (Diabetic Retinopathy - DR): சர்க்கரை நோய் விழித்திரையைப் பாதிக்கும்போது அதை 'டயாபெடிக் ரெடினோபதி’ என்று குறிப்பிடுகிறார்கள். இதனால், கண்ணில் உள்ள முக்கியமான ஆப்டிக் நரம்பு பாதிப்பதோடு புரை ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும். கண் தசைகளும் பாதிக்கப்பட்டு கண்களை அசைக்கக்கூட முடியாமல் போகும். இந்தப் பிரச்னை வருவதற்தான எந்தவித முன்அறிகுறியும் வெளியே தெரியாது. பரிசோதனையின்போதுதான் பாதிப்பு தெரியவரும். எனவே, 10 முதல் 15 வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை டயாபெடிக் ரெடினோபதி பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

க்ளகோமா (Glaucoma): உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கிட்டப்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் க்ளகோமா பாதிப்பு ஏற்படலாம். பார்வையில் மாற்றம் தெரிவதற்கு முன்பே, கண்ணின் முக்கிய நரம்பில் 30 முதல் 50 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். அடிக்கடி மூக்குக் கண்ணாடியின் பவர் மாறுவது, கண் வலியுடன் தலைவலியும் ஒரே நேரத்தில் வருவது, எரிந்துகொண்டு இருக்கும் விளக்கினைப் பார்த்தால், அதைச் சுற்றிப் பல வண்ண வட்டங்கள் அல்லது புள்ளிகள் தெரிவது ஆகியவையே இதன் அறிகுறிகள். சிலருக்கு இந்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாது. கண்ணில் ஏற்படும் காயம், ஸ்டீராய்டு வகை மருந்துகள் பயன்படுத்துவது போன்றவையும் க்ளகோமா பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஏற்பட்டுவிட்ட பாதிப்பை சிகிச்சையின் மூலம் சரிசெய்துவிட முடியாது. பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்குத்தான் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. அதனால், பாதிப்பு கொஞ்சமாக இருக்கும்போதே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

புரை (Cataract): பார்வை பறிபோவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானக் காரணம், கண் புரை (காட்ராக்ட்) நோய். கண்ணில் ஏற்படும் சதை - தோல் வளர்ச்சிதான் 'கண் புரை’ என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு. கண்ணில் இருக்கிற லென்ஸ் கண்ணாடிபோல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒளி ஊடுருவ முடியும். அந்த கண்ணாடி போன்ற லென்ஸ் மெள்ள மெள்ளத் தெளிவு குறைந்து வெள்ளை அல்லது பழுப்பு நிறமாக மாறிவிடுவதுதான் கண்புரை நோய். இப்படி நிறம் மாறிய லென்ஸின் வழியாக விழித்திரையில் பதியும் உருவம் தெளிவில்லாமல் இருக்கும். முதுமையில் தலை முடி நரை ஏற்படுவதுபோல் லென்ஸில் நிறமாற்றம் ஏற்படுகிறது. வைட்டமின் மற்றும் புரதச் சத்து குறையும்போதும், சர்க்கரை நோய், தொற்று நோய் ஆகியவற்றாலும் கண்புரை ஏற்படலாம்.  கண்புரை அறுவைசிகிச்சை என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. இரண்டு மணி நேரத்துக்குள்  அறுவைசிகிச்சை செய்துகொண்டு நோயாளிகள் வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.

மாகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration - MD): 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் பார்வையை இழப்பதற்கு முக்கியமான காரணம் மாகுலர் டீஜெனரேஷன். வயதாவதுதான் இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணம். நோயாளிகளுக்குக் கண் பார்வை குறைவதைத் தவிர வேறு எந்த அறிகுறியும் தெரியாது. படிப்பது, கார் ஓட்டுவது, டி.வி. பார்ப்பது, எதிரில் இருப்பவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது ஆகியவை எல்லாமே கடினமாக இருக்கும். இந்த நோய் ஏன் சிலருக்கு வருகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் பாதிப்பை லேசர் சிகிச்சை மற்றும் லோ விஷன் எய்ட்ஸ் சிகிச்சைகள் செய்து குணப்படுத்தலாம்.

தினசரி உணவில் மாவுச் சத்து, காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொண்டாலே, ஓரளவு இந்தப் பாதிப்பைத் தடுத்துவிடலாம்.

தெளிவு இல்லாத பார்வை, கண் உறுத்தல், அருகில் - தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம், ஒரு உருவம் இரண்டு உருவமாகத் தெளிவின்றித் தெரிதல், காரணமே இல்லாமல் கண்ணீர் வடிவது, கண் புருவத்தில் வலி, வலது கண்ணுக்கும் இடது கண்ணுக்கும் இடையே பார்வை வித்தியாசம், கண்கள் அடிக்கடி சிவந்துபோதல், மின்மினிப் பூச்சி பறப்பதுபோன்ற பிரமை, அதிகப்படியான கண் கூச்சம், மாறு கண், கண் பாப்பாவில்(Pupil) வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் தோன்றுதல் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாகக் கண் மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்!

என்ன என்ன வார்த்தைகளோ
சின்னவிழிப் பார்வையினை
எழுதி எழுதி முடித்துவிட்டேன்- அனைவருக்கும் எழுதியதன் நிஜம் புரிந்திருக்கும் என்ற நிறையுடன் இந்த தொடருக்கு திரையிடுகின்றேன். கண்கள் இரண்டும் 40 தொடர் வரை பொறுமையாக படித்து பயன் பெற்றவர்களுக்கும் பயன் பெறாதவர்களுக்கும் பின்னூட்ட மிட்டவர்களுக்கும் பின்னூட்டமிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் இப்படி ஒரு தொடரை எழுத ஊக்குவித்த அனைவர்களுக்கும் மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் 

இறைவா !

என் சிந்தனைக்கு நீ காட்சியளிக்க வைத்ததை மற்றவர்களுக்கு என்னால் முடிந்த அளவு பகிர்ந்துவிட்டேன், அதில் தவறுகள் ஏதும் நான் செய்து இருந்தால் 
என்னை மன்னித்து அருள் புரிவாயாக

எங்கள் கண்களில் நேரான பார்வைகளை தந்தருள்வாயாக

பக்குவமான பார்வையே எங்கள் கண்களில் தோன்ற வேண்டும்.

நாங்கள் பார்க்க கூடாதவற்றை எங்கள் கண்களை விட்டும் மறைத்து விடுவாயாக !

தவறான காட்சிகள் எங்கள் கண்முன்னே தோன்றும்போது அதை நாங்கள் பார்க்காமல் எங்களை பாது காத்துவிடு !

எங்கள் பார்வையில் மதுரமான பார்வையே மலர வேண்டும் !

யாரையும் வஞ்சிக்கும் பார்வையை எங்களுக்கு தந்துவிடாதே எங்கள் பார்வைகளில் சிந்தனைகளின் ஒளி வீச வேண்டும் !

இறைவா எங்கள் பார்வையின் அசைவுகளை சீராக்கி !
எங்கள் என்னங்களின் அசைவுகளை உன் பக்கம் ஓர்மைபடுத்தி !
எங்களை நேரான பாதையில் நடத்துவாயாக !

என்ற துஆவுடன் இந்த பதிவுக்கு திரையிடுகின்றேன்.

ஜஸாக்கல்லாஹ் கைரன்.

அதிரை மன்சூர்

16 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

40 தொடர் எழுதுவது சாதாரண விசயம் இல்லை. இவ்வளவு விசயத்தையும் எழுதியதில் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான முயற்சி முழுமையாக தெரிந்தது. அதே சமயம் ஒரு நல்ல ஆப்தால்மாலஜிஸ்ட் அதிராம்பட்டினத்திற்கு கிடைக்காமல் போயிருக்கிறது. [ மன்சூர் படிக்கும் காலத்தை ரிவைன்ட் செய்து பார்த்தால் ஏன் என்று தெரியலாம் ]

இன்னொரு விசயம் ...இது வழக்கம்போல் உள்ள விசயம், நம்மை சார்ந்தவன் ஒருவன் இப்படி எழுதினால் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இதுவரை நம்மிடம் இல்லை.


Ebrahim Ansari said...

//அதனால் 20 நிமிஷத்திலிருந்து 30 நிமிஷம் வரைக்கும் தொடர்ந்து உபயோகித்தால் ஒரு நிமிஷம் ஓய்வெடுத்து மானிடரைப் பார்க்காமல் திரும்பி வேறு எங்காவது தூரமாய்ப் பார்த்தால் கண்களுக்கு ஓய்வு கண்டிப்பா கிடைக்கும். அதுதவிர நாமே கண்களை பத்திலிருந்து 15 முறை சிமிட்டணும். சிமிட்டும்போதே கண்ணீர் உலர்ந்த கண்களை ஈரப்படுத்தும். இதை செய்துகொண்டே இருந்தால் சரியான ஓய்வு கிடைக்கும். அளவுக்கு மீறி உபயோகித்தால் கண்கள் பாதிக்கதான் செய்யும். பொதுவாக எந்த வேலையில் குறிப்பாக பார்வையை செலுத்தினாலும் இதுதான் நியதி.//

அன்புத் தம்பி அதிரை மன்சூர் அவர்களுக்கு,

இவ்வளவு சிறந்த பதிவை படிக்கும்போது மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் மேலே குறிப்பிடும் ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற இயலவில்லை. வைத்த கண் வாங்காமல் கண் சிமிட்டாமல் படிக்கவே தூண்டுகிறது இதன் கருத்தாழம் மற்றும் எழுத்தின் ஆளுமை.

இந்தத் தொடர் நிறைவுறுவது ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும் மீண்டும் இத்தகைய ஒரு தொடரைத் தருவீர்கள் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்.

கண்கள் பற்றிய தொடராக ஆரம்பித்து பலவித செய்திகளை இந்தத் தொடர் அலசிவிட்டது.

புகழ்கின்ற வார்த்தைகளுக்காக் சொல்லவில்லை இந்தத்தொடரைப் படிக்கும் யாருமே ஒரு எழுத்தாளர் முதன்முதலில் எழுதி இருக்கிறார் என்று எண்ண மாட்டார்கள்.

மீண்டும் மீண்டும் மிகுந்த பாராட்டுக்கள்.

அடுத்த தலைப்பு என்ன என்ற ஆவலுடன் இருக்கிறோம்.

Ebrahim Ansari said...

// நம்மை சார்ந்தவன் ஒருவன் இப்படி எழுதினால் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இதுவரை நம்மிடம் இல்லை//

தம்பி ஜாகிரின் சரவெடி காலையிலேயே வெடித்திருக்கிறது. என்ன செய்வது?

பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். . குற்றம் கண்டு பிடித்தேப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் .

இப்னு அப்துல் ரஜாக் said...

புகழ்கின்ற வார்த்தைகளுக்காக் சொல்லவில்லை இந்தத்தொடரைப் படிக்கும் யாருமே ஒரு எழுத்தாளர் முதன்முதலில் எழுதி இருக்கிறார் என்று எண்ண மாட்டார்கள்.

மீண்டும் மீண்டும் மிகுந்த பாராட்டுக்கள்.

அடுத்த தலைப்பு என்ன என்ற ஆவலுடன் இருக்கிறோம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

Machan you should write about ENT also.The general public wants to know more from you.In your article we came to know that very very useful information about important organ.As well as there was a humor,nice quotes,Quran and Sunna guidance,touching poems,explanation etc...

As I was a student of haji Mohamed sir, I say this like him,

Machan, you pass.

Take care.

Iqbal M. Salih said...

சிறுபிராயத்திலேயே மிஸ்வாக்குகள்...புத்தகங்கள் பரிச்சயத்துடன் தனது 'தாஜ் புக் டெப்போ' வில் இருந்து தொடங்கி, தன் கடின உழைப்பால் கரைகண்டவன் இப்போது ஒரு புத்தகம் எழுதிமுடித்திருக்கிறான் என்பது மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான்...மாஷா அல்லாஹ்!
அதைவிட மகிழ்ச்சி, அதைப் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தத் தொடர் பொருந்திப் போவதும் பயனுள்ளதாக இருப்பதும்தான்!

எழுத்தாளரின் இந்த அரிய பணியை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் ஜல்லஷானஹுத்தாலா, அவருக்கு அளப்பரிய நன்மைகளை அளிக்கப்போதுமானவன்!

sheikdawoodmohamedfarook said...

கண்கள் இரண்டும் நாற்ப்பது தொடரையும் நான் படித்தவனல்ல!அ.நி.க்கு இடையில் வந்து சேர்ந்தவன்.இதிலும் சிலவற்றை படிக்கவும் பலவற்றை படிக்கமுடியாமலும்போனதுகாரணம்கண்ணில் நீர்வந்தது.அதுஉணர்ச்சி யல்ல வியாதி! ஆனால்’’ இறைவா!’’என்று தொடங்கி ‘’எங்களை நேரான பார்வையில் நடத்துவாயாக’’ என்ற வரிகள்வரை படித்தபோது என் கண்ணில் நீர் சுறந்து இதயத்தை ஊற வைத்தது நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்.

அதிரை தேனருவி said...

// நீல நயனங்கள் பற்றியநீண்டகட்டுரைகள் //பலன் எதிர்பாராத பணிக்குபாராட்டுக்களும்நன்றியும்!

sabeer.abushahruk said...

மன்சூர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பார்வையில் மயங்குவது மனித இயல்பு; உன் எழுத்தின் கோர்வையால் மயக்கி விட்டாய். ஒரு மெகா தொடருக்கான முழுமை, விளக்கங்கள், ஆலோசனைகள், நிவர்த்திகள் என்று வார்த்தெடுத்ததுபோல் அமைந்து விட்டது இத்தொடர்.

கல் வெட்டுகளில்...அதுவும் கருங்கல் வெட்டுகளில் பதித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பல அம்சங்கள் இதில் உண்டு.

இந்த எழுத்தாளனை இனங்கண்ட அதிரை நிருபருக்கு நன்றியும் மன்சூருக்கு வாழ்த்துகளும்!

மாஷா அல்லாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், மன்சூர் காக்கா,

ஜஸக்கல்லாஹ் ஹைரா... நீங்கள் இது வரை 40 வாரங்கள் கண்கள் பற்றி அறியத்தந்த தகவல்கள் அனைத்தும், அருமையான தகவல் களஞ்சியம். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக..

யா அல்லாஹ்... எங்கள் கண்களில் நேரான பார்வைகளை தந்தருள்வாயாக

பக்குவமான பார்வையே எங்கள் கண்களில் தோன்ற வேண்டும்.

யா அல்லாஹ்... நாங்கள் பார்க்க கூடாதவற்றை எங்கள் கண்களை விட்டும் மறைத்து விடுவாயாக !

யா அல்லாஹ்.... தவறான காட்சிகள் எங்கள் கண்முன்னே தோன்றும்போது அதை நாங்கள் பார்க்காமல் எங்களை பாது காத்துவிடு !

எங்கள் பார்வையில் மதுரமான பார்வையே மலர வேண்டும் !

யாரையும் வஞ்சிக்கும் பார்வையை எங்களுக்கு தந்துவிடாதே எங்கள் பார்வைகளில் சிந்தனைகளின் ஒளி வீச வேண்டும் !

யா அல்லாஹ்... எங்கள் பார்வையின் அசைவுகளை சீராக்கி !
எங்கள் என்னங்களின் அசைவுகளை உன் பக்கம் ஓர்மைபடுத்தி !
எங்களை நேரான பாதையில் நடத்துவாயாக !

Anonymous said...

அதிரை சார்புடைய வலைத்தளங்களில் தனது கருத்தாடல்களில் களைகட்டிய சகோதரர் அதிரை மன்சூர் அவர்கள், அதிரைநிருபர் வலைத்தளத்திலும் தனது கருத்தாடலை வலுவாக எடுத்துரைத்து வந்த தருணங்களில் அவருடைய நண்பர்களான எங்கள் அன்பிற்குரிய சக பங்களிப்பாளர்களின் தூண்டுதலும் அவர்களின் ஆர்வமூட்டலும் இணைந்து புத்தம் புது தொடர் ஒன்றை எழுத வைத்தது.

திங்கள் கிழமை தோறும் பதிக்கப்பட்ட இந்த தொடருக்கு சகோதரர் அதிரை மன்சூர் அவர்கள் எவ்விதமான தொய்வின்றி முன் கூட்டியே பதிவுக்கான அத்தியாயங்களை அனுப்பித் தந்து அதனை உறுதியும் செய்து கொள்வார்.

ஆரம்ப காலங்களில் தூரிகை எடுத்த கை கொண்டு கண்கள் இரண்டும் என்ற ஞனரஞ்சகமான தொடரில் ஏராளமான விடயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயம் இந்த தொடர் பதிப்பு ஆவணப்படுத்தப்படும் இன்ஷா அல்லாஹ் !

இந்த தொடர் பதிக்கப்பட்ட நாட்களிலிருந்து தொடர்ந்து ஆதரவு அளித்து பால் பேதமின்றி கருத்தாடல்களிலும், தனி மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திகள் வாயிலாகவும், சமூக பிணைப்புத் தளங்களிலும், இன்னும் தனித்தூது தொடர்பிலும் பங்கெடுத்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் !

இன்னும் இடர்கள் இல்லாத தொடர்கள் உண்டோ என்று இந்த தொடருக்கு வெட்டி ஒட்டி என்றெல்லாம் விறுவிறுப்புக் கூட்டிய விமர்சகர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்

நெறியாளர்
www.adirainirubar.in
editor@adirainirubar.in

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
கம்பேணியில் தற்போது வேலை அதிகமாக இருப்பதல் லேட் நைட்டுதான் வீட்டுக்கே வருகின்றேன் கண்கள் இரண்டும் தொடரை ஊக்குவித்து அது நாற்ப்பது தொடரை எட்டும் அளவிற்கு ஊக்கமளித்த அதிரை நிருபர் வாசகர்களுக்கும் இடைக்கிடை பாராட்டுக்களும் நல்ல பின்னூட்டங்களும் இட்ட அதிரை வாச்கர்கலுக்கும் மற்றும் சக நன்பர்கலுக்கும் நன்றி ஜஸாக்கமுல்லாஹ் கைரன்
குறிப்பாக பின்னுட்டங்களின் வாயிலாக தொடரையே சளிப்புதட்டாமல் கொண்டு செல்ல இடைக்கிடை சிரிப்பூட்டும் வகையில் பின்னூடங்களை தந்த பாரூக் காக்கா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. இன்ஷா அல்லாஅஹ் எல்லோருக்கும் அல்லஹ் நல் அருள் புரிவானாக மீண்டும் கூடிய சீக்கிரம் இன்னும் ஒரு தொடருடன் எல்லோரையும் சந்திப்பேன்

adiraimansoor said...

கண்கள் இரன்டும் தொடரை திங்கள் தோரும் இடைவிடாது பதிந்து நல் வாழ்த்துக்களை வாங்கிதந்த அதிரை நிருபர் தள அங்கத்தினர்களுக்கும் அழகுற நெறிமுறை படுத்தி தந்த நெறியளாருக்கும் ஜஸாக்கல்லாஹ் கைரன்

Unknown said...

//திங்கள் கிழமை தோறும் பதிக்கப்பட்ட இந்த தொடருக்கு சகோதரர் அதிரை மன்சூர் அவர்கள் எவ்விதமான தொய்வின்றி முன் கூட்டியே பதிவுக்கான அத்தியாயங்களை அனுப்பித் தந்து அதனை உறுதியும் செய்து கொள்வார்.//

அப்படியானால் அவரை மன்சூர் என்றல்ல .

MAN SURE என்றே அழைக்க வேண்டும்.

அப்துல்மாலிக் said...

அருமையான பதிவு காக்கா, சில தொடர்களை படிக்க தவறவிட்டிருந்தாலும் நிறைய தெரிந்துக்கொண்டேன். அருமை.. வாழ்த்துக்கள்

இதற்கான பலன் மறுமையில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.