Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இறுதி மூச்சு...! - [காட்சிக் காணொளி தமிழில் எழுத்தோடை...] 5

அதிரைநிருபர் பதிப்பகம் | June 04, 2014 | , , , ,

சுவாசம் சுகமானால் சுற்றமே சொர்கமான உணர்வு கொள்ளும் அற்ப வாழ்வில் படைத்தவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க  மறந்த தருணங்களைச் சொல்லும் காட்சிக் காணொளி படைக்கும் உயிரோட்டமான கவிதை உரை அமைத்து இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.

மனதில் பதிக்கும் கவிதை வரியாக வழங்கவும் அதனை அப்படியே காட்சிகளுக்குள் நடைபோட எழுத்தோடையாக்கிட உதவிய சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

நன்மை நாடி, நலன் வேண்டி பகிர்ந்தளியுங்கள் அதற்கான கூலியை அல்லாஹ்விடமே வேண்டிப் பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ் !





இறுதி மூச்சு!

யா அல்லாஹ்...யா ரஹ்மானே!

பார்வை இருண்டுவிட்டிருக்க
அகக் கண்கள் 
இன்னும் விழித்திருக்க
என்னைச்
சுற்றியிருப்போரை உணர்கிறேன்

அவர்களின்
இழவு தோய்ந்த
மரண ஓலம்
மெளனச் சுவர்களை உடைத்துக்கொண்டு
அமைதியற்று ஆர்ப்பரிக்கும் 
அலைகடலென எனக்குக் கேட்கிறது;

என் 
இருப்பின் மீதான பிடிப்பை 
நழுவவிட்டுப் புலம்பும் அவர்களின்
காலடி ஓசை
மெல்ல மெல்ல விலகிக் கரைய
என் 
உயிர் பிரியும் தருணம்
அருகி வருவதை அறிகிறேன்

கூரான குளிர்க்காற்று
என் ஆத்மாவுக்குள் வியாபித்து
சிரம் முதல் - பாதங்களின்
விரல் வரை பயணிக்க
இறுதி மூச்சொன்று
என்
உதடுகள் பிரித்து வெளியாயிற்று

புறப்படும் தருணம் இது
நான் 
போயே தீர வேண்டும்

எனவே
இறப்பு,
எத்துணை சாசுவதம்!!!
(இதை 
இந்த விளிம்பில் உணர்வது கைசேதமே!)

ஏற்கனவே சொல்லப்பட்டதுதானே:
ஒவ்வொரு ஆத்மாவும்
அவற்றிற்கான
உடற்கூட்டைப் பிரிய
தேதி குறிக்கப்பட்டவையே;
அத்தேதியில்
நிலையான
மறுமையைச் சந்திக்கத்
தயாராகியே தீரவேண்டும்

குறித்து வைத்துக் கொள் சகோதரா
இந்நிலை
நாளையேகூட
உனக்கு நேரும், யாரறிவர்?

அந்த
நிலையான வாழ்வில்
நீ வேண்டுவது எவ்விடம்?
சொர்க்கச் சுகமா நரக நெருப்பா?
இப்போதே தீர்மாணித்துக் கொள்;
அது
சட்டென நிகழ்ந்து விடலாம், தாமதிக்காதே,
தீர்மாணித்துவிடு!

வாருங்கள் சகோதரர்களே
வல்லவனைப் புகழ்ந்து
வணக்கத்தில் இணைவோம்;
அது
சட்டென நிகழ்ந்து விடலாம்
தாமதிக்காது
தீர்மாணித்து விடுங்கள்!


அது 
சட்டென நிகழ்ந்து விடலாம்
தாமதிக்காது
தீர்மாணித்து விடுங்கள்!

யா அல்லாஹ்...யா ரஹ்மானே...
பார்வையற்றுப் போனேனே

என் 
கண்கள் குருடாகிவிட்டனவே
இன்னும் இது நான்தானா?
அல்லது
வழி பிறழ்ந்தலைந்த
என் ஆத்மா
கணித்தறிந்துவிட இயலாத
தண்டனைக்கு 
என்னை உள்ளாக்கி விட்டதா?

துரதிர்ஷ்டவசமாக  நாம் 
மண்ணுக்கே மீள்கிறோம்
சிலர் சுபித்திருக்க 
ஏனையோர் நரக நெருப்பில் 
எரிந்து கொண்டிருப்பர்,
இதை
முன்பே உணரத்தவறினேனே!
வரிசை சுருங்கி
இதோ
என் முறை வந்தே விட்டதே

பிறகென்ன
இதோ
(செய்வினைப் பட்டியலோடு)
என் உடலை மண்ணில் புதைத்து
அவர்கள் அழுகிறார்கள்
அவர்களைவிட மோசமாக
நான் அழுவதை அறியாமலே

அவர்களுக்கென்ன
தற்காலிகமாக
வீடுகளுக்குத் திரும்பிவிடுவர்
நானோ
என் இறைவனைச்
சந்தித்தாக வேண்டும்

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்
குறித்து வைத்துக் கொள் சகோதரா
இந்நிலை
நாளையேகூட
உனக்கு நேரும், யாரறிவர்?

இறுதி இலக்கு
சொர்க்கமா நரகமா?
இப்போதே தீர்மாணித்துவிடு
தாமதிக்காதே

வாருங்கள் சகோதரர்களே
வல்லவனைப் புகழ்ந்து
வணக்கத்தில் இணைவோம்;
இப்போதே தீர்மாணியுங்கள் - காலத்தை
இழுத்தடிக்காமல்!


வாருங்கள் சகோதரர்களே
வல்லவனைப் புகழ்ந்து
வணக்கத்தில் இணைவோம்;
இப்போதே தீர்மாணியுங்கள் - காலத்தை
இழுத்தடிக்காமல்!


ஆக்கம்: அஹமது அல்புகாதிர்

தமிழில்: சபீர் அஹமது அபுஷாரூக்

அதிரைநிருபர் பதிப்பகம்

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//புறப்படும் தருணமிது நான் போயே தீரவேண்டும்//காஸுகொடுக்காமல் கிடைத்த டிக்கட் என்பதால் விளம்பர நோட்டீஸ் என்று படித்தபின் கசக்கி வீதியில்வீசிவிட்டு போகமுடியாது. அழைப்பு மணியோசை கேட்க்குமுன்னே பெட்டி படுக்கைகளை தூசி தட்டி காத்திருப்போம்.அட்டி சொல்லிதட்டி கழிக்க முடியாத பயணம்.'நான்' என்றும் 'நீ'யென்றும் பேதம் பாராமல் எல்லோர்க்கும் உறுதிபடுத்தப்பட்ட இறுதிபயணம்.
கவிதை வரிகள் கல்மனதிலும் மரணத்தின் நினைவை கசிய வைக்கிறது .

Ebrahim Ansari said...

அலை பேசி ஒலித்தது. நான் அமர்ந்து இருந்ததோ மருத்துவரின் பக்கத்தில் அலைபேசியை எடுக்கவும் முடியவில்லை; மறுக்கவும் முடியாத நிலை.

காரணம் அழைத்தவர் மச்சான் பெரியவர் எஸ். எம். எப் அவர்கள்.

மருத்துவ சோதனை முடிந்து வெளியே வந்ததும் மச்சானை நானே அழைத்தேன்.

சபீர் எழுதிய கவிதை ஒன்று இன்று அ. நி. யில் வந்திருக்கிறது படித்தாயா?

இல்லையே. உடல் நலமில்லை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன். போய்ப் பார்க்கிறேன் படிக்கிறேன்.

அவசியம் படி.

சரி.

வந்தேன் படித்தேன்.

என்னையே கேட்டுக் கொண்டேன் : நான் தயாரகி வருகிறேனா?

அதிரை.மெய்சா said...

அருமை நண்பன் சபீரின் சலனமற்ற தமிழ்த் தொகுப்பு படிக்கப் படிக்க படைத்தவனை அஞ்சவைக்கிறது. நெஞ்சத்தைக்கிள்ளி நெருப்பில் போட்டதுபோல் உள்ளத்தைச் சுட்டுப் பொசுக்கி உணரவைக்கும் கவிவரிகள் மறுமையின்பால் மனம் சென்று மதியுணர வைக்கிறது.

அருமை அருமை அருமை நட்பே.

இப்னு அப்துல் ரஜாக் said...

என்னையே கேட்டுக் கொண்டேன் : நான் தயாரகி வருகிறேனா?

Riyaz Ahamed said...

சலாம் கபுருக்குள் இருக்கும் உண்ர்வை உன்டாக்கியது உன் கவி. நல்ல அறிவுரை நன்றியுடன் என் ப்ளேக்கிள் இடம்பெற செய்கிறேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.