கற்கள் நிறைந்த பூமியிலே - பசுங்
கற்றா ழைச்செடி வளருதுபார்
பற்கள் விரியச் சிரிப்பதுபோல் - அது
படர்ந்து விரிந்து நிற்குதுபார்!
இறுக்க முள்ள இதயத்தில் - கல்
இருப்ப தாக உவமிப்பார்
மறுக்க முடியா இவ்வுண்மை - சிலர்
மனத்தி லுள்ள இயல்பாகும்.
கல்லும் கற்றா ழைச்செடியும் - கூறும்
கதையைக் கேளீர் பிள்ளைகளே!
மெல்லச் சென்றே அவற்றின்முன் - புல்லை
மேயும் பசுபோல் நிற்பீரே!
‘மலையே எங்கள் பிறப்பிடமாம் - இந்த
மண்ணை நாடி வந்துமலை
தலையில் பெய்த மழைநீரை - நன்கு
தரையில் தேக்க உதவுகிறோம்.
‘கல்லும் கல்லும் மோதுவதால் - தீக்
கங்கு பிறக்கும் அதுபோலே
சொல்லும் சொல்லும் மோதுவதால் - நட்பில்
சோகம் பிறக்கும் என்பார்கள்.’
கல்லின் பேச்சைக் கேட்டவுடன் – பசுங்
கற்றா ழையின் குரல்கேட்டோம்:
“மெல்லக் கேளீர் பிள்ளைகளே! – எம்
மேன்மை உமக்குத் தெரியவரும்
“எமக்காய் ஊற்றும் தண்ணீரை – யாம்
எடுத்துத் தேக்கி உட்கொண்டே
உமக்கே மருந்தாய் மாற்றுகிறோம் – இந்த
உண்மை உமக்குத் தெரியாதோ?”
மலையில் பெய்த பெருமழையே - உரு
மாறி ஆறாய் வருகிறது
தலையில் ஊற்றிய தண்ணீரே - பின்
தருநன் மருந்தாய் ஆகிறது!
படைத்த நாயன் அருளாலே - பல
பயனைத் தந்து பேருலகில்
கிடைக்கும் பெரிய வெகுமதியாம் – இதைக்
கேட்டுப் பெறுவீர் மாந்தர்களே!
அதிரை அஹ்மது
13 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆஹா...
பாப்பா பாட்டுக்குள்ளே பெரியவர்களுக்கும் பாடம் இருக்கிறது. காக்கா காட்டுகளில் கல்லாதோர்க்கும் கிழக்கு இருக்கிறது.
மாஷா அல்லாஹ்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
காக்கா,
கற்றாழை செடிவகையா? புதர் அல்லவா?
(எவ்ளோவ் ட்ரை பண்ணாலும் 'இது மரபு இல்லை'ன்னு வெறுப்பேத்றிங்கல்ல...அதான் உங்கள சீண்டிப்பார்க்க பூதக்கண்ணாடி வச்சி மிஸ்டேக் தேட்றோம்.)
சோத்துக் கத்தாழை மருந்துச் செடி என்று கேள்விப் பட்டதில்லையா?
இருங்க, உள்ளே போய் அடுப்பங்கரை ஆச்சிடம் கேட்டு வாறன்.
"மருத்துவக் குணமும் உண்டு. நம்ம ஊட்டுப் பின் கொள்ளையிலயும் முன் பக்கமும் பாக்கலையா?" என்கிறாள். கனத்த இலையை வெட்டினால், ஹல்வா போன்ற substance தான் மருத்துவக் குணமுள்ளதாம்.
அரும்புப்பாட்டு குழந்தைப் பருவத்தை இழுத்து வந்து நிறுத்துகின்றது.
கற்றாழையிலும் இனிய மருந்துண்டு என்ற செய்தி
பயனளிக்கும்.
இதைசோத்துகத்தாழைஎன்பார்கள்.இதன்தடித்தஏடுகளின் மேல்தோலைசீவிவிட்டுயுள்ளேஇருக்கும்ஜெல்லை அதிகாலைவெருங்குடலில்சாப்பிட்டால்வைற்றுபுன் குணமாகும்/குடல்பூசிகள்சாகும்/சருமநோய்களுக்கு'கை'கண்டமருந்து.
Aloevera [ கற்றாழையில் பல மருந்துகள் செய்யப்படுகிறது , ஷேம்பு,செரிமானத்துகான டேப்லட் / காஸ்மெட்டிக் ..இன்னும் சொல்லலாம்.
சிலஆண்டுகளுக்குமுன்இதைஅமெரிக்காவில்பல ஆயிரம்ஏக்கர்நிலத்தில் பயிரிட்டு சேவிங்ஜெல், குளியல்சோப்தயார்செய்தார்கள்.இப்பொழுது இரண்டையுமே காணோவேகாணோம்.இதைஆங்கிலத்தில்Aloeveraஎன்று சொல்கிறார்கள்.நல்லபாம்பும்இதுவும்நல்லஇணக்கஒனக்கமாய் இருக்குமாம். எங்கிருந்தாலும்இதைதேடிநல்லபாம்புவருமாம்.
பத்து ஸ்கின் ப்ராப்ளம் னோ டென்ஷன். ஆலுவேரா கலந்த ஹமாம்.
கேட்கவில்லையா? எனக்குத் தெரிந்து ஓமான் நாட்டினர் இதன் தண்டை வெட்டி தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் ஹல்வா - அல்ல ஜெல்லை - வழித்து நக்குவார்கள். அதிலும் பாலைவனங்களில் வளரும் கற்றாழை மிகவும் நல்லதாம். எனை ஒரு முறை சாப்பிட சொன்னார்கள். உவ்வே.. என்று ஓடி வந்துவிட்டேன். ஆனால் நல்ல நாட்டு மருந்து என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்..
இந்தக் கவிதை- கற்றாழை கூட அமுதமாகும் என்று காட்டுகிறது.- காக்காவின் கைவண்ணத்தில்
‘கல்லும் கல்லும் மோதுவதால் - தீக்
கங்கு பிறக்கும் அதுபோலே
சொல்லும் சொல்லும் மோதுவதால் - நட்பில்
சோகம் பிறக்கும் என்பார்கள்.’
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும். சோற்றுக் கற்றாழை சொல்லும் கருத்து சொல்லைக் காக்கச் சொல்கிறதே. நாவடக்கத்தை நவில்கிறதே.
சோத்துக்கத்தாழைவேரைஉரலில்இடித்து அதன் சாற்றில்நெருப்பில்சூடாக்கியஇரும்பைவைப்பார்கள். சிறிதுநேரத்தில்கத்தாழைஸார்சூடாகிகோப்பையின்கிழே மண்டி படியும். மண்டியை நீக்கி விட்டு மேல்சாரை எடுத்து ஏழுமாத கர்ப்பிணிக்கு கொடுப்பார்கள். இதுகரப்பான் சொறிசிரங்குபோன்றதோல் வியாதிகள்பிள்ளைகிட்டே நெருங்காமல்காக்கும்.செம்படவர்தெருவுக்குபோகும் பாதையில்இருக்கும்இரட்டைகொல்லைகரு/கறு/வில் இந்தசெடிஇருக்கும். தேவையானவர்களுக்கு அதைபிடுங்கிகொடுப்பேன்.அவர்கள்கைமாறாக எனக்குமுந்தானைமுடிச்சைஅவுத்துஒருரூவாதருவார்கள். அந்தஒருரூவாயில்''மாயாமச்சசந்திரா'சினிமாபடமும் N.S.கிருஷ்ணன்T.A.மதுரம்.காளி N.ரத்தினம் நடித்த சகுந்தலை படமும்பார்த்தது போகமீதமுள்ளகாஸுக்குபக்கோடா .காராபூந்தி.மிக்ஸ்ச்ர்.ஆகியசெலவுபோனதும்கணக்குநேர்!
கத்தாழைமருந்துக்குமட்டுமல்ல''வித்தார கள்ளி விறகொடிக்கபோனாலாம்! காத்தாலேமுள்ளு நறுக்குன்னு குத்துனுச்சான்'' என்றுமருமகளை திட்டவும்பயன்பட்டது!
sabeer.abushahruk சொன்னது…
காக்கா,
கற்றாழை செடிவகையா? புதர் அல்லவா?
(எவ்ளோவ் ட்ரை பண்ணாலும் 'இது மரபு இல்லை'ன்னு வெறுப்பேத்றிங்கல்ல...அதான் உங்கள சீண்டிப்பார்க்க பூதக்கண்ணாடி வச்சி மிஸ்டேக் தேட்றோம்.)
-------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் கவிஞரே ! சின்ன வார்தை விளையாட்டு!ஆனாலும் உண்மையும் கூட!கற்றாழை செடிவகையா? புதர் அல்லவா?-கவிஞரே! பலதும் கற்ற ஆளை""=(கற்றா(ளை)ழை)த்தான்(அஹம்துசாட்சாவை)கேட்டிருக்கீங்க!ஆனாலும் இந்த புதிருக்கு விடை! நான் சொல்லவருவது அது புதர்தான்!பாருக்காக்கா சொல்வதுபோல் நல்லப்பாம்பு புதரில் இருக்கும் தானே?அதுவும் கற்றாழையுடன் ஆகையால் இது புதர்,புதர் ஆங்கிலத்தில் புஷ்(ஸ்)அந்த புதரில் நல்லபாம்பு இருக்கத்தான் செய்யும்,மேலும் கற்றாழை ஆளவேரா என்பது ஆங்கிலம் என்றாலும்,இங்கே பாம்பும் ,(புஷ்)(ப)புதரும் (ஆளே)வேறல்ல!இப்ப புரிந்திருக்குமே!அபு.இபு காக்கா என்ன சொல்லபோரீங்க!!!! நான் இங்கேDemocratic party!!!!
Post a Comment