Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முயலும் முட்டையும் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 21, 2014 | , , , ,

வீட்டுக் கோழி முட்டையிட,
விடிந்த பின்னர் தாய்க்கோழி
கூட்டை விட்டு வெளிவந்து
கூடிச் சென்ற(து) இணையோடு.

தம்பி அத்னான் அப்போது
  தாவிப் பார்த்தான் முற்றத்தை
எம்பிப் பாய்ந்த வீட்டுமுயல்
  ஏங்கிப்  பார்த்தது முட்டையினை.

‘ஆகா என்னைப் போல்வெண்மை!
  அழகாய் உருட்டி விளையாட
வாகாய்க் கிடைத்த பொருளாகும்
  வாராய்!’ என்றது வெண்முயலும்.

வாப்பா ஃபைசல் அன்போடு
  வாங்கித் தந்த முயல்ஜோடி
கூப்பா டிட்டுச் சென்றதனைக்
  கூர்மை யாக அவன்பார்த்தான்.

பெரியம் மாவை எழுப்பாமல்,
  பேச்சும் குரலும் காட்டாமல்,
தெரியும் முயல்கள் விளையாட்டைத்
  திளைத்து நின்று பார்த்திட்டான்.

உருட்டிய முட்டை பாதியிலே
  உடைந்து போக மறுமுயலும்
‘விருட்’டென் றோடிப் பாய்ந்திடவும்
  வீணாய் வழுக்கி வீழ்ந்ததுவே!

தன்னை மறந்து விளையாட்டைத்
  தனிமை யாக அத்னானே
சன்னல் திறந்து கண்டவுடன்
  சாடி விழுந்து சிரித்தானே!

அதிரை அஹ்மது

5 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காக்கா,

முயல் பாட்டு இயல்பாகவும் இனிமையாகவும் இருக்கிறது.

முட்டை உடைந்ததில் அத்னான் வாப்பாவுக்கு ஒரு ஆம்லெட் நஷ்டமானாலும் பிள்ளைகளின் மகிழ்ச்சி இஷ்டமேயாகும்.

பாவம், வழுக்கி விழுந்த முயலுக்கு இனி யார்தான் வாழ்க்கை கொடுப்பரோ!

(ஃபாருக் மாமாதான் வழுக்கி விழுந்த முயலுக்கு ஒரு வழியைச் சொல்ல வேணும்)

பாட்டு ஊர்வலம் பட்டையைக் கிளப்புகிறது.

ஹோம் ஒர்க் பண்ண ஆசை! வேலை பெண்ட் எடுக்கிறது. (அபு இபு, எப்டி நழுவினேன் பாத்தியலா?)

sabeer.abushahruk said...

'//ஆகா' என்னைப்போல் வெண்மை //

அ.நி.:

உடனடியாக படத்தில் முட்டையின் நிறத்தை வெள்ளையாக மாற்றவும்; இல்லையேல் பிழையான பாட்டிற்கு கருத்து இட்டதாக என் மனசாட்சி என்னைக் குத்தும்.

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நான் ஸ்தாபித்துக் கொள்கிறேன்.

Aboobakkar, Can. said...

//உடனடியாக படத்தில் முட்டையின் நிறத்தை வெள்ளையாக மாற்றவும்; இல்லையேல் பிழையான பாட்டிற்கு கருத்து இட்டதாக என் மனசாட்சி என்னைக் குத்தும்.

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நான் ஸ்தாபித்துக் கொள்கிறேன்.//

சகோதரர் சபீர் அவர்களுக்கு ...குறைகளைசொல்லியும் மற்றும் மன்னர்களை அதிகமாக புகழ்ந்தும் பொற்காசுகளை வாங்கி செல்வது புலவர்களின் இயல்பு இதில் நீங்கள் எந்த ..???? Category...???

sabeer.abushahruk said...

சகோ அபுபக்கர்,

அதே கேட்டகரிதான். நீங்கள் எந்த கேட்டகரி என்று நினைத்தீர்களோ அதேதான்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால், என்னைவிட அறிவில் முதிர்ந்தவர்களாக நான் கருதுபவர்களை அவர்களின் என்னைக் கவர்ந்த சிந்தனைகளைக் கடுமையாகப் புகழ்வேன்.

குற்றம் இருந்தாலும் சாடையாகச் சுட்டுவேன்; நேரடியாகச் சுட்டுதல் அவர்களுக்கு வேதனை தரலாம் என்ற தயக்கத்தில்.

ஏனெனில், பிறர் சந்தோஷப்பட்டால் அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

தற்புகழ்ச்சி கடுகளவேனும் செய்யேன்.

Yasir said...

பாட்டு ஊர்வலம் பட்டையைக் கிளப்புகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு