Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அரும்புப் பாட்டு - நிறைவுரை...! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 04, 2015 | ,

எங்கள்  வீட்டுப்  பிள்ளைகளை
            எண்ணிப்  பார்த்து  மகிழ்கின்றேன்
பொங்கும்  அன்புப்  பெருக்காலே
            பூக்கள்  போல  முகர்கின்றேன்

உங்கள்  வீட்டுப்  பிள்ளைகளும்
            உங்கட்  கின்பம்  தந்திடுவார்
எங்கும்  மகிழ்வு  பொங்கிடுமே
            இனிய  வாழ்வு  தங்கிடுமே!

இம்மை  மறுமைக்  கல்விகளை
            ஏற்றம்  பெற்ற  நன்னெறியைச்
செம்மை  யாக  அவருக்குச்
            சேர்த்துக்  கொடுத்தால்  பண்புடனே

நம்மை  மதித்து  வாழ்ந்திடுவார்
            நம்மீ  தன்பைப்  பொழிந்திடுவார்
தம்மைத்  தொடரும்  சந்ததியைத்
            தகையாய்  வளர்க்க  முனைந்திடுவார்!

இறையோன்  அல்லாஹ்  அருளாலே
            இன்பப்  பேறாய்  வந்தோரைக்
குறையா  அன்பால்  பரிவூட்டல்
            கோமான்  நபியின்  நல்வழியாம்

மறையும்  உலகில்  நம்மீது
            மாறாக்  கருணை  கொண்டேநல்
மறுமைக்  காக  'துஆ'ச்செய்யும்
            மக்க  ளாக  வளர்த்திடுவோம்!

அதிரை அஹ்மது

4 Responses So Far:

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!

அருமையான பாட்டு; அவசியமான அறிவுரை!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

(இன்னும் வளர்த்திருக்கலாமே?)

Unknown said...

வளர்க்கலாமா...?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆம் ! வளர்த்தெடுக்கனும்....

அரும்பை வளர்த்தால் இன்னும் கரும்பாக இனிக்குமே... :)

Muhammad abubacker ( LMS ) said...

அரும்பாடுப்பட்டு வளர்ப்பதை படிக்க அருமையாக இருக்கிற்து.

அது போல் நாமும் வளர்ப்போம் நன்மைகள் பல பெருவோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.