Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இந்தா உளே...!!! (இங்கே பார் பெண்ணே!) 9

அதிரைநிருபர் பதிப்பகம் | February 17, 2015 | , , , ,

நம்மூர் பெண்கள் ஒருவருக்கொருவர் அன்றாட ஊர், நாட்டு நடப்புகளுக்கு நம்மூர் வட்டார சொல் வழக்கில் உரையாடிக்கொண்ட உரையாடலை இங்கு உங்களின் பார்வைக்காகவழங்கப்படுகிறது. இதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் ஒரு கற்பனைப்பாத்திரத்திற்காகமட்டுமே இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல.

மொம்மாத்மா : அஸ்ஸலாமு அலைக்கும் என்னாவுளே ஒரு வாரமா ஆளேயே கண்மாசியாக்காணோமே எங்கவுளே போயிருந்தா?

ஆமாத்மா : ஒரு வாரத்துக்கு முன்னாடி களரிகாரவூட்டுக்கு சாப்பாட்டுக்கு போயிட்டு வந்ததுலேர்ந்து ஒடம்பு ரியில்லெ கை,கால் டுப்பு, கொடப்பெறட்டு ஓங்காரமா ஈந்திச்சி.

மொம்மாத்மா : அப்புறம் என்னா செஞ்சா? செந்தூரம் வாங்கி தேன்லெ கொழச்சி சாப்புடவேண்டியது தானே?

ஆமாத்மா : இல்லெ உளே அதெல்லாம் இப்பொ எங்கே கேக்குது? ஆட்டோ புடிச்சி ஆஸ்பத்திரி போய் ஒரு ஊசியெ போட்டுட்டு ந்தா தான் ரியாவுது. இப்பொதான் அல்ஹம்துலில்லாஹ் உடம்பு கொஞ்சம் தேவலெ.

மொம்மாத்மா : உங்கூட்டு காரவொ எப்பொ ர்ராஹ்ஹ‌?

ஆமாத்மா : அவ்வொ இப்பொ ர்ரத்துக்கு கூடஆசையாத்தான் ஈக்கிறாஹ‌. ஆனால் அவ்வொ அக்கச்சியா மாருவொளுக்கு ஊடு ட்டிக்கிட்டு ஈக்கிறதுனாலெ ங்காசு தேவையும் லைக்கு மேலெ ஈக்கிது அவ்வொளுக்கு. அதனால் இந்தவர்ரேன், அந்தவர்ரேன்டு சொனக்கிகிட்டு ஈக்கிறாஹ‌. அல்லாஹ் தான் அவ்வொ ஷ்டத்தெ நீக்கனும்.

மொம்மாத்மா : பாவம் அவ்வொ என்னாதான் செய்வாஹ‌? ஒத்தந்தனியன். ரெண்டு மூனு அக்கச்சியாமாருவொளோடபொறந்துட்டு அக்கச்சியா மாப்ளெயெளுவொ எல்லாம் ல்லா ம்பாதிச்சிக்கிட்டு தியா ஈந்தாலும் இவ்வொ தான் ஊடு ட்டி னும்டு எதிர்பார்த்துக்கிட்டு உக்காந்துகிட்டு ஈக்கிதுவோ என்னத்தெ சொல்றது?

ஆமாத்மா : இப்படி ம்மூர்லெ பொம்புளெ புள்ளையளுவொலுக்கு ஊடு ட்டி கொடுக்கிறக்கம் ஈக்கிறதுனாலெ அவ்வொளுவொ மாதிரி ஆளுவொளுக்கு இப்படியே காலம் வெளிநாட்டுலேயே ழிஞ்சிரும் போலெ ஈக்கிது. யார்ட்டெ சொல்லி அழுவுறது சொல்லு? அல்லாஹ் தான் ம்மளுக்கு திவாய்ப்பெ னும்.

மொம்மாத்மா : அது ரி. ம்மூர்லெ அடிக்கடி ஆக்ஸிடெண்டு க்குறதுனாலெ மொவனுக்கு இப்பொவெல்லாம் மோட்டார் சைக்கிளு வாங்கி கொடுத்துடாதெ. பயலுவொ ண்ணுமூக்கு தெரியாமரோட்லெ கண்ணாபிண்ணான்டு ண்டி ஓட்ரானுவொ...

ஆமாத்மா : எம்புள்ளெ அப்படியெல்லாம் வாங்கி கேட்டு பாடுபடுத்தமாட்டான். அவனுக்கு ம்மூட்டு நெலெமெ நல்லாத்தெரியும்ளே.

மொம்மாத்மா : இன்னொ ஒன்னும் சொல்றேன் கேட்டுக்கடீ. மொவன் ல்லா படிக்கிறபுள்ளையா ஈக்கிறான். அதுக்குள்ளெ அவ்வோ கேக்குறாஹ இவ்வோ கேக்குறாஹண்டு யாரு ஊட்டுக்கும் இப்பொ முடிவு கொடுத்துடாதே. அவன் நல்லா மேல்படிப்பு டிச்சி உள்ளூர்லேயே உத்யோகம் இல்லாட்டி வியாபாரம் செய்யனும். அவன் வாப்பா மாதிரி வெளிநாட்லெ போயி வருசகணக்கிலெ கடந்துக்கிட்டு ஷ்டப்பக்கூடாது பாத்தியா?

ஆமாத்மா : ஆமாவுளே நீ சொல்றது நெசம் தான். சின்னபுள்ளையிலேயே பொண்ணு பேசி ச்சி சீரு,சீராட்டுண்டு கொடுத்து அதுவொ எதிர்காலத்தை சீரழிச்சிர்ராங்கெ நம்மூர்லெ. எம்மனும் அதுக்கெல்லாம் இப்பொ ஒருகாலமும் சம்மதிக்கமாட்டான். அவன் ஆசைப்படி ல்லா டிக்கட்டும்வுளே. அவ்வொ வாப்பாவுக்கும் அதுதான் ஆசை.

மொம்மாத்மா : செத்தநேரம் இரிவுளே ழெ ர்ரமாதிரி ப்பும் ந்தமுமா ஈக்கிது. மெத்தையிலெ முறுக்கு காயப்போட்டிக்கிறேன், துணிமணி வேறெ காயுது. அதை எடுத்து வச்சிட்டு ந்துர்ரேன்.

ஆமாத்மா : ஈக்கிறேன் போயிட்டு வாங்கெ. (வந்ததும்) சரி நோம்பு வருதெ மாவு இடிச்சாச்சா உங்கூட்லெ?

மொம்மாத்மா : மாவு இடிக்கிறதுக்கு முன்னமாதிரி ஆளு எங்கவுளே கெடெக்கிது? காசு,ம் பொழக்கம் எல்லார்ட்டையும் ந்திரிச்சி. அதுனாலெ அவங்கள்ளெ நெரையா பேர் மாவு இடிக்கிற அப்புறம் ஊட்டு வேலெ செய்யிறதொழிலையெ உட்டுட்டாளுவொ தெரியுமா? காலம் மாறிப்போச்சுவுளே...

ஆமாத்மா : ஆமாவுளே நீ சொல்றது நெசம் தான். இப்பொ எல்லாத்துக்கும் ஆளு பத்தாக்கொறையா ஈக்கிறதுனாலெ எல்லா வேலையெலுவொலையும் நாமதான் செய்யனுமா ஈக்கிது என்னா செய்யச்சொல்றா?

மொம்மாத்மா : முன்னாடியெல்லாம் யாரு ஊட்லெ அரிசி வெலெக்கி வாங்குனோம்? நம்மதோப்புதொறவுலேர்ந்து ர்ரநெல்லை த்தாயத்துலெ போட்டு கொஞ்சம்,கொஞ்சமா எடுத்து குத்தி அரிசியாக்கி சாப்புட்டுக்கிட்டு ஈந்தோம். இப்பொ எதர்கெடுத்தாலும் டைத்தெருலெ போயி நிக்கனுமாயீக்கிது.

ஆமாத்மா : ரிவுளே இன்னெக்கி சாங்காலம் அஸர் தொழுதுட்டு நாமெ ஹதீதுகார  ஊட்டுக்கு போவலாமா? ர்ரியா?

மொம்மாத்மா : நானும் போகனும்டு நெனெச்சிக்கிட்டு ஈந்தேன் நீனும் ரெக்டா கூட்புட்டுட்டா....

ஆமாத்மா : நோம்பு ர்ரதுனாலெ அது ர்ரதுக்கு முன்னாடியே நமக்கும், புள்ளையெலுவொலுக்கும் துணிமணி எடுத்து ச்சிட்டா பெரியவேலெ முடிஞ்சமாதிரி. நோம்பு நேரத்துலெ குர்'ஆன் ஓதுரது த்தெ அமல்களை செய்யலாம் இல்லையா?

மொம்மாத்மா : ஆமாவுளே நானும் அதைத்தான் நெனெச்சிக்கிட்டு ஈந்தேன். அதுனாலெ துணி,ணியலுவொலே இப்பொவே க்ககொடுத்துடவேண்டியது தான். ல்லவேளைக்கி நீ ஞாபம் காட்டுனா அதெ..

ஆமாத்மா : போனநோம்புலெ ம்மதெருவுலெ ஈந்தஎவ்ளோ பெரியமனுசவோ மவுத்தா போயிட்டாங்கபாத்தியா? அல்லாஹ் தான் ம்மளுக்கு அடுத்தநோம்பும் கெடெக்கிறதுக்கு உதவி செய்யனும்.

மொம்மாத்மா : நோம்பு நேரத்துலே நெறையா ஏழெ பாலையங்கள் உதவி கேட்டு ரும். அதுக்கு இப்பொவே காசு, ம் மாத்தி ச்சிக்கிட்டரொம்பவுரியாமா ஈக்கிம். அப்பொ சில்லரை இல்லாமஷ்டப்பக்கூடாது பாரு? அதுனாலெ தான் சொல்றேன்.

ஆமாத்மா : ல்லவேளெக்கி இப்பொவே ஞாபம் காட்டுனா நீ...கையிலெ வச்சிக்கிற பணத்தை எடுத்திக்கிட்டு போயி இப்பவே மாத்தி சில்லரைகாசெ வச்சிக்கிட வேண்டியது தான். ரிவுளே! புள்ளையளுவோ ஸ்கூல் உட்டு வந்துரும்கள். நான் இப்பொ கெழம்புறேன். இன்ஷா அல்லாஹ் அஸரு தொழுவிட்டு ரெடியா இரி. நாமெ தீது காரஊட்டுக்கு ஒன்னா போவலாம். சரியா..ட்டா....

மொம்மாத்மா : எங்கூட்லெ மொளவு ண்ணி சாப்பாடு தான். இன்னெக்கி. சாப்புட்டுட்டு கொஞ்சம் சாஞ்சி எழும்புறேன். அஸர் தொழுவிட்டி வெள்ளனமே வந்துரு. ம்மூட்லெ தேத்தணி குடிச்சிட்டு கெளம்பலாம் ரியா? போயிட்டா வாவுளே.....

மேற்கண்டஉரையாடலில் ஏதேனும் குறைகள், றுகள் இருப்பின் பின்னூட்டம் மூலம் அறியத்தாருங்கள். திருத்திக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

9 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//ஆமாத்துமா:கொடலேபொறட்டுஓங்காரமா ஈந்துச்சு// கொடலேபோராட்டிக்கிட்டுஓங்காரம்ஒங்கரமாவந்துச்சுபுள்ளே!

sheikdawoodmohamedfarook said...

//எங்கூட்டுலேமொளவுதண்ணிசாப்பாடுதான்.இன்னக்கிகிசாப்புட்டுகொஞ்சம்சாஞ்சுஎழும்புறேன்//எங்கூட்டுலேமொளவுதண்ணிசோறுதான்.உண்டுட்டுகொஞ்சம்சாஞ்சுஎலும்புறேன்.

sheikdawoodmohamedfarook said...

சோத்துவேலையைஎல்லாம்முடிச்சுட்டுபடுக்கலாண்டு தலையேஅல்லாண்டுபாயிலேபோட்டாஇந்த பாலயங்கபடுத்துறபாடுஅல்லாக்கேஅடுக்காதுமா! அதுவும்இந்தசின்னக்களிச்சஹாஜாமீ ஈக்கிறானே?அவன்படுதுறபாடு! ஹாஜாஒலிசாயீவோலே!நீங்கதான்அவனேகேக்கனும்!.

sabeer.abushahruk said...

எம் எஸ் எம்,

நூற்றுக்கு நூறு வாங்குற உங்க பேப்பரையே ஃபாரூக் மாமா திருத்திட்டாக.

இதிலேர்ந்து என்ன தெரியுது?

கேட்டு கத்துக்கிட்ட நம்மலவிட கத்துக்குடுத்த அவங்களுகுத்தான் நம்ம ஊர் பாஷையில் ஞானம் அதிகம்.

சூப்பர் பதிவு.

sheikdawoodmohamedfarook said...

பாத்துமாகனி:அடி!மம்மாத்து?என்னாடிஇந்தப்பக்கம்?அத்திபூத்தாப்புளே? மம்மாத்து[முஹம்மதுபாத்திமா]தெரியாதா?மம்நாச்சியாமவன்மம்மசங்கனிபினாங்குலேந்துவந்துஎரங்கிட்டானுளோ!அவனேபோயிஎன்னாண்டுகேட்டுட்டு வர்றேன். பாத்துமாகனி; யாரு! ரைமாமா மொவோ சபுராவே கல்யாணம் பண்ணி ட்டுபோனானேஅவனா?

Muhammad abubacker ( LMS ) said...

ஆகா அதிரையிக்குறிய பாஷையில் கலந்துரையாடல் .அதுவும் ஆமாத்து மொம்மாத்து சூப்பர்

இரண்டு பேரும் ரொம்ப நாளைக்குப்பிறகு சந்திப்பது அவங்களுக்கு சந்தோசமாக இருக்குதோ இல்லயோ? வாசகர்களுக்கு சர வெடியாக ஈக்கு.

//மாவு இடிக்கிற‌துக்கு முன்ன‌ மாதிரி ஆளு எங்கவுளே கெடெக்கிது? காசு,ப‌ண‌ம் பொழ‌க்க‌ம் எல்லார்ட்டையும் வ‌ந்திரிச்சி. அதுனாலெ அவங்க‌ள்ளெ நெரையா பேர் மாவு இடிக்கிற அப்புறம் ஊட்டு வேலெ செய்யிற‌ தொழிலையெ உட்டுட்டாளுவொ தெரியுமா? காலம் மாறிப்போச்சுவுளே//

ஆமா அரசாங்கம் என்னைக்கி இலவசமா அரிசி அது இதுன்டு கொடுத்துச்சோ அப்பவே எல்லாம் மாரிப்போச்சுவுல அது தொலைது உடுவுல.

C.m.p லைன்ல ஒரு வூட்டு செவத்துல இடியப்ப மாவு கிடைக்குன்டு எழுதி ஈக்குதாம்புல் பச்சரிசி கொடுத்தா மாவு அறைத்து தர்ரஹலாம்ல

ஆ தேவலையம்மா செத்த யாரு வூடுன்டு கேட்டு சொல்லுவுல.

sheikdawoodmohamedfarook said...

மவுருங்கனிசொன்னது: அஞ்சும் அஞ்சும் பத்து பவுனுக்கு பட்டையும் கொலுஸும் அடிச்சுகையிலே போட்டுட்டாளாம்! அவ அடிக்கிற 'கொந்தமதி' தாங்க முடியேலேயேம்மா? ஊரு ஒலகத்துலே யாருமே இதே பாக்காத மாதிரிலோ குதிகாலுநெலத்துலேகுந்தாமேகுதிச்சுகுதிச்சுநடக்குறா!

sheikdawoodmohamedfarook said...

ஒருதிமிருபுடிச்சபொம்புளேசொன்னது:இந்தாடா!பாருக்கு.செத்தே இங்கெ வாவேன்!சின்னபுள்ளையாட்டம்அந்தசுண்டுகடைக்கிபோயிஒன்னறகாஸுக்குநல்லெனாய்வாங்கிட்டுதாளிச்சுஊத்தகொஞ்சம்நச்சிரவம்பெருஞ்சிரவமும் வாங்கிட்டு அதோட ஒரு காஞ்ச மொலவாயும் வாங்கி கிட்டு குடுகுடுண்டு ஓடிவா!எம்புள்ளேபெரியபடிப்புபடிக்கிறான்.பரிச்சைக்கிபோவனும்.இந்தசின்னவேலைஎல்லாம்அவன்செய்வானா?நீங்கள்லாம்சின்னபடிப்புபடிக்கிற புள்ளயோ!சீக்கிரம்ஓடிட்டுவாம்மா!எம்மவன்''பசிக்கிது!பசிக்கிது!''ன்டுகத்துவான். நான்சொன்னபதில்:புள்ளேயேதூக்கிமடிலேபோட்டுகாச்சினபாலேபோச்சிலேஊத்திகுடு!ஓம்புள்ளேக்கிபசிச்சா நாஓடணுமா? இந்தவக்கனை யெல்லாம் வேறேஆளுட்டேவச்சுக்கோ!

Aboobakkar, Can. said...

மு செ மு நெய்னா முகமது
ஊட்டை எசுவுபன்னி செய்நாத்தி வேலைபார்த்து சாந்தி அடிக்கணும் ....கொளுபுலேந்து வாப்பா வர்றாக .தம்பி மொம்சாரம்மா மகனே கொஞ்சாம் குதுரைவண்டியை கூப்பிடுமா டாக்டர்கிட்டே போகணும் ரெண்டு நாளா எனக்கு கொமீருப்பு சொலேருப்பு தட்டு முட்டு தேகரடி யா ஈக்கிது.

கொலமாட்டி கொள்ளுவான் பாலுகாரன் இன்னும் வரலே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.