Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

44

அதிரைநிருபர் பதிப்பகம் | February 07, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி ஆறு

“சாயல்குடி என்கிற கிராமத்திலே யாருக்கும் அடங்காத சீமைக்காளை ஒன்றை ஒரு கன்னிப் பெண் வளர்த்து வருகிறாள் . அவள் பெயர் வெள்ளையம்மாள் ! “ என்ற ஒரு வசனம் சிறு வயதில் தெருவெங்கும் ஒலிக்கக் கேட்டிருப்போம்.

இப்படி , இஸ்ரேல் என்ற யாருக்கும் அடங்காத சீமைக்காளையை வளர்த்து வரும் அந்த வெள்ளையம்மாள், இராமநாதபுரத்து சாயல் குடியில் இல்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் . இந்த வெள்ளை மாளிகை வளர்க்கும் இந்த மிருகம் ஒரு காளை அல்ல ; ஒரு காவல் நாய் . எண்ணெய் வளம் கொழித்திருக்கும் அரபு நாடுகளுக்கு மத்தியில், அவற்றைக் கண்காணித்து அவ்வப்போது குரல் கொடுத்துக் குரைத்து தனது அமெரிக்க எஜமானுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுக்க ஏவப்பட்ட காவல் நாய்தான் இஸ்ரேல். 

ஆயுதங்கள் என்றும் ஆதரவு என்றும் இந்தக் காவல் நாய்க்குப் போடப்படும் எலும்புத் துண்டுகளை கவ்விப் பிடிக்கும் இந்தக் காவல்நாய் மனிதாபிமானங்களை மண்ணில் போட்டு புதைத்துவிட்டு மனிதர்களை வேட்டையாடி வருகிறது. குழந்தைகள் கொல்லப்படுகின்றன; வயோதிகர்கள் வன்முறைக்கு பலியாகிறார்கள்; மக்கள் மந்தைகளாக நடத்தப் படுகிறார்கள். வானில் பறக்கும் கழுகு போல் விமானங்கள் நடு இரவில், உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது கூட உன்மத்தம் பிடித்து குண்டுகளைப் பொழிகின்றன. நாட்டின் பகுதிகளில் நடமாடும் உரிமையும், கடற்கரைப் பிரதேசங்களில் கப்பலேறும் உரிமையும், விவசாய நிலங்களில் விளைவிக்கும் உரிமையும், மொத்தத்தில் மூச்சுவிடக் கூட முன் அனுமதி பெற்று வாழவேண்டிய நிலைமைக்கு பாலஸ்தீனத்தின் பாரம்பரிய மக்கள் தள்ளப்பட்டு பாவிகளின் கரங்களில் சிக்கி படாத பாடு பட்டு வருகிறார்கள். இவ்வளவையும் வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா, உலகுக்கு மனித உரிமைகள் பற்றி போதனை நடத்தி வருகிறது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்ப அல்ல கதறிக் கண்ணீர் விடும் பாலஸ்தீன மக்களின் நிலையைக் காணும் மக்களின் மனங்களில் இயல்பாக எழும் கேள்வி ஒன்று உண்டு. பாலஸ்தீனத்து மக்களோ பிறப்பால், மார்க்கத்தால், இனத்தால் அரபுகள். அவர்களும் படும் பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரபு நாடுகளோ அந்த அல்லலுறும் மக்களைச் சுற்றி அரசமைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மினி லக்ஸ் சோப் அளவில் இருக்கும் இஸ்ரேலை சுற்றிலும் இருக்கும் இந்த அரபு நாடுகளால் அதட்டி வைக்க இயலாதா? என்பதே அந்தக் கேள்வி. 

இயலாது என்பதல்ல; இயலும் என்று ஈடுபடக் கூட இல்லை என்பதே வேதனையான உண்மை. காரணமென்னவென்றால், அரபியர்களின் சகோதரத்துவம் என்பது ஆன்மிகம் மட்டுமே சார்ந்தது ; அது அரசியல் சார்ந்ததல்ல என்பதற்கு பல உலக வரலாற்று உதாரணங்களை நாம் காட்ட இயலும். ஹஜ் போன்ற கடமைப் பயணங்களில் ஆன்மீக ரீதியில் அகில உலக முஸ்லிம்களையும் சமத்துவத்துடன் சகோதரர்களாக அரவணைக்கும் அரபுதேசங்கள் , முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள் அரசியல் ரீதியாக ஒரு சிறு ஆட்டம் கண்டாலும் அந்த ஆட்டத்தைப் போக்க ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடுவதில்லை.


தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதெல்லாம் அரபியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அறிமுகமில்லாத உள்ளுணர்வுகள் ஆகும். தங்களின் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட மக்களின் நலனில் காட்டும் அக்கறையை அடுத்த நாட்டு முஸ்லிம்களின் மீது காட்டி அரவணைப்பது அவர்களுக்கு அரப்புத் தூளைக் கண்ணில் கொட்டும் அளவுக்கு அருவருக்கும் விஷயம்தான். தங்களின் எண்ணெய் வளத்துக்கு எந்த வல்லரசாலும் எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவற்றின் தலையாயக் கவலை. அதை விட்டுவிட்டு சகோதரர்கள் என்று பாவம் புண்ணியம் பார்க்கத் தொடங்கினால் சதாம் ஹுசேனுக்குக் கிடைத்த தூக்குக் கயிறுதான் அவர்களுக்கும் பரிசாகத் தரப்படுமென்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தே வைத்து இருக்கிறார்கள் என்பதே உண்மையிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஊனமில்லாத உண்மை.

அதனால்தான் இன்று பொருளாதார வலிமை வாய்ந்த அரபு நாடுகளின் மத்தியில் போக்கிடம் இன்றி பாலஸ்தீனர்களும் உண்ண உணவின்றி சோமாலியர்களும் எத்தியோப்பியர்களும். வேலைவாய்ப்பின்றி இதர ஆப்ரிக்க முஸ்லிம்களும் அல்லல் படுகின்றனர். ஆனால் அரபு நாடுகளோ ஆங்கிலப் புத்தாண்டுக்கு வான வேடிக்கைகள் விட்டு அதில் கின்னஸ் ரிகார்டு படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் கூட ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளால் அன்றாடம் அவதியுறும் முஸ்லிம் மக்களைக் கண்டும் காணாமல் அந்த மக்களை அவதிக்குள்ளாக்கும் வல்லரசுகளுடன் கை குலுக்கி கை கோர்த்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஓமான் நாட்டு மண்ணிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் நடமாடிய சவூதி அரேபியாவின் மண்ணிலும் யூதர்களைப் பாலூட்டி வளர்க்கின்ற அமெரிக்க இராணுவம் தங்களது முகாம்களை அமைத்துக் கொள்ள இராஜதந்திரம் என்ற பெயர் சூட்டி இடம் கொடுத்து உதவி இருக்கின்றன.

வட்டி, சூது, மது ஆகிய இஸ்லாத்தால் தடுக்கப்பட்ட பாவச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்க்காத அரபு தேசங்கள் எங்கே இருக்கின்றன? தேடித் பாருங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். விபச்சாரம் போன்ற தீயச் செயல்களும் குதிரைப் பந்தயம் போன்ற சூதாட்டங்களும் நடத்தும் நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதற்குப் பெயர் சுற்றுலா வளர்ச்சி. 

ஆனால் சொந்த சகோதரர்கள் சாவதைக் கண்டு , ஹராம், முஷ்கீல், அல்லாஹ் கரீம் என்கிற ஆறுதல் வார்த்தைகளை மட்டும் உதட்டளவில் உதிர்க்கும் அரபுகளே அநேகம். இதோ ஒரு கவிமாமணியின் கோபம் இப்படி வெளிப்படுகிறது. 

மானபங்கப்படும் 
மனிதநேயத்திற்கு 
உத்தரீயம் கொடுக்கவும் 
அமெரிக்க சகுனியிடம் 
உத்தரவு கேட்கும் 
கவுரவர் சபை 
பஞ்ச பாண்டவர்களாய் 
வளைகுடா நாடுகள் !

ஆப்கன் விதைஎடுத்து 
அமெரிக்கா பயிரிடும் 
கொடிமுந்திரித் தோட்டக் 
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின் 
முழிக்கும் விழிகள் !

அலிப்
எழுத்துப்போல சேராது 
தனித்திருக்கும் 
அரபு நாடுகளே ...

ஒன்றாய் நீங்கள் 
ஒன்றுக்கிருந்தால் 
மூத்திரத்தில் மூழ்கிப்போகும் 
யூத - அமெரிக்கக் 
கள்ள உறவில் தோன்றிய 
கர்ப்பக் கழிவு !

மேலும்... மற்றொரு கவிதையில்..

காற்றும் கந்தலாக்கும் 
கந்தக எச்சில்கள் 
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு 
அரசர்கள் வைத்த 
அலிகளைப்போல்
ஐ.நா .

(எனது மரியாதைக்குரிய பேராசிரியர் தி. மு. அ. காதர்)

இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தின் முதல் வரிகளை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். 

உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க பாண்டி பஜாரில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது ஒரு ஜென்மப் பகை! இரத்தத்தின் அணுக்களில் ஊறி திளைத்துப் பின் தினவெடுக்கும் கரங்கள் கைகளில் எடுத்த ஆயுதப் பகை! இந்தப் பகையின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது. இன்றைக்கு பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள் கதறி அழுவதன் அடிப்படைக் காரணம், காலம் காலமாக களம் கண்டு வரும் இரு புறத்து மக்கட்பிரிவின் பிறப்புப் பகை! பிறக்கும் குழந்தைகள் உதைத்து விளையாடுவது இயற்கையின் படைப்பு. ஆனால் இஸ்ரேலிலோ பிறந்த குழந்தை கூட ஒருநாள் ஆனதும் உதைக்கத் தேடுவது பாலஸ்தீனியர்களை. உண்மைக் காரணங்கள் யாவை? 

மேற்கண்ட வரிகளின் அடிப்படையில்தான் பல அரசியல் கலந்த வரலாற்று அம்சங்கள் கடந்த இருபத்தி ஐந்து வாரங்களாக முதல் பாகமாக அலசப்பட்டன. 

எவ்வளவுதான் அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும் என்றும் நிலைத்து நிற்பவை எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளும் அவனது அனைத்துத் திருத்தூதர்களின் வார்த்தைகளும்தான் என்கிற கருத்தை நிலை நிறுத்தி இந்தத் தொடரை இப்போது நிறைவு செய்வோம். 

இறைவனின் வாக்குகளின் அடிப்படையிலும் பெருமானார் (ஸல் ) அவர்களின் மொழிகளின் அடிப்படையிலும் நாம் நிலை நிறுத்த விரும்ம்பும் கருத்து யாதெனில் , இன்று இஸ்ரேல் அமைக்கப்பட்டிருப்பதும் யூதர்கள் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்து இருப்பதும் ஒரு தற்காலிகமாக மலர்ந்துள்ள மலர்தான் என்பதே . இஸ்ரேல், இன்று அமெரிக்க செடியில் மலர்ந்துள்ள மணம் வீசும் பூவாகத் தோன்றலாம். ஆனால் இது உலக அழிவுக்கு முன்னரே உதிரும் பூ என்பதுதான் இறைவனின் திட்டமும் சட்டமும்.

ஆது மகன் ஸதாது குலவலிமை பெருவாழ்வு அழியாமல் நிலை நின்றதோ?

அஷ்ட திசையும் வளைத்த சமூது கூட்டத்தின் அநியாயம் நிலைநின்றதோ?

மூது கடல் நம்ரூதெனும் கொடியவனின் முடியரசு நிலைநின்றதோ?

மூஸா நபிக்கெதிரியான பிர்- அவ்ன் தளம் முடியாமல் நிலை நின்றதோ?

வாது கொடும் சூது புகழ் பாதகன் அபுஜஹல் வஞ்சகம் நிலைநின்றதோ?

வள்ளல் ஹுசேனாரின் சிரம் வாளால் அறுத்த பழி வாங்காமல் நிலை நின்றதோ?

நூஹுக்குப் பின் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்துகொள்வதற்கு உங்கள் இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவை இல்லை). அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனும் உற்று நோக்கியவனுமாக இருக்கிறான் . ( அல் குர்-ஆன் 17 : 16- 17 ). 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“முஸ்லிம்களாகிய நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். - நூல்.முஸ்லிம். 5598.

நபி (ஸல்) அவர்கள் செய்த இந்த முன்னறிவிப்பு நிகழப்போகும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளம் தான் இந்த பாலஸ்தீன ஆக்கிரமிப்பு.

பாலஸ்தீனத் தொடரில் இதுவரை அரசியல் வரலாற்று செய்திகள் . இனி, ஆன்மீக வரலாற்றுச் செய்திகள் மற்றும் ஆய்வுகள்; அல்லாஹ் மற்றும் அவனது அருள் தூதரின் மொழிகளில் எதிர்கால பாலஸ்தீன் மற்றும் கிருத்தவ- யூதர்கள் மற்றும் அவர்களுடைய கூஜாதூக்கிகளின் நிலை. எங்கே போகும் இந்தப் பாதை? என்ற கேள்வியுடன் . 
முதல் பாகம் நிறைவுற்றது !
இரண்டாம் பாகம் - இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

இபுராஹீம் அன்சாரி

44 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரையின் எழுத்தறிஞர் இ.அ.காக்கா:

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்,

தங்களின் பெரும்பாலானா நேரத்தை ஒதுக்கி பல்வேறு இன்னல்களுக்குண்டான ஒரு வரலாற்றுத் தொகுப்பை அதன் வீரியம் குறையாமல், அற்புதமான எழுத்து நடையில் எங்களுக்கு வகுப்பெடுத்து முதல் பாகத்தினை நிறைவு செய்த சூட்டோடு அடுத்த பாகம் தொடரும் என்ற தகவலையும் உறுதியளித்திருப்பதற்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும் தங்களின்பால்.!

ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னோட கருத்தைப் பதிக்காவிடினும், அனைத்தையும் படிக்கத் தவறாதவன் நான் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.

இந்த முதல் பாகத்தில், இதற்கு முன்னர் பாலஸ்தீன வரலாற்றை நான் படிக்கத் தவறிய அல்லது தேடியெடுத்து வாசிக்கத் தவறிய அரிய தகவல்களை தங்களின் இலகுவாக ரசனையையான எழுத்துக்களைக் கொண்டு வாசிக்க வைத்தீர்கள், அவைகள் மென்மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்...

தங்களின் ஆரோக்கியத்திற்காக என்றும் படைத்தவனிடம் பிரார்த்தித்தவர்களாக.. இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

இஸ்ரேலிய நாய்களை பற்றி உதாரணம் அருமை....நிறைய கடின உழைப்பு
தங்களின் ஆரோக்கியத்திற்காக என்றும் படைத்தவனிடம் பிரார்த்தித்தவர்களாக.. இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லாஹ்!

முதலாம் பாகத்தை வெற்றிகரமாக நிறைவாக்கித்தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அன்பிற்குரிய காக்கா,

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

(பணிச்சுமை தனிந்ததும் இவ்வாரத்திற்கான கருத்திடுவேன், இன்ஷா அல்லாஹ்)

Muhammad abubacker ( LMS ) said...

மாஷா அல்லாஹ்

இந்த முதல் அத்தியாயமே! யூத குள்ள நரிகளின் குரல் வலையை பிடிப்பதுபோல் உணர்வு.

அடுத்த அத்தியாத்தில் நெறித்து கொண்டே விடுவீர்கள் என்று நினைக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் தாங்களுக்கு ஆறோக்கியத்தையும் மன வலிமையயையும் தந்தருள்வான் காக்கா.

aa said...

வளைகுடா சுன்னி முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகளால் இந்த ஆக்கம் நிரம்பு வழிகிறது. வளைகுடா ஆட்சியாளர்களுக்கு எதிரான விஷ கருத்துக்களை கக்குவதே இஸ்லாமியப் புரட்சி என்று இஹ்வானிகளாலும், ஷியாக்களாலும் பரப்பப்பட்டுவிட்ட நிலையில், இந்த சதிவலையில் உங்களைப் போன்ற சிந்தனையாளர்களும் சிக்கிவிட்டது மிகுந்த கவலை அளிக்கிறது. நேரம் இருந்தால், இதறகான விளக்கமான மறுப்பை இதே பின்னூட்ட பகுதியில் பதிவேன் இன்ஷா அல்லாஹ்.

In Defense of Sunni Muslim Rulers of Arabian Gulf

Ahamed Firdhous Salafi, Sharjah.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரே மூச்சில் ஓடி வந்து இலக்கைத் தொட்டிருக்கிறீர்கள். கூடவே வந்த எங்களுக்குக் கொஞ்சம்கூட அயர்வேயில்லை. இன்னும் போக தயார் இரண்டாம் பாகம் வாயிலாக. தாங்கள் இளைப்பாறிக் கொள்ளுங்கள்.

இந்த அத்தியாயத்தில் உச்சகட்டத்திற்கே உரிய சிறப்பம்சமாக காட்சிகளைப் படபடவென விவரித்திருப்பது உள்ளம் கவர்கிறது.

இந்தத் தொடரை ஒருவாரம்கூட விடாமல் வாசித்துவிட்டு கொடுக்கப்பட்டக் கவிதையை வாசிக்க, முன்பைவிட வீரியமாக இருக்கிறது கவிதை.

கவிதையின் ஓரிரு வசனங்களைத் தவிர்த்திருப்பது அதிரை நிருபர் வாசகர்களை நீங்கள் எந்தளவு பரிட்சயப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி.

மற்றுமொரு மந்திரமொழியிலான அத்தியாயம்!

மாஷா அல்லாஹ்!

ZAKIR HUSSAIN said...

A great work by Brother Ebrahim Ansari. Thank you so much for your wonderful effort .
Take care your health.

Your effort in completing this "Untold History" have to be known to history teachers & history professors of the world, particularly in India.

sabeer.abushahruk said...

//அரபியர்களின் சகோதரத்துவம் என்பது ஆன்மிகம் மட்டுமே சார்ந்தது ; அது அரசியல் சார்ந்ததல்ல என்பதற்கு பல உலக வரலாற்று உதாரணங்களை நாம் காட்ட இயலும். //

சகோதரத்துவம் அரசியல் சார்ந்ததல்ல; ஆன்மீகம் சார்ந்தது மட்டும்தான் என்பதை உள்ளூரில்கூட காட்டிக்கொண்டுதான் காக்கா இருக்கிறார்கள். ஆனால் ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசுவாங்க. நாம் பின் தங்கிப்போனதற்கான முக்கிய காரணங்களில் தலையாயது இதுதான்.

Ebrahim Ansari said...

அன்பான சகோதர்கள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).
தொடரின் இந்த அத்தியாயத்துக்கும் தொடரின் முழுமைக்குமான கருத்துக்களைக் குறிப்பிட்டு நீங்கள் தந்திருக்கும் அன்பான கருத்துக்களை மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஜசாக் அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.
தம்பி அபு இப்ராஹீம் அவர்கள் தொடரின் எல்லா அத்தியாயங்களுக்கும் கருத்திடாவிட்டாலும் ஒவ்வொரு வாரமும் என்னைத் தூண்டி வாரப் பதிவுகளை தாமதப் படுத்தாமல் விரட்டி விரட்டி வாங்கியதில் காட்டிய முனைப்பு, இந்தத்தொடர் இடைவெளி இல்லாமல் வரவேண்டுமென்று அவர் காட்டிய ஆர்வத்தை வெளிப்படுத்தியது. தம்பி அவர்களிடமிருந்து வாரப்பதிவைக் கேட்டு மின்னஞ்சல் வருமுன்பே அனுப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்ற செய்லபாடுகளைத் தூண்டிக்கொண்டே இருந்தவர் அவர். நன்றி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பி எல் எம் எஸ் அபூபக்கர் அவர்கள் இந்தத் தளத்துக்கு வருகை தந்து தொடர்ந்து கருத்திட்டு தந்த ஆதரவுக்கும் அவ்வப்போது அலைபேசியில் அழைத்துப் பேசும் அன்புக்கும் நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.
இந்தத்தொடர் உங்களில் பலரைக் கவர்ந்திருக்குமானால் அதற்கு தம்பி கவிஞர் சபீர் அவர்களின் தொடர்ந்த கருத்திடும் பாங்கும் பண்பும் பக்கபலமாக இருந்து எனக்கு மனபலமாக இருந்தது என்பதை நான் மனம்திறந்து குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் தலைப்பில் எழுதத் தூண்டியதும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தவறவிடாமல் படித்து, பாராட்ட வேண்டிய பகுதிகளை கட்டம் கட்டிப் பாராட்டிடும் அன்பு எனக்கு ஒரு அரவணைப்பாகவே தோன்றியது. ஜசாக் அல்லாஹ்.
தம்பி ஜாகிர் ஹுசேன் போன்ற சிறந்த சுய சிந்தனையாளர்கள் தந்து கொண்டிருந்த ஆர்வத்தையும் அன்பையும் நான் மறக்கவே இயலாது.
மேலும் மரியாதைக்குரிய மச்சான் பெரியவர் முகமது பாரூக் அவர்களும் இந்தத்தொடரின் தொடர்ந்த வாசகராக இருந்து உற்சாகப்படுத்தினார்கள். அவர்களுடைய நல சுகத்துக்கு து ஆச் செய்கிறேன். எனது துஆவில் அனைவரும் பங்கேற்கக் கோருகிறேன்.
அதே போல் அவ்வப்போது ஊக்கப்படுத்தும் கலிபோர்னியாவின் கருத்துச்சாரல் – வார்த்தைகளின் வடிவமைப்பாளர் தம்பி கிரவுன் தஸ்தகீர் அவர்களை நான் குறிப்பிட்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மிகவும் முக்கியமாக நான் குறிப்பிட வேண்டியது, தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களை. இந்ததொடருக்கு அவர்கள் ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தார்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நான் தடம் புரண்ட நேரங்களில் காய்தல் உவத்தல் இன்றி சுட்டிக் காட்டி அதேபோல் வரிகளை கவனமாக எழுதவைத்த அன்புக்கு நான் அவர்களுக்குமிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன். இந்தப் பதிவை ஒரு உண்மையான பகிர்வாக மாற்றிய பெருமையும் ஒரு ஆரோக்கியமான விவாத அரங்காக மாற்றிய பெருமையும் அவர்களுடையது.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்ஹம்துலில்லாஹ்!

முதலாம் பாகத்தை வெற்றிகரமாக நிறைவாக்கித்தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அன்பிற்குரிய காக்கா,

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
தங்களின் பெரும்பாலானா நேரத்தை ஒதுக்கி பல்வேறு இன்னல்களுக்குண்டான ஒரு வரலாற்றுத் தொகுப்பை அதன் வீரியம் குறையாமல், அற்புதமான எழுத்து நடையில் எங்களுக்கு வகுப்பெடுத்து முதல் பாகத்தினை நிறைவு செய்த சூட்டோடு அடுத்த பாகம் தொடரும் என்ற தகவலையும் உறுதியளித்திருப்பதற்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும் தங்களின்பால்.!


Ebrahim Ansari said...

சகோதரர் Abu Hajjaar

அவர்களுடைய அன்பான கருத்துக்கு ஜசாக் அல்லாஹ் ஹைர்.

ஒரே ஒரு விசயத்தை மட்டும் நான் உங்களுக்கு பதிலாகத் தர நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் டெக்னிகல் வார்த்தைகள் எனக்குப் பரிச்சயமானதல்ல நான் அவற்றைத் தேடியவனுமல்ல படித்தவனுமல்ல. ஒரு சாதாரண மனிதன் , அல்லது எழுதக் கூடியவன் வேறு எந்த வெளிக் கருத்துக்களின் தாக்கமும் இன்றி எழுதப்பட்டவைதான் வளைகுடா நாடுகள் பற்றிய கருத்துக்கள்.

அண்டை வீட்டான் படும் அவதியை கண்டுகொள்ளாதவனைப் பற்றிய ஒரு விமர்சனமாக அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். உணர்வுகளை சுயமாக வெளிப்படுத்தி இருக்கிறேனே தவிர வேறு எதையும் கக்கவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களைப் போன்ற மார்க்க அறிஞர்கள் எங்களின் எழுத்துக்களைப் படிப்பதன் மூலமாக அதிரை நிருபர் வலைதளத்தை அல்லாஹ் ஆசீர்வதிப்பதாகவே நான் கருதுகிறேன்.

மேலும் தங்களின் அறிவுரைகளை எதிர்பார்க்கிறேன்.

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்கள்

உங்களின் கருத்துக்கள் எனக்கு உரம் சேர்ப்பவை. ஜசாக் அல்லாஹ்.

sabeer.abushahruk said...

//நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் டெக்னிகல் வார்த்தைகள் எனக்குப் பரிச்சயமானதல்ல //

காக்கா,

மார்க்கத்தை ஊன்றிப் படித்த சகோதரர்கள் பலர் டெக்னிகல் வார்த்தைகளைக் கொண்டு ம் அவற்றின் அர்த்தங்களின் ஜாலங்களைக் கொண்டும்தான் பிணங்கிக் கிடக்கிறார்கள்.

நம்மைப்போன்ற நான்-டெக்னிக்கல் (non-technical) முஸ்லிம்களான சாதாரணமானவர்கள்தான் எல்லா தரப்பினரின் போதனைகளையும் கை கட்டி வாய்ப்பொத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

சகோதரர் அபுஹாஜர் அவர்கள் தமது கூற்றைத் தாராளமாக இங்கு எடுத்து வைக்கலாம். மற்றுமொரு டெக்னிகல் பிரிவினர் மறுத்துரைக்கலாம். இரண்டையும் கேட்கும் தகுதி மட்டுமே என்னைப் போன்றவர்க்கு உள்ளது, luckily.

மற்றும், ஏதோ விஷயம் இருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது. ஒரே காரணம், சகோ அபு ஹாஜரின் முந்தைய வாதங்களில் சத்து இருந்தது.

sabeer.abushahruk said...

//
மிகவும் முக்கியமாக நான் குறிப்பிட வேண்டியது, தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களை. இந்ததொடருக்கு அவர்கள் ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தார்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நான் தடம் புரண்ட நேரங்களில் காய்தல் உவத்தல் இன்றி சுட்டிக் காட்டி அதேபோல் வரிகளை கவனமாக எழுதவைத்த அன்புக்கு நான் அவர்களுக்குமிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன். //

மூத்தோர் ஏராளம் உண்டு காக்கா. ஆனால், மூதறிஞர்களுக்கு மட்டுமே மேற்கண்டவாறு அறிவிக்கும் பண்பு அமைகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஃபித்துன்யா ஹஸனா வல் ஆகிரத்து ஹஸனா, காக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

//மூத்தோர் ஏராளம் உண்டு காக்கா. ஆனால், மூதறிஞர்களுக்கு மட்டுமே மேற்கண்டவாறு அறிவிக்கும் பண்பு அமைகிறது//
சரியாக சொன்னீர்கள் காக்கா
அவர்கள் உயர்ந்த இதயத்துக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக
ஆமீன்

sabeer.abushahruk said...

வரலாறு மீள்பதிவாகட்டும்!

இஸ்ரவேலர்களுக்கு
இதரவேலை இல்லை
பாலஸ்தீனத்தில்
பாவம் செய்வதைத் தவிர

கான்க்ரீட் கட்டடங்கள்
கற்குவியலாகின்றன
இடிபாடுகளுக்கிடையே
இஸ்லாமிய உடல்கள்

குற்றுயிரும் குலையுயிருமாய்க்
குழந்தைகள்

இந்தக்
கொலை நிகழ்ச்சிகளைக்
கலை நிகழ்ச்சிகளாய்க்
கண்டு களிக்கின்றன
அண்டை நாடுகள்;
மென்று விழுங்குகின்றன
உலக ஊடகங்கள்

காக்கை குருவிகளைப்போல்
காஸா தெருக்களில்
சுட்டு வீழ்த்தப்பட்ட
சனங்கள்
செங்குருதிச் சேற்றில்
சிதறிக் கிடக்க
அங்கஹீனம் செய்கிறார்கள்
பாலஸ்தீனத்தை

நாக்கைச் சப்புக்கொட்டி
நரபலி செய்து
நரமாமிசம் உண்ணும்
நயவஞ்சக நரிகள்...
நிலங்களை அரித்தனர்;
நிஜங்களை அழித்தனர்

தட்டிக் கேட்டவரை
அதட்டி வைத்தனர்
அமெக்க அரக்கனின்
ஆதரவோடு
பசித்த வயிறுகளுக்கு
ரவை புகட்டினர் -
துப்பாக்கி ரவை!

அருளாளனை நம்பியோர்க்கு
பொருளாதாரத் தடை
வயிறு பசித்தாலும்
வற்றுமோ வீரம்?
நாவினில் நீர்த்தாகம்
நெஞ்சிலே வேறு தாகம் - அது
நாட்டின் விடுதலைத் தாகம்

மாத்திரை மருந்துகளை
யாத்திரையின்போது கொண்டுசெல்லத்
தடை செய்ததால்
கொசுக்கடிகூட அங்கு
விஷக்கடியானது

தலைவெட்டைச் சற்று
தாமதப் படுத்தி
உலகின்
கண்கட்டும்போது
மின்வெட்டைக் கொண்டு
துன்புறுத்தினர்,
கஸ்ஸாவிகளுக்கு
கற்கால வாழ்க்கை
தற்காலத்தில்!

மூச்சுக்காற்றை மட்டும்
முடக்க முடியுமெனில்
கஸ்ஸாவிகள் காலம்
கடந்தகாலம் ஆகியிருக்கும்

ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை

வருடக் கணக்கிற்குள்
வற்றிவிடும் இந்த
இம்மைக் கணக்கை
இறைவனிடம் சாட்டி
இருகரம் ஏந்துவோம்
வான்வழி வரலாறொன்றை
மீள்பதிவு செய்து
இஸ்ரவேலை ஆள்வதற்கு
இஸ்லாம் வரும்நாள்
வெகுதூரம் இல்லை!

- சபீர்

Iqbal M. Salih said...

பாலஸ்தீனம் பற்றிய இதற்கு முன் படிக்கக் கிடைக்காத ஏராளமான தகவல்கள் கோர்வையான எழுத்துக்களைகொண்டு அறிஞர் இ.அன்சாரி காக்கா அவர்களால் அலங்கரிப்பட்டிருந்தது. இந்தப் பணி சாதாரணமானது அல்ல! என்னைப் போன்ற இளவல்கள் படித்து வியப்பும் பெருமையும் கொள்ளும் அளவுக்கு அளப்பரிய பணியாகும். டாக்டர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு அல்லாஹ் நல்ல சுகத்தையும் நீண்ட வாழ்நாளையும் அளிப்பானாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா.... !

//ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை //

அருமை !

Ebrahim Ansari said...

கவிக் காக்கா.... !

//ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை //

அருமை !
அருமையிலும் அருமை !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் அன்பான இபுறாஹீம் அன்சாரி காக்கா,

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

உங்கள் அனைத்து பதிவுகளையும் கையடக்க அலைபேசியில் வாசிக்க நான் தவறியதில்லை,, ஆனால் என்னால் கருத்திட முடியவில்லை காக்கா காரணம் அலுவல் வேலையும், விடுமுறை நாட்களில் இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபடுவதும் என்று நேரங்கள் போகிறது.

பாலஸ்தீன வரலாற்று தொடர்பதிவியின் இறுதியில்கூட நான் கருத்திடாமல் இருந்தால் உங்களுக்கு நான் செய்யும் துரோகமாக இருக்கும்.

உங்களுக்கு வல்லவன் ரஹ்மான் நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்ததருள்வானாக. இன்னும் நம் சமுதாயத்திற்காக எழுத்துப்பணியில் மேலும் நிறைய செய்திகளை எடுத்துக்கூற அல்லாஹ் துனை நிற்பானாக..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//In Defense of Sunni Muslim Rulers of Arabian Gulf//

தம்பி அஹமது பிர்தவ்ஸ், அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்றுள்ள ஆட்சியாளர்களை (இஸ்லாமிய அரசாங்கள் என்று சொல்லுபவர்களை) சொல்லுகிறீர்களா?

இன்றுள்ள இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் முழுமையாக குர்ஆன் சுன்னா வழியில் ஆட்சி செலுத்துகிறார்கள் என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?

ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது என்பது வேறு, அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் என்று ஆயுதங்கள் தூக்குவது என்பது வேறு. ஆட்சியாளர்களை விமர்சனம் செய்த குர்ஆன் சுன்னா அறிஞர்களை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த பதிவில் மார்க்க அறிஞர்களை பற்றி விமர்சிக்க வில்லை. ஸஹாப்பாக்களை விமர்சிக்கவில்லை, இமாம்களை விமர்சிக்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எடுத்தேன் கவுத்தேன் என்ற தோனியில் இந்த பதிவின் எழுத்தாளரை இஹ்வானிகள், ஷியாக்களின் சிந்தனை தாக்கம் உள்ளது என்பது போன்ற வாசகத்தை நீங்கள் தவிர்த்திருக்க வேண்டும் என்பதாகவே நான் கருதுகிறேன்.

ஒரு வரலாற்று ஆய்வு பதிவை எழுதுவது என்பது இழகுவான காரியமல்ல, ஏதோ வசித்தோம் எழுதினோம் என்றல்ல... நிறைய வாசிக்க வேண்டும், கருத்துக்கள் கேட்க வேண்டும். இவைகளையும் தாண்டி மனிதன் என்கிற அடிப்படையில் தவறுகள் எழும், அவைகளை அழகிய முறையில் சுட்டிக்காட்டுவதே நல்ல முஃமீனுக்கு அழகாக இருக்க முடியும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நல்ல அனுகுமுறையை வைத்தே நாம் சொல்லும் சத்தியம் வெல்லும்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி தாஜுதீன் அவர்களுக்கு, வ அலைக்குமுஸ் சலாம்.

தங்களின் வேலைப் பளு முதலிய சூழல்கள் நான் நன்கு அறிந்தவையே. மேலும் ஒவ்வொரு தொடர் அல்லது பதிவுகளின் மீதும் தங்களின் கண்களும் கண்காணிப்பும் இருக்கும் என்பதையும் நான் உணர்ந்தவன். ஆகவே தாங்கள் கருத்திடவில்லை என்ற வருத்தமும் எனக்கு இல்லை.

இந்தத்தொடர் நல்ல முறையில் வந்திருக்குமானால் அதற்கு வெளியே தெரியாமல் எனக்குப் பல தகவல் உதவிகள் செய்த தம்பி அப்துல் கபூர் ( தற்சமயம் அமெரிக்காவில் இருப்பவர் ) அவர்களையும் நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

Ebrahim Ansari said...

மேலும் அவ்வப்போது கருத்திட்ட தம்பி அப்துல் மாலிக் அவர்களையும் நான் நினைவுகொள்ள வேண்டும். ஜசாக் அல்லாஹ் ஹைரா.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

இந்தத் தொடர் எழுதப்பட்ட நாட்களில் அளவற்ற அரிய ஆலோசனைகளை வழங்கியதுடன் மேற்கோள்களாகப் படிப்பதற்கான பல நூல்களையும் பரிந்துரைத்த அறிஞர் அதிரை அகமது காக்கா அவர்களுக்கும் கருத்திடாவிட்டாலும் தொடர்ந்து படித்து வந்த கலைக் களஞ்சியம் தம்பி நூர் முகமது அவர்களுக்கும் இறைவன் நல்ல சுகத்தைக் கொடுப்பானாக என்று இறைஞ்சியவனாக எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ebrahim Ansari said...

ஒரு புதிய கருப் பொருள் தரப்பட்டு இருக்கிறது. தந்தவர் ஒரு பத்திரிகையாளர். நமக்குப் பரிச்சயமானவர். இன்ஷா அல்லாஹ் அது பற்றி ஆய்ந்து எழுதுவோம்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! ஆம். ஆமோதிக்கிறேன். விஷயம் இருக்கிறது. எதிர்பார்க்கிறேன்.

புதிய கருப்பொருள் தந்துள்ளவர் யார்? KHAN ( னோம் ) என்று தேடிக் கொண்டிருந்தோம். அடிக்கடி நம்மை TEST பண்ணுவார். அவரேதான்.

aa said...

பிஸ்மில்லா. அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலுல்லாஹ். அம்மாபஃது

அன்புச் சகோதரர்களுக்கு

நம் மக்களிடையே வேரூன்றியுள்ள நோய்தான் வளைகுடா சுன்னி முஸ்லிம் ஆட்சியாளர்களை எதற்கெடுத்தாலும் குறைசொல்வது. இதற்கான பின்னனியை சற்று ஆழமாகப் பார்த்தால் இஹ்வானிகளின் சூழ்ச்சியும், இஹ்வானிகளின் கள்ளக் காதலர்களாகிய ஷியாக்களின் வன்மமும் இருப்பது மத்தியக் கிழக்கு அரசியலை கவனிப்போருக்கு தெரியும்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். அதாவது, ’வளைகுடா முஸ்லிம் நாடுகளில் நடப்பது அனைத்தும் இஸ்லாத்திற்கு உட்பட்டது; ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது’ என்றெல்லாம் முட்டுக் கொடுப்பதற்கு இங்கு நான் வரவில்லை. ஆம், பாவங்களும், அநாச்சாரங்களும் நடக்கின்றன. பிறமத கலாச்சாரங்களும், மேற்கத்திய அநாச்சாரங்களும் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் ’ஒரு முஸ்லிம் பெரும் பாவங்கள் செய்வதன் மூலம் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறான்’ என்ற வழிகெட்ட கவாரிஜிய சிந்தனையை ஒருபோதும் நாம் ஆதரிக்க மாட்டோம். இந்த கவாரிஜிய சிந்தனைக்கு சொந்தக்காரர்களான செய்யத் குதுப், மௌதூதி, பின்லேடன், அல்காயிதா, ஐ.எஸ், போன்ற வழிகேடர்கள் அல்லது தீவிரவாதிகளின் சிந்தனைப் போக்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். வளைகுடா நாடுகள் முஸ்லிம் நாடுகள் தான் , அவற்றின் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களே, இஸ்லாத்திற்கு எதிரானதாக இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு கீழ்படிவது அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு கடமை மட்டுமல்ல அது ஒரு இபாதத் என்ற அஹ்லுஸ் ஸுன்னாவின் ஏகோபித்த கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

அப்துல் மலிக் பின் மர்வான் என்பவன் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். அவன் அப்துல்லாஹ் இப்ன் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்று அவரது தளபதியையும் கொன்று கஃவையும் அழித்தான்.

இதன் பிறகும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனுக்கு பையத் செய்தார்கள். இன்னும் அன்று இருந்த சஹாபா ரலியல்லாஹு அன்ஹு அனைவரும் அவனுக்கு பையத் செய்தார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்துல் மலிக் பின் மர்வான் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளன். அல்லாஹ் அவன் மீது ரஹ்மத் செய்யட்டும், அவனிடம் சில நன்மைகளும் சில சிறப்புகளும் இருந்தன.

அவன் முஸ்லிம்களுக்காக சில நிலங்களை கைப்பற்றியதோடு சில ஜிஹாதுகளும் செய்தான் . இருப்பினும் அவன் ஒரு கொடிய கொடுங்கோல் ஆட்சியாளன்.

இருப்பினும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கற்று தந்தார்கள் , கற்று தந்தார்கள் , கற்று தந்தார்கள், இது ஸஹிஹ் புஹாரியிலும் ஸஹிஹ் முஸ்லிமிலும் இன்னும் ஏனைய கிரந்தங்களிலும் காணப்படுகிறது.

(1/3)

aa said...

" அவர்கள் உங்கள் மத்தியில் தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு கீழ்படியுங்கள். அவர்களிடம் நீங்கள் விரும்பியது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் " அவர்கள் உங்கள் மத்தியில் தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு கீழ்படியுங்கள். "

அப்போது சஹாபாக்கள் கூறினார்கள் " நாங்கள் அவர்களுக்கு எதிராக எங்கள் வாட்களை கொண்டு போராட்டம் செய்யக் கூடாதா ?

அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் " இல்லை , அந்த கொடுங்கோல் ஆட்சியாளன், உங்கள் மத்தியில் தொழுகையை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்கு கீழ்படியுங்கள்."

இவ்வாறெல்லாம் இருந்தும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு பொறுமையாக இருக்க சொன்னார்கள், கலகம் செய்து கிளர்ந்து எழும்ப அனுமதி கொடுக்கவில்லை.

இன்னும் யார் ஆட்சியாளனுக்கு எதிராக கலகம் செய்து கிளர்த்து எழுந்து விட்டார்களோ அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கலகம் செய்து கிளர்த்து எழுந்து விட்டார்கள். மேலும் அவர்கள் அநீதியான ஆட்சியாளனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தாலும் அந்த கிளர்ந்து எழுந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் .

பெரும்பாலான குழுக்கள் , ஆட்சியாளர்கள் மீது தங்கள் விரல்களை சுட்டிக்காட்டி மக்களின் கவனம் , உணர்வுகள் மற்றும் ஆதரவை பெறும் முயற்சி ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு தஃவா செய்கின்றன. அவர்களின் இந்த செயலினால் உம்மத் இன்னும் வீழ்ச்சிதான் அடைகிறது. அனைத்து சீற்றம், தீமைகளின் அழுக்கையும் மற்றும்ஏனையோரின் தவறுகளையும் ஆட்சியாளர் மீது சுமத்தி , அவர் மீது கிளர்ச்சி செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறார்கள்.


பின்னர் புரட்சிகள் மற்றும் கிளர்ச்சிகள் மூலம் அரசாங்கங்களின் வீழ்ச்சியை மற்றும் ஆட்சியாளர்களை மாற்றுவதை கொண்டு , அவர்களின் வழிகெட்ட வழிமுறைகளை உருவாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

இந்த அனைத்து வழிகெட்ட நடவடிக்கைகளுக்கும் காரணம் அல்லாஹ்வை பற்றிய இல்ம் , ஷரியாவின் கல்வி போன்ற அனைத்து விடயத்திலும் அறியாமை அடிப்படையில் செயல்படுவதால் ஆகும். இன்னும் வழிகேடர்களின் சூழ்சிகளில் வீழ்ந்ததும் ஆகும். மேற்கத்திய இறக்குமதியான ஆளுங்கட்சி-எதிர்கட்சி ஜனநாயக அரசியல், ஆர்பாட்டம், போராட்டம் போன்றவற்றால் முஸ்லிம் உம்மத் பீடிக்கப்பட்டிருப்பதும், ஸுன்னாவை
(2/3)

aa said...

விட்டும், ஸஹாபாக்களின் வழிமுறையை விட்டும் தூரச் சென்றதும் இந்த நோய்க்கான அடிப்படை காரனங்களாகும்.


அல்லாஹ்வின் தூதர் ஸகூல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றை இங்கு நினைவு ற விரும்புகிறேன். “யார் ஆட்சியாளர்களை நிந்திக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நிந்திப்பான்’ (திர்மிதி)

அடுத்ததாக, வளைகுடா நாடுகள் ஃபலஸ்தீன் விவகாரத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. சகோதரர்களே, நான் அறிந்த வரையில் வளைகுடா நாடுகள் தங்களால் முடிந்த அளவு பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் ஃபலஸ்தீனுக்கு உதவுகிறது. ஆனால் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை கவனத்தில் வைக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று இஸ்லாமிய உம்மத், முன்பிருந்த ராணுவ மிடுக்கோடு இல்லை என்பதையும், முஸ்லிம் நாடுகள் இராணுவ ரீதியாக யூத நாட்டிற்கு (இஸ்ராயில் என்பது நபி யாகூப் அலிஹிவஸல்லம் அவர்களின் பெயர் என்பதால், அதனை நான் அந்த முறைகேடான நாட்டிற்கு உபயோகிக்க விரும்பவில்லை) நிகராக இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும் (சேர்ந்து சிறுநீர் கழித்தால் மூழ்கடிக்கலாம் என்பதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் ஒத்துவராமேயொழிய நிதர்சனத்திற்கு அல்ல). பல முஸ்லிம் நாடுகள் அமீரகம் உட்பட, யூத நாட்டுடன் எந்தவிதமான ராஜதந்திர உறவுகளும் மேற்கொள்வதில்லை என்பதை சகோதரர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

முஸ்லிம் உம்மத் இத்தகைய பலவீனமான நிலையில் இருக்கும்போது ராணுவ நடவடிக்கை என்பதுமுஸ்லிம்களின் இரத்தத்தை ஆறாய் ஒட்டும் தற்கொலையாகத்தான் இருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள் அறிந்துக்கொள்வார்கள். சகோதரகளே, இன்றைய முஸ்லிம் உம்மத் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முஸ்லிம்கள் குரானின் பக்கமும் ஸுன்னாவின் பக்கமும் செல்வது ஒன்றேதான். அதுமட்டுமே தீர்வு. நம்முடைய ஆன்மாவை சீரமைத்து அல்லாஹ்வை ஒருமைபடுத்தி வணங்குவதும், அவனுடைய தூதரின் ஸுன்னாவை நமது வாழ்வில் பின்பற்றுவதும், அல்லாஹ் ஏவியவற்றைச் செய்வதும், அவன் தடுத்தனவற்றை விட்டும் ஒதுங்குவதும் தான் முஸ்லிம் உம்மத்திற்கான தீர்வு. மற்றபடி, இடஒதுக்கீட்டிலோ, அரசியல் அதிகாரங்களின் மூலமாகவோ, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் செய்வதன் மூலமோ, சமூக அரசியல் பொருளாதார முன்னேற்றங்கள் மூலமாகவோ அல்ல.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நேர்வழியில் செல்லும் பாக்கியத்தை தர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

(தமிழ் ஸலஃபி இணையதளத்திலிருந்து சில பகுதிகள் இங்கு எனது இந்த கருத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது)


அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி, ஷார்ஜா

(3/3)

aa said...

Clarification:

1/3ல் ஆறாவது பத்தி; ’அவன் அப்துல்லாஹ் இப்ன் ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்று அவரது தளபதியையும் கொன்று கஃபாவையும் அழித்தான்”

3/3ல் இரண்டாவது பத்தி; ”அல்லாஹ்வின் தூதர் ஸகூல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.”

aa said...

@ தாஜுதீன்

//ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது என்பது வேறு, அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் என்று ஆயுதங்கள் தூக்குவது என்பது வேறு. ஆட்சியாளர்களை விமர்சனம் செய்த குர்ஆன் சுன்னா அறிஞர்களை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.//

முஸ்லிம் ஆட்சியாளர்களை பொதுவில் விமர்சனம் செய்த அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் யார்? இவ்வாறு முஸ்லிம் ஆட்சியாளர்களை பொதுவில் விமர்சனம் செய்வது ஹராம். ஆட்சியாளர்களுக்கு பொதுவில் வைத்து உபதேசம் செய்வதே தவறு.

அஹ்லுஸ் ஸுன்ன்னாவினரின் அகீதாவான அகீததுத் தஹாவியவிலிருந்து சில வரிகள்

“And we do not hold it permissible to rebel against our Imaams and our leaders, even if they may be oppressive. Nor do we supplicate against them or remove ourselves from obedience to them. And we hold that obeying them is part of obeying Allaah and hence an obligation so long as they do not order (us) commit sins. We supplicate to Allaah for them that He grant them rectification and pardon.”

மேலும் பார்க்க
1) Correct methodology with regard to advising the rulers---->http://salaf-us-saalih.com/2010/12/31/correct-methodology-with-regard-to-advising-the-rulers/

2)openly criticising the Muslim ruler---->http://salaf-us-saalih.com/2010/12/28/openly-criticising-the-muslim-ruler/

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தம்பி அஹமது பிர்தவ்ஸ், அஸ்ஸலாமு அலைக்கும்,


//// இன்றுள்ள இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் முழுமையாக குர்ஆன் சுன்னா வழியில் ஆட்சி செலுத்துகிறார்கள் என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?///

முதலில் நான் கேட்ட முதல் கேள்விக்கு பதில் தாருங்கள், நீங்கள் இட்ட கருத்துக்கு பதில் தருகிறேன். இன்ஷா அல்லாஹ்.

தெளிவடைந்துக்கொள்வதற்காக, நல்ல ஆரோக்கியமான கருத்துரையாடல் செய்யலாம்.

aa said...

@தாஜுதீன் காக்கா

கேள்வி: //இன்றுள்ள இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் முழுமையாக குர்ஆன் சுன்னா வழியில் ஆட்சி செலுத்துகிறார்கள் என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?//

எனது பதில்: //முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். அதாவது, ’வளைகுடா முஸ்லிம் நாடுகளில் நடப்பது அனைத்தும் இஸ்லாத்திற்கு உட்பட்டது; ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது’ என்றெல்லாம் முட்டுக் கொடுப்பதற்கு இங்கு நான் வரவில்லை. ஆம், பாவங்களும், அநாச்சாரங்களும் நடக்கின்றன. பிறமத கலாச்சாரங்களும், மேற்கத்திய அநாச்சாரங்களும் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. // (பார்க்க: எனது வெள்ளியன்றைய முதல் கமெண்ட்)

இருந்தும் சொல்கிறோம், வளைகுடா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு கீழ்படிவது ஃபர்ளு மற்றும் இபாதத். அவர்களை விமர்சிப்பது, ஏசுவது ஹராம். அவர்களுக்கு தனிமையில் உபதேசிப்பதும், பொதுவில் பிரார்த்திப்பதும் ஸுன்னா. இதுதான் அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை.

aa said...

1) . Ibn `Umar (May Allah be pleased with them) reported: The Prophet (sallallaahu ’alayhi wa sallam) said, "It is obligatory upon a Muslim to listen (to the ruler) and obey whether he likes it or not, except when he is ordered to do a sinful thing; in such case, there is no obligation to listen or to obey.''
[Al-Bukhari and Muslim].

2) Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "It is obligatory upon you to listen and obey the orders of the ruler in prosperity and adversity, whether you are willing or unwilling, or when someone is given undue preference to you.''
[Muslim].

3) . Wa'il bin Hujr (May Allah be pleased with him) reported: Salamah bin Yazid Al-Ju`f (May Allah be pleased with him) asked Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam): "O Prophet of Allah! Tell us, what you command us to do if there arises over us rulers who demand of us what is due to them and refuse us what is due to us.'' Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) turned away from him, but he repeated the same question. Thereupon Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "Listen to them and obey them. They are responsible for their obligations and you are accountable for yours.''
[Muslim].

4) . Ibn `Abbas (May Allah be pleased with them) reported: Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "If a person notices in his ruler what he dislikes, he should show patience because he who departs from the (Muslim) community a cubit, dies like those who died in the Days of Ignorance.''
[Al-Bukhari and Muslim].

5) Abu Bakrah (May Allah be pleased with him) reported: I heard Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) saying, "He who insults the rulers Allah will insult him.''
[At-Tirmidhi].

6) 668. `Abdullah bin `Amr (May Allah be pleased with them) reported: We accompanied Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) on a journey. We halted at a place to take a rest. Some of us began to set right their tents, others began to graze their animals while others were engaged in competing with one another in archery when an announcer of Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) announced that people should gather for Salat. We gathered around the Messenger of Allah and he ((sallallaahu ’alayhi wa sallam)) addressed us, saying, "Every Prophet before me was under obligation to guide his followers to what he knew was good for them and to warn the evil thing which he knew. As for this Ummah, it will have sound state and in its early stage of existence; but the last phase of its existence, will be faced with trials and with things you do not recognize. There will be tremendous trials, one after the other, and to each the believer will say, `That is it'. Whenever a trial arrives the believer will say: `This is going to bring about my destruction.' When this passes, another calamity will approach and he will say: `This surely is going to be my end.' Whosoever wishes to be removed from the Fire (Hell) and admitted to Jannah should die with faith in Allah and the Last Day; and he should treat others as he wishes to be treated. He who swears allegiance to an Imam, he should give him the pledge in ratification and the sincerity of his heart. He should obey him to the best of his capacity. If another man comes forward as a claimant (when one has already been installed), behead the second.''

7)Anas (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, "Hear and obey even if an Abyssinian slave whose head is like a raisin is placed in authority over you.''
[Al-Bukhari].

aa said...

ஆட்சியாளர்களுக்கு கீழ்படிவதும், அல்லாஹ்வை வணங்கும் இபாதத்களில் நின்றும் உள்ள இபாதத் தான்; ஆட்சியாளர் கெட்டவராக, பாவியாக இருந்த்தாலும் சரியே.

So the rulers are to be obeyed as required by the Sharee’ah if they command that which is not contrary to the Command of Allaah and His Messenger. This is because the duty upon the people is to hear and obey when the ruler commands that which is not contrary to the Command of Allaah and His Messenger. In this situation and with this condition, their obedience to those in authority is obedience to Allaah (Azza wa Jal).

For this reason, we should bear in mind that when we carry out what the state authority has ordered from matters in which it must be obeyed, we are, in this respect, worshipping Allaah, The Most High, and drawing closer to Him through this obedience. So, bearing this in mind, our execution of the ruled matter will be something that draws us closer to Allaah, The Mighty and Majestic. It is something that we should be conscious of; because Allaah, The Most High, Says:

O you who believe, obey Allaah, and obey his Messenger, and those of you in authority.
[Qur’aan, soorat an-Nisaa’ (4): 59].

Shaikh Ibn Uthaimeen

http://salaf-us-saalih.com/2014/12/14/bear-in-mind-that-obeying-those-in-authority-is-like-worshipping-allah-shaykh-ibn-uthaymeen/

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய தம்பி அபுஹாஜர்,

// the rulers are to be obeyed as required by the Sharee’ah if they command that which is not contrary to the Command of Allaah and His Messenger//

//that which is not contrary//

தங்களின் "ஆள்பவனுக்கு அடங்கு" என்னும் வாதம் மேற்கண்ட உத்தரவில் அடிபட்டுப் போய் விடுவதாகவே நான் நினைக்கிறேன்.

காரணம், சகோதர முஸ்லிமுக்கு உதவச்சொல்லி நம் மார்க்கம் வலியுறுத்த அதற்கு முரணாகச் செயல்படும் ஆட்சியாளரைச் சாடுவது தவறில்லை.

aa said...

@ Bro. Shabeer

It looks the disease (Hate against Muslim Rulers) which was imported to our people particularly Tawheedis in Tamil Nadu in the name of Tawheed and Sunnaah is so severe and in advanced stage. Detailed refutation and explanation to your opinion to be followed later Insha allaah as I am in work right now.

In more aggressive defense of our beloved rulers
Ahamed Firdhous Salafi, Sharjah

aa said...

சகோ. சபீர் காக்கா அவர்களுக்கு

//தங்களின் "ஆள்பவனுக்கு அடங்கு" என்னும் வாதம் மேற்கண்ட உத்தரவில் அடிபட்டுப் போய் விடுவதாகவே நான் நினைக்கிறேன்.//

பாவமான விஷயங்களில் ஆட்சியாளர்களுக்கு அடிபணிவதையும், பாவியான ஆட்சியாளருக்கு அடிபணிவதையும் குழப்பிக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன். இதில் முன்னது தடுக்கப்பட்டது; பிந்தையது ஏவப்பட்டது; கடமையாக்கப்பட்டது

ஒரு உதாரணத்தோடு விளக்கினால் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். உதாரனமாக, ஆட்சியாளர் சினிமா பார்க்குமாறு உத்தரவிடுகிறார் எனக் கொள்வோம். அதாவது அல்லாஹ் தடுத்த ஹராமாக்கிய ஒரு விஷயத்தை அவர் உத்தரவிடுகிறார். இப்பொழுது அவருக்கு இந்த விஷயத்தில் கீழ்படிதல் இல்லை. ஆட்சியாளர் இதற்காக தண்டித்தாலும் சரியே. அதே சமயம், ஆட்சியாளர் சினிமா பார்க்கிறார் அல்லது சினிமா கொட்டகைகளுக்கு உரிமம் வழங்குகிறார் என்பதற்காக அவருக்கு கீழ்படியமாட்டோம் என்பது தடுக்கப்பட்டது. நீங்கள் இவ்வாறு ஆட்சியாளர்களின் குறையை துருவ ஆரம்பித்தால், இறுதியாக மிஞ்சுவது நாட்டில் குழப்பமும் கலவரமும் மட்டுமே. அல்லாஹ் ஹராமாக்கிய முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படும் (Practical விளக்கம் தேவைப்பட்டால் பாகிஸ்தானைப் பார்த்துக் கொள்ளவும். ஆட்சியாளர்கள் மீது குறை கூறி அவனவன் சட்டத்தை கையில் எடுத்து முஸ்லிம்களின் ரத்தத்தை ஆறாய் ஓட்டுகிறார்கள்). கடைசியாக, மக்கள் ஆட்சியாளரை விமர்சிப்பதற்கு/கிளர்ச்சி செய்வதறகு அற்ப காரணங்களை கூற ஆரம்பிப்பர் (ஆட்சியாளர் கரண்டைக்கு கீழ் ஆடை அனிகிறார், சேவ் செய்கிறார்; ஆகவே பாவம் செய்துவிட்டார் என்று ஆரம்பித்து இது தொடர் கதையாகும்).

”ஆள்பபவனுக்கு அடங்கு” என்பது எனது கருத்தல்ல; அல்லாஹ்வின் கட்டளை. (அதீவுல்லாஹ் அதீவுர் ரஸூல வ வூலுல் அம்ரி மின்கும்).

“அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் கீழ்படியுங்கள்” (அல் குரான்: 4:59).

ஆட்சியாளர் பாவியாக இருந்தாலும் கீழ்படிய வேண்டும் என்பது எனது சொந்த கருத்தல்ல. இது தான் வெற்றிபெற்ற கூட்டமான அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாவினரின் கொள்கை. இதில் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களிடம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் “ உங்களின் ஆட்சியாளர்களை வசைபாடாதீர்கள்; அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாதீர்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள்; ஏனெனில் (இறுதி நாள்) நெருக்கத்திலேயே உள்ளது.” (இப்னு அபி ஆஸிமின் அஸ் ஸுன்னா 2/474; அல்பானி அவர்களால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டது)

ஸஹாபாக்கள் வினவினார்கள் ”அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் இறையச்சமுள்ள நல்ல ஆட்சியாளர்களைப் பற்றி கேட்கவில்லை. இப்படி இப்படியெல்லாம் செய்யும் கெட்ட ஆட்சியாளரைப்பற்றி கேட்கிறோம்” எனக் கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் “ அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்; செவிமடுங்கள்; கீழ்படியுங்கள்” என்றே கூறினார்கள். (இப்னு அபி ஆஸிமின் அஸ் ஸுன்னா 2/494; அல்பானி அவர்களால் தரமானது என வகைப்படுத்தப்பட்டது)

கெட்ட ஆட்சியாளர்களை விமர்சிக்குமாறோ; அவர்களுக்கு எதிரக புரட்சி செய்யுமாறோ சொல்லவில்லை. சகோதரரே, ஆட்சியாளர்களை விமர்சிப்பதும், அவர்களுக்கு எதிராக புரட்சி செய்வதும், கிண்டலடிப்பதும், கூட்டம் போடுவதும் அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கற்றுத்தந்தது அல்ல. இவை எல்லாம் மேற்கத்திய குஃப்பார்களிடமிருந்து ஜனநாயகம், கருத்துச் சுதந்த்திரம் என்றப் பெயரில் நாம் இறக்குமதி செய்தது.
அல்லாஹ்வை நம்பாத குஃப்பார்களைப் பொறுத்து அல்லாஹ்வின் தண்டனையை/சோதனையை தங்கள் கரங்களால் எதிர்க்க முனைவர். ஆனால் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட முஸ்லிம்களாகிய நாம் கெட்ட ஆட்சியாளர்கள் வடிவில் வரும் அல்லாஹ்வின் தண்டனையயோ அல்லது சோதனையையோ பொறுமையைக் கொண்டும், நம்மை விட்டும் பாவங்களை அகற்றுவதன் மூலமும், குரான் - ஸுன்னாவின் பக்கம் உளத்தூய்மையுடன் நெருங்குவதன் மூலமுமே அல்லாஹ்விடன் உதவி தேட வேண்டும்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கு சத்தியத்தை அறிந்துக்கொள்ள தவ்ஃபீக் செய்வானாக. அல்லாஹ் முஸ்லிம்களின் ஆட்சியாலர்களுக்கு கிருபை செய்வானாக.

Ahamed Firdhous Salafi, Sharjah

sabeer.abushahruk said...

ok bro abuHaajar,

i shall wait to hear more from you, but with a request please.

Please do not give me too much element to read as proofs as i dont have time to read. You may place your own argument only without any examples, reference or proofs. You can provide me proofs only if i doubt ur argument and ask you to explain.

mainly, please do not contradict ur own statement like the one i quoted.

thanks for ur understanding.

aa said...

@bro. SHABEER

Please have a look on my last comment in Tamil as I hope you didn't read it by the time you posted your last comment.

I'll be more than willing to participate in a meaningful discourse like this as this particular subject (Obedience to Rulers) in Tamil world is corrupted beyond recognization by Tawheedis.

sabeer.abushahruk said...

தம்பி அபுஹாஜர்,

//ஆள்பபவனுக்கு அடங்கு” என்பது எனது கருத்தல்ல; அல்லாஹ்வின் கட்டளை. (அதீவுல்லாஹ் அதீவுர் ரஸூல வ வூலுல் அம்ரி மின்கும்).//

//the rulers are to be obeyed as required by the Sharee’ah if they command that which is not contrary to the Command of Allaah and His Messenger//

தங்களின் மேற்கோள்களின்படி இப்படி புரிந்து கொள்ளவா?

"ஆள்பவனுக்கு அடங்கு என்பது அல்லாஹ்வின் கட்டளை, ஆள்பவன் குர் ஆன் சுன்னத்திற்கு மாறாக கட்டளையிடாதவரை".

ஆம் என்றால், எனக்கு விளக்கம் தந்ததற்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர். இல்லை என்றால், மேற்சொன்ன ஆங்கில சொற்றொடரை நீங்கள் திரும்பப்பெற்றாக வேண்டும்.

ஆட்சியாளரைப்பற்றி இந்த கட்டுரை விமரிசிக்கவில்லை, ஆட்சியைப்பற்றி மட்டும்தான்.

(தங்கள் யூகம் சரியே. நான் ஆங்கில மறுமொழி இடும்போது தகளின் தமிழ் கருத்தைப் பார்க்கவில்லை. ஏனெனில், நானும் ஷார்ஜாவில்தான் வேலையில்தான் இருந்தேன்)

aa said...

@ மரியாதைக்குரிய சபீர் காக்கா

//தங்களின் மேற்கோள்களின்படி இப்படி புரிந்து கொள்ளவா?

"ஆள்பவனுக்கு அடங்கு என்பது அல்லாஹ்வின் கட்டளை, ஆள்பவன் குர் ஆன் சுன்னத்திற்கு மாறாக கட்டளையிடாதவரை".//

ஆட்சியாளர் பாவமான விஷயங்களைக் கொண்டு கட்டளையிட்டால், அதற்கு கீழ்படியலாகாது. மற்றபடி, அவரிடும் மற்ற கட்டளைக்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். பாவமான விஷயங்களை கொண்டு கட்டளையிட்டாலும், ஆட்சியாளரே பாவியாக இருந்தாலும் சரியான விஷயங்களில் அவருக்கு கீழ்படிவது கடமையே.

சகோதரரே, மீண்டும் நினைவூட்டுகிறேன். கெட்ட ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் சோதனைகளில் நின்றுமுள்ள சோதனை. அல்லாஹ்வின் சோதனையை அவனுக்கு கீழ்படிவதன் மூலம் தான் தற்காத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, மேற்கத்தைய இறக்குமதிகளான ஆளுங்கட்சி-எதிர்கட்சி அரசியல், பொது விமர்சனம் போன்றவறைக் கொண்டல்ல.

அபூ ஹாஜர் அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ஷார்ஜா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு