Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உள்ள ஆட்சியிலா? உருவாகப் போகும் ஆட்சியிலா ? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2015 | , , ,

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து கனவு காணுங்கள் என்று சொன்னார்கள், அதனால் நாங்களும் முன்னாள் மாணவர்கள்தானே என்றும் இளைஞர்கள்தானே என்ற மெதப்பில் இருக்கும் இந்த தருணத்தில் கனவு ஒன்றைக் கண்டு விட்டோம் அது என்னடான்னா அதிரைப்பட்டினத்தைச் சுற்றியே இருக்கு (மண்வாசனை யோடு) சரி நம்ம கணவு பலிக்குமா? எல்லாவற்றையும் வெளியில சொன்னா ! என்று யோசனையில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலும் வந்துவிட்டது அட ! நம்மவங்க எல்லாத்தையும் பலிக்க வச்சுடுவாங்கன்னுதான் ஒரு கற்பனையாக இப்படி எழுதத் தோனுச்சு !

இன்றைய (உள்ள) ஆட்சியில் சொன்னது அன்று இலவசம் இலவசம் இலவசம் அவைகள் இன்று எவர் வசம் என்று தேடவும் ஆரம்பித்து விட்டனர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய இலவசத்தில் மனவசப்பட்ட மக்கள்.

அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தேர்தல் களம் கண்ட அந்த நேரத்தில் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் அறிக்கைகள் என்று வெளியிட்டதாக எமக்குத் தெரியவில்லை ஒருவேளை இப்படியிருக்கலாமோ தேர்தல் அறிக்கை என்றொரு மரபு உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இல்லாமலிருக்குமோ யாம் அறியோம்!?.

எது எப்படியிருந்தாலும் ! தேர்தல் என்று வந்தால் அறிக்கைப் போர் நடந்தால்தான் அந்தச் சமரில் காரமும் இருக்கும் தும்மலும் இருக்கும் !

சரி அவர்கள்தான் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் சும்மாவா இருக்கமுடியும், ஆதலால் அவர்களின் சார்பாக பேருராட்சி மன்றத் தேர்தல் அறிக்கையை நாமே இங்கே சமர்பிப்போம் மக்களாகிய நீங்கள் தீர்ப்பை சொல்லுங்க பார்க்கலாம் !

- அதிகாலை அதிரை நகரினை அழகுற அனைவருக்கும் எழுந்திருக்க வைக்க வேண்டும் !

- காலைக் கதிரவன் கன்னிக் கதிரை வெளிக் கொணரும்போது எழும் சில்லென்ற புகையோடு கூடிய தெருக்கள் பெருக்கி எழும் புழுதியை ரசிக்க ரசிகர் மன்றங்கள் ஒவ்வொரு தெரு முணைகளில் வைத்திட வேண்டும்.

- இரவில் உறங்காத கொசுக்களை காலை முதல் மாலை வரை தாலாட்டி சீராட்டி உறங்க வைக்க தனி தொண்டர் படை அமைக்க வேண்டும்.

- குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்வரை வரும் காற்றை குழாய் வழியாக எடுத்துச் சென்று வீடுகளில் இருக்கும் மின் விசிறிகளை இயங்க வைக்கும் நவின வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

- கோடு போட்டு ரோடு போடாவிடினும் பாடுபட்டு கட்டிய வீட்டிற்குள் மழைநீரும், சாக்கடையும் நுழையாமல் நீண்டகால திட்டம் தீட்டி வடிகால் அமைத்திட வேண்டும் !

- வீட்டு வரி வசூல் செய்ய வீடுகளுக்கு வருபவர்கள் அது பேரூராட்சி கஜானாவுக்குள் சேர்கிறதா என்று உத்திரவாதம் தந்திட வேண்டும் !

- அதிவேக மின்சாரம் வேண்டாம், அளவான மின்சாரமும் அடிக்கடி அனைக்காத மின்சாரமும் வேண்டும் !

- சுற்றித் திரியும் பன்றிகளுக்கு ஊருக்கு ஒதுங்குப் புறத்தில் சங்கம் அமைத்து தெருவுக்குள் நுழையாமல் இருந்திட நடவடிக்கைகள் அவசியம் வேண்டும்.

- சாக்கடைதான் என்று நூறு சதவிகிதம் ஊர்ஜிதப் படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு குடிநீருக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியும் எது எங்கே இருக்கிறது என்ற நிலை தெரியாமல் தவிக்கும் இன்றைய நிலையில் !

- பிளாஸ்டிக் பைகளின் அராஜகத்தை அறவே அகற்ற முடியாவிட்டாலும் கண்டதும் அதனைச் சுட உத்தரவு போடவேண்டும் அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற (???) பணியாளர்களை அமர்த்தி கு.பொ.வாரியம் ஒன்று உருவாக்கி அதறகு தகுந்த தலைவரை இன்றைய இளம் தலையை அங்கே அமர்த்தப்பட வேண்டும்.

- இரவில் சுற்றித் திரியும் திருடர்களையும் திருந்தாத தருதலைகளையும் கண்கானிக்க வீட்டுக்கு வீடு வாசலில் ஐ.பி.கேமராவெல்லாம் வைக்காமல் (அரசாங்க பணத்தை வீணடிக்காதீங்க ப்ளீஸ்) உறங்கும் காவல்துறைய தட்டி எழுப்பி நடைபயில அனுப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அவர்களே அந்த பணியை கையில் எடுத்துக் கொண்டால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி அறிவிக்கவும்.

- கடைத்தெருவில் அதிநவின வசதியுடன் (குறிப்பாக வாங்கிப்போகும் மீன், இறைச்சி ஆகியவை கெடாமல் இருக்க ச்சில்லர் வசதியுடன்) கூடிய மெட்ரோ இரயில் நிறுத்தமும் மேம்பாலமும் அமைத்திட வேண்டிக் கொள்கிறோம் யோசனைக்கு இங்கிருக்கும் படத்தைக் மாதிரியாக பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


- பிலால் நகரிலிருந்து ஷிஃபா மருத்துவ மனை வரை பறக்கும் இரயில் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கவா போகிறது, ஆதலால் ஒரு யோசனை ஆங்காங்க தொங்கும் மின்சாரக் கம்பிகளை நன்றாக இழுத்துக் கட்டி அருகிலிருக்கும் வீட்டாருக்கு துணி காயப்போடும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் கண்டிஷன் மின்சாரம் தாக்குதல் நடக்கக் கூடாது !


- ஏற்கனவே அகல இரயில்பாதைக்கு போராடிக் கொண்டிருக்கும் அதிரைப் பெருநகர மக்களுக்கு ஆறுதலாக இரண்டு இரண்டாக தனியாக இருக்கும் தடங்களில் போலி விமானம் ஸாரி போயிங்க் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கே நிறுத்தினால் பெருமை பட்டுக் கொள்ளலாம்.


- செக்கடிக் குளத்தின் மேல் தொங்கு பாலம் கட்டித் தாருங்கள் என்று கேட்டால், நீங்களே வசூல் செய்து ஆகாயத்தில் இடத்தை வங்கித்தாருங்கள் அங்கே கட்டுவோம் என்று சொல்லும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இந்த உள்ளாட்சி மன்ற வேட்பாளர்களே, அதற்கான மாதிரியை இங்கே படத்தில் மாதிரி காட்டியிருக்கிறோம் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிட்டு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்துக் கொள்ளுங்கள்.


 - கடற்கரைத் தெரு பள்ளி அருகே நவீன வசதியுடன் கூடிய பஸ்வசதி நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் அங்கே அதிரை மாநகரில் அனைத்து தெருக்களின் வழியாக செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும், எதிர் காலத்தில் 4 நிமிடத்திற்கு ஒரு இரயில் / மெட்ரோ நமதூர் இரயில் நிலையத்திற்கு வந்து செல்ல இருப்பதால (!!!???) அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தர வேண்டுகிறோம் !


- மேலத் தெருவிலிருந்து வண்டிப்பேட்டை வரை சுரங்க வழி இரயில் அமைத்திட இங்கே ஒரு மாதிரிப்படம் இணைத்திருக்கிறோம் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து தெருக்களையும் ஒன்றினைக்கும் படியாக இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேட்பாளர்களை கெஞ்சி கதறி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இன்னும் இருக்கிறது கனவுகளாக ! இதேபோல் உங்களிடமும் இருக்கும்தானே ! பகிர்ந்திடுங்களேன் பின்னூட்டத்தில் !

அபுஇபுறாஹிம்

6 Responses So Far:

sabeer.abushahruk said...

தேர்தல் அறிக்கையாக இன்னும் அடாவடியாக நீங்கள் கேட்டாலும் செய்துதர சம்மதிக்கிறோம்.

தேர்தல் அறிக்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற அரசியல் பாலபாடம் அறியோதர் அல்லவே யாம்!

(வேட்பாளர் மைண்ட் வாய்ஸ்: எலக்ஷன் முடியட்டும்...மவனே இருக்கு உனக்கு)

sheikdawoodmohamedfarook said...

வௌவொருபள்ளிவாசலுக்குஅருகிலும்ஒருசெருப்புகடைவைத்துகாணாமல்போகும்செருப்புக்குபுதுசெருப்புஇழப்பீடாககொடுக்கலாம்அல்லதுசெருப்புக்குஇன்சூரன்ஸ் கம்பெனிதிறக்கலாம்.

sheikdawoodmohamedfarook said...

இரவில்தூங்காதகொசுக்களுக்கு15mgதூக்கமாத்திரைகொடுக்கலாம். //ஆங்காங்கேதொங்கும்மின்சாரகம்பிகளைஇழுத்துக்கட்டிதுணிகாயப்போட வசதிசெய்துகொடுக்கலாம்//அதோடுகாய்ந்ததுணிகளுக்குஇஸ்திரிபோட்டும்கொடுக்கலாம்.

sheikdawoodmohamedfarook said...

//மேலதெருவிலிருந்து வண்டிபேட்டைக்கு சுரங்கவழி ரயில்பாதை இணைக்கஇங்கேஒருமாதிரிதிட்டம்கொடுத்திருக்கிறோம்.......//''சரி!செய்துதருகிறோம்!ஓட்டுபோடுங்கள்என்பார்கள்.வென்றபின்'சுரங்கவழிரயில்எங்கே என்றால்''சுரங்கம்தொண்டபெருச்சாலிகிடைக்கவில்லைஎன்பார்கள்

Unknown said...

நீங்கள் கண்ட கனவு பகல் கனவு காக்கா பளிக்காது?

Ebrahim Ansari said...

இந்த அறிக்கை ஒளிபரப்பான நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். எனவே தாமதம்.

நடக்குதோ இல்லையோ.

எண்ணமே வாழ்வு.
நல்ல எண்ணங்கள் என்றாவது ஒருநாள் நிறைவேறலாம்.

இப்படி பலரது கனவுகளை விழித்தெழுந்து பட்டியலிடலாமே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு