Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வயோதிக வலிகள்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2015 | , ,

வலிகளோடு வாழப் பழகுவதே
வயோதிகத்தை
வரவேற்கும் வித்தை!
வலிகளில் - சில
மூட்டில் வருபவை - பிற
வீட்டில் தருபவை!

நிவாரணங்களைப் பற்றிய
உதாரணங்களின் பட்டியலில்
வயோதிகத்தின் வலிகளுக்கு
நிவர்த்தி பற்றிய குறிப்பில்லை!

மூட்டின் தேய்மானங்களும்
வீட்டில் அவமானங்களும்
கவனிப்பாரற்ற தருணங்களில்
கடுமையாய் வலிக்கும்!

களிம்பு பூசியோ
கனிந்து பேசியோ
ஆசுவாசப்படுத்தினாலும்
வலி நீங்க - நிரந்தர
வழி இல்லை!

எனினும்,
வலிநீக்கும் குளிகைகளிலும்
வாஞ்சையான விசாரிப்புகளிலும்
தற்காலிகமாக
விழிநீர்க்கும் வயோதிகம்!

தேங்காய்ப் பாலின்
மூன்றாம் பால்கஞ்சி
தெவிட்டாது முதுமைக்கு!

எனினும்,
காப்பகங்களில் விடுவதும்
கருங்குழியில் இடுவதும்
ஒன்றோ வேறோ?

நினைவு தப்புவதற்கு முன்
அன்பையும் அக்கறையையும்
நெஞ்சு நெகிழ
அனுபவிக்கத் தருவதால்
வாழ்க்கையை வென்றதாய்
திருப்தியுறும் வயோதிகம்!

இந்த
அன்பைவிட விலைகுறைவாய்
ஏதுமுண்டோ உலகில்
இவர்களுக்குத் தர?

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

8 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

வயோதிகம் அதுவந்தவனுக்கு வந்த அவமானம். ஒருவேளை அல்லாஅவனுக்குகொடுக்கும்பூலோகதண்டனையோ என்னோவோ தெரியவில்லை;சிந்தித்து பார்க்கிறான்;அவன்ஒருபெரிய விருட்சமாக இருந்தபோது அதுகொடுத்த நிழலில் இளைப்பாறிசுகம்கண்டவர்கள் எடுத்தெறிந்து பேசுகிறார்கள். இதற்க்கெல்லாம் விடைகாணும் வழிதேடவயதில்லை.அரும்பாய்இருந்தவன்துரும்பாய்போய் துவண்டு நிற்க்கிறான்.வழி?வழி?வழி? மருமகன்சபீரின்ஆழமான சிந்தனைக்குஒரு சபாஷ்.

N. Fath huddeen said...

masha allah

மூட்டின் தேய்மானங்களும்
வீட்டில் அவமானங்களும்
கவனிப்பாரற்ற தருணங்களில்
கடுமையாய் வலிக்கும்!

களிம்பு பூசியோ
கனிந்து பேசியோ
ஆசுவாசப்படுத்தினாலும்
வலி நீங்க - நிரந்தர
வழி இல்லை!

lines are very realistic!

Unknown said...


//நினைவு தப்புவதற்கு முன்
அன்பையும் அக்கறையையும்
நெஞ்சு நெகிழ
அனுபவிக்கத் தருவதால்
வாழ்க்கையை வென்றதாய்
திருப்தியுறும் வயோதிகம்! //

உண்மை.
இதுதான் வேண்டும்.
இதற்கான அடித்தளம்
நாமே இடவேண்டும்
அர்ப்பணிப்பினால்!

- அபூ பிலால்

N. Fath huddeen said...

//எனினும்,
வலிநீக்கும் குளிகைகளிலும்
வாஞ்சையான விசாரிப்புகளிலும்
தற்காலிகமாக
விழிநீர்க்கும் வயோதிகம்!//

உண்மையான வரிகள்!

கடந்த விடுமுறையில் ஊரில் இருக்கும் போது பெரியவர் ஒருவரை சந்தித்தேன் (இந்த வலைப்பூவில் அதிகம் கருத்து இடுபவர் தான் அவர்). நமது தெருவில் இருக்கும் போது பழைய நினைவுகளை பற்றி பேசிய உடன் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சொரிந்தது.

இந்த வரிகள் எவ்வளவு உண்மை! சுப்ஹானல்லாஹ்.

Ebrahim Ansari said...

ஆதரிக்கவும் ஆறுதல் தரவும் ஆண்மக்கள் இல்லாமல் இருப்போரின் மூட்டுகளுக்கு முட்டுக் கொடுக்க யாருளர்..

N. Fath huddeen said...

//Ebrahim Ansari சொன்னது…

ஆதரிக்கவும் ஆறுதல் தரவும் ஆண்மக்கள் இல்லாமல் இருப்போரின் மூட்டுகளுக்கு முட்டுக் கொடுக்க யாருளர்...//

ஆதரிக்க=ஆண்மக்கள் ஓகே! (நல்ல பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில் தான்)
ஆறுதல் தர= பெண்மக்கள் தேவை.

இன்று பெற்றோரில் பலர், ஆண்மக்கள் இருந்தும் கவனிப்பாரற்று இருப்பதை காணமுடிகிறது. காரணம் வெளி நாடுகளுக்கு சென்று விடுவதாலும், சில ஆண்மக்களின் மனைவிகளின் கண்டிப்பாலும் பெற்றோரை ஆதரிக்க மனமில்லாமல் விடப்படுகின்றனர். 17:23-25 இல் சொல்லப்பட்ட கட்டளை இவர்களுக்கு சொல்லப்பட வேண்டும். "தாயின் காலடியில் சுவனம் உள்ளது" என்ற ஹதீதும் சொல்லப்பட வேண்டும்.

Ebrahim Ansari said...

N. Fath huddeen said //ஆதரிக்க=ஆண்மக்கள் ஓகே! (நல்ல பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில் தான்) //

Yes. நல்லபிள்ளைகள் இல்லாமல் அந்தப் பிள்ளைகளும் தொல்லைகளாக இருப்பதும் உண்மைதான்.

sabeer.abushahruk said...

இளவயதில் ஆசை, செல்வம், உடல்பலம், வசதி, வாய்ப்புகள், இன்பம் துய்த்தல், விளையாட்டு, பொழுதுபோக்கு என ஏராளமான புற மற்றும் அகக் காரணிகள் நம் இருப்பை பயன்படுத்திக் கொண்டாலும் முதுமையில் உடனிருக்க தனிமையைத் தவிர வேறேதும் வாய்ப்பதில்லை.

அந்தத் தனிமையில் அசை போடுவதைத் தவிற வேறெந்த வாய்புகளும் தரப்படாமல் போகலாம். அதுபோது அன்பை வார்த்தால் அஃதே முதுமைக்குத் தெம்பைத் தரும்.

உள்ளம் தொடும் கருத்துகளால் கவிதைக்குப் பின்னூட்டமிட்டுவரும் மாமா அவர்களுக்கும் காக்காமார்களுக்கும் தம்பிக்கும் நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு