Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

லகும் தீனுக்கும் வலியதீன்... 21

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2016 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தலைப்பைப் பார்த்தவுடன் இது வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று யாரும் எண்ண வேண்டாம். இந்த பதிவின் சாயல் தனி நபரையோ அல்லது இயக்கத்தையோ சாடுவதாக தயைகூர்ந்து எண்ண வேண்டாம் என்று முன்னுரைக்கிறேன் !

அல்குர்ஆனில் உள்ள 109 வது அத்தியாயம் சூரத்துல் காஃபிரூன், 6 வசனங்களுடன் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அற்புத வார்த்தைகள். இந்த அத்தியாயத்தில் வரும் 6 வது அரபு வசனமே லகும் தீனுக்கும் வலியதீன் (لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ), இதன் அர்த்தம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

சமூக நல்லிணக்கம் பேணுகிறோம் என்ற எண்ணத்தில் மேல் சொன்ன இறை வசனத்தைச் சுட்டிக்காட்டி. நமக்கு பிரச்சினை வேண்டாம், எங்கள் மார்க்கம் சொல்லிவிட்டது “லகும் தீனுக்கும் வலியதீன்” (உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்). நீங்கள் உங்கள் மதத்தின்படி உங்கள் வணக்கத்தைச் செய்யுங்கள், நான் என் மார்க்கப்படி என்னுடைய வணக்கத்தைச் செய்கிறேன் என்று அவ்வப்போது பொதுவாக முஸ்லீம்களால் பொது தளங்களிலும், பொது மேடைகளிலும் சொல்லப்பட்டு வருவதை அறிவோம்.

முதலில் இந்த இறைவசனம் எங்கு? எப்போது? எந்த சூழலில் இறங்கியது இந்த வசனத்தின் பின்னணி என்ன? என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு அல்குர்ஆன் வசனத்தையும் நாம் எங்கு? எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தவறாக இறைவசனங்களை சம்பந்தமில்லாத சூழலில் பயன்படுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்பதில் நாம் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சூரத்துல் காஃபிரூன் அத்தியாயம் மாக்காவில் அல்லாஹ்வின் தூதர், நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் மூலம் அருளப்பட்டது.

குரைஷி கோத்திரத்தின் வாரிசு, அல் அமீன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட முஹம்மது நபி ஸல் அவர்கள் தங்களின் ஏகத்துவ அழைப்புப்பணியைத் தங்கள் குரைஷி கோத்திர மக்களிடம் எடுத்துவைத்த காலத்தில், நபி ஸல் அவர்களுக்கு பலவிதமான பொருளாதார மற்றும் திருமண ஆசைகள் காட்டி, நபி(ஸல்) அவர்களை ஏகத்துவப் பணியை முடக்கத் திட்டம் தீட்டிப் பார்த்தார்கள் அந்த குரைஷித் தலைவர்கள். 

இதோ முதல் திட்டம் “உங்களை இந்த மக்கா மாநகரின் முதல் தர செல்வந்தராக ஆக்குகிறோம், நீங்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுங்கள், நீங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்கிறோம், என்று இது போன்ற ஆசை வார்த்தைகள் சொல்லி ஆனால் எங்கள் தெய்வங்களை (லாத்து, உஸ்ஸா போன்றவைகளை) மட்டும் தவறாக சொல்ல வேண்டாம்”.  என்று இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களை மடக்கி பேரம் பேசினார்கள் ஏகத்துவ வாடையை வெறுத்த அன்றைய குரைஷி கோமாளிகள்.”

முதல் திட்டம் வேண்டாம் என்றால், இதோ இரண்டாவது சமாதானத் திட்டம். “முஹம்மதே நீர் ஒராண்டு எங்கள் தெய்வங்களான லாத்து உஸ்ஸாவை வணங்கும், அது போன்று நாங்களும் அடுத்த வருடம் நீர் அந்த ஓரிறை கொள்கையை நாங்கள் வணங்குகிறோம் என்ன சம்மதமா?” என்ற வடிகட்டிய இணை வைப்பு சமாதானத் திட்டத்தை எடுத்து வைத்தனர். ஏகத்துவக் கொள்கையில் ஒரு துளிகூட சமரசம் செய்யாத நம் மூன்னோடி நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் அல்லவா நம் தங்கத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். மக்காவில் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச்சொன்ன ஒரே காரணத்திற்காக வாழ்வா? சாவா? என்ற போராட்டத்துக்கு மத்தியில் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்த அந்த இக்கட்டான காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் “குரைஷி உறவுகளே கொஞ்சம் பொறுங்கள் என்னுடைய இறைவன் இதற்கு என்ன சொல்லுகிறான் என்ற பிறகு என் முடிவை சொல்லுகிறேன்” என்றார்கள்.

குரைஷி தலைவர்கள் முஹம்மது ஸல் அவர்களை தங்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்க முயற்சித்த இந்த வேளையில் தான் சூரத்துல் காஃபிரூன் முழு அத்தியாயமும் மற்றும் சூரத்துல் ஜுமர் அத்தியாயத்தின் 64-வது வசனம் என்ற இறைவசனம் இறங்கியது.

சூரத்துல் காஃபிரூன் அத்தியாத்தில்  அல்லாஹ் கூறுகிறான்.

“(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” 
(அல்குர்ஆன் 109: 1-6)

மேலும் சூரத்துல் ஜுமார் அத்தியாத்தின் 64 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

“அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” 
(அல்குர்ஆன் 39:64)

இந்த வசனங்கள் இறங்கிய பின்பு, குரைஷி தலைவர்களைப் பார்த்து முஹம்மது நபி ஸல் அவர்கள் “என் இறைவனின் கட்டளை வந்துவிட்ட பின்பு நான் உங்களோடு சமாதானம் செய்ய முடியாது” என்று சொல்லிய பின்பும்கூட, அவமானப்பட்டு, கேவலப்பட்ட குரைஷிகள் மேலும் ஒரு சமாதான திட்டத்தை வைக்கிறார்கள். “முஹம்மதே, எங்கள் தெய்வங்களின் சிலையை மட்டும் முத்தமிடும் அது போதும், நாங்கள் நீர் சொல்லும் இறைவனை வணங்குகிறோம்” என்று புதிய திட்டத்தை திணிக்கப் பார்த்தார்கள். இந்த தருணத்தில் தான் அல்லாஹ் சூரத்துல் ஜுமார் அத்தியாயம் முழுவதையும் இறைத்தூதருக்கு இறக்கி எச்சரிக்கையும் கொடுக்கிறான். 

அல்லாஹ் கூறுகிறான் அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்). (அல் குர் ஆன் 39:65)

கருத்துச் சுதந்திரமில்லாத ஒரு காலகட்டம், ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறை, பரம்பரை பரம்பரையாக சண்டைக்காரர்களாக வாழ்ந்த சமூகத்துக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்களின் குணநலங்களை ஏற்ற சமூகம் நம் தங்கத்தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கொடுக்கள் வாங்கள் பிரச்சினை இல்லை, பங்காளி பிரச்சினை இல்லை, மாமன் மச்சான் பிரச்சினை இல்லை, சொத்துப் பாங்கீட்டு பிரச்சினை இல்லை, நில அபகரிப்புப் பிரச்சினை இல்லை ஆனால் அல்லாஹ் ஒருவனே அவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும், அல்லாஹ்வுக்கு இணை துணை ஏதும் இல்லை என்று பிரச்சாரம் செய்ததை பொறுக்காத குரைஷி காபிர்கள். தங்களால் முடிந்த அனைத்து இணைவைப்பு சமாதான முயற்சிகளையும் கையாண்டார்கள். ஆனால் அல்லாஹ் தன் வஹியின் மூலம் நபி முஹம்மது ஸல் அவர்களுக்கு அறிவுரையும், ஆலோசனையும், எச்சரிக்கையும் செய்து இறை நிராகரிப்பாளர்களோடு ஓரிறை கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமாதானமும் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்த கட்டத்திலும் மாறு செய்யாத உத்தம நபி (ஸல்) அவர்கள். அன்றிலிருந்து தான் மரணிக்கும் வரை இறை நிராகரிப்பாளர்களுடன் ஓரிறைக் கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமாதானமும் செய்யவில்லை.

சூரத்துல் காஃபிரூன் இறங்கிய வரலாற்றில் நமக்கு நிறைய படிப்பினை உள்ளது.
  • அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களில் ஓரிறை கொள்கையை அடகுவைத்து எந்த ஒரு சமரசம் செய்வது கூடாது. இது தர்கா வழிபாடாக இருந்தாலும் சரி, பிறமத வழிபாடுகளாக இருந்தாலும் சரி.
  • சுற்றுலா என்ற பெயரில் இறைவனுக்கு இணைவைக்கும் இடங்களுக்கு, குறிப்பாக தர்கா, கோவில், சர்ச் போன்றவைகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்விடங்களுக்கு செல்வதன் மூலம் அவைகளை நாம் அங்கீகரித்த நிலைக்கு செல்ல நேரிடும்.
  • பிறமதத்தவர் அவர்கள் போலிக்கடவுள் நம்புகிறவர்களுக்கு பூஜை செய்யும் விழாக்களை தவிர்க்க வேண்டும்.
  • எம்மதமும் சம்மதம் என்ற பெயரில் அல்லாஹ்வுக்கு இணையான போலிக்கடவுள்களை புகழும் விழாக்களை தவிர்க்க வேண்டும்.
  • பிறமத நண்பர்களின் திருமணங்களில் இணைவைப்பை மையப்படுத்தி நடைபெறும் பூஜைகள் போன்ற நிகழ்வுகளில் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • மனிதாபிமானம் என்ற பெயரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலைகள், விக்கிரகங்களைக் கொண்ட இணை வைப்பு வழிபாட்டுத் தளங்களை சுத்தம் செய்வது போன்ற காரியங்கள், மக்களின் திருப்தியை பெற்றுத்தருமே தவிர, நம்மை படைத்த ரப்புல் ஆலமீனிடம் திருப்தியை பெற்றுத்தருமா? என்ற பாரதூர கேள்விக்கு நம்மிடம் பதில் உள்ளதா என்பதை நாம் சித்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிகழ்வுகளுக்கு அங்கீகாரம் வேண்டி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மீது திணிக்கப்படும்போது, அவைகள் தவறு என்று நாம் சுட்டிக்காட்ட வேண்டும், நமக்கு அது சாத்தியமில்லை, இணைவைப்பு காரியங்கள் நம்மீது திணிக்கப்படுகிறது என்ற நிலை வேறு வழியே இல்லை என்று வரும் போது, நம் ஈமானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற நிலைக்கு நாம் வந்தால் மட்டுமே சூரத்துல் காஃபிரூன் வசனத்தை நாம் உணர்ந்தவர்களாக முடியும். 

இதல்லாமல், மார்க்க விசயத்தில் நம் சகோதரர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்துரையாடலிலும், அறியாமல் தவறுகள் செய்யும் நம் முஸ்லீம்களிடமும் சகோதரர்களிடமும் சும்மா சகட்டு மேனிக்கு தன்னுடைய புரிதல் மட்டும் தான் சரி என்ற தோரணையில் “லக்கும் தீனுக்கு வலியதீன்” என்று சொல்லுவது வாடிக்கையாக உள்ளது. இது தவறு என்பதை சூரத்துல் காஃபிரூன் இறங்கிய வரலாற்றை வாசித்தால் விளங்கும். உலக மக்களுக்கு முன்னுதாரணமான உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், “லகும் தீனுக்கும் வலியதீன்” என்று சொல்லி தவறிழைத்தவர்கள் அல்லர், அநியாக்காரர்களிடம் சொல்லி நழுவவில்லை. கண்ணியத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டினார்களே தவிர, அவர்களிடம் ஓரிறைக் கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்யவில்லை.

நம்முடைய ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக நம்மீது திணித்து, இணை வைப்பிற்கு ஒத்துப்போக வைக்கும் நிலை வரும் போது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற வார்த்தையை சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாமே தவிர. சும்மா சகட்டு மேனிக்கு “லக்கும் தீனுக்கு வலியத்தீன்” என்று சொல்லி நழுவிக் கொள்வது சரியான அனுகுமுறையாகாது. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

“விநாயகர் ஊர்வலம் அமைதியாக நிறைவுற்றது”
“கந்தூரி திருவிழா படுவிமர்சியாக நடைபெற்றது”
“ஹிந்துக்கள் சார்பில் வைகாசி திருவிழா!”

என்று தலைப்பிட்டு செய்திகளாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் முஸ்லீம் ஊடகவியளாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அறியாமை பற்றியும், நீ காஃபிர், நீ முஷ்ரிக், நான் ஒரிஜினல் முஸ்லீம், அவன் பெயர் தாங்கி முஸ்லீம் என்று ஆன்லைன் ஃபத்வா கொடுக்கும் வழிகேட்டுக் கொள்கையாளர்கள் பற்றியும் “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற தலைப்பில் எதிர்வரும் பதிவுகளில் மேலும் நிறைய அலசலாம். இன்ஷா அல்லாஹ். 

தாஜுதீன்

21 Responses So Far:

Ebrahim Ansari said...

// மார்க்க விசயத்தில் நம் சகோதரர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்துரையாடலிலும், அறியாமல் தவறுகள் செய்யும் நம் முஸ்லீம்களிடமும் சகோதரர்களிடமும் சும்மா சகட்டு மேனிக்கு தன்னுடைய புரிதல் மட்டும் தான் சரி என்ற தோரணையில் “லக்கும் தீனுக்கு வலியதீன்” என்று சொல்லுவது வாடிக்கையாக உள்ளது. இது தவறு என்பதை சூரத்துல் காஃபிரூன் இறங்கிய வரலாற்றை வாசித்தால் விளங்கும். உலக மக்களுக்கு முன்னுதாரணமான உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், “லகும் தீனுக்கும் வலியதீன்” என்று சொல்லி தவறிழைத்தவர்கள் அல்லர், அநியாக்காரர்களிடம் சொல்லி நழுவவில்லை. கண்ணியத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டினார்களே தவிர, அவர்களிடம் ஓரிறைக் கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்யவில்லை.//

தம்பி ! சிறப்பாக விளக்கம் தந்து இருக்கிறீர்கள்.

விவாதங்களில் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாதவர்கள் அடுத்தவர்களை அவமானப் படுத்துகிறோம் என்ற அறியாமைத் தொனியில் இந்த வார்த்தைத் தொடரை பிரயோகிக்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் இனிமேலாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.

இறை நம்பிக்கை கொண்ட விசுவாசிகள் தங்களுக்குள் ஏற்படும் விவாதங்கள் மூலம் நம்மில் விளங்காதவர்களை விளங்கவைக்க வேண்டியதாக இருக்க வேண்டுமே தவிர விலக்கி வைக்க வேண்டியதாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த வார்த்தைத் தொடரை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்க முயலும் எவராக இருந்தாலும் அவர்கள் செய்த தவறுக்கும் - அதை உபயோகப்படுத்திய காரணத்தால் விசுவாசியான அடுத்தவர் மனது எவ்வளவு புண்பட்டு இருக்கும் என்றும் உணர்ந்து தவ்பாச் செய்து கொள்ள வேண்டும்; இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு இறை நம்பிக்கையாளனைப் பார்த்து இப்படியெல்லாம் கூற தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்தும் கொள்ள வேண்டும்.

மனப்புண்ணுக்கு மருந்திடுவதுபோல் அமைந்துள்ள இந்தப் பதிவை மனமார வரவேற்று தம்பி தாஜுதீனைப் பாராட்டுகிறேன்.

நீங்கள் எழுதாவிட்டால் இந்தப் பேசுபொருளில் நான் எழுதுவதாக இருந்தேன். அப்படி எழுதி இருந்தால் இவ்வளவு மென்மையாக இருந்து இருக்காது.

அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக!

Muhammad abubacker ( LMS ) said...

மனப்புண்ணுக்கு மருந்திடுவதுபோல் அமைந்துள்ள இந்தப் பதிவை மனமார வரவேற்று மச்சான் தாஜுதீனைப் பாராட்டுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌوَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47

இப்னு அப்துல் ரஜாக் said...

//எம்மதமும் சம்மதம் என்ற பெயரில் அல்லாஹ்வுக்கு இணையானக் கடவுள்களை புகழும் விழாக்களை தவிர்க்க வேண்டும்.//

இணையாக போலிக்கடவள்களை புகழும்
என இருக்க வேண்டும் please correct it

இப்னு அப்துல் ரஜாக் said...

Thank you for your explanation about sura kaafiroon.
Jazakkallah khair

இப்னு அப்துல் ரஜாக் said...

யாருக்கு இறக்கப்பட்டாலும், சூழ்நிலையை வைத்து நாம் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாமா ? கூடாதா?
Please ask a scholar first and let me know
Jazakkallah khair

இப்னு அப்துல் ரஜாக் said...

அழகான அமைதியான கருத்து பரிமாற்றங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நான் தயார்

Ebrahim Ansari said...


குற்றப் பத்திரிகை.
==================
1. நம்முடைய ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக நம்மீது திணித்து,

2. இணை வைப்பிற்கு ஒத்துப்போக வைக்கும் நிலை வரும் போது.

3. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு
=========================================

இவ்வளவும் செய்த அந்த so and so யார்? வெளிப்படையாக ஆதாரங்களுடன் சொன்னால் அந்த so and so விளக்கம் தருவார்கள். அல்லது வருத்தம் தெரிவிப்பார்கள். மன்னிப்புக் கேட்கவும் தயங்க மாட்டார்கள்.

Who is that So & so ? What are the proofs for the charges made against him?



sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

I declare that the 'so called' accusation on 'so and so' is absolutely rubbish. This posting clearly describes that the 'so and so' verses are spoken on those who deny one God, not on Muslims who might have difference in opinion due to accuracy in understanding the QurAn.

The same verses must be withdrawn from the comments as there is NO kafir in this forum, denying which will disturb the patience of concerned.

sabeer.abushahruk said...

//(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!//

தம்பி இப்னு அப்துர்ரஸாக்,

(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே! என்று துவங்கும் அத்தியாயத்தின் கடைசி வசனத்தை கையாண்ட நீங்கள் யாரை காஃபிர் என்கிறீர்கள்? அப்படி காஃபிர் என்று ஒரு மூமீனை விளிக்க உங்களுக்கு உரிமையைத் தந்த இறை வசனம் அல்லது நபி மொழி இருந்தால் பதியுங்கள். அதிரை அல்லது அமெரிக்க மொழிகளால் ஒப்பேத்த வேண்டாம்.

Shameed said...

//ஆன்லைன் ஃபத்வா//அருமை அருமை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அப்துல் லத்தீப்,

இந்த பதிவு மிகத்தெளிவாக எங்கு எப்போது லக்கும் தீனுக்கும் வலியதீன் பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய
பின்பு ஏன் so and so என்று மூடலாக சொல்லுகிரீர்கள்.

//யாருக்கு இறக்கப்பட்டாலும், சூழ்நிலையை வைத்து நாம் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாமா ? கூடாதா?
Please ask a scholar first and let me know
Jazakkallah khair//

இந்த குர்ஆன் வசனம் சக முஸ்லீகளிடம் புரிதலில் ஏற்படும் கருத்துமுரண்பாடுகளுக்கு பயன்படுத்தலாம் என்பதற்கு தெளிவான ஆதாரம் வைத்துவிட்டு கருத்திடுங்கள்.

அல்குர் ஆன் வசனங்களை தங்கள் சந்தர்ப்பத்திற்கு வளைத்துக்கொண்டு வியாக்கியானம் பேசி வழிகேட்டிற்கு சென்றவர்கள் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் வேண்டுமா? அல்குர்ஆன் வசனத்தை வைத்து ஷஹாப்பாக்களை காஃபிராக்கியவர்களின் வரலாறு வேண்டுமா? ஏன் சமகாலத்தில் அல் குர் ஆன் வசனத்திற்கு மாற்று விளக்கம் கொடுத்து அந்த விளக்கத்தை ஏற்காதவர்களை காபிர்கள் என்று திமிர்பிடித்து அலையும் முஃதஸிலா சிந்தனையாளர்களின் வழிகேடு பற்றிய தகவல் வேண்டுமா?

இணை வைத்தலுக்கு அழைக்கும் காபிர்களை பார்த்து சொல்லுவதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தையை அல்லாஹ்வுக்கு இணை வைக்காத மற்றும் இணை வைப்பை தூண்டாதவர்களுக்கு பயன்படுத்துவது மிகப் பெரிய பாவம். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

தெளிவுபெறவே இந்த பதிவே அன்றி விதாண்ட வாதம் செய்ய அல்ல.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே...

இந்த பதிவின் நோக்கத்தை திசை திருப்பக்கூடிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரர் அப்துல் லத்தீப்.. இந்த பதிவில் ஏதோனும் மாற்றுக்கருத்திருந்தால், தகுந்த விளக்கத்துடன் தெரிவிக்கலாம். அதல்லாமல் மீண்டும் மீண்டும் "லகும் தீனுக்கும் வலியதீன்" என்று கருத்திடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இந்த வசனத்திற்கு விளக்கம் கொடுத்த பிறகும் சக முஸ்லீம்களிடம் அதனை பயன்படுத்துவதை தவிர்த்தால், உங்கள் மறுமை வாழ்வுக்கு அது பலன் அளிக்கும் என்பதற்கு பின் வரும் விளக்கத்தையும் அதனை தொடர்ந்து வரும் ஹதீஸை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் தன்னோடு உரையாடிக்கொண்டிருக்கும் சகமுஸ்லீம்களை நோக்கி சொல்லுகிறார் "லக்கும் தீனுக்கும் வலியதீன் - அதாவது " உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்"

இதில் சகோ அப்துல் லத்தீப் அவர்களுடைய மார்க்கம் எது? இந்த தளத்தில் சகோ அப்துல் லத்தீப் அவர்கள் குறிப்பிட்ட மற்றவர்களின் (SO AND SO) மார்க்கம் எது?

நிச்சயம் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

மீண்டும் நினைவூட்டுகிறேன், சகட்டு மேனிக்கு அல்குர்ஆன் வசனங்களை பயண்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் நஷ்டவாளியாகிவிட வேண்டாம் சகோதரரே.. உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


“ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை ‘இறைமறுப்பாளனே!’ (‘காஃபிரே’) என்று விளித்தால் நிச்சயம் அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகி விடுவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அச்சொல், சொன்னவரை நோக்கித் திரும்பி விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம் 92

நாம் நேரடியாக காபிர் என்று சொல்லுவது தவறு என்பதை மேலுள்ள ஹதீஸ் நமக்கு விளக்குகிறது என்றாலும் மறைமுகமாக காபிர் என்ற கருத்தை முன் வைக்கக்கூடிய வாக்கியங்களை முஸ்லீம்கள் மீது பயண்படுத்துவது மிகவும் பாரதூரமானது என்பதும் இந்த ஹதீஸின் உட்கருத்தாக உள்ளது என்பது அறிவுள்ள மக்கள் அனைவருக்கும் விளங்கும்..

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

Wa alaikkum Salam
ஆரம்பம் முதல் , தவறாகவே புரிந்து வருகிறீர்கள் .
ஆட்களை குறிப்பிட்டு சொல்லப்பட்டது அல்ல.
கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் இஸ்லாமிய நெறிகளுக்கு முரணாக இருக்கும் போது, அதை சுட்டிக் காட்டும் போது, திருத்திக் கொளவதே நல்லது.சுட்டும் போது நெறியாளர் திருத்தியுள்ளார்.ஆனால் அதை எழுதும் நபர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தனி மனித சாடல் செய்யும் போது, அங்கே கொள்கை வேறுபாடுகள் தோன்றுகிறது .quran,hadeeth (Islam) Vs so called ithikasangal).
ஆகையால் சொல்லப்பட்டது தான் ,உன் வழி உனக்கு , என் வழி எனக்கு.

இப்னு அப்துல் ரஜாக் said...

Dear Thaj
Please refer all of their previous articles.
You will find out the answer, what I mean,in sha Allah.
Otherwise,kindly show those articles to an Ulama.if he finds,nothing wrong on it.in sha Allah, I will ask an apology in publicly through Adirai Nirubar.
This is my humble request.

இப்னு அப்துல் ரஜாக் said...

If my quote is wrong,lakum deenukkum waliyadeen.i ask Allah to forgive me.
May Allah show us the right path.


தாஜுதீன் (THAJUDEEN ) said...

//கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் இஸ்லாமிய நெறிகளுக்கு முரணாக இருக்கும் போது, அதை சுட்டிக் காட்டும் போது, திருத்திக் கொளவதே நல்லது.சுட்டும் போது நெறியாளர் திருத்தியுள்ளார்.ஆனால் அதை எழுதும் நபர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தனி மனித சாடல் செய்யும் போது, அங்கே கொள்கை வேறுபாடுகள் தோன்றுகிறது .quran,hadeeth (Islam) Vs so called ithikasangal).//

எது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரண்? என்பதை பல முறை கேள்விகள் கேட்டவர்களுக்கு தெளிவாக நீங்கள் பதில் அளித்து சுட்டிக்காட்டியதாக நான் அறியவில்லை. மாறாக அல்குர்ஆன் வசனங்களை மட்டுமே இட்டுக்கொண்டு, அதற்கு நீங்கள் சொல்லும் முரணுக்கு என்ன தொடர்பு என்பதைக்கூட நீங்கள் விளக்க வில்லை.

ஒரு கருத்து அல்குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களுக்கு முரண் என்றால் அது எப்படி முரண் என்பதை விளக்கினால் தானே புரிந்துக்கொள்ள இயலும்.

இது தவறு, இது இறை நிராகரிப்பு, இது இறை நிராகரிப்புக்கு துணை போகிறது, இது அல்குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களுக்கு என்று தகுந்த விளக்கத்துடன் சுட்டிக்காட்டாமல், எப்படி நீங்கள் கொள்கை வேறுபாடு என்று சொல்ல முடியும்?

நீங்கள் புரிந்து வைத்துள்ள கொள்கையின்படி தகுந்த ஆதாரத்துடன் இது தவறு அது தவறு என்று தெளிவாக நீங்கள் விளக்காதவரை, உங்களை மக்கள் தவறாகத் தான் புரிந்துக்கொள்வார்கள்.

"லக்கும் தீனுக்கும் வலியதீன்" அல்குர்ஆன் வசனம் முஸ்லீம்களுக்குள் பயன்படுத்த வேண்டாம் என்பதே அநேகரின் கோரிக்கை.

நான் ஒரு கட்டுரை எழுகிறேன்.. அவைகளில் சில கதைகள், ஆய்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், சில வரலாறுகள் எடுத்துக்காட்டப்படுகிறது.

நீங்கள் அந்த கட்டுரையில் உள்ளவைகள் அல்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்கிறீர்கள்..

தெளிவுபடுத்துங்கள் என்று கேட்கிறேன்..

நீங்கள் ஒரு அல்குர்ஆன் வசனத்தை மட்டும் குறிப்பிடுகிறீர்கள், விளக்கம் கொடுக்கவில்லை. வாசித்துப்பார் விளங்கும் என்கிறீர்கள்

வாசித்தேன் எந்த முரணும்எனக்கு விளங்கவில்லை என்று சொல்லுகிறேன். விளக்கம் கொடுங்கள் என்று மீண்டும் கேட்கிறேன்..

மற்றொரு அல்குர்ஆன் வசனத்தை இடுகிறீர்கள்..

இந்த வசனத்திற்கு என்ன தொடர்பு, இதற்கும் விளக்கம் கொடுங்கள் என்று கேட்கிறேன்..

நீங்களோ "லகும் தீனுக்கும் வலியதீன்" உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம் என்றீர்கள்.

என்னுடைய கேள்வி.. உங்கள் மார்க்கம் எது? என்னுடைய மார்க்கம் எது?

இது சரியான அனுகுமுறையா? தெளிவின்மை எங்கே உள்ளது?

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் தெளிவை கொடுப்பானாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Dear Thaj
Please refer all of their previous articles.
You will find out the answer, what I mean,in sha Allah.
Otherwise,kindly show those articles to an Ulama.if he finds,nothing wrong on it.in sha Allah, I will ask an apology in publicly through Adirai Nirubar.
This is my humble request.//

please, Can you specify one article in which you point out, that is against ALQuran and Sahih Hadees?

மனிதாக பிறந்துள்ள எவரும் தவறிழைப்பவர்களே.. தவறை சரியான முறையில் சுட்டிக்காட்டும் போது திருக்கொள்வார்கள்.

அன்மைகால நம்மில் பலர் கண்டுவரும் நடைமுறை உரையாடல்... நம் தவறை விளங்கிக்கொள்வதற்காக..

மெளலித் ஓதுவது கூடாது என்று ஒருவர் கூறுகிறார்..

ஏனப்பா கூடாது? மற்றொருவர் கேட்கிறார்..

அது கூடாவே கூடாது... அதில் ஷிர்க் இருக்கு..

அப்படி என்ன அதில் ஷிர்க் இருக்கு?

கூடாது என்றால் கூடாது..

அட ஏனப்பா கூடாது?

அதான் சொல்லிட்டேன்ல, அதுல ஷிர்க்கான வார்த்தைகள் இருக்கு என்று..

அப்படி என்ன ஷிர்க்கான வார்த்தை இருக்கு?

ம்ம்ம்.. நீ ஒரு நல்ல உலமா அல்லது தவ்ஹீத் மெளலவி கிட்ட கேட்டுக்கொள்ளுங்கள். அவர் தவறில்லை என்றால், நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மெளலித் ஓதுகிறேன் என்று சொல்லுவது அறிவார்ந்த செயலா?

அல்லது..

மெளலிதில் அல்லாஹ்வின் தன்மைக்கு இணையாக நிறைய வார்தைகள் உள்ளது. உதாரணமாக இவ்வுலகில் மரணித்துள்ள நபி ஸல் அவர்களிடம் து ஆ கேட்கும் வரிகள் நிறைய மெளலித்களில் உள்ளது.
நம்முடைய பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும், அவன் மட்டுமே நித்திய ஜீவன், அவனுக்கு உரக்கமில்லை, அவன் தனித்தவன்.
நபி ஸல் அவர்கள் நமக்கு வழிகாட்டி, அல்லாஹ்வின் தூதர். நபி ஸல் அவர்கள் நமக்கு நாளை மறுமையில் சிபாரிசு செய்வார்களே அன்றி, இவ்வுலகில் நம்முடைய பிரார்த்தனை நிறைவேற்ற மாட்டார்கள். தயவு செய்து சிந்தித்துப்பாருங்கள்.
அல்லாஹ் உணவை கொடுப்பவன், உறக்கத்தை கொடுப்பவன், கவலை மற்றும் நிம்மதியை கொடுப்பவன், நோய் மற்றும் நிவாரணம் கொடுப்பவன், உயிர் கொடுப்பவன் மற்றும் மரனத்தை கொடுப்பவன். அந்த அல்லாஹ்விடமே நம்முடைய பிரார்த்தனை இருக்க வேண்டுமே தவிர, வேறு யாரிடமும் நம்முடைய பிரார்த்தனை இருக்கக்கூடாது. அப்படி யாரிடம் நாம் பிரார்த்தனை செய்தால், அது அல்லாஹ்வுக்கு இணையாக அந்த நபரை ஆக்கி இணைவைத்த பாவத்திற்கு ஆளாக நேரிடும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக..
நான் சொன்ன விளக்கம் விளங்கவில்லை என்றால், உங்களுக்கு தெளிவு கிடைக்க அல்லாஹ்விடம் உனக்காக து ஆ செய்கிறேன் என்று சொல்லி அந்த நபரை மீண்டும் சந்திக்கு அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இப்படி கேள்வி கேட்டவர் தெளிவுபெறும்விதமாக பதில் அளிப்பதும் அவருக்காக து ஆ செய்வது அறிவார்ந்த செயலா இல்லையா?

அல்லாஹ் நம் எல்லோருடைய பாவத்தை மன்னித்து, நேர்வழி படுத்துவானாக.

Ebrahim Ansari said...

//ஆரம்பம் முதல் , தவறாகவே புரிந்து வருகிறீர்கள் .
ஆட்களை குறிப்பிட்டு சொல்லப்பட்டது அல்ல.//

முழுக்க முழுக்கத் தவறு. ஆட்களைப் பற்றி சொன்னால்தான் So and so என்று குறிப்பிடுவார்கள். மற்றவைகளைப் பற்றி சொன்னால் Such and such என்றுதான் சொல்வார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு