மலைமகனின் பருவுடலைத் தழுவ வேண்டி
மழைமுகிலில் பிறந்திடுவாள் அருவி மங்கை
நிலையுயர்ந்து அழகொளிரப் பருவம் எய்தி
நிலம்குளிரச் செய்கின்ற நோக்கத் தோடு
தலைமறைப்பாள் தனமிரண்டை இறுகச் செய்வாள்
தனதிடையின் திருப்பகுதி திறக்கா வண்ணம்
அலையலையாய்க் கிளைகளையே பெருகச் செய்வாள்
அவளழகின் முழுமையினை மக்கள் துய்ப்பார்!
அதிரை அஹ்மத்
13 Responses So Far:
https://static.xx.fbcdn.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gif
என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலையே.....!
'சுட்டி' சுருக்கனத் தொறக்க மாட்டேங்குதே......!
அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சாவின் மரபு!அழகாய் மரப்பு போட்டு அழகை மறைத்த வண்ணம் எடுப்பாய் கவர்கிறது!
இந்த மரபுக்கவிதையை அரபு நாட்டில் இருந்து படிக்கும்போது பாலைவன மணல் குன்றுகளுக்கு இடையில் அருவி பாய்ந்து கொண்டுவருவது போன்ற உணர்வு.....வாழ்த்துக்கள் காக்கா
ஒரு அழகான அருவியின் படம் காக்கா. வீடியோவாக ஓடுகிறது. ஆனால் அதை UPLOAD செய்ய இயலவில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன்.
கவிதையின் கருவைவிட கவிதையே அழகு!
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
கூந்தல் நரைத்தாலும்
குதூகலம் கொண்டாடுது
மலையருவி! :
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
கூந்தல் நரைத்தாலும்
குதூகலம் கொண்டாடுது
மலையருவி! :
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
நாளெல்லாம்
அருவிக் குளியல்
தலை துவட்ட நேரமில்லை
ஜன்னி கண்டது
மலமக்ளுக்கு:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
நாளெல்லாம்
அருவிக் குளியல்
தலை துவட்ட நேரமில்லை
ஜன்னி கண்டது
மலமக்ளுக்கு:
அருவியை அளவோடு கவிதையாய்ச்சொன்னாலும் அருவிபோல் அர்த்தங்கள் புதையச்சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்தியோர் அனைவர்க்கும் வல்லவன் அருள் சூழ்க! மிக்க நன்றி.
Post a Comment