Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 040 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2016 | , ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பெருமை கொள்வது கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. (அல்குர்ஆன்:28:83)

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! (அல்குர்ஆன்: 17:37)

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன்: 31: 18)

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு  அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை  மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்:28:76)

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதேஅல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). (அல்குர்ஆன்:28:77)

என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளதுஎன்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்:28:78)

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான் என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். (அல்குர்ஆன்:28:79)

உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினார். (அல்குர்ஆன்:28:80)

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன்:28:81)

அந்தோ தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாரளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ்  நம்மீது அருள் புரிந்திருக்கா விட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். “அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெறமாட்டார்கள் என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள். (அல்குர்ஆன்:28:82)

'சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், ''ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும், தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)'' என்று கேட்டார். ''நிச்சயமாக அல்லாஹ், அழகானவன், அழகை விரும்புகிறான். ''பெருமை கொள்வது, சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை கேவலமாக எண்ணுவதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 612)

''நரக வாசிகள் பற்றி உங்களுக்கு கூறட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, கடின இதயமுடையவரும், கஞ்சத்தனம் செய்பவரும், பெருமை கொள்வோர் ஆகிய அனைவருமாவர் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்பு (ரலி)   அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 614)
                                        
'தன் வேட்டியை பெருமையாக, (கீழிறக்கிக்கட்டி) இழுத்துச் செல்பவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 616)

'மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு  கடும் வேதனை உண்டு. 1) விபச்சாரம் செய்யும் வயோதிகன் 2) பொய் கூறும் அரசன் 3) பெருமை கொள்ளும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 617)

'கண்ணியம் என் வேட்டியாகும். பெருமை என் மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னிடம் ஒருவன் தர்க்கம் செய்தால், அவனை நான் தண்டிப்பேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 618)

'ஒரு மனிதன் கண்கவர் ஆடையை அணிந்து கொண்டு, தன் தலையை சீவி, பெருமையான நடையுடன் நடந்து சென்றான். அவனை அல்லாஹ் பூமிக்குள் இழுக்கும்படி செய்துவிட்டான். அவன் மறுமை நாள்வரை  பூமிக்குள் அழுந்தி சென்று கொண்டே இருக்கிறான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 619)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...

வாரத்தில் ஒன்றுக்கு, மூன்று அல்லது அதற்குமேல் அடிக்கடி நான் வாசிக்கும் வெள்ளிப் பரிசு இந்த அருமருந்து !

Unknown said...

அற்ப்புத விளக்கோடு (திருக்குரானுடன்) உலா வரும் அலாவுதீன் அவர்களே !
ஜஸாக்கல்லாஹ் ஹைர்

இவ்வுலகில் நாலு காசு வந்து விட்டாலே , பெருமை அடிக்கும், ஒவ்வருவரும், அது தன்னுடைய அறிவால் வந்ததல்ல அல்லாஹ் தன் பொக்கிஷத்திலிருந்து
நம்மை சோதித்து அறிந்து கொள்வர்தர்க்காக தந்தது என்பதை உணரவேண்டும்.

பல பலசாலிகள் சாவிகளை சுமக்கும் அளவுக்கு காரூனுக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களை அவன் கர்வத்தினால் அல்லாஹ் சுவடு தெரியாமல் அழித்தது போல் நாமும் அழிந்துவிடக்கூடாது ( அல்லாஹ் நம்மை காப்பாற்றவேணும்)

அல்ஹம்துலில்லாஹ், செல்வத்தினால் கர்வம் கொள்ளும் ஒவ்வருவரும் சற்று நேரம் சிந்திக்க வேண்டிய பொக்கிஷமான முன்னெச்செரிக்கையுடன்
கூடிய வசனங்கள்.

செல்வம் என்பது வந்து போகக்கூடியது ( வந்தோம் நாங்கள் செல்கிறோம் என்று சென்று விடுவதால்தான் செல்வம் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ). ஆதலால் ஒருவனுக்கு செல்வம் என்பது, அல்லாஹ்வின் அமானிதம், அவனிடம் திரும்பச்செல்லும்போது, இது என்னுடைய செல்வம் நான் உனக்கு ஏன் கணக்கு தரவேணும் என்று அல்லாஹ்விடம் கூற முடியாது.
ஏனனில், இது அவனுடையது, உன்னிடத்தில் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டு
அவன் சொன்ன வழியில் செலவழிக்க உனக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்புதான் .
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த நித்தியா ஜீவனிடம், என்றெண்டும் நிலையை இருப்பவனிடம் கணக்கு கொடுத்தே ஆகவேண்டும்.

ஆதலால் செல்வம் வந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு அடையாளம், சோதனையும், கேள்விகளும் நம் முன்னே விரிந்து கொண்டே செல்கின்றது என்றும் அர்த்தம். இதில் கர்வம் கொள்வதற்கோ பெருமை அடிப்பதற்க்கோ ஒன்றுமில்லை . மாறாக வரும் செல்வம் வரும் வழியும், அது நம்மை விட்டு செல்லும் வழியும், மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டிய ஒன்றாக எவனுக்கு செல்வம் கொடுக்கப்பட்டதோ அவன்மீது கடமையாகிறது.

ஆதலால் செல்வத்தை கொண்டு கர்வம் கொள்ளாமல், இது அல்லாஹ் தந்த அருட்கொடை, இதைக்கொண்டு மறுமைக்கான தேடல் என்ன என்பதை ஆராய்ந்து , அதன் படி அச்செல்வம் நமக்கு மறுமைக்கான ஒரு சோதனையாக இல்லாமல், அதன்மூலம், அல்லாஹ்வும் அவன் தூதரும் அங்கீகரித்த வழியில் அதனை ஆகிறத்தின் நர்ப்பேற்றினைப்பெற , இவ்வுலகில் பயன் படுத்துவோமேயானால், இன்று இம்மையிலும் வெற்றி, நாளை மறுமையிலும் வெற்றி.

இந்த இரண்டு வெற்றிக்கும் சொந்தக்காரர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக !

ஆமீன்.

அபு ஆசிப்.



M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா

பல தடவை படிக்க (த்தகுந்த) நன்மையான மருந்து இது.


--------------------------------------------
ரஜப் பிறை 14 / 1434

Anonymous said...

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன குர் ஆனையும், ஹதீசையும் யார் பின் பற்றுகிறார்களோ அவர்கள் நிச்சையம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவார்கள்.

ஒரு சில பேருக்கு பணம், காசு வந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை தலையும் தெரியாமல், காலும் தெரியாமல் ஆடுகிறார்கள். இதற்கு எல்லாம் அல்லாஹ்விடம் கேள்விக்கனக்கு இருக்கிறது என்று உணர்வதில்லை. பணம், காசு நிறைய வந்து விட்டால் தன்னுடைய பெற்றோர்களை மதிப்பதில்லை அவர்களை தூக்கி எரிந்து விடுகின்றன. இப்பொழுது எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அந்த பணம்,காசு நிலைத்து இருப்பதில்லை. எவ்வளவோ அதிகமாக சம்பாதிக்கிரமோ அந்த அளவுக்கு அல்லாஹ்விடம் மறுமையில் கேள்விக்கனக்கு இருக்கிறது என்று யாரும் உணர்வதில்லை. கொஞ்சமாக சம்பாதித்தாலும் அல்ஹம்துல்லில்லாஹ் என்று சொல்வதற்கு இன்று எத்தனை பேர் நம்மில் இருக்கிறோம்.

நிறைய சம்பாத்திதாலும், கொஞ்சமாக சம்பாதித்தாலும் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். நாம் பணம், காசுக்குத்தான் மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதை சமையம் அல்லாஹ்வுவை நினைவு கூறுவதற்கு எத்தனை பேர் மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சற்று அவரவர் தன்னுடைய மனதை எண்ணி பார்க்க வேண்டும். பணம், காசு இன்று நிறைய வருவது போல் தெறுகிறது ஆனால் அது எப்படி போகிறது என்று தெரிய வில்லை. கொஞ்சமாக சம்பாதித்தாலும் அல்ஹம்திலில்லாஹ் என்று கூறுங்கள். கொஞ்சமாக சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கேள்விக்கனக்கு கொஞ்சம் தான் அதை உணருங்கள். அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டு நீங்கள் மறந்து விடவும் வேண்டாம் மறக்கவும் வேண்டாம். பணம்,பணம் என்று பித்து பிடித்து அலைகிறவர்கள் அதைப்போல் அல்லாஹ்வை வணங்குவதற்கும் முழு உறுதியாக இருக்க வேண்டும்.

Anonymous said...

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன குர் ஆனையும், ஹதீசையும் யார் பின் பற்றுகிறார்களோ அவர்கள் நிச்சையம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவார்கள்.

ஒரு சில பேருக்கு பணம், காசு வந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை தலையும் தெரியாமல், காலும் தெரியாமல் ஆடுகிறார்கள். இதற்கு எல்லாம் அல்லாஹ்விடம் கேள்விக்கனக்கு இருக்கிறது என்று உணர்வதில்லை. பணம், காசு நிறைய வந்து விட்டால் தன்னுடைய பெற்றோர்களை மதிப்பதில்லை அவர்களை தூக்கி எரிந்து விடுகின்றன. இப்பொழுது எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அந்த பணம்,காசு நிலைத்து இருப்பதில்லை. எவ்வளவோ அதிகமாக சம்பாதிக்கிரமோ அந்த அளவுக்கு அல்லாஹ்விடம் மறுமையில் கேள்விக்கனக்கு இருக்கிறது என்று யாரும் உணர்வதில்லை. கொஞ்சமாக சம்பாதித்தாலும் அல்ஹம்துல்லில்லாஹ் என்று சொல்வதற்கு இன்று எத்தனை பேர் நம்மில் இருக்கிறோம்.

நிறைய சம்பாத்திதாலும், கொஞ்சமாக சம்பாதித்தாலும் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். நாம் பணம், காசுக்குத்தான் மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதை சமையம் அல்லாஹ்வுவை நினைவு கூறுவதற்கு எத்தனை பேர் மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சற்று அவரவர் தன்னுடைய மனதை எண்ணி பார்க்க வேண்டும். பணம், காசு இன்று நிறைய வருவது போல் தெறுகிறது ஆனால் அது எப்படி போகிறது என்று தெரிய வில்லை. கொஞ்சமாக சம்பாதித்தாலும் அல்ஹம்திலில்லாஹ் என்று கூறுங்கள். கொஞ்சமாக சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கேள்விக்கனக்கு கொஞ்சம் தான் அதை உணருங்கள். அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டு நீங்கள் மறந்து விடவும் வேண்டாம் மறக்கவும் வேண்டாம். பணம்,பணம் என்று பித்து பிடித்து அலைகிறவர்கள் அதைப்போல் அல்லாஹ்வை வணங்குவதற்கும் முழு உறுதியாக இருக்க வேண்டும்.

Ebrahim Ansari said...

மாஷா அல்லாஹ்!

வாராவாரம் இந்த மருந்து சாப்பிட்டால்தான் வாழ்வின் அர்த்தம் தெரிகிறது. அதிலும் இந்த வாரம் மனப் பித்தம் தீர்க்கும் மருந்து. அகந்தை ரோகத்தை அகற்றும் மருந்து. அகங்காரத்தை வேரறுக்கும் விந்தை மருந்து.

Shameed said...

பக்கவிளைவு இல்லாத பக்காவான அருமருந்து

sabeer.abushahruk said...

இந்த அருமருந்து ஒரு வெள்ளி விருந்து. தொழுது முடித்ததும் அவனிடம் அழுது கேட்கத் தூண்டும் வழிகாட்டல்.

நன்றி, அலாவுதீன்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Adirai pasanga😎 said...

ஜஜாகல்லாஹு கைரன்

Unknown said...

//''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் '' //


'' இன்ஷா அல்லாஹ் ''

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.