Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நம்மூர்ல நோன்பு (மலரும் நினைவுகளிலிருந்து சில.....) 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2016 | , , , , ,

கடந்த கால புனித ரமழான் மாதத்தில் நம்மூரில் மக்களால் புழங்கப்பட்ட சில சொற்கள் நம்மூர் வட்டார மொழியிலிருந்து...

பொறையப்பாத்தாச்சாம்முள்ள.... ஆம்மா பள்ளியாசல்லேர்ந்து நகரா அடிக்கிற சத்தமும் கேக்குது.... அப்பொ இன்னக்கி த்ராவியா தொழுஹப் போகனும்....

ஊட்ல ஒட்ரெ அடிக்கனும் ஆள அனுப்பி உடு நாளக்கி...

இன்னக்கி ஊட்ல வாடா சுடனும் கடெத்தெருவுக்கு போயி கொஞ்சம் ராலு வாங்கிக்கிட்டு வர்ரிரியா?

நோன்புக் கஞ்சி காய்ச்சிறத்துக்கு எறெச்சிக்கடையில ஆட்டுத்தலையும், கொஞ்சம் நெஞ்செலும்பும் வாங்கிக்கிட்டு வர்ரியா?

அதுக்குள்ள சவுரு பக்கிர்சா வந்துட்டாரு சீக்கனம் எழும்புங்கல்வ்வோ...சஹருக்கு சோறு ஆக்கனும்.

இந்தம்மா அசரு தொழுவிட்டு பள்ளியாசல்லுக்கு டிப்பன் பாசு எடுத்துக்குட்டு போயி கொஞ்சம் கஞ்சி வாங்கிக்கிட்டு வந்துர்ரியாம்மா?

சஹருக்கு தயிரு ஒரக்கனும் அவ்வூட்ல கொஞ்சம் ஒர மோரு வாங்கிக்கிட்டு வந்திர்ரியா?

பேரிச்சம் பழம் முடிஞ்சி போயிரிச்சி....கிரானிக்கடையில வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யா?

மாப்ளே, அசரு தொழுவிட்டு (செக்கடி, செடியன், வெட்டி) கொளத்துல குளிக்கப்போவோம் என்னா?

செத்த வாடாக்கார ஊட்டுக்கு போயி சம்சாவும், வாடாவும் வாங்கிக்கிட்டு வந்திர்ரிய்யாம்மா?

சர்வத்து கலக்கனும் இவ்வூட்லேர்ந்து கொஞ்சம் ஐஸ் கட்டி வாங்கிக்கிட்டு வாம்மா....

பரு மாவு முடிஞ்சி போச்சி நாளெக்கி அந்த மாவு இடிக்கிற பொம்புளைய ஊட்டுக்கு அனுப்புரியளா?

தையக்கடையில துணி தக்க குடுத்து எவ்ளோவ் நாளாச்சி? இப்புடி இன்னக்கி, நாளக்கிண்டு இழுத்தடிக்கிறாம்மா?

இன்னக்கி புள்ள தல நோன்பு புடிச்சிக்கிது....கலச்சி போயி என்னன்டோ போயிட்டாம்மா? கழுத்துல நெக்லஸெ போட்டு உடுவுளே....சாங்காலம் வாப்ச்சா ஊட்டுக்கு பத்தரமா கூட்டிக்கிட்டு போயிட்டு வாங்க...

கடப்பாசிய தட்டையில ஊத்தி ஆற வைய்யி நோன்புத்தொறக்க நேரமாச்சி.....

நாளக்கி சஹருக்கு உண்டக்கலியா செஞ்சிற வேண்டியது தான்....

பதுரு படைக்கி அரிசி மாவு ரொட்டியும், தேங்காயும் எடுத்து வைய்யிவுளே.....

த்ராவியா தொழிவிட்டு ஊட்டுக்கு வந்து பசியாறிட்டு வெளையாட போவலாம்.....

ஒரு நாளக்கி ரெண்டு ஜுசு ஓதுனாலே நோன்புக்குள்ள ரெண்டு குர்வான் முடிக்கலாம்..

சக்காத்து குடுக்க பேங்ல கொஞ்சம் சில்ரெ மாத்திக்கிட்டு வாம்மா..

நூர் லாட்ஜ்ல வாட் சம்சா (கறி சம்சா) இருவது ரூவாக்கி வாங்கிக்கிட்டு வாங்கங்க....

அப்புடியே மறந்துராமெ ரோஸ் மில்க் சர்வத்துக்கு ஜம்ஜா வெதெ கொஞ்சம் வாங்கிக்கிட்டு வாங்க...

நோன்பு நேரத்துல இப்புடி நொன்கு கடுக்காயா வாங்கிக்கிட்டு வந்திருக்கிர்ரியளே??? வயித்தெ கடுக்காது???

அவ்வொளுக்கு நோன்பு தொறந்ததும் தேத்தண்ணி குடிக்கனும்....நல்லா சுக்கு தட்டி போட்டு தேத்தண்ணி போட்டு சூட்டுக்கிளாஸ்ல ஊத்தி வைய்யி...

நோன்பு கடைசியில ஒரு மூணு நாளக்காச்சும் நம்ம முஹல்லா பள்ளியாசல்ல இஹ்திகாஃப்பு இரிக்கனும்ண்டு ஹாஜத்தா இரிக்கிது.

இன்னக்கி நம்ம பள்ளியில தம்மாம் உட்ராங்க....யார் ஊட்டு நார்சா? என்னா நார்சா?

மாப்ளே வர்ரியா அங்க போயி போர்வீட்டா, ஹார்லிக்ஸ், கல்கண்டு பாலு எதாச்சும் குடிச்சிட்டு வந்துர்லாம்மா???

நோன்பு நேரத்துல ராத்திரியில வெளியில சும்மா சுத்தாதிய ஆஹாது....

அந்த அஞ்சறெ பெட்டியெ எடு கஞ்சிக்கு கொஞ்சம் நச்சிரமிஞ்சிரம் அரச்சி போடனும்.

சின்னப்புள்ளயல்வொல்லாம் அங்கிட்டு போயி ஓரமா நிண்டு தொழுவுங்க.... பள்ளியாசல்ல ஓ ஓண்டு சத்தம் போடக்கூடாது.

மொம்க்ரபாஜியாரு (பரக்கத் ஸ்டோர்ஸ்) கடையில ரெண்டு குத்ரெ மார்க்கு வெள்ளெ வேட்டி எடுத்திக்கிட்டு வாங்க....

இன்னக்கி கவாபு சரியா வேவலெ....

வாசல்ல சாபரு நிக்கிறாஹ சில்லரெ காசு எடுத்துப்போடுவுளே....

நோன்புல காலையில ஒரு ஒஹமான வெயிலு அடிக்கிதும்மா...

அடுப்பு சரியா எரியல...பொகையா வருது...அப்புறம் கஞ்சியில பொகச்சுத்தி வாடெ வரப்போவுது....நல்லா அடுப்பெ எரிச்சி உடுங்க.....

எல்லாரும் சஹருக்கு எழும்பாமெ தூங்கிட்டாஹ..அதுனாலெ இன்னக்கி எங்கூட்ல எல்லாரும் பட்னெ நோம்பு.

இன்னக்கி தண்ணி கொஞ்சம் தான் உட்டானுவோ...

நகரா அடிக்கிற கம்பெ சாபு ஒளிச்சி வச்சிட்டாரு..எங்கெங்க ஒளிச்சி வச்சியெ??

கரெக்டா பாங்கு சொல்ற நேரத்துல கெரண்டே வேணும்டே அமத்திப்புட்டானுவோ.....இருட்டுக்கசமா இரிக்கிதும்மா....அந்த முட்டவெளக்கெ ஏத்துவுளே....நெருப்பட்டியெ காணோம்.....

பாங்கு சொல்லப்போறாஹ சீக்கினம் தண்ணிய குடிச்சிட்டு நிய்யத்து வச்சிக்கிடுங்க....

இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்ற நோன்பில் நம்முடன் இருந்தவர்கள் இந்த நோன்பில் இல்லை. இந்த நோன்பில் இருக்கப்போகுபவர்கள் அடுத்த நோன்பில் இருப்பார்களா? நிச்சயமில்லை. எப்படியும் ஒரு நாள் அவனிடமே மீள வேண்டியுள்ளது. 

யா அல்லாஹ்! காலஞ்சென்ற நம்மவர்களையும், மிச்சம் மீதியாய் எஞ்சியிருக்கும் எல்லோரையும் வர இருக்கின்ற புனித ரமழானின் பொருட்டு காத்தருள்வாயாக! பாவங்கள் யாவற்றையும் மன்னித்தருள்வாயாக! எஞ்சியிருக்கும் எங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி, எல்லாம் சலாமத்தாக்கி வைப்பாயாக!

கப்ராளிகளின் எல்லாப்பாவங்களையும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால் மன்னித்து பிழைபொறுத்தருள்வாயாக...சுவனபதியில் அவர்கள் அனைவரையும் சந்தோசமாய் சேர்த்தருள்வாயாக....ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

நல் நினைவுகளுடன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

15 Responses So Far:

Ebrahim Ansari said...

//சென்ற நோன்பில் நம்முடன் இருந்தவர்கள் இந்த நோன்பில் இல்லை. இந்த நோன்பில் இருக்கப்போகுபவர்கள் அடுத்த நோன்பில் இருப்பார்களா? நிச்சயமில்லை. எப்படியும் ஒரு நாள் அவனிடமே மீள வேண்டியுள்ளது. //

அடுத்த நோன்புக்கும் நினைவில் நிற்க வேண்டிய வரிகள்.

அதிரை நிருபரின் இவ்வருட நோன்புப் பதிவுகள் தம்பி நெய்னா அவர்கள் மூலம் ஆரம்பிப்பது அருமைதான்.

புன்முறுவலுடன் புனித நோன்பை வரவேற்போம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

யா அல்லாஹ்! காலஞ்சென்ற நம்மவர்களையும், மிச்சம் மீதியாய் எஞ்சியிருக்கும் எல்லோரையும் வர இருக்கின்ற புனித ரமழானின் பொருட்டு காத்தருள்வாயாக! பாவங்கள் யாவற்றையும் மன்னித்தருள்வாயாக! எஞ்சியிருக்கும் எங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி, எல்லாம் சலாமத்தாக்கி வைப்பாயாக!

கப்ராளிகளின் எல்லாப்பாவங்களையும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால் மன்னித்து பிழைபொறுத்தருள்வாயாக...சுவனபதியில் அவர்கள் அனைவரையும் சந்தோசமாய் சேர்த்தருள்வாயாக....ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ நெய்னா அவர்களின் ஆக்கம் என்றாலே அழகு இருக்கும்,ஊர் பாஷை மின்னும்,கண்டிப்பாக மறுமை பற்றி இருக்கும். இந்த சகோதரரைக் கொண்டு, ஊருக்கே சிறப்பு.

sheikdawoodmohamedfarook said...

பொம்பளைங்களுக்கு எப்போவும்போல கச்சேறிகொல்லைம்மா ஊட்டுலேதான் மம்மாலிம்சா ஹதீசு சொல்லப்போராரு! புதுஸா.கல்யாணமுடிச்ச பொண்ணுக புதுபொடவைஎடுத்துரூவாஅம்பதும் குடுக்கணும். மாசப் பணத்தோடமாமியாஊட்டு காரவுஹ இதைகுடுப்பாஹ.

Adirai anbudhasan said...

இனிய ரமலான் நெருங்கிவிட்டது, இந்த தருணத்தில் என் ஆதங்கம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். பல வருடங்கள் பனி நிமித்தம் ஊரை துறந்து இருந்துவிட்டு, இந்த வருடம் ஊரில் இருப்போம் என்று வந்தேன். என்னே ஏமாற்றம், ஒரு பள்ளியிலாவது பொறுமையாக கிராத் ஒதுகிரார்களா என்றால் இல்லை, என்ன அவசரமோ?. ஹாபிசாவிற்கு என்ன வார்த்தை ஓதுகிறோம் என்று தெரியுமா ? என்று சந்தேகப்படும் அளவிற்கு வேகம். எம்பெருமானார் ஓதும்போது ஒவ்வோரு வார்த்தையின் எழுத்துக்களும் கூட விளங்குமளவிற்கு நிறுத்தி ஓதுவார்கள் என்று கேள்விப்படுகிறோம்.

நோன்பு நேரத்தில் தான் பள்ளிநிறைய மக்கள் இருக்கிறார்கள், என்போன்றவர்கள் வருடத்தில் ஒரு முறை தான் முழு குரானையும் கேட்க கூடிய வாய்ப்புடையவர்களாக இருக்கிறார்கள். அதிலும் இப்படி இருந்தால்?, வல்ல நாயன் அருள் செய்து என் போன்றவர்களுக்கும் அவன் வார்த்தைகளை கேட்க வாய்ப்பை உருவாக்கித்தரட்டும்.

அல்லாஹ் தன கிருபையினால், மனித இனமும் ஜின் இனமும் வழி அறிந்து நடக்க 114 சூராக்கல் அடங்கிய கலாமை தந்திருக்கிறான், அதிலிருந்து மிக சிறிய சூராக்களை தேர்ந்து, பஜர், இஷா நேரங்களில் கூட ஓதி தொழுகிறோம். கேட்டால் நேரமில்லை அவசரம் அல்லது வயதானவர்கள் இருக்கிறார்கள் என்றே பதில் வரும். இதே வயதானவர்கள், இளைஞர் களாய் இருந்த போது இதே கேள்வி பதில். எப்பொழுதுதான் முழு குரானுடைய வெவ்வேறு சூராக்களை ஓதி தொழுவோம்?

தற்காலங்களில் பள்ளிகளிலேல்லாம் நாற்காலிகள் இருக்கின்றன இயலாதவர்கள் அமர்ந்து கொண்டே தொழலாம். விமர்சிக்க வேண்டும் என்றோ, யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ எழுதப்பட்டது அல்ல, சொல்வதில் பொருள் இருக்கிறது என்று பட்டால், காரியங்களை நிகழ்த்த வல்லமை உடையோர், சரி செய்யட்டும். அல்லாஹ் கரீம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எம்.எஸ்.எம்.(என்) வந்தாலே... நோன்பு பரவசம் ஊரில் இருக்கும் நெனப்பு அள்ளிகிட்டு வந்துடும் !

மறுமை பற்றிய நினைவூட்டல் என்றுமே இருக்கும் !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் MSM(n)

Aboobakkar, Can. said...

ஊரில் இருக்கும் காலங்களில் 20 ரக்காத் திராவிஹ் தொழுவிட்டு சரியாக அதிகாலை 1.50 மணிக்கு முகைதீன் ஜும்மா பள்ளியில் ஜமாத்துடன் வித்ரு தொழுவோம் .....அப்போது வர காப்பியும் வட்ட மேரி ரொட்டியும் பள்ளியில் சாப்பிட்டுவிட்டு 4.00 மணிக்கு சாகர் நிய்யத்து வைத்து படுத்தால் உடம்பு அதிகம் அசதியில் சஹரைவிட்டு விட்டு பஜ்ர் தொளுகைக்கே எழும்புவோம்..

அப்போ 'இணைக்கு நான் பட்டின நோன்பு'
என்று சொன்ன ஞாபகம் அதிகம் . ....

என்னதான் இருந்தாலும் பள்ளிவாசல் நோன்பு கஞ்சியிலே அந்த வாடாவை பிசுபோட்டு கஞ்சி குடிக்கும் சுகமும் அப்போது பச்சை மிளகாய் வாயில் மாட்டும் போது அதை துப்பும் ருசியும் அலாதி ஆனது.

Shameed said...

எம்.எஸ்.எம்.மின் நோம்பு கடுதாசி வெள்ளனமையோ வந்துடுச்சி

ZAKIR HUSSAIN said...

எம் எஸ் எம் ...அத்தனையும் அழியாத பொக்கிஷம். ரொம்ப சின்ன வயதில் நோன்புபிடித்துக்கொண்டே கால் பந்து விளையாடி களைத்துபோன ஞாபகம்.

adiraimansoor said...

///எம்.எஸ்.எம்.மின் நோம்பு கடுதாசி வெள்ளனமையோ வந்துடுச்சி//

ஹமீது பாய் அதுதான் எம் எஸ் எம்வின் எஸ் எம் எஸ்

sabeer.abushahruk said...

47 டிக்ரி செல்ஸியஸ் வெப்பத்தில் வேலை செய்துவிட்டு வந்து அதிரை நிருபர் பார்த்தால் எம் எஸ் எம்மின் தயவால் புத்துணர்சியூட்டும் ஊர் உலா!

adiraimansoor said...

தமிழ்..........தமிழ்............தமிழ்.......... எங்கும் தமிழ்....... எதிலும் தமிழ்............ அதிரை தமிழ்..........

அடுத்த ஊருக்கு புரியாத தமிழ்......... அவர்களுக்கு அகராதி தேவைப்படும் தமிழ் ........ செந்தமிழல்ல எந்தமிழ்......

அதிரை சம்பாசனைகளை களக்கி எடுத்து பொறுக்கி
தந்த நெய்னாவுக்கு ஜே.........
அப்படியே நம்மூர் தமிழுக்கு ஒரு அகராதியும் போட்டுங்கோ

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நீரின்றி வாடும் செடி போல தாயின்றி வாடும் என் உள்ளத்திற்கு தத்தமது உற்சாக கருத்து மூலம் நீர் பாய்ச்சிய என் மூத்த சகோதரர்களுக்கு நன்றியோடு கூடிய என் சலாமும், து'ஆவும் சென்றடையட்டுமாக...

மன்சூராக்கா, இதுக்கு முன்னாடி நம்மூரு வட்டார மொழியை தொகுத்து கிட்டத்தட்ட ஒரு ஆங்கில அகராதி போல் பதிவிட்டிருக்கிறேன் தேடி பார்த்துக்கொள்ளுங்கள் காக்கா.

அதிலும் இன்னும் விடுபட்ட நிறைய சொற்கள் சேர்க்க வேண்டியுள்ளது.

அப்துல்மாலிக் said...

தண்ணியிலேயே ஊரி கண்ணு சொவப்பாப்போச்சு எந்திருச்சி மோல வாடா நோம்பு போய்டப்போவுது....

செக்கடிக்குளத்துலே குளிக்கும்போது மாப்ளே நீ அடிக்கடி சொல்லும் வார்த்த இது... சூப்பர்டே

Yasir said...

சகோ.நெய்னாவின் ஆக்கத்தை படிக்கும் போது ஒரு நோன்பு நேரத்தில் ஊரில் தங்கியிருந்த உணர்வு.....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.