Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 053 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்... 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

''மூன்று துஆக்கள், ஒப்புக்கொள்ளப்படுபவைகளாகும். அவற்றில் சந்தேகம் இல்லை.

1. அநீதம் இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை, 2. பயணியின் பிரார்த்தனை, 3. தந்தை தன் மகனுக்குச் செய்யும் பிரார்த்தனை என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 980)

''நபி(ஸல்) அவர்கள், ஒரு கூட்டத்தாரின், தீமையைப் பயந்தால், ''அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக ஃபீ நுஹுரிஹிம், வநஊது பிக மின் ஷுரூரிஹிம்'' என்று கூறுவார்கள்.

துஆவின் பொருள்:

இறைவா! அவர்களுக்கு எதிரே உன்னையே நாங்கள் ஆக்குகிறோம். மேலும் அவர்களின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (அபூதாவூது, நஸயீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 981)

''(பயணம் செல்லும்) ஒருவர், ஒரு இடத்தில் இறங்கும் போது, ''அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்ஷர்ரி மா கலக'' என்று கூறினால், அவர் அந்த இடத்தை விட்டுப் புறப்படும் வரை எதுவும் அவருக்கு தீங்கிழைக்காது'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:
அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகள் மூலம், அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அறிவிப்பவர்: நவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 982)

''பயணம் என்பது வேதனையின் ஒரு பிரிவாகும். உங்களில் ஒருவரது உண்ணுவதை, அருந்துவதை, தூக்கத்தை அது தடுத்து விடுகிறது. உங்களில் ஒருவர் தன் குறிக்கோளை பயணத்தில் நிறைவேற்றிவிட்டால், அவர் தன் குடும்பத்தாரிடம் விரைந்து வரட்டும்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 984)

''நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து வந்தால், தன் குடும்பத்தாரிடம் இரவில் வரமாட்டார்கள். காலையில் அல்லது மாலையில் அவர்களிடம் வருவார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 986)

''நபி(ஸல்) அவர்கள், பயணத்திலிருந்து திரும்பினால், பள்ளிக்கு முதலில் சென்று, அதில் இரண்டு ரக்அத் தொழுவார்கள். (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 988)

''ஓர் ஆண், ஒரு பெண்ணுடன் அவளுக்கு திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவன் அருகே இருந்தாலே தவிர, தனித்திருக்க வேண்டாம். மேலும் ஒரு பெண், தனக்கு திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவன் அருகே இருந்தாலே தவிர அவள் பயணம் செல்ல வேண்டாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 990)

குர்ஆன் ஓதுவதின் சிறப்பு

(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம். (அல்குர்ஆன்:15:87 -அல் ஹிஜ்ர்)

(முஹம்மதே!) இந்தக் குர்ஆனை உமக்கு அறிவித்திருப்பதன் மூலம் மிக அழகான வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன் நீர் அறியாதவராக இருந்தீர். (அல்குர்ஆன்: 12:3 - யூஸுஃப்)

அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 4:82 - அன்னிஸா)

குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில், தன்(னை ஓதிய)வருக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 991)

''குர்ஆனைக் கற்று, அதை (பிறருக்கும்) கற்றுக் கொடுப்பவரே, உங்களில் சிறந்தவர்''   என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 993)

''குர்ஆனை நல்லமுறையில் (திறமையுடன்) ஓதுபவர், நல்லவர்களும் கண்ணியமிக்கவர்களுமான வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) சிரமத்துடன் திக்கி திக்கி ஓதுபவருக்கு இரண்டு கூலிகள் உண்டு என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 994)

''நிச்சயமாக அல்லாஹ் இந்தக் குர்ஆன் மூலம் சில கூட்டத்தார்களை உயர்த்துகிறான். மற்ற சிலரை அதன் மூலம் தாழ்த்துகிறான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 996)

''அல்லாஹ் குர்ஆனைத் தந்து, அதன்படி இரவும், பகலும் வாழ்கின்ற ஒருவர் மற்றும் அல்லாஹ் செல்வம் தந்து, அதை இரவும் பகலும் (இறை வழியில்) செலவு செய்கின்ற ஒருவர் ஆகிய இருவரிடத்திலேயே தவிர வேறு யார் மீதும் பொறாமை கொள்வது கூடாது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 997)

''அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தைப் படித்தால், அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது, அது போன்ற பத்து மடங்காகும். ''அலிஃப், லாம், மீம்'' என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். எனினும் 'அலிஃப்' ஒரு எழுத்து, 'லாம்' என்பது ஒரு எழுத்து. 'மீம்' என்பது ஒரு எழுத்து ஆகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 999)

''குர்ஆனில்  ஏதேனும்  ஒரு  சூராவை தன் உள்ளத்தில் வைக்காதிருப்பவன், பாழடைந்த வீடு போல் ஆவான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1000)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

வானம் பிளந்து விடும்போது, (82:1)

நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது,(82:2)

கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது,(82:3)

மண்ணறைகள் புரட்டப்படும் போது,(82:4)

ஒருவன் தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வான். (82:5)

மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? (82:6)

அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான். (82:7)

அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான். (82:8)

ஆனால் நியாயத் தீர்ப்பு நாளை பொய்யெனக்
கருதுகிறீர்கள். (82:9)

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.(82:10,11)

நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள். (82:12)

நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள். (82:13)

பாவிகள் நரகில் இருப்பார்கள். (82:14)

தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் கருகுவார்கள். (82:15)

அதை விட்டும் அவர்கள் மறைந்து விடுவோர் அல்லர். (82:16)

தீர்ப்பு நாள் எதுவென (முஹம்மதே) உமக்கு
எப்படித் தெரியும்? (82:17)

பின்னரும் தீர்ப்பு நாள் எதுவென உமக்கு
எப்படித் தெரியும்? (82:18)

அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே. (82:19)

(அல்குர்ஆன்: 82:1-19 - அல்இன்ஃபிதார்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் .S

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்... காக்கா !

sabeer.abushahruk said...

அருமருந்து வாயிலாக இறைவனும் இறைத்தூதரும் அருளிய நன்னெறிகளை வாசித்துணர்வதைவிட வேறு ஒரு மருந்து வேண்டாமே.

நன்றி அலாவுதீன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

யா அல்லாஹ்! நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டு பெரும்பாலும் நீதிக்கு புறம்பாக செயல்படும் வர்கத்தினர்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ்! பயணத்திலிருக்கும் எங்களின் தேவைகளை நிறைவேற்றித்தருவாயாக!
யா அல்லாஹ்! மகனின் அனைத்து செயல்களும் உனக்கு உகந்ததாக, அனைத்தையும் நன்மையுள்ளதாக நாடி வைப்பாயாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர், அலாவுதீன் காக்கா.

Shameed said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர், அலாவுதீன் காக்கா.

Ebrahim Ansari said...

//அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே. (82:19)//

அல்லாஹ் நமது பாவங்களைப் பொறுத்தருள்வானாக!

வாரம் ஒரு முறையாவது அவரவர் மனசாட்சியுடன் பேசவைக்கும் தொடர். ஜசாக் அல்லாஹ் சகோதரர் அலாவுதீன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் : ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.