Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கலந்து ஆலோசிப்போம் 50

அதிரைநிருபர் | December 30, 2010 | ,

அஸ்ஸலாமு அழைக்கும்,

இளையோர் எங்களிடம் பொறுப்புக்களை கொடுத்து பாருங்கள் நாங்களும் அசதிக்காட்டுகிறோம் உங்களுக்கு அனுபவம் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு பல திறமைகள் உள்ளன.

நீங்கள் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் 7 ஏழு நாட்கள் சென்றீர்கள்.....

நாங்கள் விமானத்தில் 4 மணி நேரத்தில் சென்றோம்....

நீங்கள் கப்பலை கடலில் ஓட்டினீர்கள்....

நாங்கள் கடலிலும் ஓட்டினோம் த(க)ரையிலும் ஓட்டினோம் (ஹோவர்கிராப்ட்)  கடல் உள்ளேயும் ஓட்டினோம் (சப்மரின்)....

நீங்கள் டெலிபோனை கண்டு பிடித்து ஆப்பறேட்டரிடம் நம்மரை சொன்னீர்கள்....

நாங்கள் நபருக்கே டயல் செய்தோம் (மொபைல்).....

நீங்கள் ஆகாயத்தில் சாட்லைட் விட்டீர்கள்.....

நாங்கள் அதை உடைப்பதற்கு மிசைல் விட்டோம்.....

நீங்கள் நீர் ஆவியில் ரயில் விட்டீர்கள்......

நாங்கள் நீரை கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் செய்தோம் (கிரையோஜெனிக்)......

இதெல்லாம் உங்களை மட்டம் தட்டவோ அல்லது அவமதிக்கவோ அல்ல, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் முன்னோர்களை விட நீங்கள் புத்திசாலிகள்தான், உங்களைவிட நாங்கள் புத்திசாலிகள் என்பதை ஏற்றுகொள்ளுங்கள், எங்களுக்கு பிறகு வரும் எங்கள் சந்ததிகள் எங்களைவிட புத்திசாலிகள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இன்னும் அவர்களை புத்திசாலிகளாக ஆக்குவதற்கு  நாங்கள் தொடங்கி விட்டோம் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை.

எதுவாக இருந்தாலும் இளையோர்கள் எங்களிடமும் கலந்தாலோசித்து,   கல்வியிலும் மற்ற செயல்பாடுகளிலும்  நல்லது கெட்டது எது என்பதை அலசி ஆராய்ந்து நல்லமுடிவை எடுங்கள் பெரியோர்களே, தாய்மார்களோ, சகோதர, சகோதரிகளே.

---SHAHULHAMEED
    DAMMAM

50 Responses So Far:

அதிரை முஜீப் said...

ஹலோ! இப்படியே மாறி மாறி செய்தியை போட்டு எங்கள் நேரத்தை எல்லாம் வீனாக்கப்படாது!. ஏற்கனவே நாங்கல் கல்வி மாநாட்டு அறிவிப்பு செய்தி வந்ததுமே ஒருவாரமா சாரா மண்டபத்தில் காத்துகிடக்குறோம்!.சீக்கிரம் வந்து ஆரம்பியுங்கோ.........!

நாங்களும் படிக்கணும். படிக்கணும்......! உங்களைவிட ஓரு ஸ்டேப் பிரெண்டுங்கோ.....!

இன்றைய பேரக்கு(இ)ளைஞர்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.பழமையின் அனுபவம்,புதுமையின் வேகத்துடன் கூடிய கூரிய அறிவு இவை இரண்டையும் அழகாய் ஒப்பிட்டு பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்து நல்லதொரு சிந்தனை ஆக்கத்தை தந்த சகோதரர் சாகுல் சும்மா,சும்மா எனக்கு கவிதையெல்லாம் வராதுன்னு இனி சொன்னா யார்தான் நம்புவார்? தனடக்கம் சரிதான் அதற்காக இப்படியெல்லாம் சொன்ன????? ஒவ்வொரு வரியும் கவிதை தன்மையை உணர்த்தியது. நடை யெல்லாம் கவினடை,ஒவ்வொன்றும் தேனடை.என்று ஒப்பிடவும்,வேறுபடுத்தி பார்கவும் தெரிந்து விடுகிறதோ அன்றே கவி எழுத தகுதி வந்து விட்டது என்று அர்த்தம். நானெல்லாம் கவிதை என்று ஏதோ கிறுக்க நீங்க மட்டும் ஒன்னும் தெரியல,ஒன்னும் தெரியலன்னு இனியும் சொல்ல வேண்டாம்.வாழ்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபரும் !
அதிரைப்பட்டினத்தானும் !

சாதிக்க பிறந்தவர்களோ !
சவுதியிலும் சார்ஜாவிலும் இருக்கிறார்கள் !

துருதுரு துள்ளும் இளமையோ !
துபாயிலும் தூரத்திலும் இருக்கிறார்கள் !

ஆளுமைக்கு உரியவர்களோ !
அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அபுதாபியிலும் இருக்கிறார்கள் !

மனம் வென்றவர்களோ !
மலேசியாவிலும் மற்ற நாடுகளிலும் இருக்கிறார்கள் !

மேற்சொன்ன யாவற்றுடன் !
எமதூரில் இருக்கிறார்கள் மாணவர்கள் !
நாளைய சமுதாயத்தின் நம்பிக்கையாக !

அது சரி சஹுல் காக்கா உங்கல மாதிரி இப்புடி எழுதலாமேன்னு டிரைப் பன்னேன் முடியல காக்கா அதுக்கெல்லாம் ஆகாயத்தையும் பூமியையும் அன்னாந்து குனிந்து பார்க்கும் திறன் வேண்டும் காக்கா அது உங்களிடம் மட்டுமே !

அதிரைநிருபரின் விடாமுயற்சியும் பல்வேறு சந்தர்ப்பங்களின் தேவையறிந்து விழி திறக்க வைக்கும் ஆக்கங்களை தொடர்ந்து பதிந்து கொண்டே சாலை அமைத்து வந்திருக்கிறது இது தொடரும் அதன் தனித் தன்மை என்றும் மிளிரும் சாதனையாளர்களை ஊரார்க்கு உருவாக்கிக்காட்டும் இது தின்னம் !

கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு - அவரவர் ஸ்டைலில் ஆக்கங்கள் இனிமேல் அதிரைநிருபரில் நாளொரு புத்துணர்வோடு வரத்தான் போகிறது இன்ஷா அல்லாஹ் !

ZAKIR HUSSAIN said...

//உங்கள் முன்னோர்களை விட நீங்கள் புத்திசாலிகள்தான், உங்களைவிட நாங்கள் புத்திசாலிகள் என்பதை ஏற்றுகொள்ளுங்கள், எங்களுக்கு பிறகு வரும் எங்கள் சந்ததிகள் எங்களைவிட புத்திசாலிகள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.//

இந்த புரிந்துணர்வுதான் நம்மவர்களிடம் குறைவு. இதுவே பல பிறச்சினைகளின் ஆணிவேர். சரியான சமயத்தில் எழுதப்பட்ட விசயம். சாகுல் ...GO AHEAD AND WRITE MORE LIKE THIS...

crown said...

எதுவாக இருந்தாலும் இளையோர்கள் எங்களிடமும் கலந்தாலோசித்து, கல்வியிலும் மற்ற செயல்பாடுகளிலும் நல்லது கெட்டது எது என்பதை அலசி ஆராய்ந்து நல்லமுடிவை எடுங்கள் பெரியோர்களே, தாய்மார்களோ, சகோதர, சகோதரிகளே.உங்கள் பொன்னான வாக்குகளை சகோ.சாகுலுக்கு அளித்து சமுதாயத்தை வெற்றி பெறச்செய்யும்படி உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

sabeer.abushahruk said...

பெருசுகளிடம் இவ்வளவு விளக்கமாச் சொல்லிக் கேட்டதால் சிருசுகளுக்கு வாய்ப்புத் தர சாத்தியக்கூறுகள் அதிகமாகுது.
ஷாகுல், வித்தியாசமான கோணம்.
நல்லா சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!(இதோட என் பின்னூட்டம் முடிந்தது. கீழே உள்ளது வேறு எந்த பெருசோ கொளுத்திப் போட்டது)

//நீங்கள் ஆகாயத்தில் சாட்லைட் விட்டீர்கள்....
நாங்கள் அதை உடைப்பதற்கு மிசைல் விட்டோம்.....//
என்றால் மிசைல் அழிவுக்குத்தானே உபயோகிக்கிறார்கள். அப்ப இளைஞர்கள் அழிவு சக்தியா?)

Shameed said...

sabeer சொன்னது…
//மிசைல் அழிவுக்குத்தானே உபயோகிக்கிறார்கள். அப்ப இளைஞர்கள் அழிவு சக்தியா//

அஸ்ஸலாமு அழைக்கும்

நீங்கள் விட்ட ராக்கெட் ஆயுள் முடிந்து (செயல் இழந்து)பூமியின் சுற்றுப் பதையில் நுழைந்து பூமியின் மீது மோதினால் பல உயிர்கள் கொள்ளப்படலாம் இதை தவிர்க்கவே அந்த செயல் இழந்த ராக்கெட்களை வான் வெளியில் வைத்தே அழித்துவிடும்.இதுவும் ஒரு ஆக்கப்பணியோ.அதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த மிசைல்,

நாம (நாங்கள்) எப்போதும் ஆக்க சக்திதான்

sabeer.abushahruk said...

//நீங்கள் விட்ட ராக்கெட்//

ஹமீது,

பேச்சு பேச்சாக இருக்கும்போது நீங்கள் விட்ட ராக்கெட் என்று என் வயதை பெருசுகள் லெவலுக்கு உயர்த்த முனைவதை நான் கடுமையாக ஆட்ச்சேபிக்கிறேன்.

மல்லிபட்டினம் ஹார்பாருக்கு லேட்டெஸ்ட் மீன்பிடி சாதனங்களோடு போய் ஒரு மீன்கூட பிடிக்காம வந்தபோதெல்லாம் தெரியலயோ நாங்க பெருசுன்னு?

Yasir said...

மாத்திதான் யோசித்து இருக்கிறீர்கள்..நல்லாருக்கு காக்கா..சபிர் காக்காவிடம் கொளுத்தி போட்ட பெரிசு அடுத்து ஷார்ஜா வந்து என்னிடமும் கொளுத்தி போட்டது இது

நீங்கள் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் 7 ஏழு நாட்கள் சென்றீர்கள்.....

ஆமாம்..நாங்கள் சுகமான சுத்தமான காற்றை சுவாசித்தவாரே நிம்மதியாக எந்த டென்ஷனும் இல்லாமல் சென்றோம்..அந்த பயணம் தந்த சுகத்தில் வேலையை பளு தெரியாமல் செய்தோம்,டிஜிட்டல் பிரஸ்ஸர் மீட்டர் கையில் வைத்திருந்தே கிடையாது அதற்க்கான தேவையும் இல்லாமல் இருந்தது

நாங்கள் விமானத்தில் 4 மணி நேரத்தில் சென்றோம்...

ஆமாம்..விமானத்தில் ஏறுமுன் லக்கேஜ் போட்டதில் இருந்து –போர்டிங் பாஸ் வாங்குவதில் இருந்து-இறங்கும் ஏர்போட்டில் லக்கேஜ் பெல்ட்டில் லக்கேஜ் வர்ற வரைக்கும் டென்ஷன்..அடுத்த நாள் ஆபிஸில் டென்ஷன்… டிஜிட்டல் பிரஸ்ஸர் மீட்டர் கையில் வாட்சுக்கு பதிலாக கட்டி நேரம் பார்ப்பதுபோல் பிரஸ்ஸரை செக் பண்ணிகொண்டே வேலை செய்யும் கொடுமை

நீங்கள் கப்பலை கடலில் ஓட்டினீர்கள்....

ஆமாம்…சுற்றுபுற சுழலுக்கு எந்த வித தீங்கும் இல்லாமல்…கடலின் உயினங்களின் வாழ்க்கையும் கருத்தில் கொண்டு..அதை பாதுகாத்தோம்

நாங்கள் கடலிலும் ஓட்டினோம் த(க)ரையிலும் ஓட்டினோம் (ஹோவர்கிராப்ட்) கடல் உள்ளேயும் ஓட்டினோம் (சப்மரின்)....

ஆமாம்..யாரு எக்கேடு கேட்டாலும் கேடட்டும்…கடல் தண்ணிரை மாசுபடுத்தி..அதன் வளமையை குறைத்தீர்கள்….கடல்வாழ் உயிர்னங்களின் வாழ்கை நாசப்படுத்தி கொண்டு இருக்கீறிர்கள்..செய்வதை செய்து விட்டு கார்பன் எமிஷன் பற்றி கவலைப்படுகீறிர்கள்

நீங்கள் டெலிபோனை கண்டு பிடித்து ஆப்பறேட்டரிடம் நம்மரை சொன்னீர்கள்....

ஆமாம் நாம் என்ன செய்கிறோம் என்ற கன்ட்ரோல் இருந்தது- யாரிடம் எப்படி பேச வேண்டு என்று முடிவு பண்ணி பேச நேரம் இருந்தது..

நாங்கள் நபருக்கே டயல் செய்தோம் (மொபைல்).....

யாருக்கு கால் பண்ணுகிறேன் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் நட்பை நாசமாக்கி கொண்டு இருக்கிறீர்கள்…இளைஞிகளும்/இளயவர்களும் குடும்ப கவுரவத்தையும்,மானத்தையும் காற்றி பறக்க விட்டு கொண்டு இருக்கீறிர்கள்

நீங்கள் ஆகாயத்தில் சாட்லைட் விட்டீர்கள்.....

ஆமாம் வானிலையை ,நீங்கள் உறங்கினாலும் நாங்கள் அனுப்பிய சாட்டிலைட் விழித்து இருந்து உங்களுக்கு முன் கூட்டியே அறிவித்து தந்தது..அதன் மூலம் பயன் அடைந்தீர்கள்

நாங்கள் அதை உடைப்பதற்கு மிசைல் விட்டோம்.....

ஆமால் மிசைல்விட்டு உடைத்து அதனால் விண்வெளியில் ஏற்பட்ட குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது-எத்தனை பில்லியன் தேவைபடும் என்று சூப்பர் ஃபாஸ்ட் கம்யூட்டரே குழ்ம்பி விடும் அளவிற்க்கு…குடைந்து கொண்டு இருக்கீறீர்கள்..எப்படி கிளீன் செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி நீற்கிறீர்கள்

நீங்கள் நீர் ஆவியில் ரயில் விட்டீர்கள்......
காற்றை மாசுபடுத்தாத ரயில் மட்டுமா விட்டோம்..ஆவி-யில் செய்யும் உடல்நலத்திற்க்கு உதவும் உணப்பொருட்களையும் கண்டுபிடித்து கொடுத்தோம்

நாங்கள் நீரை கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் செய்தோம் (கிரையோஜெனிக்)....

ஆமாம்… உள்ளுர்குள்ளேயே மனிதர் இனங்களை அழிப்பது பத்தாது என்று கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி.. கண்டம் விட்டு கண்டம் தாவி எப்படி மனித இரத்தததை குடிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்

நீங்கள் எல்லாம் புத்திசாலிகள்தான் மறுக்க முடியாது எங்களைவிட…ஆனால் அழிவு சக்திக்கு உங்கள் ஆற்றல் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது,இப்பொழுது உள்ள ஆயுதங்களை கொண்டு இந்த உலகத்தை 80 முறை அழிக்கமுடியும் என்று ஆய்வாளர்கள கூறுகிறார்கள்

கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் மூலம் இளைஞர்களை ஆக்க சக்தியாக உருவாக்குவோம்...உறுதி ஏற்ப்போம்

Shameed said...

/sabeer சொன்னது…

//நீங்கள் விட்ட ராக்கெட்//

அஸ்ஸலாமு அழைக்கும்

நாம (நாங்கள்) எப்போதும் ஆக்க சக்திதான்

ஆனா கீழே "நாமன்னு" சேர்த்ததை கவனிக்கலையா?

அதற்காக மீன் பிடி மேட்டர் குருவி சுட்ட மேட்டரல்லாம் வேணாமுங்க
என்ன உங்களுக்கும் எனக்கும் ஒரு 2 வயது தான் வித்தியாசம்.
இப்போ சந்தோசம் தானே

அதற்காக கேட்க வந்த கேள்வியை கேட்காமல் இருந்து விடாதீர்கள்

அப்படி கேட்காமல் இருந்தால் 2 க்கு பக்கத்தில் ஒரு 0 ௦சேர்ந்து விடும்

Yasir said...

மாத்திதான் யோசித்து இருக்கிறீர்கள்..நல்லாருக்கு காக்கா..சபிர் காக்காவிடம் கொளுத்தி போட்ட பெரிசு அடுத்து ஷார்ஜா வந்து என்னிடமும் கொளுத்தி போட்டது இது

நீங்கள் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் 7 ஏழு நாட்கள் சென்றீர்கள்.....
ஆமாம்..நாங்கள் சுகமான சுத்தமான காற்றை சுவாசித்தவாரே நிம்மதியாக எந்த டென்ஷனும் இல்லாமல் சென்றோம்..அந்த பயணம் தந்த சுகத்தில் வேலையை பளு தெரியாமல் செய்தோம்,டிஜிட்டல் பிரஸ்ஸர் மீட்டர் கையில் வைத்திருந்தே கிடையாது அதற்க்கான தேவையும் இல்லாமல் இருந்தது

நாங்கள் விமானத்தில் 4 மணி நேரத்தில் சென்றோம்...
ஆமாம்..விமானத்தில் ஏறுமுன் லக்கேஜ் போட்டதில் இருந்து –போர்டிங் பாஸ் வாங்குவதில் இருந்து-இறங்கும் ஏர்போட்டில் லக்கேஜ் பெல்ட்டில் லக்கேஜ் வர்ற வரைக்கும் டென்ஷன்..அடுத்த நாள் ஆபிஸில் டென்ஷன்… டிஜிட்டல் பிரஸ்ஸர் மீட்டர் கையில் வாட்சுக்கு பதிலாக கட்டி நேரம் பார்ப்பதுபோல் பிரஸ்ஸரை செக் பண்ணிகொண்டே வேலை செய்யும் கொடுமை

நீங்கள் கப்பலை கடலில் ஓட்டினீர்கள்....
ஆமாம்…சுற்றுபுற சுழலுக்கு எந்த வித தீங்கும் இல்லாமல்…கடலின் உயினங்களின் வாழ்க்கையும் கருத்தில் கொண்டு..அதை பாதுகாத்தோம்

நாங்கள் கடலிலும் ஓட்டினோம் த(க)ரையிலும் ஓட்டினோம் (ஹோவர்கிராப்ட்) கடல் உள்ளேயும் ஓட்டினோம் (சப்மரின்)....
ஆமாம்..யாரு எக்கேடு கேட்டாலும் கேடட்டும்…கடல் தண்ணிரை மாசுபடுத்தி..அதன் வளமையை குறைத்தீர்கள்….கடல்வாழ் உயிர்னங்களின் வாழ்கை நாசப்படுத்தி கொண்டு இருக்கீறிர்கள்..செய்வதை செய்து விட்டு கார்பன் எமிஷன் பற்றி கவலைப்படுகீறிர்கள்

நீங்கள் டெலிபோனை கண்டு பிடித்து ஆப்பறேட்டரிடம் நம்மரை சொன்னீர்கள்....
ஆமாம் நாம் என்ன செய்கிறோம் என்ற கன்ட்ரோல் இருந்தது- யாரிடம் எப்படி பேச வேண்டு என்று முடிவு பண்ணி பேச நேரம் இருந்தது..

நாங்கள் நபருக்கே டயல் செய்தோம் (மொபைல்).....
யாருக்கு கால் பண்ணுகிறேன் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் நட்பை நாசமாக்கி கொண்டு இருக்கிறீர்கள்…இளைஞிகளும்/இளயவர்களும் குடும்ப கவுரவத்தையும்,மானத்தையும் காற்றி பறக்க விட்டு கொண்டு இருக்கீறிர்கள்

Yasir said...

நீங்கள் ஆகாயத்தில் சாட்லைட் விட்டீர்கள்.....
ஆமாம் வானிலையை ,நீங்கள் நிம்மதியாக உறங்குவதற்க்கு நாங்கள் அனுப்பிய சாட்டிலைட் விழித்து இருந்து உங்களுக்கு முன் கூட்டியே அறிவித்து தந்தது..அதன் மூலம் பயன் அடைந்தீர்கள்

நாங்கள் அதை உடைப்பதற்கு மிசைல் விட்டோம்.....
ஆமால் மிசைல்விட்டு உடைத்து அதனால் விண்வெளியில் ஏற்பட்ட குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது-எத்தனை பில்லியன் தேவைபடும் என்று சூப்பர் ஃபாஸ்ட் கம்யூட்டரே குழ்ம்பி விடும் அளவிற்க்கு…குடைந்து கொண்டு இருக்கீறீர்கள்..எப்படி கிளீன் செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி நீற்கிறீர்கள்

நீங்கள் நீர் ஆவியில் ரயில் விட்டீர்கள்......
காற்றை மாசுபடுத்தாத ரயில் மட்டுமா விட்டோம்..ஆவி-யில் செய்யும் உடல்நலத்திற்க்கு உதவும் உணப்பொருட்களையும் கண்டுபிடித்து கொடுத்தோம்

நாங்கள் நீரை கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் செய்தோம் (கிரையோஜெனிக்)....
ஆமாம்… உள்ளுர்குள்ளேயே மனிதர் இனங்களை அழிப்பது பத்தாது என்று கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி.. கண்டம் விட்டு கண்டம் தாவி எப்படி மனித இரத்தததை குடிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்

நீங்கள் எல்லாம் புத்திசாலிகள்தான் மறுக்க முடியாது எங்களைவிட…ஆனால் அழிவு சக்திக்கு உங்கள் ஆற்றல் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது,இப்பொழுது உள்ள ஆயுதங்களை கொண்டு இந்த உலகத்தை 80 முறை அழிக்கமுடியும் என்று ஆய்வாளர்கள கூறுகிறார்கள்

கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் மூலம் இளைஞர்களை ஆக்க சக்தியாக உருவாக்குவோம்…உறுதி ஏற்ப்போம்

Yasir said...

இன்னைக்கு ஆபிஸில் வேலைவொன்றும் இல்லை அதான் இப்படி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Yasir சொன்னது…
இன்னைக்கு ஆபிஸில் வேலைவொன்றும் இல்லை அதான் இப்படி ///

தம்பி யாசிர்: உங்க நிலை அப்படி... ஆனா எங்க நிலைமை இன்று mask மூக்கில் போட்டுக் கொண்டு மூச்(பேச்)சை இங்கே விடாதேன்னு சொல்லி படுத்துறாய்ங்க வருடக் கடைசின்னு ஒன்னு ஏன் வருது அத கேட்டுச் சொல்லுங்கமா !

sabeer.abushahruk said...

யாசிர்,

இளைஞர் தரப்புக்கு வாதாடுவீர்கள்னு பார்த்தா சேம் சைட் கோல் போட்ரமாதிரி இருக்கு?

ஒரு ஆக்கம் அளவிற்கான மேட்டரைல எழுத்து என்கிற பேரில் வெளுத்து வாங்கி இருக்கீங்க? இந்த பக்கம் யாரு ஹமீதா? உங்க கட்சி ஓஞ்சு போனமாதிரில இருக்கு? வாங்க வந்து பதில் சொல்லுங்க

-இப்படிக்கு சாலமன் பாப்பய்யா.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
யாறுப்பா அது தாத்தாக்களுக்கு சப்போர்டா கட்டுரையை விட பெரிதாக பின்னுடம் இட்டது
தம்பி யாசிரா அல்லது தாத்தா யாசிரா?

Yasir said...

கவிகாக்கா -தீர்ப்பு சொல்லும் போது ..சாகுல் காக்கா பக்கம் சொல்லிடுங்க ..போனாப்போவுது...இளைஞர்கள் எப்பொழுதும் தோற்க்க கூடாது துவண்டு விடுவார்கள் ....

Yasir said...

//தம்பி யாசிரா அல்லது தாத்தா யாசிரா// தம்பி யாசிர்தான் காக்கா....பெருசுட இம்சை தாங்காமல் பதிந்து விட்டேன்

Shameed said...

Yasir சொன்னது…
//ஆமால் மிசைல்விட்டு உடைத்து அதனால் விண்வெளியில் ஏற்பட்ட குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது-எத்தனை பில்லியன் தேவைபடும் என்று சூப்பர் ஃபாஸ்ட் கம்யூட்டரே குழ்ம்பி விடும் அளவிற்க்கு…குடைந்து கொண்டு இருக்கீறீர்கள்..எப்படி கிளீன் செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி நீற்கிறீர்கள்
//

அஸ்ஸலாமு அழைக்கும்

அதுக்கெல்லாம் மேலயோ ஒரு செப்டிக் டேங் கட்டஏற்பாடு செய்து விட்டால் போச்சி!!!!

Yasir said...

//அதுக்கெல்லாம் மேலயோ ஒரு செப்டிக் டேங் கட்டஏற்பாடு செய்து விட்டால் போச்சி!!!// ஆஹா ஒஹோ என்ன ஒரு யோசனை ....Kremlin-னுக்கு அட்வஸரா போறவங்களை KSA-ல் எதுக்கு போட்டுவச்சு இருக்க்காங்க...சபிர் காக்கா புதின் -டே பேசி டக்கு புக்கு-ண்டு ஒரு முடிவு பண்ணுங்க

Shameed said...

அதிரை முஜீப் சொன்னது…
//நாங்களும் படிக்கணும். படிக்கணும்......! உங்களைவிட ஓரு ஸ்டேப் பிரெண்டுங்கோ//

அஸ்ஸலாமு அழைக்கும்

உங்கள் ஆர்வம் புரிகின்றது
உங்களை போன்றோர் தான் நம் சமுதாயத்தை முன் எடுத்து செல்ல வேண்டும்.

யார் அந்த சகோ மீரா (ராவுத்தர் என்ற மீராவா?)

sabeer.abushahruk said...

குறுக்கால வந்து தீர்ப்பு சொல்றதா நினைக்கக்கூடாது.அப்புறமா நேரம் கிடைக்காமல் போலாம்.

தீர்ப்பு கொஞ்சம் கேனத்தனமா தோன்றினாலும் ஒரு கெத்து இருக்கும் பாருங்க:

- பெருசுங்க கோடு போடலேன்னா சிருசுங்க ரோடு போடமுடியாது.
-பெருசுங்க அறுவடை செய்யலேன்னா சிருசுங்க சோறு துண்ண முடியாது.

மொத்தத்திலே, பெருசுங்க பொண்ணைப் பெத்து தரலைன்னா சிருசுங்க கல்யாணம் பண்ணி குஜாலா குடும்பம் நடத்த முடியாது.

ஆகவே, பெர்சுங்க தொட்டால் மட்டுமே சிருசுங்க தொடரமுடியும்.

(வேறு எப்படி தீர்ப்பு சொல்றது? பெருசு (அப்பாடா) சிருசுக்கு சப்போர்ட்டா கட்டுரை பதியா, சிருசு பெருசுக்கு தோதா பின்னூட்டமிடன்னு இங்கே உல்ட்டாவால்ல கிடக்கு)

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
//அது சரி சஹுல் காக்கா உங்கல மாதிரி இப்புடி எழுதலாமேன்னு டிரைப் பன்னேன் முடியல காக்கா//

அஸ்ஸலாமு அழைக்கும்
உங்களின் கல்வி விழிப்புணர்வு மெயில் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றேன்!!!
எழுத தெரியவில்லை என்று சால்சாப்பு சொல்லாதிய

Shameed said...

sabeer சொன்னது…
//(வேறு எப்படி தீர்ப்பு சொல்றது? பெருசு (அப்பாடா) சிருசுக்கு சப்போர்ட்டா கட்டுரை பதியா, சிருசு பெருசுக்கு தோதா பின்னூட்டமிடன்னு இங்கே உல்ட்டாவால்ல கிடக்கு)//

அஸ்ஸலாமு அழைக்கும்
என்ன பேச்சோட பேச்சா பெருசு பதியன்னு போட்டு....
இந்த வருஷம் வந்த தீர்ப்புக்கள் அனைத்தும் அட்டு தீர்ப்பா போச்சி

நாட்டமை தீர்ப்பை மாத்துங்கள்

ஜலீல் நெய்னா said...

இது யாரு....? S.ஹாமீதா(சாவன்னாவா) அடேங்கப்பா இத்தனை நாளா எங்க
பூட்டி வச்சிருந்தா வேலைநேரமும் கல்வியும் ஆகட்டும்,கடல்கரைத்தெரு புளியமரமாகட்டும்,இப்பொழுது கலந்தாலொசிப்போம்,வெளுத்து கட்டுரியெ
இடையிலெ மட்டும் கடல்கரைத்தெரு புளியமரம் கொஞ்சோன்டு பிரச்சன பன்னிட்டது அவ்வளவுதான்.
சரி மச்சான் உன் பெயரை இனி அப்துல் ஹமீது என்று அல்லது,S.ஹமீது என்று எழுதவும்,அழைக்கவும் சொல்லவும்.ஏனென்றால் சாகுல் ஹமீது என்பது அர்த்தம் பிழை உள்ளது.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
பிழையாக இருந்தால் திருத்திக் கொள்வது தான் புத்திசாலி தனம்.
இனிமேல் S ,ஹமீது ,என்று போட்டுக்கொள்கின்றேன்,
எங்க வாப்பாவுக்கு அதான் உங்க தாய் மாமா விற்கு நீங்கதான் பதில் சொல்லிக்கொள்ளவேண்டும்.

Shameed said...

jaleelsa சொன்னது…
//இடையிலெ மட்டும் கடல்கரைத்தெரு புளியமரம் கொஞ்சோன்டு பிரச்சன பன்னிட்டது அவ்வளவுதான்//

அஸ்ஸலாமு அழைக்கும்
அது கெடக்கட்டும் போரம் போக்கு

புளியமரம்

Shameed said...

crown சொன்னது…
//உங்கள் பொன்னான வாக்குகளை சகோ.சாகுலுக்கு அளித்து சமுதாயத்தை வெற்றி பெறச்செய்யும்படி உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.//

ஓட்டு கேட்ட நீங்கள் எங்கே பூத் பக்கமே காணோம்!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed சொன்னது…
crown சொன்னது…
//உங்கள் பொன்னான வாக்குகளை சகோ.சாகுலுக்கு அளித்து சமுதாயத்தை வெற்றி பெறச்செய்யும்படி உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.//

ஓட்டு கேட்ட நீங்கள் எங்கே பூத் பக்கமே காணோம்!! ///

அவர் (crown) யூத் லிஸ்டில் இருப்பதால் ஒல்ட்யூத் பக்கம் இன்னும் வரமுடையவில்லையாம் !

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//இந்த புரிந்துணர்வுதான் நம்மவர்களிடம் குறைவு. இதுவே பல பிறச்சினைகளின் ஆணிவேர். சரியான சமயத்தில் எழுதப்பட்ட விசயம். சாகுல் ...GO AHEAD AND WRITE MORE LIKE THIS... //

அஸ்ஸலாமு அழைக்கும்

உங்களின் வார்த்தைகள் என் போன்றோரை
உற்சாகப்படுத்துகின்றன

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏனுங்க அழகிய வண்ண நிழல் படங்களை இடம் பொருத்தி பதிவுக்குள் கொண்டு வந்த அதிரைநிருபரை யாருமே கண்டுக்கலையே ! :)

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
//அவர் (crown) யூத் லிஸ்டில் இருப்பதால் ஒல்ட்யூத் பக்கம் இன்னும் வரமுடையவில்லையாம் //

அஸ்ஸலாமு அழைக்கும்.

அதான் சுபுகுக்கு வந்த நீங்க இப்போ மக்ரிப்புக்கு வந்தியளா!

ஆமா நீங்க இங்கும் அங்குமா?

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
//ஏனுங்க அழகிய வண்ண நிழல் படங்களை இடம் பொருத்தி பதிவுக்குள் கொண்டு வந்த அதிரைநிருபரை யாருமே கண்டுக்கலையே
//

அஸ்ஸலாமு அழைக்கும்
அதிரை நிருபர் நிழல் படங்களை இடம் பொருத்தி பதிவிற்கு கொண்டு வருவதில் எப்போதும் தனி திறன் படைத்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பாதால் "சும்மா சும்மா" சொல்லிகொண்டு இருக்கா கூடாது என்பதற்காக யாரும் அது பற்றி பேசவில்லை என நினைக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆமா நீங்க இங்கும் அங்குமா? //

என்றுமே முதுமைக்கு மூச்சிரைக்கும்போது இளமையாக புன்னகையோடு காற்று வீசிவிடுவேன் ! :)) ஆகவே நான் புதிய இளமை ! ! ! (MSM-rmமுடன்) - சிருசு எங்கே ஆளையேக் கானோமே !?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஹமீது காக்கா,

மீண்டும் அசத்தல் ஆக்கம், மொத்தத்தில் நல்ல சிந்தனை இறுதியில்.

நீங்க கோடு போட்டீங்க நாங்க ரோடு போட்டோம்.

இங்கு யார் பெருசு? யார் சிறுசு? என்பது இன்னும் புலப்படவில்லை இந்த இளையவனுக்கு.

பதில் இருக்கா?

Shameed said...

தாஜுதீன் சொன்னது…

//இங்கு யார் பெருசு? யார் சிறுசு? என்பது இன்னும் புலப்படவில்லை இந்த இளையவனுக்கு.

பதில் இருக்கா? //

ரொம்ப சிம்பிள்
இதற்கு சப்போட் பண்ற ஆளுக இளசு

மற்றது எல்லாம் "பெருசு"

sabeer.abushahruk said...

//இங்கு யார் பெருசு? யார் சிறுசு? என்பது இன்னும் புலப்படவில்லை இந்த இளையவனுக்கு//

தலை முடியின் அடர்த்தி மற்றும் நிறம் ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்குமாறு பறிந்துரைக்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தலை முடியின் அடர்த்தி மற்றும் நிறம் ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்குமாறு பறிந்துரைக்கிறேன்.//

சபீர் காக்கா... புரிஞ்சு போச்சு... நீங்க சொல்ற காரணத்தைப் பார்த்தா, நாங்க சீக்கிரம் பெருசு லிஸ்ட்ல சேர்க்கப்பட்டுவிடுவோம் போல தெரியுது.

ஹமீது காக்காவின் தீர்ப்பு சிம்பிள இருந்தாலும் முடிவுரையாக எடுத்துக்கலாம். மொத்தத்தில் கலந்தாலோசிக்கலாம் என்ற அறிப்பால் இன்று கணிப்பொறியின் கீப்போடு நல்லா அடிவாங்கி இருக்கு என்பது மட்டும் உண்மை.

Shameed said...

sabeer சொன்னது…
//தலை முடியின் அடர்த்தி மற்றும் நிறம் ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்குமாறு பறிந்துரைக்கிறேன்//

அஸ்ஸலாமு அழைக்கும்
உங்க ப்ளஸ் பாயிண்டை வைத்து எங்கள் மைனஸ் பாய்ண்டில் அடிகின்றீர்களா!

"நீர் அடித்து நீர் விலகாது"

அதிரை முஜீப் said...

சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கு வ அலைக்கும் வஸ்ஸலாம்.

மீரா என்பவர் கடல்கரை தெருவை சேர்ந்த ராவுத்தர் என்கின்ற மீராவே தான்.

Shameed said...

அதிரை முஜீப் சொன்னது…
//மீரா என்பவர் கடல்கரை தெருவை சேர்ந்த ராவுத்தர் என்கின்ற மீராவே தான்//

அஸ்ஸலாமு அழைக்கும்
மீறவும் நானும் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தோம் ஒன்றாகத்தான் பள்ளிக்கூடம் போய் வருவோம்.

எப்படி இருக்கின்றாய் நலமா?

நீண்ட நாட்களுக்கு பின் உன் தொடர்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

முடிந்தால் மடல் இடு. shameed134@gmail.com

அதிரைநிருபர் said...

//நீண்ட நாட்களுக்கு பின் உன் தொடர்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி//

பழை நட்புகளை ஒன்றினைப்பதில் அதிரைநிருபர் ஒரு பாலமாக இருப்பதை எண்ணும்போது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சகோதரர் ஹமீது அவர்களின் மகிழ்ச்சியில் நாங்களு பங்கு கொள்கிறோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள் அன்பானவர்களே....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

S.ஹமீத் சொன்னது…
அதிரை முஜீப் சொன்னது…
//என்கின்ற மீராவே தான்//

அஸ்ஸலாமு அழைக்கும்
மீறவும் நானும் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தோம் ஒன்றாகத்தான் பள்ளிக்கூடம் போய் வருவோம்.
எப்படி இருக்கின்றாய் நலமா?
நீண்ட நாட்களுக்கு பின் உன் தொடர்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
முடிந்தால் மடல் இடு //

அப்படின்னா நீங்கள் தேய்த்த அதே பெஞ்சைதான் அடுத்த அடுத்த வருடம் நானும் தேய்த்தேனா ? மீரா என்கிட்டே சொல்லவேயில்லையே !

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

//ஆமா நீங்க இங்கும் அங்குமா? //

என்றுமே முதுமைக்கு மூச்சிரைக்கும்போது இளமையாக புன்னகையோடு காற்று வீசிவிடுவேன் ! :)) ஆகவே நான் புதிய இளமை ! ! ! (MSM-rmமுடன்) - சிருசு எங்கே ஆளையேக் கானோமே !?
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். முதுமைக்கு மூச்சிறைக்கும் போது காற்று வர விசிறி வீசுவேன் என்கிற பிசிரில்லாத கரிசனம்,இன்னும் இளைமை தரிசனம்....புதிய இளைமைதான் என்றும் என்றென்றும்.... மனதளவிலும் ,உடல்ரீதியிலும்.

அதிரை முஜீப் said...

சகோதரர் சாகுல் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

மீரா அவர்களின் மின்னஞ்சல்

nmmeera@gmail.com

இனி இருவரும் தொடர்புகொள்ளவும்.

Shameed said...

வலைக்கும் முஸ்ஸலாம்

நன்றி சகோ முஜீப்
மீரா விற்கு மெயில் அனுப்பி விட்டேன் .

Riyaz Ahamed said...

சலாம்,
"உங்கள் முன்னோர்களை விட நீங்கள் புத்திசாலிகள்தான், உங்களைவிட நாங்கள் புத்திசாலிகள் என்பதை ஏற்றுகொள்ளுங்கள், எங்களுக்கு பிறகு வரும் எங்கள் சந்ததிகள் எங்களைவிட புத்திசாலிகள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்" எனக்கு முன்னால் இதை தான் ஜாகிரும் சுட்டிகாட்டி இருப்பது தெரிகிறது, சரியானதை சரி என ஏற்றுக்கொள்வதற்கு கூட பெரிய மணம் வேண்டும். ரொம்ப அருமையான கருத்துகள் அழகிய படங்கள்.

crown said...
This comment has been removed by a blog administrator.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு) உன்னை, நான் பார்க்கும் நிழல் கண்ணாடியின் என் நிழலாகத்தான் எப்போதுமே காட்டிடுவாய் ! :)

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

கிரவ்ன்(னு) உன்னை, நான் பார்க்கும் நிழல் கண்ணாடியின் என் நிழலாகத்தான் எப்போதுமே காட்டிடுவாய் ! :)
Reply Thursday, January 06, 2011 8:41:00 AM
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆடி அடங்கும் வரை ஆடியிலும் , நாம் மெய் பிம்பமே!உங்கள் மெய் கானினும் என் மெய் தெரியும் இது தான் மெய். மாய பிம்பம் சமைதவர்களல்ல நாம்.அல்ஹம்துலில்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.