Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு 22

அதிரைநிருபர் | December 28, 2010 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர்  வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும்

கல்வி விழிப்புணர்வு மாநாடு

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15  தேதிகளில் நம் எதிர்காலச்  சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின முன்னேற்றத்தையும் வளவாழ்வையும் கருத்தில் கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாடு நமதூரில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், நம் சமுதாயத்தின் கல்விச் சிந்தனையாளர்களும் பயிலரங்கு விற்பன்னர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்புச்சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.

இவண்,

இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விரிவான அறிவிப்பும் நிகழ்ச்சி விவரங்களும் பின்னர் வெளியிடப்பெறும், இன்ஷா அல்லாஹ்.

நாளைய நம் சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக உருவாக்குவோம். நமக்குரிய உரிமைகளை  நம் பக்கம் மீட்டெடுப்போம்.   ஆட்சி  அதிகாரத்திலும், சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் நம் இஸ்லாமிய ஆளுமையை நிலைநிறுத்துவோம்.  உலக மக்களுக்கு ஓர் உதாரணமாக நம் வருங்கால சந்ததியினரை உருவாக்க அனைவரும் வாருங்கள்,  மார்க்க கல்வியுடன் உலகக்  கல்வியை  வழியுறுத்தி வலுமைமிக்க  சமுதாயமாக  நம்  முஸ்லீம் சமுதாயம் உருவாக  ஒற்றுமை கரம் நீட்டுகிறோம். வாருங்கள் ஒன்றுபடுவோம்.  வெற்றி  பெற்ற  சமுதாயமாக  உருவெடுப்போம்.  இன்ஷா அல்லாஹ். 

கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற படைத்தவனிடம் துஆ செய்கிறோம். நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.

கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன்....

-- அதிரைநிருபர் குழு
 

22 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாழ்த்துகிறோம் ! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் இம் மாநாடு வெற்றிக் களம் கண்டிட அதோடு தொடர் சேவைகளை செய்திட பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

எல்லா வகையான ஒத்துழைப்பும் என் பங்கிற்கு தொடர்ந்து கொண்டிருக்கும் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

கனவு கண்டு, அடைகாத்து, ஒத்த கருத்துகொண்ட நம்மூர் அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) ஆகியவ்ற்றுடன் கைகோர்த்து களம் காண இருக்கும் அதிரை நிருபருக்கு என் வாழ்த்துகள்.

எண்ணம்போல் வாழ்வு. நாம் எண்ணி இருப்பதுபோல் இம்மாநாடு வெற்றிபெற்று நாடிய பலன் பெற்று நம் சமூகம் சிறக்க என் துஆ.

sabeer.abushahruk said...

படி! 

நாலும் இரண்டும் 
சொல்லுக் குறுதி
நல்ல கல்வியே
நெஞ்சுக் குறுதி!

ஆத்திச்சுவடி
அதனதன் இடத்தில்
அதற்கு மேல் படி
அகிலத்தில் இடம் பிடி!

ஏகத்துவம் ஏற்ற
இதயத்தால் மட்டுமே
மருத்துவக் கல்விக்கு
மகத்துவம் கூடும்!

அறிவியல் பொறியியல்
அத்தனையும் படி
அறியாமை நீங்க
அறிவுச் சுடர் பிடி!

விட்டதை பிடிக்கனும்
சட்ட திட்டம் படி
விடாமல் பாதுகாக்க
அரசியலும் படி!

ஓட்டுப் போட்டே
ஓய்ந்த சமூகம்
போட்டி போட்டு
பட்டங்கள் படி

ஆட்சிக் கட்டிலும்
அதிகார வாளும்
உனக்கும் வாய்க்க
உயர் கல்வி படி!  

காவல் துறையும்
காட்டிலாக்காவும்
கனிம வளமும்
கல்வித்துறையும்
கைப்பற்ற படி!

நிர்வாகம் படி
நீர்வளம் படி
எண்ணமெல்லால் ஈடேர
இந்திய நிர்வாகம் படி!

நீ 
உயர்ந்து... 
உன்னோடு
உயர்த்து 
உன் சமூகத்தை!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு அறிவிப்பு வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன் நாங்களும் இணைந்து சபதம் எடுத்துக்கொள்கின்றோம்

கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு சிறப்பாக அமைவதற்கு நாங்கள் துவா செய்கின்றோம்

இதில் தங்களை முழு மனதுடன் இணைத்து செயல் படும் அனைவருக்காகவும் துவா செய்கின்றோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எம்மை படைத்த அந்த ஓர் இறையின் அருளால் !

எல்லாம் படி
என்று சொல்லித் தந்த எங்கள் கவிக் காக்காவின் கவிதையையும் படி !

//விட்டதை பிடிக்கனும்
சட்ட திட்டம் படி
விடாமல் பாதுகாக்க
அரசியலும் படி!

ஓட்டுப் போட்டே
ஓய்ந்த சமூகம்
போட்டி போட்டு
பட்டங்கள் படி//

எங்களை ஒரு பிடி பிடித்திருக்கும் உங்களின் ஒவ்வொரு வரிகளையும் கல்வெட்டுகள் அந்தக்காலாம் செதுக்க இன்றோ எங்கள் இதயங்களை தந்திருக்கோம் அங்கே செதுக்கி விடுங்களேன் கவிக் காக்கா அவர்களே !

Unknown said...

அதிரை போஸ்ட் வெளியிட்ட செய்தி

அதிரையில் ஜனவரி 14,15 கல்வி விழிப்புணர்வு மாநாடு! http://adiraipost.blogspot.com/2010/12/1415.html

எமது நன்றியும் கோரிக்கையும்!

அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை, அதிரைநிருபர் வலைக்குழுமம் மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து நடத்தும் இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்க்கு அதிரைநிருபர் வலைக்குழுமம் முழு முதற்காரணம் என்பதை நாம் அறிவோம்.

கிடைக்கும் செய்திகளையும் தகவல்களையும் பதிந்து 'நோட்டீஸ் போர்ட்'டாக இல்லாமல் சமுதாயத்தின் தேவையறிந்து, கட்டுரைகள் வெளியிட்டு கருத்துரைகளை உன்னிப்பாக அவதானித்து, நமது மக்களின் ஆர்வத்தையறிந்து, இன்று செயல் வடிவம் கொடுத்து வெற்றிக் களத்தில் நிற்கிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்.

தொடர வேண்டும்:

இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு முதலாவது மாநாடாக அமையட்டும் இனிவரும் வருடங்களும் தொடர்ந்து நடத்தவேண்டும்.

தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

ZAKIR HUSSAIN said...

எத்தனையோ வருடம் பின் தங்கிய நம் ஊர் இன்னும் 5 வருடத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய உள்ளது.

Mark my words....தஞ்சை மாவட்டத்தில் தனித்தன்மை பெற்ற ஊராக இது நிச்சயம் பேசப்படும்.

நம் ஊர் பெயர் சிறக்க இந்த மாநாட்டின் வெற்றிக்காக பல பேர் உழைத்து இருக்கிறீர்கள், யாரையும் குறிப்பிட்டு நன்றி சொல்ல முடியாத சூழ்நிலை. நம் எல்லோரையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய வெற்றியை தர இருக்கும் இறைவனுக்கே எல்லா புகழும்.

mohamedali jinnah said...

வாழ்த்துகிறோம் ! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் இம் மாநாடு வெற்றிக் களம் கண்டிட அதோடு தொடர் சேவைகளை செய்திட பிரார்த்திக்கிறோம்

ஜலீல் நெய்னா said...

கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே நடந்தேர வாழ்த்துகள்.இம்மாநாட்டின் மூலம்
பெற வேண்டிய பயன்களை நம் சமுதாயம் பெற்றிட ஏக இறைவனிடத்தில் துஆ
செய்கிறேன்.மேலும், இம்மாநாட்டிற்க்காக பல சிரமங்களுக்கிடையில் விடா முயற்சி எடுத்த...
இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரை நிறுபர் குழு,
மற்றும்,அதிரை இஸ்லாமிக் மிஷன், ஆகியோர்களுக்காவும் எனது வாழ்த்துகளும்
துஆவும்.

கல்வி உதவி தொகை என்று ஒரு பண்டு நம் அ.நி குழு,குடும்பங்களுக்குள் ஒன்று தொடங்கினால் என்ன?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலிலாஹ்,அல்ஹம்துலிலாஹ்.அல்ஹம்துலிலாஹ்,
அல்ஹம்துலிலாஹ்...
வெற்றியின் பாதையில் நமதூர் அடியெடுத்து வைத்துவிட்டது.
இதற்காக உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் எல்லா நன்மைகளையும் தந்தருள்வானாக. ஆமீன். நீ என்ன செய்ற? நான் அமெரிக்காவில் வியாபாரம் செய்றேன். அது சரி உருப்படியா என்ன செய்ற?அதிரை நிருபரில் தெரிந்ததை கிறுக்குகிறேன். அப்படி சொல்லு இனி எல்லாம்
நல்ல மாதிரி அமையும் கவலப்படாதே.சரிங்க.....

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து அன்பு சகோதரர்களுக்கும் மிக்க நன்றி. பின்னூட்டங்கள் நல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது என்றால் மிகையில்லை.

கவிகாக்காவின் கவிதையும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டு சிந்தனைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி நண்பர்களிடமும், அதிரையில் உள்ள உறவுகளிடமும் செய்தியை கொண்டு சென்று ஆர்வமூட்டுங்கள் அன்பு சகோதரர்களே.

வழக்கம் போல் தொடர்ந்து இணைந்திருங்கள்..

அதிரைநிருபர் said...

// அதிரைpost சொன்னது… கிடைக்கும் செய்திகளையும் தகவல்களையும் பதிந்து 'நோட்டீஸ் போர்ட்'டாக இல்லாமல் சமுதாயத்தின் தேவையறிந்து, கட்டுரைகள் வெளியிட்டு கருத்துரைகளை உன்னிப்பாக அவதானித்து, நமது மக்களின் ஆர்வத்தையறிந்து, இன்று செயல் வடிவம் கொடுத்து வெற்றிக் களத்தில் நிற்கிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்.//

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரரே, தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, நல்ல உற்சாகமூட்டுகிறது. இணையத்தால் நல்ல விசயங்களில் கவனம் செலுத்தி, நல்ல உள்ளங்களை ஒன்றினைத்து, பல நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதற்கு தங்களின் கருத்தில் ஆழமாக சொல்லியுள்ளீர்கள். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இச்சேவையை மேலும் சிறப்பாக தொடர்ந்து செய்ய முயற்சி செய்கிறோம். துஆ செய்யுங்கள்.

மாநாட்டோடு கல்வி விழிப்புணர்வு நின்றுவிடாது, தொடர்ந்து கல்வி வேலை விழிப்புணர்வு, வழிகாட்டல் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படும் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இதற்கான செயல் திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.

இதற்கு அனைத்து சகோதரர்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகள் ஏதும் உண்டா?

அதிரைநிருபர் said...

// jaleelsa சொன்னது… கல்வி உதவி தொகை என்று ஒரு பண்டு நம் அ.நி குழு, குடும்பங்களுக்குள் ஒன்று தொடங்கினால் என்ன? //

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் ஜலீல் அவர்களுக்கு, தங்களின் கருத்துடன் நாங்களும் உடன் படுகிறோம். இன்ஷா அல்லாஹ் கல்வி விழிப்புணர்வு மாநாடு முடிந்தவுடன் விரைவில் கல்வி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு, வழிகாட்டல், பயிற்சிகளுக்காக நீண்ட கால செயல் திட்டம் உருவாக்கப்படும். அதில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். அதிரையிலிருந்து வருடத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆண் பெண் மருத்துவர்கள், IAS IPS மற்றும் உயர்நிலை அரசு வேலைகளில் நம்மவர்கள், வழக்கறிஞர்கள் என்று ஒரு project தயார் செய்து அதை செயல் படுத்தப்படும். இன்ஷா அல்லாஹ். துஆ செய்யுங்கள்.

அதிரைநிருபர் said...

// Shahulhameed சொன்னது… அஸ்ஸலாமு அழைக்கும் அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகள் ஏதும் உண்டா? //

வ அலைக்குமுஸ்ஸலாம், அன்பு சகோதரர் ஷாஹுல் ஹமீது, நிச்சயம் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம், வீடியோ பதிவும் உண்டும், CD யும் மாநாடு முடிந்தவுடன் கிடைக்கும்.

சகோதரர் CMN சலீம் அவர்களின் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் அவரின் 30 நிமிட வாரந்திர நிகழ்ச்சிகளில் ஒளிப்பரப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் பிறகு இது தொடர்பாக விரிவான அறிவிப்புகள் வெளிவரும்.

அதிரை முஜீப் said...

கல்வி கற்கும் நிலையமெல்லாம்
கலவி நிலையமாய் ஆகிப்போனதே!.

சொல்லித்தரும் வாத்தியும், மாணவியை
அள்ளிச்செல்லும் காலமானதே!.

போதை கூட்டி மாணவர்களும், புத்தி
பேதையாகிப் போனதேன்!.

சேர்க்கும் கல்வி நிலையத்தினையும், தரம்
பார்க்கும் நாளும் வந்ததே!.

அல்லாஹ், சொன்ன கல்வியை,
நல்லா நீயும் கற்றிட்டால், இனி பொல்லாப்பேது மானிடா!.

உயர்க் கல்வி உன்னை மாற்றும், அதனூடே
ஊருக்கெல்லாம் நன்மை சேர்க்கும்!.

அ ப்துல் காதரோ M.B.B.S.,
ஆ சிப் அலியோ I.A.S.,
இ திரிசோ E.R.P.S.,
ஈ சாவோ I.R.S.,
உ துமானுக்கு உதவும் IPS கல்வி, சேர்ந்தே சமுதாயத்திற்கும் உதவுமாம்!.
ஊ ர் சுற்றும் உமருக்கு டூரிசமாம் அதுவும் கல்வி.
எ கியாவுக்கு எஞ்சினியர் கல்வி
ஏ னி போல உதவும் கல்வி.
ஐ யம் தீர கற்றிடுவோரை, அதிரையில் இனி கண்டிடுவோம்,
ஒ ளிந்து திரிந்த முன்னோரும்
ஓ டிப் பெறாத கல்வியை, நாம் கற்றிடுவோம்.
ஃ பாரின் போயும் சட்டம் பயின்று
ஃ பாரிஸ்டராகி திரும்பிடுவோம்!.

அதிரையில், கல்விக்கொரு கருத்தரங்கம்!. இனி
இதுதான் அதிரையின் வருட கந்தூரியாம்!.

இனி அத்தனை பட்டமும் வென்றிடுவோம்!.
உயர்ந்த சமுதாயமாய் நாம் திகழ்ந்திடுவோம்!!.

Yasir said...

பணிப்பிணையின் காரணமாக உடனடியாக கருத்திட முடியவில்லை,நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த,எதிர்கால தலைமுறையை வலுப்படுத்தக்கூடிய இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றி பெற எல்லா வல்ல அல்லாஹ்விடன் துவா செய்கிறேன், இம்முயற்ச்சிக்கு விதை விதைத்த,வளர்த்த,பாடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானக !!! ஆமின்.

ஒரு பிரபல சீனப்பழமொழி சொல்வதுபோல் "If you are planning for a year, sow rice; if you are planning for a decade, plant trees; if you are planning for a lifetime, educate people."

கவிக்காக்கா மற்றும் சகோ.முஜிப்பின் கவிதைகளை விழிப்புணர்வு மாநாட்டு மேடையில் பாடலாமே ??…மாணர்வர்களுக்கு உத்வேகம் தரும் டானிக் அவை இரண்டும்…ஜலில் காக்காவின் கருத்துடம் நானும் உடன்படுகிறேன்

Yasir said...

கவிகாக்கா...”படி,படி” என்று அடிக்காத குறையாக..பக்குவமாக சொல்லி இருக்கிறீர்கள்..என்னுடைய விருப்பம் கல்வி விழ்ப்புணர்வு மாநாடு முடியும்வரை...உங்கள் அமுதசுரபி மூளையில் இருந்து கல்வி தொடர்ப்பான உங்கள் கவிதைகளை தொடர்ந்து எழுதுங்கள் அ.நி-ல்....கல்வி அனல் பறந்து கொண்டே இருக்கவேண்டும்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிகாலை எழுந்து (கவிக் காக்காவும் - சாஹுல் காக்காவும் சொல்லும் அதே அதிகாலைதான்) கருத்திட்டு விட்டு சென்று மாலை வந்து அதிரைநிருபரில் உயர்கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய அற்விபை கானும் போது ! பிரமிக்க வைக்கிறது நம் சகோதரர்களின் ஆர்வமும் வேட்கையும் - அல்லாஹ்வின் பேருதவியால் நிச்சயம் இம்மாநாட்டை வெற்றிப் பாதைக்கு வழித்தடம் போடும் களமாக்கி காட்டுவோம் இன்ஷா அல்லாஹ் !

Meerashah Rafia said...

அதெல்லாம் முடியாது பிறந்த உடனே பாஸ்போட்டு எடுத்தாச்சு, அதுக்காகவாவது வெளிநாட்டுல வேலை செஞ்சே ஆவேன்னு மனசுல உயில் எழுதி வச்சிருப்பாங்க சில பசங்க. சரி பரவாயில்லை.

சில பசங்க நினைபாங்க, "நம்ம நாட்டுல வருஷம் பூரா சம்பாதிக்கிறத வெளிநாட்டுல கொஞ்ச மாசத்துல சம்பாதிக்கலாம்"னு..
ஒருவகையில் அது உண்மையும்கூட. சரி பரவாயில்லை.

அதுக்காக கோழிய பிடிக்க கைலிய களஞ்சிபோடுட்டு ஓடறது கொதரத்தால ஈக்கிது.

படிச்சிபுட்டு வெளிநாடு வந்தால் அதுக்குன்னே தனி மரியாதையும் , மனசலவுளையும் பொருளவுளையும் கொஞ்சநஞ்ச சந்தோசமாவது மிஞ்சும் .
பொறந்த நாட்ட பிரிந்திருஞ்சாளும் , பெத்த தாயையும், பொண்டாட்டி புள்ளைகளையும் பக்கத்துல வச்சி ஜோரா வாழறதுக்கு படிப்பு இருந்துச்சுனா இதெல்லாம் அனுபவிக்க வாய்ப்பு அதிகம்.இல்லாட்டி ஆப்புதான் அதிகம்..

சரி , கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்குதாம் கொஞ்சம் அதை எட்டிப்பாருங்கள், உங்கள் எதிர்காலம் தெரியும் பசங்களா ..
காகமார்களா நீங்களும் ஒரு எட்டு வச்சி நம்ம பசங்கள கொஞ்சம் ஏனில ஏத்தி உடுங்க ..நல்லா இருப்பீக..

வேலை பழுதினால் கொஞ்சம் லேட் கம்மன்ட்.
MSM(MR)

இப்னு அப்துல் ரஜாக் said...

கல்வி விழிப்புணர்வுக்கு பாராட்டுக்கள்.இன்னும் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் நடத்த அல்லாஹ் அருள் புரிவானாக.என் இணைய தளத்தில் பதிந்துள்ளேன்,நன்றி

அசத்துங்க தாஜுதீன்

http://manithaneyaexpress.blogspot.com/

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு