Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யாருக்குங்க அதிகாரம் !? 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2011 | , , , ,



ஹஜ் பெருநாள் விடுமுறைகள் கழிந்தது, அடுத்தென்ன வழமைபோல் வேலைக்குச் செல்ல வேண்டும், சரி அங்கேயும் சென்றாகிவிட்டது !

வேலையும் சுறு சுறுப்பாக செய்ய ஏதுவாக இருந்தது நான்கு நாட்களின் விடுமுறை கொடுத்த இதம். 

எல்லாமே புதுசு இல்லைங்க நாங்க மட்டும்தான் பழசு ஆனா மேலே வந்தவங்கதான் புதுசு என்று புலம்பினார் நண்பர் ஒருவர். அப்படி என்னதான் நடக்கிறது என்று கேட்டதுதான் தாமதம் கொட்டி விட்டார் !

நண்பரின் கம்பெனி முதலாளி அவருடைய சொந்தம், அதாவது அவரின் மனைவியின் சகோதரரின் மகனை பொது மேலாளராகவும் வேலைக்கு சேர்த்திருந்திருக்கிறார்.

என்ன செய்வது அவரோ இங்கு வேலைக்கு புதிது, இன்னும் அவருக்கு தெரிந்த ஆங்கிலம் பேசுவதை புரிந்து கொள்ள அவர் படித்த நாடான எமனுக்கே சொன்று எங்கே அவர் கற்றாரோ அங்கே கற்றுக் கொண்டு வந்தால்தான் அவர் பேசும் ஆங்கிலம் கொஞ்சமாவது புரியும்.

இதெல்லம் இப்போ எதுக்குன்னா கேட்கிறீங்க !?

இனிமேல்தானே விஷயமே இருக்கு, அந்த முதலாளி தன் மனைவியின் சொந்தமென்று வந்த பந்தம் காட்டிய பந்தாவுக்கு நேர் மாறாக வந்தது மற்றொரு சொந்தம், அவரும் முதலாளியுடைய சகோதரியின் மகன் சரி முதலில் வந்தவருக்கு பின்னால் வந்ததினால் அவருக்கு துணை பொது மேலாளர் என்று சொல்லி அவரையும் வேலையில் சேர்த்தாகிவிட்டது.

முதலாமவர் அதாவது பொது மேலாளாராக இருப்பவர், கண்டிப்பாக எல்லாமே "என் அனுமதியில்லாமல் காரியங்கள் நடக்கக்கூடாது" என்று ஒரு அலுவலடங்கைப் (ஊரடங்குன்னுதான் கேள்வி பட்டிருக்கோமே) போட்டார் அதாவது அலுவலகப் பணியிலிருப்பவர்கள் அடுத்த டிபார்ட்மெண்டுக்கு போவதாக இருந்தால் கூட அவரிடம் இண்டர்காமில் அனுமதி வாங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் சீட்டில் இல்லை என்றால் மொபைலில் கால் செய்து அனுமதி கிடைத்ததும் போக வேண்டும். இதற்கே இப்படி என்றால் நினைத்த மாத்திரத்தில் வெளியிலா செல்ல முடியும், அதனால்தான் அலுவலடங்காம் (ஊரடங்காம்).

இரண்டாமவர் அதாவது துணை பொது மேலாளாரக இருப்பவர், இந்த நாட்டிலே பிறந்தவர், வளர்ந்தவர், இங்கே படித்தவர், பாஸ்போர்ட் மட்டும் எமன் கான்ஸுலேட்டில் வாங்கியவர் இந்த மண்ணின் மைந்தரைப் போல் நடக்க முயற்சிப்பவர், முதலாமவரோ வேலைக்காக மட்டுமே இங்கே வந்தவர்.

துணை பொது மேலாளருக்கு எப்போதும் முதலாமவர் (பொது மேலாளர்) என்ன செய்கிறார் என்று அடிக்கடி ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பார், பொது மேலாளர் ஏதாவது ஒரு செக்சனுக்கு வந்து விட்டுச் சென்றால் அல்லது அங்கே ஏதேனும் வேலையொன்று கொடுத்து விட்டுச் சென்றால் பின்னால் துணை பொது மேலாளார் வருவார் அவர் "என்ன சொன்னார், ஏன், எதுக்கு என்று..." கேட்டுத் தெரிந்து கொள்வார்.

இது அலுவலம் மற்றும் ஃபேக்டரியில் வேலை செய்யும் அனைவருக்கும் எரிச்சலைக் கொடுத்தாலும். அனைவரும் ஒத்துமையாக வேலை செய்யனும்னு சொல்லியிருக்கும் முதலாளி அடிக்கடி ஞாபகத்திற்கு வருவதால் எச்சிலை விழுங்குவதுபோல் விழுங்கியும் கொள்வர்.

இப்படியாகத்தான் நாளொரு சொதப்பலும் பொழுதொரு மழுப்பலுமாக சென்று கொண்டிருக்கும்போது.. நேற்று பெருநாள் முடிந்து வேலைக்கு திரும்பியதும் ஃபேக்டரியில் இருப்பவர்கள் வழமைபோல் தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஸ்வீட்களை அவர்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள் அதற்காகவே கூடுதல் 15 நிமிடம் அந்த ஒரு நாள் மட்டும் பிரேக் இருக்கும், ஆனால் புத்தம் புதிய பொது மேலாளர், "அதெல்லாம் வேண்டாம் வேலை முடிந்ததும் வெளியில் சென்று அதனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார், ஆனால் ஃபேக்டரியில் இருந்தவர்களெல்லாம் அதெப்படி இதுநாள் வரை எந்த பாகுபாடுமில்லாமல்தானே இருந்தோம் ஏன் திடீரென்று என்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போது பொது மேலாளார் எழுந்து சென்று விட்டார் கோபத்தில், அதன் பின்னர் தொடர்ந்து அங்கே வந்த துணை பொது மேலாளர் அவருக்கே உரிய தொணியில் "நீங்கள் வழமைபோல் செய்யுங்கள் நானும் கண்கானித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்ன நினைத்திருக்கிறார் அவர் மனதில்" என்று காட்டமாக சொல்ல, ஃபேக்டரியில் வேலை செய்பவர்களுக்கு "என்னடா இது யார் சொல்வதைக் கேட்பது" என்ற குழப்பத்திலிருந்து மிள்வதற்குள்ளேயே அவரவர் கொண்டு வந்திருந்ததை பகிர்ந்தும் கொண்டனர்.

அன்று மதியமே பொது மேலாளர் ஃபேக்டரியிலிருக்கும் அனைத்து டிப்பார்மெண்ட் சூப்பவர்வைசர்களை அழைத்து ஒரு மீட்டிங்கும் போட்டார், அதில் "என்னுடைய உத்தரவை மீறிவிட்டீர்கள் அனைவருக்கும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்வேன்" என்றார். 

அங்கே இருந்த துணை பொது மேலாளர் எழுந்து "அதெப்படி அவர்கள் வேலைக்கு வந்திருக்கிறார்கள் எந்த ரூல்ஸ் படி சம்பளம் பிடித்தம் செய்வீர்கள் என்று சொல்வாய்" என்று கேட்க.

அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு அவல் கிடைத்தது மெல்ல, அரை மணிநேரம் நடந்த வாய்ச் சண்டையில் நியா! நானா ! என்று தொடர்ந்தது. அதற்கிடையில் அங்கேயே இருக்கும் யாரோ ஒரு உளவாளி (spy) முதலாளிக்கு தகவல் கொடுக்க அவரும் வழமைக்கு மாறாக வேலை நேரம் முடியும் தருவாயில் அங்கே வர இருவரையும் தனித் தனியாக அழைத்து பேசினார்.

அப்புறம் இருவரும் அவரவர் இருக்கைக்கு வந்தனர், முதலாமவரான பொது மேலாளர் எல்லோருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் அதில் "அவரின் அனுமதியில்லாமல் எதுவும் ஃபோக்டரியில் எந்த செயல்களும் நடக்கக் கூடாது" என்றார், அதில் இரண்டாமவரான துணை பொது மேலாளாருக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை.

இரண்டாமவர் அவரும் அதேபோல் எல்லோருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் அதில் "பொது மேலாளார் என்ன புதிதாக செய்தாலும், அல்லது ஏதும் தடை போட்டாலும் என்னிடம் புகார் செய்யலாம்" என்று.

அப்போதுதான் புரிந்தது, இந்த முதலாளி வந்து என்னதான் இருவரிடமும் பேசியிருப்பார் என்று..

பொது மேலாளரிடம் "எல்லாமே உன்னுடைய கண்ட்ரோல்தான் நீதான் எல்லாமே இங்கே" என்றும்

துணைப் பொது மேலாளரிடம் "பொது மேலாளார் என்ன புதிதாக செய்தாலும் அல்லது தடங்கள் செய்தாலும் நீதான் சரி செய்யனும்" என்றும்...

சரி கொஞ்ச நாளைக்கு விட்டுப் பிடிப்போமே என்று காத்திருக்கின்றனர் ஃபேக்டரியில் வேலை செய்யும் அனைவரும்.

இதென்னடா இதெல்லாம் நம்மூரில் நடந்தேறுகிற மாதிரியே இருக்கேன்னு யாரும் முணு முணுத்தா அதுக்கு நாம் என்னங்க செய்ய முடியும் ? சரிங்க, அதிருக்கட்டும் நாம் கேள்வி படுவதெல்லாம் மெய்யுங்களா ?

ஆளாளுக்கு இப்படி மாறி மாறி யார் செய்வது நல்லது கெட்டது என்றோ அல்லது ஒருவர் மற்றவரின் குறைகளை காண்பதிலும் அதனை சொல்லிக் காட்டுவதிலும் காட்டும் அக்கரையை எந்த நலனுக்கு அங்கே ஊர்காரர்களால் அமர்த்தப்பட்டார்களோ அல்லது அங்கே உட்கார ஆசைப்பட்டார்களோ அதற்காக முழுமனதுடன் செய்வதே நல்லது. சுற்றியிருப்பவர்களால் உருவாகும் குழப்பத்தையும் சீண்டல்களையும் அப்படியே குப்பை அள்ளுவதுபோல் அள்ளி வீசி விட்டால், அங்கே வரிசையில் நிற்கும் மரியாதைகள் தானாக தேடி வரும்.

இல்லையேல், நாளொரு விமர்சனமும், பொழுதொரு புகாரும் என்று தொடர்கதையாக்கிடாமல் கொஞ்சம் பார்த்துங்க தலைவர்மாருங்களா.

வீடியோவும் ஆடியோவும் - நாளைய சமுதாயத்திற்கு ஆதாரங்களை ஆவணமாக திரட்டி அவர்களுக்கு முன்னுதாரனமாக இருக்கத்தான் பயன்படுத்த வேண்டும், அதற்கு மாறாக ஊர் நலன் என்ற போர்வையில் போட்டி போட்டுக் கொண்டு பேட்டியும், கண்களுக்கு(சுட்டிக்)காட்டியும் கொடுப்பது நாகரீகமன்று.

- அதிரைநிருபர்-குழு

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பிரதமருக்கோ முதல்வருக்கோ உதவியாக எதிர்கட்சியை சேர்ந்தவரை (அதுவும்சுப்ரமணிய சாமி போன்றோர்களை)துணைபிரதமராகவோ,துணை முத்ல்வராகவோ நியமிக்கப்பட்டது போன்ற கூத்து தான் நடந்துகொண்டிருக்கிறது.

எதிர்கட்சியை சார்ந்தோருக்கு துணைப்பதவி அளித்து ஆள்வது ஆரோக்கியமானதல்ல!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரையில் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் போல், நம்மூர் பேரூராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் இருக்கும் ஈகோ என்னும் குப்பைமேடு.

பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளுவதற்கு முன்பு, ஈகோ குப்பைகளை அள்ளி எரிந்துவிட்டு செயல்பட்டால் தான் ஊர் உருப்படும். இதை தவிர்த்து மீடியாக்களில் தலையை காட்டி ஒருவருக்கு ஒருவர் விமர்சன குப்பைகளை கொட்டித்தீர்ப்பதால் ஊர் உருப்படுமா என்பதை சிந்திக்க வேண்டும்.

தேர்தல் முடிந்து ஒரு மாதம்கூட முடியவில்லை அதற்குள் இவ்வளவு விமர்சனங்களா?

நல்லது செய்பவர்களுக்கு மவுனமே ஆயுதம்...

Yasir said...

ஆச்சிரியமா இருக்கு...இவர்கள்ட்ட வேலை பார்த்தும் உங்க தல முடி ஒன்ணு கூட கொட்டல...மண்டைய பிச்சுகிடுறது கிடையாதா ?? :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உங்க தல முடி ஒன்ணு கூட கொட்டல...மண்டைய பிச்சுகிடுறது கிடையாதா ?? :)//

தம்பி யாசிர் : கேமராவோடு போயித்தான் அதனையும் கொடுத்து வந்தாச்சே ! :)

அவர்களுக்கு சொல்லிப் புரிவதில்லை தலையில் ஏறி இருக்கும் கனம் !

அப்துல்மாலிக் said...

ஒரு அலுவலகத்திலோ தொழிற்கூடத்திலோ நடக்கும் “இது” மாதிரி ஒரு சில விடயங்கள்தான் இன்று நம்மூரிலும் நடந்துக்கிட்டிருக்கு என்பது வருத்தப்படக்கூடியது. இதனால் தேவையில்லாத காழ்புணர்ச்சிதான் வருமேதவிர நம்மூர்/தொழிற்சாலையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தமுடியாது.. இதை அறிவார்களா இந்த மக்கள்........

sabeer.abushahruk said...

பாவம்,
எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ!
எனி ஹெல்ப்?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.