Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நமக்கென்று ஏன் வேண்டும் ஊடகம்? 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2011 | , , ,

இஸ்லாமியர்களுக்கென்று ஒரு ஊடகம் வேண்டும் என்ற கோஷம் பல்லாண்டுகளாக ஒலித்து வருகின்றது. அப்படி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இஸ்லாமியர்களுக்கென்றே பல்வேறு மாத இதழ்கள், வார இதழ்கள் வந்துகொண்டுதானிருக்கின்றன..

அவைகள் பெரும்பாலும் இயக்கங்கள் சார்ந்தவைகளாகவும், தத்தமது இயக்கங்களைப் பற்றிய செய்திகளையும், அவர்களது சேவைகளையும் மட்டும் முன்னிறுத்தி செய்திகளை வெளியிடுவதோடு பிற இயக்கங்களை சாடியும் செய்திகள் வெளியிடும் ஒரு குறுகிய போக்கையே சார்ந்திருக்கின்றன.

இயக்கம் சார்ந்திராத இஸ்லாமிய பத்திரிக்கைகள் - தமிழ்நாடு - மற்றும் இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்தும், போஸ்னியா, பாலஸ்தீன், இரான், இராக் என்று சாதாரண மக்களுக்கு - புரியாத செய்திகளை விரிவாக தந்து - அவர்களை படிக்க ஆர்வமில்லாமல் செய்துவிடுகின்றன.

அந்த பத்திரிக்கைகள் கூட, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும், மண்ணடி, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் மட்டுமே விற்கப்படுவதாகவே தோன்றுகிறது.

இன்னும் சொல்வதென்றால், இஸ்லாமிய பத்திரிக்கைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருப்பதனால் பெரும்பான்மையான மக்களை சென்றடைவதில்லை.

ஒன்றுக்கும் உதவாத, சினிமா செய்திகளை மட்டுமே தாங்கிவரும் ஆனந்த விகடன், குமுதம், மற்றும் அவை சார்ந்த - பரபரப்பு அரசியல் ஆபாச கட்டுரைகளை வெளியிடும் நக்கீரன், குமுதம் ரிப்போர்டர், ஜூனியர் விகடன் போன்றவைகள் மக்களை சுலபமாக சென்றடையும்போது, இஸ்லாமிய பத்திரிக்கைகள் அவ்வாறு மக்களின் ஆதரவை பெறாமல் இருப்பது ஏன்?

பெரும்பான்மையோர் சொல்லும் பதில், மக்கள் சினிமா செய்திகளைத்தான் விரும்புகிறார்கள். நம்மால் அத்தகைய செய்திகளை வழங்க முடியாது என்பதுதான்.இந்த வாதம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக துக்ளக் என்ற வார இதழ் ஒரு நடிகரால் சினிமா இன்றி நடத்த முடிகிறபோது, நம்மால்  ஏன் ஜனரஞ்சகமான பத்திரிக்கைகளை தரமுடிவதில்லை..? 

குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், சந்தனக்கடத்தல் வீரப்பன், ராஜிவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகள், அவர்களை ஆதரிக்கும் தேச துரோகிகளுக்கு ஆதரவாகத்தானே மேற்கண்ட ஆபாச பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன? இன்றுவரை குற்றபத்திரிக்கைகூட வழங்கப்படாமல் - ஜாமீனில் வெளிவரமுடியாமல் - கோயமுத்தூர் சிறைச்சாலைகளில் தவிக்கும் அப்பாவிகளுக்கு இந்த ஆபாச பத்திரிக்கைகள் ஏதாவது செய்ததுண்டா? 

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு பெரிதாக விளம்பரம் அளித்து செய்தி வழங்கும் பத்திரிக்கைகள் மட்டுமே இன்று ஜனரஞ்சக பத்திரிகைகள் என்ற அபாயகரமான போக்குக்கு யார் காரணம்?

கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கள்ளக்காதல், காதலனோடு ஓடுவது, சாராயக்கடைகளில் குடித்துவிட்டு தகராறு செய்வது, நடிகர் நடிகைகளின் காதல், கல்யாணம் விவாகரத்து, கிசுகிசு போன்ற அருவருப்பான செய்திகள்தான் இன்றைய பத்திரிக்கைகளை ஆக்கிமித்துக் கொண்டிருக்கின்றன. சிறுவயதில் குமுதம் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளை சற்று கர்வத்தோடு கைகளில் கொண்டு செல்வோம்.. ஆனால் இன்று அந்த பத்திரிக்கைகளை ஒரு குடும்பத்தினர் ஒன்றாக உட்கார்ந்து படிக்க முடியுமா? 

இன்று ப்ளாக் ஸ்பாட் என்றழைக்கப்படும் வலைத்தளங்கள் அதிகமதிகம் பயன்பாட்டில் உள்ளது. நமதூர் அதிராம்பட்டினத்தில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட வலைப்பூக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் அதில் சினிமா சிறிதும் கலக்காமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமானோர் தினசரி பார்த்து படித்து, விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவில்லையா? 

கடந்த சட்டமன்ற, மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், நமதூர் மக்களுக்கு செய்திகளை வழங்குவதில் அதிராம்பட்டினம் வலைத்தளங்கள் ஆற்றிய பணி வியக்கவைத்தது. அயல் நாட்டில் வசிக்கும் பெருமாபலான அதிராம்பட்டினம் சார்ந்த மக்களுக்கு அன்றாடம் வலைத்தளங்களை பார்ப்பது தினசரி டீ காபி அருந்துவது போன்றது என்று - சமீபத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் வலைத்தளம் நிறுத்தப்பட்டபோது நண்பர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்திருந்தார்.

எந்த ஒரு வியாபார நோக்கமும் இன்றி, நமதூர் வலைத்தளங்கள் மக்களுக்கு தேவையான செய்திகளை ஆர்வமுடன் வழங்கி வரும்போது, நம்மால் ஏன் அதுபோன்ற தரமான பத்திரிக்கைகளை தரமுடியாது?

இன்று பயங்கரவாதிகள் அத்வானியின் ரத யாத்திரை நாடகம், மோடியின் உண்ணாவிரத நாடகம், சன்பரிவாரின் ஆசி பெற்ற அண்ணா ஹசாரே என்பவரின் போலி உண்ணாவிரதம் போன்றவைகள் கார்பொரேட் பத்திரிக்கைகளால் பெரிதும் விளம்பரப்படுத்தப்படுகிறது.

இந்தியாவுக்குள் அடைக்கலம் பெற்று நமது நாட்டில் பயங்கரவாத செயல்கள் புரிந்து, ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நான்கு பேருக்கு கொடுக்கப்படும் விளம்பரம், வருஷக்கணக்கில் குற்றபத்திரிக்கை கூட வழங்கப்படாமல் கோவை சிறையில் அவதியுறும் அப்பாவிகளின் நியாங்களை எடுத்துக்கூற ஒரு ஊடகம் கூட முன்வராத அவலநிலை இருக்கிறதே..

அந்நிய நாட்டில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதால், ராஜபக்ஷேவை தூக்கிலிட கூக்குரலிடும் தேச துரோகிகள், இந்தியாவிலேய முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடி என்பவனை பற்றி ஏதும் சொல்வதில்லையே? 

ஒன்றுமில்லாத நிகழ்வுக்கேல்லாம் சாலை மறியல் பஸ் மறியல் என்று கூச்சலிடும் கூட்டத்தை படமெடுத்து செய்தியாக போடும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும், நமது உரிமைப் போராட்டங்களை இருட்டடிப்பு செய்வதேன்? 

பாபர் மஸ்ஜித் வழக்கில் - குரங்கு ஆப்பத்தை பங்குபோட்ட கதைபோல தீர்ப்பு வழங்கிய "திரீ இடியட்ஸ்" களின் செய்திக்கு முக்கியத்துவம் அளித்த பத்திரிக்கைகள், அதைப்பற்றி வாரக்கணக்கில் விவாதம் செய்த பத்திரிக்கைகள், அந்த தீர்ப்பை தடை செய்து - "த்ரீ இடியட்ஸ்" களை சாடிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று தெரியுமா?

வெடிகுண்டுகள் எங்கு வெடித்தாலும் - ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கம்தான் வைத்தது, ஈமெயில் வந்தது என்று அலறும் ஊடகங்கள், அந்த குண்டு வெடிப்புகளுக்கு சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என்று நிரூபணம் ஆகும்போது மட்டும் மௌனம் சாதிக்கும் நயவஞ்சகம் ஏன்? 

ஒரு ஆபாச சினிமா நடிகைக்கு ஒரு அவசரம் என்றால் எப்பேர்ப்பட்ட பதவியில் உள்ளவரையும் சந்தித்துவிடும் சூழல் இருக்கும் போது நியாயமான கோரிக்கைகளுக்காக கூட சாதாரண அதிகாரிகளைக்கூட நெருங்கமுடியாத நிலை நமக்கு எர்ப்பட்டிருப்பதர்க்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இன்மையும் ஊடக பலம் இன்மையும்தான் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

இந்த நிலை மாற நாம் என்னதான் செய்யவேண்டும்? சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல நமது சிறிய பங்களிப்பை இன்றே தொடர்ந்தால் இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.

நமதூர் சகோதரர்கள் தமது அறிய ஆக்கங்களை அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரைநிருபர் வலைத்தளங்களில் ஆர்வமுடன் பங்களிப்பு செய்தால் அதை நமது வெள்ளிநிலா சிறந்த கட்டுரை செய்திகளை என்றும் வெளியிட ஆர்வமாக இருக்கிறது.. அதிராம்பட்டினத்தில் இன்னும் அறியப்படாத ஏராளமான எழுத்தாளர்கள் அறிஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் அவர்களது  முழுத் திறமைகள் வெளிவராமல் அல்லது வெளிக்கொண்டு வரப்படாமல் இருக்கின்றன .. அவர்களுக்கான ஒரு அறிமுகமாக வெள்ளிநிலா செயல்படும்..ஏற்கனவே வலைப்பதிவர்களுக்கான பத்திரிக்கையாகத்தான் வெள்ளிநிலா இலவச வெளியீடாக வந்து கொண்டிருக்கிறது..  அது நமதூர் சகோதர சகோதரிகளுக்கு பயன்பட்டால் இன்னும் மகிழ்ச்சி..

அனைவரது ஆதரவையும் அன்போடு வேண்டுகிறேன்..

- A. Nizar Ahamed

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நமக்கென்ற ஊடகம் என்பதை விட நாம் நடத்தும் ஊடகம்தான் வெல்லவேண்டும் (ரேட்டிங்க் உயர எல்லாவகையான சூழ்ச்சிகளில் இறங்குவதாகட்டும்) என்ற போக்கு முந்திக் கொள்கிறது பெரும்பாலான சமயங்களில் அது மாஸ் மிடியாவாக உருவெடுக்கும்போது.

ஊடகங்களின் இரட்டை வேடம், சமுதாயத்திற்கு அல்லது தான் சார்ந்திருக்கும் மக்களுக்கு ஒரு முகம் மாஸ் மீடியா என்ற போர்வையில் உள்ளொன்றும் புறமொன்றும் தகிடுதத்தம் செய்திடும் மற்றொரு முகம்.

சமீபத்திய நீதிமன்றத்தீர்ப்பு ஒன்றில் 15 வினாடிகள் தவறான புகைப்படம் தொலைக்காட்சியில் காட்டியதற்காக சேனல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு 100 கோடி அபராதம் சுப்ரீம் கோர்ட் விதித்திருக்கிறது !???!!! நெருப்பு சுட்டதும் எரிகிறட்து போலும் !!!

அடப்பாவிங்களா ! ஒவ்வொரு வினாடியும் மாறி மாறி அப்பாவி முஸ்மீம்களை பயங்கரவாதிகளாகவும் கொடுரமானவர்களாகவும் அனைத்து தொலைக்காட்சிகளும் பேப்பர் மீடியாக்களும் புகப்படமென்ன கட்டுக் கதைகள் என்ன என்று அவிழ்த்து விடுவதை கண்டு கொள்ளாத அறிவுஜீவிகள் ஒரு நீதிபதியின் புகைப்படம் வேண்டுமென்றோ / தவறுதலாகவோ காட்டியதற்காக அபராதம் !!!!!

கொடூரம் கஞ்சா கடத்துபவனையும் விபச்சாரம் செய்பவனையும், அனைத்து கிரிமினல்களையும் மீடியா முன்னால் புகைப்படம் எடுக்கவும் வீடியோ எடுக்கவும் காட்டும் விதம் பர்தா அணிவித்துதான்..

நண்பர் நிசாரின் ஆதங்கம் சிந்திக்க வேண்டியவை ! ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு இருக்கிறது, எழுத்தாற்றல் மிக்கவர்கள்தான் என்றில்லை வாசிக்கும் பழக்கமுள்ள அனைவருக்கும் இதில் பங்கு உண்டு எதைப் படிக்க வேண்டும் எதை கிள்ளியெரிய வேண்டும் என்று பகுத்தாய்வதிலும்.

முயற்சிகள் வெல்ல வாழ்த்துக்கள்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒரு சாரார் மீதே பத்திரிக்கைகள் காட்டும் பழிவாங்கும் போக்கை மிகச்சரியாக விளக்கியுள்ளீர்கள்.

சமுதாயத்தில் அக்கரை நிறைந்த உங்களின் நல்ல நிய்யத் நிறைவேற வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.காலத்தின் கட்டாயம் நமக்கென ஊடகம். இதை அருமையாக விளக்கியுள்ளார் சகோ. நிசார்.சினிமா இல்லாமல் செய்திகளைத்தரமுடியும் நம்மாள் நமக்கென ஊடகம் சாத்தியமே! நல்ல தூண்டுகோள் மிக்க வேண்டுகோள். பரிசீலனை அவசியம். இன்சா அல்லாஹ் நல்லது இனி நடக்கட்டும்.

அப்துல்மாலிக் said...

இப்போதைய வாழ்க்கைக்கும் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது அரியதும்கூட, உடகமே செய்திகளின் சொர்கம், அந்த சொர்கம் நமக்கும் வேண்டாமா.

அதிரையின் ஊடகங்களான நிருபர், பிபிசி, போஸ்ட், எக்ஸ்பிரஸ் மூலம் அதிரையில் வசிக்கும் மக்களை விட இந்த ஊடகத்தின் மூலம் அறியத்தரும் விடயங்கள் ஏராளம். நமக்கென ஊடகம் இதற்காக மெனக்கெடவேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

ஊடகம் பேசிடும் தன்மை

ஊனமாய்ப் போகுதே உண்மை

நாடகம் போடுதல் கண்டு

நாணமே நாணிடும் ஈண்டு

பாடமும் பாடலும் நம்மை

பார்த்திடும் தோரனை வெம்மை

வேடமேப் போடுதல் என்றும்

வேகமாய்த் தீர்த்திட நின்று



தீவிர வாதியாய்க் காட்டி

தீர்த்திட ஏனிதில் போட்டி?

மேவிடும் வேற்றுமை யாரால்?

மேதினி கூறிட வாராய்!

பாவிகள் காட்டிடும் வஞ்சம்

பாலினு லூற்றிடும் நஞ்சாம்

தாவிடும் ஓரினம் நம்மை

தாழ்ந்திடக் கூவுதல் உண்மை



ஊழ்வினைப் பேரிலே மக்கள்

ஊழலைப் பார்த்திடா வெட்கம்

வாழ்வினைத் தாக்கிடும் செய்தி

வாழ்வதா சாவதா நீதி?!

பாழ்வினை யூட்டிடும் பாடல்

பாலகர் யாவரின் தேடல்

சூழ்நிலைக் கைதியாய் நாமும்

சோர்ந்திட வாழ்ந்திட லானோம்



ஆயிரம் கைகளைக் கொண்டு

ஆதவ(னைச்) சாடுதல் போன்று

ஆயிரம் பொய்களைக் கூட்டி

ஆர்ப்பரி(க்கும்) ஊடகம் காட்டி

வாயினா லூதிடும் காற்றால்

வாய்மை நீங்கிட மாட்டா

ஆயினும், வேற்றுமைத் தூண்டி

ஆணவம் தோன்றிட வேண்டா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்றைய அனேக ஊடகங்கள் சைத்தானினின் தகவல் தொடர்புத்துரையாகவே உள்ளனர் என்பதை பகிரங்கமாக எடுத்துரைத்துள்ளீர்கள். நிசார் காக்கா. மிக்க நன்றி.

மிகவும் முக்கியமான விடையம் என்னவென்றால்.. மார்க்கத்தில் அகீதாவில் ஒன்றுபட்டுவிட்டு சிறிய சிறிய கருத்துவேறுபாடுகளால் கருத்துப்பரிமாற்றம் என்ற பெயரில் தன் கருத்து மட்டும்தான் சரி, மற்றவரின் கருத்து தவறு என்று என்று வருடக்கணக்கில் சக முஸ்லீம்களை எதிரிகளாக சித்தரித்து திரியும் போக்கு பல இயக்க அபிமானிகளிடம் என்று ஒழியுமோ அன்று தான் முஸ்லீம்களுக்கான சக்திவாய்ந்த ஊடகம் உருவெடுக்கும்.

நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கும் சக்தியாக ஓர் மிகப்பெரிய நம் சமுதாய ஊடகம் உருவாகி வெற்றிக்கொடிக்கட்டும் காலம் தூரத்திலில்லை.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல வலைப்பூக்களினால் கிடைக்கும் சிறு சிறு அனுபவங்கள், இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ஒரு மிகப்பெரிய ஊடகப்புரட்சியை ஏற்படுத்தும்.

ஆனால் இவைகளுக்கு சரியான திட்டமிடல், வழிக்காட்டல், எதிர்ப்புகளை எதிக்கொள்ளும் திறன், ஊடகப்புரட்சி செய்ய துடிக்கும் அடுத்த சகோதரர்களின் திறனை மட்டம் தட்டாமல் ஆரவமூட்டி மதிப்பளிப்பது, அடிமட்டத்திலிருந்து ஊடகப்பயிற்சி போன்ற பண்புகள் என்று வலுவாகுமோ அன்று தான் முஸ்லீம்களுக்கான சக்திவாய்ந்த ஊடகம் உருவெடுக்கும்.

மேலே சொன்னவைகள் என் தனிப்பட்ட கருத்துக்களே..

Aboobakkar, Can. said...

ஊடகம் என்பது சமுதாயத்தின் முதுகெலும்பு அதிலும் அது சிறூபான்மை மக்களூக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.....முஸ்லிம்களூக்கென்றூ ஒர் சரியான மீடியா இல்லை இதுதான் நாம் செய்யும் தப்பு????

KALAM SHAICK ABDUL KADER said...

//மிகவும் முக்கியமான விடையம் என்னவென்றால்.. மார்க்கத்தில் அகீதாவில் ஒன்றுபட்டுவிட்டு சிறிய சிறிய கருத்துவேறுபாடுகளால் கருத்துப்பரிமாற்றம் என்ற பெயரில் தன் கருத்து மட்டும்தான் சரி, மற்றவரின் கருத்து தவறு என்று என்று வருடக்கணக்கில் சக முஸ்லீம்களை எதிரிகளாக சித்தரித்து திரியும் போக்கு பல இயக்க அபிமானிகளிடம் என்று ஒழியுமோ அன்று தான் முஸ்லீம்களுக்கான சக்திவாய்ந்த ஊடகம் உருவெடுக்கும்.// தம்பி தாஜுத்தீன் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை; இதில் வேதனையான ஒரு விடயம் என்னவென்றால் ஒரு தொலைக்காட்சியின் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் இதே கருத்தினை ஒரு மாற்று மத தலைவர் குறிப்பிட்டு ”முஸ்லிம்கள் தங்களுக்குள் தொலைக்காட்சி வழியாக சண்டையிட்டுக் கொள்வதால் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களே வழி தேடிக் கொண்டார்கள்” என்ற நெத்தியடியான இந்த விமர்சனத்திற்குப் பின்னரும் திருந்தாமல் இருப்பவர்களை எண்ணி எண்ணி மிகவும் வேதனைப் படுவதில் என்னைப் போல் ஒற்றுமை விரும்பும் தம்பி தாஜுத்தீன் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் “அதிரை அனைத்து முஹல்லா”ப் போன்ற அமைப்புச் சாரா அமைப்பு நாடி உள்ளோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு