Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊடக போதை தொடர்கிறது... 2 50

அதிரைநிருபர் | December 18, 2011 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பானவர்களே..
ஊடக போதை முகவுரைப் பதிவில் புனைபெயர்களிலும் போலியான பெயர்களிலும் எழுதுவதும் கருத்தாய்வுகள் பதிவதும் அங்கே  தங்களின் அறிமுகம் அவசியமற்றது என்பதில் நிலையாக இருப்பதிலும் அதனால் விளையும் பாதிப்புகளை மறைக்கவே முயற்சிக்கின்றனர் என்ற நிலையை விளக்கமாக விவரித்ததோடு மட்டுமல்லாது. அப்படியாக செய்வதனால் குழப்பங்கள் எவ்வாறு தலைதூக்குகிறது என்றும் குர்ஆன் ஹதீஸ்களை மேற்கோள்காட்டி விழிப்புணர்வூட்டும் விதமாக பதிவு செய்தோம்.
பின்னூட்டங்களில், கருத்தாய்வுகளில் ஈடுபடும்போது புனைபெயர் மற்றும் போலியான புனைபெயர்கள் தொடர்பாக பெரும்பாலான சகோதரர்கள் தங்களின் தன்னிலையாகவும், அறிவாய்ந்த விளக்கங்கள் மற்றும் தங்களின் நிலைப்பாடுகளின் கருத்துக்களை கண்ணியமாக பதிந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் நம் எல்லோரையும் குழப்பம் விளைவிக்கும் சைத்தானிய குணங்களிலிருந்து விலகியிருக்க பாதுகாப்பளிப்பானாக..
நிறைவில் புனைபெயர்களில் எழுதுபவர்கள் தங்களை பற்றிய அறிமுகத்தினை வெளிகாட்டிக் கொண்டு காலச் சூழல் அறிந்து நன்மையை நாடி எழுதினால் அவர்களின் கருத்துக்கள் மேலும் வலுப்பெரும் என்பதனை அவர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக இன்ஷா அல்லாஹ்
பொதுவில் தங்களுடைய கருத்தாய்வினால் பதிந்த ஆக்கத்திலோ அல்லது கருத்துக் கோர்வையிலோ ஊடுருவும் உணர்வுகளால் கவரப்பட்ட சகோதரர்களின் அறிமுகம் காண ஆவல் எழுவது இயல்பே அதனை அறிந்து கொள்ள கவரப்பட்டவர் வினவும் பட்சத்தில் பொதுவிலோ அல்லது மின்னஞ்சலிலோ கேட்டால் அங்கே அறிமுகமாகி கொள்வதே சாலச் சிறந்தது.
அப்படி சுயவிபரங்கள் தெரிவிக்க மறுத்து அதற்காக மனதில் தோன்றும் காரணங்களை எல்லாம் சுட்டிக் காட்டி மறைந்துகொண்டு வலைப்பூக்களில் இவைகளெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஊடகத்தில் சகஜம் என்று வாதிடுவதனால் அப்படியானவர்கள் நல்லதையே எழுதினாலும் "ஒரு சந்தேகக் கண்ணோட்டத்துடனே பார்க்கத்தூண்டும்". அவர்கள் போலியான புனைபெயர்களைக் கொண்டவர்களாக கருதுவதை தவிர்க்க முடியாததே. நிழலாக வரும் இது போன்றவர்களை ஊக்கப்படுத்தவதால் எந்த பயனும் சமுதாயத்திற்கு ஏற்படப்போவதில்லை.
வலைத்தளங்களில் பின்னூட்டங்களில் முதுகுக்குப் பின்னால் ஓட்டுபவர்கள் சிலர் அறிந்தோ அறியாமலோ பின்னூட்டமிட ஏதுவாக தங்களின் முகக்குறிப்பில் (profile) உள்ள பெயர்களை அடிக்கடி மாற்றி எழுதி வருபவர்களும் இருக்கிறார்கள். வலைதளங்களில் தங்களை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாது என்று அசாதாரணமான தைரியமும் சேர்ந்து எண்ணிலடங்காத குறியீடுகளை (ID க்களை) உருவாக்கி போலியான புனைபெயர்களோடு பின்னூட்டங்களில் தங்களின் வீர விளையாட்டுக்கு களம் அமைப்பவர்களும் உண்டு. அதில் அவர்களுக்கு அப்படி ஒரு அற்ப சந்தோஷம். இப்படியானவர்களின் அடையாளங்களை கண்டுபிடிப்பதில் வலைத்தளங்களில் சிக்கலை சின்னா பின்னாமாக்குபவர்களுக்கு எவ்வித சிரமும் இருக்காது. அதனை அறிந்தார்களேயானால் போலித்தனமான வேலைகளை செய்ய தயங்குவார்கள்.
கூகுல் ID வைத்திருந்தால், நீங்கள் blogger.com வலம் வரும் எந்த பிளாக்கரிலும் (அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில்) கருத்துக்களை பதியலாம், அதேபோல் தனிப்பட்ட பிளாக் பயனீட்டார்களின் பெயருக்கும் (எந்த நிலையிலும் பெயர் அடையாளங்களை மாற்றும் வசதியுடன்) ஒரு குறியீட்டு எண் ID Number உள்ளது. காட்டாக dcba3421@gmail.com என்றொரு  ஜிமெயில்  மின்னஞ்சல் முகவரி, இதற்கு http://www.blogger.com/profile/12345678901234567890  என்றொரு குறியீட்டு எண்ணாக பயனீட்டாளருக்கு என்று இருக்கும் இதனை நன்கறிந்தவர்களாக நீங்களும் இருப்பீர்கள்.
இருப்பினும் (பார்க்க அருகிலிருக்கும் படமொன்றை, சிகப்பு கட்டமிட்ட எண்கள்). இந்த முகவரியை நீங்கள் உருவாக்கும்போது உங்களின் நேரடிப் பெயர் அல்லது விரும்பிய பெயர் கொடுத்திருப்பீர்கள் (பார்க்க புகைப்படம், சிகப்பு வட்டமிட்ட காட்டு பெயர்தான் இது). அந்த பெயர்  மின்னஞ்சல் முகவரியினை உள்ளீட்டு  கருத்துக்களை பதிவு செய்தால்  ஏற்கனவே ஜிமெயிலில் குறிப்பிட்டுள்ள பெயர் அல்லது பிளாக்கர் முகப்பு குறிப்பில் (profile) இட்டிருக்கும் பெயர் அந்தக் கருத்திட்டவர் பெயரா பதியப்படும். ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரியையும் பிளாக்கரில் பயண்படுத்தினால் அங்கே ஒரு குறியீட்டு எண் ID-number மட்டுமே உருவாகும். எத்தனை தடவை முகப்பு குறிப்பின் profile உள்ள பெயர்களை மாற்றியமைத்து கருத்திட முயன்றாலும் கருத்திட்டவரின் அடையாளத்தின் போலித்தனத்தை இணையத்தளப் பயன்பாட்டாளர்காளும், வலைக்குள் சிக்கலெடுப்பவர்களாலும் இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள் இவைகள் யாவும் இலவசமாக வழங்கும் வசதியினை பயன்படுத்தியே.




மற்றொரு வகை ஏராளமான வலைத்தளங்கள் கட்டணம் செலுத்தி உலவியில் உலாவும்போது பயன்பாட்டாளர்களுக்கு (users) அறியாமலே ஊடுருவ விட்டு அங்கே மறைந்திருந்து வேவு பார்க்கும் மென்பொருளை (hidden spyware software) நிறுவிடவும் வசதிகளை வழங்கியிருக்கின்றன. அதனை பிளக்கரை அல்லது இணையதளத்தினை நிர்வகிப்பவர்கள்  அதனை பயன்படுத்தியிருந்தால், ஒவ்வொரு முறையும் அந்த தளங்களுக்கு வருபவர்களின் இணைய நெறிமுறை முகவரி (IP ADDRESS / Internet Protocol address), சேவையை வழங்கும் நிறுவனம் (SERVICE PROVIDER), தேதி, நேரம், எத்தனை முறை வருகை போன்ற விபரங்களை துல்லியமாக சேகரிக்கிறார்கள்.
மேலும் பயன்பாட்டளர்கள் எங்கிருந்து வருகை தருகிறார்கள்  என்பதை  இணைய நெறிமுறை முகவரி (IP-Address) உள்ளிட்டு கூகுல் map ஊடாக துல்லியமாக இல்லாவிடினும் தோராயமாக கண்டுபிடிக்க முடியும். போலிப் புனைபெயர்களின் பின்னூட்டக்காரர்களுக்கு தெரிந்திருக்க  வாய்ப்புகள் இருக்கலாம் அல்லது அவர்களுக்கு அவைகள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் இருக்கலாம்.

மற்றுமொரு வகை, அறிமுகத்தை காட்ட விரும்பாதவர்களை அவர்கள் அறியாமலே அறிந்திட முயற்சிக்கும் முறை. ஒரு குறிப்பிட்ட  இணைய வலைதளத்திற்கு வருகை செய்தால் அங்கே செல்பவரின் கணினிக்குள் பயன்பாட்டாளர்களின் (users) அனுமதியின்றி  அவர்களால் உணரப்படாமலே அங்கே வெப் கேமராவை தானாக மென்பொருளைக்  கொண்டு இயக்கப்பட்டு அதன் முன்னாலிருக்கும் அனைத்து பிம்பங்களையும் ஏன் பயன்பாட்டளரான உங்களையும் புகைப்படங்கள்  எடுக்கப்பட்டு ஏவியவனுக்கு எடுத்து வீசிக் கொண்டிருக்கும் பாவம் அதன் தாக்கம் தெரியாமலே.


தொடர் இணைய வசதியினால் அதனை எப்போதும் அதன் இயக்கத்தை நிறுத்தாமல் தொடர்பிலேயே கணினியை அல்லது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள எந்த சாதனத்தையும் பயன்படுத்தி முடித்ததும் அதன் செயலை முடக்காமல் அல்லது நிறுத்தாமல் வைத்திருப்பதும் விபரீதமே.
தொடர் இணைய இணைப்பினால் புதிய மறைக்கப்பட்ட கணினிப் பினி உருவாக்கும் மென்பொருள்களால் hidden virus software எந்தச் சூழலிலும் உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.இது அவசியமற்ற வலைத்தளங்களுக்கும், அட! என்ன இது என்று ஆர்வக் கோளாரில் சிக்கிய சுட்டிகளை தட்டுவதனால் வினைக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது. கணினித்துறையில் கொட்டம் போட்டவர்கள்  பெரும்பாலோர் இந்த மறைமுக சித்து விளையாட்டின் தாக்கத்தை நன்கு அறிவர். ஆகவே சிக்கும் வலையெல்லாம் சிம்மாசனமாக இருக்கிறதே என்று நினைத்து அங்கேயே போய் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிப்பதை தவிர்த்துக்கொள்ளுவது நல்லது.
இங்கே பதியப்பட்ட தகவல்கள் போலி புனைபெயர் பின்னூட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல, அடுத்தவர்களை சீண்டுவதில் உவகை கொள்வதிலும், அநீதிக்கெதிராக தட்டிக் கேட்கிறோம் பேர்வழிகள்  வலையுலகில்  இதெல்லாம் சகஜம் என்று பொழுது போக்கையே மைய்யமாக வைத்து ஊடகத்துறையில் அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் அவர்களுக்காக  வாதாடுபவர்களுக்கும் தெரியாமல் இருக்காது. இருப்பினும் இவைகள் பற்றி அறியாதவர்களுக்கு அறியத்தருவதும் இதன் நோக்கமே.
நம் சகோதரர்களுக்கிடையே பொதுவில் கருத்துரையாடும்போது போலியாக விழிப்புணர்வு அல்லது புரட்சி என்று சொல்லி நிழலாகவே  பதியும் நம் நல்லெண்ணக் கருத்துக்களால் என்ன பயன்? என்றுதான்  நாம் சவால் மிகுந்த ஊடகத்துறையில் வலுவான சமுதாயமாக நிலையாக காலூன்றப் போகிறோம்?
இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒரே எண்ணத்தில் போலித்தனமில்லாமல்  ஊடகத்துறையில் நாம் காலூன்ற முயற்சித்தால், வலுவான ஊடகம் நம் கட்டுக்குள் வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.
இது சாத்தியமா?
நம்மில் இருக்கும் இயக்கபோதை, தடுமாற்றமான ஊடகபோதை (திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், பழக்கவழக்கத்தில் நண்பர்களுக்கு ஒரு முகம், வீட்டாருக்கு மற்றொரு முகம், அறிமுகமில்லாதவர்களுக்கென்று ஒரு முகம், சார்ந்திருக்கும் இயக்கத்திற்கு என்றொரு முகம் இவைகள்) தெளிந்து, சுய விருப்பு வெறுப்புகளை மறந்து அல்லாஹ்வுக்காக குர்ஆன் சுன்னா வழியில் நடந்தால் மட்டுமே சாத்தியம்.
போலித்தனத்திலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக..
ஊடக போதையில் இதுவரை அதிரை இணைய ஊடகங்களை தொட்டுதான் பார்த்தோம், இனிமேல்தான் நம்மைச் சுற்றி இருக்கும் ஊடகங்களின் போதை எவ்வகை, எவ்வாறு நம் சமுதாயத்தோடு விளையாடுகிறது, விஷக் கருத்துக்களை ஊசியை ஏற்றுவதுபோல் எப்படியெல்லாம் நம்மிடையே ஏற்றுகிறார்கள் என்று விரிவாக தொடர்ந்து பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
-அதிரைநிருபர் குழு

50 Responses So Far:

Shameed said...

ஆக இவ்வளவு விஷயம் இருக்குதா இதுலே ஆச்சரியமா இருக்குது ரிலாக்ஸா இதுலே உட்கார்ந்து இவ்வளவு நாளா பொழுத கழிச்சாச்சு இனி உசாரா இருக்கனும்பா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சொல்லப்பட்டவை கொஞ்சமே...

இணையமே தஞ்சமென்று தவழும் கைப்புள்ளைங்களும் சரி, சமவயதினரும், முதிர்ந்தவர்களும் அறிந்து கொள்ள வேண்டியது இதுவே...

இண்டர்நெட் என்று வைத்திருக்கும் பெயரே சொல்லிக் காட்டுகிறது அந்த வலைக்குள் (net) ஓட்டைகள் ஏராளம் இருக்கத்தானே செய்யும்...

வலை எந்த நேரத்திலும் அறுடலாம், அறுக்கப்படலாம், இருக்கின்ற ஓட்டைக்குள்ளும் நுழைந்திடலாம்.

கசக்கு மருந்தை குடிக்க தேன் தடவி புசிக்க கொடுப்பது போன்ற வித்தைகள் ஏராளாம் கொட்டிகிடக்கும் இணையம் விளைவிக்கும் அறியப்படாத வினைகளை அங்கே வென்றவர்க்ள் வெகு சிலரே...

ஆதலால் கவனம் தேவை...

சேக்கனா M. நிஜாம் said...

நல்ல ஒரு பதிவு “ வாழ்த்துக்கள் ” அதிரை நிருபர் குழுவுக்கு

கட்டுரைகள் அல்லது கருத்துக்கள் பதிவு செய்யும் பொழுது அவர்களின் உண்மை பெயர் ( அதாவது அவர்களுடைய பெற்றோர்கள் சூட்டிய பெயரில் ) பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும் We Can easy to identify the IP address, OS & Cities…..it doesn’t matter

அன்புடன்,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆண்களாகிய நாம் ஆசையில் அடிக்கடி எடுக்கும் நம் வகைவகையான (வரம்பிற்குட்பட்ட) புகைப்படங்களை முகப்புத்தகத்தில் (ஃபேஸ் புக்கில்) அணுதினமுமோ, வாரமொருமுறையோ, மாதமொருமுறையோ அல்லது அவ்வப்பொழுதோ தரவேற்றம் (அப்லோட்) செய்து நம் புகைப்படத்தை நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத நட்பு வட்டாரங்கள் பார்த்து மகிழட்டும் என்று வெளியிட்டு வருவதனால் ஏதேனும் நமக்கு ஆபத்து உண்டா? நம்முடைய புகைப்படங்கள் தீயவர்களால் திருடப்பட்டு அதில் ஏதேனும் சூழ்ச்சிகள் செய்ய இயலுமா? முதற்கொண்டு மார்க்க ரீதியில் ஏதேனும் தவறு உண்டெனில் ஃப்ளீஸ், தயவு செய்து தாங்களோ அல்லது விளக்கம் தெரிந்த யாரேனும் இங்கு தெளிவாக விளக்கினால் நம் தவறுகளை திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

மேலே ந‌ல்ல‌தொரு ஆக்க‌ம் த‌ந்து வ‌லையில் வ‌ர‌ம்புக‌ளின்று சுற்றித்திரியும் ந‌ப‌ர்க‌ளை கொஞ்ச‌ம் சிந்திக்க‌ வைத்து விட்டீர்க‌ள்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

sabeer.abushahruk said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.எங்களைப்போன்ற விவரம் தெரியாதவர்களுக்கு எளிதாக விளங்குகிறது.

தொடருட்டும் அதிரை நிருபரின் தொண்டு

Yasir said...

”கட்டுரை” புனைப்பெயராளிகளின் வயிற்றில் புளியை கரைப்பதுடன்...அறியாத பல விசயங்களை அள்ளி தந்து இருக்கின்றது..வாழ்த்துக்கள் அ.நி

ZAKIR HUSSAIN said...

இதை படித்த பிறகு வம்புக்கு எழுதும் ஆட்கள் யோசிக்களாம். புனைப்பெயரில் கூட சிலர் தன்னை தரம் தாழ்த்தி பெயர் வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள்.

ZAKIR HUSSAIN said...

தாறுமாறாக புனைப்பெயர் வைத்துக்கொண்டு கேவலமாக எழுதுபவர்களுக்கு உள்ள மரியாதையும், "பஸ்ஸ்டாண்ட் கக்கூஸ் எழுத்தாளரு"க்கு உள்ள மரியாதையும் ஒன்றே.

நீங்கள் சொன்ன டெக்னிக்கல் விசயம் இந்த கொசுமூளை பார்ட்டிகளுக்கு எட்டாது.

Anonymous said...

நிருபர்காக்கா, இதை படித்தப்பின் பயம்மா இருக்கு! ரொம்ப கவனமா இருக்கணும்,போலித்தனத்திலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்.

அபூபக்கர்-அமேஜான் said...

ஊடக போதை இன்னும் எத்தனை தொடர இருக்கிறது இப்ப இரண்டு வந்துருச்சி அடுத்து வருமா எதிர் பார்க்கலாமா? நம்மலுடைய வாப்பா, உம்மா அழகிய பெயர்கள் வைத்துருக்கும் போது. ஏன் பட்ட பெயர்களும், மற்ற பெயர்களும் வைத்துயிருக்கிறார்கள்
என்று தெரிய வில்லை. அதில் என்ன சாதிக்க போகிறார்கள் என்பதும் தெரியவருவதில்லை புனை பெயர்களை வைத்து எதை வேண்டுமானாலும் கவிதைகள், கட்டுரைகள் போன்ற செய்திகளை எழுதலாம் என்று எண்ணுகிறார்கள். புனை பெயரில் எழுதுவதை தவிர்ப்பது நல்லது. அ(நி) சார்பில் ஒரு வேண்டுகோள் வையுங்கள் அப்படி மீறி அவர்கள் எழுதினால் நீங்கள் அவர்களுடைய கருத்துக்களை வெளியிட வேண்டாம்.

ZAKIR HUSSAIN said...

புனைப்பெயர் வைத்து எழுதுவதில் தவறில்லை...அது ஓழிந்துகொள்ள பயன்படுத்தாத வரை.

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//நீங்கள் சொன்ன டெக்னிக்கல் விசயம் இந்த கொசுமூளை பார்ட்டிகளுக்கு எட்டாது.//

ஆகா எங்கேயோ அடிக்கடி கேட்டது போல் இருக்கே ( சீக்ரேட் ஸ்டீல் பாடி யாரிடமும் சொல்லமாட்டேன்)

sabeer.abushahruk said...

என் பையனிடம் கேட்டேன்,

"உனக்கு நெய்னா தம்பி மாமாவைத் தெரியுமா?"
"தெரியாது டாடி"
"அபு இபுறாகீம் அதாவது இபுறாகிம்ட வாப்பாவை?"
"தெரியும் டாடி"

என் பையனைப் பொருத்தவரை எது புனைபெயர்? பெயர்கள் அடையாலம் காண எனில்,

நெய்னா தம்பியா
அபு இபுறாகீமா

எது?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n)ன் கேள்விக்கு என்று தனிப்பதிவாக வந்தால்தான் இணையத்தின் வினைகளின் கொடூர முகம் தெரியவரும் ! அது மட்டுமல்ல தன் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன் அப்போ கண்ணை கைகொண்டு மூடிகிட்டு விரல் இடுக்கில் அந்த மின்னஞ்சலை பார்க்க கூடாது (அநாகரிகமாக இருக்காது ஆனால் அதிர்ச்சியாக இருக்கும்) காத்திருக்கவும்... (சஸ்பென்ஸ்)!

Kuthub bin Jaleel said...

sabeer.abushahruk சொன்னது
//என் பையனிடம் கேட்டேன்,
"உனக்கு நெய்னா தம்பி மாமாவைத் தெரியுமா?"
"தெரியாது டாடி"......//

அதற்குத்தான் உங்களைப் போன்று பெயர் வைக்க வேண்டும். Sabeer என்றாலும் தெரியும். AbuShahruk என்றாலும் தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக வாப்பா, உம்மா வைத்த அழகிய பெயருடன் photo-வும் இருந்தால் நலம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என் பையனைப் பொருத்தவரை எது புனைபெயர்? பெயர்கள் அடையாலம் காண எனில்,//

கவிக் காக்கா சாருக் அருகில் இருக்கும்போதும், அல்லது நான் சாருக் அருகில் இருக்கும்போது நீங்கள் அழைப்பது என்னவோ இபுறாஹிம் வாப்பா என்றுதான் ! ஆகவே அறிந்த பெயராக சாருக் சொன்னது போலவே...

நானும், கலாம் உங்களை கவிக் காக்கான்னு செல்லப் பெயர் வைத்து அழைக்க வில்லையா !? என்னிடம் யாரெல்லாம் யார் அந்த கவிக் காக்கா என்று கேட்குபோது உங்களைப் பற்றி சொல்லித்தானே ஆகனும், அவர் பெயர் அப்படித்தான், அதனை வெளியில் சொல்ல மாட்டேன்னு சொன்னா எப்படி காக்கா !

அதை விடுங்க, கொதிக்கிற எண்ணெயிலிருந்து எழுந்து வந்த ஒருவருக்கு மூக்கில் வேர்த்துச்சாம் அப்போ அவர் சொன்னாராம் அவய்ங்க கொஞ்சமாக இருந்துகிட்டு கொதிக்க கொதிக்க கொட்டிக் கொண்டும் கொஞ்சிகிட்டே இருக்காய்ங்க... ஏன்னா அந்த கொஞ்ச பேரோடு ஒருவராக வந்துவிட்டும் சென்றிருக்கிறார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதற்குத்தான் உங்களைப் போன்று பெயர் வைக்க வேண்டும். Sabeer என்றாலும் தெரியும். AbuShahruk என்றாலும் தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக வாப்பா, உம்மா வைத்த அழகிய பெயருடன் photo-வும் இருந்தால் நலம்.//

குத்துப் காக்கா அவர்களின் தூண்டுதலால்....

ஆகவே இன்று முதல் எனது பெயர் அச்சாகும் இடத்திலும் திருத்தம் கொண்டுள்ளேன் :)

அப்பாடா ! :)

sabeer.abushahruk said...

//எண்ணெயிலிருந்து எழுந்து வந்த ஒருவருக்கு மூக்கில் வேர்த்துச்சாம் அப்போ அவர் சொன்னாராம் அவய்ங்க கொஞ்சமாக இருந்துகிட்டு கொதிக்க கொதிக்க கொட்டிக் கொண்டும் கொஞ்சிகிட்டே இருக்காய்ங்க... ஏன்னா அந்த கொஞ்ச பேரோடு ஒருவராக வந்துவிட்டும் சென்றிருக்கிறார்.//

எனக்குப்பிடித்த உணவில் ஒன்று அது. என்ன செய்ய மரப்புக்குப் பின்னால் ஒளிந்து நிற்கும் பெண்மையோ என்று மருகிவிட்டேன்.

எது சிறந்தது அபு இபுறாகீம்?
அடையாளம் தெரியாத முகங்களைக்கொண்ட ஆயிரம் பேரின் மந்தையா?
அடையாளம் தெரிந்த 10 பேர் கொண்ட சபையா?

கோடிக்கணக்கான மக்களின் விதியையே மாற்றி அமைப்பது நூற்றுக்கணக்கான எண்ணிக்கையிலுள்ள ஆள்வோர்தானே?


இன்னிக்கு மத்தி பொறிச்ச மீனு செம வெட்டு.

Yasir said...

//m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…/// நல்லாயிருக்கே !!! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எது சிறந்தது அபு இபுறாகீம்?
அடையாளம் தெரியாத முகங்களைக்கொண்ட ஆயிரம் பேரின் மந்தையா?
அடையாளம் தெரிந்த 10 பேர் கொண்ட சபையா?//

மிகச் சரியே காக்கா ! - சான்றோர் சபையே !

Yasir said...

காக்கா கொஞ்சம் நேரம் முன்னாடி மச்சான் மாலிக் (பாபா சூட் மொபைல்) வந்தாப்ல...எனக்கு கொஞ்சம் வயிறு சரியில்லாத காரணத்தால் வயித்துல கடமுடண்டு சத்தம் அதற்க்கு அவங்க கேட்டது“ என்ன மச்சான் வயித்துல பீரோ தள்ளுற சத்தமா கேட்குது”

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாழ்த்துக்கள்!
இன்னக்கி பெயர் சூட்டும் நாளா?
எல்லாரும் வாங்க உங்க பெயரோடு!
வாழ்க வாப்பாவும்,மகனும்.
மறந்துவிட வேண்டாம் ஒழிகா கொடுக்கனும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
//Yasir சொன்னது… //

இதுநாள் வரைக்கு பெயர்களை ரசித்துக் கொண்டாயீந்தீய !!

தம்பிகளா, ஏற்கனவே Sஹமீத் காக்கா ஒவ்வொரு முறையும் தலைப்பு ஒன்று பிரசவமானால் "கிடாய் வெட்டிடுங்க" சொல்லுவார்கள் இது அவர்களின் வழமையான தூண்டுதல்... அதனையே இங்கே MHJம் ஒதுஹியா கொடுக்கச் சொல்வதும் :)

sabeer.abushahruk said...

//வயித்துல பீரோ தள்ளுற சத்தமா கேட்குது” //
ஹாஹாஹா.

இவுகதானே,

"ஒத்த கட்டில்ல போட்ட மையத்தை, ரெட்டைக்கட்டில்ல போட்டா என்ன"ன்னு கேட்டதுக்கு, "சும்மாருங்க ராத்தா. அவுக என்னா பெரன்டா படுக்கப்போறாக"ன்னு கேட்ட ஜோக் சொன்னது.

ஆள உக்கார வைத்து எல்லா ஜோக்ஸையும் கறந்து பதியுங்களேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அறிந்தோ அறியாமலோ போலிபெயர்களில் வலம்வந்த பலருக்கு ஒரு எச்சரிக்கையாக இந்த பதிவு இருக்கும் என்று நம்பலாம்.

இணையத்தில் நம் இளைய சமுதாயத்திற்கு ஆபத்து அதிகரித்துவரும் இச்சூழலில் நம் சமுதாய மானத்தை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணராமல் கடந்த சில வாரங்கலாக இயக்கங்களின் பெயரால் பொழுதுபோக்காக தனிநபர் சாடல்கள் மார்க்கதை பற்றி மேடையேறி போசும் பல்வேறு இணைய திசைகளிலும் அதிகரித்துவருவது மிக மிக வேதனையளிக்கிறது.

இஸ்லாமிய இணைய/வலைத்தளங்களின் பதிவுகளும், அவைகளை தொடர்ந்து வரும் பின்னூட்டங்களும் தரமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும், சமூக பொறுப்புணர்வுள்ளதாகவும், வெறுப்புகளை தவிர்த்து நேசத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாகவும், நம்மகத்தன்மையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர்களின் நானும் ஒருவன். இது என் தனிப்பட்ட கருத்து.

அல்லாஹ் போதுமானவன்

sabeer.abushahruk said...

அமீர் கையில் குச்சி.

நான் ஜூட்!

KALAM SHAICK ABDUL KADER said...

சுருக்கமான பெயரை புனைபெயர் என்று கருதி என்னையும் பின்னி எடுத்து விடுவீர் அல்லவா; அதனாற்றான் எனது மற்றும் எந்தையின் முழுப்பெயரும் குறிப்பிட்டுவிட்டேன் (இனி யாரும் கவியன்பன் என்றும் குறிப்பிட வேண்டா.)

இப்னு அப்துல் ரஜாக் said...

சிந்திக்கிற மாதிரி ஒரு கட்டுரை,
சிந்தனைக்கு சரின்னு பட்டுச்சி
நானும் வந்துட்டேன் களத்துக்கு
இன்ஷா அல்லாஹ்..........
வாப்பாவும்,உம்மாவும் தந்த
பேரோடு....
உங்கள் சகோதரன்
அர அப்துல் லத்தீப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

நம்மிலிருந்தே துவங்கட்டும் (MSM(n)-அடிக்கடி சொல்வது)... :)

ஆதாலால்... சுழியிட்டோம் மொழி செழிக்கிறது அழகிய பெயர்களைக் கொண்டே - அல்ஹம்துலில்லாஹ்... !

மாற்றங்கள் எதிர்பார்ப்பது இன்னும் :) (இதில் தப்பில்லையே)....

சேக்கனா M. நிஜாம் said...

மாஷா அல்லாஹ் !
எல்லா சகோதரர்களும் தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்துக்கள் பதிந்துள்ளிர்களே !

“ அதிரை நிருபர் “ சேவைகள் தொடர வாழ்த்துக்கள் !

அன்புடன்,
M. நிஜாமுதீன் B.sc

தலைத்தனையன் said...

இந்த கட்டுரை எழுதிய சகோதரர் ஈருலகிலும் எல்லா நலனும் பெற்று வாழ அல்லாஹ் உதவி செய்வானாக. இக்கட்டுரையின் கடைசி இரண்டு பத்திகளால், இயக்க மயக்கத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் இங்கும் பொருத்தமாகும் என்பதாலும் .....

இயக்க மயக்கம்
இயங்க மறுக்கும்
இயக்க செருக்கும்
சமுதாய தொண்டையில்
முள்ளாய் தரிக்கும்

தப்லீக் ஜமா'அத் வந்ததால்
தன்னடக்கம் வந்தது
த.மு.மு.க. வந்தது
தன்னுணர்வு தந்தது

தர்ஹாவிற்கு கொஞ்சமும்
தரீகாவிற்கு கொஞ்சமும்
மிச்ச சொச்ச இறை அச்சம்
தாரைவார்கப்பட்டதால்

தவ்ஹீதியக்கம் வந்தது
ஏகத்துவம் சொன்னது
பள்ளிசெல்லும் தயக்கம் நின்று
வயோதிகர் அதிகம் கண்ட பள்ளி
வாலிபர் அதிகம் கொண்டது

தரீகாவின் சில்சிலாவும்
தர்ஹாவின் சித்து யாவும்
உடைத்து சொல்ல பட்டது
உடைத்து சொன்ன அறிஞருக்கு

ஒற்றுமை ஒன்றும் தெரியலே
ஓங்கி ஒலிக்க சொல்லப்பட்ட
ஒற்றுமை மார்க்க விதியடா
ஓன்று பட்டு நின்றுவிட்டால்
வேறு சக்தி இல்லடா

முஹம்மத் தமீம்

அபூபக்கர்-அமேஜான் said...

// வாழ்த்துக்கள்!
இன்னக்கி பெயர் சூட்டும் நாளா?
எல்லாரும் வாங்க உங்க பெயரோடு!
வாழ்க வாப்பாவும்,மகனும்.
மறந்துவிட வேண்டாம் ஒழிகா கொடுக்கனும். //

நண்பர் ஜஹபர் சாதிக் மிக அழகாக வாழ்த்துக்கள் தெரிவித்துயிருக்கிறார். பெயர் வைத்து ஆடு அறுப்பதற்கு பெயர் அகீகா. ஒழிகியா என்று சொன்னால் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு ஆடு அறுத்து கொடுப்பது தான் ஒழிகியா என்று பெயர். ஜஹபர் சொன்னது போல் இன்ஷா அல்லாஹ் அடுத்தவருடம் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு ஒழிகியா கொடுத்துவிடுவோம். பெயரை மாற்றம் செய்தவர்கள் அகீகா கொடுங்கள்.

Kuthub bin Jaleel said...

//தரீகாவின் சில்சிலாவும்
தர்ஹாவின் சித்து யாவும்
உடைத்து சொல்ல பட்டது
உடைத்து சொன்ன அறிஞருக்கு

ஒற்றுமை ஒன்றும் தெரியலே
ஓங்கி ஒலிக்க சொல்லப்பட்ட
ஒற்றுமை மார்க்க விதியடா
ஓன்று பட்டு நின்றுவிட்டால்
வேறு சக்தி இல்லடா//

பொறுப்பான, அப்பட்டமான உண்மை. Welldone Thameem.

Kuthub bin Jaleel said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது
//ஆகவே இன்று முதல் எனது பெயர் அச்சாகும் இடத்திலும் திருத்தம் கொண்டுள்ளேன்...//
Photo-வும் போட்டு விடுங்களேன். யாரிந்த அபுஇபுறாஹிம்? ந‌ன்றாக எழுதுகிறாரே என்று என்னைப்போல் (until we met on All Muhalla meet) மற்றவர்களும் குழம்பாமல் இருப்பர்.

Yasir said...

மாஷா அல்லாஹ்....பாசிட்டிவ்வான மாற்றங்கள்...பெருமைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு அப்புறம் அ.நி-க்கே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Photo-வும் போட்டு விடுங்களேன். யாரிந்த அபுஇபுறாஹிம்? //

குத்துப் காக்கா,

உங்களின் வேண்டுகோளுக்கும் கட்டுண்டேன்...

இணைத்திட்டேன் :) அப்படியே !

Kuthub bin Jaleel said...

Yasir சொன்னது....
//மாஷா அல்லாஹ்....பாசிட்டிவ்வான மாற்றங்கள்..//

ஒரு 'தம்பி' உடனே பிடித்துக்கொண்டார். உங்கள் Photo எப்பொழுது தம்பி யாசிர்? இந்த வேண்டுகோள் சம்பந்தப்பட்ட எல்லா சகோதரர்களுக்கும்.

Yasir said...

//உங்கள் Photo எப்பொழுது தம்பி யாசிர்//பாருங்கள் காக்கா...தெளிவா இருக்குதா ??

ZAKIR HUSSAIN said...

சகோதரர் யாசிர் போட்டோ வித்யாசமாக இருக்கிறது. போட்டோ எடுத்தவருக்கும் யாசிர் நிற்கும் தூரத்துக்கும் பாயின்ட் டு பாயின்ட் பஸ் விடலாம் போல தோணுது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAKIR HUSSAIN சொன்னது…
சகோதரர் யாசிர் போட்டோ வித்யாசமாக இருக்கிறது. போட்டோ எடுத்தவருக்கும் யாசிர் நிற்கும் தூரத்துக்கும் பாயின்ட் டு பாயின்ட் பஸ் விடலாம் போல தோணுது.//

ஜாஹிர் காக்கா,

யாசிர் தங்குமிடம் சென்னை எக்மோர் போல் உள்ள ஷார்ஜாபட்டினம், வேலை செய்யுமிடம் சென்னையை தாண்டி அம்பத்தூர் தொழில் நகரம் போல உள்ள ஜெபல் அலி இண்டஸ்ரியல் ஏரியா. அதான் போட்டோவுலையும் தூரத்துல இருக்குறப்பல.. சீக்கரம் கிட்ட வரக்கூடிய ஆளு தான் இந்த பாசக்கார யாசிர். பாயிண்டு பாயிண்டு பஸ் எல்லாம் வேண்டாம் காக்கா.

:)

Yasir said...

// நிற்கும் தூரத்துக்கும் பாயின்ட் டு பாயின்ட் பஸ் விடலாம் போல தோணுது// ஆமா காக்கா அது ஜெபல் ஹஃபித் என்ற மலை ஏரியா...நான் மலைமேல் நின்றேன்..ஐபோன் மூலம் எடுத்தவரை அருகில் வர சொன்னேன்...அவர் நான் தடுக்கிவிழுந்து என் ஐபோன் கீழே விழந்து உடைந்து விட்டால் என்று பயந்து பயந்தே இந்த ஷாட்டை தூரத்தில் இருந்து எடுத்துவிட்டார்..சரியான cool முட்டை அந்த நண்பர்

Yasir said...

இப்ப எப்படி இருக்கு ..ஜாஹிர் காக்கா...”வல்லரசு” இந்த போட்டாவை பார்த்து அடிக்கும் கமெண்ட் ”யாரை முறைக்கிறீங்க ???கொஞ்சம் சிரித்தால்தான் என்னவாம்

”வல்லரசு” என்பது காரணப்பெயர்...மேலதிக விவரங்களுக்கு தொடர்ப்பு கொள்க ..கவிக்காக்கா

ZAKIR HUSSAIN said...

வல்லரசு காரணப்பெயர் தெரியும் அதுதான் சபீர் ஒரு கவிதை எழுதியிருந்தானே...நானும் படித்தேன்.

உங்கள் போட்டோ முறைபதுபோல் எனக்கு தெரியவில்லை. எங்கள் 'பம்பாய்நானா' அவர்களை சின்ன வயதில் பார்ப்பதுபோல் இருக்கிறது.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
எது சிறந்தது அபு இபுறாகீம்?
அடையாளம் தெரியாத முகங்களைக்கொண்ட ஆயிரம் பேரின் மந்தையா?
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அதனால்தான் அங்கே "முட்டி" மோதிக்கொள்கிறார்களோ? கண்டதையும் பார்க்க.

Shameed said...

என்ன யாசிர் வச்சா குடும்பி செரச்சா மொட்டை என்போது போல் லாங் சாட் போட்டோ அதற்க்கு அடுத்து க்ளோஸ் அப் ஷாட். ஒரு மிட் ஷாட் போட்டோ போட்டு கருப்பு பம்பாய் நானவை வெள்ளை பம்பாய் நானாவா காட்டவேண்டியதுதானே

Shameed said...

பின்னுட்டம் மேலே கீழே கீழே மேலே ரொம்ப குழப்புது !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Shameed சொன்னது…
பின்னுட்டம் மேலே கீழே கீழே மேலே ரொம்ப குழப்புது ! //

ஹமீத் காக்கா,

இதுவும் நட்பால் ( நட்புக்குத் தோழர்கள் பரிசு பதிவால்) வந்தது தான் காக்கா... பழகிவிட்டால் சரியாகிவிடும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அமேஜான் அபூபக்கர் சொன்ன வகையில்......
அகீக்கா குர்பானி ஒதுஹியா என்ற வித்தியாசம் முழுமையாக தெரியாமலிருக்கும் போது என்ன செய்ய? நமது நிய்யத் பெயர் வைப்பதற்காகவே.அந்த நிய்யத் நிறைவேறிவிட்டது.அதுவும் அவங்கவங்க போட்டாவுடன்!

பாக்கி இருக்கு!
அடுத்தவீட்டு அபூ(அ.எ...ஸ்)எப்பொ வர்ரீயோ பேர் வைக்க!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.