Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தாரகை தழுவினார் இனிய மார்க்கத்தை - புதிய செய்தி 12

அதிரைநிருபர் | December 15, 2011 | , , ,

மானிடனுக்கு அவனது உள்ளத்தில் நேர்வழியை காட்டிட கால அவகாசம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகை தற்போது ஹதிஜாவாக தனது பெயரோடு தன்னையும் மாற்றிக் கொண்டு இனிய மார்க்கமான இஸ்லாத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிரார் - அல்ஹம்துலில்லாஹ். கோடிக்கணக்கான வருமானமும் உச்சம் போற்றும் புகழும் இவரைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்போதே அவைகளனைத்தையும் உதறிவிட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற மன நிம்மதி தரும் முடிவுக்கு வந்துள்ளது அவரை உற்று நோக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜித்தா வந்திருந்த அவரிடம் காணொளிப் பேட்டியினை எடுத்திருக்கின்றனர். தனது கடந்த கால வாழ்வில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்து எறியப்பட்டு விட்டதாகவும், இனி வரும் காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்தப் பெண் சொல்லும் கட்சியைப் பாருங்கள்.

தன்னுடைய முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத் தெரிந்தே இம்முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறிஸ்த்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி அல்லாஹ்வின் தூதரின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்ந்தெடுத்தள்ளதை அறியலாம்.

இதோ சகோதரியின் பேட்டியை காணுங்கள், இறுகிய மனதையும் கலங்க வைக்கும் உணர்ச்சிபூர்வமான காணொளிகள். இளகிடும் நம் உள்ளம் இதனை முழுமையாக பார்த்து படிப்பினைபெற வேண்டிய காணொளிகள், குறிப்பாக தாய்மார்கள் பார்க்க வேண்டிய காணொளிகள்







(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!   குர்ஆன் 13:28


Source: ARAB NEWS

12 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹம்துலில்லாஹ்.
மார்க்கம் சொல்லும் மறுமை வாழ்வே நிரந்தரம் என்னும் உண்மை அனைவருக்கும் பரவட்டுமாக!

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

பிறையிலிருந்து தொலைவில் இருக்கும் நட்சத்திரம், பிறையில் வந்து அமர்வது முன்பு ஓவியரின் கற்பனையாக இருந்தது! அனைத்தையும் படைத்து, அசைய வைத்துப் பேச வைத்து, ஆட்டிப்படைக்கும் அந்த ஓவியனின் கற்பினை, பேசும் நட்சத்திரத்தையே இஸ்லாத்திற்குள் கொண்டு வந்து விட்டிருக்கிறது!!

-ஓவியன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்ஹம்துலில்லாஹ் !

நட்சத்திரம் மின்னுகிறது !

விழும் விழி நீர் சொட்டு விதைக்கட்டும் மற்றொரு தாரரகை இனிய மார்க்கத்தை இனிதே தழுவிட !

உதிக்கட்டும் நற்கருமங்கள் அவர்களின் இதயங்களில், வா சகோதரி என்று அழைத்தோம் அன்று...! வாக்களித்த சகோதரியையும் அழைக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
உள்ளங்களை புரட்டக் கூடியவன் அல்லாஹ். சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகையின் உள்ளத்தில் இஸ்லாம் ஜோதியை ஒளிரச் செய்து .ஹதிஜாவாக உலகமே பார்த்து வியக்கும் அளவுக்கு பிரபலப் படுத்திவிட்டான்.அல்லாஹ் அக்பர். அந்த சகோதரி மூலம் இருண்ட உள்ளங்களுக்கு பிரகாசம் கிடைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

ZAEISA said...

குறிப்பிட்டபடி தாய்மார்கள் அவசியமாக கேட்க வேண்டிய காணொளி.சகோதரியின் பேட்டியை தமிழில் சப் டைட்டிலாக வந்தால் தெளிவாக அறிந்து கொள்வார்களென்று நிணைக்கிறேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இச்சகோதரியை இஸ்லாத்தாத்தின் பக்கம் அழைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த இவரின் தாயாருக்காக எல்லோரும் பாராட்டியே ஆகவேண்டும். இந்த பேட்டியின் மூலம் ஒரு தாயால் தன் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை மிக எளிதில் எத்திவைக்க முடியும் என்பதை நாம் எல்லோரும் உணர்வேண்டும்.

இந்த சகோதரி மேலும் இஸ்லாமிய ஞானம் பெற்று இந்த தூய இஸ்லாத்திற்காக உழைக்க நாம் எல்லோரும் துஆ செய்வோமாக. நாமும் மார்க்க பிரச்சாரத்தில் நம்மை ஏதாவது ஒரு வழி ஈடுபத்திக்கொள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

I want to live my life according to ISLAM and according to Sunna of PROPHET SALLALLAHU ALAIHIVASALLAM என்று சொல்லிய உடனே சகோ. கதீஜாவுக்கு அழுகை தானாக வருகிறது. நபிகளாரின் சுன்னாவிற்கு விரோதமாக நம் வாழ்நாட்களில் அறிந்தோ அறியாமலோ தவறுகள் செய்கிறோமே, நம்மில் எத்தனை பேருக்கு நம்பிகளாரின் பெயரை கேட்டால் இப்படி அழுகை வரும்?

கற்பனையான கதாபாத்திரங்களை கொண்ட கேடுகெட்ட சீரியல்களை பார்த்து கண்ணீர்விடும் நம் மக்களுக்கு இந்த காணொளி ஒரு சாட்டையடி என்று சொன்னால் மிகையில்லை.

அல்லாஹ் நம் எல்லோரையும் நவீண உருவில் வரும் சைத்தானியத்தனத்திலிருந்து காப்பாற்றுவானாக.

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் உதவியால் குயினி படில்லா தன்னுடைய பெயரை ஹதிஜா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இதன் மூலம் பிலிப்பைன்சில் ஒரு மற்றம் ஏற்பட வேண்டும் அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பமும் இஸ்லாத்தை தழுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாகவும். இஸ்லாத்துடைய இறுதி கடமையான ஹஜ்ஜுடைய பாக்கியம் செய்து முடித்துவிட்டார் இதுவே அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பெரிய பாக்கியம். இந்த சகோதரியை பார்த்து அவர்களுடைய நண்பர்களும் இஸ்லாத்திற்கு வருவதற்கு எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாகவும் ஆமீன். இந்த காணொளியை தமிழில் மொழி பெயர்த்தால் தாய்மார்கள் கேட்பதற்கு மிக இலகுவாக இருக்கும்.

KALAM SHAICK ABDUL KADER said...

அறியாமை இருளிலிருந்து
விடியலைத் தேடியது
விடிவெள்ளி

அறிவின் தேடல்
அகற்றியது ஆடல்/பாடல்
நெறியான ஆடையினை
நெய்து கொண்டது பயபக்தி

உலகம் எங்கும்
உலா வந்த நிலா
”குஃப்ர்” என்னும்
கருமேகம் நீக்கி
“ஈமானின்” வெளிச்சமாய்
எம்மை நோக்கி
காணொளியில் பாய்ச்சும்
கண்ணீர் கலந்த பேச்சும்
ஊனொளி பெற வைக்கும்

Nizam Baqavi said...

ஈமானிய உணர்வுகளை உயிர்த்தெழச் செய்யும் அற்புதம் நிறைந்த காணொளி. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. Nizamuddeen Baqavi

Canada. Maan. A. Shaikh said...

மாஷா அல்லாஹ். குயினி படில்லா தன்னுடைய பெயரை ஹதிஜா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இதன் மூலம் பிலிப்பைன்சில் ஒரு மற்றம் ஏற்பட வேண்டும்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஆமீன்

KALAM SHAICK ABDUL KADER said...

இலவசமாக எதுவும் கிடைத்தால் அதன் அருமையினை மக்கள் உணர மாட்டார்கள்; நமக்கும் இஸ்லாம் நமதுப் பெற்றோர்கள் மூலம் கிடைத்ததால் அதன் அருமையினை உணராமல் இருக்கின்றோம்;ஆனால், இஸ்லாத்தைத் தெளிவாக ஆராய்ந்து ஏற்றுக் கொண்டவர்கள், மிகவும் உறுதியாக இருக்கின்றனர். எனது அனுபவபூர்வமான உண்மை. 1981 முதல் அல்-கோபர் இஸ்லாமியப் பிரச்சார மைய்யத்தில் மற்றும் இப்பொழுது துபை ஸாத்வாவில் உள்ள இஸ்லாமிய தகவல் மைய்யத்திலும் யான் கண்ட உண்மை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு