Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாவால் நோவாதீர்... 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2011 | , , , ,

நாக்கு - அதை அடக்கு !!!

தலைப்பைக் கண்டதும் சாப்பாட்டு பிரியர்கள், பிரியமாக கோபப்படாதீங்க. ருசியான சாப்பாட்டுக்காக நாக்கை நாலு முழம் நீட்டி, நானூறு கிலோமீட்டர்ல ஒரு நல்ல சுவையான உணவு பறிமாறும் உணவகம் இருந்தால், உடனே கிளம்பிவிடுகிற டைப் ஆளுதான் நானும். இங்க சொல்லப்போவது வேற விடயமிது.

சிலரைக் கண நேரிடும்போது அவர்களிடம் "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டால் போதும்

"அது, இது, அப்படி இல்ல, இப்படி இல்ல" என்று தாழ்வான வார்த்தைகளையே கூறி நம்மை இல்லாமல் செய்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, கா.மூ.தொ கூட்டணியில் உட்கட்சி பொறுப்பிலிருக்கும் இந்த உறுப்பினர் வாரம் முழுவதும் பேசும் வார்த்தைகளை ஒன்றாகச் சேகரித்து கோர்த்தால் ஏறத்தாழ 500 பக்கம் உள்ள புத்தகத்தை தயார் செய்து விடலாம்… "தொன தொன ஆட்களுக்கு 500 பக்கம் உள்ள புத்தகமா?’ என்று சாவன்னா காக்கா சவூதில் இருந்து கேட்கிறது காதில் விழுகிறது.

“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.” - அல்குர்ஆன் (அத்தியாயம் 49:12) 

“உங்கள் நாவை பேணிக்கொள்ளுங்கள் “  - நபிமொழி

“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு." - திருவள்ளுவர்

“நாக்கு கத்தியை விட கூரானது “ - யாரோ

“முள்ளில்லாத நாக்குமா “ - நம்மூர்காரங்க

சுவையை அறிய தரும் நாக்கு சுட்டும் விடும், அதனால் பல நட்புகளும், உறவுகளும், செயல்களும் கெட்டுவிடும்.

ஒரு ஊரில் மூன்று தவளைகள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தன, அதில் ஒன்றுக்கு உணவு இல்லாவிட்டாலும் மற்றவர்கள் கொண்டு வந்ததைப் பங்குபோட்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்ந்து வந்தன (நம்மைபோல சீரியஸாக அல்ல எப்பவுமே ஒரு சில கவலைகள் ஏதாவது விதத்தில் நம்மை ஆட்டிப்படைத்து போலன்று)

அழகிய மாலை நேரத்தில் இவை மூன்றும், இரைக்காவும், இன்பதிற்காவும் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன. அப்பொழுது இலைகள் மூடிய கடின கற்கள் உள்ள பழமைய் வாய்ந்த பாழும் கிணற்றில் தெரியாமல் கால் வைத்ததில் இரண்டு தவளைகள் தவறி விழுந்தன. அதில் ஒன்று மட்டும் நூலிழையில் தப்பித்து நணபர்களைக் காப்பற்ற போராடியது.

கிணற்றில் விழுந்த இரண்டு தவளைகளும், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே, உணவில்லாத இக்கிணற்றிலிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்ற நோக்கில் தத்தித்தத்தி கிணற்றை விட்டு வெளிவர குதித்தன. மேல நின்று கொண்டிருந்த தவளை அவைகளை பார்த்து ‘குதிக்காதீர்கள், குதிப்பதால் நீங்கள் தட்டு தடுமாறி கிணற்றில் உள்ள கற்களால் காயமேற்படும் அல்லது தலையிலடித்து சாவதைவிட அங்கேய தங்கி விடுங்கள் என்று ஆரவாரமாக காட்டு கத்து கத்தியது. அதைக் காதில் வாங்காத இரண்டும் தவளைகளும் மீண்டும் மீண்டும் குதித்தது, அதில் ஒரு தவளை மேலே உள்ள தவளை உண்டாக்கிய பயத்துடன் கீழே பலமாக விழுந்ததில் அடிபட்டு மாய்ந்தது. மற்றொரு தவளை குதித்து குதித்து சாதித்தது அதன் பின்னர் கிணற்றுக்கு மேலே வந்து உயிர்க்காற்றை சுவாசித்தது.

மேலே இருந்த தவளை அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “ நான் வர வேண்டாம், குதிக்கவேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று கத்தியும், நீ எப்படி மேலே வந்தாய்” என்று கேட்க. 

அதற்கு மேலே தப்பித்து வந்த தவளை சொன்னது "நீ குதிக்க வேண்டாம் என்றா கத்தினாய் !!! எனக்கு காது கேட்காததால் நீ ஆரவாரமாக கத்தியது என்னை உற்சாகப் படுத்தி மேல வர செய்யத்தான் என்று நினைத்து உற்சாகத்துடனும் ,ஊக்கத்துடனும் குதித்தேன்,மேலே வந்துவிட்டேன்" என்றது.

ஆகையினால் இங்கே அறியப்படும் நியதி என்னவென்றால் “ சில சொற்கள் கொல்லும் வேறு சில சொற்கள் வெல்லும்” என்பதற்கேற்ப நல்ல சொற்களை நாவால் அடுத்தவர்களுக்கு சொல்லுங்கள் அது அவர்களுக்கு, ஊக்கமளிக்கும், பக்குவபடுத்தும், உங்களைப் பண்படுத்தும், வேண்டாத சொல்லை பிறருக்கு நீங்கள் சொன்னால் அது அவர்களை மட்டுபடுத்தும், மடமையாக்கும்.

நாவால் கெட்ட & சீரழிந்த குடும்பங்களையும், வாழ்க்கைகளையும் நிறைய பேசலாம் & எழுதலாம் ஆனால் நாம் உதாரணத்திற்காக சொல்லும் சில சம்வங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பாதித்துவிடும் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே மேற்சொன்ன உதரணத்தை சொல்லிக் காட்டினேன் ஆதால அவைகளை தவிர்த்திடுவோம்.

நாவை கட்டுக்குள் வைத்து பேணிக்கொள்வோமா நண்பர்களே !!! பேச வேண்டிய இடத்தில் அவசியமானதை பேச வேண்டியதை பேசினால் பிரச்சனை என்பதே வராது.

“உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது?”

“தரிகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது!” – என் எஸ் கே.

சிந்தனை & ஆக்கம்

- முகமது யாசிர்

21 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

நோவலை பற்றி நாவலாக எழுதி அறிய தந்த ஆக்கம் அருமை சகோ: யாசிர்

// “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு." - திருவள்ளுவர் //

அப்ப உள்ள நாவு சுட்டால் வடுவோடு முடிந்து விடும் .

இப்ப உள்ள நாவு சுட்டால் ஆளையே மாய்த்துவிடும்.

Shameed said...

ஒருசிலர் பேசுவது 500 பக்கங்கள் என்ன மெகா பய்ட் கேக பய்ட் தாண்டி டெர பய்ட் வந்துவிடும் சொல்ல வருவருவது இரண்டு வரி செய்தியைத்தான் அந்த சுத்து சுத்துவார்கள்

Shameed said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

//அப்ப உள்ள நாவு சுட்டால் வடுவோடு முடிந்து விடும்//

//இப்ப உள்ள நாவு சுட்டால் ஆளையே மாய்த்துவிடும்.//

அப்ப உள்ள நாவு துப்பாக்கி குண்டு
இப்ப உள்ள நாவு அணுகுண்டு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றல்ல என்றுமே !

நாவும் நோவும்
நாவினால் கொட்டியதை
அள்ள முடிவில்லையே - என்று..

பிரளும் நாவினால்
புரளும் வதந்திகளால்
திரளும் கூட்டம்
உருளும் சச்சர்வுகளால்...

அடக்கம் தொடருனும்
நம் நாவிற்கும் சேர்த்தே...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நாவு பிறறை நோவு செய்திடக்கூடியது! நாவு சாவை வரழக்ககூடியது! நாவினால் நல்லதும் , கெட்டதும் எளிதில் நிகழக்கூடியதை நம் நாவர(யா)சர் விளக்கிய விதம் அருமை ! நாக்கு குழறினால் பறவாயில்லை அது ஏதேச்சையாக நடப்பது, வாக்கு தவறினால் நாக்கு ஒரு நயவஞ்சக பொருள். அல்லாஹ்வை துதித்து, புகழ்ந்தால் அது நல்ல பொருள். எனவே நாவை பேனுவோம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸல்முஅ அலைக்கும்.

ஹமீது காக்கா சொன்னது:

// அப்ப உள்ள நாவு துப்பாக்கி குண்டு
இப்ப உள்ள நாவு அணுகுண்டு //

அப்போ கூடாங் குளம் போராட்டம் மாதிரி இப்புள்ள நாவுக்கு பெரும் புரட்ச்சியே பன்னிட வேண்டியது தான் .

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

இன்றல்ல என்றுமே !

நாவும் நோவும்
நாவினால் கொட்டியதை
அள்ள முடிவில்லையே - என்று..

பிரளும் நாவினால்
புரளும் வதந்திகளால்
திரளும் கூட்டம்
உருளும் சச்சர்வுகளால்...

அடக்கம் தொடருனும்
நம் நாவிற்கும் சேர்த்தே...
----------------------------------------
அருமை கவிஞர்காக்கா! ஒரு "கடி" ஜோக்.
நெய்னா தம்பி காக்கா: தம்பி கிரவுன் வீட்டு சாப்பாடு சாப்பிடாம நாக்கு செத்து போச்சு
கிரவுன்: காக்கா நாக்க அடக்குங்க(செத்தா அடக்கம் தானே செய்யனும் சபீர் காக்கா?)

ZAKIR HUSSAIN said...

மிகச்சரியான நேரத்தில் மிகத்தெளிவான ஆர்டிக்கிள். ஊர் போயிருந்தபோது அவதானித்தேன் நிறைய பேருக்கு மண்டைக்குள்ளெ ரொம்ப சத்தம். சும்மா இருக்க முடியாம பேசியே பல பிரிவுகளை உண்டாக்கியிருக்கிறார்கள்.

நம் ஊரில் பக்கத்து பக்கத்தில் வீடுகள்....உறவில் மிகப்பெரிய விரிசல்கள்......காரணம்....80 கிராம் சதை...நாக்கு.!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கிரவுன்: காக்கா நாக்க அடக்குங்க(செத்தா அடக்கம் தானே செய்யனும் சபீர் காக்கா?)//

சொல்லவா வேண்டும் சொல் "அடக்கத்திற்கு"

கிரவ்ன்(னு), நா அடக்கத்தில் எல்லாவகையா (உப்பு/இனிப்பு) நீ(ர்) சொன்னதும் இருப்பதால் அவ்வடக்கமும் அவசியமே இன்றைய மருத்துவம் எழுதிய புரியாத விதி(கள்) !

அபூபக்கர்-அமேஜான் said...

அப்ப உள்ள நாவு துப்பாக்கி குண்டு
இப்ப உள்ள நாவு அணுகுண்டு என்று (LMS) சொன்னது ஆனால் அப்படி கிடையாது. எல்லா குண்டையும் வெடிக்க செய்யும்.

அபூபக்கர்-அமேஜான் said...

ஜாகிர் காக்கா சொன்னது

// நம் ஊரில் பக்கத்து பக்கத்தில் வீடுகள்....உறவில் மிகப்பெரிய விரிசல்கள்......காரணம்....80 கிராம் சதை...நாக்கு.!! //
80 கிராம் நாக்கு குண்டா உள்ள சிறியவங்களுக்கா அல்லது ஒள்ளிய உள்ள பெரியவங்களுக்கா?

Unknown said...

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லஹு அலைஹிவசல்லம் அருள்வாய் மொழிகள் "யார் இரு தாடைக்கிடையிலுள்ளதையும் மேலும் இரு தொடைக்கிடையிலுல்லதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உத்திரவாதம் தருகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்திரவாதம் அளிக்கிறேன்" சிந்தனையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட ஒவ்வொரு மனிதனுக்கும் இது உத்திரவாததிடன் கூடிய புத்திமதி. உத்திரவாதம் தருவோமா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. யாசிரின் "நா" பற்றிய ஆக்கம் ஒரு நல்ல சிந்தனையை தூண்டும் சிறப்பான ஆக்கம்.

நமக்கு முன்னால் நம் மார்க்கம் தெளிவாக சொல்லி விட்டது "இரண்டு தாடைகளுக்கும், இரண்டு தொடைகளுக்கும் உள்ள உறுப்புகளை நாம் பேணிக்கொண்டால் சுவர்க்கமே அதற்கு சன்மானம்" என்று என்றோ பிரகடணப்படுத்திவிட்டது.

இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரு உவமையுடன் கூற வேண்டுமேயானால் "என்றைக்காவது ஒரு நாள் வெடித்துச்சிதறி இம்மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி சுவடு தெரியாமல் நாசமாக்கி விடுமோ என்று அஞ்சிக்கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உலையில் அடைக்கப்பட்டுள்ள அணுவை விட பேராபத்து நிறைந்தது தான் மேற்கண்ட இரு உறுப்புகளும்".

சொற்ப மனிதர்கள் வாழ்ந்து வந்த அந்தக்காலத்திலேயே நாவிற்கு இவ்வளவு எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறதென்றால் அதன் தாக்கம் எப்படி என தெரிந்து கொள்ளவேண்டியது தான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

sabeer.abushahruk said...

//அருமை கவிஞர்காக்கா! ஒரு "கடி" ஜோக்.
நெய்னா தம்பி காக்கா: தம்பி கிரவுன் வீட்டு சாப்பாடு சாப்பிடாம நாக்கு செத்து போச்சு
கிரவுன்: காக்கா நாக்க அடக்குங்க(செத்தா அடக்கம் தானே செய்யனும் சபீர் காக்கா?//

சர்தான் கிரவுன். ஆனா,

நாக்கு செத்தா
அடக்குங்க - சரி!
ஆனா,
அடக்கினால்
நாக்கு சாகாதே
வாழும்
வாழ வைக்கும்.

ஆகவே,
செத்து அடக்குவதறகுப் பதில்
அடக்கி
வாழுங்கள் மனிதர்களே

(கிரவுன், சமாளிச்சிட்டேனா?)

sabeer.abushahruk said...

யாசிர்,
சரி, நானும் ஒரு திருக்குறல் சொல்லி உங்கள் ஆக்கத்திற்கு வலு சேர்க்க முயல்கிறேன். குறல் ஞாபகம் இல்லை, இருந்தாலும் ட்ரைப் பண்றேன்.

யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

அதாவது, (கவியன்பன் எங்கே?)

அந்த கடைசி பென்ச் பசங்களப் பேச வேணான்னு சொல்லுங்க. இல்லேனா பாடம் நடத்த மாட்டேன்.

அதாவது, யாரா யிருந்தாலும் நாக்கை தீயவற்றைவிட்டும் காக்கவும். காக்கவில்லையெனில். சோகாப்பர்.... நல்ல வேளை பெல்லடிச்சிடுச்சி...அடுத்த பீரியட் கவியன்பனோடது.

ஜூட்.

Shameed said...

முன்பெல்லாம் பசங்கதான் ஜூட் விடுவாங்க இப்போவெல்லாம் வாத்தி மார்கள் ஜூட் விட ஆரபிசுட்டாங்க

KALAM SHAICK ABDUL KADER said...

பல்லுக்குள் அகப்பட்ட நாக்கை
பக்குவமாய் சுழல்வதுபோல் வாழ்க்கை
நல்லவைக்கும் தீயவைக்கும் போட்டி
நளினமாய் புரிதலில் வெற்றி
வில்லுக்குள் நாணைப் பூட்டி
வீரிட்டு பாயும் அம்பாய்
மல்லுக்கு” நிற்கும் ஆசையினை
மதியால் வென்றிடுத் தெம்பாய்
சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம்
சேரா வாழ்வினில் வருத்தம்
வல்லவனாய் வளம்பெற்று வாழ்ந்தாலும்
வறியவரை வதைத்திட எண்ணாதே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

திருக்குறள் வாசிக்க நேர்ந்த இந்த இடத்தில்...

இன்று வாசிக்க நேர்ந்த ஜோக் இதுதாங்க...

"என்னங்க உங்க மனைவி திருக்குறள் மாதிரியா அதெப்படி?"

"ரெண்டே 'அடி'யில எல்லாத்தையும் புரியவெச்சுடுவா!"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாக்கும் அதன் போக்கும் இப்புடியாக்கும்.
அப்ப நான் நான் என்ற மமதை எப்படியிருக்கும்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. யாசிர்,

அநேக தீய செயல்களுக்கு படிப்படியாக இருப்பது ஒருத்தரின் நாவு என்பது எல்லோரும் அறிந்தது.

"யார் இரு தாடைக்கிடையிலுள்ளதையும் மேலும் இரு தொடைக்கிடையிலுல்லதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உத்திரவாதம் தருகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்திரவாதம் அளிக்கிறேன்" என்ற நபிகளாரின் இந்த ஹதீஸை ஞாபக்கடுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

யாசிரே இன்னும் நிறைய எழுதலாமே நாவை பற்றி..

Yasir said...

கருத்து சொன்ன அனைவருக்கும்....வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு