விருந்தோம்பல் நம்முடைய கலாச்சாரத்தினூடே ஊன்றிய பண்புகளில் ஒன்று. இதனை யாரும் மறுக்க முடியாது.
அதிரைப்பட்டினத்தில் இருக்கும்போது என்று சொல்வதாதனால் சிறுவயதிலும் வெளிநாட்டுப் பயணம் நிகழ்வதற்கு முன்னரும் எதிர்பட்டவைகளைத்தான் மனதில் ஓடவிட்டு அசைபோடுகிறோம் அதற்கிடையில் விளம்பர இடைவேளை போல் அவ்வப்போது விடுமுறையில் சென்று வந்தால் அதனையும் உணர முடிகிறது.
இங்கே (துபாயில்) மூன்று வாரங்களுக்கு முன்னர் நெருங்கிய சொந்தமும் சொந்தங்களால் உண்டான பந்தமும் எங்களின் இருப்பிடம் தேடி எங்களைக் காண வந்தார்கள், அதில் இருவரை இடையிடையே இங்கேயும் ஊரிலும் சந்தித்து குசலம் விசாரித்து இருக்கிறேன், அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது.
ஆனால், அந்த நெருங்கிய சொந்தம் என்று எங்களைத் தேடி வந்த இளைஞரை சந்தித்து 17 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்றே நினைக்கிறேன் அவரை சிறுவனாகக் கண்டது அதுவும் ஒரே தெரு ஒரே சந்து, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல மனம் திறந்த அந்த இளம் ஆலிம், அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பமும் தெளிவாக மார்க்கம் பேசும் வாகும் என்னை ரசிக்க மட்டும் வைக்கவில்லை சிந்திக்கவும் வைத்தன நிறையவே…
அவரோடு நீண்ட நேரம் அளவலாவியதும் அதன் பின்னர் இரவுச் சாப்பாட்டினை முடித்துக் கொண்டு கிளம்பினர் அவரும் அவரோடு ஒன்றாக வந்திருந்த சொந்தங்களான நண்பர்களும்.
அவர் எங்களிடமிருந்து விடைபெற்று சென்றதும் அதே பிரம்மை அவர் பேசிக் கொண்டிருப்பது போன்றே ஆனால் அவராக அல்ல, அவரின் தந்தையின் சாயலாக அப்படியே அசைபோட்டேன் அவரின் தந்தை அபூபக்கர் ஹாஜியார் அவர்களின் உடல்மொழியைப் போன்றே, அவர்களின் வழக்காடும் மொழியாடலைப் போன்றே அவர்களின் மூத்த மகனின் சாயலும் குரலும் அப்படியே.
சரி இதை என்னடா இவன் ஏன் இங்கே இதைச் சொல்றான்னு எந்திரிக்காதிய கொஞ்சம் இருங்க இருங்க…. அவர் இருப்பிடம் திரும்பிச் சென்றதும் எனக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் அதுதாங்க மேட்டரே, ஆனால் இது வழமையாக நண்பர்கள் அல்லது விருந்தினர் வந்து விட்டுச் சென்றதும் அனுப்பும் நன்றி மடலாகவோ அல்லது சம்பிரதாய மின்னஞ்சலாகவோ அல்லாமல் வேறு விதமாக இருந்த்து !
எல்லோரும் அனுப்புவது போன்ற மின்னஞ்சலின் துவக்கம் இருந்தாலும் அதன் உள்ளடக்கம் (உள்ளக் கிடைக்கைக்குள் அடைந்தது)
"And I really appreciated for the hospitality you have shown to me during my visit to Dubai, and may Allah shower his rahmath and blessings upon you in abundance (lot) .
கீழ் கண்ட துஆக்களை பொதுவாக நபி அவர்கள் விருந்து உபசரிப்பவர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் கேட்பார்கள்
اللهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنَا وَاسْقِ مَنْ سَقَنَا
யா அல்லாஹ் யார் எங்களுக்கு உணவு கொடுத்தார்களோ அவர்களுக்கு நீ உணவு கொடுப்பாயாக இன்னும் எங்களுக்கு யார் பானம் புகட்டினார்களோ அவர்களுக்கு நீ பானம் புகட்டுவாயாக.
اللهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
யா அல்லாஹ் நீ அவர்களுக்கு வாழ்க்கையின் தேவையாக எதை கொடுத்து இருகின்றாயோ அதில் பரகத் செய்வாயாக, இன்னும் அவர்களை நீ மன்னிப்பாயாக மேலும் அவர்கள் மீது நீ கருணை காட்டுவாயாக.
اَفْطَر عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَاَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلائِكَةُ
உங்களிடத்தில் நோன்பாளிகளை அல்லாஹ் நோன்பு திறக்க செய்வானாக மேலும் உங்களது உணவை நல்லவர்கள் சாப்பிடட்டுமாக, மேலும் உங்கள் மீது மலக்குகள் ரஹ்மத்தை பொழியும் படி அல்லாஹ்விடம் துஆ செய்யட்டுமாக .
Kind Regards
Mohamed Ibrahim "
இப்போது சொல்லுங்க எங்களைத் தேடி வந்த விருந்தாளியை அடிக்கடி வரவேண்டும் என்று அழைக்கத் தானே சொல்லும் நம உள்ளம் !
இன்ஷா அல்லாஹ், இவர்கள் மட்டுமல்ல அனைத்து உறவுகளையும் நட்புகளையும் என்றுமே… !
- m.nainathambi.அபுஇபுறாஹிம்
10 Responses So Far:
நல்லுறவு நற்பயன் உய்கும் நல்லார் வழி செலின்
ஈருலகும் ஈடகமே
முஹம்மது தமீம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒருத்தருக்கு நன்றி செலுத்த விரும்பினால், அவர்களுக்காக இறைவனிடத்தில் நாம் கேட்கும் துஆ விலை மதிக்க முடியாத பொக்கிஸம்.
சகோ. இப்றாஹிமிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட நற்பண்பு இதுவே.
ஜஸக்கல்லாஹ்...
நல்ல பதிவு...எல்லோருக்கும் பயனான மார்க்க விசயம்.
விருந்தோம்பலில் உபசரிப்பவரின் மனமும் அனுபவிப்பரின் உள்ளமும் வயிறும் நிறையும்.
மார்க்க ஞானம் உள்ளவர்கள் என்றென்றும் நன்மையையே போதிப்பார்கள் என்பதற்கு சகோதரரின் நடத்தையே சான்று.
நல்ல ஆக்கம் சகோதரரே..விருந்தோம்பலை ஆர்வபடுத்தும் ஆக்கம்
விருந்தோம்பல் என்றதும் வட்டில் அப்பம் கடல் பாசி எறச்சி ஆணம் என்று நாக்கை தொங்கப்போட்டுகிட்டு விஷயத்தை படிச்சா இது நாக்குக்கு உள்ள செய்தி அல்ல மூளைக்கு உள்ள செய்தி என்று மூளைக்கு புரிந்தது
விடைபெற்றுச் சென்ற விருந்தாளி ஆலிம்
நடைபெற்ற உங்களின் நல்விருந்து போற்றி
மடல்மூலம் நன்றி மறவாமல் துஆவும்
உடனசொன்ன பண்பு உவந்து.
நல்லாருக்கு விருந்தோம்பல் ஊக்குவிப்பு!
தேடி வந்த விருந்தாளி அடிக்கடி வரவேண்டும்.அவர்களெல்லாம் சகோதரர் இப்ராஹீமை போலிருக்க வேண்டும்.
Every difficult task, if you have trust on Allah, it will become easy
And every simple task if you rely on your own ability and capability or trusting the power of creations of Allah then it will become difficult.
- Mohammed Ibrahim
by : email
விருந்தளித்தவரும் , விருந்தருந்தியவரும் அளித்துள்ள நல்விருந்து .
சிந்தனைக்கும் நாம் சீர் பெறவும், பயன்பெறவும், பயன்படுத்தவும் வேண்டிய பண்பாடுகள். - இப்ராகிம் அன்சாரி
- Ibrahim Ansari
by : email
Post a Comment