உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள்.
எவ்வினையோருக்கும் இம்மையில் அல்லாஹ்வின் நாட்டப்படி நம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் வேலை என்பதும் – அவசியமே!.
ஆகவே! வேலைதான் அவர்களுக்கு சமுக அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொடுக்கும். அந்த வேலைதான் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிட அவசியமானது. அதுமட்டுமல்லாமல் பரந்து விரிந்த இந்த உலகத்தில் ‘தான்’ ஒரு உபயோகமான நிலையில் இருக்கிறோம் என்ற மன திருப்தியை அவரவர்களுக்கு தருவதும் வேலைதான். நாம் வெறுத்து ஒதுக்கும் வரதட்சனை என்றொரு விலை நிர்ணயம் செய்திடும் காரணிகளில் இந்த வேலை என்றொரு செயல்பாட்டிற்கும் பங்குண்டு. மகளுக்கு திருமணம் செய்ய தேடும் புதிய மாப்பிள்ளைக்கு அவரின் வேலை நிலை அதன் உறுதி இவற்றை முன்னிருத்தியே பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது வேலையில் இருந்து பொருள் ஈட்டுவது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்க்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் நிலையான வேலை வேண்டும் என்றும் அதனையும் ஒரு குறிக்கோளாக வைத்தே படிக்கிறோம் – பட்டம் வாங்குகிறோம், கடல் கடக்கிறோம், பெற்றோரை, மனைவி, மக்களை சுற்றம், நட்பை பிரிகிறோம்.
வேலையில் திறமை காட்டுவதன் அடிப்படையில்தான் (DELIVERING EXCELLENCE) நமக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் .
பெரும்பாலோர் தங்களுக்கு வேலை ஒன்று கிடைத்து அதில் அமர்ந்துவிட்டால் போதும் என்று அந்த நிலையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தங்களின் வேலையில் தேவையான திறமை காட்டுவதற்கோ அதிலிருந்து அடுத்தடுத்த மேற்படிகளுக்கு செல்வதற்காக தங்களுடைய தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று மனதளவில்கூட நினைத்து சிறு முயற்சிகள் எடுப்பதில்லை.
பணிக்கால மூப்பின் அடிப்படையில் சட்டத்திற்கும் ஒழுங்கு முறைகளுக்கும் உட்பட்டு வருடா வருடம் கிடைக்கும் ஊதிய உயர்வும் பதவி உயர்வுமே போதும் என்று திருப்தி அடைந்து விடுகிறார்கள். அரசு வேலையில் அமர்ந்து விட்டவர்களுக்கு வேண்டுமானால் இந்த எண்ணம் வழிமுறையாக பின்பற்றிக் கொண்டிருக்கலாம் அதுவும் சில நேரங்களில்தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப்படும் என்பதை அவர்கள் உணரவேண்டும் ..
எனக்கு தெரிந்து இந்திய அஞ்சல் மற்றும் தந்தி துறையில் அலுவலராக பணிக்கு சேர்ந்து தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் தலைமை அலுவலராகி 58 வது வயதில் ஒய்வு பெற்றவரை தெரியும். அதே நேரத்தில் கடைநிலை தபால்காரராக பணியில் சேர்ந்து 5 வருடத்தில் அலுவலராகி 10 வருடத்தில் தலைமை அலுவலராகி 15 வருடத்தில் மாவட்ட பிரிவு நிர்வாகியாகி 52 வயதில் மாவட்ட நிர்வாகியாகி ஒய்வு பெற்றவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
சிலரோ கடமைக்கென்றே வேலை செய்வார்கள், ஆனால் அந்த வேலையை திருந்த செய்ய மாட்டார்கள். வேலையை திருந்தவும் சிறப்புறவும் செய்பவர்களே கவணிக்கப்படுகிறார்கள், பதவி உயர்வும் பெறுகிறார்கள். அதையும் விட செய்யும் வேலையை நமக்கென்று பொறுப்பில் இருக்கும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்படி செய்வதும் ஒரு கலையே. இதனை ACCURACY, PERFORMANCE & PRESENTATION என்று கூறலாம். ஈடுபட்டு இருக்கும் வேலைக்குத் தகுந்தாற்போல் கல்வித்தகுதிகளை அந்த வேலைகளை செய்தபடியே மேம்படுத்திக்கொள்வதும் ஒரு இன்றியமையாத தன்மையாகும். அதை CAREER DEVELOPMENT என்று கூறலாம்.
ஒரு மரம் வெட்டுபவன் ஒரு எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்தான். நல்ல உரம்பாய்ந்த உடல் தகுதி உள்ளவன். வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் 20 மரங்களை வெட்டி அடுக்கினான். அடுத்தவாரம் அவனால் 15 மரம்தான் வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்தவாரம் 10 மரங்களே வெட்ட முடிந்தது. நேராக தனது முதலாளியிடம் சென்றான், பிரச்னையை சொன்னான். “தன்னால் எவ்வளவு உழைத்தும் முன்பு போல் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை” என்றான். முதலாளியோ சிரித்துக் கொண்டே அவன் கையில் இருந்த கோடாரியை வாங்கி பார்த்தார். அது கூர் தீட்டப்படாமல் மழுங்கி இருந்தது. மரம் வெட்டியிடம் இவ்வாறு கூறினார். கோடாரியின் முனை தீட்டப்படாத காரணத்தால் உன்னால் முன்புபோல் அதிகமாக மரம் வெட்ட முடியவில்லை . அவ்வப்போது கோடாரியை கூர் தீட்டி மரம் வெட்டு என்றார். அதன்படி செய்ததால் அவனால் மீண்டும் 20 மரம் வெட்ட முடிந்தது.
மரம் வெட்டும் தொழிலாளிக்கு எடுத்துரைக்கப்பட்ட்து போன்றே மற்ற பணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். கோடாரியை அடிக்கடி கூர் தீட்டிக் கொள்வதுபோல் தனது துறை சம்பந்தப்பட்டவைகளில் அடிக்கடி நமது அறிவை கூர் தீட்டிக் கொள்ளவேண்டும். அன்றாடம் படும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் இதைத்தான் பட்டறிவு என்று கூறுவார்கள்.
இளநிலை பட்டதாரியாகி வேலையில் சேர்பவர்கள் தான் சார்ந்து இருக்கும் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பினை அஞ்சல் வழியாக கற்கலாம். அத்துடன் துறை சம்பந்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கும் தயார்படுத்தி அதில் கலந்து கொள்ளலாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்கள் செலவிலேயே பயிற்சிகளை அதாவது GLOBAL ENGLISH TRAINING , ORACLE, PREMVIERA, ACONEX , QUALITY CONTROL, QUALITY ASSURANCE, HEALTH & SAFETY, ENVIRONMENTS போன்ற வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் நம்மில் பலர் அவ்வகையாக தேடிவரும் வாய்ப்புகளில் பங்கெடுப்பது இல்லை. அங்கே தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பய உணர்வும், உறுதியான தன்னம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கிறது.
கட்டிட பொறியாளர்கள் பலருக்கு AUTOCAD பயன்கள் அதன் அத்தியாவசியங்களை உணர்ந்திருந்தும் அதனை முறையாக பயன்படுத்த தெரிந்திருக்காது. அதனால் அவர்களுக்கு வேலையில் உயர்வும் தடைபடும். சிவில் மட்டும் தெரிந்து பணியில் சேர்பவர்கள் அதை தொடர்ந்து மெக்கானிகல், எலெக்ட்ரிகல், உள் அரங்க வடிவமைப்பு, பிளம்பிங்க் போன்றவைகளையும் அதன் மென்பொருள் பயன்பாடுகளையும் கற்று தெரிந்து கொண்டு மேம்படுத்திக் கொள்வது அவரவர் வாழ்வில் தங்கப்பதக்கத்தில் முத்துக்கள் பதித்தது போலாகும்.
அலுவலகத்தில் தேநீர் பரிமாறிக்கொண்டும் – அலுவலக கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் தனது முயற்சியால் கூட இருந்தவரிடம் கேட்டு கேட்டு கணினியின் செயல் பாடுகளை சிறுக சிறுக கற்று, இன்று ACONEX, PREMVIERA போன்ற மென்பொருள் பயன்பாடுகளை கற்றுத் தேர்ந்த ஆவனக்கோப்பு பொறுப்பாளராக அதாவது டாகுமென்ட் கண்ட்ரோளராக (Document Controller) பணிபுரிகிறார். (ஜாபர் சாதிக்)
அதேபோல் பத்தாவது மட்டும் படித்த ஒருவர் – கட்டிடத் தொழிலாராக வந்தவர் - இன்று நிறுவனம் நடத்திய ORACLE TRAINING - ல் துணிவுடன் பங்கேற்று நேரகண்காணிப்பாளராக (TIME–KEEPER) பிளந்து கட்டுகிறார். (ராமமூர்த்தி)
எடுபிடி உதவியாளராக (HELPER) பணியில் சேர்ந்த பலர் எனக்கு தெரிந்து ஒரு தனிப்பட்ட தொழிலை தெரிந்தவர்கூடவே இருந்து கற்றுக்கொண்டு கொத்தனார்களாக, பிளம்பர்களாக, உருவெடுத்து விட்டதுடன் அதில் திறமையும் காட்டி வருகிறார்கள். (எவ்வளவோ பேர்கள்)
அடிப்படைக் கல்வி அறிவு அவ்வளவாக பெற்றிராத ஒருவர் தனது பணியின் ஈடுபாடும், அர்ப்பணிப்பு, ஒழுங்கு, நேரம் தவறாமை, அனுபவங்களை கல்வியகாக போற்றியதன் காரணமாக உதவி கட்டிட பொறியாளராக உயர்வு பெற்றுள்ள உண்மை கதையும் உண்டு. (கார்த்திக்).
பரவலாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை புடம்போட்டு எடுக்கவும் – வெளிநாடுகளுக்கு மேற்கல்வி, கூடுதல் மேம்பாட்டு பயிற்சிகள் கற்றுவரவும் அனுப்புகிறார்கள். இதற்காக வருடத்துக்கு இவ்வளவு என்று நிதி ஒதுக்குகிறார்கள்.
இன்றைய காலத்தில் கணினியினால் நிகழும் அதிவேக மாற்றங்களும் தொழில்நுட்பங்களும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இன்று உள்ள எந்த செயல்பாடும் நாளைய தினம் புதியதாக உருமாற்றம் பெற்று வருகிறது. ஆகவே மாற்றங்களை, வளர்ச்சிகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களே – அதற்காக தங்களை தயார் படுத்திக் கொள்பவர்களே உயர்வான மாற்றங்களுக்கு வழி வகுத்துக்கொள்வார்கள். அப்படி சுய முயற்சி, அதோடு விடா முயற்சியும், செய்யும் தொழிலில் திறமை, அர்ப்பணிப்பு, உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது மனிதவள மேம்பாட்டுதுறைகளின் தலையாய பணிகளில் ஒன்றாகும். (RECOGANIZE AND REWARD).
அடைகாக்கப்படும் முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுகூட தன் தோட்டை இளம் அலகால் கொத்தி கொத்தித்தான் உடைத்துக்கொண்டு வெளிவருகிறது. இன்றைய உலகில் ஏற்றம் பெற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நாம் முயன்றால் முடியாதது இல்லை - இறையருளால்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
- இப்ராகிம் அன்சாரி
17 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் .
இபுறாஹிம் அன்சாரி காக்கா. நல்லா தீட்டி ஒரு போடு போட்டு இருக்கிறியே சிந்தனையெல்லாம் சிதறுது.
// அடிப்படைக் கல்வி அறிவு அவ்வளவாக பெற்றிராத ஒருவர் தனது பணியின் ஈடுபாடும், அர்ப்பணிப்பு, ஒழுங்கு, நேரம் தவறாமை, அனுபவங்களை கல்வியகாக போற்றியதன் காரணமாக உதவி கட்டிட பொறியாளராக உயர்வு பெற்றுள்ள உண்மை கதையும் உண்டு. (கார்த்திக்).//
வேலையிலேயே இருக்கிறவர்களின் உயர்வையும், மேலே உயர்வதற்கான அறிவுரையும் சொல்லிட்டியே. வேலைக்கு போகமே நல்லா திண்டு புட்டு வெட்டி ஆஃபிஸராக முன்னேறாமல் இருப்பவருக்கு ஒரைக்கிரமாதிரி நல்லா மசாலா போடுங்க காக்கா.
உங்கள் கருத்துக்கள் படித்து பார்க்கும் பொது எழுச்சி ஊட்டுகிறது.ஆனால் சிலர் திரைமிக்கவர்களுக்கு பணி வழங்குவது இல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இப்றாஹிம் அன்சாரி காக்கா, மிக அருமையான ஊட்டச்சத்து மிக்க ஆக்கம், பகிர்வுக்கு மிக்க நன்றி... ஜஸக்கல்லாஹ்..
//இன்றைய உலகில் ஏற்றம் பெற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நாம் முயன்றால் முடியாதது இல்லை //
சரியான வழிகாட்டுதல்களுடன் முயன்றால் முடியாதது எதுவுமில்லை..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புச் சகோதரர்களே
//இன்றைய உலகில் ஏற்றம் பெற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நாம் முயன்றால் முடியாதது இல்லை //
ஆம் முடியாதது எதுவும் இல்லை, அதே நேரத்தில் மறுமையின் உயர்வுக்காக மார்க்க அறிவை தேடுவது ஒரு முஸ்லிமிம் மீது கடமையாக இருக்கிறது எனவே இன்றைய உலகுக்காக வசதி வாய்ப்புகளை தேடுவது மட்டும் நோக்கமாக கொண்டு வாழாமல். மறுமைக்காவும் சம்பாதித்து வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்....
வேலையில் விண்ணை தொட விழிப்புணர்வூட்டும் நல்லாக்கம்.
குறிப்பாக 20 - 30 சொச்ச வயதுடையவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய நல்லறிவுரை.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
நல்ல வழிகாட்டல்.
இ.அன்சாரி அவர்களுக்கு மிக்க நன்றி.
//சிவில் மட்டும் தெரிந்து பணியில் சேர்பவர்கள் அதை தொடர்ந்து மெக்கானிகல், எலெக்ட்ரிகல், உள் அரங்க வடிவமைப்பு, பிளம்பிங்க் போன்றவைகளையும் அதன் மென்பொருள் பயன்பாடுகளையும் கற்று தெரிந்து கொண்டு//
சிவிலும் மெக்கானிக்கலும் தனித்தனியாக இரு பெரும் துறைகள். இரண்டையும் படித்தல் என்பது சற்றேப் பெரிய சுமையாகத் தெரிகிறது. அல்லது நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா?
சற்று விளக்குங்களேன்.
வேலையில் திறமை காட்டுவதன் அடிப்படையில்தான் (DELIVERING EXCELLENCE) நமக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். //
எவ்வளவு படித்தாலும் மனிதனுக்கு அனுபவம் தான் தேவை. நல்லா படிப்பும் இருக்கணும் அதை விட அனுபவமும் இருக்க வேண்டும் படித்தவனை விட நல்ல அனுபவம் உள்ளவன் தான் உயர் பதவியிலும், நல்ல சம்பளத்திலும் இருக்கிறார்கள். படிப்புக்கு தகுர்ந்தார் போல் அவரவர் அவரவர் வேலை தேடிக்கொள்ளவும். ஒரு சில பேர் நல்ல படிப்பு படித்தும் படிப்புக்கு சம்மந்த இல்லாத வேலைகள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் கடைமைக்கு என்று வேலை செய்யாமல் பொறுப்புடன் வேலை செய்யவும் அப்படி செய்தால் தான் உயர்ந்த பதவியும், உயர்ந்த அந்தஸ்த்தும் கிடைக்கும்.
அபூபக்கர் - அமேஜான்
வளைகுடாவில் நமது சகோதரர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் நிலை சற்றே கவணிப்பாரற்று இருப்பதை மறுக்க முடியாது ! காரணம் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே சுழலுவதாலே...
சகிப்புத் தன்மையின் சிகரங்கள், அதே நேரத்தில் தத்தளிக்கும் மனசுடனும் இவர்கள்...
ஒதுக்கப்பட்ட வேலைகள் தவிர்த்து தன்னார்வத்துடன் கைக்கு கிட்டியதையும், காதுகளுக்கு எட்டியதையும், அவதானித்த அதிசியங்களையும் அப்படியே முன்னிருத்தி மேலெழுந்து வந்தவர்களும் உண்டு அதுவும் நம்மைச் சுற்றியே இருப்பவர்களால் உணரவும் முடிகிறது.
இது எனது வேலையல்ல என்று எதனையும் ஒதுக்காமல், முடியும் என்ற நம்பிக்கையில் அல்லாஹ்வின் பாதுகாவல் என்று உறுதியுடன் இறங்கினால் ஏற்றம் தொடரும்...
எனக்கு ஒரு டவுட்டுங்க.... சர்வீஸ்க்கு / புதிய நிறுவலுக்கு (installation) என்று வரும் நபர்கள் ஏன் அவர்கள் அருகில் நாம் நிற்பதை அல்லது அவர்களை அவதானிப்பதை விரும்புவதில்லை !?
//மரம் வெட்டும் தொழிலாளிக்கு எடுத்துரைக்கப்பட்ட்து போன்றே மற்ற பணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். கோடாரியை அடிக்கடி கூர் தீட்டிக் கொள்வதுபோல் தனது துறை சம்பந்தப்பட்டவைகளில் அடிக்கடி நமது அறிவை கூர் தீட்டிக் கொள்ளவேண்டும். அன்றாடம் படும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் இதைத்தான் பட்டறிவு என்று கூறுவார்கள்.//
நன்றாக சொல்லியுள்ளீர்கள் காக்கா.உரமூட்டுகிறது உங்கள் கட்டுரை,மாஷா அல்லாஹ்
அன்சாரி மாமாவின் வாழ்வியல் அனுபவங்கள் அதன் மூலம் வரும் எழுத்துக்கள் ஆக்கங்கள் நமக்கு எல்லாம் ரெடிமெடாக கிடைப்பதில் சந்தோஷப்படவேண்டும்....ஒரு மிகப்பெரிய கம்பெனியில் கிட்டதட்ட 10000 மேற்பட்ட ஆட்களை தங்கள் கீழ் வைத்து சாமளிக்குபோது, உங்களுக்கு கிடைத்த அனுவங்களை இங்கே கொட்டி இருக்கின்றீகள்...
மூச்சு விட்டுக்கொண்டிருந்தால் மட்டும் மனிதானகிவிட முடியாது முயற்ச்சி செய்து கொண்டு இருப்பவனைதான் மனிதன் என்று சொல்லமுடியும் ...இன்னும் நீங்கள் எழுதவேண்டும்...அதற்க்கு அல்லாஹ் உங்களுக்கு பரிபூரண சுகத்தை எப்போதும் தரவேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அண்ணன் இப்ராஹின் அவர்கள் எழுதிய அர்ப்பணிப்பும் - அங்கீகாரமும்! அனுபவம் பேசுகிறது.... என்று சிறு கட்டுரை என் எண்ணத்தில் ஓடும் ஒரு ஓடை.
சொன்னவிதமும் தொகுத்த விதமும் அற்புதம். வாழ்த்துக்கள்.
உங்களுக்காக..
பூந்தை ஹாஜா..
Up Travel - Abu Dhabi
Mob: 050 9228580
அன்சாரி மாமா அவர்களின் கோடாலி .கதை அனைவரையும் கூர்மை படுத்தி விட்டது வாழ்க்கையில் முன்னேற
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எளிமையாய் எழுதப்பட்ட மிகவும் பயனுள்ள பதிவு. தாங்களைப் போன்ற அனுபவசாலிகளின் ஆக்கம் இன்ஷா அல்லாஹ் நல் சமூகத்தை உருவாக்கும்
ம அஸ்ஸலம்
அபு ஈசா
அன்பின் நண்பர்களே!
வ அலைக்குமுஸ்ஸலாம்.
அர்ப்பணிப்பும் அங்கீகாரமும் – அனுபவம் பேசுகிறது என்ற தலைப்பில் வெளியான பதிவுக்கு பல நண்பர்களிடமிருந்தும் பாராட்டு என்ற வைட்டமின் கிடைத்து இருக்கிறது. ஜசக்கல்லாஹ்.
மேலும் இத்தகைய ஆக்கங்களை தருவதற்கு வல்ல நாயன் துணை இருப்பானாக. வல்லமை தருவானாக.
தம்பி கவி சபீர் அவர்கள் எழுப்பியுள்ள ஒரு கேள்விக்கு பதில் தருவதே இந்த பதிலின் நோக்கம்.
//சிவில் மட்டும் தெரிந்து பணியில் சேர்பவர்கள் அதை தொடர்ந்து மெக்கானிகல், எலெக்ட்ரிகல், உள் அரங்க வடிவமைப்பு, பிளம்பிங்க் போன்றவைகளையும் அதன் மென்பொருள் பயன்பாடுகளையும் கற்று தெரிந்து கொண்டு சிவிலும் மெக்கானிக்கலும் தனித்தனியாக இரு பெரும் துறைகள். இரண்டையும் படித்தல் என்பது சற்றேப் பெரிய சுமையாகத் தெரிகிறது.
அல்லது நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா? சற்று விளக்குங்களேன். // என்று ஒரு அருமையான கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.
சுருக்கமாக – சிவில் படித்தவர்கள் மீண்டும் மெக்கானிகல் முழுதும் படிக்க வேண்டும் என்ற கருத்தில் எழுதவில்லை. கட்டிடத்துறையில் உள்ள சிவில் பொறியாளர்கள் கட்டிடத்துறையோடு சம்பந்தப்பட்ட மெக்கானிகல் சம்பந்தப்பட்ட மென்பொருள்களையும் படித்து அதாவது வரைபடங்கள் (DRAWINGS) பார்ப்பது, திருத்துவது போன்றவைகளையும் தெரிந்தது வைத்து இருப்பது அவர்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்ற கருத்துதான் எழுத நினைத்ததாகும். இரு பெரும் துறைகளை படிப்பதானால் அடுத்து ஒரு ஐந்து வருடமாகுமே.
உங்கள் கவி முறையில் சொல்ல வேண்டுமென்றால்...
'ஒரு யானையை வாங்கிவிட்டு மறு யானையும் வாங்கச்சொல்லவில்லை. யானை வாங்கிய பிறகு ஒரு அங்குசமும் வாங்கிவைத்துக்கொள்ளவே சொன்னேன்."
நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாத வண்ணம் எழுதியது என் தவறே!
வஸ்ஸலாம்.
இபுராஹீம் அன்சாரி.
THINK+PLAN+WORK= SUCCESS
இந்த சமன்பாடு
முன்னேற்றத்தின் உடன்பாடு
இதனை எல்லா நேரங்களிலும், எல்லாச் செயல்களிலும் உருவாக்கிக் கொண்டு, ஆழ்மனத்தில் நமது நோக்கம் எதுவோ அதனை நிலைநிறுத்தி அதனைத் திட்டமிட்டு அதன் படியே செயலாற்றிப் பாருங்கள். வெற்றிக் கனி பறிக்கலாம்
//நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாத வண்ணம் எழுதியது என் தவறே!//
இல்லை காக்கா, நீங்கள் தெளிவாகத்தான் எழுதியிருந்தீர்கள். நானும் புரிந்துகொண்டேன்தான். எனினும், தங்களின் அருமையான வழிகாட்டலில் வேறு யாரும் குறை சொல்லிவிடக்கூடாதே என்றுதான் தங்களைக்கொண்டே விளக்கம் எழுதிப் பெற்றேன்.
மிக்க நன்றி.
Post a Comment