Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என்னத்தக் கிழிக்கிறிய ? 44

அதிரைநிருபர் பதிப்பகம் | February 02, 2012 | , , , ,


வழக்காடல் அல்ல இது
வலக்கரம் பிடித்து
வாழ வந்தவளோடு
உவகையான ஓர்
ஊடலாடல்

மனைவி சொல்லே மந்திரம்
மனைவி இல்லையேல்
மனிதா நீ எந்திரம்

எல்லாம் சரி
என் இனியவளே
இல்லம் விருத்தியாக்கும்
இன்முகத்தவளே !

செல்வது தெரியும்
அன்பே - நான்
மீள்வதும் தெரியும்...
அலுவலில் நான் படும்
அவஸ்தைகள் தெரியுமா
கொம்பு முளைத்த
முதலாளியோடு -என்
ஜல்லிக்கட்டுப் புரியுமா

மூச்சுக்கு மூனுதரம்
முறைவைத்து அழைப்பவன்
முதலாளி ஆனதனால் - தலை
முட்டி முட்டி வலிக்குதடி

காஃபி கலந்து அதில்
காதல் மலாய் மிதக்க
கண்களைப் பார்த்துக்கொண்டே
கைகளில் தருபவளே

கணவன் கஷ்டமெல்லாம்
கனவிலும் காண்பதரிது
கண்களுக்கு மேல் சற்று
கைவைத்து நீவி விடு

காகிதங்கள் கிலோக்கணக்கில்
கணக்கிட்டுத் தரவேண்டும்
கையெழுத்துப் போட மட்டும்
கற்றிருப்பான் முதலாளி

கணக்குப் பண்ணத் தெரியும்
கணக்கைப் பண்ணத் தெரியாது
கணக்குப் பிள்ளை கர்மத்தையும் - உன்
கணவன் நானே பார்க்கவேண்டும்

ஆங்கிலத் தட்டச்சுவில்
ஆயிரம் பிழை இருக்கும்
ஒப்பனை செய்வதன்றி
ஒன்றுமறியாக் காரியதரிசி

பூரிக்குக் கிழங்கிலிட
பூண்டுரித்துத் தராததால்
என்ன கிழிச்சீங்க என்று
ஏளனம் செய்பவளே

சுமாராகச் சமைத்துவைத்து
சுடாமல் பரிமாறி
சும்மாத் தொணதொணக்கும்
சுந்தர முகத்தவளே

ஒருநாள் பொழுதேனும்
ஓய்வெனக்குத் தரவேண்டும்
அலுவலகம் வந்திருந்து - என்
அவஸ்தைக ளறியவேண்டும்.

-சபீர்

44 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

அலுவலகத்தில் படும் கஷ்டங்கள் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது !
எளிய வடிவில் அழகிய கவிதை - வாழ்த்து கவி. சகோ. சபீர்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்கா உங்க கஷ்டம் எனக்கு நல்லா புரியுது.

// பூரிக்குக் கிழங்கிலிட
பூண்டுரித்துத் தராததால்
என்ன கிழிச்சீங்க என்று
ஏளனம் செய்பவளே //

அட்லீஸ் பூண்டுரிக்க கத்தியையாவது எடுத்து கொடுத்திருந்தால் ஏராளம் புகழ் கிடைத்திருக்குமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//செல்வது தெரியும்
அன்பே - நான்
மீள்வதும் தெரியும்...
அலுவலில் நான் படும்
அவஸ்தைகள் தெரியுமா
கொம்பு முளைத்த
முதலாளியோடு -என்
ஜல்லிக்கட்டுப் புரியுமா//

அதெப்படி என் பாடும் உங்களுக்கு தெரியுது ? இங்கே யாரும் ஜல்லிகட்டை எதிர்க்க மாட்டாங்களா ?

சட்டமேதும் இல்லையா ?

அவசியம் ஒரு நாள் அலுவலகம் செல்ல வேண்டும்...

ஆனால் அங்கேயே இருந்து விடக்கூடாது ! அடுத்த நாள் லீவு போட்டுடனும்

இதுதான் கண்டிஷன்.

கொஞ்சம் டீட்டைலா பேச வேண்டிய விஷயம் கவிக் காக்கா...

பின்னர் வருகிறேன்..

sabeer.abushahruk said...

எல் எம் எஸ்,

பூரிக்கு பூண்டுரித்துத் தருவது, புதினா மல்லி தழைகளை உதிர்த்துத் தருவது போன்ற அன்றாட உதவிகளைச் செய்வதுதான். இருந்தாலும் எப்பவாவது அலுப்பில் மறுப்பதும் உண்டு.

தவிர, இது சொந்த அனுபவம் என்று மட்டுமல்ல. நம்ம தோஸ்த் ஒருவர் கேட்டு வாங்கியதும்கூட இந்தப் பதிவு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தவிர, இது சொந்த அனுபவம் என்று மட்டுமல்ல. நம்ம தோஸ்த் ஒருவர் கேட்டு வாங்கியதும்கூட இந்தப் பதிவு.//

"அவ்வோ வூட்டுல இல்லேன்னு சொல்லச் சொல்றாக...." சொன்ன மாதிரி தெரியுதே !

sabeer.abushahruk said...

"அப்பன் குதுருக்குள்ள இல்லே"ன்னு ஒரு சொலவடை உண்டு.

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அலுவலகம் சென்றால்
முதலாளி தொல்லை
வீட்டுக்கு வந்தால் நம் வீட்டு எஜமானயின் அன்புத் தொல்லை
உரலுக்கு ஒருபக்கம் இடி நமக்கு இருப்பக்கம் இடி.

//ஒருநாள் பொழுதேனும்
ஓய்வெனக்குத் தரவேண்டும்
அலுவலகம் வந்திருந்து - என்
அவஸ்தைக ளறியவேண்டும்.//

அப்படி ஒரு தவறை செய்துவிடாதீர்கள்.
நான் உங்களிடம் படுற அவஸ்தைக்கு இது தேவலை
என்று பதில் வரும்

Shameed said...

//மனைவி சொல்லே மந்திரம்
மனைவி இல்லையேல் மனிதா நீ எந்திரம்//

மனைவி இல்லாததால் தான் APJ அபுல் கலாம் இயந்திரமா உழைக்கின்றாரோ !

Yasir said...

ம்ம்ம்ம்ம்ம் புரியுது காக்கா உங்க......ஆனா வியாழக்கிழமையே நான் பூண்டே உரிச்சு வைச்சுடுவனே.....

இதமான கவிதை...வல்லரசு எங்கே வந்தாலும் மகிழ்ச்சிதான் காக்கா....அவங்க வீட்டை ஒரு நாள் பார்த்துகொள்ளும் வேலையும் நாம் ஒரு வருடம் ஆபீஸில் பார்க்கும் வேலைகளைலும் சமம் காக்கா....யாரும் அடிக்க வந்துடதீங்கப்பா

அதிரைக்காரன் said...

என்னுடன் பணியாற்றும் சகபெண் ஊழியர் சொன்னது,ஆண்களுக்கு அலுவல் முடிந்து மாலை வீடு திரும்பியதும் ஓய்வு.ஆனால், பெண்களுக்கு அடுத்த கடமை காத்திருக்கிறது என்று சொல்வார்.அவ்வகையில் நம்வீட்டுப் பெண்கள் பாக்கியம் செய்தவர்களே.

துபாயில் இஞ்சி,பூண்டு பேஸ்ட் மட்டுமின்றி சின்ன வெங்காயம்கூட உரித்தே கிடைக்கிறது!உங்கள் ஹோம்மினிஸ்டரிடம் நைசா சொல்லி வையுங்களேன்.:)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்படியும் ஒரு தத்ரூபமான 'லவ்' தூதாக்கும்! கவி சூப்பரு.

அடுக்கரையில் அறவே மூக்கை நுழைக்காவிட்டால் என்னத்தையும்(எதையும்)கிழிக்கலெ!

அப்பப்ப மூக்கை நுழைத்து 'ஹெல்ப்' பண்ணி எதோ அந்த நேரத்தில் 'மிஸ்' பண்ணினா என்னத்தெ கிழிக்கிறியொ!
தந்திரம் நிறைந்த கட்டளை.
எப்படியோ அங்குட்டும் நிய்யத் நிறைவேறி உங்க தூதுக்கும் பலன் கிடைக்க வாழ்த்துக்கள்...

KALAM SHAICK ABDUL KADER said...

//கணக்குப் பண்ணத் தெரியும்
கணக்கைப் பண்ணத் தெரியாது
கணக்குப் பிள்ளை கர்மத்தையும் - உன்
கணவன் நானே பார்க்கவேண்டும்//

கணக்கு
எனக்கு
பிணக்கு
என்றல்லவா
சென்ற முறைச்
சொன்னீர்கள்

மனைவியிடம் பொய் சொல்வது ஆகுமென்றா இப்பொழுது மாறிவிட்டீர்?
அடியேன் கணக்கராய்ப் பணியாற்றிப் படும் கஷ்டம் அறிவீரோ? எனது பின்னூட்டம் இடும் நேரம் சொல்லும் என் பணியின் பாரம்.. கணக்குத் தணிக்கை காலம் நெருங்கி வரும் வேளை நெருக்கும் என்றன் வேலை..
உண்மையில் பணியில் மூழ்கி விட்டேன் என்பதை உணராமல், "கவிதையில் மூழ்கி விட்டேன்" என்றும், நடு நிசியில்- இருட்டு அறையில் கணினியில் தட்டச்சு செய்யும் பொழுது ஒரு புள்ளித் தவறி விட்டதால் புணர்ச்சி விகுதி இலக்கணம் அறியாதவன் என்றும் ஐயம் ஏற்பட வைத்துப் பட்டி மண்டபம் கட்டி வைத்துப் பின்னூட்டத்தில்
என்னைப் பிழை தமிழ் எழுதுபவனாய்ப் பிரகடனப் படுத்தும் அளவுக்குக் கொண்டு வந்தது என் பணி பளு செய்த பணி.

கணிதப் புலி ஒரு முறை கணக்குப் பதிவியலின் அருமையினை பாராட்டியது கணக்கராய் பணி செய்திடும் எனக்குக் கிட்டிய நற்செய்தி.

கணக்கர் கணக்குப் பதிவில் தான் கவனம் சிதறாமல் இருப்பார்; கணக்குப் பண்ணுவார் என்றால், கடனாளி, கடனீந்தோராய்க் கணக்கு மாறும்

ZAKIR HUSSAIN said...

சபீர்....ஊரில் வேலையே பார்க்காமல் மனைவியிடம் 'நாட்டாமை" செய்து மட்டும் பம்மாத்து பன்னும் பார்ட்டிகளைபற்றி ஒரு கவிதை எழுதேன்...

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!
ஜாயீரு ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி?
ஏதோ அவனால் முடிந்தது அந்த பம்மாத்து மட்டும் தான்.
N.A.Shahul Hameed

சேக்கனா M. நிஜாம் said...

சாகுல் சார் எங்கே இருக்கிங்க ? பார்த்து ரொம்ப நாளாச்சு ?

sabeer.abushahruk said...

//ஜாயீரு ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி?//

(ட்ரான்ஸ்லேட்டட்/ ஜாயிரு = சூப் பாய்)

திஸ் சாங் ஃபார் சூப் பாய்ஸ்

ஐ ஆம் சிங் சாங்
சூப் சாங்
வொய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டா

சேக்கனா கொஸ்டின் வேர்?

//சாகுல் சார் எங்கே இருக்கிங்க //

டிஸ்டென்ஸுல சாரு சாரு
சாரு ஊரு சிங்கப் பூரு
சாரு ஹிப்புல வாரு வாரு
சம்டைம்ஸ் ஹியர் வரு வாரு

ரிதம் கரெக்டெ?

Anonymous said...

கணவனுடைய கஷ்டமெல்லாம் மனைவிக்கு தெரிவதில்லை அப்படி தெரிந்தாலும் புரிவதில்லை. எவ்வளவு தான் சொன்னாலும் புரியாதவள் மனைவி. கண்களையும்,உடலையும் கசக்கி விடுகிறாள் மனைவி.

என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் என்னத்த சம்பாதித்து கிழிச்சிங்க என்று சொல்லுவாள்.

Anonymous said...

தம்பி கவி சபீர் அவர்கள் இதுவரை புறநானூறு எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

இப்போது அகநானூறு எழுத ஆரம்பித்திருக்கிறார்.

பூண்டு தோல் உரிப்பது, வெங்காயம் வெட்டி கொடுப்பது, கத்தரிக்காய் பச்சடிக்கு கத்தரிக்காயை நாலு கீற்றாக கீறி கொடுப்பது , மிக்சியில் இஞ்சி பூண்டு அரைத்துக்கொடுப்பது , கீரை ஆய்ந்து கொடுப்பது , துணைவி வேறு வேலையாக இருக்கும்போது பொரிக்கஞ்ச்சட்டியில் மீனை புரட்டிபோடுவது, சோறு வடித்துக்கொடுப்பது , இப்படியெல்லாம் சிறு உதவிகள் செய்வது சிலருக்கு சுகமான சுமைகளே.

அடுப்பங்கரைக்குள் புகுந்து பாருங்கள். அதற்கு பிறகு இன்னும் ஆயிரம் கவிதை எழுதலாம் சபீர்.

வைரமுத்து கூறுவதுபோல்

சீலையில் எனது முகம் துடைப்பாள்
சிணுங்கினால் செல்ல அடிகொடுப்பாள்
விரல்களுக்கெல்லாம் சுளுக்கெடுப்பாள்
நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள்

இவ்வளவும் செய்பவளுக்கு பூண்டு உரித்துக்கொடுத்தால் என்ன சபீர். ??
யாசீர் சொல்லுங்கள் யாசீர்.

வாரக்கடைசியில் நல்ல சப்ஜெக்ட். ரிலாக்ஸ்.

இப்ராஹீம் அன்சாரி.

sabeer.abushahruk said...

//வியாழக்கிழமையே நான் பூண்டே உரிச்சு வைச்சுடுவனே.....// தங்களின் அன்பிற்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி. இதே ரேஞ்சுக்கு ஒரு முழு ஆக்கமே எழுதும் அளவுக்கு தங்களிடம் அடிமைப் பணிகள சாரி... அடுக்கலைப் பணிகள் பற்றிய தொகுப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

அம்மட்டிலும், இந்த யுக்தியை ஒரு ஃபோன் போட்டு, போட்டுக்கொடுக்காதவரை என் நெஞ்சில் பால் வார்த்தீர்கள். ஒரு சில பூண்டுகள் என்னதான் உரித்தாலும் தோல் சட்டென வராமல் பிஞ்சி பிஞ்சி வந்து டார்ச்சர் பண்ணுதே... நிவர்த்தி ஏதும் உண்டா உங்கள் அனுபவத்தில்?

என் அலம்பலைப் பார்த்துட்டு ஒரு சமயம் , "நீங்க பூண்டே உரிக்க வேணாம்" னு சொன்னப்ப எனக்கு "ஆணியே புடுங்க வாணாம்" ஞாபகம் வந்துச்சு.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
நம்ம சப்போர்ட்டுக்கு ஒருத்தரையும் காணோம் பார்த்தியலா? எல்லம் ப்ம்முராய்ங்களெ கவனிச்சியலா. ஏனாம்?

உங்க அசத்தல் காக்கா சப்ஜெட்டையே தொடல் பார்த்டியலா? இவன்லாம் கண்ணீரும் கம்பலயுமா எத்தனை தடவி தவிச்சிருக்காய்ங்க - வெங்காயம் உரிச்சி கொடுத்து! இந்த் ச்சான்ச வச்சு கொட்டிடுவான்னு பார்த்தா பம்முரானேப்பா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உங்க அசத்தல் காக்கா சப்ஜெட்டையே தொடல பார்த்டியலா?//

காக்கா அடுப்'படி'ப்பக்கம் தள்ளி இருக்கிற படிக்கட்டுலதான் இருக்கிறேன்னு சொன்னாங்களே ஞாபகமில்லையா ?

அங்கே வெங்கயாம் உரிச்சா இங்கே கண்ணீர் வருதுன்னு சொன்னாங்களே ஞாபகம் இல்லையா ?

படிக்கட்டுப் பக்கம் நாதஸ்வரம் (ஒருவாரத் தொடர் கோர்வை) மடிக்கணினியில் ஓடுதுன்னு சொல்லவே இல்லையா ?

எல்லாம் என்கிட்டே சொல்லிட்டாங்களே.... :)

அதிருக்கட்டும், வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து கிச்சனும் குளியலைறைகளும் நம்ம கையிலதான்னு (வேற என்ன சுத்த பத்தம் செய்து வைக்கிற G.M (general maintenance) வேலைதான் அது) செய்றதையெல்லாம் இங்கே சொன்னா எடுபடுமா ?

அட அதையும் சொல்லிட்டேனே... ! :)

இன்னொன்னு தெரியுமா ? நாம அதிகாலையில எழுந்து ஓடுறோம்னு நல்லாவே தெரியும் (இங்கே இருக்கிற வரைக்கும்) ஊருக்குப் போனா உங்களை விட நாங்க ஒன்றரை மணிநேரம் சீக்கிரமே எழுதிருச்சிடுறோம் சொன்னா எப்புடி இருக்கும் !!!?

அதிரை என்.ஷஃபாத் said...

கம்ப்யூட்டர் திரையைப்
பார்த்து பார்த்து
கலங்கும் கண்கள்
உணர்த்துகின்றன..
அடுக்களையில் அவளது
கண்கள் படும்
வெங்காய வேதனையை!! :D

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அடுக்களையில் அவளது
கண்கள் படும்
வெங்காய வேதனையை!! :D//

தம்பி
அது ஒரு கலை !
அந்தக் கண்ணீர் மட்டும்
எந்த வேண்டுகோளையும் வைக்காது ! :)

அதிரை என்.ஷஃபாத் said...

/*அந்தக் கண்ணீர் மட்டும்
எந்த வேண்டுகோளையும் வைக்காது*/

சமையல் நல்லா இல்லைன்னாலும் 'நல்லாருக்குது"-னு சொல்லும் படி வைக்கும் மறைமுக வேன்டுகோள் அந்த கண்ணீரில் மறைந்திருக்கும். !! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சமையல் நல்லா இல்லைன்னாலும் 'நல்லாருக்குது"-னு சொல்லும் படி வைக்கும் மறைமுக வேன்டுகோள் அந்த கண்ணீரில் மறைந்திருக்கும். !! :)//

அப்படின்னா !
சமையலுக்கிடையே அடுக்களைப் பக்கமும் தலை காட்டுவீர்கள் ! உதவிக்கு அல்ல உற்றுப் பார்க்க ! :)

சாப்பிட்டதும் ரிஸல்ட்டு சொல்ல !

ZAKIR HUSSAIN said...

//உங்க அசத்தல் காக்கா சப்ஜெட்டையே தொடல பார்த்டியலா?//

வீட்டில் பூண்டு/வெங்காயம் உரித்துக்கொடுக்கும் சில உயிரினங்கள் [ கணவன்ஸ்] இந்த உலகத்தில் 19ம் நூற்றாண்டோடு வழக்கொழிந்து போய் விட்டதாக சொல்லி வைத்திருக்கிரேன். யாசிர் மாதிரி 'கணவன் கட்சி எதிரிகளும்' அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் அன்சாரி அண்ணன் களும் இருப்பதை கொஞ்சம் சத்தமாக படித்து விட்டோலோ, வலைத்தளம் திறந்திருப்பதை பார்த்து விட்டால் [ வீட்டில் ] எந்த சமயத்திலும் நான் அடிமைகளுடன் சங்கிலியிடப்படலாம் என்ற ஏற்பாடுதான்.

சப்ஜக்ட்டை தொட்டு எழுதி மாட்டிக்க முடியுங்களா?

ZAKIR HUSSAIN said...

To Bro N.A.S.....Bila nak datang ke Malaysia?...Lama tak Jumpa?..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Bila nak datang ke Malaysia?...Lama tak Jumpa?..//

இது கூகிலானந்தாவின் மொழிமாற்றம்...

"நான் மலேஷியா வரும் போது? ... பழைய நான் பார்க்க? .."

இப்படியிருக்கலாமோ ?

"நீங்கள் மலேசியா எப்போ வருவீர்கள் ?.... என்னைப் பார்க்க ?"

சரியா ?

Shameed said...

ஆகா எல்லா அடுப்பன் கரையிலும் இப்படிதானா ஏதோ நம்ம மட்டும் தான் இப்படியோன்னு யோசித்துக்கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு கவிதை போட்டு பால் வார்த்து விட்டீர்கள் (கொஞ்சம் இருங்க பிரியாணிக்கு வெங்காயம் வெட்டி கொடுத்துட்டு வந்துறேன் )

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//To Bro N.A.S.....Bila nak datang ke Malaysia?...Lama tak Jumpa?.. //

அவரு தமிழ் கடித்ததுக்கே பதில் போட்டதா சரித்திரம் கிடயாது இதுலே மலாய் வேறா!!!

Shameed said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…
//அதிருக்கட்டும், வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து கிச்சனும் குளியலைறைகளும் நம்ம கையிலதான்னு (வேற என்ன சுத்த பத்தம் செய்து வைக்கிற G.M (general maintenance) வேலைதான் அது) செய்றதையெல்லாம் இங்கே சொன்னா எடுபடுமா ?//

அடுப்பங்கரை வரை இருந்த எங்க எல்லை கோட்டை இப்போ பாத் ரூம் வரை எக்ஸ்டன் செய்து விட்டு விட்டீர்கள் இதுக்கு மேலே எல்லை நீட்டிக்கும் வேலையை செய்யாதீர்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விதை(கவிதை) போட்டு(பின்னூட்ட) அறுவடை நல்லாருக்கு. சில அந்த பொறிலெ சிக்கவும் போவுது.

அமேஜான் அபூபக்கர் சொன்னதிலிருந்து ......
//என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் என்னத்த சம்பாதித்து கிழிச்சிங்க என்று சொல்லுவா//

பேசாமெ... சகோ.சேக்கனா வுடன் சீனா போய்விடலாம். அல்லது கனவு நாடாகிய துபாயை நனவாக்குவதே மேல்.

sabeer.abushahruk said...

இன்னிக்கு ட்டி ட்வென்ட்டி என்றல்லவா நினைத்திருந்தேன். ஓ டி ஐ யை நோக்கியல்லவா போகுது கருத்துகள்.

நம்ம கருத்துள்ள ஆட்கள் ஒரு சகனுக்குக்கூடத் தேறாது போலிருக்கே. இதுல அன்சாரி காக்கா மேற்கொண்டு வேறெல்லவா சொல்லிக்கொடுக்காக!

வாங்க வாங்க, எல்லாருக்கும் ஏற்புரையில் இருக்கு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்கா, மர்மம் இல்லா முடிச்சு மூலம் இங்கு ஒரு புதியதோர் கண்டு பிடிப்பு 'சிவிங்கத்தை வாயில் மென்று கொண்டே பூண்டு, வெங்காயம் உரித்தால் கண்ணில் தண்ணீர் வராது'.

வேனும்டாக்கா, இன்னெக்கி கடையிலெ ஒரு கிலோ சின்ன வெங்காயமும், ஒரு சிவிங்க பாக்கெட்டும் வாங்கி டெஸ்ட் பண்ணி பாத்துட்டு வந்து சொல்லுங்க.......

(கண்ணூர் தண்ணி வாயிக்கு ஷிப்ஃட் ஆகிடும் போல தெரியுது).

Noor Mohamed said...

//வழக்காடல் அல்ல இது
வலக்கரம் பிடித்து
வாழ வந்தவளோடு
உவகையான ஓர்
ஊடலாடல்//

ஊடலின் இறுதி நிலை கூடல். அதுதான்,

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்."

அப்புறம்!? இபுராஹீம் அன்சாரி காக்கா கூறுவதுபோல் அகநானூறு எழுதுவதுதான் அடுத்த வேலை.

அலாவுதீன்.S. said...

என்னத்தக் கிழிக்கிறிய?
நிறைய இடங்களில்
உள்ள புலம்பல்!
அடுக்களையில் சிறு உதவிகள் செய்து
கொண்டு இருக்கும்பொழுது
உறவுகள் வீடு தேடி வந்துவிட்டால்
வேலையை நிறுத்துங்கள்
ஹாலில் அமருங்கள்
என்ற அன்பு கட்டளை!
வீட்டிற்கு வீடு வாசற்படி!
இது பழமொழி!

அப்படியே இல்லாள்!
புரியும் தியாகத்தையும்
கவிதை வடி
சபீர்!

sabeer.abushahruk said...

//அதெப்படி என் பாடும் உங்களுக்கு தெரியுது ? இங்கே யாரும் ஜல்லிகட்டை எதிர்க்க மாட்டாங்களா ?//
//கணவனுடைய கஷ்டமெல்லாம் மனைவிக்கு தெரிவதில்லை//
முதலில், என் சகனில் அமர்ந்த அபு இபுறாகீமுக்கும் அபுபக்கர் அமேஜானுக்கும் நன்றி. நாம என்னத்தப் பெரிசாச் சொல்லிட்டோம்? வல்லரசுகளே, உங்களுக்கு உதவத்தயார். ஆனால், நீங்கள் ஒருமுறையாவது நாங்கள் அலுவலகத்தில் படும் அவதிபற்றி யோசித்த்துண்டா? ஏதாவது ஒரு பொழுதில் அசதியில் மறுத்தால் ‘என்னெத்த கிழிச்சிய?” என்று கேட்டுவைத்தல் ஞாயமா என்றுதானே கேட்கிறோம்.
*****
//அலுவலகத்தில் படும் கஷ்டங்கள் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது //
//அட்லீஸ் பூண்டுரிக்க கத்தியையாவது எடுத்து கொடுத்திருந்தால் ஏராளம் புகழ் கிடைத்திருக்குமே//
//நான் உங்களிடம் படுற அவஸ்தைக்கு இது தேவலை
என்று பதில் வரும்//
//துபாயில் இஞ்சி,பூண்டு பேஸ்ட் மட்டுமின்றி சின்ன வெங்காயம்கூட உரித்தே கிடைக்கிறது!உங்கள் ஹோம்மினிஸ்டரிடம் நைசா சொல்லி வையுங்களேன்//

//சபீர் காக்கா, மர்மம் இல்லா முடிச்சு மூலம் இங்கு ஒரு புதியதோர் கண்டு பிடிப்பு 'சிவிங்கத்தை வாயில் மென்று கொண்டே பூண்டு, வெங்காயம் உரித்தால் கண்ணில் தண்ணீர் வராது'//
பக்கத்து சகன்கார ர்களான சேக்கனா நிஜாம், எல் எம் எஸ் அபு பக்கர், அபு இஸ்மாயில், ஜமாலுதீன் மற்றும் எம் எஸ் எம் நெய்னா ஆகியோருக்கும் நன்றி. ரொம்ப ஆறுதலா இருந்துச்சு உங்களைனைவரின் யோசனைகளும். இந்தாங்க இந்த எங்களோட பிரினியையும் வேணும்னா எடுத்துக்கோங்க.
********

sabeer.abushahruk said...

//இப்படியும் ஒரு தத்ரூபமான 'லவ்' தூதாக்கும்//

என்று சரியாக நாடி பிடித்துப் பார்த்த எம் ஹெச் ஜெஹபர் சாதிக்,

//தந்திரம் நிறைந்த கட்டளை//

என்று பொங்குகிறதே முழுசா எழுதி அ.நிக்கு அனுப்புங்களேன். உங்களை வாசித்து நாளாகிறது

sabeer.abushahruk said...

//வீட்டில் பூண்டு/வெங்காயம் உரித்துக்கொடுக்கும் சில உயிரினங்கள் [ கணவன்ஸ்] இந்த உலகத்தில் 19ம் நூற்றாண்டோடு வழக்கொழிந்து போய் விட்டதாக//
ஜாகிரால் உயிரினங்கள் என அடையாலம் காணப்பட்ட கணவன்ஸ்களான / உச்சகட்ட அடிமைகளான யாசிர் மற்றும் ஹமீது ஆகியோருக்கும் இவர்களின் கேங்க் லீடர் இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும் நான் வேண்டி விரும்பி சொல்லிக்கொள்வது என்னவெனில், நீங்களெல்லாம் ரொம்ப வழிவதில் சுயநலம் இருக்கிறது. ஆம்பிளையா தெம்பா தெனாவட்டா இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பொறிச்சமீன் பெரட்றதெல்லாம் ஒரு வேலையாய்யா? ட்டையில எண்ணெய் பட்டுடாதா? ஆஃபீஸ் விட்டு வந்தமா, காஃபி கேட்டமா சோஃபால உட்கார்ந்தமான்னு இல்லாம…( அப்புறம், உங்கள் கேங்க்ல சேர நான் அனுப்பியிருக்கும் தனிப்பட்ட ஈமெயில்ல தகுதி எனும் கேள்வியில் “பூண்டுரித்துக் கொடுப்பது, வெங்காயம் உரிப்பது மட்டும்தானே நிரப்பியிருக்கிறேன். தகுதிபெறுமா?”) ஜாகிரின் அப்ளிகேஷன் ஜங்க் மெயிலில் இருக்காமே!? பாவம், அவன் உதார்லாம் வெளிலேதான். அவனும் நம்க்கெல்லாம் நண்பே..ன்தான். சேர்த்துக்கோங்க)

கவியன்பன்,
நீங்கள் ஏற்கனவே “மனைவி துணைவி” கவிதையில் தங்களின் வீட்டம்மாவுக்கு ஒரு ஐஸ் ஃபேக்ட்டரியே வைத்து ரொம்பவும் சேஃப் சோனில் இருக்கிறீகள். நான் சொல்லியா நீங்க கேட்கப்போகிறீர்கள்?
அப்புறம், நான் கணக்கில் +2வில்84% வாங்கியவன். கணக்குப்பதிவியலின் பரிச்சயம் உண்டு, ஆனால், படித்தறிந்த்தில்லை.

என் ஷஃபாத்,
//கம்ப்யூட்டர் திரையைப்
பார்த்து பார்த்து
கலங்கும் கண்கள்
உணர்த்துகின்றன..
அடுக்களையில் அவளது
கண்கள் படும்
வெங்காய வேதனையை//
நாட்டாமை, இப்படி நல்லதா நாலு கவிதை எழுதித் தள்ளனுமே தவிர அந்த வெங்காயத்தை உரித்துக் கொடுக்கும் ரிஸ்க் எல்லாம் எடுக்கனுமா என்ன?

sabeer.abushahruk said...

// இபுராஹீம் அன்சாரி காக்கா கூறுவதுபோல் அகநானூறு எழுதுவதுதான் அடுத்த வேலை//
நூர் முஹமது காக்கா,
தங்களின் அன்பிற்கு நன்றி. அகநானூறல்ல. எனக்குத் தெரிந்த அகம் ஏற்கனவே முயன்றது கீழே (சத்தியமார்கம் டாட் காம் மற்றும் திண்ணை டாட் காமிலும் வெளியானது). நல்லாருக்கா சொல்லுங்களேன்:

அகம்!

இன்று
வியாழன்...
நேற்றுதான் சென்றது
வெள்ளிக் கிழமை,
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
அமீரகத்தில்?!

எத்தனை
காலமல்ல
குடும்ப வாழ்க்கை
எத்தனை
தடவை
என்றாகிப்போனதே!

ஊரிலிருந்து
வந்த நண்பன்
உன்
நினைவுகள் மொய்க்கும்
பெட்டியொன்று தந்தான்.

அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது
நீ
அட்டைப் பெட்டி
ஒட்டிக் கட்டுகையில்
பட்டுத் தெறித்த உன்
நெற்றி பொட்டின் வியர்வையா
சொட்டுக் கண்ணீர் பட்டா?

அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்
உம்மா பெருவிரலால்
நசுக்கிக் காய்ந்த அப்பளம்
நூர்லாட்ஜ் பீட்ரூட் அல்வா
விகடன் ஜூ வி
நீ கலந்தரைத்த மசாலாப்பொடி
என
நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
பெருஞ்சோக பெருமூச்சும்
நிலைகுத்தியப் பார்வைகளும்...

-Sabeer.abuShahruk

sabeer.abushahruk said...

//அப்படியே இல்லாள்!
புரியும் தியாகத்தையும்
கவிதை வடி
சபீர்//

அலாவுதீன். நீ சொல்வதை எழுதத் தலைப்பட்டால் அது ஒரு மாபெரும் தொடராக அமையுமேத் தவிர என்னால் முடிக்கவே இயலாது. சுய அனுபவத்தில் என் மனைவி எனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பெரும் கொடையாகவே கருதுபவன் நான். என்னை உழைத்து உயர்ந்தவன் என என்னை அறிந்தவர்கள் அடையாலப்படுத்துவர். அவர்க்ளுக்கும் இதுவும் தெரியும்:

என்
வெற்றிக்குப்
பின்னால்
உழைத்தது
என்
மனைவிதான்
எனபதுவும்!

வஸ்ஸலாம்

Noor Mohamed said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

//அகம்!// என்ற உங்கள் கவிதைக்கு, இதன் அடுத்த கட்டுரை,
//'O' my son ! 'O' my son ! - Gulf version !!// தம்பி MSM - NM ஆக்கம் விளக்க(விரி)வுரையாக அமைந்துள்ளது.

Yasir said...

பூண்டுரித்தலும் இஞ்சி சுரண்டலும் இல்லாளுக்கு
செய்து கொடுப்பது அழகு

என்ற லொள்ளுவர் வார்த்தைக்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம் :)

அப்துல்மாலிக் said...

அருமை காக்கா, சில சமயம் நீங்க வீட்டு வேலைய பாருங்க (பிள்ளைகளை கவனிப்பது, கூட்டுவது, பெருக்குவது, சமைப்பது, etc..) நாங்க உங்க வேலையப்பாக்குறோம்னு சவால் விடுபவர்களுக்கு என்ன சொல்வது?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு