Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு கையெழுத்து போடுங்க அப்பா ! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | February 06, 2012 | , , , , , , ,


அதிரை அப்பாவுக்கும் அவர்களின் பேரனுக்கும் நடக்கும் உரையாடல்....

பேரன்: "அப்பா.. அஸ்ஸலாமு அலைக்கும்....."

அப்பா:  "அலைக்கு முஸ்ஸலாம்…. யாரு.. ஜாகிரா....?"

பேரன்: "என்னப்பா.. ஜாகிராண்டா பொம்ப்லாபுள்ளப் பேரப்பா. எம்பேரு ஜாகிருசேன்ப்பா..."

அப்பா:  "சரி..சரி.. என்ன இஷாவுல பளியாசள்ள ஒன்ன பாக்கலையே...ஏ… இஷா தொழுவலையா…?"

பேரன்:  "என்னப்பா... நான் தொழுகைய விடுவேனா..? ரெண்டாவது சஃப்ல தூணுக்கு கிட்டகூட நீங்க நிண்டு தொழுவுனதைப் பாத்தேனே...."

அப்பா:  "கோவிச்சிக்கிடாதே… சும்மா கேட்டேம்மா, சரி என்ன விஷயம்..?"

பேரன்:  "என் ரேங்க்கார்டுல கையெழுத்து போடனும்ப்பா போடுவியளா...?"

அப்பா:  "கெரண்டு போன நேரத்துல வேற வந்திக்கிற....!"

பேரன்:  "பத்திரத்திலையா போடச் சொல்றேன் ரேங்கார்டுதானப்பா..."

அப்பா:    "நீ ரேங்கு எத்தன எடுத்திக்கிரா..?"

பேரன்:  "ரெண்டாவது ரேங்கப்பா.. எல்லாத்திலையும் நல்ல மார்க்தான்ப்பா இங்கிலீஸ்ல மட்டும் எட்டுமார்க் சபீர் ங்க்ரவ கூட எடுத் திட்டதாலே நான் ரெண்டாவது ரேங்…"

அப்பா: "இனி இங்கிலீஸ்ல கவனமாயிரு அப்பதான் ஒலக மொழி எல்லாம் கத்துக்கலாம்."

பேரன்:   "உங்களுக்கு ஒலக மொழி எல்லாந்தெரியுமாப்பா...?"

அப்பா:  "ஹும்…. ஒலகத்தில எல்லா மொழியிலும் சிரிக்க மட்டும் தெரியும்."

பேரன் : "ஆமா… நீங்க சின்னபுள்ளையிலே வேட்டிய கெலஞ்சுவச்சுட்டு கொளத்துல குளிப்பியலாம் !. மைத்தாங்கரயிலே தும்பிபுடிப்பி யலாம்ல ?"

அப்பா: "ஆமா…. வேட்டில உள்ள சாயமெல்லாம் போயிடும்ல அதனாலதாம்மா…"

பேரன்:  "மைத்தாங்கரயிலுமா சாயம்போவும்..? யாம்ப்பா.......!!!!"

அப்பா:  "இதெல்லா யாரு உனக்கு சொன்னது..?"

பேரன்:  "அவ்பக்கர்ட அப்பா சொன்னாக"

அப்பா:   "யார்ரா அது...."

பேரன்: "அதாம்பா.. கெரண்டு குஞ்சாட்டம் தாடிக்கு கலரெல்லாம் அடிசிருப்பாக. ஜும்மாவுட்டு நீங்க பேசிக்கிட்டு வந்தியளே அவ்வொதான்"

அப்பா: "அட நம்ம நெய்னாமதா.... அப்படி எல்லாஞ் சொல்லகூடாது. நீ…குர்ஆன் பாடம் முடிச்சிட்டியா இல்லையா..?"

பேரன்:  "இன்னிக்கிதான் சூரத்துல் ஜக்ரப் பாடங்குடுத்தேன், இன்னும் பாக்கி ஈக்கிது… !"

அப்பா: "முடிக்க இன்னும் ஆறேழு ஜுசு இரிக்கிதா .....? "

பேரன்:  "ஜக்ரப் இருபத்தஞ்சாவது ஜுசுப்பா அஞ்சுதாபாக்கி. "

அப்பா:  "உவ்ளோ நாளா ஒதுரமாரித்தெரியுது. இன்னும் முடிக்கலையா....?"

பேரன்: "இது நாலாவது தடவை பாடங்குடுக்கிறேன். நீங்க எவ்ளோ பாடங்குடுத்துப்பியபப்பா...?"

அப்பா:  "நா… பதினொன்னோ, பன்னெண்டோ குடுத்த ஞாபகம்… !"

பேரன்:  "என்னப்பா டயங்கேட்டமாரி சொல்றியோ…"

அப்பா: "ஆமாப்பா அப்போ பள்ளிக்கு போயிக்கிட்டுதான் இருந்தப்போ காய்ச்சல் வந்துடுச்சு பள்ளிக்கு போகல. ஆனா இப்போபாரு நானா பலதடவை திருப்பி, திருப்பி ஒதுறேனா இல்லையா..?"

பேரன்: "நீங்க, பெரியம்மாவை கல்யாணம் முடிக்க யுவ்ளோ பணமும் நகையெல்லாம் வாங்கினியலாமே...நெசமாப்பா......?"

அப்பா: "நா… வாங்களே எங்க வாப்பா உம்மா வாங்குனாக பெரியவங்க வாங்கும்போது நாம சின்னபுள்ளே பேச்சை கேக்கவா போறாங்க ....?"

பேரன்:  "சின்னப் புள்ளக்கிதான் கலியான முடிக்க மாட்டாங்களே.... யாம்ப்ப நீங்க....!!"

அப்பா:  "(உடனே) யாரோ கதவ தட்டுர மாரிதெரியுதே…. அங்க பாரு.. !"

பேரன்:  "ஆமா கெரண்டுப்பா….. பேச்சை மாத்தாதியோ.."

அப்பா:  "இதுவும் அந்த நெய்னாமது சொன்னதா ..?"

பேரன்: "ஆமாப்பா.உண்மையத்தானே சொன்னாக... அல்ஹம்துல்லில்லாஹ் கெரண்டு வந்துடுசிபா.... இந்தாங்கப்பா கையெழுத்த போடுங்கப்பா....."

{பேரன் ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கி விட்டு சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றதும்}

அப்பா மனதிற்குள் எம்பேரன் நல்ல புத்திசாலியாக இருக்கிறானென்று சந்தோசத்துடன், யாஅல்லாஹ் எம்பேரனை தர்பியத்தான, சாலிஹானவனாக ஆக்கி பரக்கதாக்கிவை என்று துஆச் செய்தவாறே படுக்க செல்கிறார்.

-ZAEISA

குறிப்பு: பெயர்கள் யாவும் கற்பனையே.யார்,யாரை நினைச்சிக்கிட்டாலும்… கம்பெனி பொறுப்பல்ல என்று அப்பா சொல்ல சொல்லிட்டாங்க !

33 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அந்த காலம் போல் ஆசையான அப்பாவையும், அன்புள்ள பேராண்டியையும் காண்பது அரிதாகி விட்டது. பழைய அப்பாக்களிடம் இருந்த தரமும், நயமும், குணமும் இன்றைய கால நவீன அப்பாக்களிடம் காண இயலவில்லை.

எப்படி இயற்கைக்கு கேடு விளைவிக்காத 'ஒமலு' மறைந்து பல சுகாதார, சுற்றுப்புற கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் 'கீஸ்' பை வந்து விட்டதோ அது போல் தான் இன்று அப்பாக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் பழைய அப்பாக்களை (குணநலன்களை) பார்க்க முடியவில்லை.

(இந்த‌ அப்பாவெ வச்சி யாரும் பெரலி,கிரலி பண்ணலெய்யே???)

நல்ல ஒரு மலரும் நினைவு உங்களின் உரையாடல் கட்டுரை மூலம் இங்கு மலர்ந்துள்ளது. வாழ்த்துக்கள் சகோதரரே.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமை மிக அற்புதமான கற்பனைக்கலந்துரையாடல்

\\அப்பா: "ஹும்…. ஒலகத்தில எல்லா மொழியிலும் சிரிக்க மட்டும் தெரியும்."// சிரிப்புலே கூட மொழி இருப்பது எனக்கு "அப்பா" சொல்லித்தான் தெரியும்

இறுதியில் "அப்பா" நழுவுவதை அடுத்த பதிவில் பேரனும் அதே கேள்வியை கேட்டு அப்பாவை தன் கேள்வி வலையில் விழ வைக்கலாமே?...ZAEISA தொடருங்க உங்கள் கற்பனைக்கடலை...


B.இர்பான்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அப்பா பேரன் உரையாடல் சூப்பரு படிப்பினை

// "நா… வாங்களே எங்க வாப்பா உம்மா வாங்குனாக பெரியவங்க வாங்கும்போது நாம சின்னபுள்ளே பேச்சை கேக்கவா போறாங்க//

இதெ சொல்லியே பாவ நன்மை தெரியாமல் குற்றங்கள் தொடர்கிறது.
நாயன் சரியான வழியை காட்டுவானாக ஆமீன்

நெய்னா! நம்ம சேர்மன் முயற்சியாலே பழைய அப்பாக்கள் மாதிரி ஒமலு தூக்குற காலம் வருதாமே. நவீன அப்பாக்கள் முழு மார்க்கமும் குணமும் நிறைந்தவர்களாக வரட்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"எம் உள்ளத்தைக்கவர்ந்தவர்கள் பழைய அப்பாக்களா? இன்றைய நவீன அப்பாக்களா?" என்ற தலைப்பில் அ.நி. ஒரு பட்டிமன்றத்திற்கு (கணினி மன்றம்) ஏற்பாடு செய்தால் நாமும் பழைய அப்பாக்கள் என்ற தலைப்பில் கொஞ்சம் இங்கு எடுத்து உட ஏதுவாக இருக்கும்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அன்றைய‌ அப்பாக்க‌ளிட‌ம் கைத்த‌டி இருந்த‌து கைபேசி இல்லை.
ஒம‌லு இருந்த‌து ஈமெயிலு இல்லை. க‌யித்துக்க‌ட்டுலு இருந்த‌து க‌ணிப்பொறி இல்லை. தோப்பு,துற‌வு இருந்த‌து தொந்த‌ர‌வுக‌ள் இல்லை. காய்ச்ச‌ல், த‌லைவ‌லி இருந்த‌து விரைந்து கொண்டு சேர்க்கும் கேன்ச‌ர் இல்லை. ஆளுமை இருந்த‌து ஆப‌த்துக்க‌ள் இல்லை. அன்பு இருந்த‌து அதனால் வ‌ம்புதும்பு இல்லை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// அ.நி. ஒரு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்தால் நாமும் பழைய அப்பாக்கள் என்ற தலைப்பில் கொஞ்சம் இங்கு எடுத்து உட ஏதுவாக இருக்கும்.....//

செவி சாய்க்குமா அ.நி,?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): இன்றைய வாப்பாக்கள் நாளைய அப்பாக்கள் (அப்படின்னா ? நாமெல்லாம் லேட்டஸ்ட் categoryயா ?

//"எம் உள்ளத்தைக்கவர்ந்தவர்கள் பழைய அப்பாக்களா? இன்றைய நவீன அப்பாக்களா?" என்ற தலைப்பில் அ.நி. ஒரு பட்டிமன்றத்திற்கு (கணினி மன்றம்) ஏற்பாடு செய்தால் நாமும் பழைய அப்பாக்கள் என்ற தலைப்பில் கொஞ்சம் இங்கு எடுத்து உட ஏதுவாக இருக்கும்.....//

ஓ தாரளமாக செய்யலாமே !

நம் அப்பா(க்கள்)- முத்துக்களே !

என் அப்பாவின் கைபிடித்துக் கொண்டு நடக்கும்போது அவர்கள் சொல்லித் தரும் சூராக்களை மனப்பாடம் செய்வதே ஒரு சுகம் !

அவர்களின் கைபிடித்து நடந்த பேரன்களின் நான் தான் எனபதிலும் எனக்கு பெருமையே ! :) மறக்க முடியாத என்றும் நினைவுகளை விட்டு அகலாத உயிரோட்டம் அப்பா(க்களின்) ஞாபகம் !...

இந்த உரையாடல் நிறை விஷயங்களை சொல்கிறது, அப்பாக்களுடன் வெட்டிப் பேச்சுகள் இருந்ததே இல்லை, இழையோடும் நகைச்சுவைகளோடு உலகக் கல்வி, மார்க்க கல்வி, வாழ்வியல் கல்வி என்று மாறி மாறி பேசப்படுவது அழகே...

முதல் வருகையானாலும் முத்தான வருகை ZAEISA காக்கா தொடரட்டும் மேலும் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"பேரப்பிள்ளைகள் ஏதேனும் ஒரு சந்தோசமான காரியம் செய்து விட்டாலோ அல்லது பேசி விட்டாலோ அன்றைய அப்பாக்கள் 'அடி சக்கெ' என்பார்களே அந்த ஆனந்த வார்த்தைக்கு அர்த்தம் தான் என்ன? ஆயிரம் அர்த்தங்கள் அடங்கிய ஒரே வார்த்தையோ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிராம்பட்டினம் போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்க்ஸ்...
வருகின்ற தலைமுறை சென்ற தலைமுறையை விட சிறப்பாக உள்ளது என்று உணர்த்தும் மிக அருமையான இயற்கை உரையாடல்கள்...
படிப்போர் மன நிம்மதி அடைவர்..!
ஜசாக்கலாஹு க்ஹைர்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மண்ணின் மணம் கமழும் அன்பான உரையாடல்.

இடையில் எங்க வாப்பா உம்மா வாங்கினாங்க என்ற ஒரு சிறிய பிரம்படி.

ரசிக்கும் வண்ணம் இருந்தது. முதல் முறையாக எழதி இருககிறார்கள் சகோதரர். ZAEISA என்று ஒரு குறிப்பு இருக்கிறது.

ஆனாலும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து இப்படி எழுதுங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அடுத்து எம். எஸ். என். அவர்கள் கூறுவது போலவும் நெறியாளர் அவர்கள் ஏற்பதுபோலவும் பட்டிமன்றம்

வைத்தீர்களானால் நான் இந்தக்கால அப்பா கட்சி. என் கட்சியை நான் விடமுடியாது அல்லவா?

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

Anonymous said...

அப்போவுள்ள அப்பா மார்கள் எல்லாம் பேரனிடம் அன்பாகவும்,பண்பாகவும்,பாசமாகவும் இருப்பார்கள். இப்போ உள்ள அப்பா மார்கள் பேரனிடம் அன்பு,பண்பு,பாசம் எல்லாம் இருப்பதில்லை. பேரன்களுக்கு அப்பாமார்கள் அந்த காலத்தில் காசு பள்ளிக்கு செல்லும் போது கொடுப்பார்கள். இந்த காலத்தில் உள்ள அப்பாமார்கள் பேரனிடம் காசுகளை பிடுங்காமல் இருந்தால் சரிதான்.

பழைய காலத்தில் உள்ள அப்பாமார்கள் குர்ஆன் ஓதுவதற்கு மதர்சாவில் கொண்டு போய் விடுவார்கள். இப்போ உள்ள அப்பாமார்களுக்கு முடிய வில்லை அந்த காலத்தில் உள்ள சாப்பாடுகள் நல்ல சத்துள்ளது அது இப்பொழுது இல்லை. சாப்பாடுகளும் புதிதாக வர வர நோய்களும் புதிதாக இந்த காலத்தில் வந்துக்கொண்டே இருக்கிறது.

Anonymous said...

நெய்னா பழைய அப்பாக்களா? இன்றைய அப்பாக்களா என பட்டி மன்றம் ஏற்பாடு செய்வதற்கு அ.நி.கண்டிப்பாக இதற்கு செவி சாய்க்கும் என்று எனக்கு தெரியும்.

Yasir said...

அப்பப்பா...பரபரப்பான வாழ்க்கையின் மத்தியில் இப்படி ஒரு அமைதியான..மனதை குதுகலப்படுத்தும் பதிவு...வாழ்த்துக்கள் சகோதரரே தொடர்ந்து எழுதுங்கள்

Yasir said...

என்ன அ.நி....பட்டி மன்றத்தை...கவிகாக்காவின் கவிவரிகளுடன் தொடங்க தயாரா ??

கவிக்காக்கா, பழைய அப்பாக்களையும் நவீன அப்பாக்களையும்,வரக்கூடிய தலைமுறையில் உருவாகிக்கொண்டிருக்கின்ற iஅப்பாக்களையும்...உங்கள் கவிவரிகளால் செதுக்கி தாருங்கள்..சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் சந்ததி நல்லா இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்துவரும் (தாத்தாக்களை ஞாபகப்படுத்திய சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்களுக்கு மிக்க நன்றி.

ஜஸக்கால்லாஹ்..

தூய எண்ணத்தில் வாழ்ந்து மறைந்த அப்பாக்களுக்காக என்னெற்றும் துஆ செய்வது பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவரின் கடமை.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

ஆஹா..... இப்பதிவு மூலம் பட்டிமன்றமே ஒரு பதிவாக வர போகிறதா வாழ்த்துக்கள்....பட்டிமன்றத்துக்கு பெயரும் சூட்டியாகிற்று நடுவர் யார் என்பதே என்னுடைய கேள்வி?

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நமக்கு நம்மூர் பானியுலேயே முன்பு பதிவாக விட்ட சகோ MSM அவருக்கு வாழ்த்துக்கள் (இப்பதிவை இப்பொழுதான் பார்க்க நேர்ந்தது)

அ.நி வாசகர்களின் கவனத்திற்கு இந்த அப்பா,பேரன் இருவர்கிடையே நடக்கும் உரையாடலை பழைய பதிவுக்கு செல்ல http://adirainirubar.blogspot.com/2011/10/blog-post_1613.html

B.இர்பான்

Noor Mohamed said...

அக்காலத்து அப்பாமார்களும் பேரன்மார்களும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ, அப்பாமார்களும் பேரன்மார்களும் ஒரே ஊரிலிருந்தாலும் ஒரே வீட்டிலிருப்பதில்லை. அதுமட்டுமல்லாது, அப்பாமார்களும் பேரன்மார்களும் தாய் நாட்டிலும் அயல் நாடுகளிலும் (vice versa) வாழ்ந்து வருகின்றனர்.

இப்போது அப்பாமார்களை பாட்டிமார்கள் கூட கவனிக்க காலம் இடம் கொடுக்கவில்லை. காரணம், அந்த பாட்டிமார்களும் அவர்களின் பிள்ளைக்களின் உதவிக்காக அவ்வப்போது வெளி நாடு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

இது போன்ற பழைய உரையாடல்களைப் படித்துத்தான் நம் ஏக்கங்களை போக்கிக் கொள்ளவேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பாசமாக அதட்டிய அப்பாக்கள் அன்று.
கோபமாக அதட்டும் அப்பாக்கள் இன்று.
நம் காலங்கள் எப்படி பாசம்? கோபம் ? பூஜியம் ?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// பெயர்கள் யாவும் கற்பனையே.யார்,யாரை நினைச்சிக்கிட்டாலும்… கம்பெனி பொறுப்பல்ல என்று அப்பா சொல்ல சொல்லிட்டாங்க ! //

அது சரி கருத்து வேலையை சரியாக செய்து விட்டால் அப்பா சம்பளம் தருவாங்களே!

Anonymous said...

நெறியாளர் அவர்களே!

பட்டிமன்றம் ஆரம்பிப்பதாக உங்களிடம் இருந்து ஒரு அதிகார பூர்வ அறிவிப்பு வரமுன்பே மாற்று அணியை சேர்ந்த நம்பர் அமோஜான் அபூபக்கர் அவர்கள் இப்படி எங்கள் அணியை குற்றம் சாட்டுகிறார்.

//அப்போவுள்ள அப்பா மார்கள் எல்லாம் பேரனிடம் அன்பாகவும்,பண்பாகவும்,பாசமாகவும் இருப்பார்கள். இப்போ உள்ள அப்பா மார்கள் பேரனிடம் அன்பு,பண்பு,பாசம் எல்லாம் இருப்பதில்லை. பேரன்களுக்கு அப்பாமார்கள் அந்த காலத்தில் காசு பள்ளிக்கு செல்லும் போது கொடுப்பார்கள். இந்த காலத்தில் உள்ள அப்பாமார்கள் பேரனிடம் காசுகளை பிடுங்காமல் இருந்தால் சரிதான்.//

இவைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ( நாங்கள் என்றால் யார் நான் ஒருவன்தான் கத்திக்கொண்டிருக்கிறேன். யாரவது வாங்க “ அப்பா”)

இபுராஹீம் அன்சாரி

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மூக்குப்பொடி போடாத, வெத்துல பாக்கு மெல்லாத, கூடுதொப்பி போடாத (கூடு என்பதால் இங்கு யாரும் கொந்தளிச்சிடாதியெ), முட்டி வரை தொங்கும் சட்டை போடாத, கழுத்துலெ ஒரு துண்டு தொங்காத, பச்சை பெல்ட் போடாத, கைத்தடி இல்லாத, ராத்திரியில் டார்ச் லைட் பயன்படுத்தாத, இரண்டு பாக்கெட்லெயும் சில்லரை காசு வைத்துக்கொள்ளாத, காதுலெ செண்டில் நனைத்த பஞ்சை செருகாத, மரக்கட்டையில் டயர் வாரு போட்ட செருப்பு போடாத, உடைந்த மூக்கு கண்ணாடியில் கயிறு சுற்றிப்போடாத‌‌, என்ன தான் உடம்பு சரியில்லாட்டியும் ஆஸ்பத்திரிக்கு போராங்களோ? இல்லையோ? பள்ளியாசல்க்கு போக மறக்காத, வீட்டில், குடும்பத்தில், தெருவில் வரும் சிறு, பெரும் சண்டைகளுக்கெல்லாம் சாதுரியமாய் தீர்ப்பு வழங்கி அன்றாட அவரவர் அலுவல்கள் அமைதியாய் நடைபெற முயற்சிக்காத எந்த அப்பாவும் இந்த போட்டிக்கு செல்லாத அப்பாக்களாகி விடுகின்றனர். இது போட்டிக்கான விதிகளாக அப்பா சொல்ல சொன்னார்கள்.

(மேற்கண்ட இந்த போட்டியின் விதிகளுக்கு கட்டுப்பட்டு போட்டியில் கலந்து கொள்ள‌ ஒரு அப்பா கூட இங்கு தேர‌ மாட்டாஹெ போல‌ ஈக்கிதே?? என்னா இன்றைய‌ அப்பாமார்களே!!! கொஸ்டின் பேப்பர் மேலெ வெளியாயிடுச்சே? ரெடியாயிட‌ வேண்டிய‌து தானே? என்னா ஈசியா போட்டியிலெ க‌ல‌ந்துக்கிட்டு ப‌ரிசு வாங்கிக்கிட்டு போஹ‌லாமுண்டு நெனெச்சிக்கிட்டியலாக்கும்? தீந்த‌ அப்பா தான் நீங்க‌.....போங்க‌...)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நெய்னா ஜர்க்கா வண்டியிலே சவாரி செய்ததுபோல் இருக்கிறது உன் தொடர் ஞபகங்கள்.

Noor Mohamed said...

//மூக்குப்பொடி போடாத, வெத்துல பாக்கு மெல்லாத, கூடுதொப்பி போடாத (கூடு என்பதால் இங்கு யாரும் கொந்தளிச்சிடாதியெ), முட்டி வரை தொங்கும் சட்டை போடாத, கழுத்துலெ ஒரு துண்டு தொங்காத, பச்சை பெல்ட் போடாத, கைத்தடி இல்லாத, ராத்திரியில் டார்ச் லைட் பயன்படுத்தாத, இரண்டு பாக்கெட்லெயும் சில்லரை காசு வைத்துக்கொள்ளாத, காதுலெ செண்டில் நனைத்த பஞ்சை செருகாத, மரக்கட்டையில் டயர் வாரு போட்ட செருப்பு போடாத, உடைந்த மூக்கு கண்ணாடியில் கயிறு சுற்றிப்போடாத‌‌, என்ன தான் உடம்பு சரியில்லாட்டியும் ஆஸ்பத்திரிக்கு போராங்களோ? இல்லையோ? பள்ளியாசல்க்கு போக மறக்காத, வீட்டில், குடும்பத்தில், தெருவில் வரும் சிறு, பெரும் சண்டைகளுக்கெல்லாம் சாதுரியமாய் தீர்ப்பு வழங்கி அன்றாட அவரவர் அலுவல்கள் அமைதியாய் நடைபெற முயற்சிக்காத எந்த அப்பாவும் இந்த போட்டிக்கு செல்லாத அப்பாக்களாகி விடுகின்றனர். இது போட்டிக்கான விதிகளாக அப்பா சொல்ல சொன்னார்கள்.//

தம்பி MSM NM
எங்கிருந்துதான் இந்தப் பட்டியலை கண்டுபிடித்தாயோ! சின்ன வயதிலிருந்து இதுபோல் கண்ணாடி போட்டுக் கொண்டு அப்பா விழித்ததிலிருந்து உறங்கும்வரை உற்று நோக்கிக்கொண்டே இருந்தாயா? உன்னுடைய இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் பட்டிமன்றத்திற்கு பொருந்தாது. கருத்தரங்கத்திற்குதான் பொருந்தும்.

sabeer.abushahruk said...

//"என்னப்பா டயங்கேட்டமாரி சொல்றியோ…"//
// "சின்னப் புள்ளக்கிதான் கலியான முடிக்க மாட்டாங்களே//
//கம்பெனி பொறுப்பல்ல//

ஹாஹாஹாஹாஹாஹா...ஹிஹிஹிஹிஹிஹி.ஈ ஈ ஈ ஈ ஈ ஈ (விழுந்து விழுந்து சிரிக்கிறேனாக்கும். ஏ ஐயா zaeisa, எங்கேயா இருந்தீர் இத்தனை நாளும்?

இனிமே வந்து அடிக்கடி பழகுமய்யா!

sabeer.abushahruk said...

அப்பா கட்சிக்கு வாதாட சேரனும்னா, இந்த மூத்த மச்சியின் மூத்த மகளுக்குப்பிறந்த பிள்ளை "அப்பா, அப்பா" னு கூப்பிடுதே அந்த மாதிரி அப்பாக்களும் ஓக்கேவா அல்லது அக்மார்க் அப்பாக்கள் மட்டும்தானா?

ZAKIR HUSSAIN said...

To Bro MSM Naiana Mohamed,

//மரக்கட்டையில் டயர் வாரு போட்ட செருப்பு போடாத,//

பினாங்கு போய் விட்டு [Just one hour ago] வீட்டுக்கு வந்து கம்ப்யூட்டரை திறந்தால் நான் பினாங்கில் வாங்க நினைத்த 'மிதிரிக்கட்டை" பற்றிய உங்கள் எழுத்து....

செருப்பு வழுக்கி பார்த்திருப்பீர்கள்...மிதிரிக்கட்டை வழுக்கி பார்த்திருக்கிறீர்களா?....இதுவே நமது அப்பாக்களின் மிதிரிக்கட்டை தேர்வுக்கான காரணம்.

Anonymous said...

அன்பு நண்பர்களே!

எம். எஸ். எம். நெய்னா அவர்களின் நீண்ட பட்டியலை பார்த்தபிறகு பட்டிமன்றம் தேவை இல்லை தீர்ப்பை ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

ஆனாலும்,

பேரன்களுக்கு கடை மிட்டாய் வாங்கி கொடுத்தது அன்று கம்ப்யூட்டர் வாங்கி கொடுப்பது இன்று காதர் முகைதீன் பள்ளியில் படிக்க வைக்க பதினைந்து ரூபாய் பீஸ் கட்டியது அன்று லாரல் ஸ்கூலில் இரண்டாயிரம் பீஸ் கட்டுவது இன்று காலுக்குபோட சீன செருப்பு வாங்கி கொடுத்தது அன்று ஹீரோ ஹோண்டா கேட்கிறான் இன்று. வாப்பாவை மட்டும் எதிபார்த்தான் அன்று – வாப்பா சரியில்லை நீ வாங்கித்தா அப்பா என்று கேட்கிறான் இன்று. அன்று வாங்கிக்கொடுத்த ஆப்பிள் வேறு. இன்று அவன் கேட்கும் ஆப்பிளே வேறு.

சிலேட்டுப்பலகை காலம் போய் ஐபேடு காலம் வந்துவிட்டது.

எத்தனையோ இக்கால அப்பாக்கள் மகளுக்கு எடுத்த மாப்பிள்ளை சரியில்லாமல் போன காரணத்தால் எழுபது வயதுவரை உழைத்து பேரன் பேத்திகள் வரை காப்பாற்றிகொண்டும் , படிக்க வைத்துக்கொண்டிருக்கும் கதைகள் நிறைய உண்டு. அவைகள் கண்ணீர் கதைகள். இன்றைய அப்பாக்களும் அவைகளுக்கு விதிவிலக்கல்ல.

சுற்றி பாருங்கள். உங்கள் கண்களுக்கும் தெரியும். பிள்ளை குட்டிகளை விட்டுவிட்டு ஓடியவன், பொருத்தம் இல்லாத காரணம் சொல்லி கட்டிய மனைவியை பிள்ளைகளை விட்டு ஓடியவன், மறு மனைவி கட்டிக்கொண்டு முதல் மனைவியின் பிள்ளைகளை பரிதவிக்க விட்டவன், ஐரோப்பிய நாடுகளில் இலங்கை பெண்களின் மயக்கத்தில் மனைவியை குழந்தைகளை வருடக்கணக்கில் மறந்தவன், இந்த வகை பேரன்களை, பேத்திகளை பராமரிக்கும் பொறுப்பை வகிக்கும் அப்பாக்கள் எல்லாக்காலத்திலும் இருககிறார்கள். இந்த காலத்தில் நிறைய இருக்கிறார்கள்.

கால மாற்றங்கள் கருவிகளை மாற்றி இருக்கலாம். அப்பாக்கள் நவீனமாகி இருக்கலாம். ஆனால் பாசம் பாசம்தான். அந்த உணர்வுகள் மாறிவிடவில்லை. வாங்கித்தரும் பொருள்கள் காலத்துக்கேற்ப மாறி இருக்கலாம். ஆனால் அப்பாக்களின் மனதில் பேரன் பேத்திகளுக்கு உள்ள இடம் சாஸ்வதமான் இடமே

இபுராஹீம் அன்சாரி

ZAKIR HUSSAIN said...

To Bro ..ZAEISA

//"ரெண்டாவது ரேங்கப்பா..//

இதுலெ உள்குத்து ஏதும் இல்லையே...

//குறிப்பு: பெயர்கள் யாவும் கற்பனையே.யார்,யாரை நினைச்சிக்கிட்டாலும்… கம்பெனி பொறுப்பல்ல என்று அப்பா சொல்ல சொல்லிட்டாங்க !//

இதுக்கெல்லாம் கம்பெனியா?.....என்னமோ 'கிழக்கிந்திய கம்பெனி" மாதிரி அநியாயத்துக்கு பில்ட் அப் ஆவுல இருக்கு.

ZAKIR HUSSAIN said...

//கால மாற்றங்கள் கருவிகளை மாற்றி இருக்கலாம். அப்பாக்கள் நவீனமாகி இருக்கலாம். ஆனால் பாசம் பாசம்தான். அந்த உணர்வுகள் மாறிவிடவில்லை. வாங்கித்தரும் பொருள்கள் காலத்துக்கேற்ப மாறி இருக்கலாம். ஆனால் அப்பாக்களின் மனதில் பேரன் பேத்திகளுக்கு உள்ள இடம் சாஸ்வதமான் இடமே//

To Bro Ebrahim Ansari,

ஒரு மகள் பிறந்தவுடன் தான் ஒரு தகப்பன் பிறக்கிறான்....கால ஒட்டத்தில் மகளின் தேவைகள் மட்டும் எல்லாவற்றிலும் முன்னிற்க தன்னை மறந்து தகப்பன் தன்னாலே காணாமல் போய்விடுகிறான். பிறகு மகளின் மகன், மகள் இவர்களின் தேவைக்கு உயிர்பெறுகிறான். கடைசி வரை எந்த 'அப்பா'க்களும் அங்கீகரிக்கப்படாமல் அலைகடல் நுரையாய் மறைந்தே போகிறான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.அ.காக்கா அவர்கள் சொன்னது...

//நெறியாளர் அவர்களே!

பட்டிமன்றம் ஆரம்பிப்பதாக உங்களிடம் இருந்து ஒரு அதிகார பூர்வ அறிவிப்பு வரமுன்பே//

//கால மாற்றங்கள் கருவிகளை மாற்றி இருக்கலாம். அப்பாக்கள் நவீனமாகி இருக்கலாம். ஆனால் பாசம் பாசம்தான். அந்த உணர்வுகள் மாறிவிடவில்லை. வாங்கித்தரும் பொருள்கள் காலத்துக்கேற்ப மாறி இருக்கலாம். ஆனால் அப்பாக்களின் மனதில் பேரன் பேத்திகளுக்கு உள்ள இடம் சாஸ்வதமான் இடமே//

அசத்தல் காக்கா சொன்னது...

//கடைசி வரை எந்த 'அப்பா'க்களும் அங்கீகரிக்கப்படாமல் அலைகடல் நுரையாய் மறைந்தே போகிறார்.//

ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்தவைகள் இவைகள் !

பாசம் ஒன்றே... அப்பாக்களின் சூழலால் அவர்கள் ஹீரோக்களாகவும் வில்லன்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள் !

அன்பின் இ.அ.காக்கா, MSM(n), MHJ தாங்கள் பரிந்துரை என்றுமே முன்னிருத்தப்படும் (சொல்லிதான் தெரியனுமா ?)

ஆக ! ஓர் விவாதக் களம் கண்போம் விரைவில் இன்ஷா அல்லாஹ்...

இன்றைய அப்பாக்களின் அற்புதங்கள் நிகழ்த்துபவர்களை ஏராளமாக பட்டியிலட நானும் ரெடி அப்படி ஒரு களம் கானும்போது... என்றுமே நான் பாசத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் அப்பாக்கள் பக்கம் தான் இருப்பேன்....

கவிக் காக்கா சொன்னது....

//அப்பா கட்சிக்கு வாதாட சேரனும்னா, இந்த மூத்த மச்சியின் மூத்த மகளுக்குப்பிறந்த பிள்ளை "அப்பா, அப்பா" னு கூப்பிடுதே அந்த மாதிரி அப்பாக்களும் ஓக்கேவா அல்லது அக்மார்க் அப்பாக்கள் மட்டும்தானா?//

ஆமா! ஆமா ! 'அக்மார்க்'தான் இருந்தாலும் வருங்கால அக்மார்க் அப்பாக்களுக்கு சலுகையுண்டு...

Yasir said...

//ஒரு மகள் பிறந்தவுடன் தான் ஒரு தகப்பன் பிறக்கிறான்/// these lines touched deep in my heart.....

அப்துல்மாலிக் said...

எனக்கு ஏனோ இந்த பாக்கியம் இல்லாமல் போய்டுச்சி, ஒன்லி வாப்புச்சி, உம்மம்மா தான்....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.