Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாணவப் பருவம் :: பசுமைப் பருவம் ! - விவாதக் களம் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2012 | , , , , , ,


சமீபத்தில் உலுக்கிய ஓர் சம்பவம் மாணவ சமுதாயத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று ஒருசாரார், இல்லை பெற்றோரின் வளர்ப்புதான் என்று மற்றொரு சாரார், அப்படியெல்லாம் இல்லை சுற்றுப்புற சூழல், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அத்துமீறிய சினிமாக் கலாச்சாரம், தொலைக்காட்சித் தொடர்கள், அலைபேசிகளின் ஆளுமை, இணையம் என்று வேறொரு சாராரும் மாறி மாறி அலசுவதில்தான் தீவிரம் காட்டுகின்றனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அதற்கான தீர்வாக தீர்க்கமாக சிலரும் யோசிக்கத்தான் செய்கின்றனர் அவ்வகையில், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் நாம் பழக்கப்பட்டவர்களாக இருப்பதனால் இந்தப் பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் கடந்த காலங்களில் மாணவப் பருவத்தை கடந்து வந்தவர்கள் அல்லது இன்றைய மாணவமணிகளாக இருக்கலாம்.

பெற்றோர் ஆசிரியர், ஆசிரியர் மாணவர்கள் உறவுகள், மாணவர்களுக்குள்ளேயே நட்பு பாராட்டுவது, மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கான உறவு முறைகள் அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கனும் என்று விவாதிக்கலாம்.

கவனிக்க! இது எந்த தரப்பையும் குற்றம் கண்டெடுத்து குத்திக் காட்டுவதற்கு அல்ல, நம்மை விட நல்ல கருத்துடைய அறிவுடைய சான்றோர் நம்மைச் சுற்றியிருப்பதனால் அவர்களின் கருத்துக்கள் இளம் பெற்றோர்களுக்கும், மாணவாமணிகளுக்கும் பயனளிக்கும் என்ற நன்னோக்கில்தான் இவ்விவாதம்.

தயைகூர்ந்து நடந்துவிட்ட அசம்பாவிதத்தை மீண்டும் இங்கே நினைவு படுத்தி விமர்சிக்காமல், ஆசிரியர் மற்றும் மாணவ சமுதாயத்தின் உறவுமுறைகள் எப்படி இருக்கிறது, அதனை எவ்வாறு பேணுவது, மார்க்கம் காட்டும் வழியில் நம் நடத்தைகள் எவ்வாறு இருக்கனும் என்று நளினமாக எடுத்து வையுங்கள்.

தனிமனித அல்லது பள்ளி நிர்வாகத்தினை குறைகூறும் களமாக இதனைக் கருதாமல், எம்மக்கள் என்றும் சிறந்த மக்களாக இருந்திட முயல்வோமே இன்ஷா அல்லாஹ்...

-அதிரைநிருபர் குழு

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபர் பதிவுகளில் ஏராளமாக நம் முன்னேற்றத்திற்கு உரியவர்களில் ஆசிரியர் பெருமக்களை பலமுறை நினைவு கூர்ந்து எழுதி வந்திருக்கிறோம்.

அன்று கிடைத்த நெருக்கம் ஆசிரியர்கள் மத்தியில் இன்றையச் சூழலில் மாணவர்களுக்கு கிடைக்கிறதா ?

கேள்வி என்னுடையதே !

ZAKIR HUSSAIN said...

சமீபத்தில் ஊர் போயிருந்த போது சீனிவாசன் சார் அவர்களிடம் பேசியதில் அவர் சொன்னது " முன்பு உள்ள மாணவர்களிடம் இருந்த நெருக்கமும் , மெச்சூரிட்டியும் இப்போது உள்ள மாணவர்களிடம் இல்லை" என்பதுதான். இப்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சி மனிதர்களுக்கு இடையில் அதிகமான வரப்புகளை கட்டியிருக்கிறது.

உலகம் முழுதும் என்ன நடக்கிறது என்பது தெரிந்தும் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாத விஞ்ஞான வளர்ச்சி ஒரு விதமான 'கட்டி' மாதிரி.

வீக்கத்தை எல்லாம் "உடம்பு போட்டிருக்கு" நு கொண்டாட முடியுமா?...

முறைப்படுத்தப்படாத எந்தப்பழக்கமும் மனித வளர்ச்சிக்கு வைரஸ் தான்

Noor Mohamed said...

அன்றைய திண்ணைப் பேச்சு இன்றைய web communication. திண்ணைப் பேச்சில், சபை ஒழுக்கம், அறிவு, அன்பு இவற்றை பயிலலாம். ஆனால் web ல் அறிவும் கூடவே அநாகரிகமும் சேர்ந்து வரும்.

இன்று எங்கெங்கு காணினும் தொலைதூரக் கல்வி. அன்று அது இருந்தும் மிகக் குறைவே. எனவே இன்று ஆசிரியர் மாணவர் நெருக்கம்-தொலைதூரத்தில் உள்ளது.

ஓர் உண்மையை சொல்லவா உங்களுக்கு. புலவர் சண்முகம் சார் அவர்களின் மாணவன் நான். அதே நேரத்தில் அந்த புலவர் சண்முகம் சார் அவர்களுக்கு நான் ஆசிரியனாய் பயிற்றுவித்து அவர்கள் பட்டம் பெற்றார்கள். அந்த அளவுக்கு அன்று ஆசிரியர் மாணவர் தொடர்பு நெருக்கமாகவே இருந்தது.

sabeer.abushahruk said...

ஒரு சிறுவனுக்குக் கொலைவெறி ஏற்பட அவன்மட்டுமே காரணமாக இருக்கமுடியாது.

நிறைய காரணிகள் உள்ளன

இப்னு அப்துல் ரஜாக் said...

முன்பெல்லாம் மாணவர்கள் தங்கள் தாய்,தந்தை,குடும்ப உறுப்பினர்கள்,ஆசிரியர்,ஆலிம்கள் என்று மரியாதை வைத்து இருந்தார்கள்.அவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது,அதுக்கும் மேல்,அல்லாஹ்வின் மேல் பயமும்,ரசூல் ஸல் அவர்களின் மீது மிக்க மேலான பாசமும் இருந்தது,(இன்றும் இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை).ஆனால் அன்று நம் மாணவர்களை மார்க்கம் வழி நடத்தியது,இன்று கேடு கெட்ட சினிமாவும்,நாடகமும்,சீரழிவு ஊடகங்களும் வழி நடத்துகின்றன.
அல்லாஹ்வை நினைத்து அழுத பெண்கள்,இன்று நாடகத்தில் வரும் காட்சிகளை பார்த்து அழுகின்றனர்.ஆசிரியர்கள் பள்ளியில் நடப்பதை வைத்து மட்டுமே மாணவர்களை திருத்த முடியும்,எனவே,பெற்றோகளுக்கு மட்டுமே அதிக அக்கறை வேண்டும்.

அரசு,காவல் துறை,ஆசிரியர்,பெற்றோர்,மாணவர்கள் என்று ஒரு லிங்க் இருக்க வேண்டும்.
ஒரு உதாரணமாக,அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

காலை எட்டு மணிக்கு பள்ளிகள் திறந்து,மதியம் இரண்டு - முப்பதுக்கு முடியும்.இந்த இடைபட்ட நேரத்தில் மாணவர்களை ரோட்டிலோ,ஷாப்பிங் மால்களிலோ,வேறு எங்கோ கண்டால்- காவல் துறையினர் பிடித்து விசாரிப்பார்கள்.

மாணவர்கள் பள்ளிக்கு வராத நாளில்,வீட்டுக்கு உடனே பள்ளியிலிருந்து போன் வந்து விடும்.

ஹோம் வொர்க் மற்றும் பள்ளி சம்பந்தமான எல்லா வேலைகளையும் முடித்து மாணவர்கள் - பெற்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

அடிக்கடி மாணவர்கள் - பள்ளிக்கு விடுமுறை எடுத்தால்,காவல் துறை தலைவரிடமிருந்து(ஷெரீப்)பெற்றோருக்கு சம்மன் வரும்.

பள்ளி நேரம் முழுக்க காவல் துறை பள்ளி வளாகத்தை(patrol) சுற்றி வரும்.

ஆசிரியர்,மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு சக மாணவன் போல் பழகுவார்கள்.

பள்ளி சம்பந்தமான போர்ட் மீட்டிங்குக்கு கூட,பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்பார்கள்.

இப்படி நம்மூரிலும்,செய்யலாம்.

கொசுறு :(இங்கும் - பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடந்து கொண்டுதான் இருக்கிறது,ஆனால் அதைக் களைய மேற்சொன்ன மற்றும் பலவிதங்களில் போராடிவருகின்றாகள்.)

Result:அமெரிக்காவோ,இந்தியாவோ இஸ்லாம் சொல்வதை கேட்டு நடந்தால் - அமுல் படுத்தினால் எல்லாரும் நன்றாக இருக்கலாம்.இல்லையெனில் இது போன்று நடப்பதை தவிர்க்க இயலாது.இதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்லி வைக்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

I appreciate root causes and remedies which are given by brother AL AR.

//முன்பெல்லாம் மாணவர்கள் தங்கள் தாய்,தந்தை,குடும்ப உறுப்பினர்கள்,ஆசிரியர்,ஆலிம்கள் என்று மரியாதை வைத்து இருந்தார்கள்.அவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது//

Which is the main cause for having more denominations in our religion and community? After having more and more denominations within a single religion and community, the new generation is having confusion and asking to whom we shall follow as guidance.
(One sector killed another sector in the Masjid for taraweeh prayer conflict)
EGO is the root cause which is making divisions/denominations within a single religion and community. IKHLAS is to be maintained in each and every action; then only our ambitions and advices will reach to students very well.

Today, I read in a newspaper about the boy's feeling:

The doctor found the boy as he is still shocked about the incident and the boy felt why he killed his teacher. This means that he took the decision to kill his teacher by emotional feelings only.

Jazakkallaah khairan, brother AL AR for sharing your feelings.

"IKHLAS" is

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாணவ சமுதாயத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளிக்கு காரணம் சினிமாவும் சீரியலும் தான்.

பெற்றோரால் வளர்ப்பு முறையில் குறைபாடு ஏற்படக் காரணம் குழந்தைகளோடு அதிக நேரங்களை பயனுள்ள முறையில் செலவிடாமல் சினிமா சீரியல் என அதில் அதிகம் மூழ்கிவிடுவதால் தான்.

அலைபேசி மற்றும் இணையம் மூலம் தவறான பாதையில் இழுத்துச்செல்ல வழிகோலுவதும் சினிமா சீரியல் தான்.

இத்தைகைய சினிமா சீரியல்களில் மது, புகை காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

கொலை, கொள்ளை காட்சிகளை தடை செய்ய வேண்டும்

எனவே சினிமா சீரியல்களை முறைப்படுத்துவதன் மூலமே பெற்றோர்- ஆசிரியர்- மாணவ உறவு முறையில் குறிப்பிடத்தக்க ஆரோக்கியம் காண முடியும்.

இதற்கு மேலாக இஸ்லாமிய முறை நெறியே முழு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதர சகோதரிகளே,

சினிமா, தொலைக்காட்சித் தொடர், செல்ஃபோன், இண்டெர்நெட் என்று முக்கிய எதிரியாக நாம் பார்க்கிறோம்.

அடிப்படியில் தாய் தந்தையர் ஆரம்பத்திலிருந்தே தங்கள் குழந்தைகளுகாக செய்யும் தியாகங்கள் பொருளாதாரத்தில்தான் மிகைத்திருக்கிறதே தவிர, அவர்களின் எதிர்கால வாழ்க்கை முறையை மார்க்க அறிவுடன் சரியாக போதிக்க தவறுவதும் ஒரு காரணம்.

தாய் ஓதியிருந்தால் நிச்சயம் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே ஓதிக் கொடுக்கும் பழக்கம் துவங்கியிருக்கும், தாய் ஒழுக்கம் பேணியிருந்தால் அந்தக் குழந்தைகளுக்கும் அதே ஒழுக்கம் தொடர முயற்சிகள் தொடர்ந்திருக்கும், தாய் படித்திருந்தால் தன் பிள்ளைகளும் எவ்வாறு படிக்க வேண்டும் என்று வழிமுறைகளை கற்றுக் கொடுத்த முடிந்திருக்கும்.

வெளியூர்களைப் பற்றி விமர்சிக்காமல் நமது வீடுகளில் என்ன நடக்கிறது என்று தந்தைகள் எத்தனை பேருக்குத் தெரியும், தன் பிள்ளையின் படிப்பு நிலை என்ன என்பது ?

கட்டற்ற சுதந்திரம் நம் மார்க்கம் சொல்லித் தராத ஒன்று.

வீடுகளில் பிள்ளைகளோடு பேசுவதற்கு அவர்கள் விரும்பும் செல்ஃபோன்களை கேட்காமலே வாங்கி கொடுத்தாகிவிட்டது, அதன் பயன்பாடு நீங்கள் பேசும்போது மட்டும்தான் என்று எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும் ?

இண்டர்நெட், இது அப்படி என்ன அவசியம் வீடுகளுக்கு கட்டாயம் என்று ? பிள்ளைகளும் இண்டர்நெட்டில் தெரியவேண்டிய, கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் அதிமதிகம் இருக்கிறது அதனை முறையாக அவர்கள் சுயமாக முடிவுகள் எடுக்கும் காலம் வரை அரண் அமைத்து கேட்வேயாக இருங்கள்.

பள்ளிக் கூடத்தைப் பொறுத்தவரை, இந்தக் கால சூழ்நிலையில் அவர்களின் குறிக்கோள் மதிப்பெண்களை உயர்த்திக் காட்டுவதும் அடுத்த பள்ளிகளோடு ஒப்பிட்டு தேர்வு வெற்றிகளைன் விகிதாச்சாரம் அதிகப்படுத்துவதிலும் போட்டியிருப்பதால் அதிகமான பலுவை ஆசிரியர்கள் சுமந்து கொண்டு அதனை மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது.

ஆசிரியர் கண்டிக்க கூடாதா ? வீட்டில் தாய் கண்டித்தால் எதிர்த்து பேசுகிறது பிள்ளை அப்படின்னா வேறு யார்தான் கண்டிப்பது அந்த மாணவனை ?

பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பதில் அரசாங்கம் நிறைய கட்டுப்பாடுகள் வித்திருக்கிறது, பெற்றோர்கள் பயப்படத்தேவையில்லை அவர்கள் சித்திரவதைச் செய்யப்பட மாட்டார்கள். அதற்காக துப்பட்டியை தூக்கிப் போட்டுக் கொண்டு பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் சண்டையிட பெற்றோர்கள் செல்ல வேண்டியதில்லை. ஆசிரியர்கள் செய்வது உங்களின் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என்ற நோக்கில்தான்.

அதிரையில் கடந்த வருடம், ஆசிரியை ஒருவர் மாணவனை கண்டித்திருக்கிறார் அவர் எதிர்து பேசியிருக்கிறார் அதற்காக ஆசிரியர் என்ற உரிமையில் அடித்தார் என்பதற்காக அந்த மாணவனின் தாய் பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியை கேட்கக் கூடாத கேள்விகள் கேட்டு அங்கு சூழ்ந்திருந்த ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியிலேயே அசிங்கப்படுத்தியிருக்கிறார் இது தேவையா ?

தந்தையின் ரோல்தான் என்ன ? - அதிரை மக்களுக்கான ஆயிரமாயிரம் ஈட்டிகள் ஏந்திவரும் கேள்வி !

ஒரு பெண்ணாக நமது ஊரில் நடப்பவைகளை கவனித்தவைகளை இங்கே எழுதியிருக்கிறேன்.

இந்த கட்டுரையில் யாரையும் சாடாமல் எழுதுங்கள் என்று இருக்கிறது முடியவில்லை உண்மையைச் சொல்லியாக வேண்டும்.

-உங்கள் சகோதரி

Adirai Iqbal said...

நாம் இந்த சம்பவத்தை மாணவன் ஆசிரியரை கொலை செய்துவிட்டான் என்பதாக மட்டுமே பார்க்ககூடாது. சமீப காலமாகவே மாணவர்களின் தற்கொலை விகிதமும் அதிகமாகி வருவதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது . என்னை பொறுத்த வரையில் இந்த மாணவனின் செயலும் ஒரு வகையில் தற்கொலையே . பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களே இது போன்ற முடிவுகளை நோக்கி அவர்களை தள்ளுகிறது . தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தற்கொலை விகிதம் மொத்த தற்கொலையில் பத்து சதவிகிதமாகும் .
இந்த மாணவனின் செயல் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களை குறை சொல்லும் போக்கு காணப்படுகிறது .இத்தனைக்கும் அந்த மாணவனுக்கு எந்த தீய பழக்கமும் இல்லை என்றுதான் அந்த பள்ளியின் மாணவர்கள் கூறுகிறார்கள் .சாதாரணமாக மாணவர்களிடம் காணப்படும் டி.வி பார்த்தல் games விளையாடுதல் ஆகிய பழக்கவழக்கங்களே அவனிடம் காணப்பட்டுள்ளது . ( இதுவும் ஒரு வகையில் தீய வழியே )

தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட சமச்சீர் கல்வியால் ஆசிரியர்களுக்கு குறைந்த நாட்களில் அதிகமான பாடங்களை நடத்த வேண்டிய கட்டாயம் . ஆதலால் அவர்களும் மன அழுத்தங்களுக்கு ஆளாகிவிடுகின்றனர் . இதனால் மாணவர்களின் மீது அவர்கள் அதிக பாட சுமைகளை ஏற்றி விடுகின்றனர் .சில மாணவர்களால் அதனை தாங்கி கொள்ள முடிவதில்லை . இதனாலும் கூட இந்த விபரீதங்கள் ஏற்பட்டிருக்கலாம் .

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஒரு சிறுவனுக்குக் கொலைவெறி ஏற்பட அவன்மட்டுமே காரணமாக இருக்கமுடியாது.//

யா அல்லாஹ் எங்கள் குழந்தைகளையும்,சந்ததிகளையும்,ஒழுக்க முள்ளவர்களாகவும் சாலிகான குழந்தைகளாகவும்,ஆக்கி தந்து அவர்கள் விசயத்தில் நாங்கள் உண்மையான பொறுப்பு தாரிகளாக இருக்க எங்களுக்கு உதவி புரிந்தருள் வாயாக.

அவர்கள் விசயத்தில் உன்னிடம் நாங்கள் தோற்று விடாமல் எங்களை பாது காத்தருள் வாயாக.

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்
முன்பெல்லாம் ஒரு மாணவன் சைக்கிளில் செல்லும்போது ஓதி கொடுக்கும் உஸ்தாரோ(இப்ப ஹஜரத்ன்கிறோம்)அல்லது ஆசிரியரோ எதிரே வரும்போது,
உடனே இறங்கி சலாமோ,வணக்கம்ன்றோ சொல்லிவிட்டு முகத்தில் பயத்துடனும் கொஞ்சம சந்தோசமாக பல்லு தெரியிற வரைக்கும் காண்பித்துக்கொண்டு சிறிது நடந்து சென்று ஏறிபோவார்கள்.புதிதாக சைக்கிள்
பழகி ஏறமட்டுன்தெரிந்து,இறங்க தெரியாதவன்கூட அப்போதுதான் முதன்முதலாக இறங்க பழகியவனுமுண்டு.ஏனென்றால்,அவ்வளவு,மரியாதை
பயமிருந்தது.வீட்டில் கண்டிப்பு இல்லையென்றால் பள்ளியில் கண்டிப்பு இருந்தது.இப்போது ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கக் கூடாதென்று
அரசு கொண்டு வந்த சட்டத்தினால்தான் மாணவ சீரழிவு ஆகிவிட்டது.
வீட்டிலே கேட்காமலேயே தங்கள் பிள்ளைகளுக்கு செல்,பைக் கொடுத்து
விடுகிறார்கள். ஏது நாம கண்டிச்சதாலே நம்ம மேலேயே புள்ள பைக்கை
ஏத்திடுவானோ என்று ஆசிரியர்கள் பயந்து ஒளியிர காலமாகிவிட்டது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் இக்பால் அவர்களின் கருத்து மிக சரியே..

//தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட சமச்சீர் கல்வியால் ஆசிரியர்களுக்கு குறைந்த நாட்களில் அதிகமான பாடங்களை நடத்த வேண்டிய கட்டாயம் . ஆதலால் அவர்களும் மன அழுத்தங்களுக்கு ஆளாகிவிடுகின்றனர் . இதனால் மாணவர்களின் மீது அவர்கள் அதிக பாட சுமைகளை ஏற்றி விடுகின்றனர் .சில மாணவர்களால் அதனை தாங்கி கொள்ள முடிவதில்லை . இதனாலும் கூட இந்த விபரீதங்கள் ஏற்பட்டிருக்கலாம் . //

நான் தான் பள்ளியில் சிறந்த ஆசிரியராக வரவேண்டும் என்று ஆசிரியர்களுக்கு இடையே ஏற்படும் போட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை மாணவர்களிடம் காட்டுகிறார், இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமே இது போன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம்.

ஒரு குற்றம் குறிப்பாக மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அச்சிறுவனையும் பெற்றோரை மட்டும் குறை சொல்லுவது ஏற்புடையதல்ல.

மாணவர்களின் மன அழுத்ததிற்கு கல்வி நிறுவனங்களும் பொறுப்பு என்பதை பெற்றோர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். First Rank, All pass, State Rank, என்பது மட்டும் தான் கல்வியின் தரத்தை நிர்ணயிக்கிறது என்பது பொய் வாதம்.

இன்னும் ஆழ்ந்து சிந்தித்தோமையானால் இது போன்று நம் இளையோர்களின் குற்றம்செய்வதற்கு அவர்களின் பெற்றவர்களுக்கு மார்க்கத்தை போட்டி பொறாமையால் எத்திவைக்கு முறையில் எத்திவைக்க தவறியதும் இதற்கு காரணம். இதற்கு சமுதாய அமைப்புகளும் பொறுப்பு.

மார்க்க விழிப்புணர்வு விழிப்புணர்வு என்ற தோரனையில் சுயதம்பட்டங்களே மேலோங்கி தானும் இன்னும் திருந்தவில்லை, மக்களையும் திருத்தவுமில்லை, நேரவிரையமே மிச்சம்.இதில் யாரும் விதிவிலக்கல்ல..இஹ்லாஸ் எங்கு சென்றது என்று யாருக்கும் தெரியவில்லை.

அல்லாஹ் நம் சந்ததியை காப்பாற்றுவானாக...

இன்ஷா அல்லாஹ் கருத்து பரிமாற்றம் தொடரும்.

N.A.Shahul Hameed said...

Dear Brothers,
Assalamu Alaikkum!
I would like to record my humble opinion about the attitude change from among the younger generations today.
I think the system of education is to be reviewed. Currently when a baby is born, the parents start dreaming about the baby to become a doctor or an engineer or any good professional. They forget to think that their kid should become a good HUMAN, a good citizen.
We pay more importance to the materialistic benefits rather than the humanitarian aspects. So when the child attains the age of 3 we go to search for the good Nursery school which will provide quality education. By quality education we assume, speaking English words (sorry to say if the child uses bad words in English, the parents feel immensely happy too).
But our system of education also focuses on realizing the expectations of the parents because they also run the school as a business. They don't have he service in their mind. They bring in all subjects to the Primary level student what all subjects we had studied at our secondary or tertiary level. As a result the child has been forced to learn subjects although it has no interest on that particular area. We fail to include the importance of morals and values in the curriculum. The children are deprived of the good manners, courtesy, respecting the seniors, practicing the religious obligations and loving our mother land.
In my opinion the education system must be reviewed in such a way that includes religious and moral education at the primary level itself. By religious education the children can have good faith and practice discipline. By Moral education, the children can learn to treat other fellow human being as themselves.
The technology also has its impact on the attitude change. But whenever a new technology is introduced it has two sides like a coin. It is up to the institutions to guide the children to make use of the good effects of technology and to avoid its misuse.
Therefore the responsibility is on the parents, academic system as well as the society.
Wassalam
N.A.Shahul Hameed

அப்துல்மாலிக் said...

ஆசிரியர்-மாணவரிடையே புரிதல் இல்லாததே இதெற்கெல்லாம் முக்கிய காரணம். Technology யின் முன்னேற்றமும் முக்கிய பங்குவகிக்கிறது. 6 மாதத்திற்கு ஒரு முறையாவது ஓப்பன் ஹவுஸ் என்று சொல்லக்கூடிய பெற்றோர்-மாணவர்-ஆசிரியர் தனி சந்திப்பு (individual meet)அவசியமான ஒன்று.

Anonymous said...

அல்ஹாஜ் பேராசிரியர் N A சாகுல் ஹமீது அவர்களே, தங்களின் பின்னூட்டம் கருத்தை தமிழில் எழுதினால் எல்லோரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

அல்ஹாஜ் பேராசிரியர் N A சாகுல் ஹமீது அவர்கள் நம் கல்லூரியின் முன்னால் பேராசிரியர் மட்டுமல்ல. ஆரம்ப பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் முதல் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்கள் வரை, படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை வயது வித்தியாசங்கள் பாராது அனைவர்களிடமும் மிகவும் நெருங்கிப் பழகும் பண்பாளர்.

அல்ஹாஜ் பேராசிரியர் N A சாகுல் ஹமீது அவர்கள் நம் காதிர் முகைதீன் கல்லூரிக்கு முதன்முதலாக 1976 ல் பணிக்கு வந்தபோது, முதல் நாள் முதல் வகுப்பில் முதன்முதலாக அறிமுகமான மாணவன் நான். இவர் எனக்கு பேராசிரியர் மட்டுமல்ல. உற்ற நண்பர். உடன்பிறவா சகோதரர். வயது வித்தியாசம் பாராது அவ்வப்போது ஆலோசனை கருத்துப் பரிமாற்றம் கொள்ளும் அன்பாளர்.

இவரது அறிவுரைகள் இந்த விவாதக் களத்திற்கு கண்டிப்பாகத் தேவை. அதை தமிழில் தரவேண்டும்.

Noor Mohamed

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்றையச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பட பின்வரும் வழிகளை மேற்கொள்ளலாம்.

1. அன்பு காட்டுக,

அன்பே உலகில் வலிமையானதாகும். இந்திரகதியில் இயங்கும் இன்றையச் சூழலில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையான அன்புக்காக ஏங்குகின்றனர். தாயும், தந்தையும் பணிபுரிபவர்களாயின் அக்குழந்தைக்கு இருவரது அன்பும் கிட்டாது போய்விட வாய்ப்புள்ளது. பள்ளிக்கு வரும் மாணவனிடத்தில் ஆசிரியர் பாசமுடன் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் தவறுகள் செய்கின்ற போது அவை மனதில் படும் வண்ணம் சுட்டிக்காட்டி அன்பு வழியில் திருத்த வேண்டும். ஆசிரியர் தம்மீது அன்புகாட்டுகிறார் என்று உணரும் மாணவன் நல்வழியில் செல்ல ஆரம்பிக்கின்றான். ஆசிரியர் தாய்போன்று அன்பு காட்டி, தந்தை போன்று அனைத்துப் பேசி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை கூறுகிறார்.

2. அறிவுத்திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல் வேண்டும்,

அறிவுத் திறன் மிகுந்த மாணவர்களைப் பாராட்டி அவர்கள் மீது மட்டும் தனிக்கவனத்தை செலுத்துதல் கூடாது. அறவுத்திறன் மிகுந்த குழந்தைகளுக்குக் கற்பித்து அவர்களை மேலும் உயர்த்துவது சிறந்ததாகாது. அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்வடையச் செய்வதே சாலச்சிறந்தது.

அறிவுத் திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்பு தரக்குறைவாக நடத்துதல் கூடாது. அவர்களை அவ்வாறு நடத்தினால் அம்மாணவர்களின் கவனம் கல்வியில் செல்லாது. ஆசிரியர் மாணவர் உறவு பாதிப்படையும். மாறாக அறிவுத்திறன் குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும் போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அம்மாணவர்கள் கற்க ஊக்கமுடன் முயலுவதோடு, ஆசிரியர் மீது மிகுந்த மதிப்புடன் இருப்பர்.

3. மாணவர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குபெறல்,

ஆசிரியர் மாணவர் இருவரும் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளைமாடுகளைப் போன்றவர்களாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் தோல்வியுறும் போது வருந்துவர். அவர்களுக்கு உடல்சோர்வோ மனச்சோர்வோ ஏற்பட்டு அவர்கள் வருந்தும் போது அதனைத் தன்னுடையதாகக் கருதி அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர்களுடைய வருத்தத்தைத் தம்முடையதாகவும் கொண்டு அவர்களது துன்பத்திற்கு ஓர் ஊன்றுகோலாக அமைந்து அவர்களது நலம் நாடவேண்டும், அவ்வாறு செய்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு உன்னதநிலையை அடையும்.
மாணவர்கள் வெற்றி பெறும்போது அவர்களது வெற்றியைத் தம்முடைய வெற்றியைப் போல் கருதி மகிழ்ச்சிடையதல் வேண்டும், மாணவர்களைப் பாராட்ட வேண்டும்.
அவ்வாறு செய்தோமெனில் ஆசிரியர் கூறுகின்றவண்ணம் மாணவர்கள் மனமுவந்து நடப்பர். அவர்களது வெற்றியும் அலட்சியப்படுத்துதல் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களது வெற்றியில் பங்கு கொண்டு மகிழவேண்டும்.

5. மாணவர்களை ஊக்கப்படுத்துதல்;

அகல்விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பவர் பெரியோர். ஒவ்வொரு மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பைக் கொடுத்து ஊக்கமூட்டினால் அவர்கள் திறன்கள் வெளிப்படும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
அவர்களது திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது. திறமைகளைக் கண்டறிந்து அதனை வளர்த்தல் வேண்டும். “ஊக்கமே ஆக்கத்திற்குச் சிறந்த வழி” என்கிறார் விவேகானந்தர்.
திறமைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் அதிகம் விரும்புவர்.

6. மாணவர்களின் தவறுகளைக் களைதல்;

தவறு செய்வது மனித இயல்பு பல்வேறு சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும் பள்ளி வளாகத்திலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் மாணவர்கள் செய்யும்போது அவர்கள் அதை உணரும் வண்ணம் செய்து திருத்துதல் வேண்டும். அதற்கு மாறாக சிறிய குற்றங்களையே பெரிதாகக் காட்டி அதனை விமர்சித்தல் கூடாது. தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துதல் வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருத்தல் கூடாது. அது இருவரது உறவிலும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ளல் நலம் பயக்கும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களைப் பெரிதும் மதிப்பார்கள்.

அகமது அஸ்லம் said...

இது போன்ற நிகழ்வுக்கு அடிப்படையாக இருப்பது நமது நுகர்வுக்கலாச்சாரமும், இலாப நோக்கு கொண்ட கல்வி அமைப்புகளும் தான். அதனால் இரு முனை தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாமல் மாணவர் சமுதாயம் பெரும் மன அழுத்தத்தில் தவிக்கின்றது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கொடூற நிகழ்வு. இதன் காரண கர்த்தாக்கள் என்று பார்த்தால் அம்மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் (கொலையுண்ட ஆசிரியை அல்ல பொதுவாக), சமச்சீர் கல்வி பிரச்சனைக்கு காரணமான அரசியல்வாதிகள், எதிர்த்த கல்வி வியாபாரிகள், எதிர்ப்புக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்கள் வரை குற்றவாளிகள் கூண்டில் நிறுத்த முடியும்.

எது எபடி இருந்தாலும் ரேங்க் பட்டியலில் வருவதற்கும், 100-க்கு 100 எடுப்பதும்தான் சாதனை என்ற மாயையிலிருந்து எல்லாரும்( மாணவர்கள் உட்பட) விடுபட்டாலே மாணவர்கள் உண்மையான சாத்னையாளர்கள் ஆவார்கள்.

N.A.Shahul Hameed said...

Dear Noor Mohamed,
Assalamu Alaikkum!
நிச்சயமாக் எனது மனதில் என்னாலும் நிலைத்து நிற்கும் மாணவர் மற்றும் சகோதரர்களில் நீங்கள் முதல் இடத்தில் இருப்பீர்கள். ஏனென்றால் நான் முதன் முதலாக ஆசிரியனாகப் பணியேற்ற போது நீங்கள் அளித்த ஊக்கம் என்றும் என் நினைவில் நிற்கும்.
அ. நி யில் உங்களின் பங்களிப்பை வாசிக்கும் போது எல்லாம் உங்களின் அபாரமான நினைவாற்றலை எண்ணி நான் வியப்பதுண்டு.
உங்களின் ஆழமான சிந்தனையும் அற்புதமான எழுத்தாற்றலும் கவி நயமான சொல்லாற்றலும் என்னை ரொம்பவே கவர்ந்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் தமிழிலிலேயே என் எண்ணங்களைப் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

KALAM SHAICK ABDUL KADER said...

To-day I found the following points in a newspaper how the boy was grown up and what he was doing before killing his teacher:

1) His father is from Andhra Pradesh and settled in Chennai and he is wealthy man.
2) The boy was receiving pocket-money Rs: 100/= per day and his father gave to him expensive cameras and mobile phones. He used to come to school by car or bike.
3) After getting all of these facilities, the boy was not attending class and he was not quite up to the mark. Hence, his parents were informed that he was a debauched boy. Then his parents found the reason for his bad habits.
4) They took back all facilities from him and refused to give pocket money.
5) The boy got angry and assumed that the teacher is the one who stopped his luxury life; so, he tried to kill her with knife.
6) The day before the incident, the boy was watching Hindi film "AGNI PATH" 30 times and he decided to kill his teacher by learning ways and means from cinema.

Now, we can come to conclusion that PARENTS don't know how to deal with young boy. They should have followed Islamic ways how to behave with their child. This is a lesson for us and we should follow only Islamic ways while raising our own children.

After long time, Prof.NAS has come to meet us in Adirai Nirubar.

புதுசுரபி said...

இது சம்பந்தமாக, “இறைவா, எங்கே போகிறோம்?” என்ற தலைப்பில் தினமணி தலையங்கம் தீட்டியிருந்தது, அதற்கிட்ட பின்னூட்டத்தினையே இங்கும் பதிவது பொருத்தமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

இனி மேலாவது இந்த (இந்திய) அரசாங்கம் சினிமா மற்றும் தொ(ல்)லைக்காட்சிக்கு ஒரு வரைமுறை, கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றை நிர்ணயிக்கவேண்டும். குழந்தைகள் நிகழ்ச்சி என்ற பெயரில் இன்று வன்முறை, அடிதடி, வஞ்சம் தீர்த்தல், பழிவாங்குதல் - பாய் பிரண்ட் - கேர்ள் பிரண்ட் கலாச்சாரம், அடுத்தவரை கேலியும் கிண்டலும் செய்து, நகைச்சுவை என்ற நஞ்சு பிஞ்சு மனங்களில் கலக்கப்படுகிறது. பெரியவர்களுக்கோ " உள்ளதைத்தானே சொல்கிறோம்" என்ற போர்வையில் வக்கிர சிந்தனையோடு தயாரிக்கப்படும் சீரியல்கள். சமுதயத்தைப்பற்றி இம்மியளவும் அக்கறையில்லாத இவர்கள் இப்படி சம்பாதிப்பதும்; 'குடி' மகன்களுக்கு மதுவை அரசாங்கமே ஊற்றிக்கொடுப்பதும் அவலம். அந்த இரண்டையும் சாடியிருக்கும் உங்கள் தலையங்கம் அருமை. வளமையான - வலிமையான பாரதம் ஒன்றே எங்கள் இலட்சியம் என்று சொல்லும் அரசாங்கங்கள் -தாங்கள் சொல்வது உண்மையெனில், அவ்விரண்டுக்கும் வேட்டுவைக்கும் தரமில்லாத சினிமா , மது இவ்விரண்டையும் வேரோடு அழிக்க வேண்டும். By ரஃபீக்
2/11/2012 10:45:00 AM

KALAM SHAICK ABDUL KADER said...

To-day, the Doctor who is researching the boy's mental condition revealed in a newspaper that he was subject to the sense of ABSTRACT THINKING.

The idea of abstract thinking is growing between 14 and 19 years old boys in such a way that they will not listen elders' advices and imitate other who is dear to him. This is why he followed what he learned from cinema and killed his teacher.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.