Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 10 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 16, 2013 | , ,


தொடர் : பத்து
ஏக இறைவனுடன் ஏற்பட்ட ஒப்பந்தம்...

கடந்த சில வாரங்களாக உலகில் தோன்றிய பல மதங்கள் மற்றும் கோட்பாடுகளின் பொருளாதார பரிமாணங்களைக் கண்டு வந்தோம். நாம் கண்டவற்றுள்  பலவித குறைபாடுகள் புரையோடிப் போயிருப்பதையும் படித்து உணர்ந்தோம்.  முக்கியமாக,

மேலை நாடுகளின் முதலாளித்துவக் கொள்கைகள் மனிதனுக்கு வேண்டிய உயரிய வழிகாட்டுதல்களை, ஒழுக்க நெறிகளை வழங்கத்தவறி விட்ட வரலாறு கண் முன்னே  தெரிந்துவிட்டது. கீழை நாடுகளில் அரசாண்ட கம்யூனிசம் அழிவை அரவணைத்துக் கொண்டது. மேலை நாடுகளும் கீழை நாடுகளும் பொருத்தமான பொருளாதாரக் கோட்பாடுகளை தேர்ந்தெடுக்காத காரணத்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட அழிவுப் பாதைகளுக்கு வித்திட்டன. அமைதியான வாழ்வு அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. அறிவுத்துறையில் பல நாடுகள் பெற்றிருக்கும் வெற்றிகள் என்று கருதப்படுபவை மனித இனங்களை  ஒருவருக்கொருவர் அழித்துக்  கொள்ளவே பயன்பட்டன.   வளர்ச்சிகள் என்று கருதப்படுபவை மனித இனம் முழுமைக்கும்  பயன் பட வேண்டுமானால் ஓர் உன்னதமான வாழ்க்கை நெறி உலகம் முழுமைக்கும் உடனே தேவைப்படுகிறது என்பதை உலகம் சிந்திக்கத் தொடங்கி விட்டது. 

உலக மக்களை ஈடேற்றும் வாழ்க்கை நெறி நிச்சயமாக மனிதனின் இயற்கையான  இயல்புகளோடு ஒத்திருப்பதாகவும் மனிதனால் கடைப் பிடிக்கக்கூடிய இலகுவான தன்மை கொண்டதாகவும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மனிதனுக்குப் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். 

மனிதனுக்கு மனிதனால் உருவாக்கித்தரப்பட கோட்பாடுகள் அவனைக் குப்புறத்தள்ளி  குழி பறித்ததால் மனித மூளைகளால் உருவாக்கப்பட்ட தத்துவங்களும் கொள்கைகளும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து வரும் தோல்விகளால் தொய்ந்து துவண்டு நிற்கும் மனித  இனத்தை தூக்கி நிறுத்தி முன்னேற்றம் நோக்கி அழைத்துச்செல்லும் போற்றுதலுக்குறிய ஆற்றல் அமைந்திருக்கும் ஒரே கொள்கை இஸ்லாம்தான் என்பதை உலகம் உணரத்தொடங்கி இருக்கிறது. 

பொருளியலில் அரசியலில் புதுமை விஞ்ஞானமதில் அறிவியலில் இல்லறத்தில் ஆன்மீக நெறிமுறையில் யாராலும் கேள்வி எழுப்ப முடியாத சக்தியாக இன்று உலகெங்கும் இஸ்லாம் ஏற்கப்பட்டு வரப் படுகிறது.   இஸ்லாமியக் கோட்பாடுகளை  கடைப் பிடிக்கப்படும் நாடுகளின் செல்வச்செழிப்புகள், அமைதியான  வாழ்வு, ஒழுக்க நெறிகள் , தன்னிகரில்லா சட்டதிட்டங்கள் நம் கண்ணெதிரே சான்றாக நிற்கின்றன. இந்தக் கருத்தில் மிகைப் படுத்தல் இல்லை. இதை உலகம் ஒப்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.  

மனித இனம் படைக்கப் பட்டபோதே உள்ளூர ஆசைகளையும் தேவைகளையும் வைத்தே படைக்கப் பட்டிருக்கிறான்.  ஒரு தனி மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் அவனது தேவைகளில் ஆரம்பிக்கின்றன.   தான் உயிர் வாழ என்ன தேவை, உடனிருப்போருக்கு என்ன தேவை , சமுதாயத்தின் கண் முன்னால் வாழ்வதற்கு என்ன தேவை என்பவை மனிதனின் தேடலைத் தொடங்கி வைக்கின்றன. அதாவது, தேவைகள் அதன் மூலமாகத் தேடல்கள். தேவைகளைத் தேடும்போது தேர்ந்தெடுக்கப் படும் தேவைகள் அதாவது அவசியத்தேவைகள் என்பதும் ஆடம்பரத்தேவைகள் என்பதும் மனித மனங்களில் வகைப் படுத்தப் படுகின்றன.   இப்படி வகைப் படுத்துவதை மனிதனின் பொறுப்புக்கும் விருப்பத்துக்கும் விடாமல் அந்த மனிதனைப் படைத்தவனே வழிகாட்டுவதற்கே ஒரு மார்க்கம் தேவைப்படுகிறது. 

மனிதனைப் படைத்து அவன் துய்த்துக் கொள்ளவும்  அனுபவித்துக் கொள்ளவும்  பல  இன்பங்களையும் பல இயற்கை வளங்களையும் நுகர்வதற்குத்தக்க வசதிகளையும்  படைத்து போதனைகளைத் தந்து  நல்வழி காட்ட தனது தூதர்களையும் அனுப்பித் தந்து நல்லவைகளையும் கெட்டவைகளையும் பிரித்தறியும் பகுத்தறிவையும் தந்து மனித இனத்தின் மீது  தனது அருளை மா மழையாகப்  பொழிந்திருக்கிறான் வல்ல அல்லாஹ் .   

நாம் ஒன்றைப் பெறவேண்டுமானால் ஒன்றை செய்யவேண்டும் அல்லது இழக்க வேண்டும். தேவைகள் அல்லது ஆசைகள் (Needs & Wants) தேடல்களைத் துவக்குகின்றன என்று பார்த்தோம். தேடல்களை  துவக்கும்போது சில தியாகங்களை செய்ய நேரிடும். இதை பொருளாதார இயலின்  வார்த்தைகளில் உழைப்பு (Labour) என்று வைத்துக் கொள்ளலாம். உழைப்புக்குப் பரிசாகக்  கிடைப்பது கூலி (Wages ) . இந்தக் கூலியைக் கொண்டு நாம் எதை வாங்குவது என்று முடிவு செய்வது நம்மிடம் விடப்பட்டு இருக்கும் கேள்வி. இவை அனைத்துக்கும் இஸ்லாம் வழி காட்டுகிறது. 

எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும்  என்ன ? எப்படி? எதற்காக ? என்பனவற்றை  சீர்தூக்கிப் பார்த்தல் அவசியம். இந்த மூன்று கேள்விகளுக்கும் மனித இனம் மேற்கொள்ளும் மாறுபட்ட அணுகுமுறைகளே பொருளாதார நடவடிக்கைகளை  மேற்கொள்ள வைக்கின்றன. இவைகளுக்கும் இஸ்லாம் நல் வழி காட்டுகிறது. 

இஸ்லாமியப் பொருளாதாரம் மட்டுமல்ல  எந்தவகைப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக இருப்பது அல்லது அந்தப் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைப்பது ஒப்பந்தம் என்று சொல்லப் படுகிற காண்ட்ராக்ட்.   இந்த ஒப்பந்தத்தின் முதல் அம்சமாக இருப்பது அதாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற ஒரு மனிதனுக்கும் அல்லது சமூகத்துக்கும் இறைவனோடு ஏற்பட்டு இருக்கிற ஒப்பந்தத்தின் முதல் ஷரத்துத்தான் கலிமா  என்கிற ஒப்புதல் வாக்குறுதி. 

இந்த இறைவனோடு கூடிய ஒப்பந்தத்தில் என்னவெல்லாம் அடங்கி  இருக்கவேண்டுமென்று இறைவனே விதிக்கிறான். தனது அருள் மறையின்  அல்- பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே இந்த ஒப்பந்தத்தின் வரைமுறை நிர்ணயங்களை   (Terms & Conditions) இறைவன் வகுத்துக் காட்டி இருக்கிறான்.  

“இது அல்லாஹ்வின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இறையச்சம் உடையோர்க்கு இது சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் மறைவானவற்றை நம்புகிறார்கள் – மேலும் தொழுகையை நிலைபெறச்         செய்கிறா ர்கள்- நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவும்  செய்கிறார்கள்-      மேலும் உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் மீதும் , உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். இறுதித் தீர்ப்பு நாளின்  (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கிறார்கள். இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர் வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே வெற்றி பெறுபவர்கள்.” ( அத்தியாயம் 2 : 1-5.).

மேற்கண்டவைகள் இறைவனுக்கும்  மனிதனுக்கும்  ஏற்படுத்தப் படும் ஒப்பந்தத்தின் விதிகள்.  இந்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறாமல் நடப்பவனே இஸ்லாமியன்  என்கிற பட்டம் சூட்டப்பட்ட  மனிதனாகிறான். இதன்படி திரு குர்- ஆன் 

நிச்சயமாக  அல்லாஹ் வழங்கிய  அருள்மறை.
இறையச்சம் உடையோர்க்கு வழிகாட்டி.
மறைவானவற்றையும்  நம்ப வேண்டும் .
படைத்தவனைத் தொழவேண்டும்.
வழங்கப்பட்டதிலிருந்து செலவு செய்ய வேண்டும்.
இந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இதற்கு முன் வழங்கப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும்.
மறுமை நாள் என்ற ஒன்று உண்டு என்று நம்பவேண்டும்.

இதுவே ஒரு இஸ்லாமியனுக்கு இறைவன் வகுத்த அடிப்படை சட்டங்கள். ஆகவே இவைகளை ஒப்புக்கொள்கிற மனித சமுதாயம் தான் செய்கிற ஒவ்வொரு செயலையும் மேற்கண்ட சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே மீறாமல் நடக்கும்போது பொருளாதார நடவடிக்கைகள் முதலிய ஒவ்வொரு மனிதச் செயலிலும் இவைகள் பரிணமிக்க வேண்டும்.  

இதற்கு பதிலாக இறைவன் நமக்கு என்ன பதிலுக்கு  செய்கிறான் என்பதை இறைவனே தனது திருமறையில் குறிப்பிடுகிறான்  அல் ஹிஜ்ர் அத்தியாயத்தில் இப்படி 

“மேலும் நாம்  பூமியை விரித்தோம்; அதில் மலைகளை நாட்டினோம் . அதில் எல்லாவகையான தாவரங்களையும் மிகப் பொருத்தமான அளவில் முளைக்கச்செய்தோம். மேலும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம் உங்களுக்காகவும் நீங்கள் எவற்றுக்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய படைப்பினங்களுக்காகவும் ! எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட  அளவிலேயே நாம் இறக்கி வைக்கின்றோம். (அத்தியாயம் 15:19-25)  . 

நீங்கள் பார்க்கவில்லையா? வானங்களிலும்   பூமியிலும்  உள்ளவற்றை அல்லாஹ்  உங்களுக்கு வசப்படுத்தித்  தந்துள்ளான். மேலும்  தனது வெளிப்படையான மற்றும் மறைமுகமான அருட்கொடைகளை  அவன் நிறைவாக்கித் தந்துள்ளான். (அத்தியாயம் 31: 20).
   
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லின் பொருள் 'அடிபணிதல்', 'கட்டுப்படுதல்' 'கீழ்ப்படிதல்' ஆகியவை என்று அறிந்து இருக்கிறோம்.  படைப்பாளனாகிய இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் இஸ்லாம். 

இஸ்லாம் என்றச் சொல்லுக்கு 'அமைதி' என்றொரு பொருளும் உண்டென்றும் படித்திருக்கிறோம். இறைவனின் கட்டளைகளுக்கேற்ப அமையும்  வாழ்க்கையில்தான் உடலும் உள்ளமும் அமைதி பெறும் என்பதையே இப்பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம். மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் அவனின்  மன மகிழ்ச்சியை நோக்கியே  செல்கின்றன என்பது அடிப்படைப் பொருளாதார விதி. 

ஆகவே இஸ்லாம் காட்டும் பொருளாதாரக் கோட்பாடுகள் இவ்வுலகில் வாழும் காலம்வரை இறைவனால் நமக்கு காட்டப்பட்ட வழிகள்; இறைவனின் திருத் தூதரால் நடத்திக் காட்டப்பட்ட முறைகளே ஆகும். இறைவனுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி அவனுக்கும் அவனுடைய கட்டளைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் கீழ்ப்படிந்து  இறைவனால் பொருந்திக் கொள்ளக்கூடிய நல்ல காரியங்களையும்  நடவடிக்கைகளையும்  மேற்கொள்வதும் இறைவனுக்குப் பொருத்தமில்லாத காரியங்களை விட்டுத் தவிர்த்து ஒதுக்கி வாழ்வதுமே நமது கடமை மற்றும் நெறி முறை. 

உண்மையில் உலக வாழ்வு என்பது குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே நீடிக்கும்  தேர்வுக்கூடம். இந்த தேர்வுக்கூடத்தில் இறைவன் உண்டாக்கித்தந்திருக்கிற வாழ்க்கை வசதிகளை வைத்து தேர்வு எழுதிய பிறகு மீண்டும் அவனிடமே நாம் திரும்பி செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போது நமது உலக வாழ்வின் செயல்களை பரிசீலித்து அதற்கேற்ற பயன்களை  நமக்கு வழங்க இருப்பவனும்  இறைவனே.

உலக வாழ்வில் வழங்கப் பட்டுள்ள சுதந்திர காலத்தில் எண்ணங்களில், இதயங்களில் மார்க்க கடைப்பிடிப்பு முறைகளில், குடும்ப உறவு முறைகளில் , வாழ்க்கைப் பிரச்னைகளில், செல்வத்தை சேர்ப்பதில், செலவு செய்வதில், நீதி வழங்குவதில், திருமண ஒப்பந்தங்களில், சொத்துப் பங்கீடுகளில், வியாபார பரிவர்த்தனைகளில், பரிமாற்றங்களில், அண்டை அயலாரோடு உறவு வைத்துக் கொள்வதில், இப்படி வாழ்வின் எல்லாத்துறைகளிலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களே வாழும்.  இறைவனின் கட்டளைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு கட்டளைகளுக்கு மாறான செயல்களை தற்காலிக பொருளாதார சுகத்துக்காக  செய்தால் நிரந்தர சுகமான மறுமையில் தோல்வி அடைய நேரிடும்.  இந்த உண்மையை மனதில் உறுதியாக ஏற்றுக் கொண்டு நேரிய செயல்களை மேற்கொண்டால் மட்டுமே ஜன்னத் என்கிற நிலையான வீடு  சொந்தமாகும். 

இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படும் உண்மைகளையும்  மனதில் இருத்தியே உண்மை இஸ்லாமியர்களும், இஸ்லாமிய நாடுகளின் அரசுகளும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில் இறைவன் வகுத்துள்ள பொருளியல் தொடர்பான கோட்பாடுகள் யாவை என்பதை இன்றைய அரசியல் பொருளாதார நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தொடர்ந்து பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ். 
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

16 Responses So Far:

Unknown said...

பதிப்புக்கு நன்றி
பொருளாதாரத்தின் பரிமாணம் இஸ்லாமிய பொருளாதாரமே என்று உரக்க சொல்லும் தொடர்.ஆதிக்க சக்திகளின் அரவணைப்பில் பொருளாதாரத்தின் புரிதல்,கீழை நாடுகளின் வளத்தை சுரண்டி சொகுசு வாழ்க்கை,ஆயுதத்தை கொண்டு அடக்கி ஆளும் ஆதிக்க சக்திகளும் அதனை முறியடிக்க இஸ்லாமிய பொருளாதரத்தை பற்றி படிக்க வேண்டும்.தொடர்ந்து படிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தொடர் இப்ராஹிம் அன்சாரி காக்காவின் எழுத்து பணி தொடர வல்ல ரஹ்மான் அருள் புரியட்டும்
------------------------
இம்ரான்.M.யூஸுப்

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,

Your inroduction of basics of Islam for financials and economics of human beings starting with a contract of Shahadah.

God Almighty has created this universe and all the living organisms including human beings are obeying Him implicitly and explicitly by their undetermined birth by themselves((we)they didn't know that they would come to exist in this world) and undetermined death by themselves(no one has control over their death).

What I mean by above statement is that even without explicit contract as an oath, all human beings live in this world are covered under the laws of nature like earth gravity and laws of financials and economics, etc., Al Hamdu Lillahi Rabbil Aalameen.

For example if one is falling from 50 storey building is coming down as per the gravitational law. Similar to this a person living obeying to the laws will be safer, violating ends in wrong result and leads to experience punishment.

I recommend and invite non-muslim brothers and sisters to go through these series of articles (observe the laws for your benefits) would get reliable knowledge about financials and economics in the view of Islam, which is having universal nature and acceptable to logic.

May Almighty Allah guide us through straight path.

Thanks and best regards,


B. Ahamed Ameen from Dubai.

http://www.dubaibuyer.blogspot.com




Anonymous said...

பொருளாதாரத்தை பற்றி அழகிய கட்டுரை ஒன்று இங்கு வடிவமைத்து உள்ளீர்கள். நாம் பொருளாதாரத்தை பற்றி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோமே தவிர அதை நடைமுறை படுத்துவதில்லை. அதைப்போல் நாம் இஸ்லாமிற் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் இறைவன் தந்த உண்ணும் உணவுகளை எப்படி எல்லாம் வீணாக்குகிறோம் என்று. எத்தனையோ நாடுகள் உன்ன உணவுகள்,உடுத்த உடைகள் இல்லாமல் தவிக்கின்றன இதை சற்று சிந்தித்து பார்த்தால் நமக்கு உணவுகளை வீண் செய்வதற்கு மனம் வராது.

இறைவன் நமக்கு எவ்வளவோ பொருளாதாரத்தை தந்து கொண்டியிருக்கிறான் அதற்கு நிகராக நாம் எப்படி நன்றி செலுத்துகிறோம் என்று எண்ணி பார்க்க வேண்டாமா? இறைவன் கொடுத்த பொருளாதாரத்திலிருந்து அரபு நாடுகளில் எவ்வளோ வீண்,விரயம் செய்கிறார்கள் இங்கு உணவுகளை மிக அதிகமாக வீணாக்குகிறார்கள். அல்லாஹ் தன்னுடைய வேதங்களாகிய குர் ஆனிலும்,ஹதீஸ்களிலும் தெல்லத் தெளிவாக சொல்லிவிட்டான் உண்ணுங்கள்,பருகுங்கள் ஆனால் வீண் விரையம் செய்யாதீர்கள் என்று.

KALAM SHAICK ABDUL KADER said...

மனிதர்களின் சட்டங்கள் மாற்றப்படலாம்;இன்னும் புதிதாக “கூட்டு மனசாட்சி” என்ற புரிந்து கொள்ள முடியாத சட்டங்களால் வதைக்கப்படலாம். ஆனால், அல்லாஹ்வின் சட்டங்கள் மாற்றப்படா. இறுதி வேதம் என்பதன் உட்பொருள்- இறுதி வடிவம்- மாற்றவே இயலாத ஒரே சட்டம் என்பதால் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் மனிதனின் கொள்கைக்கும், மனிதனைப் படைத்த இறைவனின் கொள்கைக்கும் உறுதியாக வேறுபாடுகள் பல உள. இவ்வாக்கத்தின் பயணம் அத்தகைய இலக்கை நோக்கியே பயணிக்கும் என்று நம்புகிறேன். அல்லாஹ் நாடினால் முனைவர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களை peace convention போன்ற மாநாடுகளில் “இஸ்லாமியப் பொருளாதாரம்” பற்றிப் பேச நல்லதொரு வாய்ப்பை வழங்கினால், இவர்களின் ஆக்கப் பூர்வமான இவ்வாக்கம் உலக அளவில் எத்தி வைக்கப்படும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உங்களின் கருத்தோடு ஒத்துப் போகக் கூடியவனே நான்....

//இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படும் உண்மைகளையும் மனதில் இருத்தியே உண்மை இஸ்லாமியர்களும், இஸ்லாமிய நாடுகளின் அரசுகளும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில் இறைவன் வகுத்துள்ள பொருளியல் தொடர்பான கோட்பாடுகள் யாவை என்பதை இன்றைய அரசியல் பொருளாதார நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தொடர்ந்து பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ். //

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
////இறைவனுக்கும் மனிதனுக்கும் ஏற்படுத்தப் படும் ஒப்பந்தத்தின் விதிகள். இந்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறாமல் நடப்பவனே இஸ்லாமியன் என்கிற பட்டம் சூட்டப்பட்ட மனிதனாகிறான்.////

இதுதான் உண்மை!

ஏக இறைவனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றிய அழகிய, தெளிவான விளக்கங்கள்! வாழ்த்துக்கள்!

Adirai pasanga😎 said...

//மனிதனுக்கு மனிதனால் உருவாக்கித்தரப்பட கோட்பாடுகள் அவனைக் குப்புறத்தள்ளி குழி பறித்ததால் மனித மூளைகளால் உருவாக்கப்பட்ட தத்துவங்களும் கொள்கைகளும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து வரும் தோல்விகளால் தொய்ந்து துவண்டு நிற்கும் மனித இனத்தை தூக்கி நிறுத்தி முன்னேற்றம் நோக்கி அழைத்துச்செல்லும் போற்றுதலுக்குறிய ஆற்றல் அமைந்திருக்கும் ஒரே கொள்கை இஸ்லாம்தான் என்பதை உலகம் உணரத்தொடங்கி இருக்கிறது. //

இதனை உணர்ந்து செயல் பட்டதால் அறியாமைக்காலத்தில் இருந்த அக்கால மக்கள் இறைவனின் பொருத்தத்தை அடைந்து உயர்ந்த வாழ்வினை ஈருலகிலும் கண்டார்கள், உணர மறுப்பதால் என்னதான் விஞ்ஞான முன்னேற்றத்தில் உச்சிக்கு சென்றாலும் எல்லாமே வீண்தான். அழிவுதான் மிஞ்சும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாமிய பொருளாதார சிந்தனையில் இத்தொகுப்பு மைல் கல்!

ஏக இறைவனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றிய அழகிய, தெளிவான விளக்கங்கள்! வாழ்த்துக்கள்!

Iqbal M. Salih said...

அல்லாஹ் நாடினால் முனைவர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களை peace convention போன்ற மாநாடுகளில் “இஸ்லாமியப் பொருளாதாரம்” பற்றிப் பேச நல்லதொரு வாய்ப்பை வழங்கினால், இவர்களின் ஆக்கப் பூர்வமான இவ்வாக்கம் உலக அளவில் எத்தி வைக்கப்படும்.//

கவியன்பனை நான் வழிமொழிகிறேன்!

ZAKIR HUSSAIN said...

இஸ்லாமியப்பொருளாதாரத்தை அடிப்படையாக நடத்தப்படும் வங்கிகள் / இஸ்லாமிய இன்சூரன்ஸ் [ TAKAFUL ] இதுவரை எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் லாபகரமாகவே நடத்தப்படுகிறது.


1984 ல் நிறுவப்பட்ட Islamic Financial sectors இதுவரை இரண்டு பொருளாதா வீழ்ச்சியிலும் [ 1987 / 2002] பாதிக்கப்படவில்லை.

KALAM SHAICK ABDUL KADER said...

//கவியன்பனை நான் வழிமொழிகிறேன்!\\

ஜஸாக்கல்லாஹ் கைரன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பொருளியலில் அரசியலில் புதுமை விஞ்ஞானமதில் அறிவியலில் இல்லறத்தில் ஆன்மீக நெறிமுறையில் யாராலும் கேள்வி எழுப்ப முடியாத சக்தியாக இன்று உலகெங்கும் இஸ்லாம் ஏற்கப்பட்டு வரப் படுகிறது. இஸ்லாமியக் கோட்பாடுகளை கடைப் பிடிக்கப்படும் நாடுகளின் செல்வச்செழிப்புகள், அமைதியான வாழ்வு, ஒழுக்க நெறிகள் , தன்னிகரில்லா சட்டதிட்டங்கள் நம் கண்ணெதிரே சான்றாக நிற்கின்றன. இந்தக் கருத்தில் மிகைப் படுத்தல் இல்லை. இதை உலகம் ஒப்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. //

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

உண்மை..

இந்த நிலையை பொறுக்காத யூத நசாராக்கள் அன்றும் இன்றும் சூழ்ச்சிகள் தவிடு பொடியாகி வருகிறது. இருப்பினும், சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பிரதேசதங்களில் முறையாக இஸ்லாமிய அடிப்படையில் பொருளாதாரம் மற்றும் தண்டனை சட்டங்களும் கடைபிடிக்கப்பாடு வருகிறது என்பதை அண்மையில் இணையச் செய்தி ஒன்றி படிக்க நேரிட்டது.

Yasir said...

இஸ்லாமிய பொருளாதார சிந்தனையில் இத்தொகுப்பு மைல் கல்!

ஏக இறைவனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றிய அழகிய, தெளிவான விளக்கங்கள்! வாழ்த்துக்கள்!

Abu Easa said...

இஸ்லாமிய பொருளாதார சிந்தனையில் இத்தொகுப்பு மைல் கல்!

ஏக இறைவனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றிய அழகிய, தெளிவான விளக்கங்கள்! வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

அன்பான சகோதர்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

ஸலாம் கூறிய தம்பி அஹமது அமீன் , தம்பி தாஜுதீன், அதிரை நிருபரின் அருமருந்து அலாவுதீன் ஆகிய அனைவருக்கும் அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி.

அன்பின் சகோதரர்கள் அனைவரின் கருத்துரைகளும் இத்தொடரை இன்னும் சிறப்பாக எழுதிச்செல்ல தூண்டுகோலாக இருக்கும்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன். அனைவரின் து ஆவையும் எதிர் பார்க்கிறேன். இத்தகைய ஒரு பேசு பொருளை எடுத்து எழுதும்போது வீண் விவாதங்கள் வந்துவிடக் கூடாது என்கிற அச்சத்தோடும் இறையச்சத்தோடும் எழுதுவதால் மிகவும் பொறுப்புடனும் ஆதாரங்களைத் தேடிப் படித்தும் எழுத வேண்டி இருக்கிறது.

இன்னும் பயணிக்க வேண்டிய பாதை நீண்டதாக தென்படுகிறது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரின் து ஆக்களை தேட்டப்படுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

உங்களின் கருத்தோடு ஒத்துப் போகக் கூடியவனே நான்....
masha ALLAH

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.