Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலேசியா - TRULY ASIA 37

ZAKIR HUSSAIN | March 13, 2013 | , ,

எப்போது பார்த்தாலும் மலேசியாவை காண்பிப்பது என்றால் அந்த இரட்டை கோபுரத்தைத்தான் காண்பிக்கிறார்கள்.. அந்த பெட்ரோனாஸ் ட்வின் டவருக்கு அடிக்கடி போய் வருவதால் [பொழப்புதான்] அது என்னவோ எனக்கு அவ்வளவு ஸ்வாரஸ்யமாக தெரியவில்லை. 

அந்த செயற்கை அழகை மீறிய ஒரு அழகு மலேசியாவுக்கு இருக்கிறது.

கேமரன் ஹைலேன்ட் எனும் இந்த இடத்தில் அதிகம் காய்கறிகள் / தேயிலை விளைகிறது. போகும் போதெல்லாம் மறக்காமல் குளித்து விட்டுப்போக இந்த அருவி. முதலில் காலை வைத்தவுடன் நடுக்கும் குளிரில் லேசாக பற்கள் டைப் அடிக்கும்.

cameron water fall
…………………………………………………………………………………………………………

பினாங்கு போகும்போது ஹைவேயில் நின்று போட்டோ எடுக்க முடியாத இடத்தில் இருக்கும் இந்த இடம். [வரும் கார்கள் எப்போதும் பயமுறுத்தும் வேகத்திலேயே பறப்பார்கள்]. சமயங்களில் கும்பகோணம் - கொரடாச்சேரி ரூட்டை ஞாபகப்படுத்தும். ஒரு காலத்தில் பட்டுக்கோட்டை முருகையா தியேட்டர் பக்கத்தில் இப்படித்தான் தண்ணீர் ஒடும்... இன்னும் இருக்கிறதா?

selama area
…………………………………………………………………………………………………………

பழமையை விரும்பும் அனைவரும் பினாங்கை விரும்புவார்கள். நமது முன்னோர்கள் பிழைப்பிற்காக வந்து விட்டுச்சென்ற அத்தனை நினைவுகளும் பினாங்கில் காலை நேர தேநீரை ரோட்டோர கடையில் குடித்து சாலைகளில் நடந்தால் அத்தனை நினைவுகளும் நம் நிழலுடன் ஒட்டி வரும்.

Morning Penang
…………………………………………………………………………………………………………

காலை நேரத்து பினாங்கு மார்க்கெட் [சவுராஸ்ட்ரா மார்க்கெட்] இடித்துக் கொள்ளாமல் நடப்பது கஸ்டம். இருப்பினும் மக்கள் இன்னும் 'சாரி / தேங்க்ஸ்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் சவூதியிலும் அந்த வார்த்தைகள் வழக்கொழிந்து போனதை நான் பார்த்தேன்.

Chowrastra market
…………………………………………………………………………………………………………

Rickshaw foto

ஓய்வெடுக்கும்    ரிக்ஷாக்கள், தூரத்தில் ஓய்ந்து போன மனிதர்.
…………………………………………………………………………………………………………

Penang Highway

காலை 8 மணிக்கு காரை ஓட்டிகொண்டே எடுத்த இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது. மேகத்தை எப்படி படம் எடுத்தாலும் ஒரு குழந்தையின் சிரிப்பு மாதிரி அழகாவே இருக்கும்.

மலேசியா முன்னேர மிக முக்கிய காரணங்களில் ஒன்று இது போன்ற  Infra Structure விசயத்தில் 1980 களிலேயே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தியது.
…………………………………………………………………………………………………………

Clear Beach

மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெரும்பாலும் இந்த க்ரிஸ்டல் க்ளியர் கடற்கரைகளை பார்க்கலாம். கடல் அழகைப்போல் ஆழமும் அதிகம்.

ZAKIR HUSSAIN

37 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

குழந்தையின் சிரிப்பு மாதிரி அழகான வார்த்தைகளும் அதையும் மிஞ்சும் படங்களும் ரொம்ப நல்லாயிருக்கு.

வண்ண வாழ்த்துக்கள் காக்கா!
---------------------------------------------------------------------------------------------------
ரபியுள் ஆகிர் 30 / ஜமாத்துல் அவ்வல் 1
ஹிஜ்ரி 1434

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனதை மயக்கும் மலேஷியா !
அழகை அனிகலனாக அணிந்திருக்கும் மலேஷியா !

அருமையான கலைப்படைப்பு !

இதற்கென்று ஒரு அணி வரும் கவிதையால் வசீகரிக்க ! அதற்கு கிரீடமும் இருக்கும் !

Adirai pasanga😎 said...

அருமையான போட்டோக்கள், இப்படிப்பாக்கவே இத்தனை அழகாக இருக்கிறதே, நேரில் பார்த்தால் சுப்ஹானல்லாஹ், மயக்கும் அழகு..

மேலே உள்ள போட்டக்களை பார்க்கும் போது கோலா லம்பூரில் தம்பி ரிஜ்வானுடன் கென்டிங் சென்றது நினைவுக்கு வருகிறது. அப்பப்பா மனதை மயக்கும் கொள்ளையழகு - மலேசியாவின் இயற்கை அழகு சென்றவர்களுக்கு ஒரு மறக்கமுடியா நினைவை ஏற்படுத்தும்

Ebrahim Ansari said...

மலேசியா போயிருந்த போது கோலாலம்பூரிலிருந்து பினாங்கு செல்ல விமான டிக்கெட் இருந்தும் காலை வேலையில் சாலை அழகை ரசிப்பதற்காகவே பஸ்சில் பயணம் செய்து பட்டர்வோர்த் என்கிற இடம் வரை சென்று அங்கிருந்து பெரியில் பினாங்கு சென்றது மறக்க முடியாத அனுபவம்.( இப்படி செய்யச்சொல்லி ஒரு அட்வைஸ் இருந்தது)

செல்லும் வழியில் பகல் உணவுக்காக பஸ் நிறுத்தப் பட்ட இடத்தில் வகை வகையான உணவு வகைகளை சுத்தமாக பரிமாறுவதை நமது சேத்தியாத்தோப்பு, திண்டிவனம், விக்கிரவாண்டி ஆகிய ஊர்களில் நடுவழி ஹோட்டல் வைத்திருப்பவர்களைக் கூட்டிக்கொண்டுபோய் காட்டவேண்டும்.

கொத்துக் கொத்தாக பக்கத்தில் உள்ள தோட்டங்களில் அப்போதே பறித்து விற்பனைக்கு வைத்து இருந்த பழங்களை வாங்கிவைத்துக் கொண்டு வழிநெடுக சாப்பிட்டுக் கொண்டே பயணித்ததும் மறக்க முடியாதது.

மலேசியாவில் பல காலம் வாழ்ந்து விட்டு ஒய்வு பெற்று ஊருக்கு வந்து செட்டில் ஆகிறவர்கள் எடுத்ததெற்கெல்லாம் " இங்கேதான் இப்படி அங்கே அப்படி இல்லை " என்று புலம்புவதெல்லாம் சும்மா இல்லை. ஒரு 'லோடு ' காரணங்க'ளோடு'தான்.

sabeer.abushahruk said...

ஜாயிரு,

இவ்ளோவ் மலேசியாவையும் எதிர்வரும் மே 2 மற்றும் 3 தேதிகளில் நான் உன்னுடன் இருக்கும்போது எப்படி காட்டி முடிக்கப் போகிறாய்?

எனது மறக்க முடியாத பயணங்களில் முன்னிருக்கைகயில் நானிருக்க பின்னிருக்கைகளில் நம் மனைவியர் இருக்க நீ வண்டி ஓட்டிச் சென்று வந்த கோலாலம்புர்-பினாங்க் பயணமும் ரவுன்ட் தி ஐலேன்டும் குயின் ஸ்ட்ரீட்டும் மூடா லேனும் மறக்க முடியாதவை.

அத்தோடு அந்த 22 வருடங்களுக்கு முன்பதான நம் வயதோ மீள முடியாதது.

அப்போது கண்டு வந்தவைப் பாற்றி இப்ப கேட்டால் நீ கடுப்பாகி கால எந்திரத்தை நாடச் சொல்லலாம்.  இருப்பினும்... கேட்டு வைக்கிறேனே.

(பி.கு.: துரியான் பழத்தை நான் உட்டடிச்சு சாப்பிட்ட பிறகும் பொறுமை காத்த எங்கூட்டம்மாவின் சகிப்புத்தன்மை மெச்சத்தக்கது)

Ebrahim Ansari said...

//இதற்கென்று ஒரு அணி வரும் கவிதையால் வசீகரிக்க ! அதற்கு கிரீடமும் இருக்கும் !//

எடிட்டர் தம்பி புரிந்துகொண்டோம். எதிர்பார்க்கிறோம்.

அப்துல்மாலிக் said...

மலேசியா என்றால் பில்டிங்கும், ரோடுகளையும் கடந்து ஏதோ நிறைய் இருக்கு என்று படம் போட்டு காட்டிருக்கீங்க. முக்கியமா பினாங்கு எம் முன்னோர் சம்பாத்தியத்தை நினைவு படுத்தியது, வாழ்த்துக்களும் நன்றியும் ஜாகிர்காக்கா

sabeer.abushahruk said...

நாற்பத்தி ஐந்து குயின் ஸ்ட்ரீட்டில்
அதிரை ராஜாக்களின்
நடமாட்டம் தொடர்கிறதா
நடை ஆட்டம் தீர்ந்ததுவா
 
எட்டாம் எண் மூடா லேனில்
ட்ரெங்க்குப் பெட்டித் தலையணையும்
அட்டைப்பெட்டிப் படுக்கைகளும்
வழக்கொழிந்து  போயினவா
 
உள்ளங்கால்களின் அச்சில்லாத
ரப்பர் செருப்புகள்
புழக்கத்தில் உள்ளனவா
 
மஞ்சள் பூக்காத
கஞ்சிப் பிராக்குகளும்
க்ளிப்புகள் கழறாத
பச்சை வார்களும் 
காணக்கிடைக்கின்றனவா

குடும்பம் தழைக்க
வாழ்க்கையைத் தொலைக்கும்
சபுராளி வம்சங்கள்
சந்தையில் அருகியதா
 
உன்னையும் என்னையும்
வளர்த்தெடுத்த
மலேசிய ரிங்க்ட்டின்
மவுசு கூடியதா?
 
பூமிப்புத்திரர்களின்
சுயநலம் குறைந்ததா
இந்திய வம்சாவழிகளுக்கு
வாழ்க்கையைத் தொடர
உத்தரவாதம் உறுதியானதா
 
மீ கொரிங்க் ரெசிப்பியில்
மாற்றமேதும் உண்டா?
 
மலேசியச் சட்டையில்
ட்ராகன் எண்ணிக்கைக் கூடியதா
 
எல்லாவற்றிற்கும் மேலாக
சீனச் சகோதரிகளின்
உடை வளர்ந்ததா
மலாய்க்காரர்களின்
உள்ளம் திறந்ததா?

sabeer.abushahruk said...

ஜாகிர்,
 
ஹய்யா…
 
நெடுஞ்சாலையின் நீட்டத்தில்
காத்திருக்கும் மேகங்களின்
கையிருப்பில்
மழைத்துளிகள் இருக்கும் அல்லவா
 
அதன்
பூவிரிப்பில் உட்புகுந்து
ஓட்டுகையில்
உன் ஊர்தி
ஓடுமா உருகுமா
 
ஹய்யா…
 
எங்களூர் மலைமகள்
சீஸனில் மட்டுமதான்
கூரைப் புடவையளவில்
அருவி ஆடை அணிவாள்
 
மற்றைய தினங்களில்
மாடர்ன் ட்ரெஸ்தான்
 
உங்கூரு அருவி
ஒழுக்கமானதோ?
அடர்த்தியான புடவையாகவே
அருவி கொட்டுகிறது!
 

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இவ்வுலக மாயையில் மனிதன் நவீனம் என்று சொல்லி என்னதான் பல மாற்றங்களையும், பித்தலாட்டங்களையும், கலப்படங்களையும் சேர்த்துக்கொண்டாலும் இறைவனின் அத்தாட்சிகளாய் இருக்கும் அவன் படைப்பான அந்த இயற்கை அன்று போல் என்றுமே அடக்கத்துடன் அமைதியாய் அழகுடன் அதன் வழியில் இருந்தே வருகிறது என்ற சிந்தனையை இக்கணம் ஜாஹிர் காக்காவின் இவ்வரிய புகைப்படங்கள் எம்மை நினைக்கத்தூண்டுகின்றன.

இதுவரை மலேசியா பக்கம் வர இறைவன் நாடவில்லை. இனி வரும் காலங்களில் நாடுவானா? எனத்தெரியவில்லை. எனவே நேரில் காண நிச்சயமில்லாத காட்சிகளை நிழற்படமாய் தாங்கள் அவ்வப்பொழுது காணத்தர தவறாதீர்கள் என்பதே எம் அன்பான வேண்டுகோள்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. ZAKIR HUSSAIN, 'a picture is equivalent to thousand words' is proved well by your beautiful pictures and short description about Malaysia where my father, grand father too had been earning their living. Wishing to visit there sooner or latter, InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai

www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...

அ.நி: உங்காள்ட்ட சொல்லி வைங்க, என்னய ஸ்கிப் பண்ணிட்டு ஏற்புரை எழுதுற டகால்ட்டி வேலையெல்லாம் வேணாம்; ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டிருக்கேன் எல்லாத்துக்கும் பதில் வந்தாகனும் ஆமா.

sabeer.abushahruk said...

//ஓய்வெடுக்கும்    ரிக்ஷாக்கள், தூரத்தில் ஓய்ந்து போன மனிதர்.

ஓய்வெடுக்கும் ரிக்ஷா
ஓய்ந்துபோன மனிதர்
வெகு தூரத்தில் வாழ்க்கை!

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

கவிதை கவரேஜில் விடுபட்டவையாக நான் கருதுபவை.

பட மோடை = தியேட்டர்
குஸ்ணி = சமையல் கட்டு
சாமான் கூடு = டாய்லெட்
பசியாற= காலை உணவு
தண்ணீ = தேநீர்
வங்குசா கடை = மளிகைக் கடை
அஞ்சடி = திண்ணை
கோத்தா= பாக்கெட்
வக்குலு = கூடை

இன்னும் இருக்குமே.

Anonymous said...

இந்த போட்டோவை பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது. நான் மலேசியா ஏர்போட்டு வரைக்கும் வந்து இருக்கிறேன் ஆனால் மலேசியா உள்ளே வரவில்லை. ஜாகிர் காக்கா அவர்கள் போட்டோவை அனுப்பிக்கொண்டு இருந்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்போம்.

நாங்கள் எல்லாம் மலேசியாவிற்கு வந்து உங்களை பார்ப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும். அந்த காலத்தில் ரிக்ஷாக்கலும்,மாட்டுவண்டிகளும்,குதிர வண்டிகளும் நிறைய இருந்தன இந்த காலத்தில் அது எல்லாம் மறைந்து போய்விட்டன.

Ebrahim Ansari said...

//உள்ளங்கால்களின் அச்சில்லாத
ரப்பர் செருப்புகள்
புழக்கத்தில் உள்ளனவா// அதாவது கித்தா செருப்பு.

மலேசியா! நம்மில் பலரை சோறு போட்டு வளர்த்தநாடு! வாப்பா வந்து பொட்டி பிரித்தால் கசங்கி இருந்தாலும் காலையில் பள்ளிக்கூடம் போட்டுக்கொண்டு போகவைக்கும் அந்த புதுசட்டைகள்.

பிஸ்கட் டின்னை உடைக்கிறேன் என்று அவசரத்தில் தகரத்தில் கையைக் கிழித்துக்கொண்ட பலரின் கைகளில் இன்னும் அந்தத் தழும்பு இருக்குமே.

பார்சலில் வரும் ஹார்லிக்சை கலக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன் என்று அள்ளி சாப்பிட்டு சாப்பிட்டு உதடுகளில் ஒட்டிக்கொண்டு உதிர மறுப்பதை நாக்கால் நக்கிய நினைவுகள்!

வாப்பா கொண்டு வந்த புது மெத்தைப் பாயில் நான்தான் முதலில் படுப்பேன் என்று அடம் பிடித்த நிகழ்ச்சிகள்!

அழி ரப்பர் முதல் அளக்கும் ஸ்கேல் வரைக்கும் அங்கிருந்துவருவதுதான் ஒசத்தி என்று பறையடித்த நினைவுகள்!

ஒங்க வாப்பாவிடம் சொல்லி ஒரு காலண்டர் கொண்டுவந்து தாடா என்று கேட்டுக் கிள்ளும் நாகரத்தினம் சாரின் நினைவுகள்!

பயணக்காசாகக் கிடைக்கும் பணத்தை சேர்த்துவைத்து நாகூர் கந்தூரிக்குப் போய் வாங்கி வந்த பீமபுஷ்டி ஹல்வா -

நாகபட்டினம் கஸ்டம்ஸில் நாள் பூரா காத்திருந்து கருவாடாகிய நினைவுகள்!

நம்மை வளர்த்த மலேசியா! வாழ்க மலேசியா! நமக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் இரத்தத்தின் அணுக்களுக்கு உரம் போட்டு வளர்த்தது மலேசியா! நன்றியுடன் மலேசியாவுக்காக து ஆச் செய்வோம்.


ZAKIR HUSSAIN said...

To Sabeer,


நீ சொல்லியிருந்த பல விசயங்கள் இப்போது இல்லைதான் [ 8 மூடா லேன் / 45 குயின் ஸ்த்ரீட் ] இவையெல்லாம் வேறு உடை பூத்திருப்பதால் அந்நியப்பட்டு பார்ப்பதோடு சரி. ஆனால் அந்த கன்ஞ்சிப்ராக்கு [ பனியன் ] எல்லாம் இருக்கிறது. நல்ல க்வாலிட்டியில். மிதிரிக்கட்டை / ரப்பர் [கித்தா] செருப்பு / இன்னும் கிடைக்கிறது.

முன்பெல்லாம் பேரனுக்கும் பேத்திக்கும் சேர்த்து உழைத்து வாழ்க்கையை தொலைத்த வயதானவர்களும் இப்போது இங்கும் / எங்கும் இல்லை.

உன் கவிதையை மெய்பிக்க முடியும் கொஞ்சம் நாட்கள் அதிகம் இங்கு நீ தங்கினால். உருப்படியாக சுத்திப்பார்க்க 2 வாரமாவது தேவைப்படும். But time is not permitting everybody now a days.


ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

நீங்கள் சொல்லியிருந்த அந்த இடம் Bukit Gantang என்ற இடம். எப்போது போனாலும் நிறுத்தாமல் போக முடியாது. அந்த இடத்தை பார்த்த என் அண்ணன் சொன்னது ' என்னடா மலேசியாவில் இதை பார்க்க மட்டும் ஒரு முறை வந்து போகலாம் போல தெரியுது' . நிறைய பழங்கள் கிடைக்கும், சமயத்தில் விலை அதிகம் இருக்கலாம்.

ZAKIR HUSSAIN said...

To Bro அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) ...மலேசியா ஏர்போர்ட் வரை வந்து உள்ளே வராதது வருத்தம்தான். அடுத்த முறை விசா எல்லாம் ரெடியாக எடுத்து வாருங்கள்.

ZAKIR HUSSAIN said...

வெகு நாட்களுக்கு பிறகு கமென்ட்டில் கை குலுக்கும் MHJ / Ibnu Abuwahid , Abdul Malik, MSM Naina & [ இயற்கையை விரும்பும் அனைவருக்கும் இந்த ஊர் பிடிக்கும். ] அனைவருக்கும் நன்றி.

Bro Naina Thambi...thanx for editing the fotos nicely. இப்பதான் பாகிஸ்தான் டி.வி மாதிரி சுத்தி பெயர் எழுதாமல் அழகாக இருக்கிறது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மலேசியாவா?மலையெல்லாம் ஏசியாவா? (வைத்த ஊரா?) படிக்கும் போதே குளிர்கிறது.போட்டோ பளிச்'' இப்படி போட்டோ, போட்டா போட்டா போட்டி மனதில் மலேசியாவிற்கு எப்ப போகலாம் என எட்டிப்பார்க்கிறது. இதனூடே கவிச்சக்கரவர்தியின் கவிமழையும் நம்மை இன்பத்தில் நனைக்கிறது. மொத்தத்தில் அழகின் குஞ்சா இந்த மலேசியா? இல்லை அழகின் நிஜ " நிழல்படமா?

crown said...

நாற்பத்தி ஐந்து குயின் ஸ்ட்ரீட்டில்
அதிரை ராஜாக்களின்
நடமாட்டம் தொடர்கிறதா
நடை ஆட்டம் தீர்ந்ததுவா!
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் கவிச்சக்கரவர்த்தியே! ஆரம்பமே அதிரடியா?அதிலும் நடைதளரா கம்பீர வரிகள்(ஸ்டேடீ). மலேசியாவை நல்ல ஸ்டெடி பன்னியிருக்கீங்க!

crown said...

குடும்பம் தழைக்க
வாழ்க்கையைத் தொலைக்கும்
சபுராளி வம்சங்கள்
சந்தையில் அருகியதா
---------------------------------------
சபூர்ராளிகளாக இருப்பதால் தான் அவர்கள்சபுராளிகளா/ கபுராளிகள் கூட நிம்மதியாய் இருக்கலாம் ( நல்லது செய்தால்)ஆனால் மலேசிய சபுராளிகள் நல்லது செய்தும் நிம்மதிதேசத்தின் அகதிகளாய் இருப்பது அவலம்!

crown said...

எல்லாவற்றிற்கும் மேலாக
சீனச் சகோதரிகளின்
உடை வளர்ந்ததா
மலாய்க்காரர்களின்
உள்ளம் திறந்ததா?
--------------------------------------------
அரைகுறை ஆடையில் உலவுவது சீனத்துபெண்களா? ஈனங்கேட்ட பெண்களா?சீனான்னு சொன்னாலும் ச்சீன்னு சொல்லவைக்கும் ஆடைகாலாச்சாரம். மலாய்காரர்களின்(இனவெறி) மனமும் சீனவுடைபோல பாதிதிறந்தும் . பாதிமூடியும் சீச்சின்னு சொல்லும் படிதான் உள்ளதா? படிக்கட்டில் ஏறி(ஏற்றி)சென்றவரின் அனுபவம் என்ன?

crown said...

நெடுஞ்சாலையின் நீட்டத்தில்
காத்திருக்கும் மேகங்களின்
கையிருப்பில்
மழைத்துளிகள் இருக்கும் அல்லவா

அதன்
பூவிரிப்பில் உட்புகுந்து
ஓட்டுகையில்
உன் ஊர்தி
ஓடுமா உருகுமா
----------------------------
கவிஞரய்யா! உடபெல்லாம் சிலிர்க்கிறது!உங்கள் வார்த்தையை படித்து அந்த நீர்த்துளிகள் என் கையில் இருப்பதுபோல் ஒரு கசிவு-அந்த உணர்வு உங்களுக்கும் உண்டா?

crown said...

உங்கூரு அருவி
ஒழுக்கமானதோ?
அடர்த்தியான புடவையாகவே
அருவி கொட்டுகிறது!
---------------------
கவிஞரே கவனீத்தீர்களா? சரிந்துவீழும் அருவிகூட சரிந்துவிடா ஆடைப் போர்த்தி நம்மை சிலிர்க்கவைக்கிறது.ஆனால் சரிந்துவிழாதபடி ஆடை அணியும் பெண்கள் இனம் அருகிவருகிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

மயக்கிடும் அழகினில் மனத்தினைக் கொடுத்திட
....மலேசியா நிழற்படத்தில்
வியந்திடும் இயற்கையின் அழகினை நினைப்பதும்;
....வீதியை விவரமாக
நயத்தகுக் கவிதையின் வர்ணனை அழகினால்
....நம்மவர்ப் கவிவேந்தர்ப்
பயணமாய் அழைத்திடும் அருமையை நினைப்பதும்
..பரவசம் அடைந்தேனே!
...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//காலை 8 மணிக்கு காரை ஓட்டிகொண்டே எடுத்த இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது. மேகத்தை எப்படி படம் எடுத்தாலும் ஒரு குழந்தையின் சிரிப்பு மாதிரி அழகாவே இருக்கும்.//

அஸ்ஸலாமு அலைக்கும், பினாங்கு நெடுஞ்சாலையில் காரை ஓட்டும் போது விண்டோவை திறந்திருக்கு போல தெரியுது. இன்று இரவு பேசும் போது குரலில் தெரிந்தது.

take care of your health காக்கா..

அனைத்து புகைப்படங்களும் அருமை...

கர்நாடகாவிடம் காவேரி தண்ணீர் கேட்டு கேட்டு நாங்க வேறுத்துட்டோம், மலேசியா செலாமா பகுதி (selama area) இருக்கும் தண்ணிரை தமிழ்நாட்டு பக்கம் அனுப்ப வழியிருக்கா காக்கா?

Adirai pasanga😎 said...

கோலா லம்பூரில் இருந்து மலாக்கா சென்ற நானும் தம்பி ரிஜ்வானும் அங்கிருந்து இந்தோனேசியா செல்லவேண்டும் என்று விசாரித்த போது பெர்ரியில் தான் செல்லவேண்டும் என்ற தகவல் கிடைத்தது. இரண்டரை மணி நேர பயணம் துமாய் என்ற இந்தோனேசியா சார்ந்த ஒரு தீவை அடைய. மலேசிய பயணம் தற்போது இந்தோனேசியாவரை நினைவை இழுத்துச்செல்கி|றது - சகோதர் ஜாகிர் இன்னும் ஏதேனும் இருந்தால் நீங்கள் எடுத்து விடவும். தொடரின் அருமை கருதி..

Yasir said...

மலேசிய மண்ணின் மகிமையை, படங்களின் துணையுடன் உங்களுக்கே உரிய பாணியில் விளக்கிய விதம் அருமை...நேரில் பார்த்த உணர்வு...தொடருங்கள் காக்கா

Yasir said...

கவிக்காக்காவின் கலக்கல் கவிதை இக்கட்டுரைக்குத் தோரணம் கட்டுகின்றது

Yasir said...

கிரவுனின் வருகை எங்களை தலைகால் புரியாமல் மகிழ்ச்சிக்கடலில் முழ்க்கடிக்கின்றது..அன்சாரி மாமாவின் மலேசிய மண்ணின் மணம் மனம் மகிழவைக்கின்றது

Iqbal M. Salih said...

Morning Penang மெகாலிஸ்தர் ரோடு மாதிரி இருக்கிறது.

இந்தத் தடவை Hutton Lane பக்கம் போனாயா அல்லது உடனே திரும்பி விட்டாயா?

தாஜுத்தீன் சொன்னதுபோல் 8 மணி படம் மிக அருமை! கொடிமலை?

ZAKIR HUSSAIN said...

//தாஜுத்தீன் சொன்னதுபோல் 8 மணி படம் மிக அருமை! கொடிமலை? //

இல்லை ..இது IPOH பக்கத்தில் உள்ள [ JELAPANG] குகையை தாண்டியவுடன் வரும் மலைப்பகுதி.

கிரவுன் உங்கள் தமிழ்காண்பது எங்களுக்கு உற்சாகம் தருகிறது.

கவியன்பன் / யாசிர் / அர அல.... தேங்க்ஸ்

இப்னு அப்துல்வாஹித் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சபீர்,நிஜக்கவிதை மன்னா
அத்துனையும்
அருமையான படைப்புகள்
உண்மையிலேயே யு ஆர் சோ கிரேட்
உன்னைத்தெரியும் நன்றாகவே தெரியும் இருந்தும்
நீ ஒரு படைப்பாளன் என்பது எப்படி எனக்கு தெரியாமல் போனது
பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தேன்
பிடி கிடைக்கவில்லை.வருந்துகின்றேன்
இனி
தவற விடமாட்டேன்.
எல்லா வரிகளும்
ரசனைக்குரியவை
எதையும் தள்ளமுடியாது
நான் அதிக அதிகம் ரசித்தது
இதைத்தான் இப்படியும் ஒரு வர்ணனையா?

"எங்களூர் மலைமகள்
சீஸனில் மட்டுமதான்
கூரைப் புடவையளவில்
அருவி ஆடை அணிவாள்

மற்றைய தினங்களில்
மாடர்ன் ட்ரெஸ்தான்

உங்கூரு அருவி
ஒழுக்கமானதோ?
அடர்த்தியான புடவையாகவே
அருவி கொட்டுகிறது!"

எப்படிப்பா உன்னால் முடிகின்றது
எனக்கு கவிதை என்றாலே புடிக்காது
காரணம் கவிதை எழுதுகின்றோம் என்று
நிறைய பேர் பொய்யைத்தான் புனைகின்றது
உன்னிடம் பொய்மை வெளிப்படவில்லை
அத‌னால்தான்
உன்னை "நிஜ‌க்க‌வி ராஜா" என்ற‌ புனைப்பெய‌ரை நான்
உன‌க்கு சூடி ம‌கிழ்விப்ப‌தோடு அல்லாம‌ல், நில்லாம‌ல்
இனி நான் உன்னை இப்ப‌டித்தான் அழைப்பேன்
வாழ்த்துக்க‌ள்
வ‌ழ‌முட‌ன் வாழ...........

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு