Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 31 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2013 | , ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

உலக பற்றின்மையின் சிறப்பு உலக சுகங்களை குறைத்துக் கொள்ள ஆர்வமூட்டல், ஏழ்மையின் சிறப்பு

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்), அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 35:5)

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:1-7)

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை மறுமை வாழ்வு தான் வாழ்வாகும், அவர்கள் அறியக் கூடாதா? (அல்குர்ஆன் : 29:64)

''பணக்காரர்களை விட  ஐநூறு வருடங்களுக்கு முன் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 487)

''சொர்க்கத்தில் உற்றுப் பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் அதிகமானவர்களாக ஏழைகள் இருப்பதைக் கண்டேன். மேலும் நரகத்திற்குச் (சென்று) உற்றுப்பார்த்தேன். அங்கு வசிப்பவர்களில் மிக அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 488)

''சொர்க்கத்தின் வாசலிலே நான் நின்றிருந்தேன். அதனுள் நுழைபவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தார்கள். வசதியானவர்கள் (வாசலிலேயே) தடுக்கப்பட்டிருந்தனர். எனினும் நரகவாசிகள், நரகத்திற்கு கொண்டு செல்லப்பட கட்டளையிடப்பட்டனர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி) அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 489)

''நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் குடும்பத்தினர் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தொலிக் கோதுமையின் ரொட்டியைக் கூட வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை '' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 491)

''நபி(ஸல்) அவர்கள், மரணிக்கும் வரை உயர்ந்த தட்டுகளில் சாப்பிட்டதே இல்லை. மேலும் அவர்கள் இறக்கும் வரை, மிருதுவான ரொட்டியைக் கூட சாப்பிட்டதில்லை.'' (புகாரி)              (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 494)

''முப்பது 'ஸாஉ' தொலிக் கோதுமைக்காக தன் உருக்குச் சட்டையை அடமானம் வைக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)   அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 504)

''ஆதமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும். அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்பட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு  (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 510)

''உங்களில் ஒருவர் தன் (எதிரிகளால்) உயிருக்கு அச்சமற்று இருப்பவராகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும், அன்றைய தேவைக்கு உணவு உள்ளவராகவும் இருந்தால், அவர் உலகத்தின் இன்பங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டவர் போலாவார்;'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைதுல்லா இப்னு மிஹ்ஸன் அன்சாரீ அல்குதமீ (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 511)

''ஒருவர் முஸ்லிமாகி, அவரின் உணவுத்தேவை போதுமான அளவு இருந்து, அவருக்கு அல்லாஹ் வழங்கியதை போதுமாக்கிக் கொண்டால், அவர் வெற்றி பெற்றுவிட்டார் '' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 512)

''இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டப்பட்டு, அவரின் வாழ்க்கைக்கு  போதுமான அளவிற்கு உணவு, இருப்பதை அவர் போதுமாக்கிக் கொள்பவராக இருந்தால், அவருக்கு நல்வாழ்த்துக்கள்;'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் என்ற ஃபழலாத் இப்னு உபைதுல் அன்சாரி (ரலி) அவர்கள் (திர்மிதீ)                          (ரியாளுஸ்ஸாலிஹீன்: 513)

''நபி(ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக பல இரவுகள் பசியுடனே கழித்துள்ளார்கள். அவரின் குடும்பத்தார் மாலை நேர உணவைப் பெற்றுக் கொண்டதில்லை. அவர்களிடம் இருந்த ரொட்டிகளில் தொலிக்கோதுமை ரொட்டி தான் அதிக அளவில் இருந்தது. என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ)             (ரியாளுஸ்ஸாலிஹீன்: 514)

''மனிதன், வயிற்றை விட வேறொரு கெட்டப் பையை நிரப்பிக் கொள்வதில்லை. முதுகு எலும்பு நேராக இருந்திட ஆதமின் மகனுக்கு சில கவள உணவு போதும். அவனுக்கு அவசியம் ஏற்படுமானால், (வயிற்றில்) மூன்றில் ஒரு பங்கு  அவனது உணவுக்காகவும், மூன்றில் ஒரு பங்கு அவன் தண்ணீர் குடிக்கவும், மூன்றில் ஒரு பங்கு   அவன் மூச்சு விடவும் போதும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகரீமா என்ற மிக்தாத் இப்னு மஹ்தீ கரிப் (ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 516)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உலகப் பற்று, வயிற்றுப் பற்று எவ்வாறிருக்கனும் என்பதற்கு நல்ல ஆதாரங்கள்!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஜும் ஆ தொழுகைக்கு முன்னர் ஈமானைத் தூய்மைப் படுத்தும் இத்தொடரைப் படித்து விட்டுச் சென்றால், ஓர் அளவற்ற அமைதிக் கிடைக்கின்றது என்பதை உணர்கிறேன். வெள்ளி மேடையாக விளங்கும் இத்தொடர் வாழ்வின் விடிவெள்ளி என்றும் சொல்வேன்!

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.

Adirai pasanga😎 said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .


வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து எனும் தங்கள் தொடர் இறைமறை வசனத்தையும் நபிவழி போதனையையும் அதிகமாகத் தாங்கி வருவதால் இந்த வலைதளமே மிகவும் மெருகேறி வருகின்றது என்றால் அது மிகையல்ல. ஜஜாகல்லாஹ் கைரன்.

عبد الرحيم بن جميل said...

அற்ப்பமான துன்யாவின் மேல் மோகம் கொண்டவர்களுக்கு நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகள் ஓர் எச்சரிக்கை! தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஆசிரியரே!! அல்லாஹ் நம் அனைவர்மீதும் அருள் புரிவானாக!!

Ebrahim Ansari said...

அன்பின் சகோதரர் அலாவுதீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒவ்வொரு வரியும் உள்ளத்துடன் பேசுகிற வகையில் வாரித்தரும் அருமருந்து இந்தத் தொகுப்பு.

Abu Easa said...

எங்கள் இறைவனே! நீ பொருந்திக்கொள்கிற வாழ்கையை வாழ்ந்து உண்மை முஸ்லிம்களாக மரனிக்க எங்களுக்கு அருள்புரிவாயக!

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு