என்னாச்சு?
இந்தத் தளத்தில்தான்
அறிமுகமானோம்
சொந்தக் கருத்துகளால்
உறவினரானோம்
கடந்து போன
காலங்களில்
நடந்துவிட்டப் பிழை
இவர்களைக் கண்டெடுக்காதது!
***
என்னாச்சு?
கிரவுன் தஸ்தகீர்:
அதிரை நிருபரை
அலங்கார மாக்கிய
அகங்கார மற்றவர்
இவரின்
தோரணம் தொங்காத
தொடரும் இல்லை
கை வைக்காத
கவிதையும் இல்லை
இவர் தமிழ்
அடுக்கி வைக்கப்பட்டப்
புத்தம் புது
கரன்ஸி நோட்டுகளாய்
மனம் மயக்கும் மணம்
கோனார் தமிழுரையில்
வினாக்களும் விடைகளும்
கிரவ்னார் தமிழுரையில்
கனாக்களும் கடமைகளும்
தமிழ்த் தீணி வைத்தால்
எந்தப் பொறியிலும் சிக்குவார்
இந்த
வார்த்தைச் சித்தர்
தமிழைச்
சமைத்துப் படைக்கிறாரோ!
எழுத்தரிசியை
வார்த்தைகளாய் வடித்தெடுத்து
தமது
பிரத்யேகக் கலவையானத்
தமிழ் மசாலாவில்
ஊற வைத்துத் தரும் தமிழ்
ஊரே வியக்கும்
இவர்
எழுதத் தொடங்கி
தமக்குப்
பிடிக்காத வார்த்தைகளைக்
கிழித்துப் போட்ட
குப்பையைக்
கிளறிப் பார்த்தால்
கேசரித் தமிழ்!
இந்த
முக்குளித் தாரா
எங்கே எப்போது
நீர்மட்டம் வரும்?
***
என்னாச்சு?
நூர் முஹம்மது காக்கா:
மரியாதைக்குரிய காக்காவுக்குத்
தெரியாததே இல்லை
ஜனனம் முதல்
நடந்தவை யாவும்
மனனம் இவர்களுக்கு
இவர்களின்
நினைவுக் கூட்டை
நெருடினால்
அதிரையே
வாய்திறந்து தன்
வரலாற்றைச் சொல்லிவிடும்
கருப்பு வெள்ளைக்
காலம் முதல்
தற்காலம் வரை
வாசித்தோ வசித்தோ
தரும்
குறிப்புகள் - யாவுமே
சிலிர்ப்புகள்
காக்காவிடம் கொட்டிக்கிடக்கும்
அறிவுக்களஞ்சியம்
அல்லாஹ் எங்களுக்காக
அவர்களிடம் கொடுத்தனுப்பிய
அமானிதம்
***
என்னாச்சு?
அ ர. ஹிதாயத்துல்லாஹ்:
இந்த
சுயேட்சை
சுயாட்சி செய்யும்வரை
இங்கு
வாசிக்கத் தந்து
யோசிக்க வைத்தவர்
பின்னூட்டங்களில்
மின்னூட்டம் வைத்து
அறிவூட்டியவர்
இந்த
குறுநில மன்னர்
இந்த
அவைக்கும்
வந்து போக வேண்டும்
*****
என்னாச்சு?
(இன்னும் வரும், இருப்பினும் பீதியடைய வேண்டாம்...இது தொடரல்ல)
Sabeer AbuShahruk
இந்தத் தளத்தில்தான்
அறிமுகமானோம்
சொந்தக் கருத்துகளால்
உறவினரானோம்
கடந்து போன
காலங்களில்
நடந்துவிட்டப் பிழை
இவர்களைக் கண்டெடுக்காதது!
***
என்னாச்சு?
கிரவுன் தஸ்தகீர்:
அதிரை நிருபரை
அலங்கார மாக்கிய
அகங்கார மற்றவர்
இவரின்
தோரணம் தொங்காத
தொடரும் இல்லை
கை வைக்காத
கவிதையும் இல்லை
இவர் தமிழ்
அடுக்கி வைக்கப்பட்டப்
புத்தம் புது
கரன்ஸி நோட்டுகளாய்
மனம் மயக்கும் மணம்
கோனார் தமிழுரையில்
வினாக்களும் விடைகளும்
கிரவ்னார் தமிழுரையில்
கனாக்களும் கடமைகளும்
தமிழ்த் தீணி வைத்தால்
எந்தப் பொறியிலும் சிக்குவார்
இந்த
வார்த்தைச் சித்தர்
தமிழைச்
சமைத்துப் படைக்கிறாரோ!
எழுத்தரிசியை
வார்த்தைகளாய் வடித்தெடுத்து
தமது
பிரத்யேகக் கலவையானத்
தமிழ் மசாலாவில்
ஊற வைத்துத் தரும் தமிழ்
ஊரே வியக்கும்
இவர்
எழுதத் தொடங்கி
தமக்குப்
பிடிக்காத வார்த்தைகளைக்
கிழித்துப் போட்ட
குப்பையைக்
கிளறிப் பார்த்தால்
கேசரித் தமிழ்!
இந்த
முக்குளித் தாரா
எங்கே எப்போது
நீர்மட்டம் வரும்?
***
என்னாச்சு?
நூர் முஹம்மது காக்கா:
மரியாதைக்குரிய காக்காவுக்குத்
தெரியாததே இல்லை
ஜனனம் முதல்
நடந்தவை யாவும்
மனனம் இவர்களுக்கு
இவர்களின்
நினைவுக் கூட்டை
நெருடினால்
அதிரையே
வாய்திறந்து தன்
வரலாற்றைச் சொல்லிவிடும்
கருப்பு வெள்ளைக்
காலம் முதல்
தற்காலம் வரை
வாசித்தோ வசித்தோ
தரும்
குறிப்புகள் - யாவுமே
சிலிர்ப்புகள்
காக்காவிடம் கொட்டிக்கிடக்கும்
அறிவுக்களஞ்சியம்
அல்லாஹ் எங்களுக்காக
அவர்களிடம் கொடுத்தனுப்பிய
அமானிதம்
***
என்னாச்சு?
அ ர. ஹிதாயத்துல்லாஹ்:
இந்த
சுயேட்சை
சுயாட்சி செய்யும்வரை
இங்கு
வாசிக்கத் தந்து
யோசிக்க வைத்தவர்
பின்னூட்டங்களில்
மின்னூட்டம் வைத்து
அறிவூட்டியவர்
இந்த
குறுநில மன்னர்
இந்த
அவைக்கும்
வந்து போக வேண்டும்
*****
என்னாச்சு?
(இன்னும் வரும், இருப்பினும் பீதியடைய வேண்டாம்...இது தொடரல்ல)
Sabeer AbuShahruk
43 Responses So Far:
அதானே காக்கா உங்களைப் போல் ஐயம் எனக்கும் தொடர்ந்தது.
நீங்க பப்ளிக்கா போட்டு உடச்சுச்சுட்டீக!
அன்று அப்துல்ரஹ்மான் கவிஞரிடம் வினா தொடுத்து பதிலே இல்லை.
காணவில்லை என்று ஆக்கமும் எழுதுவேன் என்றி ஜாஹிர் காக்கா சொன்னதும் பயந்து போய் Mr. Crown ஒரே ஒரு தடவை இருக்கிறேன் ஐயா 'ன்னு சொல்லிப் போய்ட்டார். மறுபடி வரவே இல்லை.
இவங்களெல்லாம் தனிக் குழுவாய் பிரிந்து ஒரு இயக்கம் எதுவும் அமைத்துவிடக்கூடாதே 'ன்நு ஐயமாக இருக்கிறது.
ஆனால் ஒருவர் மட்டும் இணையத்தை விட்டு பிரிந்து இருப்பதால் வர முடியவில்லை, ஆனால் நினைவில் மட்டும் தொடர்கிறேன் 'ன்நு சொன்னார்.அதோடு சலாமும் எழுத சொன்னார். அவர் லெ.மு.செ. அபூபக்கர்.
நீங்க இன்னும் தொடரனும் காக்கா.
-------------------------------------
ரபியுள் ஆகிர் 28 / 1434
தம்பி சபீர் அவர்கள் பலரின் கவலையை கவிதையாய் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தம்பி கிரவுன் அவர்கள் பின்னுட்டம் இடுவதுடன் அடிக்கடி அலைபேசியிலும் அழைத்து உரையாடும் வழக்கம் உடையவர். அவருடைய பின்னுட்டம் மற்றும் அழைப்பு இல்லாமல் வழக்கமாக அணியும் நல்ல விருப்பமான சட்டையில் திடீரென்று நாலு பட்டன்கள் அறுந்து விழுந்த நிலையாக உணர்கிறேன். மீண்டும் தேடி வைத்து தைத்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.
தம்பி நூர் முகமது அவர்கள் தளத்தில் பின்னுட்டம் இடாவிட்டாலும் ஒரு வாரத்தில் நான்கு முறையாவது அழைத்துப் பல சமுதாய செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சில நேரங்களில் சிலபிரச்னைகளை அவர்கள் உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் விவாதிக்கிரார்கள்.கலைக்களஞ்சியம் தளத்துக்கும் வரவேண்டுமென்று நானும் கோரிக்கை விடுக்கிறேன்.
"குறு நில மன்னர்" பற்றி - அடிக்கடி கந்தர்வகோட்டைப் பக்கம் தலைகாட்டுவதாக கேள்வி.
மற்ற என்ன ஆச்சு பட்டியல் வரட்டுமே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
இப்படி அன்பால் எங்கே இவன் என அழைக்கும் பண்பின் , நட்புக்கூட்டம் இதைவிட்டு நான் எங்கே எடுக்க ஓட்டம்?. இறைவன் நாட்டம் என்றும் துணை இருக்க நான் இவர்களின் நட்பு இல்லாவிட்டால் நட்டபட்டவன் ஆவேன் என்பது திண்ணம்.இப்படி இருக்க எப்படி நான் ஒளிந்திருப்பேன். நான் இங்கே வந்தபிந்தான் என் கிரிடம்கூட ஒளிர்ந்திருக்கிறது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! நான் தீர்மானம் கொண்டு இதோ வந்துவிட்டேன் என அறிவிக்க இருந்தேன் இது எப்படி கவிஞரின் இதயத்தில் உடனே தேட்டமாய் விளைந்தது? நட்புத் தோட்டத்தில் நானும் ஒரு மரம் தான்!இனி என்றும் நட்புத்தென்றல் இங்கே வீசும்!
அதிரை நிருபரை
அலங்கார மாக்கிய
அகங்கார மற்றவர்
---------------------------
அலங்கோலம் ஆக்காதவர் என பெயரெடுத்ததே வெற்றித்தான்!அல்ஹம்துலில்லாஹ்! நன்றி!
இவரின்
தோரணம் தொங்காத
தொடரும் இல்லை
கை வைக்காத
கவிதையும் இல்லை
--------------------------------------
தோரணம் தொங்காத காரணம் நான் கூறனுமென்றால் இடம்மாற்றம், புது வியாபார துடக்கம் இப்படி காரணம் அடங்கும்.இதனேலேயே தோரணம் கட்டுவதும் முடங்கும். இப்பொழுது இயல்பு நிலைக்கு வந்துவிட்டதால் அல்ஹம்துலில்லாஹ் இனி வரும் கால நிலை என் கிறுக்கல் தொடரும்.
Assalamu Alaikkum,
Dear brother Mr. AbuShahrukh,
YOur deep concerns about our brothers whoever missing from Adirai Nirubar show the value and contribution of those brothers. I think its not their deliberate intentions to not in keep in touch with us here, but due to various circumstances like workloads, extra commitments, travels, etc.
Hope those brothers would come back and contribute their insights and knowledge for the benefit of our community. And I would like to encourage other brothers who visit Adirai Nirubar regularly to contribute their comments, creations.
One of the intellectuals had been missing is my teacher and colleague Mr. NAS Sir, had been performing Umrah in the last month of Febraury 2 - 27. So, those days he could not show up. Hope in the coming days he too will be meeting us in Adirai Nirubar forum.
May Almighty Allah reward for our good intentions towards our community's knowledge development through this forum.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
www.dubaibuyer.blogspot.com
இவர் தமிழ்
அடுக்கி வைக்கப்பட்டப்
புத்தம் புது
கரன்ஸி நோட்டுகளாய்
மனம் மயக்கும் மணம்
------------------------------------------
சலவை( நோட்டு)செய்த கரன்ஸி கரப்சன் இல்லாமலும், கருப்பு பதுக்கல் இல்லாமலும் இருப்பதாய் இருந்தாலே சிறப்புத்தான்!.மூளைச்சலவைசெய்யும் சிலரின் நடுவில் கவிஞர் அன்பினாலே வெளுத்து கட்டுகிறார் . அன்பிற்கு என் அன்பை என்றும் திருப்பித்தருவேன்.
அட கிரவ்ன்(னு)!
நானும் "என்னாச்சு..?" கேட்கும் முன்னரே... வந்துட்டியே,
ஆஹா ! இடம் புது, மாற்றம் புதுசு, இனி எல்லாமே புதுசு புதுசா ?
(அன்பைக்)கலக்கு(டா)ப்பா !
கோனார் தமிழுரையில்
வினாக்களும் விடைகளும்
கிரவ்னார் தமிழுரையில்
கனாக்களும் கடமைகளும்
--------------------------------------------
இப்படி தமிழ்பால் கறக்கும் கோனார்(கவிச்சக்கரவர்த்தி) சொன்னார் என்றால் பிறர் "மனம் கோனார்" எனவே நான் மகிழ்வேன்! ஆனாலும் இது மிகைத்த அன்பால் இந்த கோனார் எனக்கு வார்த்த பால் இதை மிடரு,மிடராகவிழுங்கினாலும் தகுதியை நினைத்தால் தொன்டை சின்னதாய் "விக்கு"கிறது! இருந்தாலும் இதுதான் "ஊக்கு"வித்தல்"என்பது.
தமிழ்த் தீணி வைத்தால்
எந்தப் பொறியிலும் சிக்குவார்
------------------------------------
கனிப்பொறியில்தான் காலம் தாமதம் ஆகிவிட்டது!
நூவன்னா கக்கா, அடிக்கடி தொடர்பில் இருப்பதால் எனக்கு அவர்களும் கருத்திட்டுக் கொண்டிக்கிறார்கள் பிரம்ம இருக்கத்தான் செய்கிறது...
அ.ர.ஹி.,
//இந்த
சுயேட்சை
சுயாட்சி செய்யும்வரை//
இன்னும் அப்படியேத்தான் இருக்கான் :)
இந்த
வார்த்தைச் சித்தர்
தமிழைச்
சமைத்துப் படைக்கிறாரோ!
எழுத்தரிசியை
வார்த்தைகளாய் வடித்தெடுத்து
தமது
பிரத்யேகக் கலவையானத்
தமிழ் மசாலாவில்
ஊற வைத்துத் தரும் தமிழ்
ஊரே வியக்கும்
---------------------------------------------------
நான் கலந்த தமிழ் மசாலா பேதியையோ, இன்ன பிறவியாதியையோ ,இல்லை பீதியையோதரவில்லை என்பது மாஸாஅல்லாஹ் நல்ல மசாலாதான் நான் கலந்திருக்கேன்! நான் இங்கே சமைத்த சமையல் இப்படி மையல் கொண்டு மயக்கும் என கனாவிலும் நினைக்கவில்லை!அரை குறை அவியல் அரிசியாக இல்லாமல் ஆன்றோர் சபையில் இப்படி சுமாராக சமைப்பதற்குள் காலசூழ்னிலை நம்மை கஞ்சி காய்சிவிடும்!சமைத்தவன் நான் என்றாலும் அதை நல்லவிதமாய் பந்தியில் பறிமாறியது அ. நி வும் அதை குறை மறைத்து ரசித்து ,ருசித்ததும் அ. நி வாசகர்களுக்கும் நன்றி!
இவர்
எழுதத் தொடங்கி
தமக்குப்
பிடிக்காத வார்த்தைகளைக்
கிழித்துப் போட்ட
குப்பையைக்
கிளறிப் பார்த்தால்
கேசரித் தமிழ்!
-----------------------------------------------------
இப்படி கேசரியாய் இருக்க காரணம் அ. நி சேகரித்த அறிவுதிரட்டும் ஒருகாரணம். நல்லவேளையாக கேசரித்தமிழ் சென்னை சேரித்தமிழாக இல்லாமல் இருப்பதே நலம்.இப்படியும் கிண்ட(ல்)!முடியுமா கேசரி???(காக்கா சும்மா கேட்டுவைக்கிறேன்).
இந்த
முக்குளித் தாரா
எங்கே எப்போது
நீர்மட்டம் வரும்?
--------------------------------------------
அவர் முக்குளித்தாரா? மூச்சை அடக்கி முக்கியெழுந்தாரா? இப்படி முழுதாகவும்,சிலர் அரை,குறையாய் குளிப்பவர்களும் குளத்தில் கண்டதுண்டு!ஆனாலும் கரையோரம் ஒதுங்கி எல்லாம் கவனித்து வரும் நான் தாரளமாக சொல்வேன் என்றும் வருவேன் அன்பின் அழைப்பில். இந்த தாரா வராதா என ஏங்க வேண்டாம் என்றும் அன்பின் அருகில் இருப்பேன். அன்பின் தேடலுக்கு நன்றி! மேதை அ.இ காக்காவின் அன்பின்ற்கும் என் எடிட்டர் காக்காவின் அன்பிற்கும் பிற அன்பர்களின் அன்பிற்கும் என்றும் கடமைபட்டவன் நான் . எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!
நல்ல வேலை, நான் தப்பிச்சேன்!
நான் அப்பப்போ அட்டெனென்ஸ் போட்டுக்கிட்டு இருக்கேன்...
நடுவுலே கொஞ்சம் நேரத்தை காணோம் :)
வராத காலத்துக்கும் சேர்த்து வார்த்தைகளின் வடிவமைப்பாளர் கிரவுன் வழங்கி இருக்கும் வார்த்தை விளையாட்டுக்கள் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல் என்பதற்கு உதாரணம். இதை அல்லது இதற்குத்தானே ஏங்கினோம்.
அத்துடன் என்னை அலைபேசியில் அழைத்தார். எங்களின் உரையாடலின் ஒரு பகுதி
கிரவுன்: காக்கா எங்கே இருக்கிறீர்கள்?
நான்: ஒரு வேலையாக தம்பிக்கோட்டையில் இருக்கிறேன்.
கிரவுன்: நீங்கள் தம்பிக்கோட்டையில் இருந்துகொண்டு என் தம்பி கந்தர்வகோட்டையில் இருப்பதாக சொல்கிறீர்களே!
அடேயப்பா! உடனே இப்படிச் சொல்ல வரும் அந்த டைமிங்க் !!! மாஷா அல்லாஹ்.
தம்பி நூர் முகமது லுஹர் தொழுகையின்போது போனை அணைத்திருந்த வேளை அழைத்து இருக்கிறார்கள்.
கவிக்க்காக்கவின் ஆதங்க கவிதையும்,கிரவுனின் அதிரடி வருகையும்,வார்த்தைகளைக் கொண்டு எங்களை இதமாக வறுத்தெடுத்த பாங்கும் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகின்றது...அதிரை நிருபரை பார்க்காமல் நான் தூங்கியதே இல்லை...பயணங்கள்...கணிப்பொறி முன் அமர முடியாத சூழ்நிலை என்னுடைய கருத்துக்களை குறைத்து இருக்கிறதேயன்றி...அதிரை நிருபரை விட்டு ஒரு நானோமீட்டர் கூட என் பார்வை அகலவில்லை...வரும்வோம் மீண்டும் புதுப்பொலிவுடன் பழைய நண்பர்களுடன்
//கிரவுன்: நீங்கள் தம்பிக்கோட்டையில் இருந்துகொண்டு என் தம்பி கந்தர்வகோட்டையில் இருப்பதாக சொல்கிறீர்களே! //
நாட்டையே ஆளும் கோட்டையைப் பிடிக்க வேண்டிய அண்ணன் தம்பிகள் கூட்டம் ஒன்றை விரைவில் உருவாக்கவே நான் இந்த ஆட்டையைத் துவங்கினேன்.
அலாவுதீன், இக்பால் தரும் மார்க்க அறிவுகளோடு; ஈனா ஆனா காக்காவின் பொருளாதார நிர்வாக படிப்பினையோடு, எம் எஸ் எம் நெய்னாவின் பாரம்பரிய நற்செயல்களோடு, ஜாகிரின் ஊக்க மருந்துகளோடு, கவியன்பனின் கவி நயமான அனுகுமுறையோடு , யாசிர் எம் ஹெச் ஜே, ஹார்மீஸ், ஹமீது, சபீர், அமீன், ஆகியோரின் உற்சாக ட்டானிக்கோடு, அபு ஈஸாவின் மாற்றுச் சிந்தனைகளோடு, தாஜுதீனின் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளோடு, அபு இபுறாஹீமின் நெறிப்படுதுதலோடு,
அப்துல் மாலிக், சஃபீர் பாய், சித்திக் பாய், ஷஃபி அஹ்மது போன்றோரின் பங்களிப்போடும்
இந்தப் பதிவில் வந்துள்ள வர இருக்கின்ற நட்சத்திரங்களின் பங்களிப்போடு
அதிரை அஹ்மது காக்கா, ஜமீல் காக்கா, தம்பி எம் ஷாஃபி ஆகியோரின் ஆசீர்வாதத்தோடும்
அப்படியொரு எழுச்சியான கூட்டம் உருவாக இத்தளம் எல்லா முய்ற்சியும் எடுத்துக்கொண்டேதான் இருக்கும்.
"நடுவுல நெறையா மனுசர்வொளெ காணோம்" என்று அடிக்கடி இங்குள்ள நல்லுள்ளங்கள் குறைப்பட்டுக்கொண்டாலும் ஒரு தட்டில் நாம் வேலை செய்யும் கம்பெனியையும், மறு தட்டில் ஊர்ல இருக்குற குடும்பத்தையும் வைத்து இரண்டையும் பேலண்ஸ் பண்ணி நடு முள்ளாய் நாம் இருந்து எல்லாவற்றிற்கும் மேல் தராசின் (கை)பிடிமானம் படைத்த இறைவனின் கையில் இருந்து கொண்டு நம் வாழ்க்கை சக்கரம் பேரிடர்களின்றி அப்படியும், இப்படியும் நகர்ந்து கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்......
சகோ. அர அல ஊர் வந்திருப்பதால் அடுத்து பயணக்கட்டுரைகள் தூள் பறக்கும் என எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
வராவிட்டால் வாடும்
வந்தால் மலரும்
வசந்தமே கிரவ்னார்!!!
கவிக்காக்காவின் காவியங்கள்
கச்சாமுச்சாண்டு எழுதும் எம்மையும்
கவி பாட வைக்கும் கைங்கரியம்!!!
மாஷா அல்லாஹ்!!! மைண்ட் ப்ளோயிங்.....கீப் இட் அப் ஃபார் எவர்.....
கிரவுனின் வார்த்தை விளையாட்டை மீண்டும் இப்பொழுது மிகக்கவனமாக படித்தேன்...மாஷா அல்லாஹ்...கிரவுன் எங்களுக்கு நேரம் ஒதுக்கி இந்த வார்த்தைகளின் வித்தைகளை கற்றுத்தாருங்கள்
தம்பி நூர் முகமது அவர்கள் அலைபேசியில் அழைத்தார்கள்.
சில தனிப்பட்ட காரணங்களால் பின்னூட்டங்கள் தர முடியவில்லை. ஆனால் தொடர்ந்து அதிரை நிருபரில் வரும் அனைத்து கட்டுரைகளையும் கவிதைகளையும் படித்தே வருவதாகவும் கூறினார்கள்.
இந்தத் தகவலை அனைத்து நண்பர்களோடும் அவர்கள் சார்பில் பதிகிறேன். தம்பி சபீர் அவர்களின் அன்புக்கு நன்றியும் சொன்னார்கள்.
மிக முக்கியமாக நான் தெரிவிக்க வேண்டிய ஒரு செய்தி. நாங்கள் அடிக்கடி உரையாடுகிறோம். ஊர்ச்செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். கடந்த சில வாரங்களில் வேறு தளங்களிலும் பின்னூட்டமாக நான் எழுதிய சில கருத்துக்கள் நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களின் வெளிப்பாடே. ஆகவே நடுவுலே காணாமல் போன நட்சத்திரங்களின் பட்டியலில் அவர் பெயரை அன்புடன் நீக்கிடவும் வேண்டுகிறேன்.
ஆக இன்றைய பட்டியலில் இருவருக்கு ஆஜர் போடுங்கள தம்பி சபீர் அவர்களே!
அடுத்த நட்சத்திரம் ஷஃபாத்துதானே?
அனைவரையும் அரவணைத்து செல்லும் அற்புதமான மனம் படைத்த சபீர் காக்காவின் நல்ல மனம் கவியில் கமழ்கிறது
அன்பின் கவிவேந்தர் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,
காணாமல் போனவர்களின் பட்டியலில் என் பெயரும் வந்து விடக்கூடாதே என்ற ஓர் அச்சம் நேற்று முதல் என்னை ஆட்டிப் படைத்து உள்ளத்தை வாட்டி வதைத்து விட்டது. ஆக்கங்களால் அ.நி பக்கங்களை நிரப்ப இயலா விட்டாலும், பின்னூட்டங்களால் விடாப் பிடியாகத் தொடர்பில் தான் இருக்கிறேன். என் பணிச் சுமையைக் கண்டாலே என் “மன அழுத்தம்” ஏறி விடுகின்றது. கணக்குத் தணிக்கைக்கு ஆயத்தமாகும் பருவத்தில் இருக்கும் எங்கள் துறையில் எனக்கு வழங்கப்பட்ட பணிகளில் மட்டும் தேக்கம் ஏற்பட்டு விடுவதால் இன்னும் கணக்குத் தணிக்கையாளரை அழைக்க முடியாமல் நிர்வாகம் என்னையே உற்றுநோக்கிய வண்ணம் இருப்பதும், நானும் விடுமுறை நாட்களில் (வெள்ளி, சனி) பணிகளில் ஈடுபட்டும் இன்னும் 2012ன் எனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்;
காரணங்கள்:
1) என் அலுவலகக் கணினிக்கு வர வேண்டிய தகவல்களின் அடிப்படையில் தான் என்னால் எனக்கு வழங்கப்பெற்றுள்ள கணக்குப் பதிவுகளை முடிக்க முடியும்; ஆனால் அத்தகவல்களை எனக்கு அனுப்பி வைப்பவர்களின் “சோம்பலால்” அவர்களை விரட்டி விரட்டி வாங்க வேண்டியிருக்கின்றது.
2) 2012 க்குரிய ஆவணங்கள் இன்னமும் இடைவிடாமல் வந்து கொண்டிருக்கின்றன (தையற்கடையில் துணி வந்து கொண்டே இருப்பது போல்)
3) இடையில் அருமை மகன் தேர்வெழுதும் இத்தருணத்தில் தினமும் இந்தியாவிற்கு அலைபேசியில் பேச வேண்டியுள்ளது.
4) துபையில் என்னைக் கவியரங்கிற்கு அழைக்கும் அனைத்து அழைப்புகளையும் நிராகரித்து விட்டேன்
இந்நிலையில்,
என்மீது நம்பிக்கை வைத்து வியாழன் தோறும் இலண்டன் தமிழ் வானொலியில் என் கவிதைகளை வேண்டி விரும்பிக் கேட்பதால், அங்குத் தவறாமல் வியாழன் கவிதை நேர ஒலிபரப்புக்கு மட்டும் கவிதைகள் (என் வலைத்தளத்தில் முன்னரே பதிவு செய்தவற்றிலிருந்தே அனுப்புகிறேன்) சில நேரங்களில் அவர்கள் தரும் தலைப்புக்கு எழுதி அனுப்புகிறேன்.
மேலும், “விழிப்புணர்வு பக்கங்கள்” வலைத்தளத்தில் என் கவிதைகள் சனிக்கிழமை தோறும் வெளியாகும் என்று அறிவிப்பை (என் மீது நம்பிக்கை வைத்து) கொடுத்து விட்டார்கள்; அதனால், புதியதாக எழுதாவிட்டாலும் ஏற்கனவே என் வலைத்தளத்தில் வந்தவற்றையே மீள்பதிவாக அனுப்பி அவர்களின் அவ்வறிவிப்புக்கு மதிப்பளித்து வருகின்றேன்.
அதிரை நிருபரில் சில கட்டுப்பாடுகளும் உள; நெறிமுறைகள் உள; ஏற்கனவே வந்தவைகள் பதியப்படா; என்ற நடை முறைகளை அடியேன் மதிப்பதால் புதியதாக எழுதும் கவிதையை மட்டும் தான் அதிரை நிருபர்க்கு அனுப்புவேன்; அதனால், தயவுசெய்து என்னையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்து விட வேண்டாம் என்று கவிவேந்தர் அவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை நிருபர் தளத்தை மிகவும் சுவாரஸ்யமானத் தளமாக மிளிரச் செய்த அத்தனைபேரும் இந்த "நடுவுல..." பதிவில் நினைவுகூரப்படுவர். தொடர்ந்து பதிவுகள் வாயிலாகவோ பின்னூட்டங்களாகவோ தொடர்பில் இருப்பவர்களை வாழ்த்தி நன்றி சொல்லிக்கொள்வோம்
அஹமது இர்ஷாத், எல் எம் எஸ். அபு பக்கர், என் ஷஃபாத், சேக்கனா நிஜாம் ஆகியோர் வரிசையில் முன்னணியில் உளர்.
பார்ப்போம்.
இந்தப் பதிவேட்டை வாசித்துக் கையொப்பமிட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி, வஸ்ஸலாம்.
குறிப்பாக அஹ்மது காக்கா அவர்களுக்கு என் ஸலாமும் துஆவும்.
//Adirai Ahmad சொன்னது…
அடுத்த நட்சத்திரம் ஷஃபாத்துதானே?//
ஆம் ! அவர் இல்லாமலா !
தனது கவிதை வரிகளின் துவக்கத்திலேயே ஸ்டாரை வைப்பவராயிற்றே !
அன்பின் கவிச்சகோதரரே...
//நாட்டையே ஆளும் கோட்டையைப் பிடிக்க வேண்டிய அண்ணன் தம்பிகள் கூட்டம் ஒன்றை விரைவில் உருவாக்கவே நான் இந்த ஆட்டையைத் துவங்கினேன்.//
நல்ல எண்ணத்துக்கு நற்கூலி உண்டு,அல்லாஹ் நாடினால் தங்கள் நல்லெண்ணம் நிறைவேறும்.
//அதிரை நிருபர் தளத்தை மிகவும் சுவாரஸ்யமானத் தளமாக மிளிரச் செய்த அத்தனைபேரும் இந்த "நடுவுல..." பதிவில் நினைவுகூரப்படுவர். தொடர்ந்து பதிவுகள் வாயிலாகவோ பின்னூட்டங்களாகவோ தொடர்பில் இருப்பவர்களை வாழ்த்தி நன்றி சொல்லிக்கொள்வோம்//
பதிவுகளும் பின்னூட்டங்களும் இறைவனின் பிரியத்தையும் அதன் மூலம் நமக்கு நற்பலனையும் அளிக்கக்கூடியதாக அல்லாஹ் அமைத்துத்தருவானாகவும்
//தமிழ்பால் கறக்கும் கோனார்(கவிச்சக்கரவர்த்தி) சொன்னார் என்றால் பிறர் "மனம் கோனார்" //
இதுதான் கிரவுன் டச் என்பது.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
நான் இந்த அவைக்கு வந்து போக முடியாமல் "காணாமல்" தகவல் சற்றுமுன் அலைப்பேசி வாயிலாக கிடைத்தது.
எங்கள் கவியரசுவின் தேடல் நியாயமானதே...
நடுவுல கொஞ்சம் நாள் கையடக்ககணினி கையில் இல்லை அதனால் என்னை காணோம்!
இன்ஷாஅல்லாஹ் மீண்டும் வருவேன்.
கவி காக்கா...
அடுத்த பட்டியலில் ஹமீத் காக்கா பெயர் இருக்கும் போல தெரியுது... ஆளே காணமே.. தூத்துக்குடி.. சென்னை.. என்று சேது சமுத்திர திட்டத்திட்டத்திற்கான ஏற்பாடு செய்வது போல் தெரியுது?
தம்பி தாஜுதீன்,
ஹமீது காக்கா வர இயலாத காரணம் கஸ்டம்ஸ் & கஷ்டம்ஸ்.
விரைவில் வருவார் விட்டதெல்லாம் தருவாரென அறிகிறேன். இன்ஷா அல்லாஹ்.
//Adirai Ahmad சொன்னது…
அடுத்த நட்சத்திரம் ஷஃபாத்துதானே?//
தம்பி ஷஃபாத்துக்கு மட்டும் ஏந்துக்கிட்டு சாச்சா எங்கேர்ந்து தான் வர்ராஹளோ????
நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் ! என்னாச்சு?
நட்சத்திரங்கள் பார்க்க அழகாக இருக்க அதனை யாராலும் அதன் ஓட்டத்தை நிறுத்த முடியுமா !
கண்டு களித்தவர் ஏராளம் அவர்கள் கொட்டிய கருத்து குவியல்களில் அள்ளிச் செல்ல நிறைய காணக் கிடைகின்றன .
நட்சத்திரங்களைக் காணாமல் போவதற்கு ஆசிரியருக்கு என்னாச்சு?
நட்சத்திரங்கள் மறைவதில்லை அவைகள் மின்னிக்கொண்டுதான் இருக்கும் ஒரு காள் கண்ணில் குறைபாடோ,மேகமூதடத்தின் தடையோ? காணாமல் போயிருக்கும் தடைகள் நீங்கினால் மின்னுவது தெரியும்
எனக்கு தெரிஞ்சு நடுவுல கொஞ்சம்
நம் பகுதி எம் எல் ஏ வை காணோம்
நம் தொகுதி எம் பி யை காணோம்
ரோட்டைக் காணோம், பஸ்ஸை காணோம்
தண்டவாளத்தையும் கம்பனையும் காணோம்
புதிய பஸ் ஸ்டாட்ன்டை காணோம்
பாதாள சாக்கடையை காணோம்
மு செ மு சொன்ன பழைய 70 களில்
இருந்த நிலைகளை மொத்தத்தில்
காணோம்
//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…
நட்சத்திரங்கள் மறைவதில்லை அவைகள் மின்னிக்கொண்டுதான் இருக்கும் ஒரு காள் கண்ணில் குறைபாடோ,மேகமூதடத்தின் தடையோ? காணாமல் போயிருக்கும் தடைகள் நீங்கினால் மின்னுவது தெரியும்//
அஸ்ஸலாமு அலைக்கும், மு.செ.மு. சபீர் காக்கா,
காணாமல் போயிருக்கும் தடைகள் என்னவென்பதை தெளிவாக சொன்னால் அநி நட்சித்திரங்கள் எல்லோர் கண்ணில்பட வழி பிறக்கும்.
உள்ளேன் ஐயா..
ளேட் ஆச்சு.அதான் ளேட்டு..
தடைகள் என்பது அவரவர்கள் சூழ்நிலை
சூழ்நிலை சுமூக நிலையானால்
தடைகள் நீங்கிவிடும்
//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…
தடைகள் என்பது அவரவர்கள் சூழ்நிலை
சூழ்நிலை சுமூக நிலையானால்
தடைகள் நீங்கிவிடும்//
தெளிவ புரியல, இன்னும் கொஞ்சம் CLUE கொடுங்க சபீர் காக்கா.. :)
தாஜுதீன் சொன்னது…
கவி காக்கா...
//அடுத்த பட்டியலில் ஹமீத் காக்கா பெயர் இருக்கும் போல தெரியுது... ஆளே காணமே.. தூத்துக்குடி.. சென்னை.. என்று சேது சமுத்திர திட்டத்திட்டத்திற்கான ஏற்பாடு செய்வது போல் தெரியுது?//
காணமல் போன மறு பட்டியலில் என் பெயர் வருவதற்குள் நான் தலை காட்டி விட்டேன்
நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் ன்றே மாதிரி ஒரு சிலரையும் நடுவுலே காணோமே (என்னையும் சேர்த்து)எங்கே போனியே??
Post a Comment