ஒரு குற்றம் நடந்த அன்றே, வெறும் வெற்று பரபரப்புக்காக ஊடகங்களே தம் யூகத்தால் "முதல் தீர்ப்பை" நான் முந்தி நீ முந்தி என்று செய்தியாக எழுதி விடுகின்றன. முதல் நாள் சொன்ன தீர்ப்பை அடுத்தடுத்த நாள் ஊதி பெரிதாக்குகின்றன. பின்னர் அதன்மீதே மற்ற அனைத்து செய்திகளையும் 'ஆதாரங்களாக' கட்டமைக்கின்றன. இந்நிலையில்... பல தரப்பு வாதங்கள், விசாரணைகள், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் அலசி ஆய்ந்து... ஒரு நீதிபதியால் அந்த ஆரம்ப 'ஊடக தீர்ப்பை'... sorry... 'ஊடக திரிபை' மாற்றி... இப்போது உண்மையை தீர்ப்பாக எழுதி தர்மத்தை நிலைநாட்ட முடிவதில்லை..! இதற்கு அரசும் ஆதரவாக இருக்க முடிவதில்லை. It is really pathetic now a days..!
கல்லூரி மாணவி அம்ரிதா மோகன் |
திருவனந்தபுரத்தில் கல்லூரி மாணவி 'அம்ரிதா மோகன்' என்பவர் தன் தோழிகளுடனும், குடும்பத்தினருடனும் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். ஓட்டலில் குடும்பத்தார் வந்த ஜீப் மற்றும் தோழிகளுடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பார்க்கிங்கில் இருந்த இரு இளைஞர்கள் நடனம் ஆடி ஆபாச சொற்கள் பேசி ஈவ் டீசிங் செய்தனர். இதனால் ஆவேசமான அம்ரிதா விறுவிறு வென்று இளைஞர்களை நோக்கி பாய்ந்து சென்று அவர்களை தான் கற்றிருந்த கராத்தே மற்றும் களரி வித்தைகள் மூலம் அடித்தார். மாணவியுடன் தந்தையும், குடும்பத்தினரும், தோழிகளும் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டினார்கள். பின்னர் இளைஞர்கள் பற்றி அம்ரிதா போலீசில் புகார் செய்தார். கராத்தே / களரி தற்காப்பு கலை தக்க சமயத்தில் துணிச்சலை வரவழைத்து உதவி செய்ததாக மாணவி அம்ரிதா பெருமையுடன் ஊடக பேட்டியில் கூறினார். 20 வயதாகும் அம்ரிதா பி.ஏ. படித்து வருகிறார்.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதில் கொலையே செய்து இருந்தாலும் நீதி மன்றம் அப்பெண்ணை மன்னிக்கத்தான் செய்யும்..!சமீபத்தில் டெல்லி மாணவி கொடூர கொலையை கண்டு வந்த மக்களுக்கு இந்த மாணவி நிச்சயமாக சாதித்த பெண்மணியாகத்தான் மனதில் பதிவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை..! இதனை நன்கு புரிந்து கொண்டண ஊடகங்கள்..! உடன் செய்தி சமைக்க ஆரம்பித்தன, டிஆர்பி எகிறியது..!
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதில் கொலையே செய்து இருந்தாலும் நீதி மன்றம் அப்பெண்ணை மன்னிக்கத்தான் செய்யும்..!சமீபத்தில் டெல்லி மாணவி கொடூர கொலையை கண்டு வந்த மக்களுக்கு இந்த மாணவி நிச்சயமாக சாதித்த பெண்மணியாகத்தான் மனதில் பதிவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை..! இதனை நன்கு புரிந்து கொண்டண ஊடகங்கள்..! உடன் செய்தி சமைக்க ஆரம்பித்தன, டிஆர்பி எகிறியது..!
அடுத்தடுத்த நாட்கள் இப்படியாக பல ஊடகங்களில் இந்த செய்திகள் வர வர இந்த கல்லூரி மாணவியின் புகழ் பாரெங்கும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
ஈவ் டீசிங் பண்ணிய கொடூரர்களை, அரக்கர்களை, மனித மிருங்களை, பாலியல் வன்முறை யாளர்களை, பெண் தொல்லையர்களை (மீடியாவின் விதவிதமான இழிவு பட்டங்கள்தான்) அடித்து விரட்டியதால்... வீராங்கனை, இரும்பு பெண்மணி, அஞ்சா நெஞ்சி, பெண்ணுக்கு இலக்கணம், வீரத்திலகம், பாயும் புலி, சீறும் சிறுத்தை என்றெல்லாம் மீடியா தயவால் விதவிதமான சிறப்பு பட்டம் சேர்ந்து கொண்டது.
இந்த வீராங்கனைக்கு பள்ளி, கல்லூரி, மாதர் சங்கம், ரோட்டரி கிளப் என எங்கும் பல பாராட்டு விழா கூட்டங்கள். மாநில அமைச்சரே வீடு தேடி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். பல ஒளி ஊடகங்களின் ஸ்பெஷல் ஷோ பேட்டிகள், வார இதழ்கள் பேட்டிகள் என்று அவ்வாரம் இவர் புகழின் உச்சத்தில் இருந்தார். கராத்தேயும் களரியும் கூட சைடில் புகழ்பெற்றது.
.
இப்படித்தான், இவரின் புகழை மீடியா உயர்த்த உயர்த்த... அந்த இளைஞர்கள் நாளுக்கு நாள் கேவலப்பட்டு பெரிய வில்லனாகிப் போனார்கள்.
இப்படித்தான், இவரின் புகழை மீடியா உயர்த்த உயர்த்த... அந்த இளைஞர்கள் நாளுக்கு நாள் கேவலப்பட்டு பெரிய வில்லனாகிப் போனார்கள்.
இதற்கிடையில், அவர்களுக்கு இந்த கராத்தே அடி எல்லாம் போதாது, சட்டப்படியும் தண்டனை தர வேண்டும் என்ற பலரின் ஊடக கோரிக்கை விளைவால், அவர்களை தேடும் பணி தொடங்கியது. ஒருவனை பிடித்துள்ளார்கள். விசாரிக்கிறார்கள். இன்னொருவனை தேடி வருகிறார்கள் என்று பல செய்திகள்.
இதோடு ஒருவழியாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி முடிவு பெற போகும் சமயம்... அப்போதுதான், விஷயம் வேறு மாதிரி போனது..!
தேடிப்பிடிக்கப்பட்ட அந்த இளைஞர் மூலம் வந்த செய்தி யாதெனில், அவர் செமை அடி வாங்கி உள்ளார். மூக்கு எலும்பு உடைந்து உள்ளது. ஆஸ்பத்திரியில் இருந்த அவரை போலீஸ் விசாரித்ததில் அவர், அம்ரிதா மீது அவருடைய புகாரை அளித்தார். இப்போது, இவர் தரப்பு போலீஸ் செய்தியை பார்ப்போம்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இவரும் இவருடைய நண்பரும் சென்றார்கள். இவர்கள் இருவரும் அரசின் IT@School project இல் தற்காலிக வாகன ஓட்டுனர்கள். அப்போது அரசு வாகனத்தை அங்கு பார்க்கிங் செய்வதில் இவர்களுக்கும் அவருடைய பெற்றோருக்கும் சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா, தம் தந்தை சார்பாக அந்த இருவரையும் தான் கற்ற கராத்தே களரி வித்தை கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. மற்றவருக்கு வேறு வகை காயம். காயமடைந்த இருவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பிரச்சனை விவகாரமாக உருவெடுக்கும் முன்னரே அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை இரண்டு பேர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர்கள் தன்னையும் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் அடிக்க வந்தோரை தற்காப்பிற்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்து அவர்களை முந்திக்கொண்டார்..!
வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மை நிலை அறியாமல், அம்ரிதாவின் ஒரு பக்க வாதத்தை மட்டுமே வைத்து, அதை மட்டுமே உண்மை என நம்பி சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை அளவில்லாமல் ஆதரித்து அவரை கதாநாயகியாக சித்தரித்தும் அந்த இளைஞர்களை அவர் தரப்பு வாதத்தை கேட்காமல், காமகொடூர வில்லன்களாகவும் சித்தரித்து செய்திகள் சமைத்து வெளியிட்டன. விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலை செய்து வந்த அரசுப்பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடு செய்ய இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் ஏதும் இல்லாமல் தன்னுடைய கராத்தே களரி பயிற்சியை அந்த இளைஞர்கள் மீது பிரயோகித்த தாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த இரு சாதாரண இளைஞர்கள், தோழிகளுடன் குடும்பத்துடன் உள்ள ஒரு பெண்ணை பாலியல் சீண்டல்கள் செய்திருக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் இப்போது நமக்கு எழுகிறது அல்லவா..?
வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மை நிலை அறியாமல், அம்ரிதாவின் ஒரு பக்க வாதத்தை மட்டுமே வைத்து, அதை மட்டுமே உண்மை என நம்பி சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை அளவில்லாமல் ஆதரித்து அவரை கதாநாயகியாக சித்தரித்தும் அந்த இளைஞர்களை அவர் தரப்பு வாதத்தை கேட்காமல், காமகொடூர வில்லன்களாகவும் சித்தரித்து செய்திகள் சமைத்து வெளியிட்டன. விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலை செய்து வந்த அரசுப்பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடு செய்ய இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் ஏதும் இல்லாமல் தன்னுடைய கராத்தே களரி பயிற்சியை அந்த இளைஞர்கள் மீது பிரயோகித்த தாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த இரு சாதாரண இளைஞர்கள், தோழிகளுடன் குடும்பத்துடன் உள்ள ஒரு பெண்ணை பாலியல் சீண்டல்கள் செய்திருக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் இப்போது நமக்கு எழுகிறது அல்லவா..?
இதனை நன்கு விசாரித்த நீதிபதி, அமிர்தா, அவரின் தந்தை மோகன், அவரின் நண்பர் வில்லியம், மற்றும் அம்ரிதாவின் இரு தோழிகள் ஆகிய ஐவர் மீதும், அரசுப்பணியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்தல், அரசுப்பணிக்கு இடையூறு விளைவித்தல் போன்றவற்றில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
ஆனால், நேற்று வரை கதாநாயகியாக வலம் வந்தவரை இன்று வில்லியாக்குவதா...? நேற்று வரை கொடூர வில்லன்களாகவே சித்தரிக்கப்பட்டவர்களை இன்று கதா நாயகர்கள் ஆக்குவதா..? என்று ஊடகங்களுக்கு புது குழப்பம் வந்தது..!
எனவே, தமது தன்மானத்தை காக்கும் பொருட்டாக, இந்த விஷயத்தையும் ஊடகங்கள் ஜோடனை செய்து நீதிபதியை 'பெண்ணாடிமைத்தனத்தை ஆதரிப்பவர்', 'ஆணாதிக்கவாதி', 'பெண்ணுரிமைக்கு எதிரான தீர்ப்பு' என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விவாதம் நடத்தியது. மீண்டும் அதிக டிஆர்பி எகிறல்..! பெண்ணிய அமைப்புகள் எதிர்க்கின்றன..!
அரசும் ஏற்கனவே இந்த பெண்ணுக்கு கடும் ஆதரவு தெரிவித்து இருந்ததால்... விளைவு..? அந்த நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..! ஊடகத்தால் சமைக்கப்பட்ட மக்கள் மன ஓட்டத்துக்கு மாற்றாக ஏதும் செய்ய முடியாத நிலையில்தான் அரசும்..! மக்கள் ஓட்டு முக்கியமாயிற்றே..!
மிக மிக சில ஊடகங்கள் மட்டும் விதிவிலக்காக உண்மை நிலையை ஆராய்ந்து வெளியிட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், பெருவாரியான முன்னணி ஊடகங்களின் இந்த விஷமச்செயலால்... அரசு வேலையும் போய், பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்று... காமகொடூரன் என்ற அவப்பெயரும் வாங்கி, அந்த இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்..! இவர்களுக்காக இவர்களின் தரப்பு நீதியை நிலைநாட்ட முயற்சித்த காவல்துறையினரும் நீதிபதியும் கூட அரசால் பந்தாடப்படுகின்றனர் என்றால்...
இதற்கெல்லாம் மூல காரணம் யார்..?
இதற்கெல்லாம் மூல காரணம் யார்..?
ஆகவே, நம் நாட்டில் எந்த ஒரு குற்றத்துக்கும், செய்தி என்ற பெயரில் முதல் தீர்ப்பை எழுதுவது ஊடகங்களே என்ற துர் நிலைக்கு நாம் வந்து விட்டோம்..! மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்ட இந்த செய்தியை... மன்னிக்கவும், 'நீதியை' மாற்ற ஒரிஜினல் நீதி மன்றமே எவ்வளவு கஷ்டப்படுகிறது... பாருங்கள் சகோஸ்..!
அப்சல் குருவுக்கு எதிரான 'கூட்டு மன சாட்சி' உருவாக்கப்பட்டது, நடுநிலை அற்ற ஒரு பக்க சார்பு ஊடகங்களால் தான்..! அதற்கு ஜீ தொலைக்காட்சி ஆவணப்படம் எடுத்து வாஜ்பாய் அத்வானி சப்போர்ட்டுடன் தலைமை தாங்கியது. அதனால்தான், அந்த நீதிபதியே கூட சட்டப்படி அல்லாது அந்த ஆவணப்படத்தின் பாதிப்பில் விளைந்த "இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தும்" அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக கூறியிருக்கலாம்..! ஒருவேளை மாற்றி மட்டும் தீர்ப்பு சொல்லி இருந்தால்... 'பாக்கிஸ்தானின் கைக்கூலி', 'பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் துரோகி', 'தேசப்பற்று அற்றவர்' என்றெல்லாம் இந்த நாக்கில் நரம்பில்லாத ஒரு சார்பு ஊடகங்கள் அவரை நிச்சயமாக சொல்லி இருக்கும்..!
ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்னரும் இப்படித்தான் ஒரு பக்க சார்பு செய்திகள், ஊடகங்களால் சமைக்கப்படுகின்றன. எப்படி நியூஸ் சொன்னால் போனியாகுமோ, எதை சொன்னால் தமது டிஆர்பி எகிருமோ அப்படித்தான் அதைத்தான் நியூஸ் சொல்கின்றன..! எது உண்மை எது பொய் என்பது பற்றி பெருவாரியான ஊடகங்களுக்கு கவலையே இல்லை..!
இறுதியில் அவர்கள் சொன்ன செய்திகளுக்கு முற்றிலும் மாற்றமாக அவர்களால் சித்தரிக்கப்பட்ட வில்லன்கள் எல்லாம் 'நிரபாராதிகள்' என்று ஒரு சில நேர்மையான சிறந்த நீதிபதிகளால் விடுவிக்கப்படும் போது, அதை அதேபோல தலைப்புச்செய்திகளில் சொல்ல வெட்கப்படுகின்றன. அல்லது நீதிபதியை அவதூறு செய்கின்றன..!
2000 துவக்கத்தில், முகத்தை மறைத்து கண்களை மட்டும் காட்டும் ஒரு கருப்பு புருக்கா போட்ட பெண் புகைப்படத்தை காட்டி... தமிழ்நாட்டில் "மனித வெடிகுண்டு ஆயிஷா, இவர்தான்..!" என்று தலைப்புச்செய்திகளில் ஊடகங்கள் அலறின. மொத்த நாடும் அது போன்ற ஆடை உடுத்திய முஸ்லிம் பெண்களை பயங்கரவாதிகளாக பார்த்தன. முஸ்லிம் பெண்களின் முகத்திரையை கழற்றிப்பார்த்துவிட்டு, கையில் உள்ள ஆயிஷாவின் முகத்திரை அணிந்த போட்டோவை வைத்துக்கொண்டு "சரி, போ... முகத்திரை இல்லாத நீ ஆயிஷா இல்லை" என்ற வயிறு எரியும் வேதனை காமடி கூத்துக்கள் ஒவ்வொரு போலீஸ் செக் போஸ்டிலும், டிராஃபிக் சிக்னலிலும் அரங்கேறின..! ஆனால், 'அது போலி நியூஸ்', 'மனித வெடிகுண்டு உண்மை அல்ல' என்று போலிஸே சொன்ன போது, அந்த உண்மையை ஊடகங்கள் சொல்ல வெட்கப்பட்டு அப்டியே அமுக்கின..!
இதோ... இந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பில் கூட...
முதன் முறையாக 'ஸ்லீப்பர் செல்கள்' வந்து விட்டனர். சினிமாவை சினிமாவாக பார்க்காத ஊடகங்கள் 'துப்பாக்கி' படத்தின் கதையை ஹைதராபாத் குண்டு வெடிப்பு செய்திகளில் ரீல் ஓட்டிக்காண்பிக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த 'ஊடக துப்பாக்கியின்' முதல் ரீலே....... பிக் ஃப்ளாப்...!
பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இங்கே ஹைதராபாத் வந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து குண்டு வைத்த ஓர் 'இந்தியன் முஜாஹிதீன் ஸ்லீப்பர் செல்' என்று ஒருவரின் புகைப்படத்தை முஸ்லிம் என்று சொல்லி போட்டார்கள். பல ஊடகங்களில் இந்த ஃபோட்டோ வர...
அய்யகோ... அந்தோ பரிதாபம்..!
அந்த நபர் பாகிஸ்தானின் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினர்..! ஆனால், இவர் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பால் கராச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டு, பப்ளிக்காக அடக்கம் செய்யப்பட்டு விட்டவர்..!!! (பாக். செய்தி தள சுட்டி)
"போனமாசம் எங்க நாட்டில் செத்து அடக்கப்பட்டவன், எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்..? மயான குழியிலிருந்து எழுந்து வந்தா..?"
-----என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..?
-----என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..?
ஜனநாயகத்தின் ஒரு தூணாக உம்மில் பெரும்பாலோர் இல்லை..! மீதி தூண்களையும் வெட்டும் கோடரியாகத்தான் உம்மில் பெரும்பாலோர் இருக்கிறீர்கள்..! செய்திகளை நடுநிலையாக தாருங்கள். ஒரு பக்க சார்பாக சமைக்காதீர்கள். குற்றங்களில் தீர்ப்பு எழுதும் அதிகப்பிரசங்கி வேலை உங்களுக்கு இனி வேண்டாம்..! தயவு செய்து திருந்துங்கள் ஊடகங்களே..!
எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
---திருவள்ளுவர்
---திருவள்ளுவர்
செய்தியை சொல்லும் ஊடகம் அப்படி மெய்ப்போருள் காணாவிட்டால்...?
(உண்மையை ஆராயாமல்) ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(ஹதீஸ்நூல்: முஸ்லிம் 6)
முஹம்மது ஆஷிக்
நன்றி:http://pinnoottavaathi.blogspot.com/2013/02/blog-post_28.html
11 Responses So Far:
முகம்மது ஆசிக் ...
நாள்தொருஆக்கம் ..அற்புதமான நடை ...கூட்டு மனசாட்சி ..போன்ற
சொல் ஆற்றல் கியான்ட் விதம் பழுத்த எழுத்தாளரின் சாயல் காட்டுகிறது ..
ஊடக ஆதிக்கம் .வில்லியை கதாநாயகியைக் காட்டியதை அற்புதமாய் புரிய
வைத்து நமது சமூக பிரச்னையையும் சுட்டி காட்டியதை வரவேற்கிறேன்
Excellent Mr. Ashiq.
பலருடைய மனங்களில் எரிந்து கொண்டிருந்த எரிமலையை பிழம்பாகக் கொட்டி இருக்கிறீர்கள்.
கடந்த வாரம் கூட மஸ்கட்டில் இருந்து ஒரு பெண் கொண்டுவந்த வெடிக்கும் பொருளை சுங்க அதிகாரிகள் சோதனைக்குப் பின் விடுவித்ததாக செய்திவந்தது. இதையே ஒரு முஸ்லிம் பெண் கொண்டு வந்து இருந்தால் ஓமன் நாட்டில் பயிற்சி பெற்ற பெண் தீவிரவாதி கேரள விமான நிலையத்தில் கைது என்று அமளி துமளி யாகி இருக்கும்.
விமான நிலையத்தில் பெண் வெடிகுண்டுடன் பிடிபட்டார்....
@ பத்தனம் திட்டையைச் சேர்ந்த பிரசிதா அருண் என்ற பெண் மஸ்கட் நாட்டிற்கு செல்வதற்காக திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு வந்தாள். அவள் பையில் ஒரு வெடி குண்டு இருந்தது.
அதை கண்டு பிடித்த அதிகாரிகள் அவளிடம் விசாரித்தபோது, "கணவரோடு மஸ்கட்டில் ஷாப்பிங் போனபோது வாங்கினேன். அது வெடி குண்டு என்று எனக்குத் தெரியாது" என்றாளாம்.
போலீசார் அவளை கைது செய்து நீதிபதி முன்னால் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவளை உடனே ஜாமீனில் விடுவித்தார்....
---------------------------------------------------------------------------
இது செய்தி.
=========
@ இது ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தால் என்ன நடக்கும்?????
--------------------------------------------------------------------------
ஹைதராபாத் குண்டுவெடிப்பில் முஸ்லிம் பெண்ணுக்குத் தொடர்பு.
--------------------------------------------------------------------------
பயங்கர வெடி குண்டுகளோடு பெண் தீவிரவாதி பிடிபட்டார்...
-------------------------------------------------------------------------
இன்று முஸ்லிம் பெண் தீவிரவாதி ஒருவரை விமான நிலைத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்...
-------------------------------------------------------------------------
விமான நிலையத்தை தகர்க்க வந்தவளா?
-------------------------------------------------------------------------
காவலில் வைத்து போலீசார் துருவித் துருவி விசாரணை..
-------------------------------------------------------------------------
மத்தியப் புலனாய்வுப்படை விரைந்து வருகிறது...
------------------------------------------------------------------------
@ அவளை சின்னாபின்னமாக்கி .. சாகிற வரை சிறையில் போட்டு ...அவள் குடும்பத்தையே நாசமாக்கி இருக்க மாட்டார்களா?
@ இந்த நாட்டின் நீதி நியாயங்களையும் பத்திரிக்கை செய்திகளையும் புரிந்து கொள்ளுங்கள்
-Info : Thanks to Abu Haashima Vaver
முகநூலில் இருந்து.
மா ஷா அல்லாஹ்! தெளிவான ஆக்கம்.
ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஊடகங்களின் உலரல்களை உடனே உண்மையெனக் கொள்ளல் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால பாமரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் சிந்தித்து செயல்படுவதற்கான் சாத்தியங்கள் குறைவே. அதையே ஊடகங்கள் தன்களின் முதலீடாக ஆக்கிக்கொண்டன.
காசுக்காக வேசித்தனம் செய்யும் ஊடகங்கள் ஜனனாயகத்தின் தூண்களல்ல, தேசத்தின் புற்றுநோய்
நல்ல ஒரு அலசல், ஊடகங்களுக்கு ஒரு செருப்படி...!
இப்ப எங்கடா போனான் இந்தியன் முஜாஹிதீன் ? (இப்பெயர் வைத்ததே இந்திய அரசும் / பத்திரிக்கைகளும் தான் இப்பெயர் கொண்ட அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது என்று கேட்டு எம்பிக்கள் பிரதமரை முற்றுக்கையிட்டது நினைவிருக்கலாம்)
மதுரைக்கு அத்வானி வருகை தந்த போது பைப் வெடிகுண்டு வைத்த சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் ஆகிய பயங்கரவாதிகள் கைது - மேலும் போலீசார் தீவிர விசாரணை.............!!
ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர் - புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிகுண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம், கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்ற போது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா ? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனிமனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும் ? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது ? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா ? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும்.
மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும்.
மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
முகநூலிருந்து
ஊடகம் பேசிடும் தன்மை
...ஊனமாய்ப் போகுதே உண்மை
நாடகம் போடுதல் கண்டு
...நாணமே நாணிடும் ஈண்டு
பாடமும் பாடலும் நம்மை
பார்த்திடும் தோரனை வெம்மை
...வேடமே போடுதல் என்றும்
வேகமாய்த் தீர்த்திட நின்று
தீவிர வாதியாய்க் காட்டி
...தீர்த்திட ஏனிதில் போட்டி?
மேவிடும் வேற்றுமை யாரால்?
...மேதினி கூறிட வாராய்!
பாவிகள் காட்டிடும் வஞ்சம்
...பாலினு லூற்றிடும் நஞ்சாம்
தாவிடும் ஓரினம் நம்மை
....தாழ்ந்திடக் கூவுதல் உண்மை
ஆயிரம் கைகளைக் கொண்டு
....ஆதவ(னைச்) சாடுதல் போன்று
ஆயிரம் பொய்களைக் கூட்டி
....ஆர்ப்பரி(க்கும்) ஊடகம் காட்டி
வாயினா லூதிடும் காற்றால்
....வாய்மையும் நீங்கிட மாட்டா
ஆயினும், வேற்றுமைத் தூண்டி
.....ஆணவம் தோன்றிட வேண்டா.
நாடுவோம் தாயக மென்றும்
.....நானிலம் போற்றிட வேண்டும்
சாடுவோம் ஊடகம் செய்யும்
.....சூழ்ச்சிகள் யாவுமே பொய்யாம்
கூடுவோம் நம்பலம் காட்ட
கூனலை நிமிர்த்திட வேண்டி
தேடுவோம் ஊடக வெற்றி
தேடினால் கிடைத்திடும் பெற்றி
அயோக்கியனுக்கு அழகான வாழ்க்கை
அப்பாவிக்கு அவ பெயரும் , வேலைநீக்கமும்
கூட்டு மனசாட்சியின் இலக்கணத்தை கற்று
கொடுத்த காவி காங்கிரஸே..
தீவிரவாத வழக்கில் நிரபராதி என
விடுதலை செய்யப்பட்ட
இளம் விஞ்ஞானி அஜாஸ் அஹம்மது மிர்ஷாவுக்கு
வேலை நீக்கம்..
காவி பயங்கரவாதி ராணுவ அதிகாரி புரோஹித்திற்கு
சம்பளமும் சலுகைகளுமா...?
நடிகைகளின் வீட்டு நாய் கரு தரித்தால் கூட சிறப்பு
மலர் வெளியிடும் ஊடகமே..
இதனை நீ கேள்வி கேட்க துணிவில்லாமல் மெளனம்
சாதிப்பது ஏன்?
ஜனநாயகத்தின் நான்காம் தூணான உன்னை தூக்கில் இட்டது யார்?
காவி சிந்தாந்தத்தில் செல்லரித்து போன இந்திய தேசமே இனி உனக்கான விடுதலையை பெற்று தரப்போவது யார்?
http://www.deccanchronicle.com/130304/news-current-affairs/article/drdo-reinstate-terror-accused-if-charges-dropped
புரோகித் சம்மந்தமான ஆதாரம்....
http://www.inneram.com/news/india-news/purohit-getting-full-salary-from-jail-9420.html
முகநூல் பதிவு
இதோ "புதிய தலைமுறை" யிலிருந்து தற்போதைய செய்தி --
தீவிரவாதம் குறித்த செய்திகளில் எச்சரிக்கை தேவை: ஊடகங்களுக்கு காட்ஜு அறிவுரை
பதிவு செய்த நாள் - மார்ச் 07, 2013 at 9:20:40 AM
தீவிரவாதம் குறித்த செய்திகளை வெளியிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய காட்ஜூ ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தீவிரவாத மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழும் போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என காட்ஜூ கூறியுள்ளார்.
சிறுபான்மையினர் தேசிய கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தமக்கு எழுதிய கடிதத்தில், ஐதராபாத் வெடிகுண்டு தாக்குதலில் யூகத்தின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள காட்ஜூ, இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு வருவது பற்றியும்,இதனால் இஸ்லாமியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது என்றும் சச்சார் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தீவிரவாதம் குறித்த செய்திகளை வெளியிடும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படும் படி செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்து நிலவுவதால் காவல்துறையினரும் எந்த ஒரு தாக்குதல் நடைபெற்றாலும், உரிய விசாரணை செய்யாமல் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து வருகின்றனர் எனவும் காட்ஜூ கூறியுள்ளார்.
நன்றி : புதிய தலைமுறை
Assalamu Alaikkum
Good article which analyses the level of reliabily of news media with good examples.
The Thirukkural mentioned in the article should be used as a criteria for finding facts always.
There is an another example, that more and more news and attractive marketing techniques are being spreaded in social media(eg. facebook, linkedin, etc) which may not be a reliable. Recently an Indian student was living in London trusted the news about some medicine supposed to improve health. Once he used the medicine for few days, he died unfortunately.
We need to double check the any news(from any individual or media) for reliability and fact. Then we can be safe inshaAllah.
Thanks and best regards,
B. Ahamed Ameen
from Dubai.
எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்
இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவி...ரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன.
நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது ஊடக விபச்சாரம் எனும் சேவையைச் செவ்வனே செய்கின்றன .
இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை.
ஊடகங்களின் செயல்பாடுகளை பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு போன்ற உண்மையான நடுநிலை நீதிபதிகள் இருக்கிற நாட்டில்தான் ஊடக பயங்காரவாதிகள் பேனை பெருச்சாளியாக்கி கீழ்த்தரமான தொழில் செய்து வயிற்றை நிரப்பி கொள்கிறது .
நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதிகளே காரணம் என்ற உண்மை ஹைதராபாத் விஷயத்திலும் என்றாவது ஒரு நாள் வெளிப்படும்.
http://justicekatju.blogspot.in/2013/03/press-note-false-implication-of-muslims.html
முகநூல் பதிவு
Post a Comment