நோன்புக்கு பிறகு சிலருக்கு செறிமானக்கோளாறுகள் தலைதூக்கக் கூடும்.இப்படி செறிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏற்கனவே [நோன்பு இல்லாமலே] செறிமானக் கோளாறு இருந்திருக்கக் கூடும். நோன்பு முழுக்க ஹதீஸ், இபாதத் என இருந்து விட்டு நபி ரசூல் [ஸல்] சொன்ன ஒரு சின்ன விசயத்தை கவனம் செலுத்தாமல் அதை தூக்கி பரன் மீது போட்டு விட்டு 30 நாளும் விட்டுப்போன சாப்பாட்டை எல்லாம் கிரடி கார்டு கம்பெனி மாதிரி கடைசி பைசா வரை வசூலிப்பது மாதிரி சாப்பாட்டை எல்லாவற்றையும் ஒரெ நாளில் அல்லது 2, 3 நாளில் சாப்பிட நினைக்கும் "ஜின்" தனம் தான் இதற்கெல்லாம் காரணம் சரி நபி [ஸல்] என்ன சொன்னார்கள் [உணவு விசயத்தில்] என்பது தெரியும் stomach பகுதியில் 1 பகுதி உணவு, 1 பகுதி தண்ணீர், 1 பகுதி காலியாக இருக்க வேண்டும் [மொத்தமெ 3 பிரிவுதான்] காரணம் உணவு உள்ளே போனவுடன் இயற்கையாக அமிலம் [HCL/ Muriatic acid] உணவுடன் கலக்க ஆரம்பித்துவிடும். இந்த நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் வரக்காரணம் இந்த படத்தை பார்த்தால் தெரியும் sphincter பகுதி இயற்கையாக மூட விடாமல் நாம் செய்யும் தவறுதான்.
நீங்கள் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஆட்டிறைச்சித் துண்டை உள்ளே அனுப்பிவிட்டால் அதை தள்ளுவதற்கு உங்கள் குடல் சிரமப்படலாம், உடனே அது வாயுவை அனுப்பி உணவை அடுத்த ஸ்டேஜுக்கு கொண்டு செல்லும். அதற்கு குடலில் வெற்றிடம் தேவை. சமயத்தில் ஆட்டிறைச்சிதானே என்று நீங்கள் சாப்பிட்டு விட்டாலும் அந்த ஆட்டின் லைஃப் ஸ்டைல் உங்களுக்கு தெரியாது. அது ஏற்கனவெ “Gym” க்கு போய் ”மிஸ்டர் ஆடு 2013” என பட்டம் வாங்கியிருந்து அதன் இறைச்சி பூப்போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு பெயர் தான் 'அறியாமை' சரி இப்படியெல்லாம் கவனமாக இருந்தால் 200 வருசம் வாழ முடியுமா? என 'க்ரோர்பதி' கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கலாம். பதில், ”முடியாது”தான் இருந்தாலும் வாழும் காலங்களில் நிம்மதியாக வாழ இவை உதவும்.
சிலர் வாழும் நாடுகளுக்கு தகுந்த மாதிரி தனது உணவு பழக்கத்தை வைத்துக்கொள்வதில்லை. Carbohydrate அதிகம் சாப்பிட்டாலும் அது செரிப்பதற்கு பிரச்சினை இல்லாத ஊர்கள் சவூதி, துபாய் போன்ற வெயில் கடுமையான ஊர்கள். அந்த ஊர்களில் வெழுத்துகட்டும் பிரியாணியை குளிர் அதிகம் உள்ள நாடுகளிலும் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னமாதிரி சாப்பிட்டால் see in hospital very soon. அதற்காக சவுதி, துபாய் போன்ற வெயில் நாடுகளுக்கு இப்படி வெளுத்துக்கட்ட N.O.C கிடைத்து விட்டது என நினைத்து விட வேண்டாம்.
சில சமயங்களில் நான் ஊர் போயிருக்கும் போது சிலர் என்னிடம் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பிப்பார்கள் “டாக்டர் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டான்” என சொல்வார்கள். இது வரை யாரும் ஒரு nutritionistஐ பார்த்ததாக இதுவரை என்னிடம் யாரும் சொன்னதில்லை. இதற்க்கு முன் ஒருமுறை சாப்பிடும் பழக்கங்கள் விசயமாக ஒருமுறை எழுதியிருக்கிறேன். http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_17.html [பசிக்காக சாப்பாடு]
ஜென் & தடுமல் [ ZEN & COLD ]
ஒரு ஜென் ஞாநி இடம் படித்த ஒரு மாணவன் இரவு நேரத்தில் அவருக்கு தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து நடு இரவில் ஊர் சுற்றப் போய்விட்டான்,
சுவரின் பக்கத்தில் ஒரு சின்ன கல் இருந்தது [அவன் சுவர் ஏற உதவிய கல்], இதைப்பார்த்த ஜென் ஞாநி அந்த கல்லை அகற்றி விட்டு அங்கேயே சுவற்றுக்கு கீழே உட்கார்ந்து இருந்தார், இரவில் ஊர் சுற்றி வந்த மாணவன் கல் என நினைத்து ஞாநியின் தலையில் காலை வைத்து இறங்கியவுடன் அவனுக்கு பயம், ஞானி தண்டித்து விடுவாரோ என “ ஏன் இரவில் ஊர் சுற்றுகிறாய் ? தடுமல் பிடித்துக்கொள்ளும்” – என்றார் அந்த ஞாநி, ஞாநி காத்திருந்ததின் purpose அதுதான், பெரும்பாலும் வாழ்க்கையின் purpose யிலிருந்து நாம் வேறுபட்டு செயலாற்றுகிறோம்.
ZAKIR HUSSAIN
இது ஒரு மீள்பதிவு
இது ஒரு மீள்பதிவு
5 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்
இப்புடி நல்ல நாளும் பெரியனாலுமா பாத்து இந்த கட்டுரைய போட்டு நல்ல மாதிரியா வாய்க்கும் வைத்துக்கும் திங்க உடாமா பண்ணிடியலே
நல்ல வேலை
எனக்கு செரிமானக் கோளாறு இல்லை.
ஒருவேளை கடுமையாக ஒரு பிடி பிடித்திருந்தாலும் இதைப் படித்து விழுந்து விழுந்து சிர்ப்பதிலேயே ஜீரணமாகிவிடும்.
கடினமான விஷயங்களை எப்படி இலகுவாக எழுதலாம் என்பதை தம்பி ஜாகீரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஞாநியின் தலையில் அந்தக் கல்லை தூக்கி அவன் இன்னும் போடலையா?
பிழைக்கத் தெரியாத பைத்தியகாரப்பயல்!.உதவி செய்றவனை நல்ல புத்தி சொல்றவனை எல்லாம் காரியம் முடிஞ்சதும் முடிச்சிடனும்!.
அப்பத்தான் நாம பொழைக்கலாம். Purpose என்றால் என்ன? வெலங்கலையே!
S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்
//பெரும்பாலும் நாம் வாழ்க்கையின் purpose சிலிருந்து வேறுபட்டு செயலாற்றுகிறோம்//
அது எங்க தொட்டில் பழக்கமாச்சே! 'அங்கே 'போறவரையும் மாத்தவே மாட்டோம்... நீங்க சொன்னா நாங்க மாத்திக்கிவோமோ!
எங்க தலைவரு ஆணை இடட்டும்.அடுத்த நிமிஷமே செஞ்சு காட்டுறோமா? இல்லையான்னு பாருங்கோ!
S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்..
Post a Comment