நாம் பெற்றுள்ள ஆறு அறிவுகளில் நான்காவது அறிவு கண்களின் வழியாக பெறப்படும் பார்வைப் புலனும், கண்ணால் பேசப்படும் வார்த்தை ஜாலங்களுமே,. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவைதான்.
முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எல்லா பெண்களும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மை இடுதல், இமைகளை சுற்றி கலர் இடுதல் போன்றவைகளை செய்து கண்களை கவர்ச்சிகரமாக காட்டுகின்றனர். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகின்ற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, நமது அழகையும் கெடுத்து விடுகின்றன. நம்முடைய அகத்தின் அழகை மற்றவர்களுக்கு படம் போட்டு காட்டும் பலமிக்க உறுப்பு'
“கண்ணே பாப்பா
என் கனிமுத்து பாப்பா”
என்ற பாடல் வரிகளில் குழந்தைகளின் கண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடலின் ஆரம்ப வார்த்தையே கண்ணை கொண்டு ஆரம்பிக்கின்றார் கவிஞர். அந்த கண்களின் அழகை இந்த குழந்தைகளின் முகத்தில் பாருங்கள். இறைவனின் படைப்பின் கண்களுக்கு உள்ள அற்புதத்தை பற்றி விஷுவலாக காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே இப்படி ஒரு உதாரணம். இந்த குழந்தைகளின் பார்வை ஒன்றே போதும் நம் உள்ளத்தில் உள்ள கவலைகள்யாவும் பறந்து தவிடு பொடியாகிவிடும்.
நம்முடைய உடலில் மூளைக்கு அடுத்து மிக சிக்கலான உறுப்பாக கருதப்படுவது கண்கள்தான். கண்கள் தன்னுள்ளே 2 மில்லியன் வேலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 36,000 தகவல்களை பரிமாற்றம் செய்யும் ஆற்றல் நம் கண்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு இல்லாத ஒருவரால் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள விளக்கின் வெளிச்சத்தை பார்க்க முடியுமாம்.
மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மொத்த அறிவில் கண்களின் பங்களிப்பு மட்டும் 85 வீதம் ஆனால் இரவு பகல் என்றில்லாமல் எந்த ஒரு நொடியிலும் முழுமையாக செயல்படும் கண்கள்களுக்கு ஓய்வே இல்லை என்று சொல்லலாம்.
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக பார்த்து தெரிந்துகொள்ள, நன்கு உணர்ந்துகொள்ள நமது இரு விழிகள்தான் முக்கிய காரணமாகின்றன. இறைவன் நம் உடலிலே இவ்வளவு பெரிய அத்தாட்சிகளை வைத்திருக்கும்போது அவற்றை சிறிதும் எண்ணிப் பாராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய அவசர உலகில் வாழும் நம் சமுதாயம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பது புரியாத புதிராக இருக்கின்றது.
திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
51:20 وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ
51:20. உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
51:21 وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
51:21. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
அந்த அத்தாட்சிகளில் உள்ள சிலவற்றை கொஞ்சம் அலசிப் பார்ப்போம்
உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அவை ஆற்றும் பணிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. நாம் உயிர் வாழவும் நமது உடல் இயங்கவும் எல்லா உறுப்புக்களின் கூட்டு செயல்பாடுகளும் இன்றியமையாதவையாகும் அகப்புலன் புறப்புலன் என இரண்டாகப் பகுக்கலாம். கண், காது, மூக்கு, கை, கால் போன்றவை வெளியில் புலனாகுபவை. மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை உடலின் உள்ளே அமைந்தவையாகும். ஓர் உறுப்பின் அருமை, அதை இழக்க நேரும் போதோ, அது பழுதுபட்டுச் செயலிழக்கும் போதோ தான் முழுமையாக உணரப்படுகிறது.
உடல் உறுப்புகளில் இதுமதிப்பு மிக்கது, இது மதிப்பு குறைந்தது என்று எந்த உறுப்பையும் கூறுதல் இயலாது. அந்த அளவிற்கு ஒவ்வொன்றும் உடல் இயக்கத்திற்குத் துணை புரிகின்றது. எனினும் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒரு மனிதனால் கணப்பொழுதும் வாழ இயலாது. ஆனால் கண், காது, கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒருவன் வாழ முடியும். அவ்வாறாயின் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் உயர்ந்தனவா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் கூறலாம். ஏனெனில் மனிதன் நிறைவாழ்வு வாழத் தேவையான கல்வியறிவைப் பெறுவதில் கண்ணும், செவியும் முதலிடம் பெறுகின்றன. இவை இரண்டுமே நமது அறிவுக்கு விருந்து தரக்கூடிய உறுப்புகளே
மேலும் கண்களை பாதுகாக்கும் இமைகளின் அற்புதத்தையும் அதன் ஆற்றலையும் நம் கண் முன்னே சிறிது நேரம் கொண்டு வருவோம். மழை அல்லது பனியின்போது கார், பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது `வைப்பர்’ அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. ஆனால் எந்த `வைப்பரும்’ நம் கண் இமைகளுக்கு நிகராகாது.
நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி, தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ, காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன.
மழைநீர், வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும், இமைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும், எளிதில் சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது, முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர், கண்களுக்கு நன்மை பயக்கிறது. கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயன்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் நாம் அழுகிறோம் என்றே கூறலாம். இமைப்பதின் முக்கியத்துவத்தையும் இமைப்பது நின்றுவிட்டால் என்ன விபரீதங்கள் ஏற்படும் என்பதையும் நாம் சிறிது சிந்திக்க கடைமைபட்டுள்ளோம்.
மேலும் இறைவனின் படைப்புகளின் ஒவ்வொரு உறுப்புகளின் செயல் பாட்டை நாம் எல்லோரும் நன்கு அனுபவிக்கின்றோமே தவிர அந்த உறுப்புகளின் செயல் பாட்டை பற்றி எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அந்த உறுப்புகளில் ஏதாவது குறைபாடுகளோ அல்லது செயளாற்றத்தில் சிறிது மாற்றங்கள் நிகழும்போது டாக்டரை அனுகின்றோம், டாக்டர் எழுதித் தரும் ப்ரிஸ்கிரிப்ஸனைக் கொண்டு வந்து கண்ணாடியை வாங்குகின்றோமே தவிற அப்பொழுது கூட இறைவனின் நினைப்பு வருவதில்லை இறைவன் நம்மிடம் வைத்திருக்கும் இந்த அத்தாட்சிகளை நாம் பார்ப்பதுமில்லை கவனிப்பதுமில்லை.
தொடரும்...
அதிரை மன்சூர்
37 Responses So Far:
அறிவியல் விளக்கத்தில் ஹமித் காக்காவை போன்றும் ஹதிஸ் விளக்கத்தில் அருமை சகோதரர் தாஜுதீனை போன்றும் கவிதை விளக்கத்தில் க்ரவுனை போன்றும் பல்சுவையும் கலந்து கண்கள் செய்யும் வேலைகளை மன்சூர் காக்க இரண்டாவது அத்தியாதிலும் கலக்கிடீங்க போங்க நிறைய எதிர்பார்க்கிறோம் .இதுவரை அறிந்திராத அற்புத தகவல்கள் .14 மைல்களுக்கு அப்பால் உள்ள வெளிச்சத்தை காணும் கண் மாசால்லாஹ்.2 மில்லியன் வேலை பகுதிகள் இ மணி நேரத்தில் 36000 தகவல் பரிமாற்றங்கள் அல்லாஹ் மித பெரியவன் ...... மன்சூர் காகா தகவலுக்கு நன்றி
அது சரி குழந்தைகளின் கண்கள் ஓகே பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு அப்படியே கண் கண்களில் எடுத்து ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கு .ஆனால் அதற்க்கு மேலே உள்ள இரண்டு கண்கள் எங்கே இடிக்குதே
கண்கல் இரண்டும் இரன்டாம் தொடருக்கு முதல் கமாண்டு கொடுத்த அஹ்மது அவர்களுக்கு நன்றி
மேலே உள்ள கண்களை பெரிதாக இழுத்து போட்டுவிட்டார்கள் பதிவாளர்கள் அதை சிறிதாக போட்டு இருந்தால் எங்கேயும் இடிக்காது
கண்கள் இரண்டிற்கும் வரக்கூடிய மோனோகிராம் இதுதான் அடுத்த தொடர்களில் இன்ஷா அல்லாஹ் சிறிதாகவே காட்சி அளிக்கும்.
அஹ்மது அவர்களுக்கு சிரிய வேண்டுகோள்
அஹ்மது என்று பிரபலமிக்க நமது அமீர் அவகள் போன்றே யூசர் நேமில் வருவது என்னை போன்றோருக்கு கொஞ்சம் தடுமாற்றத்தை தருகின்றது எந்த அஹ்மது என்று பிரித்தரிய முடியாமல் தினறுவதால் தயவு செய்து தாங்கள் உங்களது உண்மை பெயருடன் வளம் வந்தால் மிகவும் ஏற்றமாக இருக்கும்
தயவுசெய்து குழம்பி இருக்கும் என்னைப் போன்றோரை தெளிபவு படுத்த உதவிடுவீர்கள் என நம்புகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு மன்சூர் காக்கா:
சகோதரர் M.B.A.அஹமது அவர்கள் இதற்கு முன்னர் வெளிவந்த பதிவுகளில் அறிமுகம் செய்து கொண்டார்கள், அவர்களுடைய முழுப் பெயர் M.பகுருதீன் அலி அஹமது, அதைத்தான் சுருக்கமாக M.B.A.அஹமது என்று வைத்திருக்கிறார்கள்.
இவ்விளக்கம் நமது சகோதரர்களிடையே நெருக்கமுடன் உரையாட உதவுமென்று நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ் !
கண்ணடிக்கிற வித்தைகள் பற்றிய ரகசிய, சுவராஸ்ய தகவல்கள்.
கண்ணிலும் உங்களிலும் நிறைய சமாச்சாரம் கொட்டிக்கிடக்கா?
மன்சூராக்கா அருமை!
யா நூர்! உனக்கே எல்லாப் புகழும்!
அப்படின்னா !
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் !
ஏன் ?
கண் பார்வையை தெளிவுற காண கண்ணாடி சரி, அதை மூக்கு கண்ணாடி என்கிறோம் !
ஏன் ?
'கண்'டதை எல்லாம் கேட்கிறோனோ !?
அப்படியோ வச்ச கண் வாங்காம படிச்சி முடிச்சிட்டேன் (வைப்பர் கூட யூஸ் பண்ணலே )
adiraimansoor சொன்னது…
//அஹ்மது அவர்களுக்கு சிரிய வேண்டுகோள்
அஹ்மது என்று பிரபலமிக்க நமது அமீர் அவகள் போன்றே யூசர் நேமில் வருவது என்னை போன்றோருக்கு கொஞ்சம் தடுமாற்றத்தை தருகின்றது எந்த அஹ்மது என்று பிரித்தரிய முடியாமல் தினறுவதால் தயவு செய்து தாங்கள் உங்களது உண்மை பெயருடன் வளம் வந்தால் மிகவும் ஏற்றமாக இருக்கும்//
நமது அமீர் அவகள் ADIRAI AHAMED என்ற பெயரில் வருவார்கள்
அல்லாஹ் அக்பர்....இந்த கண்ணை நல்ல முறையில் வழங்கியதற்க்காக மட்டுமே..நம் வாழ்நாள் முழுவது அல்லாஹ்வுக்கும் நன்றி செலுத்தினாலும் பத்தாது.....கண்களை விரியச் செய்த பதிவு / தகவல்கள்...நன்றி மன்சூர் காக்கா......தொடருங்கள்
கண்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய இந்தப் பதிவை கண்ணான தம்பி மன்சூர் அவர்கள் சிறப்பாக பதிவு செய்து வருகிறார்கள் .
கண்களில் காட்ராக்ட் செய்து கொண்ட அனுபவம் பற்றி நான் முன்பு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.
நாம் பெற்றுள்ள ஆறு அறிவுகளில் நான்காவது அறிவு கண்களின் வழியாக பெறப்படும் பார்வைப் புலனும், கண்ணால் பேசப்படும் வார்த்தை ஜாலங்களுமே,. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவைதான்.
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான். கண்ஜா(சா)டையை இப்படி விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்!
முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எல்லா பெண்களும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மை இடுதல், இமைகளை சுற்றி கலர் இடுதல் போன்றவைகளை செய்து கண்களை கவர்ச்சிகரமாக காட்டுகின்றனர். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகின்ற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, நமது அழகையும் கெடுத்து விடுகின்றன. நம்முடைய அகத்தின் அழகை மற்றவர்களுக்கு படம் போட்டு காட்டும் பலமிக்க உறுப்பு'
----------------------------------------------------------
ஆமாம் மச்சான் அந்த பொய்"மை"மிக்க சில பெண்களின் கண்"மை" ஆன்"மை"யை அசைத்து பெண்(மை)க்கு அருகாமையில் இழுக்கும் காந்தம்!எச்சரிக்கை அவசியம். ஆனாலும் பொதுவாய் கண்னுக்கு ஈர்க்கும் சக்தி பார்க்கும் போதே சி(ப)லரிடம் இருப்பது உண்"மை"தான்.
நம்முடைய உடலில் மூளைக்கு அடுத்து மிக சிக்கலான உறுப்பாக கருதப்படுவது கண்கள்தான். கண்கள் தன்னுள்ளே 2 மில்லியன் வேலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 36,000 தகவல்களை பரிமாற்றம் செய்யும் ஆற்றல் நம் கண்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு இல்லாத ஒருவரால் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள விளக்கின் வெளிச்சத்தை பார்க்க முடியுமாம்.
----------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ் ! கண்னைப்பற்றி இப்படி பளிச்'ன்னு விளக்கியிருக்கிறீர்கள்.
உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அவை ஆற்றும் பணிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. நாம் உயிர் வாழவும் நமது உடல் இயங்கவும் எல்லா உறுப்புக்களின் கூட்டு செயல்பாடுகளும் இன்றியமையாதவையாகும் அகப்புலன் புறப்புலன் என இரண்டாகப் பகுக்கலாம். கண், காது, மூக்கு, கை, கால் போன்றவை வெளியில் புலனாகுபவை. மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை உடலின் உள்ளே அமைந்தவையாகும். ஓர் உறுப்பின் அருமை, அதை இழக்க நேரும் போதோ, அது பழுதுபட்டுச் செயலிழக்கும் போதோ தான் முழுமையாக உணரப்படுகிறது.
உடல் உறுப்புகளில் இதுமதிப்பு மிக்கது, இது மதிப்பு குறைந்தது என்று எந்த உறுப்பையும் கூறுதல் இயலாது. அந்த அளவிற்கு ஒவ்வொன்றும் உடல் இயக்கத்திற்குத் துணை புரிகின்றது. எனினும் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒரு மனிதனால் கணப்பொழுதும் வாழ இயலாது. ஆனால் கண், காது, கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒருவன் வாழ முடியும். அவ்வாறாயின் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் உயர்ந்தனவா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் கூறலாம். ஏனெனில் மனிதன் நிறைவாழ்வு வாழத் தேவையான கல்வியறிவைப் பெறுவதில் கண்ணும், செவியும் முதலிடம் பெறுகின்றன. இவை இரண்டுமே நமது அறிவுக்கு விருந்து தரக்கூடிய உறுப்புகளே
-------------------------------------------------------------------
இப்படி கண்ணும் கருத்துமாய் எழுதியிருக்கீங்க!எல்லா புலன்களும் அவசியம், ஆனால் வசியம் பண்ணும் கண்னின் முக்கியத்துவம் கண்ணில் ஒற்றிகொள்வது போல இருப்பது இந்த விளக்கத்தின் சிறப்பம்சம்!
ஆனால் எந்த `வைப்பரும்’ நம் கண் இமைகளுக்கு நிகராகாது.
-------------------------------------------------------------
ஆமாம் நம் கண்ணுக்கு சரியான வைப்பர் எந்த மருத்துவர் "வைப்பர்??? சொல்லுங்கள்!!!.எல்லாம் கண்துடைப்பாகவே இருக்கும்.சரியான வைப்பர் வைக்கும் வைத்தியனே அல்லாஹ் மட்டுமே!
மழைநீர், வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன.
------------------------------------------------------
புருவங்கள் உயரச்செய்யும் செயல்கள் இவை. நம் உருவத்திற்கு அழகு சேர்பது மட்டுமல்ல புருவத்தின் தேவைகள் என்கிற தகவல் அருமை!
மேலும் இறைவனின் படைப்புகளின் ஒவ்வொரு உறுப்புகளின் செயல் பாட்டை நாம் எல்லோரும் நன்கு அனுபவிக்கின்றோமே தவிர அந்த உறுப்புகளின் செயல் பாட்டை பற்றி எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அந்த உறுப்புகளில் ஏதாவது குறைபாடுகளோ அல்லது செயளாற்றத்தில் சிறிது மாற்றங்கள் நிகழும்போது டாக்டரை அனுகின்றோம், டாக்டர் எழுதித் தரும் ப்ரிஸ்கிரிப்ஸனைக் கொண்டு வந்து கண்ணாடியை வாங்குகின்றோமே தவிற அப்பொழுது கூட இறைவனின் நினைப்பு வருவதில்லை இறைவன் நம்மிடம் வைத்திருக்கும் இந்த அத்தாட்சிகளை நாம் பார்ப்பதுமில்லை கவனிப்பதுமில்லை.
-----------------------------------------------------------------
பிரமாதம்!!!. எக்ஸ்லன்ட்!!!,ஹைலைட்!!! எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம், இது விஞ்ஞானத்தை விஞ்சும் மெய்ஞானம்! ஞான பார்வை! இது உள்ளத்திலிருந்து பார்க்கவேண்டியதை இவ்வளவு அழகா சொல்லிடீங்க மச்சான். வாழ்துக்கள்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!
//ஆமாம் மச்சான் அந்த பொய்"மை"மிக்க சில பெண்களின் கண்"மை" ஆன்"மை"யை அசைத்து பெண்(மை)க்கு அருகாமையில் இழுக்கும் காந்தம்!எச்சரிக்கை அவசியம். ஆனாலும் பொதுவாய் கண்னுக்கு ஈர்க்கும் சக்தி பார்க்கும் போதே சி(ப)லரிடம் இருப்பது உண்"மை"தான்.///
ஆமாம் கிரவுன் கண் பார்வையாலயே ஒரு வீரனை சாய்ச்சுபுட்டாங்களே :)
அது சரி சில மனைவிமார்கள் கண்ணாலயே பார்த்து கணவனை ரிமோட் போல கண்ட்ரோல் பன்றாங்கலே அது எப்படி ??
அது சரி சில மனைவிமார்கள் கண்ணாலயே பார்த்து கணவனை ரிமோட் போல கண்ட்ரோல் பன்றாங்கலே அது எப்படி ??
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அட! அனுபவம் பேசுதே? இது உண்மையின் வாக்குமூலம்! நன்மையில்தான் முடியும்!இது வன்மை இல்லாத கண்மை!கண்ணியமிக்க பெண்மை!
கண்ணுக்குப் போடும் கண்ணாடியின் லென்ஸில் ஒட்டியிருக்கும் தூசியைக் காண கண்ணாடியைக் கழட்டி விட்டுத்தான் பார்க்க முடியும் என்கின்ற அளவுக்குத் தான் மனிதனின் பார்வைத் திறனை அல்லாஹ் அமைத்து விட்டான்; இப்படிப்பட்ட மனிதன் தான் “கடவுளைக் காண வேண்டும் கண்ணால்; அப்பொழுதுதான் நம்புவேன்” என்று அடம்பிடிக்கின்றான.
உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இழந்தவனுக்குத் தான் தெரியும் அதன் அருமை;”தன்னை அறிந்தவன் தான் தன் ரப்பை அறிவான்”
விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் இழைந்த ஓர் அற்புதக் கண்ணாடி, உங்களின் ஆக்கம், இதனை அணிந்து கொண்டால் இம்மை மறுமை இரண்டின் நற்பலன்களும் தெரியும்!
ஓவியனாய்த் துவங்கிய உன்றன் ஆற்றல் இப்பொழுது அதிரை நிருபர் தளத்தில் அமைத்துக் கொடுத்தக் களத்தில் எழுத்தாளனாய் மிளிர்கின்றாய்; வாழ்க; வளர்க!
செய்கிற வேலைக்குக் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும்; இன்னும் சற்று அதிகமாக உழைக்க வைக்கும். ‘தன்னுடைய முயற்சியும் உழைப்பும் அங்கீகரிக்கப்படுகிறது’, என்ற எண்ணம் நம்பிக்கையை வார்க்கிறது. இன்னும் நன்கு செயலாற்ற வேண்டும் என்கிற வேட்கையை உண்டாக்குகிறது.
மனத்தில் பொறாமையும், தன் திறமையைப் பற்றி தாழ்வான எண்ணமும் அதனால் தோன்றிய உள்அச்சமும் கொண்டவர்களே அடுத்தவர்களைப் பாராட்ட மறுக்கிறார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களும் தன் நிலைமை மீறி ஆசைப்படாதவர்களும் அடுத்தவரைப் பாராட்டத் தயங்குவதே இல்லை. இந்த இரு பிரிவினரில் நாம் எந்தப் பிரிவில் இருக்கிறோம் என்பது மிக முக்கியம்.
கண்கள் பற்றிய இரண்டாம் தொடர் கண்கள் பற்றி விழிப்புணர்வு தந்தது. கண்களால் எல்லாவற்றையும் பார்த்து அறிந்த நாம் கண்களை பார்த்தறிய தவறி விட்டோம். மனிதன் மற்றவரின் குறைகயே காண்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்ததால் தன் கண்ணைப் பற்றி அறிய நேரமில்லாமல் போய் விட்டது. அதை அதிரை மன்சூரின் கண்கள் இரண்டும் கட்டுரை நினைஊட்டுகிறது. எளிய இனிய தமிழ் நடை. பெரிய விசயத்தை எளிதில் விளக்கும் சொல் நடை. தொடரட்டும் உங்கள் விழி பற்றிய விழிப்பூட்டும் புகட்டுரை.
Sமுஹமதுபாரூக்,அதிராம்பட்டினம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அழுத்தம் திருத்தமாகச் செல்கிறது தொடர்.
ஆஃப்ரிக்கா செல்லும் கனரக எந்திரங்களை 46 டிகிரி செல்ஸியஸிலும் 67 பெர்செண்ட் ஹியுமிடிட்டியிலும் நின்று ஃப்ளாட் ராக் எனப்படும் கண்ட்டெய்னரில் இரண்டு க்ரேன்கள் (க்ரவுன்களல்ல) வைத்து லோடிங் செய்யும்போது மணற்புயல் வேறு அடிக்க, தங்கள் பதிவைப் படிக்கவும் தாமதமாகிவிட்டது.
கண்ணெல்லாம் மண்ணு. கண்ணாட, வவைப்பர் எல்லாவற்றையும் தாண்டி கண்ணெல்லாம் மண்ணு. கல்ஃப்ல இதுல்லாம் சகஜம்தான்.
கட்டுரை கலக்கலாப் போகுது.
தொடர வாழ்த்துகள்.
//அன்பு மன்சூர் காக்கா:
சகோதரர் M.B.ஆ.அஹமது அவர்கள் இதற்கு முன்னர் வெளிவந்த பதிவுகளில் அறிமுகம் செய்து கொண்டார்கள், அவர்களுடைய முழுப் பெயர் M.பகுருதீன் அலி அஹமது, அதைத்தான் சுருக்கமாக M.B.ஆ.அஹமது என்று வைத்திருக்கிறார்கள்.
இவ்விளக்கம் நமது சகோதரர்களிடையே நெருக்கமுடன் உரையாட உதவுமென்று நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ் !//
தெளிவுற்றேன்
இந்த விளக்கம் கூட கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது நண்பர் ஹமீது அவர்கள் கொடுத்த விளக்கம்
//நமது அமீர் அவகள் ஆDஈறாஈ ஆஹாMஏD என்ற பெயரில் வருவார்கள்//
என்னை மிகவும் தெளிவாக்கியது ஜசாக்கல்லாஹ் கைரன் இனி குழப்பமில்லை.
//கண்ணடிக்கிற வித்தைகள் பற்றிய ரகசிய, சுவராஸ்ய தகவல்கள்.
கண்ணிலும் உங்களிலும் நிறைய சமாச்சாரம் கொட்டிக்கிடக்கா?
மன்சூராக்கா அருமை!//
ஜாபர் சாதிக் கண்ணடிக்கின்ற விஷயமும் காமப் பார்வையும் ரகசிய விஷையமும் இன்னும் இடம்பெறவில்லை அடுத்த 3 வது தொடரில் இடம்பெறும்
//அப்படின்னா !
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் !
ஏன் ?
கண் பார்வையை தெளிவுற காண கண்ணாடி சரி, அதை மூக்கு கண்ணாடி என்கிறோம் !
ஏன் ?
'கண்'டதை எல்லாம் கேட்கிறோனோ !?//
அபூஇபு
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் !
இது உண்மையான செய்திதான்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்பது புரிந்தால் அபூஇபுக்கு இதுபற்றி கேள்வி வராது
கண் கண்ணாடி வார்த்தை அமையவில்லை என்பதாலும் கண்ணாடியை மூக்கு தாங்கி பிடித்துக்கொண்டிருப்பதால் மூக்கு கண்ணாடி என்கின்றனர்.
அழுதால்தானே பிள்ளை பால் குடிக்கும்
//அப்படியோ வச்ச கண் வாங்காம படிச்சி முடிச்சிட்டேன் (வைப்பர் கூட யூஸ் பண்ணலே )//
அஹாஹா.....இதுக்கு இருக்கு பின்னாலே ஆப்பு
காருக்கு வைப்பரை யூஸ் பன்னிரியலோ இல்லையோ
கண்ணுல உள்ள வைப்பரை கண்டிப்பா போடனும் ஹமீது பாய்
///
அல்லாஹ் அக்பர்....இந்த கண்ணை நல்ல முறையில் வழங்கியதற்க்காக மட்டுமே..நம் வாழ்நாள் முழுவது அல்லாஹ்வுக்கும் நன்றி செலுத்தினாலும் பத்தாது.....கண்களை விரியச் செய்த பதிவு / தகவல்கள்...நன்றி மன்சூர் காக்கா......தொடருங்கள்//
தம்பி யாசிர் உங்கள் ஊக்கத்தினை எனக்கு பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி
கண்ணை பற்றி இன்னு நிறய விஷயங்கள் இன்ஷா அல்லாஹ் வந்துகொண்டே இருக்கும் படித்து பயன்பெறுக
//கண்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய இந்தப் பதிவை கண்ணான தம்பி மன்சூர் அவர்கள் சிறப்பாக பதிவு செய்து வருகிறார்கள் . //
மிக்க நன்றி காக்கா, நீங்கள் தறும் தகவல்களுக்கு முன்னாடி இதெல்லாம் சும்மா காக்கா
க்ரவுன் மச்சான்
உன்னுடைய பாரட்டுக்களுக்கும் வரிக்கு வரி கொடுத்திருக்கும் பின்னூட்டமும் மிகவும் அருமை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும் ஆனால் நேரம் போதவில்லை.
ஜசாக்கல்லாஹ் கைரன்
//விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் இழைந்த ஓர் அற்புதக் கண்ணாடி, உங்களின் ஆக்கம், இதனை அணிந்து கொண்டால் இம்மை மறுமை இரண்டின் நற்பலன்களும் தெரியும்!
ஓவியனாய்த் துவங்கிய உன்றன் ஆற்றல் இப்பொழுது அதிரை நிருபர் தளத்தில் அமைத்துக் கொடுத்தக் களத்தில் எழுத்தாளனாய் மிளிர்கின்றாய்; வாழ்க; வளர்க!//
கவியன்பனின் பின்னூட்டம் மிகவும் அற்புதமாகவும் என்னுடைய இந்த ஆக்கத்திற்கு பூஸ்ட் கொடுத்து ஊக்கமளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது ஜஸாக்கல்லாஹ் கைரன்
அன்பின் சிகரம்
ஊக்கதின் தந்தை
பாரூக் காக்கா அவர்களின் பாரட்டு பெறுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்
உங்கள் பாராட்டு கிடைத்து என் கண்கள் இரண்டிலும் ஆனந்த கண்ணீர் ததும்புகின்றது
//
அழுத்தம் திருத்தமாகச் செல்கிறது தொடர்.
ஆஃப்ரிக்கா செல்லும் கனரக எந்திரங்களை 46 டிகிரி செல்ஸியஸிலும் 67 பெர்செண்ட் ஹியுமிடிட்டியிலும் நின்று ஃப்ளாட் ராக் எனப்படும் கண்ட்டெய்னரில் இரண்டு க்ரேன்கள் (க்ரவுன்களல்ல) வைத்து லோடிங் செய்யும்போது மணற்புயல் வேறு அடிக்க, தங்கள் பதிவைப் படிக்கவும் தாமதமாகிவிட்டது.
கண்ணெல்லாம் மண்ணு. கண்ணாட, வவைப்பர் எல்லாவற்றையும் தாண்டி கண்ணெல்லாம் மண்ணு. கல்ஃப்ல இதுல்லாம் சகஜம்தான்.
கட்டுரை கலக்கலாப் போகுது.
தொடர வாழ்த்துகள்.//
நன்றி, சலாமத், சுகரன், சுக்ரியா, தேன்க்ஸ் அரிஹாத்தோ
ஒன்றுமில்லை நன்றியையும் அழுத்தமாக சொல்ல வேண்டுமல்லவா
உன்னை போன்ற நன்பர்களின் துஆ கிடைத்தாலே போதும் சபீர் தொடரின் வெற்றி நிச்சயம் கிடைக்கும்
//ஆமாம் நம் கண்ணுக்கு சரியான வைப்பர் எந்த மருத்துவர் "வைப்பர்??? சொல்லுங்கள்!!!.எல்லாம் கண்துடைப்பாகவே இருக்கும்.சரியான வைப்பர் வைக்கும் வைத்தியனே அல்லாஹ் மட்டுமே!//
க்ரவுன் மச்சான் சரியான சிந்தனை
இந்த வைப்பரை எந்த மருத்துவர்களாலும் வைக்க முடியாது அதன் சிந்தனை எந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் வந்ததில்லை காரணம் நம் உடம்பில் நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது ரொம்ப ஹார்டு ஓர்க் செய்கின்ற உறுப்புக்களில் இமையும் ஒன்று இமைப்பது பெர்மெனென்ட்டாக நின்று விட்டால்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று நம்மை பார்த்து அடுத்தவர்கள் மொழிய ஆரம்பித்துவிடுவார்கள்
வயதின் மூப்பை
முன்னெச்செரிக்கையாய்
தெரிவிக்கிறது
சின்ன சின்ன
எழுத்துகளை
மங்கலாக்கி.......
கண்ணாடி ஊன்று கோல்
உதவி தேடி
தடவி
தடுமாறும் பார்வைகள்.....
Post a Comment