Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 5 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


அதிகாலையில் கண் விழிப்பவர்கள்

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பார்கள் என்று கூறியுள்ளனர். 

இரவு நேரங்களில் விடிய விடிய வேலை பார்ப்பவர்களும் ஆட்டம் போடுபவர்களும் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. வார இறுதி கொண்டாட்டம் வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மறுநாள் காலை 10க்கு அல்லது 12 மணிக்கு இன்னும் சிலபேர் பகல் 2 மணிக்கே கண் விழிக்கின்றனர்.

அன்று முழுவதும் அவர்களிடம் ப்ரஷ்னெஸ் இருக்காது. எதையோ இழந்த மாதிரியும், நோயாளிகள் போன்றும் சுறு சுறுப்பின்றி அந்த முழு நாள் முழுதும் இருப்பார்கள். இதெல்லாம் இரவுகளில் சரியாக தூங்காததினால் ஏற்படக்கூடியவை. இவற்றை வார விடுமுறை நாட்களில் இரவு முழுதும் கண்விழித்து ஆட்டம்போடும் எல்லோராலும் உணரமுடியும். இதற்கு தோதாக இப்பொழுது அரபு நாடுகளில் பெரும்பாலும் வெள்ளி, சனி என்று வாரத்திற்கு இரண்டு  நாட்கள்  விடுமுறை நடைமுறைப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்கள் போடும் ஆட்டத்தின் கலைப்பு நீங்குவதற்குள் அடுத்த வீக் எண்டை எட்டிவிடுகின்றோம். வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு விட ஆரம்பத்த்திலிருந்து நாட்கள் வெகு சீக்கிரமாக நகர்கின்றன. இப்படி ஆட்டம் பாட்டத்துடன். நாட்கள் நகர்வதினால் மவுத் நம்மை நெருங்குவதை நாம் உணரவில்லை.

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.   

1438 வருடங்களுக்கு முன்னாடியே நமக்கு அருளப்பட்ட இறைவேத்தில் எல்லாத் தொழுகையையும் (சுபுஹுத்தொழுகை உள்பட  சேர்த்து) சொல்லும் வசனம்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்த்கையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேனுவார்கள் .  அல்குர்ஆன் 23:,2,9

சுபுஹுத்தொழுகை பற்றி அண்ணலாரின் பொன்மொழிகள்

“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என் நபிகள் (ஸல்) அவ்ர்கள் கூறினார்கள் 
ஆதாரம்: புஹாரி

பல ஊர்களில் “தூக்கத்தைவிட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று ஃபஜர் பாங்கு சொல்லும்போது அரபியல் அஸ்ஸலாத்து கைரும்மின நவ்ம் என்று இரண்டு முறை குரல் கொடுக்கின்றனர். தொழ ஆரம்பிக்கும் சுமார் 10 நிமிடத்திற்கு முன் “தூக்கதை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர் அப்படி இருந்தும் பெரும்பாலான மக்கள் தூக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுபுஹு தொழுகைக்கு கொடுப்பதில்லை. 

25 வருடங்களுக்கு முன்பு சுபுஹுத் தொழுகைக்கு இளைஞர்களை பெரும்பாலும் காணமுடியாது இளைஞர்களிடம் தவ்ஹீதின் எழுச்சி வந்த பின்பு சுபுஹுத் தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் இளம் வயதினரை பள்ளிவாசல்களில் கனிசமாக காண முடிகின்றது. சுபுஹுத் தொழுகை சம்பந்தமாக மக்களிடையே குறிப்பாக இளஞர்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும் சில சமயங்களில் அவர்களிடம் இருக்கும் பொடுபோக்கைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் “வைகல் தோறும் தெய்வனம் தொழு” என்பதும் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று” என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கும் மற்றும் காலைத் தொழுகையான பஜர் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதைக் காண மகிழ்வாக இருக்கும். 

காலையில் எப்படியாவது வைகறை (பஜர்) தொழுகைக்கு எழுந்தாக வேண்டும். தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். தூய்மையான் அதிகாலை காற்று உடல் நலத்திற்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும்போது சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் உற்சாகம் அது மிகவும் உயர்வானது. 

பால் காரர்களும் பேப்பர் காரர்களும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல்பட முடிகின்றது.  சுபுஹு தொழுத நாட்களையும் சுபுஹு தொழாத நாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைகள் உங்களுக்கு விளங்கும். அதிரைநிருபரில்  வளம் வரும் நண்பர்கள் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பாகள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

இன்ஷா அல்லாஹ் அடுத்த 6 வது தொடரில் கண்களின் முக்கிய பாகங்கள்  அதன் அமைப்பு பற்றியும் பார்வை பாதிப்பை பற்றியும்  பார்போம்
தொடரும்...
அதிரை மன்சூர்

28 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நன்மை தரும் பதிவு இது!

சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்க வழிகாட்டி.

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

Abdul Razik said...

// அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.//

This is really adequate point to feel the body with slim and vigorous. Nice article Mansoor Kaka

Abdul Razik
Dubai

Yasir said...

ஆஹா கண்ணை சப்போர்ட் பண்ணுவதற்க்கு ஒலவையாரையும்(ஒளவையார்) களமிரக்கிவிட்டீர்களே...எங்கேந்து புடிச்சிங்க அவ்வையாரின் வரிகளை....கண் நெடுந்தூர விசயங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டது...இனி கலக்கல்தான்...காத்திருப்போம்

Ebrahim Ansari said...

//அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். //

தம்பி மன்சூர். இந்த ஆய்வு சரியே .

ஆனால் ஒரு சிறு குறை "இலேசான உடல்வாகு கொண்டவர்கள்" என்றும் சேர்ப்பதற்கு முன் இந்த ஆராய்ச்சியாளர், என் போன்றவர்களைப் பார்த்தாரா?

கண்ணில் ஆரம்பித்த இந்த தொடர் காட்டாற்று வெள்ளம்போல் பெருகி ஓடுகிறது. பாராட்டுகிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆழமாய்ப் பார்த்திடும் அற்புதக் கண்களாய்
வாழவும் செய்திட வான்மறை சொல்லுடன்
தோழனின் ஆக்கமும் தொய்விலா வூட்டமே
வாழ்கவுன் ஆற்றலும் வையகம் போற்றவே !

sabeer.abushahruk said...

பார்வை இன்னும் இன்னும் விசாலமாகட்டும் - இதுவே
எழுத்துலகில் அதிரை மன்சூரின் விலாசமாகட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே கண் மட்டும்தான் பேசுகிறதுன்னு நினைத்திருந்தேன்...
இங்கே கவிதையும் பேசுகிறதே.... !

அதிகாலையிலே கண் விழித்து.... வாரத்தில் ஆறு நாட்கள்.... சூரிய ஒளிக்கு முன்னர் கருக்கால வேலைக்கு செல்பவர்களும் ஸ்லிம்மாக இருப்பார்களா ?

ZAKIR HUSSAIN said...

கண்கள் பற்றிய ஆய்வில் உண்மை இருப்பது இப்போதுதான் புரிகிறது. அதில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் விழிக்கும்போது அந்த காலை நேரம் நீண்ட நாட்களைத்தரும் அளவுக்கு இருக்கும். தாமதமாக எழுந்தால் எல்லாமே அவசர கதியில் தவறுகளைத்தான் அதிகம் செய்யத்தூண்டும்.

மன்சூர்.....இப்போதைக்கு 'கண்'ஆன எழுத்தாளர்

adiraimansoor said...

நன்றி ஜாபர் சாதிக்

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

ஜஸாக்கல்லாஹ் கைர்

அப்துல் ராஜிக்

adiraimansoor said...

ஜஸாக்கல்லாஹ் கைர்

யாசிர் நான் என் கண்கள் இரண்டையும் திறந்தேன்
என் பார்வை விசாலாமாகியது
மாஷா அல்லாஹ்

adiraimansoor said...

ஜஸாக்கல்லாஹ் கைர்

இப்றாஹீம் அன்சாரி காக்கா

//ஆனால் ஒரு சிறு குறை "இலேசான உடல்வாகு கொண்டவர்கள்" என்றும் சேர்ப்பதற்கு முன் இந்த ஆராய்ச்சியாளர், என் போன்றவர்களைப் பார்த்தாரா?

கண்ணில் ஆரம்பித்த இந்த தொடர் காட்டாற்று வெள்ளம்போல் பெருகி ஓடுகிறது. பாராட்டுகிறேன். //

உங்கள் அன்பான பாரட்டுக்களுக்கு நன்றி

உடல் வாகு என்று ஒன்று இருக்கின்றது என்னத்தே ஓசான் காற்றை சுவாசித்தாலும் அது சில பேருக்கு மாறாது எனக்கும் சேர்த்தே குறிப்பிடுகின்றேன்.

adiraimansoor said...

//ஆழமாய்ப் பார்த்திடும் அற்புதக் கண்களாய்
வாழவும் செய்திட வான்மறை சொல்லுடன்
தோழனின் ஆக்கமும் தொய்விலா வூட்டமே
வாழ்கவுன் ஆற்றலும் வையகம் போற்றவே !//

னன்றி கவியன்பா

adiraimansoor said...

//பார்வை இன்னும் இன்னும் விசாலமாகட்டும் - இதுவே
எழுத்துலகில் அதிரை மன்சூரின் விலாசமாகட்டும்.//

ஜஸாக்கல்லாஹ் கைர் சபீர்
உள்ளத்தால் வாழ்த்தும் வாழ்த்துக்களுக்கு என்றும்
ஆழமான தாக்கமுண்டு

adiraimansoor said...

//இங்கே கண் மட்டும்தான் பேசுகிறதுன்னு நினைத்திருந்தேன்...
இங்கே கவிதையும் பேசுகிறதே.... !

அதிகாலையிலே கண் விழித்து.... வாரத்தில் ஆறு நாட்கள்.... சூரிய ஒளிக்கு முன்னர் கருக்கால வேலைக்கு செல்பவர்களும் ஸ்லிம்மாக இருப்பார்களா ? //

ஜசாக்கலாஹ் கைர் அபு இபு

இதில் என்ன சந்தேகம்

adiraimansoor said...


//கண்கள் பற்றிய ஆய்வில் உண்மை இருப்பது இப்போதுதான் புரிகிறது. அதில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் விழிக்கும்போது அந்த காலை நேரம் நீண்ட நாட்களைத்தரும் அளவுக்கு இருக்கும். தாமதமாக எழுந்தால் எல்லாமே அவசர கதியில் தவறுகளைத்தான் அதிகம் செய்யத்தூண்டும்.

மன்சூர்.....இப்போதைக்கு 'கண்'ஆன எழுத்தாளர்//

என்னை எழுத்டுல்கிற்கு இழுத்த நண்பர் ஜாஹிரின் பின்னூட்டத்தை ஒவ்வொரு பதிவிலும் எதிர்பார்த்ததுண்டு ஜாஹின் பார்வை இப்பொழுதான் என் பக்கம் திரும்பி இருக்கின்றது என நினக்கின்ற என ஜஸாக்கல்லாஹ் கைர்

Anonymous said...

அன்புள்ள தம்பி அதிரை மன்சூர்!

'கண்கள் இரண்டும்' தொடர் கண், உடல், மனம்,மார்க்கம், வழிபாடு ஆகியவற்றையும் தொட்டுச் செல்வது பாராட்டுக்குரியது.

இது உடல் நலம் மனநலம் பற்றிய கண்ணான தொடர்!.

எனக்கு ரெண்டு டவுட்.
டவுட்ஒன்னு : கண்ணுக்கு'மை'எதற்கு?
டவுட்ரெண்டு : அவ்வையார், ஆலையம் என்றெல்லாம் சொல்கிறீர்களே!

யாரும் உங்களுக்கு 'தண்டனை' கொடுக்க மாட்டர்களா? பயம் இல்லையா?

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

crown said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இங்கே கண் மட்டும்தான் பேசுகிறதுன்னு நினைத்திருந்தேன்...
இங்கே கவிதையும் பேசுகிறதே.... !

அதிகாலையிலே கண் விழித்து.... வாரத்தில் ஆறு நாட்கள்.... சூரிய ஒளிக்கு முன்னர் கருக்கால வேலைக்கு செல்பவர்களும் ஸ்லிம்மாக இருப்பார்களா ?
---------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் . இப்படி வேலைக்கு போவர்கள் ஸ்லிம்மாக இருப்பார்களா என தெரியாது,அதிகாலை தினம் சுபுஹு தொழுபவர்களே நல்ல மு"ஸ்லிம்மாக" இருப்பார்கள்.

sabeer.abushahruk said...

,//அதிகாலை தினம் சுபுஹு தொழுபவர்களே நல்ல மு"ஸ்லிம்மாக" இருப்பார்கள்//

What a smart comment, wonderful.

crown said...


sabeer.abushahruk சொன்னது…

,//அதிகாலை தினம் சுபுஹு தொழுபவர்களே நல்ல மு"ஸ்லிம்மாக" இருப்பார்கள்//

What a smart comment, wonderful.
-------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். கற்ற இடமும், பெற்ற இடமும் பெற்றுக்கொண்டிருக்கிற இடமுமே காரணம். அல்லாஹுக்கே புகழனைத்தும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட கிரவ்னு !

சூப்ப்ப்ப்பரு அப்பு !

மிகச் சரி... 'அதிகாலை' எழுந்து சுப்ஹு தொழுபவர்கள் ! :) நல்ல முSlim ஆக இருக்கலாம் :)

பிழையா / சரியா அல்லது பின்பற்றலா ! தெரியவில்லை... எழுந்ததும் சுப்ஹு தொழுவது எவ்வகை ?

ZAKIR HUSSAIN said...

உங்களின் எல்லா ஆக்கங்களையும் படித்து வருகிறேன். சமயங்களில் கமென்ட் எழுத முடியாமல் போவதுதான்.

சமயங்களில் வேலை....அல்லது தூரப்பயணங்கள்..

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பாரூக் காக்கா
பதில் 1
கண்ணுக்கு மை எதற்கு என்பது பற்றி உங்களுக்கு தெரியாததல்ல!!!!!!!!!!!!!!!

கண்ணுக்கு மை போடும் பெண்ணை பார்த்து ஒரு கவிதை :

என்னை கொள்வதற்கு உன் விழிகளே போதுமே...அதில் எதற்கு விஷம் தடவுகிறாய்...

கண்மை என்பது பெண்ணின் முகத்திற்கு மெருக்கூட்டினாலும் அது ஆண்களுக்கு வைக்கப்படும்
விஷமாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது எலிப் பொறி போன்று மனிதப் பொறியாகவும் எடுத்துக்கொள்ளலாம்

adiraimansoor said...

பதில் 2

ஆலையம் என்பது அவர்களுக்கு கோவிலை குறித்தாலும் மற்ற மதத்தினரின் வழிபாட்டுத்தலத்தையும் ஆலயம் என்றே குறிப்பிடுவார்கள் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்

இந்த காலத்தில் வாழ்பவர்கள் ஆலயத்தை கோவில் என்றழைக்கினறனர்

பள்ளிவசலை அல்லா கோவில் என்பார்கள்

"ஆலயம் தொழுவது" என்று வந்திருப்பதால் தொஅழுவது என்ற வார்த்தை பிரயோகத்திற்கு சொந்தமானவர்கள் நாம்தான்.

பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பற்றி அவ்வையார் சொல்லி இருக்கின்றார் என்பது எவ்வளவு பொருத்தமாக மைந்துள்ளது.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

க்ரவுன் மச்சானின் பின்னூட்டம் இந்த 5ஆ வது பதிவின் மிகப்பெரிய கருவாக அமைந்துள்ளது அதை அப்படியே ஆங்கிலத்தையும் சேர்த்து இணைத்து //நல்ல முSlim ஆக இருக்கலாம்// அபூ இபு தந்திருப்பது மிகவும் அற்புதம்
ஜஸாக்கல்லாஹ் கைர்

Anonymous said...

பார்வையிலேயே தண்டிக்க 'மை' கொண்ட பெண்டிரின் கண்ணிரண்டும் போதும்! அப்புறம் ஏன் கோர்ட்டு-கச்சேரியெல்லாம்? மூடிட வேண்டியதுதானே!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு