Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 6 23

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2013 | , , , , ,


உமர்கயாம் என்றால் ‘’ரூபியாத்’’ நினைவு வரும். ருபியாத் என்றால் உமர்கயாம் வந்து நிற்பார்.

[11] உமர்கயாம் 11ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர், காதல் ரசமும் வாழ்கை தத்துவங்களும் நிறம்பிய ‘’ரூபியாத்’’ என்னும் இவருடைய கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை. இவர் கணக்கு, வானசாஸ்திரம் இரண்டிலும் கைதேர்ந்த மேதை. அல்ஜிப்ரா பற்றி இவர் எழுதிய ஆய்வு கட்டுரை அறிஞர்களின் பாராட்டை பெற்றது. இஸ்லாமிய காலண்டரை மாற்றி அமைத்தவரும் இவரே.

உமர்கயாமின் ரூபியாட் கவிதைகளை Edward Fitzgerald என்பவர் 1859 ஆண்டில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து மேலை நாடுகளில் அறிமுகம் செய்தார். அதுவரை உமர்கயாம் "யாரோ! எவரோ!" என்று பாராமுகமாகயிருந்த மேலை நாட்டினர் இப்போது பாரசீகத்தின் திசை நோக்கி திரும்பி பார்த்தார்கள். உமர்கயாம்க விதை வீச்சு அவர்களை திகைக்க வைத்தது. மேலைநாட்டு கவிதை பாணி "மதம்"மாறி உமர்காயம் கவிதை காட்டிய  வழியில் பயணம் தொடங்கியது.  உமர்காயம் கைப்பட எழுதிய ரூபியாட் கையெழுத்துப் பிரதி ஆக்ஸ்போர்ட் Bodelean நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.  இதை இன்றும் அங்கே காணலாம்.

[12] 1469-1527 ஆண்டில் இத்தாலியில் பிறந்த மாக்கியவெல்லி [Machiavelli] பிரின்ஸ் [prince] என்ற புத்தகம் எழுதினார். அரசன் நாட்டை ஆட்சி செய்வதற்கு வேண்டிய தகுதிகள் தந்திரங்கள் எவை எவை என்று இந்த புத்தகத்தில் விளக்கிச் சொன்னார் இந்த புத்தகம் மாக்கிய வெல்லிக்கு பெரும் புகழ் தேடி தந்தது.

கி.மு  2400 ஆண்டுகளுக்கு முன் மாக்கிய வெல்லிக்கு பாட்டனுக்கு பாட்டனாக இந்தியாவில் ஒருவன் பிறந்து விட்டான். அவர்தான் "'அர்த்தசாஸ்திரா" என்ற ஆட்சியியல் நூலை சமஸ்கிருதத்தில் எழுதிய கௌடில்யா என்ற பெயர் கொண்ட ஆசாமி. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘சாணக்கியன்’ என்பது தான் அந்தப் பெயர். பெயரைக் கேட்டாலே பயமா இருக்கா?

[13] உலகில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் கிரேக்க மொழி பைபிள். ஹுட்டன்பெர்க் என்பவர் [1454-1455] ஜெர்மனியில் கண்டுபிடித்த அச்சு இயந்திரத்தில்  அச்சிட்ட முதல் புத்தகமும் இதுவே.

[14] உலகில் அதிகம் விற்பனையாகும்(!!) புத்தகங்களில் பைபிள் முதல் இடம் பெறுகிறது.

[15] உலகில் அதிக மொழிகளில் வெளிவரும் புத்தகமமும் பைபிளே.

[16] உலகில் மொத்த புத்தக உற்பத்தியில் ஐரோப்பிய நாடுகள் 65% புத்தகங்களை தயாரிக்கிறது

[17] ஆர்தார் கோனண்டோய்ல் [Sir-Arthur conandoyle] என்பவர் 125ஆண்டுகளுக்கு முன் எழுதிய துப்பறியும் கதைகளில் ’ஷெர்லோக் ஹோல்ம்ஸ் [Sherlock holms]’ என்ற பெயரில் ஒரு கற்பனை கதாநாயகனை உருவாக்கினார். அவர் எழுதிய கதைகளில் இந்த கதாநாயகன் சாகசம் புரிந்து பலகோடி வாசகர்கள் நெஞ்சங்களில் அழியா இடம் பெற்றார். இந்த புத்தகங்கள் வெளியாகி ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் கதாநாயகன் ‘செர்லோக் ஹோல்ம்ஸ்’ பல லட்சம் வாசகர் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

[18] 1934-ஆம் ஆண்டில்நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர் மார்லே என்பவர் "செர்லாக் ஹோல்ம்ஸ் வாசகர் மன்றம்“ஆரம்பித்தார். அந்த பிரதிபலிப்பே நம் செந்தமிழ் நாட்டில் நடிகர் மன்றங்களாக பரிணாம வளர்ச்சி கண்டது போலும். 

[19] 1951-ஆம் ஆண்டில் பிரிட்டனில் அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டது. செர்லாக் ஹோல்ம்ஸ் கதைகளில் உபயோகித்த பொருள்கள் Smoking pipe உள்பட எல்லாமே காட்சிக்கு வைக்க பட்டிருந்தது. இது பொதுமக்கள் பார்வைக்கு இன்றும் திறந்து இருக்கிறது. நீங்களும் ஒரு தடவை போய் பார்த்துட்டு வாங்களேன்!? அது மட்டுமல்ல, ஐரோப்பா முழுதும் ஹோல்ம்ஸ்சுக்கு சிலைகளும் எழுப்பி இருக்கிறார்களாம் ‘கோயில் கட்டி கும்பாவிஷேகம்’ செய்தார்களா? என்ற தகவல் கிடைக்கவில்லை.யோசனைசெஞ்சுபாத்தா நம் ஊர் ரசிகர் மன்றங்கள் தேவலாம் போலே. ‘ரசிகர் மன்ற’ சாதனையில் ‘தமிழனை மிஞ்சிய ஆள் எவனும் இல்லை’! என்று மார் தட்டி நின்றோம். இதற்கும் வெள்ளைக்காரன் நமக்கு முந்திகிட்டு நமக்கே ஆப்பு வச்சுட்டானே? இது நமக்கு ஒரு பெரிய அடிதான். இதில்கூட நாம் முந்திக் கொள்ள மேலை நாட்டார் நமக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.

ஆர்தர் கொநோண்டோயல் Sherlock Holmes துப்பறியும் கதை புத்தகங்கள் வெளிவந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டது, பல தலைமுறை கடந்தும்கூட அது சாகவரம் பெற்று இன்றும் எல்லோராலும் விரும்பி படிக்கும் புத்தகமாக இருப்பதில் என்னதான் மாயம் உள்ளதோ? அவர் ’’மை’’யில் கலந்து எழுதிய மந்திரம்தான் என்ன? அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களில் இவருடையதும் அடங்கும். 

அடுத்து..

# ஐரோப்பா கண்டத்திலும் அமெரிக்காவிலும். ஆண்டுக்கு 10 கோடி புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகிறது.

# அமெரிக்கன் காங்கிரஸ் நூலகத்தில் மூனுகோடியே முப்பது லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது.

# சர் ஆர்தர் கோனோண்டோயல் எழுதிய துப்பறியம் கதைகள் ஆண்டுக்கு 50 இலட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.!

# கற்பனைக் கதைகள் தொடர்ந்து படிக்கும் ஒருவருக்கு 70வயதுக்கு மேல் ஆன போதிலும் மனநோய் பாதிப்பு [Dementation] உண்டாவது மிக குறைவே என்று ஆய்வுகள் சொல்கிறது.

# புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்கள் கதைகளில் வரும் கதாநாயகன் போல தங்களையும் கருதுகிறார்கள்.

# கற்பனைக் கதைகள் படிப்பவர்கள் மற்றவர்களின் கண்களை பார்த்தே அவர்கள் நினைப்பதை சொல்ல முடியுமாம்!? (தம்பி மன்சூர் நோட் தெ பாயிண்ட்)

# 1977லிருந்து 2007வரை வெளியான Harry potter என்ற ஐந்து தொகுதிகள் கொண்ட மாயஜால சிறுவர் கதை புத்தகங்கள் மொத்தம் நாற்பத்து ஐந்து கோடி பிரதிகள் விற்றது. கதை எழுதிய G.K.Rowling என்ற பெண் உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்துக்கு வந்தார். 

எழுத்தாளர் ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் இடம் பிடித்தது மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட வேண்டிய செய்தி அல்லவா? இது ஒரு உலக சாதனையாகக் கூட இருக்கலாம்.

# தமஸ்மூர் [Thamas Moor] என்பவர் 1516-ம் ஆண்டில் Utopia என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். Utopia என்ற கிரேக்க மொழி சொல்லுக்கு கற்பனை தேசம் அல்லது கனவு தேசம் என்று பொருள். அகடம், பகடம் களவு கொலை காமம் திருட்டு லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு தூய்மையான நாட்டை கற்பனை செய்து தன் புத்தகத்தில் எழுதினார். அது நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. காணாததைக் கண்டால் பாராட்டாமல் இருப்பார்களா?

# 1564ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் Avon என்னும் நகரில் பிறந்த சேக்ஸ்பியர் பல ஆங்கில நாடகங்கள் எழுதி ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியா இடமும் உலகப் புகழும் பெற்றார்.

# ஆங்கில நாடக சிற்ப்பிகளில் ஷேக்ஸ்பியரை அடுத்து மற்றொரு நாடக எழுத்தாளரான மில்டன் [Milton 1663] Paradise lost- இழந்த சுவர்க்கம் Paradise Regained மீண்ட சுவர்க்கம் ஆகிய இரண்டு புகழ்பெற்ற நாடகங்கள் எழுதி ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தை பிடித்தார்.

# 1710-ம் ஆண்டில் Daniel Defoe டேனியல் டேபோ என்பவர் எழுதிய Robinson Crusoe ‘ராபின்சன் குருசோ’ என்ற புகழ்பெற்ற புத்தகம் வெளியானது!

# 1726-ம் ஆண்டில் Jonathan Swift என்பவர் GULLIVER’S TRAVELL’S என்ற சிறுவர்களுக்கான கற்பனைக் கதை எழுதினார். இந்த கதையை பெரியவர்களும் படித்தால் இலைமறை காய் போல ஒரு தத்துவம் மறைந்து நிற்பதை உணரலாம். [‘’தத்துவம்’’ என்றதும் இந்துக்களின் வேதம் என்று நினைத்து வீடாதீர்கள் ’தத்’ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ’’உண்மை அல்லது Existence-உளதாய் இருத்தல்" என்பதே. [சிலர் மொழிகளை ‘மத கண்’கொண்டு பார்க்கிறார்கள்] எல்லா மொழிகளையும் அல்லாஹ்வே படைத்தான்.

# 1728-டில் Chambers Encyclopedia. ஆங்கில மொழியில் வெளியான கலைக் களஞ்சியம்.

# 1750ஆம் ஆண்டு Leencyclopedia என்ற கலைக் களஞ்சியம் பிரெஞ்சு மொழியில் வெளியானது. பிரெஞ்சு மொழியில் வெளியான முதல் கலைக் களஞ்சியம் இதுவே. 

# 1789ஆம் ஆண்டு கலை க்களஞ்சியங்களில் பல அறிஞர்கள் எழுதிய எழுச்சியூட்டும் எழுத்துக்களும் பிரெஞ்சு புரட்சி உருவாக ஒரு காரணமாக அமைந்தது. அரசு தடை செய்ததும்புரட்சியாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஆட்சியாளர்கள் தங்கள் உயிரைகாக்க கால் பிடரியில் அடிபட’ ஓட்டமோ ஓட்டம்’ என்று ஓடினார்கள்

# 1755ஆம் ஆண்டு  சாமுவேல் ஜோன்சன் [Samuel Johnson] தொகுத்த ஆங்கில மொழி அகராதி Dictionary of the English language வெளியானது. இதுவே ஆங்கில மொழியில் தொகுக்கப்பட்ட முதல் அகராதி.

# 1805ஆம் ஆண்டு [Hans Christian Andersen] ஹான்ஸ் கிறிஸ்டியன் அண்டர்சென் என்பவர் டென்மார்க் ஓடேன்சே நகரில் பிறந்தார். இவருடைய தந்தை செருப்பு தைத்து வயிறு வளர்க்கும் ஏழைத் தொழிலாளி. அண்டர்சென் சிறுவர்களுக்கான [fairy Tales] வானதேவதை கதைகள் எழுதினார்.  இவருடைய கதைகள் நூற்று நாற்பதுக்கும் அதிகமானஉலகமொழிகளில் வெளியானது. சிறார்கதைகள் எழுதிப் புகழ்பெற்ற அண்டர்சென் 1875-ம் ஆண்டு தனது 75–ம் வயதில் காலமானார். அவரின் மரண ஊர்வலத்தில் கோபென் ஹேகன் நகர மக்களும் சிறுவர் சிறுமியர்களும் ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்கள்.

# 1812ஆம் ஆண்டில் Grimm’s Fairy Tales என்னும் சிறு பிள்ளைகளுக்கான கதைகளை Grimm என்னும் பெயருடைய இரு சகோதரர்கள் எழுதினார்கள், மேலை நாட்டில் இந்த கதைகள் படிக்காத பிள்ளைகளே இல்லை என்றே கூறலாம். இக் கதைகளின் வயது இறுநூறு ஆண்டுகள். இன்னும் அவையெல்லாம் "சாகாவரம் பெற்று என்றும் பதினாறாய்" வாழ்கிறது. இன்னும் இந்த கதைகள் சிறுவர் சிறுமீயர்களால் படிக்கபடுகிறது கால வெள்ளம் இந்த கதைகளின் மேல் கைவைக்க நடுங்குகிறாதோ? 

சிறுசுகளின் வயதுக்கு ஏற்ப எளிய மொழியில் பக்கத்துக்கு பக்கம் கண் கவரும் வண்ண வண்ண ஓவியங்களுடன் சிறுவர் சிறுமியர்களுக்கான புத்தகம் வெளியிடும் நிறுவனங்கள் அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களில் அதிகம்.

அடுத்து வரும் அத்தியாயத்தில் அதிரையை தொட்டுச் செல்லலாம்...

தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்

23 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. S. Mohammed Farook,

Thanks for sharing amazing details about books. Actually English guys are voracious readers, spending more money for purchasing books and spending more time for reading.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

M.B.A.அஹமது said...

எங்க மூத்த காக்கா புத்தகம் பிறக்கிறது தொடரில் உமர் கயாமில் ஆரம்பித்து சாரி கி மு 2400 க்கு முன்பு ஆரம்பித்து 1454 .1469,1516 ,1564 , 1710, 1726,1728 ,1750 , 1750, 1755, 1789,1805, 1812. நான் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளது என்று பார்த்தால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாள் கி மு 2400 க்கு முன்னால் உள்ளதையும் சொல்லி 1997 முதல் 2007 வரை உள்ள ஹாரி பாட்டர் மாயஜால கதையையும் தொட்டு அப்பாப்பா நீங்கள் ஒரு கலைக்களஞ்சியம் காக்கா நீங்கள் ஒரு பொக்கிஷம் எவ்வளவு
விசயங்கள் உங்களுடன் அதிரை நிருபரில் நாங்களும் பகிர்த்து கொள்கிறோம் என்பதே அது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் சிலருக்கு அது புரிய மாட்டேன்குதே என்ன செய்ய .( பி கு ) படிக்கும் காலத்தில் வரலாற்று பாடமே என்று சயின்ஸ் குருப்புக்கு ஓடிப்போனவன் நான் .........ஆனால் உங்கள் புத்தகம் பிறக்கிறது தொடரை இன்ச் பை இன்ச் வரிக்கு வரி திரும்ப திரும்ப படிக்கிறேன் என்னமோ எங்கள் இக்பால் காக்கா சொல்லுவாங்களே என்னது அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஐரோப்பா முழுதும் ஹோல்ம்ஸ்சுக்கு சிலைகளும் எழுப்பி இருக்கிறார்களாம் ‘கோயில் கட்டி கும்பாவிஷேகம்’ செய்தார்களா? என்ற தகவல் கிடைக்கவில்லை.யோசனை செஞ்சுபாத்தா நம் ஊர் ரசிகர் மன்றங்கள் தேவலாம் போலே. ‘ரசிகர் மன்ற’ சாதனையில் ‘தமிழனை மிஞ்சிய ஆள் எவனும் இல்லை’! என்று மார் தட்டி நின்றோம். இதற்கும் வெள்ளைக்காரன் நமக்கு முந்திகிட்டு நமக்கே ஆப்பு வச்சுட்டானே? இது நமக்கு ஒரு பெரிய அடிதான். இதில்கூட நாம் முந்திக் கொள்ள மேலை நாட்டார் நமக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.//

இது அவ்வொளுக்கே உரிய குசும்பு !

//’ஷெர்லோக் ஹோல்ம்ஸ் [Sherlock holms]’//

கதைககள் தமிழில் ஒரு வாரப் பத்திரிக்கையில் வெளி வந்தது அதனை தொடர்ந்து தவறாமல் வாங்கிப் படித்த அனுபவம் இருக்கு, அதனைத் தொடர்ந்து வேற எங்கேயும் வாசிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை நானும் முயற்சிக்க வில்லை !

Ebrahim Ansari said...

மாஷா அல்லாஹ்! மாலை வேளைகளில் சி. எம். பி. வாய்க்காலோரம் கையில் கம்பூன்றி சிறு நடை போட வரும் ஒரு சின்ன உருவத்தின் தலைக்குள் இவ்வளவு செய்திகளா?

மிகவும் பெருமையாக இருக்கிறது. அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தைத் தருவானாக!

sabeer.abushahruk said...

பிரமிப்பாயிருக்கிறது!!!

துல்லியமான புள்ளி விவரங்கள் தங்களை இந்தத் துறையில் பெரும்புள்ளியாகவே காட்டுகிறது.

வாக்கிங் அந்தப் பக்கமா? இனி ஊருக்கு வந்தால் நாங்களும் அந்தப் பக்கம் வாக்கிங் வந்தா நிறைய சுவாரஸ்யமான செய்திகளைச் சேகரித்துவிடலாம் போலிருக்கிறதே!!!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஃபாருக் மாமா.

Yasir said...

நம்மில் ஒரு அங்கமாகிப்போன புத்தகங்களை பற்றி வரலாற்று தகவல்கள் பயனுள்ளவையாகவும்,ஆச்சிரியமாகவும் உள்ளது....

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஃபாருக் மாமா

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்த காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.

வியந்தேன்
நயந்தேன்
பயந்தேன்
பார்த்தேன்
படித்தேன்
இரசித்தேன்

இந்தக் கனமான “புத்தகம்” எப்பொழுது அ.நி . பதிப்பகத்தால் புத்தகமாக வெளிவரும்?

அந்த நாள் வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

காற்று வாங்கப் போனீர்; கலைக் களஞ்சியங்களை மூளைக்குள் பதியமிட்டு வந்தீர்.

அடியேனுக்கும் நூலகத்தொடர்பு இருப்பதால், யானும் காற்று வாங்கப் போனேன்; கவிதை வாங்கி வந்தேன்!

adiraimansoor said...

/// # கற்பனைக் கதைகள் படிப்பவர்கள் மற்றவர்களின் கண்களை பார்த்தே அவர்கள் நினைப்பதை சொல்ல முடியுமாம்!? (தம்பி மன்சூர் நோட் தெ பாயிண்ட்) //

பாரூக் காக்கா இது சாத்தியமா ? அப்போ ஹாஜா இஸ்மாயில் போன்றோர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரையாகத்தான் இருக்க வேண்டும்

adiraimansoor said...

// சிறுசுகளின் வயதுக்கு ஏற்ப எளிய மொழியில் பக்கத்துக்கு பக்கம் கண் கவரும் வண்ண வண்ண ஓவியங்களுடன் சிறுவர் சிறுமியர்களுக்கான புத்தகம் வெளியிடும் நிறுவனங்கள் அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களில் அதிகம்.//

நமதூரில் கலரில் காமிக்ஸ்கள் வராவிட்டலும் கருப்பு வெள்ளையில் வரும் காமிக்ஸ்களை படிக்க ஹாஜா இஸ்மாயில் முதலிடமும் அதை தொடர்ந்து நானும் இன்னும் பல பேரும் முத்து காமிக்ஸ் பின்னாடியும் பொன்னி காமிக்ஸ் பின்னாடியும் அலைந்து இருக்கின்றோம். எப்படா வராது அடுத்த கதை என்று கடைக்காரரை அடிக்கடி கேட்பதுண்டு

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

எனக்கு தெரிய மலேசியாவிலிருந்து வந்தவர்கள்
பெரும்பாலும் கோப்பிக்கடை,சூப்கடை என தங்கள்
தொழில்நிமித்தமாகதான் பேசுவார்கள் இதில் வித்தியாசமாக(knowledgeable person) ஆக ஹைர் காக்காதான் தெரிந்தார்கள் இன்று உங்களுடைய
எழுத்து நடை ஆனித்தமான ஆதரங்கள் போன்றவை
ஒரு பல்கலைகழக பேராசிரியரைவிட மேலோங்கி உள்ளது தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் துவாவும்

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

எனக்கு தெரிய மலேசியாவிலிருந்து வந்தவர்கள்
பெரும்பாலும் கோப்பிக்கடை,சூப்கடை என தங்கள்
தொழில்நிமித்தமாகதான் பேசுவார்கள் இதில் வித்தியாசமாக(knowledgeable person) ஆக ஹைர் காக்காதான் தெரிந்தார்கள் இன்று உங்களுடைய
எழுத்து நடை ஆனித்தமான ஆதரங்கள் போன்றவை
ஒரு பல்கலைகழக பேராசிரியரைவிட மேலோங்கி உள்ளது தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் துவாவும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

புத்தியூட்டும் புத்தக தகவல்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Ebrahim Ansari said...

சகோதரர் அண்ணாவியார் அவர்கள் சொன்னது

//எனக்கு தெரிய மலேசியாவிலிருந்து வந்தவர்கள்
பெரும்பாலும் கோப்பிக்கடை,சூப்கடை என தங்கள்
தொழில்நிமித்தமாகதான் பேசுவார்கள் இதில் வித்தியாசமாக(knowledgeable person) ஆக ஹைர் காக்காதான் தெரிந்தார்கள் இன்று உங்களுடைய
எழுத்து நடை ஆனித்தமான ஆதரங்கள் போன்றவை
ஒரு பல்கலைகழக பேராசிரியரைவிட மேலோங்கி உள்ளது//

முழுக்க முழுக்க சரி. காரணம் அவரவர்கள் தாங்கள் செய்து வந்த தொழில், வேலைகளைப் பற்றி சொல்வார்கள். நமது ஊரில் இருந்து மலேசியாவுக்குப் போனவர்கள் பெரும்பாலும் சாப்பாட்டுக் கடைகளில் வேலை பார்த்தார்கள். அல்லது துறைமுகங்களில் கூலிகளாக வேலை பார்த்தார்கள். ஆனால் இந்த தொடரை எழுதும் பெரியவர், எங்கள் மச்சான் அவர்கள் தொடக்க காலத்திலேயே ஒரு புத்தக கடையில் வேலைக்குச் சேர்ந்து பினாங்கு, அலோர் ஸ்டார், தைபிங்க், ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய ஊர்களில் பணியாற்றி அதே துறையில் பல அனுபவங்களைப் பெற்று நிறைவாக நிறைய நூல்களின் பதிப்பாளராக உருவெடுத்தார்கள். இடையில் அவர்கள் சந்தித்த துரோகம், அவர்களின் வாழ்வில் பொருளாதாரத்தில் சிறு வீழ்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் வீழ்ந்துவிடவில்லை. எழுந்து நின்றார்கள்.

ஆகவே இங்கு குறிப்பிடப்படும் தகவல்கள் இணைய தளங்களில் திரட்டி எடுக்கப் பட்டவை அல்ல. அவர்கள் வாழ்வில் அன்றாடம் சந்தித்த - அறிந்து கொண்ட- ஒய்வு நேரங்களில் தானே படித்து அறிந்த நிகழ்வுகளின் தொகுப்பே ஆகும்.

எனவே இது பிராய்லர் கோழிக் கறியல்ல; நாட்டுக் கோழிக் கறி. சுவை அதிகமாக இருக்கிறது.

adiraimansoor said...

//எங்கள் மச்சான் அவர்கள் தொடக்க காலத்திலேயே ஒரு புத்தக கடையில் வேலைக்குச் சேர்ந்து பினாங்கு, அலோர் ஸ்டார், தைபிங்க், ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய ஊர்களில் பணியாற்றி அதே துறையில் பல அனுபவங்களைப் பெற்று நிறைவாக நிறைய நூல்களின் பதிப்பாளராக உருவெடுத்தார்கள்.//

மிகவும் அனுபவமிக்க ஒரு எழுத்தாளரை நாம் பெற்றுள்ளோம் என்பது இபுராஹிம் இபுராஹீம் அன்சாரி காக்காவின் பின்னூட்டதின் வாயிலாக தெரியவந்தாலும். மாஷா அல்லாஹ் பாரூக் காக்காவின் ஆக்கங்களின் மூலமாக நம்மை அவர்கள் ஊக்கப்படுத்துவதை வைத்தே அவர்களின் அனுபவங்களை புரிந்து கொள்ள முடிகின்றது.

//எனவே இது பிராய்லர் கோழிக் கறியல்ல; நாட்டுக் கோழிக் கறி. சுவை அதிகமாக இருக்கிறது. //

இப்ராஹீம் அன்சாரி காக்கா ஹலால் முத்திரையிட்டு சுவைக்கும் நாட்டுக்கோழியை நாமும் சுவைப்போமே

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

பாரூக் காக்கா அவர்கள் ஆர்ம்ப காலத்திலிருந்தே புத்தக கடையில் பணிபுரிந்தவர்கள்,நிறைய புத்தகங்களை படித்து தனது அறிவு ஆற்றலை வளர்த்துக்கொண்டவர்கள் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் அதன் பிரதிபளிப்பு அவர்கள் எழுத்திலேயே காணமுடிகிறது.மேலும் நீங்கள் குறிப்பிட்டதுபோல் நாட்டுக் கோழிக் கறி. சுவை அதிகமாக இருக்கிறது இங்கு குறிப்பிடப்படும் தகவல்கள் இணைய தளங்களில் திரட்டி எடுக்கப் பட்டவை அல்ல என்பதை நான் அறிவேன் நான் எழுதியதின் நோக்கமும் அதுவல்ல ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
. .

Unknown said...

Ebrahim Ansari சொன்னது…
//ஆகவே இங்கு குறிப்பிடப்படும் தகவல்கள் இணைய தளங்களில் திரட்டி எடுக்கப் பட்டவை அல்ல. அவர்கள் வாழ்வில் அன்றாடம் சந்தித்த - அறிந்து கொண்ட- ஒய்வு நேரங்களில் தானே படித்து அறிந்த நிகழ்வுகளின் தொகுப்பே ஆகும். //

Assalamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,

Nowadays we are interactively reading by using technologies like internet. Its all advantageous to read and learn through internet. The originality of the writing is from an author's creativity.

The knowledge of the author can be from any source. But how he/she got the concepts digested and produce them with originality glows among readers.

The ideas and facts can be reproduced either from memory, paper based books, or from internet. Nothing wrong about that. At the end the reader should find it useful.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்! ஒரு நடமாடும் நூலகம் மிக அமைதியாக( நூலகம் என்றுமே அமைதியான ஆழ்கடல் அறிவு முத்து ஆங்கே கிடைக்கும்)அதன் நூல்களைப்பற்றி சொல்வது புத்தகம் தன் வரலாறை கூறுவதைப்போல் உள்ளது!இந்த மேதையின் எழுதுக்கு என் கருத்து யானைபசியின் சோள அளவே!

Anonymous said...

//மற்றவர்கள் கண்ணை பார்த்தே அவர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்பதை கற்பனை கதைகள் படிப்பவர்களால் சொல்ல முடியும்//

இந்த தகவல் கனடாவில் நடந்த ஒரு ஆய்வின் முடிவு. இதை Reader's Digest October 2011 [Indian Edition] இதழில் The Magc of Books என்ற கட்டுரையில் படித்த செய்தி.

முதலில் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தாலும் பின்பு யோசித்து பார்த்ததில் இது உண்மை என்றே பட்டது'. சாதாரண ஒருவரின் பேச்சுத் தொனி கண் சுழற்சி இவைகளை கொண்டே இவர் பொய் பேசுகிறார் அல்லது பேசுவது
உண்மை என்பதை சிலரால் கண்டு பிடித்துவிட முடியும். இது அல்லாஹ் சிலருக்கு கொடுத்த Gift. இது சம்பந்தமான பல புத்தகங்கள் ஆங்கில மொழியில் உண்டு.

'சாமுத்திரிகா சாஸ்திரா'' என்ற சமஸ்கிரத புத்தகமும் ஒன்று உண்டு. இதை தமிழில் தஞ்சாவூர்காரர் வெளியிட்டு இருக்கிறார். பழைய புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்தால் கிடைக்கலாம்.

[கனடா நாட்டு வெள்ளைகாரர்கள் ஆய்வு சரியானதாக இருக்கும். வேறு நாட்டுகாரர்களில் சிலர்தான் குழப்பம் செய்வார்கள்.]

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புத்தியூட்டும் புத்தக தகவல்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புத்தியூட்டும் புத்தக தகவல்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்

KALAM SHAICK ABDUL KADER said...

புத்தகம் பிறக்கிறது விரைவில் புத்தகமாகப் பிறக்குமானால், ஒரே நூலில் ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட ஓர் அற்புத நூலகமாகவே அஃது எனக்குத் தெரியும்; புரியாத பலவேறு விடயங்கள் புரியும்.

நூலகத்தின் அத்தனப் பகுதிகளும் இவர்களின் மூளையின் மூலைக்குள் பதிந்து இருப்பதால், இன்னும் “சாஸ்திரங்களும்” வெளிவரலாம்; இல்மு, அறிவு, சாஸ்திரம் எல்லாம் அறிந்து கண்டதும் கேட்டதும் கற்று பண்டிதராய் இருக்கும் எம் மூத்த காக்கா அவர்கட்கு அல்லாஹ்வின் அருளால் நீடித்த ஆயுள் கிட்டுமாக! (ஆமீன்)

இன்னும் அந்த அறிவுச் சுரங்கத்திலிருந்து வெளிவரவேண்டிய இல்மும், அறிவும், கல்வியும், சாஸ்திரங்களும் நிரம்ப உள என்பது என் கணிப்பு ஆகும்.

Anonymous said...

என் அன்பு அ.நி.வாசக நெஞ்சங்களே!. அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

ஒரு புத்தகம் பிறக்கிறது [தொடர்6]க்கு வாசக நெஞ்சங்கள் வாஞ்சையுடன் வழங்கிய பாராட்டுகளுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி உடையவனாகவும்
கடமைபட்டனாகவும் இருக்கிறேன்.

இதுபோல் என்றும் நாம் ஒரு தாய் வைற்று பிள்ளைகள் போல் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் ஒருமித்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணை செய்வானாக! ஆமீன்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

Ebrahim Ansari said...

Dear Brother Mr. Ahmed Ameen,

I agree with your valuable views. Jasak Allah.

சகோதரர் அண்ணாவியார் அவர்களுக்கு, உங்களின் நோக்கத்தில் நான் குறை காணவில்லை. தம்பி அமீன் அவர்கள் கூறுவது போல் அப்படி எடுத்து எழுதினாலும் தவறில்லை. ஒரு கூடுதல் தகவலுக்காக குறிப்பிட்டேனே தவிர வேறு ஒன்றுமில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு