படம் பார்க்காதே, அதைப் பார்க்கக் கூடாதுன்னு பொத்தி பொத்தி வளர்ந்திருந்தாலும் இவ்வகையான படங்களை பார்க்கும்போது ஏற்படும் பரவசங்களை பாத்தி கட்டி தேக்கி வைக்க முடியாதுதான்...!
அப்படின்னா !? என்னதான் செய்வதாம், மனதில் தோன்றியதை பளிச்சென்று சொல்லிவிட்டு போங்களேன் மக்களே !
மலைக்குப் பின்னால் கூடிக் குலாவும் மேகங்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு அதில் ஒன்று இதன் ஒற்றுமை, உருகுவதில் உத்தமர்கள் ! நிறைய கவிஞர்களுக்கு வில்லனாக தெரியப்படுபவர்கள், காரணம் அவர்கள் சொந்தம் கொண்டாடும் நிலவை ஒளித்து வைத்துக் கொள்வதால்.
அமைதியாக ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கும் தண்ணீர் ஆறுகள் நோக்கி பாயும்போது அதன் ஆராவரத்திற்கு ஆகாயமே எல்லை. ஆத்துப் பக்கம் தண்ணீர் பாய்ந்ததும் இங்கே லெவல் குறைந்து போச்சு..!
இது காதலுக்காக கட்டிய சின்னமல்ல, படைத்தவனை பனிவுடன் பிராத்திக்க எழுந்து நிற்கும் கம்பீரமான அழகிய இறையில்லம்.
ஆளுங்க ஒருத்தரையும் காணமே யானைகளின் நடமாட்டம் இங்கேயும் இருக்குமோ ?
இந்த மரங்களுக்கிடையே ஓடி பிடிச்சி விளையாடனும் ஆனால் எதனையும் ஒடிச்சிடாம விளையாடனும் !
நல்ல உழைப்பாளி அதனால்தான் காலை சாப்பாடு ஒரு டிஃபன் பாக்சும் பகல் சாப்பாடு ஒரு டிஃபன் பாக்சும் தனித்தனியா வந்து பக்கத்திலே இருக்கு. அது சாப்பாடு இல்லை சில்லரை ஒரு டப்பா, பணம் ஒரு டப்பா என்று இருக்கப்போவுதுன்னு குரல் கேட்கிறது.
யாருப்பா அது "கீஸ் பையிலே" சாமானை வாங்கி-கிட்டு பொடி நடையா போறது !
பாத்து போங்க எதாச்சும் பொணம் கெடக்க போவுது.
Sஹமீது
27 Responses So Far:
படம் 01)
வானம் முகிலுடை, உடுத்திட நீரின்
வரவினைக் காத்திங்கு நீள்நதி ஆவல்
கானம் இசைத்தது, காற்றுடன் வீசும்
குளிரின் சுகத்தினை, அறிந்திடாக் காட்சி
தானொரு பக்கம் மனிதன் மறந்து
தனியிடம் போனதால் சாலையும் பாராய்
ஏனினும் தூக்கம் இதையெலாம் காண
இளந்தமிழா ஈண்டு எழுந்த ருளாயே!
படம் 02)
விரிகின்ற வானத்தை நோக்கி மேகம்
..............விளையாடிக் களிக்கின்ற நிலையைப் பேசும்
சரிகின்ற வானத்தை தாங்கும் பூமி;
.........சற்றேனும் அசையாத மலையினல் மோதி
புரிகின்ற நதியோட்ட அமைதிக் காட்சி
.........படைத்தவனின் பேராற்றல் சொல்லும் மாட்சி
தெரிகின்ற பாலத்தின் தோற்றம் சொல்லும்
.........தேவையின்று பாலம்போல் உறவும் வேண்டும்
படம் 03)
இறைக்காதல் ஒன்றேதான் ஈருலகின் வெற்றி
மறைக்காமல் கூறிடும் மாண்பு
படம் 04)
கலையாத ஏகாந்தம் காட்டுத் தீவு
........கண்டிடுவோம் மரமருந்தில் போகும் நோவு
அலைமோதும் காற்றினதம் அதனால் சில்லென்
.............றசைகின்ற சுகமேனி அடங்காத் துள்ளல்
தலைமீது கனவாகும் காண வேண்டி
........தவறாமல் ஊட்டிக்கு மலையைத் தாண்டி
மலைமீது உறைகின்ற இவ்வூர்த் தோட்டம்
.............மகிழ்ந்தாடிக் குதிக்கின்ற மந்திக் கூட்டம்
படம் 05)
இங்கே இவர் மீன் அறுத்தால்
அவர் வீட்டில் சோறு உண்பர்
இங்கே இவர் சோறு உண்ணாமல்
மீன் அறுப்பதும் அதனாலே!
படம்: 06)
பழைய கடைத்தெரு என்றே
பன்னெடுங்காலமாய் இருக்க வேண்டுமா?
இணைகோடு இணையாது போயினும்
....இணைபிரியா உறவுகளில் இரயிலின்
இணைசேரா தண்டவாளம் மீதினில்
...இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
துணையோடு ஒத்துபோகும் நீயுமே
....துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக
வீணையோடு இணைகின்ற பாடலும்
....வெற்றியான தாம்பத்யம் போலவே!
மழை, மலை!
மேகம்
தண்ணீரை
தனக்குமட்டுமே சொந்தம்
என்று வைத்துக் கொள்ள
அதென்ன
அண்டை மாநிலமா?
ஆகவே
மலையுரசி
மனமுருகி
மழையாகியது,
மடை திறக்கும்வரை
அணையின்
அனைப்பில் நிலை!
1- ஊரை சுற்றி இம்மாதிரி நீர்நிலை நிலைத்து காணணும்.
2- மலையை மனுசன் எழுப்ப முடியாது. இம்மாதிரி மினி துறைமுகமாவது காணணும்.
3- இம்மாதிரியல்ல, அல்லாவுக்கு பொருத்தமான பெரும்பள்ளியை அல் அமீன் பள்ளி சீக்கிரம் காணணும்.
4-VKM store லேந்து லோக்கல் புதுக்கோட்டை சாலை இப்படி இருக்க கனவாவது காணணும்.
5- கருவங்காடழித்து இம்மாதிரி நெடுங்காடு அவசியம் காணணும்.
6- இம்மாதிரி எவ்வேளையும் இல்லாளுக்கு செய்து கொடுக்கனும்.
7- இந்த சாலைக்கு தான் இன்று நீனா நானா போட்டியாமே!
8- எண்ணி 3 வருசத்துல கண்டிப்பாக ரயிலு ஓடனும். இன்சா அல்லாஹ்.
அந்த முதல் படத்துக்கான வர்ணனை மிகவும் ரம்மியமாக இருக்கிறது.
கடைத்தெரு ரோடு படத்தில் கீஸ் பையுடன் நடப்பவரை விடக் கோபம வருபது அன்று எங்களுக்கு கருத்துத் தெரிந்த காலம் முதலே இந்த ரோடு இப்படித்தான் இடறிவிடும் தன்மையில் இருக்கும். இந்த சாலையின் மேம்பாடு கோரித்தான் அண்மையில் அதிரையில் போராட்டம் கூட நடந்தது.
அந்தப் பள்ளி போல அதிரையில் ஒரு பள்ளி எழுமா என்று ஒரு ஏக்கம்.
இது பேசும் படங்களல்ல பரவசமூட்டும் படங்கள்.
நம் ஊர் கடைத்தெரு ரோடு ஆப்பிரிக்க கண்டத்தை நினைவுபடுத்துகிறது.
மொத்தத்தில் நம் ஊரைத்தவிர எல்லா ஊரும் முன்னேறி இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறது சாகுலின் திறமை.
//பாத்து போங்க எதாச்சும் பொணம் கெடக்க போவுது.//
இது இவ்வொளுக்கே உரிய குசும்பு !
பரீட்சை நேரங்களில் அதிகாலையில் படித்துக்கொண்டே இந்தத் தண்டவாளத்தின் மேல் நடந்துகொண்டே நான், அஸ்லம் (துபை) ஃப்யாஸ்(புதுக்கல்லூரி கணிதத் துறை பேராசிரியர்) மூவரும் ஊரிலிருந்து மகிலங்கோட்டை ரயிலடி வரை சென்று விட்டோம்.
அங்கே ஆற்றில் மிதந்து வந்த பனம்பழம் எடுத்து அங்கேயே சுட்டுத் தின்றுவிட்டு காலையில் மாயவரம் போகும் ரயிலில் ஏறி டிக்கெட் எடுக்காமல் நம்மூர் ஸ்டேஷன் வரை வந்ததும் ஸ்டேஷனில் இறங்கி உப்பளப்பக்கமாக எஸ்கேப் ஆகியதும் நினைவுக்குவருகிறது.
பேச்சைடைக்க வைத்த படங்கள்...கேமராவை கையாண்ட கைகளுக்கு ஒடு நல்ல வாட்ச் வாங்கி போடணும்
///Yasir said..பேச்சைடைக்க வைத்த படங்கள்...கேமராவை கையாண்ட கைகளுக்கு ஒடு நல்ல வாட்ச் வாங்கி போடணும் ///
யாசிர் அந்த கைகள் சூப்பரா சமைக்கும் என்றும் நான் சபீர் காக்கா மூலம் கேள்விப்பட்டேன்.. எப்போ அந்த கை சமைத்த உணவு கிடைக்கும்? மந்தியல்ல... :)
சாவன்னாக்கா.. எல்லா படங்களும் மிக அருமை காக்கா..
தம்பி தாஜுதீன் கூட நல்லா சமைப்பதாக ஒரு செவிவழிச் செய்தியல்ல கூகுள் வழிச் செய்தி சொல்கிறது.
//தம்பி தாஜுதீன் கூட நல்லா சமைப்பதாக ஒரு செவிவழிச் செய்தியல்ல கூகுள் வழிச் செய்தி சொல்கிறது.// என்ன சகோ.தாஜூதீன் உண்மையா..சாவன்னா காக்கவைத்தேடி சவூதி போறதைவிட....டேராவிற்க்கு வருவது ஈசி ( ஆனால் காரில் இல்லை )
சூப்பர் படங்கள்... அதுவும் அந்த கடை தெரு...உடனே நினைவுகளை இழுத்து போடுது...
கீஸ்’பை என்று ஏன் அழைக்கப்பட்டது? யாராவது சொல்லுங்களேன்....
தந்தையாரின் புத்தகம் பிறந்து மகனாரின் படங்கள் பேசுகிறதோ .ஆம் உண்மையிலேயே படங்கள் பேசுகிறது தான் இந்த பாகிஸ்தான் பள்ளியை சாகுல் காக்காவின் முக நூலில் கண்டு தினம் தினம் ஒருமுறை அதை பார்த்து ரசித்தேன் அணைத்து படங்களுமே பேசும் படங்கள் தான் .கவியன்பன் கலாம் காக்கா அவர்களும் அந்த படங்களை பேச வைத்துள்ளார் .
\\கீஸ்’பை என்று ஏன் அழைக்கப்பட்டது? யாராவது சொல்லுங்களேன்....\\
கீஸ்ன்னா பை பைன்னா கீஸ்”
gate வாசல்
கீஸ் (அரபுமொழி) பை
நடு செண்டர்
அதிரை வாசிகளே! “யான், ஆமா” என்றால் என்ன? இப்படிக் கேட்டவர் நம் மதிப்பிற்குரிய ஆசிரியர் அலியார் சார் அவர்கள். தலாய் லாமா பற்றி பாடம் நடத்தும் பொழுது இப்படிக் கேட்டார்; இது அதிரையரின் நலம் விசாரிப்பாகும்.
அதுபோல் கீஸ் பை இணைபிரியா அறபுத் தமிழ்!
//இங்கே இவர் மீன் அறுத்தால்
அவர் வீட்டில் சோறு உண்பர்
இங்கே இவர் சோறு உண்ணாமல்
மீன் அறுப்பதும் அதனாலே!//
கவியன்பா
இங்கே இவர் மீன் அறுத்தால்
அவர் வீட்டில் மட்டுமல்ல
எல்லார் வீட்டிலும் சோறு உண்பர்
இவர் சுய நலத்திலும் பொது நலம்
இருப்பதை கவணியுங்கள்
ஹமீது அண்ணனின் கைவண்ணமே தனி
எல்லா ஸ்னாப்ஸும் மிகவும் துள்ளியமாக உள்ளது
கடைத் தெரு
இன்னும் கிராமமாகவே காட்சியளிக்கும்
ஓர் ஏழ்மையின் சின்னம் ஆனாலும்
அன்னியச் செலவானியை அள்ளித்தரும்
அதிரை கடைத்தெருவின் நிலை இப்படி இருப்பது
கவலைப்பட வேண்டிய ஒன்றே
மாறிவிட்டார்கள் பழமையை ஒதிக்குவிட்டு
இடம் மாறிவிட்டார்கள் அன்று முதல்
இன்று வரை எந்தவித மாற்றமும் நிகழாத இடம்
கடைத்தெரு மட்டுமே
ஆண்டாண்டுகளாக எத்தனை பல தரப்பட்ட மக்கள் வந்து சென்ற இடம்
சில பேருக்கு எனக்கும் கூடத்தான் ஊரில் இருக்கும்போது கடைத் தெருவிற்கு வராவிட்டால் தூக்கமே வராது
கடைத்தெருவை நேரடியாக பார்க்கும்போது நமக்கு ஒன்றும் தோனவில்லை ஹமீது அண்ணனின் கைவண்ணம் நம்மை உசுபேத்துகின்றது
அந்த கடைத்தெருவில் உள்ள மீன் மார்கட்டின் டேன் ஓவர் மிக அதிகமானதுதான். எல்லாமே
இந்தியாவின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய தூனான அன்னியச் செலவானியின் பணப்புழக்கம்தான் அதிகம். எல்லாமே நம் தூக்கத்தை விற்ற காசுகள்
//நம் ஊர் கடைத்தெரு ரோடு ஆப்பிரிக்க கண்டத்தை நினைவுபடுத்துகிறது.//
ஜாஹிரின் கற்பனை நமதூரின் கடைத்தெருவை ஆப்ரிக்கா கண்டத்திற்கே இழுத்துச் சென்றுவிட்டது.
கடைதெருவை போட்டோவில் பார்ப்பதற்கு ஆப்பிரிக்காவிற்கு இழுத்துச் சென்றது
சிந்திக்க தூண்டும் வரிகள்
கவி மழை பொழிந்த கவிஞர்களுக்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி
அட்டகாசமான படங்கள் சூப்பரப்பு கலக்கிட்டிங்க காக்கா
படம் 1 - மேகங்கள் மற்றும் மலைகளின் பாச விளையாட்டை காண்பித்து மகிழ்கிறது.
படம் 2 - இது நம்ம பசங்களுக்கு தெரியாது தெரிஞ்ச பல்டி அடிப்பானுங்க.
படம் 3 - இறையில்லத்தின் அழகு தோற்றம்...காக்கா இந்த பள்ளியாச எங்க ஈக்கிது?
படம் 4 - அழகான அமைதியான இடம்...காக்கா நம்ம ஆளுங்களுக்கு தெரியலே, தெரிஞ்சதுன்னா பிளாட் போட்டு வித்துடுவாங்கே
படம் 5 - மூங்கிலுக்குமா மோதிரங்கள்?,சுருண்டுரங்கும் ரயில் பூச்சிகள்..மூங்கில் காடுகள் தென்படும் மேட்டுநிலம், இரும்புத் தூண்களில் நிறுத்தப்பட்ட சிதைந்த பாலம்
படம் 6 - காக்கா க்கு ஒரு சல்யூட்
படம் 7 - கடைத்தெரு ரோட்டை புடிச்சதும் புடிச்சியே ஒரு ரெண்டு மூணு இன்ச் கீழே கேமராவே இறக்கிருந்தா ரோடு அப்பளம் மாதிரி நொறுங்கி கிடகுறதே பார்க்கலாம்லே!
படம் 8 - \\பாத்து போங்க எதாச்சும் பொணம் கெடக்க போவுது.//.....பார்த்து போற இடமா காக்கா இது?..மொதல்ல ட்ரெயின் வருதா இல்லையானு பார்த்து போக சொல்லுங்க காக்கா ட்ரெயினே பார்க்கலேன்னா அவனும் "பொணம்"
ஹமீது காக்கா லேட்டா வந்து கருத்து சொல்லறேன் ஒரு நன்றியே நம்ம அக்கௌன்ட்லே போட்டு வைங்க......
Post a Comment