Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விடியலை நோக்கி..! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2013 | , , , , , ,

இலக்கினை நோக்கியே எழுவாய்,
இதய வயலினை உழுவாய்,
நல்வழி என்றுமே வழுவாய்,
நன்னெறி கைப்பிடி வலுவாய்.

சிறுதுயர் வந்ததும் சிதையாய்,
முயலொடு ஆமையின் கதையாய்
முயன்றிடில் வெற்றி உனதாய்
அமைந்திடும் அதைநீ மறவாய்!

சிறைக்குள் இருப்பதா  சிந்தை?
சிறகுகள் இழந்திடல் விந்தை!!,
வரைக்குள் அடைந்திடும் எண்ணம்-இருப்பின்
வாழ்க்கை அதனினும் சின்னம்.

எல்லை வகுத்திடல் சரியே!!
எதற்கது என்பதில் தெளிவு
இல்லாது போவது தகுமோ?
நல்லன செய்யுதற் கன்று!

உள்ளுவ தெல்லாம் உயர்வாய்
உள்ளுதல் இருப்பின் உயர்வாய்.
வள்ளுவம் சொன்னது இதையே,
வாழ்க்கையின் தத்துவம் உணர்வாய்.

முகிலினில் நிறையும் நீரும்
மழையாய் வெளி யேறும்.
புதைபடும் போலவே தோன்றும்
விதைகளும் விருட்ச மாகும்.

தடைகளை உடைத்திடப் பழக்கு,
தைரியம் உன்கை விளக்கு,
இடைவரும் இன்னலை விலக்கு,
விடிந்திடும் ஒருநாள் கிழக்கு!

உள்ளம் என்பது ஆழி
உலகில் அதற்கேது வேலி?
அலைகள் வருதல் இயற்கை,
அதன்மேல் விரிப்போம் இறக்கை..

அதிரை என்.ஷஃபாத்

42 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

\\முகிலினில் நிறையும் நீரும்
மழையாய் வெளி யேறும்.
புதைபடும் போலவே தோன்றும்
விதைகளும் விருட்ச மாகும்.\\


வாழ்வியலின் தத்துவம்
வழங்கியநின் வித்தகம்
தாழ்வினையும் நீக்கிடும்
தடைகளையும் போக்கிடும்!


KALAM SHAICK ABDUL KADER said...

சோம்பலை விலக்கு;
வெற்றியே இலக்கு


இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து
..............இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்
..............களத்தினு ளிறங்கினால் வெற்றி !
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து
...........விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்
..........துவக்கிடுப் புள்ளியும் முன்னால்


நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும்
...........நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும்
...........ஊடலும் விலகவும் வேண்டும்
ஆக்கமும் குறையக் காரணம் என்ன
.........ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து
..........தாங்கிடும் நண்பரும் வேண்டும்


திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித்
..........திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை
...........வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால்
.............நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும்
..........படைத்தவ னருளவும் வேண்டும்

http://kalaamkathir.blogspot.ae/2011/02/blog-post_02.html (புதன், 2 பிப்ரவரி, 2011)

Unknown said...

//தடைகளை உடைத்திடப் பழக்கு,
தைரியம் உன்கை விளக்கு,
இடைவரும் இன்னலை விலக்கு,
விடிந்திடும் ஒருநாள் கிழக்கு!//

ஷபாத்,

திடீரென முளைத்து விடியலை நோக்கி வீறு நடை போட வைத்து விட்டீர்களே.!

மேலே கண்ட இந்த நான்கு வரிகளும் எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. ஏனனில் நான் அதிரை நிருபரில் கன்னி எழுத்தாளனாய் அறிமுகம் ஆன "தடை கற்களே படிக்கற்களாய்" என்னும் உழைப்பின் மேன்மையை எடுத்துச்சொன்ன பதிவு என் ஞாபகத்திக்கு வந்ததால்.

abu asif.





KALAM SHAICK ABDUL KADER said...

ஆழ்கடல் போலவே நும்புலம் ஆழமென

...........ஆற்றல் சிறந்ததை வாழ்ந்திடுவேன்

வாழ்க, கவிநயம், வாழ்க அதன்பயன்

............. வாழ்க புகழுடன் வாழியவே!

KALAM SHAICK ABDUL KADER said...

கூப்பிட்ட எங்களையும் மதித்து வந்தாய்க்
........கூவுகின்ற சேவலாக விடியல் சொன்னாய்
சாப்பிட்ட திருப்தியுடன் நாங்க ளுன்னைச்
......சந்தோசப் படுத்திடவே வாழ்த்தும் இட்டோம்
யாப்பிட்ட உன்விரலைக் காட்டு வாயா
......யான்வந்து கணையாழி இடவும் வேண்டும்
தோப்பெல்லாம் தோப்பல்ல ஈற்றின் சந்தம்
.....தோற்றுவித்த இன்பம்தான் தோப்பாய்ச் சொந்தம்!

sabeer.abushahruk said...

ஷஃபாத்,

தமிழை வளைத்து எழுதினாலோ வனைத்து எழுதினாலோ ரசிக்கப்படும் என்றாலும் எனக்கு தமிழை விளைத்துத் தருவதே வாசிக்கப் பிடிக்கும்.

நீங்களோ தமிழை வளைத்தும் வனைத்தும் தந்திருப்பதோடு விளைத்தும் தந்திருக்கிறீர்கள்.

//புதைபடும் போலவே தோன்றும்
விதைகளும் விருட்ச மாகும்.//

நம்மில் பலர் இப்படியானத் தோன்றல்களையே நிரந்தரம் என்று புதைப்பட்டுக் கிடக்கின்றனர். அவர்களுக்கும் உரைக்கிறது சுள்ளென்ற தங்களின் உதய வெயில்.

நல்லாருக்கு தம்பி.

என்ன ஒரு குறை என்றால், எப்போதாவதுதானே விடிகிறது. அடிக்கடி விடிய வழிவகை செய்யுங்கள், கிழக்காக அதிரை நிருபர் இருக்கிறதே



Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr.Adirai N. Safaath,

A poem of vigor and power
Nicely rhyming with valour

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//உள்ளம் என்பது ஆழி
உலகில் அதற்கேது வேலி?
அலைகள் வருதல் இயற்கை,
அதன்மேல் விரிப்போம் இறக்கை//

உள்ளார்ந்த உயர் வரிகள்.
வாழ்த்துக்கள்.

அதிரை என்.ஷஃபாத் said...

எனக்கு, எழுத களம் அமைத்து கொடுத்துக்கொண்டிருக்கும் அ.நி நிர்வாகிகளுக்கும், தட்டிக் கொடுத்து வளர்த்து வரும் என் அருமை சகோதர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்!!

Ebrahim Ansari said...

//தடைகளை உடைத்திடப் பழக்கு,
தைரியம் உன்கை விளக்கு,
இடைவரும் இன்னலை விலக்கு,
விடிந்திடும் ஒருநாள் கிழக்கு!//

அனைத்துமே அற்புத வரிகள். அவற்றுள் மேலே நான் குறிப்பிட்டுள்ள வரிகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதிய வேண்டிய வரிகள்.

தம்பி சபீர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் அடிக்கடி விடிய வழி செய்யுங்கள் என்று நானும் கோரிக்கை வைக்கிறேன்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அடுத்த கவிதைக்காக வழி மேல் வைத்துக் காத்திருக்கும் விழிகளுடன்,

இப்ராஹீம் அன்சாரி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அளவான வரிகள்
அழகான வழிகள்
வளமான வார்ப்பு
வளர்ச்சிக்கான வாழ்த்துரை !

தம்பி ஷஃபாத் !
நான் வாசிக்க நினைக்கும் கவிதைப் புத்தகத்திற்கு இந்த 'விடியலை நோக்கி' வாசலில் வைப்பேன் ! நுழையும் முன்னர் இதனை வாசிக்க !

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.தம்பி நலமாடா! வாய்ஸ் மெசேஜ் உன் கைபேசி எண்ணை சொல்லாமல் விட்டுவிட்டாயே? உடன் அனுப்பு! இப்பத்தான்டா எனக்கு இனம்புரியாத ஒரு இன்ப உணர்வு உந்துதள்ளுகிறது! உன் தேன் மொழிக்கவிதையினை பார்த்தபின். கவிசக்கரவர்தியும், அபு.இபு காக்காவும் என்னிடம் அடிக்கடி ஆதாங்கபடுவதுண்டு எங்கே ஷபாத்? எங்கே அவ(னி)ரின் கவிதைகள் என்று!இன்று கோடை மழையில்
நனைந்தேன்!இன்ப சுரம் என்னை மிதமாய் ஆட்கொண்டுள்ளது!

crown said...

இலக்கினை நோக்கியே எழுவாய்,
இதய வயலினை உழுவாய்,
நல்வழி என்றுமே வழுவாய்,
நன்னெறி கைப்பிடி வலுவாய்.
----------------------------------------
இப்படி "வாய்த்தால் எப்படி இருக்கும்? "வாய்" மொழியை செயல் முறைப்படுத்தினால் எல்லாம் வாய்க்கும்! இதுதான் "வாய்"மை! உன் நேர்மையான வார்தையை இப்படி வழிமொழிய எனக்கு வாய்த்தது நல் சந்தர்ப்பம் இப்படிதரு"வாய்"என "வாயில் படியில் நான் வாயார மனமுவந்து படிக்க வழிமீது விழிவைத்திருந்தேன்!இனியும் அடிக்கடி வருவாய் என நம்புகிறேன்!

crown said...


சிறுதுயர் வந்ததும் சிதையாய்,
முயலொடு ஆமையின் கதையாய்
முயன்றிடில் வெற்றி உனதாய்
அமைந்திடும் அதைநீ மறவாய்!
-------------------------------------
செவ்வாய்(சிவந்த உதடு கொண்டவனே!)திறந்தாய்! நல் சிந்தைனை விதைத்தாய்! கணினி வழியே,
கனிமொழி விதைத்தாய்!வெற்றியின் சூத்திரம் வரைந்தாய்!

crown said...

சிறைக்குள் இருப்பதா சிந்தை?
சிறகுகள் இழந்திடல் விந்தை!!,
வரைக்குள் அடைந்திடும் எண்ணம்-இருப்பின்
வாழ்க்கை அதனினும் சின்னம்.
--------------------------------------
ஒரு வெற்றியின் சின்னம் எப்படி இருக்கனும் என்பதை பெரிய சிந்தைனையில் கோர்த்தாய் இந்த கவிதை அறிவுரை.சிந்தனை திறந்தவெளியில் பயணம் புறப்பட சொல்கிறது!இனி வானமே எல்லை!.தோல்விகள் இல்லை!

crown said...

எல்லை வகுத்திடல் சரியே!!
எதற்கது என்பதில் தெளிவு
இல்லாது போவது தகுமோ?
நல்லன செய்யுதற் கன்று!
----------------------------
இல்லாத ஊருக்கு பயணம் ஏன் ? எதற்கு ? இப்படி தெளிவில்லாமல் செய்யும் காரியம்!வீரியம் மிக்கதாய் இருக்காது! அது ஜெய்க்காது!சிந்தி,செயல் படு என முழங்கும் உன் முழக்கம்! நாளைய விடியலுக்கான அறைக்கூவல்.

crown said...

முகிலினில் நிறையும் நீரும்
மழையாய் வெளி யேறும்.
புதைபடும் போலவே தோன்றும்
விதைகளும் விருட்ச மாகும்.
---------------------------------------------
வைரத்தை மண்ணில் ஒளித்து வைத்தாலும் ஒரு நாள் அது வெளிப்பட்டு ஒளிரும்! வைராக்கியம் உள்ளவன் வாழ்கை என்றேனும் ஒரு நாள் மிளிரும்!

crown said...

தடைகளை உடைத்திடப் பழக்கு,
தைரியம் உன்கை விளக்கு,
இடைவரும் இன்னலை விலக்கு,
விடிந்திடும் ஒருநாள் கிழக்கு!
----------------------------------------
நம்பிக்கையை ஊட்டுகிறாய்! அவனம்பிக்கை இருட்டு! அதை நம்பிக்கை விளக்கை கொண்டு விரட்டு! என்கிற சிந்தனை நாளை நம் வானில் விடிந்திடும் கிழக்கு என்பதை அறுதியிட்டு சொல்கிறது!என்றும் போல் சுவையுடன் கூடிய கவிதை விருந்தும் அதனுடன் சமூகத்தின் அஜீரண கோளாறு நீங்க மருந்தும் தந்திருக்கிறாய் வாழ்த்துக்கள். அடிக்கடி வந்து எங்களையும் இளைமை நோக்கித்திருப்புவாய்!.

Anonymous said...

//உள்ளுவதெல்லாம் உயர்வாய்
உள்ளுதல்இருப்பின் உயர்வாய்!
வள்ளுவம் சொன்னதும் இதையே
வாழ்க்கையின் தத்துவம் உணர்வாய்!//

அறுபது எழுபது பக்கங்களில் எழுத வேண்டிய Motivational கட்டுரை. நாலே வரிகளில் 'நறுக்'கென்று தைத்தது போல் எழுதிய திறன் பாராட்டுக்குரியது.
ஆனால் ஒரு doubt என்னவென்றால் திருவள்ளுவரும் ஒரு காபீர் ஆச்சே!
பாரதியார் ஒரு காபீர் என்பதற்காக அவர் பாடலை ஏற்றுக் கொள்ளாதவர்கள்
வள்ளுவரை ஏற்றுக் கொள்வார்களா? தன் மூமின்கள் தன் பாடலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக அவர் எட்டைய புரத்திலிருந்து அழுது அழுது சிந்திய கண்ணீரை அவர் தலைப்பா துணியில் துடைத்து கொண்டிருக்கிறார்!.

வள்ளுவருக்கோ கண்ணீர் துளி துடைக்க தலைப்பாதுணி இல்லை!! பாவம் தலைப்பா கட்டாத வள்ளுவர்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Yasir said...

ஒளியின் வேகத்துடன் உள்ளத்தில் ஊடுருவும் தம்பி ஷாஃபாத்தின் கவிதை அம்புகள்....அடிக்கடி இப்படி வந்து எய்துவிட்டு போங்கள்

Unknown said...

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம் சொன்னது…

//ஆனால் ஒரு doubt என்னவென்றால் திருவள்ளுவரும் ஒரு காபீர் ஆச்சே!
பாரதியார் ஒரு காபீர் என்பதற்காக அவர் பாடலை ஏற்றுக் கொள்ளாதவர்கள்
வள்ளுவரை ஏற்றுக் கொள்வார்களா?//

Assalamu Alaikkum

There are few brothers who are hating the poems and poets.

Good motivational poems, couplets such as Thirukkural can convey broad meanings with short set of words. Poems are architected with right words and at the right place with beauty and structure.

Holy Quran is a marvel of God Almighty's words with poetic architecture which challenges lingual artists.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Shameed said...

//உள்ளம் என்பது ஆழி
உலகில் அதற்கேது வேலி?
அலைகள் வருதல் இயற்கை,
அதன்மேல் விரிப்போம் இறக்கை..//

அற்ப்புதமான வரிகள்

Aboobakkar, Can. said...

முக்கடல் சங்கமத்தில் நிற்கும் வள்ளுவனின் கலையம்சம் அதுவும் கலைஞரின் கற்பனையே .........
நிச்சயமாக உட்கார்ந்து இருந்த வள்ளுவரை நிற்க வைத்த பெருமை கலைஞரையே சாரும் .....
பாரதிக்கு கண்ணீர் துடைக்க தலைப்பாகை உண்டு ........ஆனால் வள்ளுவனுக்கு தலைப்பாகை இல்லை அதனால் தான் அவரின் கண்ணீரில் மூழ்கிய முக்கடலின் சங்கம நீர் உப்பானதோ ??????

KALAM SHAICK ABDUL KADER said...

\\There are few brothers who are hating the poems and poets.

Good motivational poems, couplets such as Thirukkural can convey broad meanings with short set of words. Poems are architected with right words and at the right place with beauty and structure.//

Wa Alaikkum Salam,

Well said, Brother Ahmed Ameen.

Jazakkumullah khairan wa afia.


Aboobakkar, Can. said...

முற்காலத்தில் மன்னர்களிடம் யாசகம் கேட்டு செல்லும் முதியவர்கள் பிச்சை கேட்க வெட்கப்பட்டு கௌரவமாக மன்னர்களை புகழ்பாடி அவர்களை மூளை சலைவை செய்து பெறப்படும் பொருட்களில் தனது வாழ்வை கழித்துவந்தனர் அதிகமான உவைமைகளில் மன்னர்களை வாழ்த்தியவர்களுக்கு அதிகம் பொருள் கிடைத்து வந்தது இதன் போட்டியிலேயே புலவர்களும் உவமைகளும் கற்பனை பாடல்களும் உருவாயின.அதை பின் பற்றுவோர் அவைகளை நியாய படுத்துவது அறியாமையே ..

Unknown said...

Assalamu Alaikkum

Thanks a lot brother Kaviyanban Mr. Abul Kalam.

Making poem is an extraordinary skill and act of intellectuals. Normal people can just wonder about the magic of playing of harmonious words with concentrated meanings. In some extent few people may jealous about the poets and their creative endeavour. There should be intellectual thirst to gain knowledge in any form either from prose or poem.

If a poem is giving higher motivation like the above one it can be benefit to the right readers who are urging for improving their life. We need to have resonation with author's thoughts through poem or prose to grasp the ideas conveyed. Otherwise poem or prose can be just boring.

So, a poem can be enjoyable for some readers and useless stuff for few other readers based on their background, true thirst for knowledge and their level of perceptions.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

KALAM SHAICK ABDUL KADER said...

\\In some extent few people may jealous about the poets and their creative endeavor\\

Wa alaikkum Salam, Brother Ahmed Ameen,

Again well said/

jazaakkallah khairan.

KALAM SHAICK ABDUL KADER said...

\\So, a poem can be enjoyable for some readers and useless stuff for few other readers based on their background, true thirst for knowledge and their level of perceptions.\\

Points are crystal clear.

KALAM SHAICK ABDUL KADER said...

முன்கூட்டியே முடிவுகள் எடுப்பது, உறவின் பாதையில் முட்களாகக் குத்தும். அவை பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். மற்றவர்களின் உண்மையான இயல்புகளைக் காணவும் விடாமல் கண்களை மறைப்பவை முன்முடிவுகள். அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். சகமனிதர்களை எடைபோட்டு, இவர்கள் இப்படித்தான் என்று தீர்மானங்கள் செய்யும் முன்னே நடுநிலையோடு அணுகி பாருங்கள். யாரிடமும் நல்லதைத் தேடுங்கள். உறவுகள் மிக விரைவாய் மேம்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

Ebrahim Ansari said...

அன்புள்ள கவியன்பனின் மேற்கண்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

மன வியாதிகளில் ஒருவகை ஒன்றைப் பற்றி ஆராயாமல்- ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் - இவர் இப்படித்தான் இருப்பார் என்று முடிவெடுப்பதும் ஒரு வகை என்று மன நல நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள முன் முடிவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இதை ஆங்கிலத்தில் PRECIPITATE என்று கூறுவார்கள். உதாரணமாக கணவர் வீட்டுக்கு வர தாமதமானால் அவர் யாரோ ஒரு பெண்ணோடு சுற்றப் போய்விட்டார் என்று மனைவி தவறாக நினைப்பதாகும். அதே போல் சில சமயங்களில் சிலரைப் பற்றி தவறாக எண்ணுவது தானே வாங்கிக் கட்டிக் கொள்ளவே வழி வகுக்கும்.

கவியன்பனின் அன்பான அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
அதிரை என்.ஷஃபாத் said...

சில நேரங்களில், பின்னூட்டங்கள் பிணக்கு ஊட்டுவதாக அமைந்துவிடுகின்றன. மன வருத்தத்திற்கு வழி வகுத்து விடுகின்றன. முடிந்த வரை அதிலிருந்து என்னை தற்காத்து கொள்ளவே விழைகின்றேன். அல்லாஹ் மனங்களை ஒன்று படுத்த போதுமானவன்.

அன்புடன்,
என். ஷஃபாத்

KALAM SHAICK ABDUL KADER said...

\\சில நேரங்களில், பின்னூட்டங்கள் பிணக்கு ஊட்டுவதாக அமைந்துவிடுகின்றன. மன வருத்தத்திற்கு வழி வகுத்து விடுகின்றன. முடிந்த வரை அதிலிருந்து என்னை தற்காத்து கொள்ளவே விழைகின்றேன். அல்லாஹ் மனங்களை ஒன்று படுத்த போதுமானவன்.\\

தமியேன் வழிமொழிகிறேன் தங்கத் தம்பி என்.ஷஃபார் உடைய இந்த முடிவை; யானும் ஒதுங்கி விட்டேன்.

என் மதிப்பிற்குரிய ஆசான் அதிரை அஹ்மத் காக்கா மிகவும் ஆய்ந்தெழுதிய “கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை” என்னும் நீண்ட தொடரில் விவாதிக்கப்பட்டு முடிவுரையும் நலமாய் வந்ததன் பின்னரே யானும் அவ்வபொழுது கவிதைகளை இட்டு வந்தேன்; இதில் வேடிக்கை என்னவென்றால், என் கவிதைகளைப் பாராட்டி வேறு தளங்களில் மகிழ்வித்தவர்கள் தான் என்ற ஓர் ஆறுதலுடனும், எனக்கு உறவினரானவர்களுடன் பகைமையைப் பாராட்டும் நிலைக்கு வழி வகுக்க வேண்டாம் என்ற முடிவுடன் அன்புத் தம்பி என் ஷஃபா அ த் சொன்னதையே யானும் சொல்கிறேன் “என்னை தற்காத்து கொள்ளவே விழைகின்றேன். அல்லாஹ் மனங்களை ஒன்று படுத்த போதுமானவன்.”

என் மனத்திற்கு ஓர் ஆறுதலும் விடுதலையும் கிட்டியது; அலஹம்துலில்லாஹ்!

Aboobakkar, Can. said...

நிச்சயமாக நாம் நினைக்கும் நல்ல நிய்யத்களும் மேலும் மறுமைக்காக நாம் செய்யும் நற்காரியங்களும் முன் கூட்டிய முடிவுகளே.இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை ...

























Anonymous said...

//வள்ளுவனுக்கு தலைப்பாகை இல்லை, அதனால் தான் அவரின் கண்ணீரில் மூழ்கிய முக்கடலின் சங்கம நீர் உப்பானதோ??????//

''கடல் நீர் கண்ணீரால் உப்பானதோ!'' என்ற இந்த அற்புதமான கற்பனை
வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை! பாராட்டியே ஆகவேண்டும்.
// மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டு// என்று சொன்ன அண்ணா அவர்களின் பெருந்ததன்மையை ஏற்று ''கடல் நீர் கண்ணீரால் உப்பானது' என்னும் கற்பனை திறனை பாராட்டலாம்' என்று எண்ணிய எனக்கு எங்கிருந்தோ வந்தது ஒரு தடை!

அடடா அது என்ன தடை? ''கடல்கடந்து பிழைக்கச் சென்ற தமிழன் அழுது அழுது வடித்த கண்ணீரில் அன்றோ கடல் நீர் உப்பானது?'' என்ற வரிகளை
''பராசக்தி'' யில் சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் கர்ஜித்தார்!.

வரிகளுக்கு சொந்தக்காரர் கலைஞர் மு.கருணாநிதி! ஆகவே இது'கடன் வாங்கிய கற்பனை!.

S. முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

sabeer.abushahruk said...

ஃபாருக் மாமா,

நீங்க என்ன சொல்றீங்க?
// ''கடல் நீர் கண்ணீரால் உப்பானது' என்னும் கற்பனை திறனை பாராட்டலாம்'// என்று சொன்னால்

//உவமைகளும் கற்பனை பாடல்களும் உருவாயின.அதை பின் பற்றுவோர் அவைகளை நியாய படுத்துவது அறியாமையே ..//

என்பதையும் சகோதரர்தானே சொல்லியிருக்கிறார். அப்ப, பாராட்டுவதா அறியாமையிலிருந்து விலகுவதா?

(யாராவது இந்த நட்டநடுக்காட்டில் என் கண்கட்டை அவிழ்த்து விடுங்களேன், ப்ளீஸ்)

Unknown said...

//என்பதையும் சகோதரர்தானே சொல்லியிருக்கிறார். அப்ப, பாராட்டுவதா அறியாமையிலிருந்து விலகுவதா?//

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Abushahrukh

There are some concepts if we realize, then understanding and harmony are feasible.

No one is perfect except Allah Subhanawathaala.

Common man like all of us are not similar to prophets or saints.

"Easier said than done" phrase can be applied to most common man.

Finding fault in others and criticizing is easiest thing in the world, but finding the same in self and struggle(ultimate jihad) to correct oneself is life long challenge.

Only few extraordinary people are exceptions in the world, somehow spiritually enriched and always connected with God Almighty, hence protected from evils!!!.

May Allah shower his blessings on all of us.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

Anonymous said...

////பாரூக் மாமா நீங்க என்ன சொல்றீங்க?//
//உவமைகளும் அவைகளை பின்பற்றுவதும் அறியாமை//

என்று சொன்னதை தான் எதிர்த்ததையே அறியாமல் தானே ஆதரித்து கற்பனை உவமையைச் சொல்லியது ஒரு நிலைபாடுதான். பொரியில் சிக்கி கொண்டது போன்று, இது ஒரு வகையான மனநிலை !

புகழலாம் என்று ''நான் சொன்னது '//'வஞ்ச புகழ்ச்சி அணி// ஒரு Trap. உவமைகளும் அவற்றை பின் பற்றுவதும் அறியாமை//
என்று சொன்னதை' தன் அறியாமையால் சொல்லி விட்டேன்''என்று வருத்தம் தெரிவிக்கப்படலாம் அதே நேரத்தில் மீண்டு அதேபோன்று தொடரவும் செய்யலாம். “பழைய குருடி கதவை தொறடி''தான்.

இனி கற்பனை உவமைகளுக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டிய கருத்தாளர்களின் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறேன்… எப்படியும் சரியாகிவிடும் என்று.

S.முஹபாரூக்ம்மதுஅதிராம்பட்டினம்.

Aboobakkar, Can. said...

பாருக் காக்கா அவர்களுக்கு ஒரு முறை கலைஞர் அவர்கள் காரில் சென்ற போது ஒரு மாற்று கட்சி தொண்டன் கலைஞரை அந்த கார் எங்கள் காசில் வாங்கியது கீழே இறங்கு என்று சொல்ல அதற்கு கலைஞர் மறுமொழியில் ஒரு தொடர் வார்த்தையை சொன்னாராம் வார்த்தைகளில் அசிங்கம் இருந்ததாம் ஆனால் பொருள் விளங்க பெற்ற பின்னர் அந்த தொண்டனுக்கு ஆறுதல் கிடைத்ததாம் ........அதன் விளக்கம் கிடைக்குமா ? தாங்கள் மூத்தவர் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் .

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

எனது அருமை நண்பன் ஷஃபாத்து...
உன் கவிதைக்கு எப்போதுமே என்னுடைய வாழ்த்து!
தாமதமாகவே உன்னை வாழ்த்த வந்த என்னை மன்னித்து
விடுவாய் என்ற முழு நம்பிக்கையில் நினைத்து!

Anonymous said...

//ஒருமுறை கலைஞர்காரில் போனபோது.......//

அன்புள்ள தம்பி அபூபக்கர்! அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

//உவமைகளும் அவற்றை பின் பற்றுவதும் அறியாமையே// என்பதே இன்றைய அ.நி.வட்டாரத்தில் பேசுபொருள். அதை விட்டு விட்டு தலையை சுற்றி மூக்கை பிடிப்பதும்; கொட்டை பாக்குக்கு விலை கேட்டால் பட்டுகோட்டைக்கு வழி சொல்வதும்: பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதும்; பிரச்சனையை தீர்க்கும் வழியல்ல: திசைதிருப்பும் செயல்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விடியலை நோக்கி என்று தம்பி ஷஃபாத் அழகான வழியைக் காட்டினான் !

டியர் காக்காஸ் :

வழியெங்கும் வலி இல்லாமல் பார்த்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ் !

வாங்க வீட்டுப் பாடம் படிக்கலாம் அந்த பக்கமும் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.